10 January, 2020

Jesus… on fire… இயேசு... பற்றியெரியும் சுடராக...

Jesus Becomes the Messiah

Baptism of the Lord

Sometimes, out of the blue, there comes a word, a statement, or a picture, which sparks off a string of thoughts in us. I wish to begin my reflections this Sunday, with one such statement (I don’t know whether this is a proverb or not!) which gripped my attention: “He (She) who is on fire cannot sit on a chair.” When I read these words, I was instantly reminded of the famous bestseller (1989) written by Robert Fulghum – “It Was on Fire When I Lay Down on It”.

Robert Fulghum's bestseller “It Was On Fire When I Lay Down On It” begins with this story:
A tabloid newspaper carried the story stating simply that a small-town emergency squad was summoned to a house where smoke was pouring from an upstairs window. The crew broke in and found a man in a smoldering bed. After the man was rescued and the mattress doused, the obvious question was asked: “How did this happen?”
“I don't know. It was on fire when I lay down on it.”

Fulghum goes on to say: The story stuck like a burr to my mental socks. And reminded me of a phrase copied into my journal from the dedication of some book: “Quid rides? Mutato nomine, de te fabula narratur.” Latin. From the writings of Horace. Translated: 'Why do you laugh? Change the name, and the story is told of you.'
It was on fire when I lay down on it.
A lot of us could settle for that on our tombstones. A life-story in a sentence.

“He (She) who is on fire cannot sit on a chair.” talks of a person who is on fire and, hence, cannot rest in peace while the world is burning. Fulghum’s title seems to suggest that even when our surrounding is on fire, we could ‘sleep’ or ‘sleep-walk’ through it! Some of us can continue our sleep-walk till we rest in peace!
This Sunday’s liturgy invites us to examine ourselves and see what is our role in this world – do we carry a fire within or do we insulate ourselves with fire-proof material and walk through, or, sleep blissfully, amidst hundreds of burning problems.

Burning problems... seem to define our present day world. We are aware of the vast stretch of lands devastated by fire in Australia. The statistics provided about this tragedy is mind-boggling.
  • At least 25.5 million acres of land have been burned by the fires. That's estimated to be about the size of South Korea. That's about 80 times the size of the area that was burned in California's wildfires in 2019. It's also 5,000 square miles larger than the amount of land that was burned in the 2019 Amazon rainforest fires.
  • An estimated 1 billion animals are thought to have been killed by the fires
  • It's estimated that 25 people have died in the fires. At least 16 of the deaths were reported from New South Wales, where the damage of the fires was felt the most.
  • The raging bushfires have completely destroyed 1,588 homes and damaged 653 others within Australia.
(I have carefully avoided talking about the loss in terms of money, since that information is provided by the media all the time.)

Australia has always experienced bushfires - it has a "fire season". But this year they are a lot worse than normal. The overwhelming scientific consensus is that rising levels of CO2 are warming the planet. And Australia has been getting hotter over recent decades and is expected to continue doing so. This year, Australia twice set a new temperature record: an average maximum of 41.9° C was recorded on 18 December. That comes on top of a long period of drought. Scientists have long warned that this hotter, drier climate will contribute to fires becoming more frequent and more intense. The more extreme weather patterns and higher temperatures increase the risk of bushfires and allow them to spread faster and wider.
In spite of the havoc caused by fires in Australia, California and the Amazon, the world leaders are still ‘sleep-walking’ as was evident from the COP 25 summit in Madrid.

When the ‘fire-alarm’ gets out of control, our politicians tend to divert the attention of the people with dramatic, uncalled-for military attacks. The latest obvious ‘diversion’ came in the form of killing the Iranian Major General – Qasem Soleimani. Soleimani was killed in a targeted U.S. drone strike on 3 January 2020 in Baghdad, which was approved by President Donald Trump.

In countries like India and Pakistan, people, especially the youth, are given ‘diversions’ in the form of  cricket or some religious mob violence. In other countries the diversion can be soccer or tennis, as in the case of the Australian Open which is going on simultaneously along with the fire havoc.

