08 May, 2020

Begin a new life? Or, back to the old? புதிய வாழ்வின் துவக்கமா? பழைய வாழ்வின் பழக்கமா?


I am the Way, the Truth, the Life

5th Sunday of Easter – Mother’s Day

In quite a few countries, including India, a new phase of the “COVID 19 crisis” has begun from May 4, Monday. This new phase has allowed some relaxation of the draconian measures imposed during the ‘total lockdown’ phase. The total lockdown days, lasting, more than 40 days (and in some cases, much more) were like the forty days Jesus spent in the desert. To some of us, this period may have lasted like the ‘forty years in desert’ spent by the Israelites. Various points of view, indeed!
Although this seemed like a painful imposition, this lockdown had its counter-effects. While we felt suffocated by this ‘lockdown’, the earth seems to have breathed easy. Many have observed that the planet earth, which had been badly bruised by us for many years, was given time to rest and recuperate. For many of us the physical togetherness of family members may have given an opportunity to re-establish, renew, or repair relationships. Of course, in many places domestic violence had increased. Once again, differing points of view!
In general, we can say that this forced break, from our otherwise mad rush, must have given us some moments to reflect and reorient our lives. Now that we are able to go back to some sort of normalcy, what do we do? In some countries, the phrase ‘new normal’ is being used. Do we go back to a ‘new’ way of life or, do we get back to the usual, ‘normal’ life, as if nothing seems to have happened?

When we look at the decisions made by the different countries, we feel that government personnel or our political leaders have not learnt any lesson from this virus and its heavy toll on human lives. In most of the decisions taken by the various governments and political leaders, COMMERCE, MONEY and PROFIT seem to have dictated terms. While most of the commercial outlets have been made accessible to people, places of worship as well as educational institutions are still closed to people. While commerce has been deemed as ‘essential’, other valuable human necessities like religion and education have been made ‘non-essential’ for human life!

The madness to put commerce back on the pedestal is seen clearly in the decision to open liquor shops in India. Tamil Nadu government has come out with some shameless reasons for the decision to re-open the TASMAC shops. Shielding the commercial interests of the politicians who have invested in these liquor shops, the government has pointed out the ‘demand’ of the ‘citizens’ as the reason to re-open liquor shops. Whatever be the crisis, personal interests of the politicians always take precedence.

In such a situation, the Church offers us for this Sunday some thoughts on how Jesus tackled a crisis situation and how the early Church faced a problem and took proper decisions.

The First Reading from Acts of the Apostles (Acts 6:1-7), begins with one of the earliest crises faced by the Church – namely, the division between the Hebrews and the Hellenists (Greeks). The apostles solved the problem by convening a meeting of "the whole community of the disciples" and informing them that the aggrieved party should work through its problem. This is a clear example of adult-to-adult way of handling a problem!
It is significant that this passage begins with the words “the disciples were increasing in number” (Acts 7:1) and ends with “And the word of God increased; and the number of the disciples multiplied greatly in Jerusalem” (Acts 7:7). The focus turns from increase in numbers to increase in the word of God as well as in number of disciples! Problems can be solved, when the word of God flourishes!
In the past few weeks, we may have had more time to listen to and reflect on the Word of God. This situation may continue at least for a few more days. It is good to examine the role played by God’s word in our lives.

In the Gospel, we come across another crisis situation. Jesus is talking to his Disciples during the Last Supper. Today’s gospel is part of this farewell discourse. This passage begins with Jesus trying to instil some hope in his disciples. The mood at the Last Supper must have been quite depressing. Jesus had just predicted that one of them would betray him and another would deny him. In a close knit group, such as the one around Jesus, betrayal and denial must have sounded very shocking.
To dispel the gloom, Jesus speaks about the future. Here is the fist part of today’s Gospel:
John 14: 1-6
“Do not let your hearts be troubled. You believe in God; believe also in me. My Father’s house has many rooms; if that were not so, would I have told you that I am going there to prepare a place for you? And if I go and prepare a place for you, I will come back and take you to be with me that you also may be where I am. You know the way to the place where I am going.”
Thomas said to him, “Lord, we don’t know where you are going, so how can we know the way?” Jesus answered, “I am the way and the truth and the life. No one comes to the Father except through me.” 

