20 October, 2022

Humility - foundation of virtues பணிவு – புண்ணியங்களின் அடித்தளம்

  
The Pharisee and the Tax Collector

30th Sunday in Ordinary Time

October 23-24, this Sunday-Monday, the Festival of Light (Deepavali or Diwali) is celebrated. We begin today’s reflection, wishing all our Hindu friends a meaningful celebration of the Festival of Light. Every year, during the Deepavali season, some instructive, short videos are shared in social media, on how to celebrate Deepavali in a more responsible and meaningful way.

One of those videos caught my attention to a great extent. It depicts a young man who piles a few 100 Rupee notes on the pavement, and tries to set them on fire. Another man, carrying bags of crackers, runs to him and asks him whether the young man is out of his mind by setting fire to the currency notes. The young man points to the bag of crackers and says, “Do you think you are sane in spending money on those things?”

The young man then goes on to explain how, with the money spent on crackers, which is nothing but ‘burning money’, one could buy food and clothing for a few poor people and make their Deepavali happier. As he says these lines, we see the young man distributing clothes and food items to some very poor people. Many of those poor, senior citizens bless the young man whole-heartedly. What better joy can one get than this!

The festival of Deepavali constantly brings concerns about the environment to the fore. Noise pollution and the pollution of the atmosphere with sulphur, leading to respiratory problems are the challenges Deepavali poses every year. We are very much aware of how animals and birds are disturbed by the bursting of crackers. We can surely think of babies, senior citizens, patients in hospitals and pavement dwellers who get disturbed by the continuous noise of the crackers. How many huts go up in flames when the fireworks, ‘misfire’ and land on a thatched roof. Added to all these, we should also be thinking of hundreds of children who, chained to their workspots, work like slaves to produce these crackers. We pray that the good Lord truly enlightens our minds so that we may see the ‘darker side’ of this festival of light and that God gives us a generous heart to dispel the darkness engulfing the lives of poor people.

Light, which is the central idea of the great festival of Deepavali, is used as a symbol for many aspects of our life, one of them being light as a symbol of humility. A lamp is lighted to dispel the darkness around. It does not draw attention to itself. The moment a light draws attention to itself, negative effects follow. When we keep staring at light itself, our eyes begin to get irritated. Staring at a bright light like the sun, can cause damage to our eyes. Light, by definition, burns in order to shed light on its surrounding, without drawing attention to itself. Thus, light becomes a lovely symbol of true humility. In today’s Gospel (Luke 18:9-14) – the parable of the Pharisee and the Tax Collector – we are invited to reflect on the virtue of humility.

This parable follows immediately after the parable of the Unjust Judge and the Widow (Luke 18:1-8) which we reflected on last Sunday. In the introduction to that parable, Jesus made his intention clear – namely, a lesson on ‘praying without losing heart’. And he told them a parable, to the effect that they ought always to pray and not lose heart. (Lk. 18:1)
The opening words of today’s parable, namely, “Two men went up into the temple to pray…” (Lk. 18:10) give us an impression that Jesus is giving another lesson on prayer. But, Luke’s introduction to this parable gives us a clue as to the intention of Jesus:  Jesus also told this parable to some who trusted in themselves that they were righteous and despised others. (Lk. 18:9)

When we take both these parables together, what grabs our attention first is, the ‘locus’ (the place of action) Jesus uses for both these parables. We expect a parable on prayer (Lk. 18:1-8) to be situated in a place of worship. But, Jesus narrated the parable on prayer without mentioning a temple. He spoke of the widow who kept pursuing the judge wherever he went – the road, the court, the judge’s house, the market place… everywhere. While running from pillar to post, the widow must have raised her heart to God in prayer in all these places. Although Jesus intended to use this parable to teach about perseverance in prayer, we can easily see that Jesus was also teaching an indirect lesson that no place can be ‘out-of-place’ for prayer.

On the other hand, the most fitting place for prayer, as most of us would agree, is the temple/church. But, Jesus used the temple, not to teach about prayer, but to teach about pride and/or humility. Jesus used the temple only as a backdrop, while he was concentrating on what was going on in the heart and mind of his two characters – the Pharisee and the Tax Collector. Jesus is telling us indirectly that even in the holiest of places, we can end up worshipping ourselves instead of worshipping God.