As depressing as all these seem, we also have witnessed the rise of the youth in many countries around the world, trying to claim their future by fighting for climate and fighting against repressive governments. The youth rallying behind Greta Thunberg, the youth rising in Hong Kong, India, Chile and Venezuela – give us hope.

2000 years back, a young man of 30, living in a village called Nazareth, has given the world the much needed hope, not only during his life time, but during these 20 centuries. He did not sleep-walk through his life, but became a fire-brand to bring about change in his country, which was suffering under the tyranny of the Romans. We have come to celebrate this young man’s entry into public life this Sunday. We have come to celebrate the Baptism of Jesus in Jordan.

Although Jesus was leading a peaceful life in Nazareth, he must have been troubled by all that were happening around him. He must have been sad to see how so many of his friends tried to find a solution to those problems by starting or joining some fundamental, even, terrorist groups. Was Jesus tempted to follow this way? We can surely add this too as one of his temptations - a quick solution to all the troubles!

All of us would agree that if justice is to be established, the human family needs to undergo lots of changes - very fundamental, radical changes. But, we disagree on where this change should begin. Should it begin from within or without? Many of us will have a long list of changes that need to take place in the world - a change in the government, a change in the mindset of the rich, a change in the caste or class structure, a change in this, a change in that etc. But, we forget that unjust tendencies that are nurtured within each of us are THE cause of our unjust society. So, changes need to begin from within.

Changes in the government, and social structure, which are not accompanied by changes from within, can only be a ‘band-aid’ solution. When the human family is hurt by injustice, it is easy and quick to stick a band-aid without trying to heal the wound. The wound of social injustice is a festering wound that needs a much radical (in the literal sense of the word – namely, getting to the roots) treatment than a mere band-aid. ‘Band-aid’ treatments have been highlighted in every speech made by politicians.

On the other hand, the radical, transforming message given by Jesus at the beginning of his ministry was a call to conversion. He had spelt out his ministry and mission in the synagogue in Nazareth,  (Luke 4:18-21) quoting from Prophet Isaiah. A similar message is given by the same Prophet in the first reading today:
Isaiah 42: 1-4, 6-7
Behold my servant, whom I uphold, my chosen, in whom my soul delights; I have put my Spirit upon him, he will bring forth justice to the nations… He will faithfully bring forth justice. He will not fail or be discouraged till he has established justice in the earth… “I am the Lord, I have called you in righteousness, I have taken you by the hand and kept you; I have given you as a covenant to the people, a light to the nations, to open the eyes that are blind, to bring out the prisoners from the dungeon, from the prison those who sit in darkness.”

Having weighed in all the options, Jesus made up his mind. He would simply immerse himself with the people, dissolve himself among the people. Simply being with the people would do a lot of good for himself and the people. Being identified with the people was the core of the mystery of Incarnation. Jesus stood among the people in Jordan to be baptised.

Jesus chose the running waters of Jordan as the launching pad of his mission. Stepping into the running water is a lovely symbol for Jesus’ mission. Running water does give one an unsteady feeling. Is Jesus trying to tell us that his mission will also be surrounded by unsteady aspects? Running water is also a symbol of life and growth. Is Jesus trying to tell us that his life will be poured out as running water to help others grow?

Jesus was aware that standing among the people in the Jordan was not an easy decision. To become a leaven and change the whole lot of people was a tough task. What if the flour was not good? No amount of leaven or yeast could change that dough. From what he had seen among his people, he could only sense more of despair and dejection than any sign of hope among them. How would he change such a despondent people? He could see the tunnel all right… but, the light at the end of the tunnel?... Still, Jesus would take up this mission of becoming one among them, since his faith in his Father was immense.