There are a few lines in the Bible that have been used in-context and out-of-context, in-season and out-of-season! One such line is: “I am the way, and the truth, and the life.” There are seven occasions in John’s Gospel where Jesus has spoken the famous ‘I am’ lines. All these lines are self-defining lines, not as a person blowing one’s own trumpet, but as someone trying to dispel darkness and doubts. All the ‘I am’ statements of Jesus, recorded in John’s Gospel, were statements of clarification and assurance in the midst of doubts and debates.

Life’s trials can either break or make us… During trials, our true convictions come to light. These moments, as it were, give us an opportunity to learn about ourselves better. We also admire those who, due to their self-assurance (and not fake arrogance), remain calm during trials.
This stands in stark contrast to what happens to politicians who, while on stage, can speak eloquently on the ‘utopia’ they would be creating once they come to power. But, when they step out of their comfort zones and are challenged, they back away from their convictions and speak contrary to what they had ‘thundered’ on the stage, just minutes earlier. It is not the comfort zones, but the conflict zones that bring out the true colours of a person.
Real gold and fake gold glitter while they are placed in the showcase. But, when they are placed in fire, the true ‘colours’ of the real and the fake gold come to light. For Jesus, the tougher the challenges he faced, the stronger were his convictions. In times of trials He defines and re-defines his true colours! How has the crisis of COVID 19 helped us re-discover ourselves and, perhaps, re-define ourselves? Only time will tell!

Our closing thoughts are on Mother’s Day. In more than 80 countries around the world, including India, Pakistan, Sri Lanka and Bangladesh, the second Sunday of May is celebrated as Mother’s Day. Is it Mothers’ Day - Plural? Or Mother’s Day - Singular? I usually thought of this day in the plural – Mothers’ Day, until I bumped into this piece of information from Wikipedia:
In 1912, Anna Jarvis trademarked the phrases "second Sunday in May" and "Mother's Day", and created the Mother's Day International Association. "She was specific about the location of the apostrophe; it was to be a singular possessive, for each family to honour their mother, not a plural possessive commemorating all mothers in the world."
We are not celebrating the concept ‘Mother’, but a concrete person – Mom – in our personal lives.

Reading through quite a few vignettes on the evolution of Mother’s Day, I was very impressed with the "Mother's Day Proclamation" written by Julia Ward Howe:
The "Mother's Day Proclamation" by Julia Ward Howe was one of the early calls to celebrate Mother's Day in the United States. Written in 1870, Howe's Mother's Day Proclamation was a pacifist reaction to the carnage of the American Civil War and the Franco-Prussian War. The Proclamation was tied to Howe's feminist belief that women had a responsibility to shape their societies at the political level.

Mother's Day Proclamation
Arise, then, women of this day!
Arise, all women who have hearts,
Whether our baptism be of water or of tears!
Say firmly:
"We will not have great questions decided by irrelevant agencies,
Our husbands will not come to us, reeking with carnage, for caresses and applause.
Our sons shall not be taken from us to unlearn
All that we have been able to teach them of charity, mercy and patience.
We, the women of one country, will be too tender of those of another country
To allow our sons to be trained to injure theirs."
From the bosom of the devastated Earth a voice goes up with our own.
It says: "Disarm! Disarm! The sword of murder is not the balance of justice."
Blood does not wipe out dishonor, nor violence indicate possession.
As men have often forsaken the plough and the anvil at the summons of war,
Let women now leave all that may be left of home for a great and earnest day of counsel.
Let them meet first, as women, to bewail and commemorate the dead.
Let them solemnly take counsel with each other as to the means
Whereby the great human family can live in peace,
Each bearing after his own time the sacred impress, not of Caesar,
But of God.
In the name of womanhood and humanity, I earnestly ask
That a general congress of women without limit of nationality
May be appointed and held at someplace deemed most convenient
And at the earliest period consistent with its objects,
To promote the alliance of the different nationalities,
The amicable settlement of international questions,
The great and general interests of peace.