Here is an interesting story that talks of narcissistic, self-worship: Girolamo Savonarola was one of the greatest preachers of the fifteenth century. He preached in the magnificent cathedral of Florence, Italy, which had a magnificent marble statue of the Blessed Virgin Mary. When Savonarola started preaching at this great cathedral, he noticed one day an elderly woman praying before this statue of Mary. He then began to notice that it was her habit to come every day and pray before the statue. Savonarola remarked one day to an elderly priest who had been serving in the cathedral for many years, "Look how devoted and earnest this woman is. Every day she comes and offers prayers to the blessed Mother of Jesus. What a marvelous act of Faith!" But the elderly priest smiled and replied, "Do not be deceived by what you see. Many years ago, when the sculptor needed a model to pose for this statue of the blessed Mother, he hired a beautiful young woman to sit for him. This devout worshiper you see here every day, was that young woman. She is worshipping who she used to be." (Rev.Jones)
In a Church, in the presence of God, in the presence of Mother Mary and the Saints, is it possible to worship oneself? It is dangerously possible, says Jesus in the Parable of the Pharisee and the Tax Collector.

An analysis of the words used by the Pharisee and the Tax Collector helps us understand what is true prayer and what isn’t. Both of them begin their statements calling on God. This usually indicates that what follows this would be a prayer. But, after the first word – God – the Pharisee says 32 words, most of which are self-promotion and comparison. The whole statement revolves around the dangerous concept ‘I’.
The Tax Collector on the other hand, uses six words after calling on God and they are a simple acknowledgement of who he is. This simple, humble statement of self-revelation, reaches God more easily. We hear from the first reading of this Sunday - Wisdom of Sirach - how the prayer of the humble person pierces the clouds: The prayer of the humble pierces the clouds, and he will not be consoled until it reaches the Lord. (Sir. 35:17)

The humble statement of the Tax Collector is pleasing to God and hence, Jesus concludes the parable with the famous words of reversal, which must have shocked his listerners. When Jesus began the parable with the words: “Two men went up into the temple to pray, one a Pharisee and the other a tax collector”, his listeners would have already drawn their conclusions… namely, the Pharisee would go home with God’s blessing and approval for his righteous ways, while the tax collector would receive God’s condemnation for his devious ways. These foregone conclusions of the people were shattered when Jesus dropped a bomb at the end of the parable: “I tell you, this man (the tax collector) went down to his house justified rather than the other (the Pharisee); for every one who exalts himself will be humbled, but he who humbles himself will be exalted.” (Lk. 18:14)

Humility, one of the cardinal Christian virtues, is called the foundation of all the other virtues by Saint Augustine: “Humility is the foundation of all the other virtues. Hence, in the soul in which this virtue does not exist, there cannot be any other virtue except in mere appearance.”

C.S.Lewis, the famous British lay theologian, in his book Mere Christianity wrote an article on pride with the title: The Great Sin. Here are some relevant excerpts from this article:
There is one vice of which no man in the world is free; which everyone loathes when he sees it in someone else…There is no fault that makes a man more unpopular, and no fault which we are more unconscious of in ourselves. And the more we have it ourselves, the more we dislike it in others.
The vice I am talking of is Pride or Self-Conceit: and the virtue opposite to it, in Christian morals, is called Humility… According to Christian teachers, the essential vice, the utmost evil, is Pride. Unchastity, anger, greed, drunkenness, and all that, are mere fleabites in comparison: it was through Pride that the devil became the devil: Pride leads to every other vice: it is the complete anti-God state of mind.
Pride is essentially competitive… Pride gets no pleasure out of having something, only out of having more of it than the next man.  We say that people are proud of being rich, or clever, or good-looking, but they are not.  They are proud of being richer, or cleverer, or better looking than others. If every one else became equally rich, or clever, or good-looking there would be nothing to be proud about. It is the comparison that makes you proud, the pleasure of being above the rest. Once the element of competition has gone, pride has gone. 

