23 April, 2021

Self-less shepherds and selfish hirelings உண்மை மேய்ப்பர்களும், போலி-கூலி மேய்ப்பர்களும்

 4th Sunday of Easter – the Good Shepherd Sunday

We come to this Sunday’s liturgy with heavy hearts. The news from India about the second wave of COVID-19 is painful. What was only a matter of facts and figures during the first wave, has become more painfully personal with many among our relatives and friends getting affected by this virus.

At this moment, let us turn our attention to the medical workers who have risked their health and, their life, in order to save those affected by this virulent virus. We pay special attention to them, since this Sunday invites us to reflect on Jesus the Good Shepherd. We know that these health workers have brought millions of men and women from the valley of virus-ridden darkness to tranquil waters and green meadows of life (Cf. Psalm 23). We are thankful to God for these self-less shepherds!
A recent report from the Amnesty International (March 5, 2021) says that ‘at least 17,000 health workers have died from COVID-19 over the last year’. When we think of 17,000 just as a number, it may not have a deep impact on us, but, when we think of this number as ‘one health worker dying every 30 minutes’, it brings to light the risks taken by doctors, nurses and other volunteers fighting against this monster called ‘COVID-19’.

While reflecting on the risks taken by the health workers all over the world, our thoughts turn to Dr Li Wenliang from Wuhan, China. On February 7, 2020, he died, at the age of 35, after contracting the virus while treating patients in Wuhan. In December 2019, he sent a message to fellow medics warning of a virus he thought looked like SARS - another deadly coronavirus. But he was told by the police to "stop making false comments" and was investigated for "spreading rumours". Weeks later, after the death of Dr Li, China's Supreme Court vindicated him and other "rumor-mongers" by saying, "It might have been a fortunate thing ... if the public had listened to this 'rumor' at the time..."

We have honest and conscientious medical personnel like Dr Li Wenliang, who wish to save people, even to the point of laying down their lives. On the other hand, we have politicians who dish out false information, putting people more at risk. Along with these politicians, we also have unethical medical ‘professionals’, who have made enormous profit exploiting the COVID crisis. While more than 17,000 honest medical personnel have died – one every 30 minutes – how many politicians and medical business magnets have died due to COVID-19 in the last year? Perhaps 500? But how many of them died helping people suffering from this virus? NONE!

These two opposing forces have been referred to by the figures of ‘the good shepherd’ and ‘the hireling’ in today’s Gospel – John 10:11-18.
I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep. He who is a hireling and not a shepherd, whose own the sheep are not, sees the wolf coming and leaves the sheep and flees; and the wolf snatches them and scatters them. He flees because he is a hireling and cares nothing for the sheep. (John 10:11-13)

This passage painfully brings back memories of our politicians who have been busy conducting election rallies in India in the month of March. One can easily see that these rallies, where huge crowds gathered - with no social distancing, with no masks – may have been the root-cause of this second wave. Those politicians, after the ‘election festival’ have run away to their secure fortresses, while the wolf, called COVID, is tearing the sheep to pieces.

In today’s Gospel, Jesus goes on to mention another special trait of a true shepherd.
I am the good shepherd; I know my own and my own know me… and I lay down my life for the sheep. (Jn. 10:14-15)
Human history has recorded the heroic sacrifices of many true shepherds who have laid down their lives for the sheep. Let us recall to mind one such sacrifice that took place when the great ‘Titanic’ was sinking.

‘Titanic’ set sail from Southampton, England, with an aura of ‘unsinkable assurance’. Four days after leaving Southampton, Titanic collided with an iceberg and sank in the North Atlantic Sea, on April 14-15, 1912.

Although this tragedy leaves us with lots of questions, quite a few remarkable incidents of courage and sacrifice that emerged on board, leave us with a sense of admiration and wonder. One of them is about three priests – Fathers - Thomas Byles, Juozas Montvila, and Joseph Benedikt Peruschitz. These three priests declined the offer of getting into the life-boats and stayed on with the people, stranded on the ship, offering them final absolution and praying with them as the ship plunged into the icy waters of the Atlantic. The bodies of the three priests were never recovered. Although all the three priests set out, each with his own ‘private mission’, they joined hands in the common mission of becoming shepherds of the abandoned people on board the Titanic.