This proclamation was written exactly 150 years ago, in 1870. It was written in the context of a war. Our world is constantly at war and hence this poem seems to have an everlasting appeal. One line from the poem, namely, “Our husbands will not come to us, reeking with carnage, for caresses and applause” brings to mind the shocking news that even during this COVID 19 crisis, a few ‘mini-wars’ have continued unabated.

Imprinting the image of Caesar or God on this world… on each individual? A challenge worth considering! The image of Caesar, symbolising power and arrogance, has made the world a battlefield all the time. As against this, Julia’s poem talks of imprinting the image of God which ensures peace and love.
Mary, the Mother of Christ, constantly imprints God’s image on this world not only during her life time, but also after her return to heaven. Through her apparitions in different places in different decades, her only aim was to imprint the image of God more and more in the world. Especially, during the apparitions in Fatima, Mary had revealed about the devastations of war and the need to pray for peace. This week we shall celebrate Our Lady of Fatima on May 13, for the first time, without devotees present in the shrine!

On this special day – Mother’s Day – we shall celebrate our own Moms. This year, we specially salute all those who are at the forefront in saving people’s life with motherly care. We salute the medical personnel, people who take care of the burial of the dead, the employees cleaning infected places, the police and many volunteers who help the poor.
We shall celebrate God the Mother. We also celebrate maternal instincts given to each of us. Through the intercession of Our Lady of Fatima, we pray that all of us shall imprint the image of God on this post-virus world and sustain this world in peace!

A woman in Kolkata holds her child as she waits to receive food

உயிர்ப்புக்காலம் 5ம் ஞாயிறு

கோவிட் 19 தொற்றுக்கிருமி உருவாக்கிய நெருக்கடிநிலை கட்டுப்பாடுகளிலிருந்து ஒரு சில நாடுகள், வெளியேறத் துவங்கியுள்ளன. மே 4, கடந்த திங்கள் முதல், 'முழு அடைப்பு' என்ற நிலையின் ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 40 நாள்களுக்கும் மேலாக நீடித்த முழு அடைப்புக் காலம், இயேசு பாலை நிலத்தில் செலவிட்ட 40 நாள்களாகத் தோன்றியிருக்கலாம். ஒரு சிலருக்கோ, இந்த 40 நாள்கள், இஸ்ரயேல் மக்கள் பாலை நிலத்தில் அலைந்து திரிந்த 40 ஆண்டுகளாகவும் தோன்றியிருக்கலாம்.
இந்த முழு அடைப்புக்காலம் நம்மீது ஒரு பெரும் சுமையாகத் திணிக்கப்பட்டு, நம்மை மூச்சடைக்கச் செய்திருந்தாலும், அந்நாள்களில், நம் பூமிக்கோளம், சிறிது சுதந்திரமாக மூச்சுவிட முடிந்தது என்பதையும் நாம் மறுக்க இயலாது. அதேவண்ணம், நான்கு சுவர்களுக்குள் குடும்பமாக நாம் அடைபட்டிருந்த இக்காலத்தில், நமக்குள் பழுதடைந்திருந்த உறவுகள் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அதே நேரம், இந்த முழு அடைப்புக்காலம், இல்லங்களில், வன்முறைகளுக்கும் வழிவகுத்தன என்பது, நாம் அறிந்துவரும் வேதனையான உண்மை.