I guess C.S.Lewis was thinking of the Pharisee in the temple while writing these words, especially the latter where pride is spoken of in terms of comparison. The Pharisee was trying to impress God, not by stating what he was, but what he was in comparison with others!

When we hear this parable there is a dangerous possibility that we would have whispered the words: “Thank God, I am not like that Pharisee!” If we have done so, we are in no way different from the Pharisee!

A final thought on another special day celebrated on this Sunday. Every year, the penultimate Sunday of October is celebrated as the World Mission Sunday. October 23, this Sunday, we celebrate the World Mission Sunday with the theme: ‘You shall be my witnesses’ (Acts 1:8). In what better way can we be the witnesses of Christ, except by being humble like HIm? Jesus has given us a clear invitation: “Learn from me for I am meek and humble of heart” (Matthew 11:29). He has also showed us how to be humble, by washing the feet of the disciples at the Last Supper, after which he said, “If I then, your Lord and Teacher, have washed your feet, you also ought to wash one another’s feet.” (John 13:14)

As we celebrate the Festival of Lights (Deepavali), as well as the World Mission Sunday, may Christ, the true Light of the world, and the model of true humility, dispel the darkness of pride from within us and make us learn from Him meekness and humility so that we can become His true and shining witnesses!

The Pharisee and the Tax Collector

பொதுக்காலம் - 30ம் ஞாயிறு

அக்டோபர் 23-24, இஞ்ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாள்களில், தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறோம். இந்தத் திருநாளையொட்டி, இறைவன், அனைவருக்கும், ஒளிமிகுந்த வாழ்வை வழங்கவேண்டுமென வாழ்த்துகிறோம், வேண்டுகிறோம்.
ஒளிமிகுந்த வாழ்வு என்பதை, செல்வம் நிறைந்த, ஒளிமயமான எதிர்காலம் என்ற கோணத்தில் மட்டும் எண்ணிப்பார்க்காமல், உள்ளங்களில் அறிவொளி பெறுவதையும் எண்ணிப்பார்க்க, இந்தத் திருநாள் நம்மை அழைக்கிறது. அறிவொளி பெற்றவர்களாய், தீபாவளியை, அர்த்தமுள்ள வகையில் எவ்விதம் கொண்டாடுவது என்பதைக் கூறும் சில காணொளித் தொகுப்புகள், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வலம் வந்தவண்ணம் உள்ளன. அவற்றில் ஒன்று, பின்வரும் காட்சியைச் சித்திரிக்கிறது:

இளைஞர் ஒருவர், சில 100 ரூபாய் நோட்டுக்களை, சாலையோரமாக அடுக்கிவைக்கிறார். பின்னர் ஒரு தீக்குச்சியைப் பற்றவைத்து, அந்த ரூபாய் நோட்டுக்களைக் கொளுத்த முற்படுகிறார். அந்நேரம், அவ்வழியே, ஒரு வீட்டுத்தலைவர், தீபாவளிக்கென வாங்கிய பட்டாசு, மத்தாப்பு பைகளைச் சுமந்தவண்ணம் வருகிறார். ரூபாய் நோட்டுக்களைக் கொளுத்த முயலும் இளைஞரைத் தடுக்க முயற்சி செய்கிறார், அம்மனிதர். "சார், இப்படி பணத்தை நெருப்புவைத்து கொளுத்துகிறீர்களே, உங்களுக்கென்ன புத்தி கெட்டுப்போச்சா?" என்று கேட்கும் அவரிடம், பையிலிருக்கும் பட்டாசு கட்டுகளைக் காட்டி, "நீங்க செய்வது மட்டும் புத்தியுள்ள செயலா?" என்று திருப்பிக் கேட்கிறார், இளையவர். தன் கையிலிருந்த பட்டாசுக் கட்டுக்களை, கேள்விக்குறியுடன் பார்க்கும் அந்த மனிதரிடம், "சாம்பலாகும் இந்தப் பட்டாசுகளுக்கு நீங்கள் செலவழித்தப் பணத்தைக் கொண்டு, எத்தனையோ வறியோர் வீடுகளில் ஒளியேற்றியிருக்க முடியும். தீபாவளியைக் கொண்டாடமுடியாமல் தவிக்கும் அவர்களுக்கு, உடையும், உணவும் வாங்கித் தந்திருக்கலாமே" என்று கூறுகிறார் இளைஞர்.