Father Byles did not view his trip on the Titanic as a vacation from his priestly duties. He spent Saturday April 13, hearing confessions, and on Sunday April 14, he said two masses for the second-and third-class passengers. When the Titanic struck the iceberg, Father Byles was walking on the upper deck reading his breviary. He immediately sprang into action. He assisted many third-class passengers up to the boat deck and onto the life boats. As the ship was sinking, he said the rosary and heard confessions. Near the end, he gave absolution to more than a hundred passengers trapped on the stern of the ship after all the lifeboats had been launched.

Like Father Byles, Fathers Montvila and Peruschitz went among the passengers, praying with all, Catholic and non-Catholic, and granting absolution. Also like Father Byles they were offered seats in the lifeboats and declined them, realizing that the place for a priest was on board the Titanic with those who were about to die. Like the good shepherd described by Jesus in today’s Gospel, all the three laid down their lives for the sheep. A stained-glass window placed in the church of St Helen as a memorial to its former Parish Priest, Fr Thomas Byles, depicts Christ the Good Shepherd.

As we celebrate the Good Shepherd Sunday, the Church invites us to celebrate the World Day of Prayer for Vocations. We are aware that the moths of April and May are crucial for young men and women to chalk out their future plans in terms of further studies, job, life-partner etc. We are also aware that some of these young men and women wish to follow the call of God to serve the people as Religious and Priests. We bring all the young men and women, especially during this pandemic, to the loving embrace of God so that they can be guided well in their decision-making process!

We began this Sunday reflection with heavy hearts. We close them, once again, with heavy hearts praying for a true Shepherd languishing in a prison in Mumbai, India. Our thoughts are with the Jesuit Priest, Fr Stan Swamy, who is ‘celebrating’ his 84th Birthday on Monday, April 26. This is the first time such a senior person has been put behind bars.

Why was the Indian government so hell-bent on getting Fr Stan arrested and put behind bars? He has been a champion of the tribal people (Adivasis) living in Jharkhand. He has dedicated his life for the past 50 years among these people. He was helping the mostly illiterate tribal people, who were robbed of their lands by some ‘corporate’ sharks with the connivance of the present Indian government. Fr Stan tried to educate the Adivasis about their land rights and tried to organise them to fight for their rights.

Fr Stan was also aware of the police atrocities unleashed especially on the tribal youth. He saw innocent Adivasis languishing in jails on fabricated allegations. He helped conduct a research study on Left-wing undertrials in Jharkhand.
The Indian government was keen to silence Fr Stan’s voice, since it was reaching far beyond Jharkhand and was in international circles. Its efforts resulted in the arrest of Fr Stan in his residence by the NIA personnel at night on October 8, without the arrest warrant.

Fr Stan had stated clearly that given his health condition (Parkinson’s, heart-related problems and loss of hearing), as well as the pandemic when elderly persons are forbidden to go out, he was willing to cooperate with the enquiry via online. But the NIA dragged him from Ranchi all the way to Mumbai and shut him up behind bars.
It is a sad coincidence that Fr Stan was given the same treatment he was fighting against, namely, false and fabricated accusations under which many tribal youths had been arrested. By carrying out this blatant violence against all humane, civil norms, the Indian government as well as NIA have shown the world that they are above the law and anyone who tries to question them will have to face this treatment.

It is now more than 200 days since Fr Stan was arrested and the dark tunnel of his imprisonment continues ‘without the light at the end’. As a true shepherd, Fr Stan has been thinking mainly of his fellow prisoners. His reflections from the prison show the concern of a true, selfless shepherd!

Let us join thousands of people from all over the world and pray for the health of Fr Stan Swamy! We pray that Jesus, the Good Shepherd, who had seen the ‘power of darkness’ operative during his life, stand by Fr Stan during this difficult time… not only with Fr Stan, but with all those who have been unjustly arrested and are languishing in prisons for their committed work towards the liberation of people.

