24 March, 2022

The Parable of the Prodigal Father ஊதாரித் தந்தையின் உவமை

The return of the Prodigal Son

4th Sunday of Lent

Today, the Fourth Sunday of Lent, is called Laetare Sunday – Rejoicing Sunday. There could be hundreds of reasons why we rejoice in our life. Today’s first reading from Joshua as well as the Gospel of Luke give us two reasons for rejoicing. We rejoice, when we receive something which we have never imagined or dreamt of. We also rejoice, perhaps, more so, when we receive back something we had lost. We have experienced both these types of happiness in our lives. The reading from Joshua (Joshua 5:9a,10-12) talks of the first type of happiness, while Luke’s gospel - the famous parable of the ‘Prodigal Son’ (Luke 15:11-32) - talks of the second type of happiness. Here is the passage from Joshua:
Joshua 5: 9-12
And the LORD said to Joshua, "This day I have rolled away the reproach of Egypt from you."… While the people of Israel were encamped in Gilgal they kept the passover on the fourteenth day of the month at evening in the plains of Jericho. And on the morrow after the passover, on that very day, they ate of the produce of the land, unleavened cakes and parched grain. And the people of Israel … ate of the fruit of the land of Canaan that year.

The Israelites who entered Canaan, belonged to a generation born in slavery in Egypt. Hence, they would have never had the experience of cultivating their own food. Every aspect of their food, namely, what they would eat, how much and when etc. depended on the Egyptians. They were denied these basic decisions about their food. Hence, cooking and sharing their own Passover meal must have been a great experience of regaining their self respect.

A passage like this sadly reminds us of millions of people who are denied their self-respect and are treated like animals due to the conflicts that rage in different parts of the world. Right now, the atrocious war waged by Vladimir Putin – the Russian President – on the people of Ukraine is creating pain in our hearts. We also remember millions of poor people who have been denied their livelihood and self-respect due to the COVID-19 virus. We bring all these helpless victims to the Lord on this Sunday.
For this Fourth Sunday of Lent, we are invited to reflect on one of the most famous parables of Jesus, which speaks of the ‘lost-and-found’ happiness, of a ‘broken-and-mended relationship’ between a father and a son – the parable of the Prodigal (or Lost) Son.

Fr Robert Ombres O.P., talks about two types of dangers attached to ‘famous parables’ and ‘familiar passages’ from the Bible. The Parable of the Prodigal Son is both famous and familiar.
Fr Ombres says, “Because the parable is so well-known, in listening to it we probably knew what was coming next and could even race ahead while it was being read out. So let’s take step back, and then perhaps the parable will speak to us in a fresh way.”
Fr Ombres also warns us about remaining a spectator and not a participant, when we hear familiar Bible passages. “When we read the Bible, with its histories and its stories, do we basically think we are spectators looking out of a window at something that this happening out there to others? Or do we think of reading the Bible as more like looking into a mirror, when we too are very much in the picture?”
If we can treat the parable of the Prodigal Son as a mirror, we can learn a lot of lessons. Can we give it a try today?

Fr William Grimm, a Maryknoll priest from Tokyo, shares Sunday reflections via the Union of Catholic Asian News Website - UCAN. He begins his reflections on the title of this parable. According to him, this is not a story of a prodigal son, but a prodigal father. The parable says: “He divided his living between them (meaning, the elder and the younger sons.)(Luke 15:12). This leaves nothing to the father. The ‘prodigality’ of the father begins right there! Right from the start of the story, then, the one who is ‘extremely generous, perhaps to the point of wastefulness’ – the definition of ‘prodigal’ – is not the son, but the father, says Fr Grimm.
Fr Grimm goes on to show how the father was ‘prodigal’ (recklessly generous) especially in his forgiveness. He explains it in the following words: 
It is time to ask when the forgiving happens in this story. Can it be when the son faces facts? No, it cannot be then, because, no one at home can hear him coming to his senses.
Can it be when he turns and begins his journey home? No, it cannot be then, he is too far off for the father to know.
Can it be when he falls at his father’s feet? No, it is not then, because, the father does not let him finish his confession.
So, when is the son forgiven?
The Gospel tells us that the father saw his son while he was still far off. The reason is clear. The father was standing outside, looking into the distance for his son’s return. In other words, when the son walked out the door, his father went out too. He stood there, waiting for his son to come to his senses and return. The father forgave the son’s sin as soon as it was committed. All that remained was for the son to come home and accept forgiveness….
That’s the point of Jesus’ parable.
The father, of course, is God, God whose love is so prodigal that no matter what foolishness I commit, forgiveness is there from the start. Jesus is saying that all I need to do is come to my senses, turn around and accept the gift God always offers.