இளையவர் இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது, தெருவோரம் படுத்திருக்கும் சில முதியோருக்கு உணவு, உடை ஆகியவற்றை அந்த இளைஞர் வழங்குவது போன்றும், அந்த வறியோர் அவரது தலைமீது கைவைத்து ஆசீர் வழங்குவது போன்றும் காட்சிகள் திரையில் தோன்றுகின்றன. வறியோரின் இல்லங்களில் நம்பிக்கை ஒளியேற்ற, தீபாவளி ஒரு தகுந்த தருணம் என்பதை இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்ற மன்றாட்டுடன் இன்றைய சிந்தனைகளைத் துவக்குவோம்.

ஒவ்வோர் ஆண்டும் இத்திருநாளை நாம் கொண்டாடும்போது, தீபாவளிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், இடையே உள்ள தொடர்பை நினைத்துப் பார்க்க ஆழைக்கப்படுகிறோம். காதைப் பிளக்கும் வெடிகளை வெடித்தால்தான் தீபாவளி என்று நினைப்பவர்கள் பலர். ஆனால், பட்டாசுகள் இல்லாமல், வெடி சப்தம் இல்லாமல், தமிழகத்தின் ஒரு சில கிராமங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தீபாவளியைக் கொண்டாடி வருகின்றன.

அவற்றில் முக்கியமானவை, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள கூந்தன்குளம், மற்றும், ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு ஆகிய கிராமங்கள். இக்கிராமங்களில் உள்ள சரணாலயத்திற்கு வரும் பறவைகளை அச்சுறுத்தாமல் இருக்க, இக்கிராம மக்கள், பட்டாசுகளை, பல ஆண்டுகளாகத் தவிர்த்து வருகின்றனர். அதேபோல, திருவிழா நேரங்களில், ஒலிப்பெருக்கிகளையும் அவர்கள் பயன்படுத்துவதில்லை.
சுற்றுச்சூழலை சீரழிக்காமல், பறவைகளையும், விலங்குகளையும் துன்புறுத்தாத வண்ணம் தீபாவளியைக் கொண்டாடமுடியும் என்பதற்கு, இவ்வூர் மக்கள் வழிகாட்டிகள்.

பறவைகளும், விலங்குகளும் மட்டுமல்லாமல், வயது முதிர்ந்தோர், நோயுற்றோர், குழந்தைகள் ஆகியோரும், பட்டாசு ஒலியாலும், அவற்றிலிருந்து எழும் கந்தகப் புகையாலும் துன்புறுவதை, நாம் நன்கு அறிவோம். காசைக் கரியாக்காமல், வறியோரின் இல்லங்களில் ஒளியேற்றி, சுற்றுச்சூழலை சீரழிக்காமல், பிற உயிரினங்களை வதைக்காத வண்ணம் தீபாவளியைக் கொண்டாடும்போது, அது உண்மையில் ஒளி மிகுந்த வாழ்வை அனைவருக்கும் உருவாக்கும்.

தீபாவளித் திருநாளை அடையாளப்படுத்தும் தீபங்கள், இஞ்ஞாயிறு வழிபாட்டு வாசகங்களுடன் நம்மைத் தொடர்புபடுத்துகின்றன. ஏற்றப்படும் தீபம், தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை ஒளிர்விப்பதை, தன் பணியாகக் கொண்டுள்ளது. தான் எவ்வளவு தூரம் ஒளிவிடமுடியும் என்பதை விளம்பரப்படுத்த, விளக்கு எரிவதில்லை. ஒளிவிளக்குகள், தங்கள் மீது நம் கவனம் அனைத்தையும் கட்டிப்போடும்போது, அதனால் தீமைகளே விளைகின்றன. ஒளிரும் விளக்கை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால், நம் கண்களில் கண்ணீர் வரக்கூடிய அளவு, எரிச்சல் உண்டாகலாம். ஏன், சில வேளைகளில், கதிரவன் போன்று, மிக சக்திவாய்ந்த ஒளியை, நீண்ட நேரம், நேரடியாக காணும்போது, கண்கள் பழுதடையவும் வாய்ப்புண்டு. இதற்கு மாறாக, தன்னை விளம்பரப்படுத்தாமல், தான் எரிந்து, தன்னைச் சுற்றியுள்ள உலகை ஒளிர்விக்கும் விளக்கு, பணிவுக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு. ஒளியின் திருநாளன்று, பணிவுப்பாடங்களைக் கற்றுக்கொள்ள, இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது.