The Good Shepherd vs wolves

உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு - நல்லாயன் ஞாயிறு

கனத்த இதயத்தோடும், கவலைகள் நிறைந்த எண்ணங்களோடும் இந்த ஞாயிறு சிந்தனையைத் துவக்குகிறோம். கோவிட்-19 பெருந்தொற்றின் 2வது அலை, இந்தியாவை, அதிக அளவில் தாக்கியுள்ளதாக, ஊடகங்கள் கூறிவருகின்றன. இதுவரை, ஓர் எண்ணிக்கையாக, யாரோ ஒருவருக்கு ஏற்பட்ட இழப்பாக இருந்த கோவிட் ஆபத்து, இப்போது, நம் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், ஆகியோரைத் தாக்கியிருப்பது, நம்மை நிலைகுலையச் செய்துவருகிறது.

இத்தருணத்தில், கடந்த ஓராண்டிற்கும் மேலாக, இந்தப் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோர் மத்தியில், தங்கள் உடல்நலம், உயிர் ஆகியவற்றைப் பணயம் வைத்து உழைத்துவரும் மருத்துவப் பணியாளர்கள் மீது நம் கவனத்தைத் திருப்புவோம். சாவின் இருள் சூழ்ந்த பாதையில் பயணித்த நோயாளிகளில் பலரை, வாழ்வுதரும் நீர்நிலைகளுக்கும், பசும்புல் வெளிகளுக்கும் (காண்க. திருப்பாடல் 23) அழைத்துச்சென்ற இந்த மருத்துவப் பணியாளர்கள், இந்த ஞாயிறன்று நாம் சிறப்பிக்கும் நல்லாயனின் மறு உருவங்கள்.

மனித நலனையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பதெற்கென்று உருவாக்கப்பட்டுள்ள ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) என்ற அமைப்பு, மார்ச் மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், உலகெங்கும், 17,000த்திற்கும் அதிகமான மருத்துவர்களும், மருத்துவப்பணியாளர்களும், கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை அல்ல என்றும், உண்மையான எண்ணிக்கை, இன்னும் சில ஆயிரம் கூடுதலாக இருக்கும் என்றும், இவ்வமைப்பினர் கூறுகின்றனர்.

17,000 என்பதை, வெறும் எண்ணிக்கையாக சிந்திக்கும்போது, அது, நம்மில், பெரும் தாக்கங்களை உருவாக்காமல் போகும் ஆபத்து உள்ளது. இதே எண்ணிக்கையை, வேறு வகையில் நாம் சிந்திக்கவேண்டும். அதாவது, ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒரு மருத்துவப் பணியாளர், உலகின் ஏதோ ஒரு பகுதியில், குறிப்பாக, வறுமைப்பட்ட நாடுகளில், கோவிட் தடுப்புப் பணியில் உயிரிழந்து வருகிறார் என்று கூறும்போது, இவர்களின் தன்னலமற்ற பணி, இன்னும் தெளிவாகப் புரிகிறது.

பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரிடையே உழைத்த மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், இந்த பெருந்தொற்றினால் இறந்தோரை அடக்கம், அல்லது, தகனம் செய்தோர், அவசரக்கால உதவிகள் செய்தோர், தன்னார்வத் தொண்டர்கள் என்று, பலரும், இந்தப் பெருந்தொற்றின் ஆபத்துக்களை அறிந்திருந்தும், நோயுற்றோரைக் காப்பதற்காக, தங்களையே வழங்கியுள்ளனர். இந்த உன்னத உள்ளங்களுக்காக, இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