In God there is no ‘before-after’ effect of sin. He ALWAYS forgives… Ever loving and forgiving, never tiring! Similar sentiments have been expressed by Pope Francis on quite a few occasions. In the very first Angelus message he gave in St Peter’s Square three days after being elected, Pope Francis said: “Never forget this: The Lord never tires of forgiving, but at times we get tired of asking for forgiveness!”

The Parable of the Prodigal Son (or Father) is a painful reminder to us of the estranged relationships that exist in millions of our families. While reflecting on this famous parable, I was reminded of the short story "The Capital of the World", written by Ernest Hemingway. 
In it, he presented the story of a father and his teenage son who were estranged from one another.  The son’s name was Paco.  He had wronged his father. As a result, in his shame, he had run away from home. In the story, the father searched all over Spain for Paco, but still, he could not find the boy.  Finally, in the city of Madrid, in a last desperate attempt to find his son, the father placed an ad in the daily newspaper.  The ad read: “PACO, MEET ME AT THE HOTEL MONTANA.  NOON TUESDAY.  ALL IS FORGIVEN.  PAPA”
The father in Hemingway's story prayed that the boy would see the ad; and then maybe, just maybe, he would come to the Hotel Montana. On Tuesday, at noon, the father arrived at the hotel. When he did, he could not believe his eyes. An entire squadron of police officers had been called out in an attempt to keep order among eight hundred young boys. It turned out that each one of them was named Paco. And each one of them had come to meet his respective father and find forgiveness in front of the Hotel Montana. Eight hundred boys named Paco had read the ad in the newspaper and had hoped it was for them. Eight hundred Pacos had come to receive the forgiveness they so desperately desired.

Hemingway’s story does not sound unique, since thousands… no, millions… of young men and women go through strained relationships with their parents. Like the younger son in the Parable, many of those who leave home, reach various cities, with dreams of getting some security and future there. Unfortunately, for most of them, cities turn out to be more of a nightmare than a dream, a jungle rather than a home. We are painfully aware of the break in relationship among the different members of the family. Either they step out of the house and get lost in the crowds or, more painfully, they stay at home and decide to get lost from their loved ones.
Let us close our reflections with the words of Fr Grimm: Lent is a time for me to come to my senses and return to my Father. I do not need fancy words. I do not need to buy forgiveness with good deeds or intentions. All I need to say, “Father, I have flunked.” Then we go out to share the Good News that God is waiting for the whole world to come to its senses, waiting to embrace it with the love that is always there for it.

Our closing thoughts take us to Ukraine, where, Vladimir Putin is conducting a senseless massacre of innocent civilians, especially children, in order to establish his power. Being a member of the Russian Orthodox Church, we can presume that Putin must have listened to the ‘Parable of the Lost Son’ in the liturgical celebrations. We pray that like the ‘lost son’ who came to his senses, Putin too may come to his senses and return to God the ‘prodigal Father’, who is waiting to flood his heart with forgiveness!

The return of the Lost Son

தவக்காலம் 4ம் ஞாயிறு

தவக்காலத்தின் 4ம் ஞாயிறை, Laetare Sunday - அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடுகிறோம். நாம் வாழ்வில் மகிழ்வடைய பல நூறு காரணங்கள் இருக்கும். அவற்றில் இரு காரணங்களை இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
வாழ்வில் இதுவரை நாம் பெறாத ஒன்றைப் பெறும்போது, மகிழ்வடைகிறோம். அதேவண்ணம், அல்லது, அதைவிடக் கூடுதலாக, வாழ்வில் நாம் இழந்ததை மீண்டும் பெறும்போது, பேருவகை கொள்கிறோம். நாம் அனுபவித்துள்ள இவ்விரு சூழல்களையும் நினைவுறுத்துகின்றன, இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும். யோசுவா நூலில் நாம் காணும் வரிகள், விடுதலையும், தன்னிறைவும் அடைந்த எந்த ஒரு சமுதாயமும் பெருமையுடன் சொல்லக்கூடிய வரிகள்:
யோசுவா 5: 9-12
அந்நாள்களில், ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன் என்றார். இஸ்ரயேலர்... எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்... கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.

எகிப்தில் அடிமைகளாக பல தலைமுறைகள் துன்புற்ற இஸ்ரயேல் மக்கள், உண்ணும் உணவு, உண்ணும் நேரம், உண்ணும் அளவு ஆகிய அனைத்திற்கும், எகிப்தியர்களிடம், கைகட்டி, வாய் பொத்தி, நின்றவர்கள். இப்போது, அவர்கள், தங்கள் உரிமையாகப் பெற்றுக்கொண்ட கானான் நாட்டில், தங்கள் நிலங்களில் விளைந்த தானியங்களை, வேண்டிய அளவு, வேண்டிய நேரம் தங்கள் விருப்பப்படி உண்டனர் என்பதை இவ்வாசகம் கூறுகிறது.
கானான் நாட்டை அடைந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருமே, எகிப்தில் அடிமைகளாகப் பிறந்தவர்கள். எனவே, அவர்களில் யாரும் அதுவரை சுதந்திரமாக தாங்களே பயிரிட்டு, தயாரித்த உணவை உண்ட அனுபவம் துளியும் இல்லாதவர்கள். அவர்கள் வாழ்வில் அதுவரைப் பெற்றிராத ஓர் அனுபவத்தை முதல் முறையாகப் பெற்றதால் உண்டான மகிழ்வை இந்த வாசகம் தெளிவுபடுத்துகிறது.

தங்கள் நிலத்தில் விளைந்ததை உண்ணும் ஒவ்வொருவரும், தங்கள் வயிற்றுப்பசியை மட்டும் தீர்த்துக் கொள்வதில்லை, மாறாக, மன நிறைவையும், மாண்பையும் அடைகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக நம்மை வதைத்துவரும் கோவிட் பெருந்தொற்று குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்புவதை உணர்கிறோம். ஆனால், இந்த பெருந்தொற்றினால் பல கோடி வறியோர் இழந்த வாழ்வாதாரங்கள், மனித மாண்பு ஆகியவை இன்னும் அவர்களுக்குக் கிடைக்காமல் இருப்பதையும் வேதனையுடன் உணர்கிறோம். இஸ்ரயேல் மக்களை தங்கள் அடிமைகளாக நடத்திய எகிப்தியர்களைப் போல, உக்ரைன் நாட்டிலும், இன்னும் மியான்மார், சிரியா போன்ற நாடுகளிலும் மக்களை அடிமைகளாக நடத்தும் அரசியல் தலைவர்களின் ஆணவத்தால், கோடிக்கணக்கான மக்கள் வாழ்வில் பெற்றிருந்தவற்றை இழந்து தவிக்கின்றனர். இவர்கள் அனைவரையும் இந்த ஞாயிறன்று நினைவில் கொணர்வோம்.

இழந்த ஒன்றை மீண்டும் பெறும்போது உண்டாகும் மகிழ்வை நற்செய்தியில் கூறப்பட்டுள்ள உவமை விளக்குகிறது. இயேசு கூறிய அத்தனை உவமைகளிலும், மிக அதிகப் புகழ்பெற்ற உவமை, 'ஊதாரிப் பிள்ளை' என்று வழங்கப்படும் 'காணாமற்போன மகன்' உவமை.

மிகவும் புகழ்பெற்ற உவமைகளுக்கே உரிய ஓர் ஆபத்து, 'காணாமற்போன மகன்' உவமைக்கும் உள்ளது. அதாவது, இந்த உவமை நம் அனைவருக்கும் ஏறத்தாழ மனப்பாடமாகத் தெரிந்த உவமையாக மாறிவிட்டது. எவ்வளவு தூரம் நமக்குத் தெரியும் என்றால், இந்தக் கதையை யாராவது வாசிக்கவோ, சொல்லவோ துவங்கியதும், இக்கதையின் முடிவை நாம் மனதுக்குள் சொல்லி முடித்துவிடுவோம். எனவே, இவ்வுவமை, ஞாயிறு வழிபாட்டில் வாசிக்கப்படும் வேளையில், நாம் பொறுமை இழந்து, தவிப்போம்; அல்லது, தெரிந்த முடிவு என்பதால், வேறு விடயங்களில் நம் மனதை அலைபாய விடுவோம்.
இந்த உவமையோ, அல்லது, வேறு விவிலியப் பகுதிகளோ நம் வழிபாடுகளில் வாசிக்கப்படும் வேளையில் மற்றுமோர் ஆபத்தும் உருவாகிறது. அதாவது, இந்த உவமையில் கூறப்படும் நிகழ்வுகள், வேறு யாருக்கோ, எங்கோ நடந்த நிகழ்வுகளாக எண்ணி, நாம் பார்வையாளர்களாக மாறும் ஆபத்து உருவாகிறது.

இந்த நம் மனநிலையை, ஓர் உருவகமாகக் கூறவேண்டுமெனில், நம் வீட்டின் சன்னலருகே அமர்ந்து, அந்த சன்னல் கண்ணாடி வழியே, வெளியில் நடப்பனவற்றைப் பார்க்கும் பார்வையாளருடைய மனநிலையில் நாம் இந்த உவமையைக் கேட்கும் ஆபத்து உள்ளது. இன்று, இவ்வுவமையை, ஒரு சன்னல் கண்ணாடியாகப் பயன்படுத்தி, மற்றவர்கள் வாழ்வைப் பார்க்க முயல்வதற்குப் பதில், இதை முகம் பார்க்கும் கண்ணாடியாகப் பயன்படுத்தி, நம் வாழ்வைக் காண முயல்வோம்.
'காணாமற்போன மகன்' உவமை என்ற இந்தக் கண்ணாடியின் வழியே, நம்மையேக் காணும்போது, இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள கதாப்பாத்திரங்களாக நாம் வெவ்வேறு நேரங்களில் வாழ்ந்திருக்கிறோம் என்பதை உணர்கிறோம்.

தன்னிலை இழந்து, தந்தையைவிட்டு விலகிச்சென்ற இளைய மகனாக நாம் இருந்த வேளைகள் பல உண்டு. அதேவண்ணம், தன்னை மட்டுமே நல்லவனாக, உயர்ந்தவனாக எண்ணி, தன் உடன்பிறந்த சகோதரனையும் ஏற்க மறுத்த மூத்த மகனாக நாம் வாழ்ந்த நேரங்களும் உண்டு. தவக்காலத்தில், இவ்விரு நிலைகளையும் களைந்து வாழும் வரத்தை, நமக்காகக் காத்திருக்கும் தந்தையிடம் இறைஞ்சுவோம்.

இந்த உவமை என்ற கண்ணாடிவழியே நமக்குக் காட்டப்படும் தந்தையை இன்னும் சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம். 'காணாமற்போன மகன்' உவமை, பொதுவாக, 'ஊதாரி மகன்' உவமை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உவமையை, 'ஊதாரி மகன்' உவமை என்று சொல்வதற்குப் பதில், 'ஊதாரித் தந்தை' உவமை என்று சொல்வதே பொருத்தமாகத் தெரிகிறது. பின்விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல், வருங்காலத்திற்குச் சேமித்து வைப்பதைப்பற்றி யோசிக்காமல், வீண் செலவு செய்யும் ஒருவரைத்தான் ஊதாரி என்று கூறுகிறோம்.
தனக்கு கிடைத்த சொத்தை, தாறுமாறாய் செலவு செய்த இளையமகன், ஊதாரிதான். அதேபோல், வயது முதிர்ந்த காலத்தில், தன் பாதுகாப்பிற்கென எதையும் வைத்துக்கொள்ளாமல், 'தன் சொத்தைப் பகிர்ந்தளித்த' (லூக்கா 15:12) தந்தையும் ஊதாரிதானே! திரும்பி வந்த மகனை எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல்தலைகால் புரியாமல் அவன் மீது அன்பு காட்டும் தந்தை ஒரு ஊதாரி தானே! மனம் திருந்தி வந்த மகன், மன்னிப்புக் கேட்பதற்கு முயற்சி செய்தபோது, அதற்கு சிறிதும் இடமளிக்காமல், ஒரு விழாவைத் துவக்கிவைத்த தந்தையை, 'ஊதாரி தந்தை' என்று அழைக்காமல், வேறு எவ்விதம் அழைப்பது?

ஜப்பான் நாட்டில் பணியாற்றிவரும் அருள்பணி வில்லியம் கிரிம் (William Grimm) அவர்கள், ஞாயிறு மறையுரைகளை வலைத்தளத்தில் வழங்கி வருபவர். இந்த ஞாயிறுக்கென அவர் வழங்கியுள்ள மறையுரையில், 'ஊதாரித் தந்தை' உவமையை, புதியக் கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிறார்.
தந்தையின் ஊதாரித்தனம் அவர் காட்டிய மன்னிப்பில் வெளிப்படுகிறது என்று, அருள்பணி கிரிம் அவர்கள் கூறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிய இளைய மகனை, தந்தை எப்போது மன்னித்தார்? என்ற கேள்வியை, எழுப்பி, அதற்கு, பின்வருமாறு அவர் விடையளிக்கிறார்:
இளையமகன் வேறொரு நாட்டில் பசியால் துடித்தபோது, தந்தை அவரை மன்னித்தாரா? இல்லை. தன் மகனுக்கு என்ன நேரந்ததென்று தெரியாமல் அவர் தவித்தாரே தவிர, அந்நேரத்தில் அவர் மன்னிக்கவில்லை.
பசியால் துடித்த மகன், மறுபடியும் தன் தந்தையின் இல்லத்திற்குச் செல்வேன் என்று தீர்மானித்தபோது, அவருக்கு மன்னிப்பு கிடைத்ததா? இல்லை.
தந்தையிடம் திரும்பிவந்து, தன் குற்றங்களைக் கூறியபோது, மகன் மன்னிக்கப்பட்டாரா? இல்லை. மகன் சொல்லவந்ததை, தந்தை, செவிமடுத்தாகவே தெரியவில்லையே. விருந்துக்கு ஏற்பாடு செய்வதிலேயே அவரது முழு கவனமும் இருந்ததே தவிர, மன்னிப்பு வேண்டி மகன் கூறிய சொற்களைப்பற்றி அவர் கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை.
அவ்வாறெனில், எப்போது மன்னிப்பு வழங்கப்பட்டது?
இளைய மகன் வீட்டைவிட்டு வெளியேறியபோதே, அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது. அவரோடு சேர்ந்து, தந்தையும் வீட்டைவிட்டு வெளியேறி, வாசலிலேயே காத்துக் கிடந்தாரே! தன் சொத்தை மட்டுமல்லாமல், மன்னிப்பையும் வாரி வழங்கிய ஊதாரித் தந்தையின் உச்சநிலை பாசம் அதுதான்!

காணாமற்போன மகன் உவமையை இன்றையச் சூழலில் பொருத்திப் பார்க்கும்போது, நெருடலான பலப் பிரச்சனைகள் நெஞ்சைச் சுடுகின்றன. இப்பிரச்சனைகளில் ஒன்று, குடும்ப உறவுகளில் உருவாகும் முறிவுகள். இப்பிரச்சனையை வெளிச்சம்போட்டு காட்ட ஒரு சிறுகதை நமக்கு உதவியாக இருக்கும். இலக்கியத்தில் நொபெல் பரிசு வென்ற அமெரிக்க எழுத்தாளர் Ernest Hemingway அவர்கள் எழுதிய The Capital of the World’ என்ற சிறுகதையில், இடம்பெறும் ஒரு நிகழ்வு இது:

ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த தந்தை ஒருவருக்கும், பாக்கோ (Paco) என்ற அவரது 'டீன் ஏஜ்' மகனுக்கும் இடையே உறவு முறிந்தது. வீட்டைவிட்டு வெளியேறிய  பாக்கோவைத்  தேடி அலைந்தார், தந்தை. இறுதியில், அவர் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மத்ரித் சென்று தேடினார். பல நாட்கள் தேடியபின், ஒருநாள் செய்தித்தாளில் விளம்பரம் ஒன்று வெளியிட்டார்: “Paco, meet me at the Hotel Montana. Noon Tuesday. All is forgiven. Papa” "பாக்கோ, மொன்டானா ஹோட்டலில் என்னைச் சந்திக்க வா. உனக்காக நான் செவ்வாய் மதியம் அங்கு காத்திருப்பேன். அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன. இப்படிக்கு, அப்பா" என்ற வார்த்தைகள், அவ்விளம்பரத்தில் காணப்பட்டன. செவ்வாய் மதியம் மொன்டானா ஹோட்டலுக்குச் சென்ற அப்பாவுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 800க்கும் அதிகமான இளையோர் ஹோட்டலுக்கு முன் திரண்டிருந்ததால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை வரவழைக்கப்பட்டது.
பாக்கோ (Paco) என்பது, ஸ்பெயின் நாட்டில் பலரும் பயன்படுத்தும் ஒரு செல்லப்பெயர். அங்கு வந்திருந்த அனைவருமே பாக்கோஎன்ற பெயர் கொண்டவர்கள். அதைவிட அதிகமாக மனதை நெருடும் உண்மை, அவர்கள் அனைவருமே பெற்றோருடன் ஏற்பட்ட மோதலில் வீட்டைவிட்டு வெளியேறியவர்கள். அவர்கள் அனைவரும் தங்கள் தந்தையை எதிர்பார்த்து, அங்கு காத்திருந்தனர் என்று, Hemingway அவர்கள் தன் சிறுகதையை முடித்துள்ளார்.

இக்கதைக்கு பெரிய விளக்கங்கள் தேவையில்லை. இன்றும், நமது குடும்பங்களில் நிகழும் உறவுப் பிரச்சனைகளால் நகரங்களில் தொலைந்துபோகும் எத்தனையோ இளையோரைக் குறித்து நாம் நன்கு அறிவோம். குடும்பங்களில் ஏற்படும் உறவு முறிவுகளால், வீட்டில் இருந்தவண்ணம், பெற்றோரிடமிருந்து அதிகம் விலகி, அல்லது, வீட்டைவிட்டு வெளியேறி, காணாமற்போகும் மகன், மகள், பெற்றோர், கணவன், மனைவி, வயதான தாத்தா, பாட்டி என்று... இந்தப் பட்டியல் மிக நீளமானது. தவக்காலம், ஒப்புரவின் காலம். இந்த உறவு முறிவுகளைக் குணமாக்க தகுந்ததொரு காலம்.

'காணாமற்போன மகன்' உவமை வழியே இயேசு நம் மனத்திரையில் தீட்டும் தந்தையைப் புரிந்துகொள்வது, நம் அனைவருக்குமே பெரியதொரு சவால். தான் உழைத்து சேர்த்த சொத்தின் ஒரு பகுதியை முற்றிலும் அழித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவரும் மகனிடம் ஒரு கேள்வியும் எழுப்பாமல், அவன் திரும்பி வந்தது போதும் என்று விழா கொண்டாடும் தந்தையின் உருவம் நம் மனதில் பதிந்தால் போதும்; அந்தத் தந்தையின் வடிவத்தில் இறைவனின் பாசத்தை நாம் ஓரளவு புரிந்துகொண்டால் போதும்; என்ற நம்பிக்கையில் இயேசு தன் கதையை முடித்துள்ளார். இதுதான், இந்த உவமையின் அழகை இன்னும் கூட்டியுள்ளது. நிபந்தனை ஏதுமின்றி ஊதாரித்தனமாக அன்பு செய்யும் தந்தையைப் புரிந்துகொள்ளவும், அவரது அணைப்பில் சரணடையவும் இந்த தவக்காலம் நமக்கு உதவுவதாக!

இறுதியாக, நம் எண்ணங்கள் மீண்டும் உக்ரைன் நாட்டைச் சுற்றி வருகின்றன. அந்நாட்டில் தன் அதிகாரத்தை நிலைநாட்டும் ஆணவ வெறியுடன் அந்நாட்டின் அப்பாவி மக்களையும், குழந்தைகளையும் வேட்டையாடி வரும் இரஷ்ய அரசுத்தலைவன் விளாடிமீர் புடின், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் உறுப்பினர் என்ற உண்மை, நம் வேதனைகளைக் கூட்டுகிறது. 'காணாமல் போன மகன் உவமை'யை, கோவில் வழிபாடுகளில் புடின் கட்டாயம் கேட்டிருக்கவேண்டும். அந்த இளைய மகன் தன் தவறை உணர்ந்து, மீண்டும் தந்தையை நாடி வந்ததுபோல், புடின் தன் தவறை உணர்ந்து மனம் திருந்தி வரவேண்டும் என்று மன்றாடுவோம்.

No comments:

Post a Comment