லூக்கா நற்செய்தி, 18ம் பிரிவில், ஒன்றன்பின் ஒன்றாகக் கூறப்பட்டுள்ள இரு உவமைகள், (லூக்கா 18:1-8; 18:9-14) சென்ற ஞாயிறும், இந்த ஞாயிறும் நமக்கு நற்செய்தி வாசகங்களாக அமைந்துள்ளன. சென்ற ஞாயிறன்று நாம் சிந்தித்த 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' என்ற உவமையை இயேசு சொன்னதற்கான காரணத்தை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு கூறியிருந்தார்: "அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்" (லூக்கா 18: 1).
மனந்தளராமல் மன்றாட வேண்டும் என்ற பாடத்தைச் சொல்லித்தந்ததும், இயேசு, "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர்" என்ற சொற்களுடன் தன் அடுத்த உவமையை ஆரம்பிக்கிறார். இறைவன், கோவில், வேண்டுதல் என்ற வார்த்தைகளைக் கேட்டதும், இவ்வுவமையும், செபிப்பது பற்றிய ஒரு பாடம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், பணிவு என்ற பாடத்தைச் சொல்லித்தரவே, இயேசு, இந்த உவமையைச் சொன்னார் என்பதை, இவ்வுவமையின் அறிமுக வரிகள் நமக்குச் சொல்கின்றன: தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார் (லூக்கா 18: 9) என்று நற்செய்தியாளர் லூக்கா இவ்வுவமையை அறிமுகம் செய்துள்ளார்.

அடுத்தடுத்து சொல்லப்பட்டுள்ள இவ்விரு உவமைகளில், இயேசு பயன்படுத்தியிருக்கும் கதைக்களம், நம் கவனத்தை, முதலில் ஈர்க்கிறது. நமது கண்ணோட்டத்தின்படி சிந்தித்தால், மனந்தளராமல் செபிக்கவேண்டும் என்ற கருத்தைச் சொல்ல, கோவில் பொருத்தமானதொரு கதைக்களமாகத் தெரிகிறது. ஆனால், இயேசு, அந்த உவமையில், கோவிலைப் பயன்படுத்தவில்லை. தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன், கைம்பெண் ஒருவர், நேர்மையற்ற நடுவரை, எல்லா இடங்களிலும் தொடர்ந்தார் என்பதை, இயேசு இவ்வுவமையில் மறைமுகமாகக் கூறியுள்ளார்.

இந்தத் தொடர்முயற்சியின்போது, இக்கைம்பெண், இறைவனிடம் தன் விண்ணப்பத்தை எழுப்பியபடி, ஒவ்வொரு இடமாகச் சென்றிருப்பார்.
இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, இடைவிடாமல் செபிக்கவேண்டும் என்ற பாடத்தை மட்டும் அல்ல, கூடுதலாக ஒரு பாடத்தையும் இயேசு சொல்லித்தந்தார் என்பதை உணரலாம். அதாவது, வீதியோரம், நீதிமன்றம், இறை நம்பிக்கையற்ற நடுவரின் வீட்டு வாசல் என்று, எவ்விடமானாலும், அங்கெல்லாம் இறைவனிடம் செபிக்கமுடியும் என்பதை, சென்ற வார உவமையின் வழியாகச் இயேசு சொல்லித் தந்துள்ளதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்த வார உவமையில், தற்பெருமையுடன் வாழ்வது தவறு என்ற கருத்தை வலியுறுத்த, இயேசு, கோவிலை, தன் கதைக்களமாகத் தேர்ந்துள்ளார். பொதுவாக, தற்பெருமை தாராளமாக வெளிவரும் இடங்களான, அறிஞர்கள் அவை, அரண்மனை, அரசியல் மேடை, விளையாட்டுத் திடல் போன்ற கதைக்களங்களைப் பயன்படுத்தாமல், ஒரு கோவிலை தன் கதைக்களமாகத் தேர்ந்துள்ளார் இயேசு.

