09 April, 2020

Finding God in the corona virus கொரோனாக் கிருமியில் கடவுளைக் காண...


Celebrating the Liturgy of the Word at home

Maundy Thursday - Meditation

The Holy Week, especially the Sacred Triduum (Maundy Thursday, Good Friday and Holy Saturday) leading up to the Easter Sunday are the most important days in the liturgical calendar of the Catholic Church. Every year, special care is taken by Priests, Sisters and Catechists to prepare homilies and short introductions to the various liturgical readings and rites of these days. This year, however, our experience will be VERY DIFFERENT. With the ‘lockdown’ in place in almost all part of the world, we shall be tuning into our TV to ‘participate’ in these liturgical celebrations.

Instead of the usual homilies, I wish to share with you some reflections that can be taken up as meditations during these special days. Let me begin with an article published by Fr Bernardo Cervellera in the AsiaNews website on March 3, 2020 with the title: “God in the coronavirus”.

Fr Bernardo Cervellera is a PIME missionary who is the editor-in-chief of AsiaNews, an official press agency of the Roman Catholic Pontifical Institute for Foreign Missions (PIME). He also heads Agenzia Fides, the official news agency of the Vatican.

Here is the article of Fr Bernardo Cervellera:
God in the coronavirus
Bernardo Cervellera
2 March 2020

Our global society has been hit by a scourge similar to the plague of the 1300s and 1600s, the cholera epidemic of two centuries ago, or the Asian flu of the last century. Discovering our impotence and fear of death. The apocalypse and escape. For many Christians in Asia it is not a question of escape: they have found God in the coronavirus. Political powers see God as an enemy (in China) or as an unnecessary encumbrance (in the West). God is our greatest ally.

Coronavirus feed the anguish in many people in Asia, Italy and the world. When the epidemic emerged in China and Hong Kong, we were amazed to see the rush for surgical masks, to stockpile on non-perishable foods emptying supermarkets, racist attacks on Chinese people.

Then the same things happened in the rest of the world, as the virus spread across different latitudes. We could never have imagined that in the 21st century we would witness our global society hit by such an elusive and tenacious scourge: we were convinced that such things were consigned to the history books: the plague of the 1300s and 1600s, the cholera epidemic of two centuries ago, or the Asian flu of the last century.

We who live in a world where science and technology guarantee us well-being and offer a solution for every pain, have realized we are not omnipotent and that nature’s fantasies can continually surpasses our control skills. While several labs - driven by the desire to capitalize on the disease - promise that there will be the medicine to eradicate this evil in a few weeks, the most serious scholars admit that it will take maybe a year before finding a vaccine. In the meantime there will be more deaths, more infected, more fears.

The unruly and often violent way in which people react to anguish is a clear result of the discovery of our helplessness and fear of death. It would take someone more powerful than the virus, more capable than doctors, more capable of guaranteeing our lives to restore calm. It would take God.

But precisely this God, the reference to an absolute guarantee of meaning to expectation and illness, seems to be the most distant in our contemporary world. Together with God, the source of life, we would be more secure in experiencing death, more courageous in being close to those who suffer, more diligent and humble in the search for the famous vaccine.

Does this epidemic and this coronavirus have anything to do with God? As in past ages, apocalyptic preachers arise here and there claiming that the epidemic is now the last chapter of the end of the world, the last step in the hands of an avenging God against intelligent, but proud man.

For many, then, the only salvation is to flee: away from society, to some atomic shelter, or to the mountains, as if you could save yourself and live alone, while the world is being shaken.

For many Christians in Asia it is not a question of escape: they have found God in the coronavirus. There are people in Hong Kong who instead of worrying about finding masks for themselves, are concerned with buying and distributing them to old people in their neighborhood who are unable to move. Even long periods of isolation at home have become an opportunity for silence and prayer, rediscovering that humility close to God that the frenzy of omnipotence had almost obliterated.

Even in China, where the government has decreed the closure of churches indefinitely, the faithful strive to remember the Lord and transform their living rooms into houses of prayer with the Bible on display, flowers, a crucifix. And even if the powers-that-be forbid religious activities in unregistered places - such as private homes - families meet together, together with their children to ask for mercy for them and for the country. And they do it together with their children, whom the government normally bans from attending mass.