Jesus choosing to immerse Himself with the people disturbed John the Baptist; but Jesus made it clear that this was how things should be. This decision of total identification taken by Jesus must have gladdened the heart of the Father and hence he proclaimed with true pride: “This is my beloved Son, with whom I am well pleased.” (Matthew 3:17)

Jesus is baptized by John the Baptist

ஆண்டவரின் திருமுழுக்கு

நாம் எதிர்பாராத சில வேளைகளில், நம் கண்ணில்படும் ஒரு படமோ, கூற்றோ, நமக்குள் பல சிந்தனைகளைக் கிளறிவிடுவதை நாம் உணர்ந்திருப்போம். என் கண்ணில் பட்ட அத்தகைய ஓர் ஆங்கிலக் கூற்று, இன்றைய ஞாயிறு சிந்தனையைத் துவக்கிவைக்கிறது. "He (She) who is on fire, cannot sit on a chair" என்ற அந்த ஆங்கிலக்கூற்றை, தமிழில் இவ்விதம் கூறலாம்: "பற்றியெரியும் மனிதரால், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது".
இச்சொற்கள், 1989ம் ஆண்டு வெளியான ஓர் ஆங்கில நூலின் தலைப்பை என் நினைவுக்குக் கொணர்ந்தன. அமெரிக்க ஐக்கிய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான இராபர்ட் ஃபுல்கம் (Robert Fulghum) அவர்கள் வெளியிட்ட அந்நூலின் தலைப்பு: “It Was On Fire When I Lay Down On It”, அதாவது, "நான் அதில் படுத்திருந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது".

நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியுடன், ஃபுல்கம் அவர்கள், இந்நூலை ஆரம்பித்துள்ளார். ஒரு வீட்டின் மேல் மாடியிலிருந்து புகை வெளியேறவே, அங்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். அவர்கள் அந்த அறையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, அங்கு, எரிந்துகொண்டிருந்த ஒரு படுக்கையில் ஒருவர் படுத்திருந்ததைக் கண்டனர். அவரை மீட்டு, தீயை அணைத்தபின், அவரிடம் நடந்ததென்ன என்று கேட்டபோது, "எனக்குத் தெரியாது. நான் அதில் படுத்திருந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது" என்று சொன்னாராம்.
இந்தக் கதையைக் கேட்டு, நமக்குள் இலேசான புன்னகை தோன்றினால், ஃபுல்கம் அவர்கள், Horace என்ற கவிஞரின் ஒரு கூற்றை நமக்கு நினைவுபடுத்துகிறார். "ஏன் சிரிக்கிறாய்? பெயரை மாற்று, அந்தக் கதை உன்னைப்பற்றி கூறும்" என்ற அக்கூற்றை நினைவுபடுத்தும் ஃபுல்கம் அவர்கள், எரியும் கட்டிலில் படுத்திருந்த அம்மனிதர் சொன்னது, நம்மில் பலருக்குப் பொருந்தும்; இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில், "நான் அதில் படுத்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது" என்ற சொற்களை, நம்மில் பலர், நம் கல்லறை வாசகமாகவும் எழுதலாம் என்று, இந்நூலின் துவக்கத்தில் கூறியுள்ளார். கல்லறைக்குச் செல்லும்வரை, பற்றியெரியும் உலகைப்பற்றி கவலைப்படாமல் வாழ்ந்துவிடும் ஆபத்து, நம் அனைவருக்குமே உண்டு.

"பற்றியெரியும் மனிதரால், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது" என்ற முதல் வாக்கியம், பற்றியெரியும் சுடர்களாக இவ்வுலகில் வாழ்வோரைக் குறிக்கிறது. "நான் அதில் படுத்திருந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது" என்ற இரண்டாவது வாக்கியமோ, தங்களைச் சுற்றி பல விடயங்கள் பற்றியெரிந்தாலும், கண்மூடித் துயில்வோரைக் குறிக்கிறது.

நம்மைச்சுற்றி பல விடயங்கள் பற்றியெரிந்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். 2019ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதல், ஆஸ்திரேலியாவின் ஒரு சில பகுதிகள் பற்றியெறிந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் அவ்வப்போது தீ விபத்துக்கள் நிகழ்வது வழக்கம்தான். எனினும், இம்முறை, மூன்று மாதங்களுக்கும் மேல் பற்றியெரியும் காடுகளுக்கு, அங்கு நிலவிவரும் வறட்சியே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியும், வேறு பகுதிகளைச் சூழும் பெரு வெள்ளமும், சுற்றுச்சூழல் சீரழிவின் எதிரொலிகள் என்று, அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
பற்றியெரியும் ஆஸ்திரேலியா தரும் எச்சரிக்கையைப்பற்றிக் கவலைப்படாமல், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கள் தந்த எச்சரிக்கையைப்பற்றிக் கவலைப்படாமல், உலகின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியும், வெள்ளமும் தரும் எச்சரிக்கைகளைப்பற்றிக் கவலைப்படாமல், உலகத்தலைவர்கள் உறங்கிக்கிடக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து, நாமும், உறங்கிக்கிடக்கிறோம்.