உள்ளம் என்ற கோவிலில் இறைவன் குடியிருந்தால், நாம் செல்லும் இடமெல்லாம் புனித இடங்களாகும்; அங்கெல்லாம் நம்மால் செபிக்கமுடியும். அதேநேரம், புனித இடம் என்று கருதப்படும் கோவிலே என்றாலும், அங்கு செல்லும் நம் உள்ளத்தில், 'நான்' என்ற அகந்தை நிறைந்திருந்தால், கோவிலும் சுயவிளம்பரத் தலமாக மாறும். அங்கு நம்மை நாமே ஆராதனை செய்துவிட்டுத் திரும்புவோம் என்ற எச்சரிக்கை, இந்த உவமையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அன்னை மரியாவின் புகழ்பெற்ற திருத்தலம் ஒன்றில், ஓர் இளம் அருள்பணியாளர், திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார். பீடத்திற்கருகே, பளிங்கினால் செய்யப்பட்ட அன்னை மரியாவின் உருவச் சிலை வைக்கப்பட்டிருந்தது. வயதான ஒரு பெண்மணி, அந்த உருவச் சிலைக்கு முன், அன்னையின் அழகிய முகத்தை உற்று நோக்கியவாறு அமர்ந்திருந்தார். ஒவ்வொரு நாளும், அன்னையின் உருவத்திற்கு முன், அந்தப் பெண், இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்ட இளம் அருள்பணியாளர், அத்திருத்தலத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றிவந்த வயதான அருள்பணியாளரிடம் சென்று, அந்தப் பெண்ணின் பக்தியைப் பற்றி பாராட்டிப் பேசினார்.

அவர் கூறியதைக் கேட்ட அந்த வயதான அருள்பணியாளர், ஒரு புன்சிரிப்புடன், "சாமி, நீங்கள் இப்போது காண்பதை வைத்து ஏமாறவேண்டாம். பல ஆண்டுகளுக்கு முன், இந்த ஊரைச் சேர்ந்த சிற்பி ஒருவர், அன்னை மரியாவின் சிலையைச் செதுக்க, ஓர் அழகிய இளம்பெண்ணை 'மாடலாக'ப் பயன்படுத்தினார். அந்த இளம்பெண்தான் நீங்கள் இப்போது காணும் அந்த வயதானப் பெண்மணி. அவர் ஒவ்வொருநாளும், அன்னையின் திரு உருவத்திற்கு முன் அமர்ந்திருப்பது, பக்தியால் அல்ல. மாறாக, அவர், தன் இளமையையும், அழகையும் ஆராதிக்கவே அங்கு அமர்ந்துள்ளார்" என்று கூறினார்.
புனிதம் நிறைந்த ஆலயத்தில், வழிபாட்டில் கலந்துகொள்வோரும், வழிபாட்டை நடத்துவோரும், இறைவனுக்கு முன், அன்னை மரியாவுக்கு முன், புனிதர்களுக்கு முன், தங்களையே ஆராதிக்க முடியுமா? முடியும் என்று இயேசு, இன்றைய உவமை வழியே நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்" (லூக்கா 18: 10) என்ற வார்த்தைகளுடன், இயேசு, இந்த உவமையைத் துவக்கியதும், சூழ இருந்த மக்கள், கதையின் முடிவை, ஏற்கனவே எழுதி முடித்திருப்பர். பரிசேயர் இறைவனின் ஆசீர் பெற்றிருப்பார்; வரிதண்டுபவர், இறைவனின் கண்டனத் தீர்ப்பைப் பெற்றிருப்பார் என்று, மக்கள் முடிவு கட்டியிருப்பர். பரிசேயருடன் ஒப்பிட்டால், வரிதண்டுபவர், மக்கள் மதிப்பில் பல படிகள் தாழ்ந்தவர்தான். உரோமையர்களுக்காக தன் சொந்த மக்களிடமே வரி வசூல்செய்த இவரிடம், நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று, இறைப்பற்று என்று பல அம்சங்கள் தொலைந்து போயிருந்தன. எனவே, இறைவன் முன்னிலையில், பரிசேயருக்கு ஆசீரும், வரிதண்டுபவருக்கு சாபமும் கிடைத்திருக்கும் என்ற முடிவை இயேசு சொல்வார் என மக்கள் எதிர்பார்த்திருப்பர். அவர்களது எண்ணங்களை தலைகீழாகப் புரட்டிப்போட்டார், இயேசு.