The political powers of the world, from the Chinese to the Italian, try to show themselves adequate, confident, capable of defeating the threat that is hanging over their peoples. They keep factories and shopping centers open, but not churches, fearing that they will have to confess their closeness before God and people. They see God as an enemy (in China), or as an unnecessary encumbrance (in the West). And instead He is our greatest ally in these bitter times: to create solidarity among people, now as the economic crisis overwhelms us; to treat young and old with dignity; to hope for a life-without-end, now that we realize we are not the masters.
-------------------------------
Let me close this meditation with some thoughts on Maundy Thursday, which is mainly thought of the Day of Priests or Priesthood. This year, when I received wishes from various friends on this special day, I wrote back saying:
Thank you for your thoughtful wishes and prayers. At least this year, let the idea of Priesthood be felt in every family circle. All of us, by Baptism, share in the Priesthood of Christ. Let the words of St Peter resound in our minds and hearts today: “You are a chosen race, a royal priesthood, a holy nation, God's own people, that you may declare the wonderful deeds of him who called you out of darkness into his marvelous light.” (1 Peter 2;9)


Another news item that can be of interest to us on this day comes from the Holy See Press Office. Maundy Thursday, as we know, is usually celebrated as the Day of Priesthood, namely, male priesthood. It is interesting that on the eve of this Feast, namely, April 8, Wednesday afternoon, Pope Francis instituted a new commission to study Women Deacons. Let us pray for the success of this Commission.

Living the Holy Week from Home

புனித வியாழன் - தியானம்

ஒவ்வோர் ஆண்டும், புனித வாரத்தின் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில், மிகச் சிறந்த வழிபாட்டு கொண்டாட்டங்கள், ஒவ்வொரு ஆலயத்திலும் இடம்பெறும். இக்கொண்டாட்டங்களின்போது, அருள்பணியாளர்கள், தியாக்கோன்கள், அருள்சகோதரிகள், மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்கள், கவனமாக தயார் செய்த பல்வேறு சிந்தனைகளை மக்களுக்கு வழங்குவர்.
இவ்வாண்டு, இக்கொண்டாட்டங்கள் அனைத்தும், தொலைக்காட்சி வழியே மக்களை அடைகின்றன. இத்தகையச் சூழலில், இந்நாள்களைக் குறித்து, மறையுரைகளை வழங்காமல், நமக்குப் பயனுள்ள சிந்தனைகளை, ஒரு தியானமாக வழங்குவது உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

முதல் தியானமாக, நான் பகிர்ந்துகொள்ள விழைவது, அருள்பணி Bernardo Cervellera அவர்கள், ஆசியச்செய்தி (AsiaNews) என்ற இணையத்தளப பதிவில், மார்ச் 2ம் தேதி வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையின் ஒரு சில எண்ணங்கள். அருள்பணி Cervellera அவர்கள், PIME என்றழைக்கப்படும் பாப்பிறை மறைப்பணி கழகத்தின் உறுப்பினர். இவர், ஆசியச்செய்தி, மற்றும் பீதேஸ் (Fides) செய்தி என்ற இரு நிறுவனங்களில் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார். அருள்பணி Cervellera அவர்கள், "கொரோனாக் கிருமியில் கடவுள்" (God in the coronavirus) என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த கட்டுரையிலிருந்து ஒரு சில எண்ணங்கள்:

வரலாற்றில் 1300களில், 1600களில் உருவான கொள்ளை நோய்களைப்போல, இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய காலரா நோயைப்போல, சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஆசிய காய்ச்சல் போல, நமது உலகம், தற்போது, ஒரு சாட்டையடியைப் பெற்றுள்ளது. நமது சக்தியற்ற நிலையையும், மரண பயத்தையும், உலக முடிவையும், தப்பிக்கும் வழிகளையும் கண்டுபிடித்து வருகிறோம். ஆசியாவில், பலர், தப்பிக்கும் வழிகளைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும், கொரோனா கிருமியில் கடவுளைக் கண்டு வருகின்றனர். அரசியல் சக்திகள், கடவுளை, ஓர் எதிரியாகவோ (சீனாவைப்போல்), அல்லது, தேவையற்ற தொல்லையாகவோ (மேற்கத்திய நாடுகளைப்போல) காண்கின்றன. உண்மையில், கடவுள் நமக்கு பெரும் துணையாக இருப்பவர்.