40 நாள்கள் முழுஅடைப்பை நாம் எந்த மனநிலையுடன் ஏற்றுக்கொண்டோம் என்பதைப் பொருத்து, அது, நலமாக இருந்ததா, அல்லது, நரகமாக இருந்ததா என்ற விளைவுகள் உருவாகியிருக்கும். அதேபோல், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள இவ்வேளையில், நாம் எடுத்துவைக்கும் அடுத்த அடி, எத்திசையில் போகும் என்பது, நமது கரங்களில் உள்ளது. முழு அடைப்பு நாள்கள், புதிய வாழ்வைத் துவங்க வழிவகுத்துள்ளதா, அல்லது, நாம் பழைய வாழ்வுக்கே திரும்பிப் போகிறோமா? என்ற கேள்விகளுக்கு நாம்தான் பதில் சொல்லவேண்டும்.
தற்போது துவங்கியுள்ள அடுத்த நிலைக்கென, அரசுகள் அறிவித்திருக்கும் முடிவுகள், நமக்கு, சங்கடத்தை உருவாக்குகின்றன. இந்தத் தொற்றுக்கிருமியின் தாக்கமும், அதனால் ஏற்பட்ட பல்லாயிரம் உயிர்ப்பலிகளும், நம் அரசியல்வாதிகளுக்கு எந்தவிதமான பாடத்தையும் சொல்லித்தரவில்லை, அவர்களிடம் எள்ளளவும் மாற்றங்களை உருவாக்கவில்லை என்பதை, அவர்கள் அறிவித்திருக்கும் முடிவுகள் பறைசாற்றுகின்றன. அரசியல்வாதிகள், நம்மை, வேதனையிலும், வெட்கத்திலும் தலைகுனியச் செய்துள்ளனர்.

தளர்த்தப்படும் சட்டங்களில், மக்களின் நலன், பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வர்த்தகத்திற்கு முதலிடம் தரப்பட்டுள்ளது என்பதை, அனைத்து நாடுகளிலும் நாம் காண்கிறோம். இத்தனை நாள்களாக முடங்கிக்கிடந்த வர்த்தகம், முழுவீச்சில் நடைபெறவேண்டும் என்பதே, அரசியல் தலைவர்களின் தலையாயக் குறிக்கோளாக உள்ளது. அவர்களைப் பொருத்தவரை, மதநம்பிக்கை, அறிவு வளர்ச்சி ஆகியத் தேவைகள் மனிதர்களுக்கு முக்கியமல்ல. எனவே, வர்த்தக மையங்கள் திறக்கப்படுவதற்கு வழிவகுத்து, வழிபாட்டுத்தலங்களையும், கல்வி மையங்களையும் பல அரசுகள் மூடிவைத்துள்ளன. மதநம்பிக்கை, கல்வியறிவு ஆகியவற்றை, மெய்நிகர் அனுபவங்களாக, வலைத்தளங்கள் வழியே பெறுவதற்கு, அரசுகள் வகுத்துவரும் வழிகள், பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளன.
அரசுகள் காட்டிவரும் இந்த வர்த்தக வெறியின் உச்சக்கட்டத்தை, இந்தியாவில், கடந்த சில நாள்களாகக் காணமுடிகிறது. 40 நாள்களாக மூடிக்கிடந்த மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அந்தக் கடைகளுக்குச் செல்ல நிற்கும் மக்களின் வரிசை, மைல் கணக்கில் நீண்டுள்ளது.
தமிழ்நாட்டில், அரசே மதுவை விற்பனை செய்யும் அவலம், கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. அரசின் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு தமிழக அரசு கூறியுள்ள காரணங்கள் வேதனையைத் தருகின்றன. பக்கத்து மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறந்திருப்பதால், தமிழக மக்கள் மாநில எல்லைகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது என்பதையும், இந்த முழுஅடைப்புக் காலத்தில், தரம் குறைந்த, உடல் நலத்தைக் கெடுக்கக்கூடிய கள்ளச்சாராயம் அதிகம் வியாபாரம் ஆகியுள்ளது என்பதையும், காரணம் காட்டி, தமிழக அரசு அறிக்கை விடுத்துள்ளது. மதுபானக் கடைகளில் முதலீடு செய்திருக்கும் பல அரசியல்வாதிகளின் வர்த்தகத்தைக் காப்பாற்ற, தமிழக அரசு எடுத்த தவறான முடிவுக்கு, மக்களைக் காரணம் காட்டியிருப்பது, எரியும் வீட்டின் மீது, எண்ணெயை ஊற்றும் முயற்சி!

நம் தனிப்பட்ட வாழ்விலும், சமுதாயத்திலும், நெருக்கடியானச் சூழல்கள் எழும்போது, முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதைச் சொல்லித்தர, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி நம் மத்தியில் முயற்சிகள் செய்தது. அந்தப் பாடங்களை கற்றுக்கொள்ள மறுத்து, நம் உலகம், தன் பழைய நிலைக்கேத் திரும்புவது, நம் நம்பிக்கையைக் குலைக்கிறது.
இத்தருணத்தில், இஞ்ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், நெருக்கடி நேரங்களில் எவ்வாறு முடிவெடுப்பது, எத்தகைய முடிவெடுப்பது என்பதை நமக்கு உணர்த்துகின்றன. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகம், (தி.பணிகள் 6:1-7), திருஅவை வரலாற்றில் எழுந்த முதல் நெருக்கடியை இவ்வாறு விளக்குகிறது: அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப் படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். (தி.ப. 6:1)
இந்த நெருக்கடியைத் தீர்க்க, திருத்தூதர்கள் பின்பற்றிய வழிகள் அழகானவை. அவர்கள், அனைத்து சீடர்களையும் ஒருங்கே வரவழைத்து, இந்தப் பிரச்சனையை அவர்கள் முன் வைத்தனர். தங்கள் சமுதாயத்திற்கு அநீதி இழைக்கப்பட்டது என்று முணுமுணுத்தவர்களிடமே, அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண அழைப்பு விடுத்தனர்.
கூடிப் பேசுதல், பிரச்சனையை சொன்னவர்களிடமே தீர்வையும் காணச்சொல்லி தூண்டுதல் ஆகியவை, வயதில் முதிர்ச்சி பெற்றவர்கள் பின்பற்றும் ஆக்கப்பூர்வமான வழிமுறைகள். இவற்றை, நம் சொந்த வாழ்வில் பின்பற்றுகிறோமா என்பதை ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ளலாம். நம் குடும்பங்களில் உருவாகும் குறைகளைப் பற்றிய முணுமுணுப்பு எழும்போது, நாம் பின்பற்றும் வழிமுறைகள் என்ன?

இன்றைய முதல் வாசகத்தின் ஆரம்ப இறைவாக்கியத்தையும், இறுதி இறைவாக்கியத்தையும் இணைத்துப் பார்க்கும்போது, அழகியதோர் எண்ணம் மனதில் பதிகிறது. "அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது" என்று ஆரம்பமாகும், இப்பகுதி, "கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது" என்று நிறைவடைகிறது.
எந்த ஒரு அமைப்பும், எண்ணிக்கையில் மட்டும் கூடினால், அங்கு ஒருவேளை, பல்வேறு உரசல்களும், முணுமுணுப்புக்களும் உருவாகலாம். அப்படி உருவாகும் சவால்களை, முதிர்ச்சி பெற்ற மனநிலையுடன் அணுகும்போது, அவ்வமைப்பில் இணைவோரின் எண்ணிக்கை கூடும் என்பதையும், அந்த அமைப்பில், கடவுளின் வார்த்தைக்கு முதலிடம் வழங்கப்பட்டால், உண்மையான வளர்ச்சி அங்கு நிலவும் என்பதையும், இந்த முதல் வாசகம் தெளிவாக்குகிறது.
இத்தனை நாள்கள் இல்லத்தில் தங்கி, தொலைக்காட்சி வழியே திருவழிபாடுகளில் பங்கேற்ற நம் மத்தியில், கடவுளின் வார்த்தை எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது என்பதை ஆய்வுசெய்யலாம். இனி தொடரும் நாள்களிலும், நாம் தொடர்ந்து இல்லங்களில் திருவழிபாடுகளில் பங்கேற்கும்போது, கடவுளின் வார்த்தைக்கு எத்தகைய இடம் தருகிறோம் என்பதையும் திட்டமிடலாம்.

நெருக்கடியான ஒரு சூழலில், இயேசு, தன் சீடர்களிடம் கூறிய நம்பிக்கை வரிகள் இன்றைய நற்செய்தியின் வழியே நம்மை அடைந்துள்ளன. நம் வாழ்வில், நெருக்கடிகள் பெருகும்போது, நமது உண்மை இயல்பு வெளிப்படும். வாழ்க்கை, மிகச்சீராக, சுமுகமாகச் செல்லும்போது, நாம் எதை நம்புகிறோம், எதை நம்புவதில்லை, எது நமது வாழ்வின் அடிப்படை என்ற கேள்விகளெல்லாம் எழாது. ஆனால், போராட்டங்களில், சங்கடங்களில் நாம் சிக்கிக்கொள்ளும்போது, நமது நிலைப்பாடு என்ன, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதெல்லாம் முதலில் நமக்குத் தெரிய வரும், பின்னர் இவை பிறருக்கும் தெரிய வரும்.
உண்மைத் தங்கமோ, போலித் தங்கமோ அழகிய ஒரு கண்ணாடி பேழைக்குள் இருக்கும்போது, ஒரே விதத்தில் மின்னும். வேறுபாடு தெரியாது. தீயில் இடப்பட்டால் தான், உண்மைத் தங்கமும், போலித் தங்கமும் தன் உண்மை நிலைகளை வெளிப்படுத்தும். கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நெருக்கடி, நம்மில், எத்தகைய பண்புகளை வெளிக்கொணர்ந்துள்ளது என்பதைச் சிந்திப்பது நல்லது. இந்தச் சூழலில், இன்று நம்மை வந்தடைந்துள்ள நற்செய்தி, இயேசு தன் உண்மை இயல்பை வெளிப்படுத்தும் கூற்றுகளை நமக்கு வழங்குகிறது.

"வழியும், உண்மையும், வாழ்வும் நானே"... என்று இயேசு, தன் உண்மை இயல்பின் ஒரு சில அம்சங்களை, இன்றைய நற்செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார். இயேசு, இந்த வார்த்தைகளை, அமைதியாக, ஒரு புன்முறுவலுடன், இலேசான ஒரு பெருமையுடன், கம்பீரமாகச் சொல்லவில்லை. இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்கு காரணம்... சீடர்கள் கொண்டிருந்த பயம், கலக்கம், சந்தேகம்... எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக் கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்கிறார். இன்றைய நற்செய்தியின் முதல் வரிகள் இந்தக் கலக்கமானச் சூழலைத் தெளிவாக்குகின்றன.

யோவான் நற்செய்தி 14: 1-6
இயேசு தன் சீடர்களிடம் கூறியது: நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன.... நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும் என்றார். தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்றார். இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானேஎன்றார்.

சீடர்களின் உள்ளக் கலக்கத்திற்குக் காரணம் என்ன? இயேசு அப்போதுதான் அவர்களிடம் இரு பெரும் கசப்பான உண்மைகளைப் பகிர்ந்துகொண்டார். பன்னிரு சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுப்பார் என்றும், மற்றொரு சீடர், இயேசுவைத் தனக்குத் தெரியாது என மறுதலிப்பார் என்றும், இயேசு கூறிய இரு கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த சீடர்களின் மனஉறுதியைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் இயேசு வருங்காலத்தைப் பற்றி, வருங்காலத்தில் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் வாழப்போகும் தந்தையின் இல்லத்தைப் பற்றி பேசுகிறார். அந்த இல்லம் எங்குள்ளது, அதற்குச் செல்லும் வழி என்ன என்று கேட்கும், தோமாவிடம், இயேசு, காலத்தால் அழியாத அற்புத சொற்களை வழங்குகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. இதுதான் இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது.