இந்தத் தலைகீழ் மாற்றம் உருவாகக் காரணம், இவ்விருவரும் தங்களைப்பற்றி கொண்டிருந்த தன்னறிவு; அதன் விளைவாக, அவர்கள் இறைவனிடம் கொண்ட உறவு. இவ்விருவருமே தங்களைப்பற்றி இறைவனிடம் பேசுகின்றனர். பரிசேயரும், வரிதண்டுபவரும் கூறிய வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன:

பரிசேயர் சொன்னது, 27 வார்த்தைகள். வரிதண்டுபவர் சொன்னதோ, 4 வார்த்தைகள். இருவரும் 'கடவுளே' என்ற வார்த்தையுடன் ஆரம்பித்தனர். இந்த முதல் வார்த்தையைக் கேட்டதும், இதைத் தொடரும் வார்த்தைகள், செபமாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், பரிசேயர் பயன்படுத்திய ஏனைய வார்த்தைகளில், அவர் சொன்னது, சுய விளம்பரம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த சுய விளம்பரத்தில் அவர், தன்னை, பிறரோடு ஒப்பிட்டுப்பேசிய வார்த்தைகளே அதிகம் (16). வரிதண்டுபவரோ, தன்னை யாரோடும் ஒப்பிடாமல், 'தான் ஒரு பாவி' என்பதை மட்டும் நான்கு வார்த்தைகளில் கூறியுள்ளார்.

பரிசேயரின் கூற்று, இறைவனின் கவனத்தை வலுக்கட்டாயமாகத் தன்மீது திருப்ப, அவர் மேற்கொண்ட முயற்சி. வரிதண்டுபவரின் மீது இறைவனின் கவனம் திரும்பிவிடுமோ என்ற பயத்தில், அவரைவிட, தான், கடவுளின் கவனத்தைப் பெறுவதற்குத் தகுதி உடையவர் என்பதை, அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பரிசேயர். சொல்லப்போனால், கடவுளின் பார்வை தன்மேல் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஆவலில், பரிசேயர், கடவுளுக்கே கடிவாளம் மாட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இதற்கு மாறாக, வரிதண்டுபவர், தன்னைப்பற்றி அதிகம் பேசவில்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: "இறைவா, இதோ நான், இதுதான் நான், இவ்வளவுதான் நான்." வரிதண்டுபவர் கூறிய நான்கு சொற்கள், வானத்தைப் பிளந்து, இறைவனை அடைந்தன. இதையே, இன்றைய முதல் வாசகத்தில், சீராக்கின் ஞானம் அழகாகக் கூறியுள்ளது: "தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை." (சீராக் 35:17)

தன் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளுதல், அதனை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய அம்சங்கள், உண்மையான தாழ்ச்சியின் கூறுகள். இத்தகையத் தன்னறிவில், அடுத்தவரை இணைக்காமல், ஒப்பிடாமல் சிந்திப்பது, உயர்ந்ததொரு மனநிலை. எனவே இயேசு, வரிதண்டுபவரை உயர்த்தி, பரிசேயரை தாழ்த்தி, தன் உவமையை நிறைவு செய்தார்: பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் (லூக்கா 18: 14)
இந்த உவமையைக் கேட்கும் வேளையில், 'கடவுளே, நான் அந்த பரிசேயரைப்போல் இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்' என்ற எண்ணம், ஒரு செபத்தின் வடிவில், நம் உள்ளத்திலிருந்து எழ வாய்ப்புண்டு. அப்படி எழுந்திருந்தால், நமக்கும், அந்தப் பரிசேயருக்கும் வேறுபாடு இல்லை என்ற கசப்பான உண்மையை, இயேசு நம்மை நோக்கி கூறியிருப்பார்.