குறிப்பாக, இவ்வேளையில், சீனாவின் வுஹான் (Wuhan) நகரில் பணியாற்றிய மருத்துவர் லீ வென்லியாங் (Li Wenliang) அவர்களை தனிப்பட்ட முறையில் எண்ணிப்பார்ப்போம். கோவிட் பெருந்தொற்று, இனம்தெரியாத ஒரு கிருமியாக வுஹான் நகரில் தோன்றிய வேளையில், அதைப்பற்றிய முதல் எச்சரிக்கையை விடுத்தவர், மருத்துவர் லீ வென்லியாங். அவரை, முற்றிலும் அடக்கி, ஒடுக்க, சீன அரசு முயற்சி செய்து, வெற்றியும் கண்டது. இறுதியில், மருத்துவர் லீ வென்லியாங் அவர்கள், இந்தக் கிருமியினால் பாதிக்கப்பட்டு, 2020ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி, தன் 35வது வயதில் உயிரிழந்தார். அவர் வெளியிட்ட உண்மைகளை, வதந்தி என்றும், பொய் என்றும் முத்திரை குத்தி, சீன அரசு பொய்யானச் செய்திகளை வெளியிட்டது.

மக்களிடம் உண்மையைக் கூறி, எச்சரிக்கைவிடுத்து, அவர்களைக் காப்பதற்காக உழைக்கும் மருத்துவத்துறையினர், ஒருபுறம். மக்களிடமிருந்து உண்மைகளை மறைத்து, அவர்களை இன்னும் அதிக ஆபத்தில் சிக்கவைத்திருக்கும் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், மறுபுறம். அதேவண்ணம், இந்தப் பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்கப் போராடுவோர், ஒருபுறம். இந்தப் பெருந்தொற்றை மூலதனமாக்கி, மருத்துவ வியாபாரம் செய்வோர், மறுபுறம்.

மக்களைக் காப்பதற்காகப் போராடி, 30 நிமிடத்திற்கு ஒருவராக, 17,000 மருத்துவப் பணியாளர்கள் இறந்துள்ள 2020ம் ஆண்டில், எத்தனை தலைவர்கள், எத்தனை அரசியல் பெரும்புள்ளிகள், எத்தனை மருத்துவ வியாபாரிகள் மரணமடைந்தனர் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். ஒருவேளை, உலகெங்கும் கணக்கெடுத்தால், அரசியல் மற்றும் மருத்துவத் தரகர்கள் நடுவே, 500 பேர் இறந்திருக்கக்கூடும். அவர்களிலும், எத்தனை பேர் மக்களுக்கு உதவிகள் செய்யவந்த வேளையில் இறந்தனர் என்பதை நினைத்தால், அந்த எண்ணிக்கை பூஜ்யமாக இருக்கும்.

மக்களின் நலனுக்காகவே தாங்கள் வாழ்வதாக மேடைகளில் முழக்கமிடும் அரசியல்வாதிகள், மக்களை துன்பங்கள் தாக்குகின்றன என்பதை அறிந்ததும், ஓடி ஒளிந்துகொள்வர் என்பதை அறிவோம். அதேவண்ணம், மக்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டவை என்று, தங்கள் மருத்துவ இல்லங்களைப் பற்றி, விளம்பரங்கள் வழியே முழக்கமிடும் வியாபாரிகள், மக்களின் ஆபத்தை மூலதனமாக்கி, இலாபம் ஈட்டுவதிலேயே குறியாய் உள்ளனர் என்பதையும் அறிவோம்.

எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இவ்விரு குழுவினர், இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் ஆயனையும், கூலிக்கு மேய்ப்பவரையும் மனதில் பதிக்கின்றனர்:
யோவான் 10: 11-13
நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு, ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டுபோய், மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.