ஆசியாவில், இத்தாலியில், உலகின் பல நாடுகளில் கொரோனா கிருமி மக்களுக்கு அச்சத்தை ஊட்டியுள்ளது. சீனாவிலும், ஹாங் காங்கிலும் இந்த நோய் தோன்றியபோது, மக்கள், முகக்கவசங்களையும், ஏனைய அவசியப் பொருள்களையும் வாங்கிக் குவிப்பதில் காட்டிய வேகம், நம்மை அதிர்ச்சியடைய வைத்தது. இதே போக்கு, உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ந்தது. ஒரு சில இடங்களில், சீன மக்கள் தாக்கப்பட்டனர்.

21ம் நூற்றாண்டில் வாழும் நம்மை, கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரி இவ்வளவு தீவிரமாகக் தாக்கக்கூடும் என்பதை, நாம், எள்ளளவும் கற்பனை செய்து பார்க்கவில்லை. இத்தகைய தாக்குதல்கள், வரலாற்று நூல்களில் மட்டும் வாசிக்கக்கூடிய விடயங்கள் என்று நினைத்து வந்தோம்.
நாம் வாழும் இன்றைய உலகில், அறிவியலும், தொழிநுட்பமும், சுகமான வாழ்வையும், ஒவ்வொரு துன்பத்திற்கும் தீர்வையும் வழங்குவதாக நாம் எண்ணி வருகிறோம். நாம் அனைத்தும் வல்லவர்கள் அல்ல என்பதை, அவ்வப்போது நிகழும் இயற்கை சீற்றங்களும், புதிரான நோய்களும் நமக்கு நினைவுறுத்தி வருகின்றன.
நோய்களை மூலதனமாக்கி, ஆதாயம் தேடவிழையும் ஒரு சில ஆய்வுக்கூடங்கள், இந்நோயை ஒரு சில வாரங்களில் விரட்டியடிக்கலாம் என்று வாக்களிக்கின்றன. ஆனால், சீரிய சிந்தனை கொண்ட அறிவியலாளர்கள், இந்த நோய்க்கு சரியான மருந்தைக் கண்டுபிடிக்க ஓராண்டு காலம் ஆகலாம் என்று கூறி வருகின்றனர். இதற்கிடையே, இன்னும் பலர், இந்த நோயினால் தாக்கப்படுவதும், இறப்பதும் நிகழும்; அச்சங்கள் அதிகமாகும்.

தாங்கமுடியாத வேதனையில், நமது இயலாத நிலையையும், மரண பயத்தையும் சமாளிக்க இயலாதபோது, அது, மக்கள் பயன்படுத்தும் வன்முறைகளில் வெளிப்படுகின்றன. நம்மிடம் உலவிவரும் கிருமியைக் காட்டிலும், நம் மருத்துவர்களைக் காட்டிலும் சக்தி மிகுந்த ஒருவரால் மட்டுமே நமக்கு அமைதியைக் கொணர முடியும். அது கடவுளாக மட்டுமே இருக்கமுடியும்.
ஆனால், நம் எதிர்பார்ப்புக்கள், நோய்கள் அனைத்திலும் பொருள்தரக்கூடிய இந்தக் கடவுள் மட்டுமே, இன்றைய உலகில், தூரத்தில் இருப்பதைப்போல் தெரிகிறது. வாழ்வின் ஊற்றாகிய கடவுளோடு, நாம், மரணத்தை எதிர்கொள்ள துணிவு பெறமுடியும், துன்புறுவோருக்கு துணை நிற்கமுடியும், இந்த நோய்க்குத் தீர்வுகாணும் மருந்தைக் கண்டுபிடிப்பதில் பணிவு காட்டமுடியும்.

இந்த உலகளாவிய நோய்க்கும், கடவுளுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? வரலாற்றில் பலமுறை நிகழ்ந்ததைப்போல, இந்த வேதனை நேரத்தை உலக முடிவு என்று பறைசாற்றும் ஒரு சில போதகர்கள் தோன்றியுள்ளனர். இது கடவுளின் பழிதீர்க்கும் காலம் என்ற முழக்கங்கள் ஒலிக்கின்றன.
இத்தகைய ஓலங்களின் நடுவே, ஒரு சிலர் சமுதாயத்தை விட்டு தப்பித்துச் செல்வதில் மும்முரமாக உள்ளனர். இவ்வுலகம் சீர்குலைந்தாலும், தங்களைக் காத்துக்கொள்வதில் இவர்கள் தீவிரமாக உள்ளனர்.