நம்பிக்கையிழந்து, சோர்வுற்ற சீடர்களின் உள்ளங்களில் நம்பிக்கையை வழங்க, ஓர் அன்னையின் கனிவோடு, அவர்களிடம், வருங்காலத்தைப் பற்றிய கனவுகளை வளர்க்கும்வண்ணம் பேசினார். இந்த குழப்பமான, நெருக்கடியான காலத்தில், இயேசு, நம் உள்ளங்களிலும், நம்பிக்கையை வளர்க்கவேண்டும் என்று மன்றாடுவோம். அவரே, நமக்கும், வழியாக உண்மையாக, வாழ்வாக இருக்கவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

இறுதியாக, இந்த ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் அன்னை தினத்தைப் பற்றிய ஒரு சில எண்ணங்களுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். இந்தியா, இலங்கை உட்பட, உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில், மே மாதத்தின் 2ம் ஞாயிறு, அன்னை தினமாக சிறப்பிக்கப்படுகிறது. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணம், 19ம் நூற்றாண்டில் ஆரம்பமானது. சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe அவர்கள், 1870ம் ஆண்டு, சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். "அன்னைதின அறைகூவல்" (Mother's Day Proclamation) என்ற பெயரில் வெளியான அக்கவிதை, உலகெங்கும், அன்னை தினத்தைக் கொண்டாடுவதற்கு வித்திட்டது. அக்கவிதை விவரிக்கும் பெண்மை, தாய்மை ஆகியப் பண்புகள், நமது இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பாடங்களைச் சொல்லித்தருகின்றன. இதோ, அக்கவிதையின் சில வரிகள்:
மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே எதிர்த்து நில்லுங்கள்!
உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.
உறுதியாகச் சொல்லுங்கள்: வாழ்வின் மிக முக்கியக் கேள்விகளின் விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.
சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் எங்கள் ஆரவார வரவேற்பையும், அரவணைப்பையும் பெறுவதற்கு நாங்கள் இணங்கமாட்டோம்.
பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித்தரும் நிறுவனங்களிடம் எங்கள் குழந்தைகளை ஒப்படைக்கமாட்டோம்.
ஒரு நாட்டைச் சார்ந்த பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டைச் சார்ந்த பெண்கள் மீது கனிவுகொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள், அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.

நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம், எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள் ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.
போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும். போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம் அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பெண்கள் கலந்து பேசட்டும்.
உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.
அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்து முடிந்திருந்த காலத்தில், Julia Ward அவர்கள், இந்தக் கவிதையை எழுதினார். 150 ஆண்டுகளுக்குமுன், 1870ம் ஆண்டு, இரணமான, கனமான இதயத்துடன் அவர் எழுதிய வரிகள், இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள போர்கள், சுற்றுச்சூழல் சீரழிவு, சமுதாயப் பாகுபாடுகள் போன்ற அவலங்களை நினைவுறுத்துகின்றன.

சக்தியற்ற, மென்மையான உருவமாகத் தோன்றும் அன்னையரின் வீரம், தியாகம் ஆகிய சக்திநிறைந்த பண்புகள், நெருக்கடி வேளைகளில் வெளிப்படுவதை உணர்ந்துள்ளோம். இவ்வுலகை ஒரு போர்க்களமாக மாற்றி, பல்லாயிரம் உயிர்களை பறித்துள்ள கோவிட் 19 தொற்றுக்கிருமியின் பிடியிலிருந்து மக்களைக் காக்க தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான செவிலியர், மருத்துவப்பணியாளர்கள், துப்புரவு தொழிலாளிகள், காவல் துறையினர் ஆகியோர் மனித சமுதாயத்தைக் காக்கும் அன்னையர்களாக விளங்குகின்றனர். அவர்கள் அனைவரையும் இறைவனின் சந்நிதியில், இந்த அன்னை தினத்தன்று, நன்றியோடு எண்ணிப்பார்ப்போம்.




No comments:

Post a Comment