அண்மையில், இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்றன என்பதை நாம் அறிவோம். இந்தத் தேர்தல்களையொட்டி, மக்களை, கூட்டம் கூட்டமாகச் சேர்ப்பதில், அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டினர். இந்தக் கூட்டங்களின் பின்விளைவாக, இந்தப் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, இவ்வளவு கடுமையாய் தாக்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. இச்சூழலில், இன்னும் ஒரு மாநிலத்தில், பகுதி, பகுதியாக, வாக்களிப்பு தொடர்கின்றது. மக்களின் நலனைக் கருதி, அவற்றை ஒரேநேரத்தில் நடத்திவிட விடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மக்களுக்காக தேர்தல் என்ற நிலை மாறி, தேர்தலுக்காக மக்களைப் பலியாக்கும் போக்கு உருவாகியிருப்பது, வேதனையைத் தருகிறது.
கூலிக்கு மேய்க்கும் அரசியல்வாதிகள், தேர்தல் விழா முடிந்த கையோடு, பாதுகாப்பான தங்கள் அரண்களுக்குள் அடைக்கலம் புகுந்துவிட்டனர். தற்போது, மக்களை, கோவிட் பெருந்தொற்று என்ற ஓநாய் வேட்டையாடுவதைப்பற்றி அவர்களுக்கு எவ்வித அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.

தன்னைப் பின் தொடர்பவர்களின் இன்ப, துன்பங்களில்... முக்கியமாக, அவர்களின் துன்பங்களில் தன்னையே இணைத்துக்கொள்பவரே, உண்மையானத் தலைவர், உண்மையான ஆயர்; தேவைப்பட்டால், தன் உயிரையும் தருபவர், உண்மையான ஆயர் என்பதை, இயேசு, இன்றைய நற்செய்தியில், வலியுறுத்திக் கூறியுள்ளார்:
யோவான் 10: 14-15
நல்ல ஆயன் நானே. ... நான் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.

எந்த ஒரு சூழலிலும், தன்னைப்பற்றி சிந்திக்காமல், மற்றவர்களையே எண்ணி வாழ்வதைப்போன்ற ஓர் உயர்வான வாழ்வு உலகில் இல்லை. ஆபத்து, துன்பம் என்று வரும்போது, தன்னைக்குறித்து ஒருவர் கவலைகொள்வதும், தன்னைக் காத்துக்கொள்ள முயல்வதும், வெகு சாதாரண மனித இயல்பு. அந்த இக்கட்டானச் சூழல்களிலும், தன்னைப்பற்றிய கவலை துளியும் இல்லாமல், அடுத்தவரைப்பற்றி கவலைப்படும் மனம், மலைபோல் உயர்ந்த மனம். மனித வரலாற்றில் தங்களையே மறந்து, பிறருக்காக வாழ்ந்த பலரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். 

'டைட்டானிக்' (Titanic) என்ற புகழ்பெற்ற கப்பல், 1912ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15ம் தேதி, அட்லான்டிக் கடல் நடுவே, பனிப்பாறையில் மோதி, கடலில் மூழ்கியது என்பது நம் நினைவில் பதிந்திருக்கும். அக்கப்பலின் வீழ்ச்சி, மனித ஆணவத்திற்கு விழுந்த மரண அடி. ஆனால், 'டைட்டானிக்' மூழ்கிய நேரத்தில் நிகழ்ந்த செயல்கள், மனிதத் தியாகத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒளி விளக்குகளாக இன்றும் நம் மனங்களுக்கு நிறைவு தருகின்றன. அந்த ஒளி விளக்குகளில், Thomas Byles, Benedikt Peruschitz, Juozas Montvila, என்ற மூன்று அருள்பணியாளர்களும் அடங்குவர்.