தலை சிறந்த ஏழு புண்ணியங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாழ்ச்சியைக் குறித்து சரிவர புரிந்துகொள்ள இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கின்றது.

கதாசிரியராக, கவிஞராக, இறையியல் மேதையாக, பேராசிரியாகப் பணியாற்றியவர் C.S.Lewis. இவர், அடிப்படை கிறிஸ்தவம் என்று பொருள்படும், Mere Christianity என்ற நூலை 1952ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் 'The Great Sin' - பெரும் பாவம் - என்ற தலைப்பில் அகந்தையைப்பற்றி ஆழமான கருத்துக்களைக் கூறியுள்ளார். அக்கட்டுரையின் ஆரம்ப வரிகளே நம்மை ஈர்க்கின்றன:
"எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம் இக்குறையைக் கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இதுதான் அகந்தை" என்று அவர் தன் கட்டுரையை ஆரம்பித்துள்ளார். பின்னர், அகந்தையின் ஒரு முக்கியப் பண்பான ஒப்புமைப்படுத்துதல் என்பதைக் குறித்து அழகாக விவரிக்கிறார்.

ஒப்புமையும், போட்டியும் இன்றி அகந்தையால் வாழமுடியாது. என்னிடம் ஒன்று உள்ளது என்று சொல்வதைவிட, ‘என்னிடம் உள்ளது, அடுத்தவரிடம் உள்ளதை விட அதிகம் என்ற கோணத்தில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவதே அகந்தை. என் திறமை, அழகு, அறிவு இவற்றில் நான் பெருமை கொள்கிறேன் என்று ஒருவர் சொல்கிறார். உண்மையில் அவர் சொல்ல முனைவது வேறு... மற்றவர்களைக் காட்டிலும், அதிகத் திறமையுள்ளவராக, அழகானவராக, அறிவுள்ளவராக இருப்பதில்தான் பெருமை - அதாவது, அகந்தை - கொள்ளமுடியும். சமநிலையில் அழகு, அறிவு, திறமை உள்ளவர்கள் மத்தியில், ஒருவர் அகந்தை கொள்ளமுடியாது. ஒப்புமையோ, போட்டியோ இல்லாதச் சூழலில் அகந்தைக்கு இடமில்லை."

இன்றைய உவமையில் நாம் காணும் பரிசேயர், தன்னை மற்றவர்களோடு ஒப்புமைப்படுத்தி, அதில் தன் பெருமையை நிலைநாட்டுகிறார். இத்தகையப் போட்டியாலும், ஒப்புமையாலும், அகந்தையில் சிக்கியவர்கள், கடவுளோடும் தொடர்பு கொள்ளமுடியாது. அவர்களைப் பொருத்தவரை, கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.

இதற்கு மாற்றாக, சொல்லப்படும் புண்ணியம், அடக்கம், பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர். தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம் என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று ஆரம்பமாகும் அடக்கமுடைமை என்ற பிரிவில், அழகிய பத்து குறள்களை நமது சிந்தனையில் பதிக்கிறார் திருவள்ளுவர்.

தன்னை முன்னிலைப்படுத்தாமல், தன்னை எரித்து, பிறருக்கு ஒளியூட்டும் விளக்கை மையமாக வைத்து கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளன்று, பணிவான மனதோடு பணியாற்றும் பாடத்தை, தீபங்களிடமிருந்து கற்றுக்கொள்ள இறைவன் நமக்குத் துணை செய்வாராக!

No comments:

Post a Comment