உள்நாட்டில் பற்றியெரியும் பிரச்சனைகளால் மக்கள் கொதித்தெழாமல் இருக்க, அவ்வப்போது, அவர்களின் கவனத்தைத் திசை திருப்பும்வண்ணம், தலைவர்கள், வெளிநாட்டுடன் மோதல்களை உருவாக்கும் சில தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். புத்தாண்டு புலர்ந்த வேளையில் (2020, சனவரி 3ம் தேதி), அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், ஈரான் படைத்தளபதி ஒருவரை, ஈராக் நாட்டில், கொல்வதற்கு வழங்கிய உத்தரவு, மக்களைத் திசை திருப்பும் தந்திரங்களில் ஒன்று என்பது, பரவலானக் கருத்து. இந்தியா போன்ற நாடுகளில், மக்களை, குறிப்பாக, இளையோரைத் திசைதிருப்ப, 'கிரிக்கெட்' போன்ற விளையாட்டுக்களும், நடிகர்களை மையப்படுத்திய நிகழ்வுகளும், மதக் கலவரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பிரச்சனை, அரசு இயந்திரங்களின் அத்துமீறிய அடக்குமுறை, மக்களைப் பிரித்தாளவும், திசை திருப்பவும் அரசியல்வாதிகள் பயன்படுத்தும் தந்திரங்கள் ஆகியவற்றை, இளையோர் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர் என்பதும், அவர்கள், பற்றியெரியும் சுடர்களாக, ஒவ்வொரு நாட்டிலும், தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் என்பதும், நம்பிக்கை தரும் செய்திகள்.
சீன அரசின் அடக்குமுறைக்கு எதிராக, ஹாங்காங் இளையோர் நிகழ்த்திவரும் போராட்டங்கள், சிலே, வெனிசுவேலா போன்ற நாடுகளில், இளையோரின் போராட்டங்கள், இந்திய நடுவண் அரசின் பிரித்தாளும் அரசியல் சட்டங்களுக்கு எதிராக, இளையோரின் போராட்டங்கள் ஆகியவை, பற்றியெரியும் சுடர்களாக, இளையோர் வலம்வருகின்றனர் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

தான் வாழ்ந்த காலத்தில், அநீதிகளாலும், அடக்கு முறைகளாலும் இஸ்ரயேல் மக்கள் அடைந்த துன்பத்தைத் தீர்ப்பதற்கு, 30 வயது நிறைந்த இளையவர் இயேசு, பற்றியெரியும் ஒரு சுடராக, பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த நிகழ்வைக் கொண்டாட, இந்த ஞாயிறு நாம் கூடிவந்துள்ளோம். யோர்தான் நதியில், மக்களோடு மக்களாக தன்னை இணைத்துக்கொண்டு, இயேசு, திருமுழுக்கு பெற்ற நிகழ்வை இன்று கொண்டாடுகிறோம்.

30 ஆண்டுகள் அமைதியாக, நாசரேத்தில், இயேசு வாழ்ந்தபோது, அவரைச் சுற்றி நடந்த பல அநியாயங்கள், அவர் மனதில், பூகம்பங்களாய் வெடித்திருக்கும். தன் சமுதாயத்தில் மாற்றங்கள் தேவை என்பதை அவர் உணர்ந்திருப்பார். இந்த மாற்றங்களைக் கொணர்வதற்கு, இளையோர் பலர், புரட்சிக் குழுக்களை உருவாக்கியதையும், வன்முறைகளில் ஈடுபட்டதையும் இயேசு அறிந்திருந்தார். தீவிரவாதமும், வன்முறையும் தான் தீர்வுகளா? வேறு வழிகள் என்ன? என்று அவரும் கட்டாயம் சிந்தித்திருப்பார்.

நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. ஆனால், இந்த மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்? உள்ளிருந்தா? வெளியிலிருந்தா? என்பதில், கருத்து வேறுபாடுகள் உள்ளன. வெளியிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும் - பணம் படைத்தவர்கள் மாறவேண்டும்; அரசின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும்; அவர் மாறவேண்டும்; இவர் மாறவேண்டும்; அது மாறவேண்டும்; இது மாறவேண்டும் என்ற பட்டியலைத் தயாரித்து, நம்மில் பலர் காத்திருக்கிறோம். அதே வேளையில், நம் ஒவ்வோருவருக்குள்ளும் மாற்றங்கள் தேவை என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால், அது வெளிப்பூச்சாக மாறும் ஆபத்து உண்டு.

வெளி உலகில் நாம் காணும் குழப்பங்கள், அக்கிரமம், அநீதி இவை அனைத்துமே, மனித மனங்களில் உருவாகும் எண்ணங்கள்தானே. உள்ளத்தில் உருவாகும் இந்தக் குழப்பங்களைத் தீர்க்காமல், மாற்றங்களைக் கொணர்வதற்கு, கட்சிகள் சேர்ப்பதும், குண்டுகள் வீசுவதும், புரையோடிப் போயிருக்கும் புண்ணை, மேலும் புரையோடிப்போகச் செய்யும் முயற்சிகள். சமுதாயப் புண்களுக்கு, போராட்டம், உண்ணாவிரதம், மாநாடு என்று, அரசியல் தலைவர்கள் சொல்லித்தரும் விளம்பர மருந்துகள் இடுவது எளிது. ஆனால், புரையோடிப் போயிருக்கும் அந்தப் புண்களின் வேர்வரைச் சென்று, காரணம் கண்டுபிடித்து குணமாக்குவது, கடினமானது, கசப்பானது. மனமாற்றம் என்ற கடினமான, கசப்பான, அதேவேளையில் அடிப்படையான உண்மையை உணர்த்த, இயேசு எடுத்த முதல் முடிவு, மக்களோடு மக்களாக, தன்னைக் கரைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு. அந்த முடிவோடு, அந்த முனைப்போடு யோர்தான் நதியில் இயேசு இறங்கினார்.

மனமாற்றத்தின் வழியே, கலாச்சார மாற்றத்தையும், அவற்றின் விளைவாக, இன்னும் பல உன்னத மாற்றங்களையும் கொணர்வதே தன் பணி, தன் வாழ்வு என்பதைக் குறித்து உறுதியானதொரு முடிவெடுத்தார் இயேசு. அந்த மாற்றங்கள், மேலிருந்து அல்ல, மாறாக, கீழிருந்து, அதாவது, மக்களிடமிருந்து ஆரம்பமாக வேண்டும் என்பதைப் பறைசாற்ற, தன்னையே மக்களில் ஒருவராக கரைத்துக்கொண்டார். தன் பணிவாழ்வின் முதல் அடியை, யோர்தானில் எடுத்துவைத்தார். அவர் எடுத்துவைத்த முதல் அடியை, தண்ணீரில், அதுவும் ஓடுகின்ற ஆற்று நீரில் எடுத்து வைத்தார். இது, நம் சிந்தனைகளைத் தூண்டும் அழகான ஓர் அடையாளம்.

உறுதியான தரையில் நிற்பதற்கும், ஓடும் நீரில் நிற்பதற்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு. இயேசு தன் பணியைத் துவக்கிய வேளையில், இஸ்ரயேல் சமுதாயம் பல வழிகளில் நிலையற்ற ஒரு சமுதாயமாக இருந்தது என்பதை, யோர்தானில் ஓடிய அந்த நீர் உருவகப்படுத்தியதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இனி தொடரும் தன் பணிவாழ்வில், தந்தையாம் இறைவனின் அன்பைத் தவிர வேறு எதுவும் இயேசுவுக்கு உறுதியளிக்காது என்பதை உணர்த்த, அவர், தன் பணிவாழ்வின் முதல் அடியை, ஓடும் நீரில் எடுத்து வைத்தாரோ?
ஓடும் நீரில் மற்றோர் அழகும் உண்டு. தேங்கி நிற்கும் நீரை விட, ஓடும் நீரில், உயிர்கள், வாழவும், வளரவும், வாய்ப்பு அதிகம் உண்டு. இயேசுவும், ஓடும் நீரைப் போல், பலருக்கு வாழ்வளிக்க விரும்பியதால், ஓடும் ஆற்று நீரை, தன் பணிவாழ்வின் முதல் தளமாகத் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும்.

அந்த ஆற்று நீரில் இயேசு தனியே தன் திருமுழுக்கைப் பெறவில்லை. மக்களோடு, மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். எந்த மக்களை விடுவிக்க அவர் தீர்மானித்தாரோ, அந்த மக்களில் ஒருவராய் மாறினார். அவர் அப்படி கலந்து, கரைந்து நின்றது, திருமுழுக்கு யோவானுக்கு, சங்கடத்தை விளைவித்தது என்பதை, இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். எனினும், இயேசு, தன் முடிவிலிருந்து மாறவில்லை.
ஓடும் நீரில் இறங்கியது, மக்களோடு மக்களாய் கரைந்தது என்ற இந்த இரு செயல்கள் வழியாக, தன் பணியின் நோக்கத்தை, இயேசு, உலகறியச் செய்தார். இயேசு எடுத்த முடிவைக் கண்டு மனம் மகிழ்ந்த விண்ணகத் தந்தை, தன் பங்கிற்கு, தன் அன்பு மகனை, உள்ள நிறைவுடன் உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார்.
"என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (மத்தேயு 3:17) என்று விண்ணகத் தந்தை முழங்கியபோது, தன் மைந்தனுக்குரிய, தன் பணியைச் செய்யும் ஊழியனுக்குரிய இலக்கணத்தை அவர் உலகறியச் செய்தார். அந்த இலக்கணம், இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயாவின் சொற்களாக நம்மை வந்தடைந்துள்ளது.
எசாயா 42: 1-4, 6-7
இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்... உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்... இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்: பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

இறுதியாக, அன்புள்ளங்களே, சிறப்பான சில வேண்டுதல்களோடு நம் சிந்தனைகளை நிறைவுசெய்வோம். அடுத்துவரும் நாட்களில், பொங்கல் திருவிழாவையும், உழவர் திருவிழாவையும் கொண்டாடவிருக்கிறோம். இயற்கையும், மனித உறவுகளும் உழவர்களுக்கு உற்றதுணையாக இருந்து, அவர்களை வாழவைக்கவேண்டும் என்றும், உழவர்கள் வாழ்வதால், இவ்வுலகமும் வாழவேண்டும் என்றும், இறைவனிடம் சிறப்பாக மன்றாடுவோம்.

பற்றியெரியும் உலகப் பிரச்சனைகளில் குளிர்காய்ந்து படுத்திருக்கும் உலகத் தலைவர்கள் விழித்தெழும்வண்ணம், பற்றியெரியும் சுடர்களாக, இளையோர், தங்கள் சமுதாயக் கடமைகளை நிறைவேற்றவும், மாற்றங்களைக் கொணரவும் வேண்டுமென செபிப்போம். குறிப்பாக, இன்றைய இந்தியச் சூழலில், மதத்தை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி, மக்களைப் பிரிப்பதற்கு, நடுவண் அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ள இவ்வேளையில், இஸ்லாமியர் உட்பட, அனைத்து மதத்தினருக்கும் இந்தியாவில் இடம் உண்டு என்பதை துணிந்து சொல்வதற்கு, மக்கள் சக்தி இணைந்து வரவேண்டும் என்று மன்றாடுவோம்.

நாம் அனைவருமே இறைவனின் அன்புக்குரிய குழந்தைகள் என்பதை இப்புதிய ஆண்டில் மீண்டும் ஒருமுறை உணர்வதற்கு, இறைவன் நம் அனைவருக்குமே நல்லொளியைத் தரவேண்டும் என்று, ஒருவர் ஒருவருக்காக வேண்டிக்கொள்வோம்.


No comments:

Post a Comment