'டைட்டானிக்' மூழ்கிக்கொண்டிருந்தபோது, இம்மூன்று அருள்பணியாளர்களும் உயிர்காக்கும் படகுகளில் தப்பித்துச்செல்ல தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை மறுத்துவிட்டனர். மரணத்தை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கியபடி, அம்மக்களுடன் இணைந்து செபித்தபடி, அவர்களும் கடலில் மூழ்கி இறந்தனர் என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்தில், இவர்களது பெயர்கள் பெரிதாகப் பேசப்படவில்லை; இவர்களது உடல்களும் மீட்கப்படவில்லை. ஆனால், இவர்களது இறுதிநேர ஆன்மீகப் பணிகளைக் கண்ட பலரும், அவர்கள் தலைமுறையினரும் இவர்களைப் பெருமையுடன், நன்றியுடன் இன்றும் எண்ணி வருகின்றனர். இன்று நாம் கொண்டாடும் நல்லாயன் ஞாயிறன்று, இம்மூன்று அருள்பணியாளர்களைப்பற்றி சிந்திப்பதை, நமக்கு வழங்கப்பட்ட வரமாக ஏற்றுக்கொள்வோம்.
இம்மூன்று அருள்பணியாளர்களும், கப்பலில் தங்கள் பயணத்தைக் துவக்கிய வேளையில், ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட தேவை இருந்தது. அத்தேவைகளை நிறைவேற்றும் திட்டங்களுடன் அவர்கள் பயணம் செய்தனர். இருப்பினும், கப்பலில் பயணித்தவர்களை ஆபத்து சூழ்ந்ததும், இம்மூன்று அருள்பணியாளர்களும் தங்கள் சொந்த தேவைகளையும், திட்டங்களையும் புறந்தள்ளிவிட்டு, மக்களின் தேவைகளை, குறிப்பாக, அவர்களது மரணநேர ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றி, அப்பணியில் தங்கள் உயிரை வழங்கினர்.

இம்மூவரையும் புனிதர்களாக உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாலும், இம்மூவரும் மக்கள் மனங்களில் புனிதமான ஓரிடம் பெற்றுள்ளனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இம்மூவரில், அருள்பணி Thomas Byles அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்விப்பட்ட திருத்தந்தை புனித 10ம் பயஸ் அவர்கள், அது ஒரு மறைசாட்சிய மரணம் என்று குறிப்பிட்டார். அருள்பணி Byles அவர்கள், இங்கிலாந்தில், பங்குத் தந்தையாகப் பணிபுரிந்துவந்த புனித ஹெலன் கோவிலில், இவர் நினைவாக வைக்கப்பட்டுள்ள வண்ணக்கண்ணாடி சன்னலில் (stained-glass window) பொறிக்கப்பட்டுள்ள உருவம் என்ன தெரியுமா? நல்லாயனாம் இயேசுவின் உருவம்.

நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளையும் சிறப்பிக்க, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். ஏப்ரல், மே மாதங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நேரம். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை, இன்று, சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவைப் பின்பற்றி, மக்கள் பணிக்குத் தங்களையே வழங்க முன்வரும் இளையோரை, இறைவன் வழிநடத்த வேண்டுமென, நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தல் ஞாயிறன்று, மன்றாடுவோம்.

கனத்த இதயத்தோடு இந்த ஞாயிறு சிந்தனைகளை ஆரம்பித்தோம். இப்போது மீண்டும் கனத்த இதயத்தோடு, ஒரு முக்கிய இறைவேண்டலை மேற்கொள்வோம். 200 நாள்களுக்கும் மேலாக, மும்பைச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஏப்ரல் 26, இத்திங்களன்று, தன் 84வது வயதை நிறைவு செய்கிறார்.
வயதில் மிக முதிர்ந்த ஒருவரை, சிறையில் அடைத்த அவலத்தை, இந்திய நடுவண் அரசு, முதல்முறையாக நடத்திக் காட்டியுள்ளது. அதுவும், ‘பார்கின்சன்ஸ் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய், இருதயம் தொடர்பான குறைபாடுகள், கேட்கும் திறனில் குறைவு,  உட்பட, பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுள்ள அவரை, இந்தப் பெருந்தொற்று காலத்தில், இராஞ்சியிலிருந்து மும்பைக்கு இழுத்துச்சென்று, அங்கு சிறையில் அடைத்திருப்பது, மனிதாபிமானமற்ற கொடுமை.