ஆசியாவில் உள்ள பல கிறிஸ்தவர்கள், தப்பித்துச் செல்வதைக் குறித்து சிந்திக்கவில்லை. அவர்கள், இந்த கொரோனா கிருமியில் கடவுளைக் கண்டுகொண்டுள்ளனர். இந்த தொற்றுக்கிருமி துவங்கிய நேரத்தில், ஹாங் காங்கில் பலர், தங்களுக்கு முகக்கவசங்களை வாங்கிக் குவிப்பதற்குப் பதில், அதை, தங்கள் பகுதியில், வீட்டைவிட்டு வெளியேற இயலாமல் கிடந்த முதியோருக்கு வாங்கித்தந்தனர். இல்லங்களில் தங்கியிருக்க வேண்டிய நீண்ட நேரங்களை, குடும்ப உறவுகளிலும், செபத்திலும் ஈடுபடும் வாய்ப்பாக மாற்றினர்.

கோவில்கள் இனி காலவரையறையின்றி மூடப்பட்டதாக சீன அரசு அறிவித்தபோது, அங்குள்ள கிறிஸ்தவர்கள், தங்கள் இல்லங்களில், விளக்கேற்றி, விவிலியத்தை வைத்து, வாழும் அறைகளை ஆயலங்களாக மாற்றி வந்துள்ளனர். மத வழிபாடுகளுக்கு மக்கள் கூடிவருவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், குடும்பங்களில், தங்கள் குழந்தைகளுடன் இணைந்து செபித்து, விவிலியம் வாசித்து வருகின்றனர்.

(சீனா, இத்தாலி உட்பட) உலகின் பல நாடுகளில், சக்தி மிகுந்த அரசியல் வட்டாரங்கள், இந்த நோயை அடக்கி ஆள்வதற்கு தங்களிடம் சக்தி உள்ளது என்பதைக் காட்ட விழைகின்றன. ஆலைகளையும், வணிக மையங்களையும் திறந்து வைத்திருக்கவும், ஆலயங்களை மூடிவைக்கவும் ஆணைகள் இடப்பட்டுள்ளன. கடவுளையும், மக்களையும் சந்திக்க இவர்கள் அஞ்சுகின்றனர்; அப்படி சந்தித்தால், தங்கள் பாவங்களை, குற்றங்களை ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சம் அது.
உண்மையிலேயே, இந்த வேதனையான நேரத்தில், கடவுளே நம் பெரும் துணை. மக்களை ஒருங்கிணைக்கவும், அனைவரையும் சமமாகக் கருதவும், நாம் இவ்வுலகின் முதலாளிகள் அல்ல என்பதை உணரவும், முடிவற்ற வாழ்வில் நம்பிக்கை கொள்ளவும், இது தகுந்த நேரம். கடவுளே நம் பெரும் துணை.

--------------------

இறுதியாக ஓர் எண்ணம்... இன்று, புனித வியாழன், அருள்பணியாளர்களின் நாளாக, அருள்பணித்துவ நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, என் நண்பர்கள் பலர் எனக்கு வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர். அந்த வாழ்த்துக்களைப் பார்த்த வேளையில், எனக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. அதை, அவர்களுக்கு நான் என் பதிலாக அனுப்பி வைத்தேன்:
"உங்கள் வாழ்த்துக்களுக்கும், வேண்டுதல்களுக்கும் நன்றி. இந்த ஆண்டு, அருள்பணித்துவம் என்ற எண்ணம், நம் இல்லங்களில், குடும்பங்களில் உணரப்படுதல் அவசியம். நாம் அனைவருமே, திருமுழுக்கின் வழியே, கிறிஸ்துவின் அருள்பணித்துவத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளோம். புனித பேதுரு கூறிய சொற்கள் இன்று, நம் உள்ளங்களில், இல்லங்களில் எதிரொலிக்கட்டும்: "நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி." (1 பேதுரு 2:9)


No comments:

Post a Comment