இத்தனைக் கீழ்த்தரமான அரசியல் வேட்டைக்கு பலியாகும்வண்ணம், அருள்பணி ஸ்டான் அவர்கள் செய்தது என்ன? இந்திய நடுவண் அரசின் அத்துமீறிய அராஜகங்களை, குறிப்பாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழும் பழங்குடியின மக்கள்மீது அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்த, அருள்பணி ஸ்டான் அவர்கள் உழைத்துவந்தார். பழங்குடியின மக்களுக்கென, அவர், கடந்த 50 ஆண்டுகளாக, பல்வேறு வழிகளில் பாடுபட்டு வந்துள்ளார். எழுதப்படிக்கத் தெரியாத அந்த அப்பாவி மக்களின் உரிமைகளை அவர்களுக்கு உணர்த்திவந்தார்.

இந்திய நடுவண் அரசும், பன்னாட்டு பெருநிறுவனங்களும் இணைந்து, பழங்குடியினரின் உரிமைச்சொத்தான நிலங்களிலிருந்து அவர்களை விரட்டியடித்துவிட்டு, அந்த நிலங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடித்து வருகின்றன. இந்தக் கொள்ளைக்கூட்டத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக, மக்களை, குறிப்பாக, இளையோரை ஒருங்கிணைத்து, சட்டப்படி அவர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து விழிப்புணர்வையும், அந்த உரிமைகளைக் கோரி போராடும் வழிமுறைகளையும், அருள்பணி ஸ்டான் அவர்கள் வழங்கிவந்தார்.

ஆயிரக்கணக்கான பழங்குடியின இளைஞர்கள், தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய வேளையில், அவர்களை 'நாக்சலைட்டுகள்' என்று முத்திரை குத்தி, எவ்வித வழக்கும் இன்றி, அவர்களை சிறையில் அடைத்தனர், காவல் துறையினர். வறுமைப்பிடியில் சிக்கித்தவித்த அவ்விளையோர், வழக்கறிஞர் வைத்து வாதாட முடியாத நிலையில், பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட அருள்பணி ஸ்டான் அவர்கள், அநியாயமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுவிக்க, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த வழக்கின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள், உலகின் பல பகுதிகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தன. இதனால் ஆத்திரம் அடைந்த இந்திய அரசு, அருள்பணியாளரைப் பழிவாங்கத் துடித்தது. தற்போது Bhima-Koregaon வழக்கில் அவரைத் தொடர்புபடுத்தி, தன் பழியைத் தீர்த்துக்கொண்டது.

சிறையிலிருந்து இதுவரை அருள்பணி ஸ்டான் அவர்கள் பகிர்ந்துவரும் எண்ணங்கள், தன்னுடன் சிறையில் இருக்கும் மற்றவர்களைப் பற்றியே இருந்துவருகிறது. தன் உடன் கைதிகள் என்ற ஆடுகள் மீது பரிவு கொண்டுள்ள அந்த உண்மையான ஆயன், இதுவரை மனம் தளராமல் இருப்பது, இறைவன் அவருக்கு வழங்கியுள்ள அருள் என்று நாம் எண்ணிப்பார்க்கலாம்.

பல்வேறு உடல்நலக் குறைவுடன் தன் 84வது ஆண்டை நிறைவுசெய்யும் அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு, இறைவன், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், பாதுகாப்பையும், தேவையான உடல், உள்ள உறுதியையும் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.


7 comments:

  1. Nice reflections Jerry on the ground realities in India. Thank you!

    Pat

    ReplyDelete
    Replies
    1. Thank you, for this appreciative note. Glad that the reflection was helpful.

      Delete
  2. What about our own "shepherds"... Aren't they as good as our politicians...

    ReplyDelete
    Replies
    1. I presume your mention of 'our own Shepherds' with a special quotation mark, is referring to our bishops, priests and religious... If so, you have already identified them with 'our politicians'. Once this identification takes place, then there is no more comments on that. Thank you, for reminding us about this unfortunate 'shepherds' (or hirelings?). We can olnly pray for them...

      Delete
  3. உண்மையை உரக்கக் கூறிய உங்கள் பணி சிறக்க வேண்டுகிறோம்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கும், அதைவிட கூடுதலாக உங்கள் வேண்டுதலுக்கும் மிக்க நன்றி
      ஜெரி சே.ச.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete