16 March, 2023

Growing / Diminishing Vision பார்வையை வளர்ப்பதும், இழப்பதும்

 
Jesus heals a man born blind

4th Sunday of Lent
 
Every year, we celebrate the 4th Sunday of Lent as ‘Laetare Sunday’ – Rejoicing Sunday. As we approach Easter, we can surely rejoice in the recollection of the moments of grace when we have been given a brighter perspective on life during this Lenten Season. In spite of the dark clouds of war, the shocking natural calamities as well as the constant threat of various viruses, we need to keep alive our hope that the Risen Christ is active and alive in our midst. That hope is a reason for rejoicing.

Our life is blessed with moments of rejoicing. One such moment is surely when we experience forgiveness – forgiving others as well as being forgiven. To celebrate this Rejoicing Sunday meaningfully, Pope Francis suggested a ‘feast of forgiveness’ in 2014.
“This coming Friday and Saturday will be a special penitential moment, called ‘24 hours for the Lord’. It will be – we could call it – a feast of forgiveness, which will take place simultaneously in many dioceses and parishes around the world.” This was the invitation extended to the whole world by Pope Francis, on March 23, 2014.
For the past nine years we have been celebrating this ‘Feast of Forgiveness’ on the eve of the 4th Sunday of Lent. The main event of this feast is the ’24 Hours for the Lord’, in which the churches around the world are kept open for 24 hours and priests are available for the Sacrament of Reconciliation.

Close on the heels of the healing experienced during the ‘Feast of Forgiveness’ on Friday and Saturday, we are given a Gospel passage this Sunday - John 9:1-41 - which talks of Jesus healing a person who was visually challenged. It will be a worthwhile and helpful exercise to reflect on how our capacity to have proper perspective in life helps us lead a joyful life. Growing or diminishing in proper perspective about life are two key themes of our Sunday reflection.
Last Sunday we reflected on the gospel passage of Jesus talking to a Samaritan woman (John 4:5-42). The focus of that passage was ‘water’. Today we have another passage from John (John 9:1-41) which invites us to reflect on ‘light’ – especially the light within. Many of us, although we have the capacity to ‘see’, yet, are blocked from ‘seeing’ ourselves and the world around us in proper perspective due to our prejudiced vision. Here is a story to illustrate how we can have the capacity to see and yet miss the point.

All of us are familiar with many TV shows like ‘Got Talent’ that showcase various talents. In one such talent show, a boy and a girl walked on to the stage. The boy was leading a girl wearing dark glasses and holding a stick generally used by the visually challenged persons. The judges were a bit intrigued. One of them said, “Excuse us… This show is not meant for persons with disability.” The girl responded saying, “No, I am not going to perform. My brother is going to dance. I am here only to encourage him.” With these words, the girl got down from the stage with the help of the stick and sat in the front row, close to the judges.
The boy signalled for the music to begin. For the next five minutes the boy danced beautifully and captured the attention of the audience and the judges by his elegant moves. Once the performance was over, there was a standing ovation from the judges and the audience. At that moment, the girl sitting in the front row, leapt from her chair and ran on to the stage without the help of the stick. She ran over to her brother, embraced him and kissed him on his forehead. Then she took off the dark glasses, put them on her brother and gave him the stick. Then the boy spoke up: “There are no persons with disability in the world. There are only people with different abilities.” With these words, the boy and the girl walked out of the stage, leaving the judges in stunned silence.
The young boy who was visually challenged was filled with inner light, while the judges as well as the audience lacked this inner light. Today’s Gospel invites us to examine our capacity to see and our ability to perceive.

In the lengthy Gospel passage with 41 verses, (John 9: 1-41) the miracle of Jesus curing the visually challenged person is reported in the first 7 verses, while the conversations that take place as a result of this miracle, are recorded in 34 verses. Evangelist John, as we know, is not a person who records only the events in the life of Jesus, but, also gives theological interpretations about the event. Last week, we heard the lengthy conversation between Jesus and the Samaritan woman near the well. In that conversation, we see the Samaritan woman recognizing Jesus gradually. This week we have a heated discussion – conducted in the form of a court proceeding between the cured person and the Pharisees.

During this heated discussion, the evangelist portrays the visually challenged person as not only getting cured of his lack of physical vision, but also gaining spiritual vision to believe in Jesus even though he had not seen Him. The progressive enlightenment of the visually challenged person is indicated by the titles he gives to Christ. During the questioning by the Pharisees, he first refers to Jesus as ‘the man called Jesus’ (Jn. 9:11). Then he says: ‘He is a prophet’ (Jn. 9:17). Ultimately, when he meets Jesus face to face, his surrender is complete: ‘Lord, I believe – in the Son of Man’ (cf. Jn. 9: 35-38).
On the other hand, we see the Pharisees gradually lose sight and become more and more blind in their rigid ritualistic practices. The parents of the visually challenged person, who are called in for enquiry, are portrayed as ‘partially blinded’ persons. While they were ready to accept their visually challenged son as the ‘will of God’, they were scared to accept him as the miraculous sign of God’s mercy. They were blinded by the fear of rules and regulations, instilled in their hearts by the Pharisees.

In this passage, John gives us other minor points to reflect on… One such point is that the man born blind, after his cure, was not recognised by the others. His neighbours and those who had formerly seen him begging asked, “Isn’t this the same man who used to sit and beg?” Some claimed that he was. Others said, “No, he only looks like him.” But he himself insisted, “I am the man.” (John 9: 8-9) People who had seen him as a blind beggar, could not see him (recognise him) when he was all right. Perhaps the touch of Jesus had worked such a transformation in him that he was not recognised. This does happen to many people who have experienced the divine touch.

John’s detailed narration about the conversation between the healed man and the Pharisees is a master stroke that brings out the stark contrast between those who are willing to see and those who refuse to see. The man born blind had not seen his parents or the Pharisees from his birth. This was the first time he saw them. They must have presented a pathetic sight to this man. He must have pitied his parents who were not willing to open their eyes to the full truth. It was much more pitiable for him to see the Pharisees. Being so close to God and the Temple, how could they not see the finger of God in this miracle, he must have wondered!

The parents, and more especially the Pharisees, are good examples for us to learn how our emotions can blind us. When our emotions cross a certain level, we tend to become blind to so many other realities around us. We tend to use expressions like ‘blinded by rage’, and ‘love is blind’. Knowing full well how our perspective sets the tone of our life, Jesus said: “The eye is the lamp of the body. So, if your eye is sound, your whole body will be full of light; but if your eye is not sound, your whole body will be full of darkness.” (Matthew 6:22-23)

Lent is a good time to reflect on where we stand, especially with regard to our willingness to let go of various negative feelings and prejudices so that we can gain a clearer vision of Christ and of the world. During the Lenten Season we are invited to see ourselves and others as God wants us to see them. That is true enlightenment!

Our final thoughts are on Pope Francis. Ten years back, on March 19, 2013, on the Feast of St Joseph, Pope Francis took up the ministry of leadership in the Catholic Church. This Sunday, March 19, 2023, he completes ten years of his leadership ministry. We pray that God grants him good health of body and mind as well as clarity of vision to guide the Church in the Gospel way.

The man born blind among the Pharisees

தவக்காலம் 4ம் ஞாயிறு

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் 4ம் ஞாயிறு, ‘Laetare Sunday’ - அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடப்படுகிறது. உயிர்ப்பு விழாவை நோக்கிச் செல்லும் நம் தவக்காலப் பயணத்தில், உண்மையான மகிழ்வைக் கண்டுகொள்ளவும், அதை உலகில் வளர்க்கவும், தாய் திருஅவை இந்த ஞாயிறை நமக்கு வழங்கியுள்ளார்.

நம் வாழ்வில் மகிழ்வைக் கொணரும் தருணங்கள் பல உள்ளன. அவற்றில், மிக முக்கியமான தருணங்கள் - நாம் மன்னிப்பு பெற்ற, மற்றும், மன்னிப்பு வழங்கிய தருணங்கள். தவக்காலத்தின் மகிழும் ஞாயிறுக்கு முந்தைய இருநாள்களை மன்னிப்பு விழாவாகக் கொண்டாடுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார். 2014ம் ஆண்டுமுதல், சிறப்பிக்கப்படும் இந்த மன்னிப்பு விழாவின்போது, உலகெங்கும், பல கோவில்கள், 24 மணி நேரங்கள் திறக்கப்பட்டிருப்பதும், அங்கு, ஒப்புரவு அருளடையாளம் வழங்க அருள்பணியாளர்கள் காத்திருப்பதும், இவ்விழாவின் முக்கிய அம்சங்களாக இருந்துவந்துள்ளன.

இவ்வாண்டு, மார்ச் 17,18 ஆகிய இரு நாள்கள் நாம் கொண்டாடிய இந்த மன்னிப்பு விழாவைத் தொடர்ந்துவரும் மகிழும் ஞாயிறன்று, பார்வையற்ற ஒருவரை இயேசு குணப்படுத்தும் நிகழ்வு, நற்செய்தியாக (யோவான் 9: 1-41) நமக்குத் தரப்பட்டுள்ளது. மகிழும் ஞாயிறன்றுபார்வை பெறுவதை' சிந்திக்கும்போது, நம் மகிழ்வைக் குறைக்கும், அல்லது, குலைக்கும் பார்வையைப்பற்றி சிந்திப்பது, பயனுள்ள ஒரு முயற்சியாக இருக்கும். இந்தக் கருத்தை விளக்கும் ஒரு நிகழ்வு இதோ...

திறமைகளை வெளிக்கொணர்வதற்கு உலகின் பல நாடுகளில் நடைபெற்றுவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அத்தகைய நிகழ்ச்சியொன்றில், ஓர் இளைஞன், மற்றோர் இளம்பெண்ணை மேடைக்கு நடுவே அழைத்துவந்தார். அந்த இளம்பெண், கறுப்புக்கண்ணாடி அணிந்திருந்தார்; பார்வைத் திறனற்றோர் பயன்படுத்தும் குச்சியுடன் நடந்துவந்தார். போட்டியின் நடுவர்கள் அவர்களிடம், "மன்னிக்கவும். இந்தப் போட்டியில், திறமை குறைவானவர்கள் கலந்துகொள்ள இயலாது" என்று கூறினர். உடனே அவ்விளம்பெண், நடுவர்களிடம், "கவலைப்படாதீர்கள். நான் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள வரவில்லை. போட்டியில் நடனமாட வந்திருக்கும் என் தம்பியை உற்சாகப்படுத்தவே வந்துள்ளேன்" என்று கூறிவிட்டு, தன் கையில் வைத்திருந்த கோலின் உதவியுடன் மேடையைவிட்டு இறங்கி, பார்வையாளர்களின் முதல் வரிசையில் அமர்ந்தார்.
மேடையில் நின்ற இளைஞர், இசையைத் துவக்கும்படி கூறவே, இசை ஆரம்பமானது. அடுத்த ஐந்து நிமிடங்கள், அந்த இளைஞர் அற்புதமான ஒரு நடனத்தை வழங்கினார். அவர் நடனமாடி முடித்ததும், பார்வையாளர்களும், நடுவர்கள் மூவரும் ஒருசேர எழுந்துநின்று கரவொலி எழுப்பினர். அதுவரை முன்வரிசையில் அமர்ந்திருந்த அவ்விளம்பெண், மேடையை நோக்கி ஓடினார். தான் பயன்படுத்திய குச்சியின் உதவியின்றி, அவர் மேடையை நோக்கி, விரைவாக ஓடியது, நடுவர்களையும், பார்வையாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.
மேடையேறிச் சென்ற இளம்பெண், தன் தம்பியை ஆரத்தழுவி, நெற்றியில் முத்தமிட்டார். பின்னர், தான் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியை தம்பிக்கு அணிவித்து, அவர் கையில் அந்தத் தடியையும் கொடுத்தார். அப்போது, அவ்விளைஞர், நடுவர்களிடம், "திறமை குறைவானவர்கள் என்று யாரும் கிடையாது. திறமை மாறுபட்டவர்களே இவ்வுலகில் இருக்கிறோம்" என்று சொல்லிவிட்டு, தன் அக்காவின் கரத்தைப் பற்றியவாறு மேடையிலிருந்து வெளியேறினார்.

திறமை குறைவானவர்கள் என்பதை யார் தீர்மானம் செய்வது? அனைத்துப் புலன்களும் குறையின்றி இருப்பவர்களை, திறமை உடையவர்கள் என்றும், புலன் குறையுள்ளவர்களை, திறமையற்றவர்கள் என்றும் எளிதில் தீர்மானம் செய்துவிடுகிறோம். பார்வைத்திறன் உள்ளோர், பார்வைத்திறன் அற்றோர், பார்வைத்திறன் குறைவுடையோர் என்று, நம்மை நாமே பல வழிகளில் முத்திரை குத்திக்கொள்ளும் நமக்கு, இன்றைய நற்செய்தி (யோவான் 9:1-41) ஒரு சில அழகிய பாடங்களைச் சொல்லித்தருகிறது. உடல் அளவில் முழுமையான பார்வைத் திறன் கொண்டவர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் நாம், பலமுறை அகத்தில் குறுகிய பார்வை கொண்டிருக்கிறோம், அல்லது அகக்கண்களை இழந்திருக்கிறோம். நம் அகக்கண்களைப் பற்றி, நமது பார்வை, அல்லது கண்ணோட்டத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க, இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது.

பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்கிய நிகழ்ச்சியை இன்று யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்தப் புதுமை யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் முதல் ஏழு இறைவாக்கியங்களில் முடிவடைகிறது. ஆனால், புதுமையைத் தொடர்ந்து 34 இறைவாக்கியங்கள் வழியாக, யோவான், ஓர் இறையியல் பாடமே நடத்துகிறார். நாம் அனைவரும் அகம், புறம் இவற்றில் பார்வை பெறுவது, பார்வை இழப்பது என்பன குறித்த பாடங்கள் இவை.
பார்வை இழந்த மனிதர், உடல் அளவில் மட்டுமல்லாமல், உள்ளத்திலும் பார்வை பெறுகிறார். தன் விசுவாசக் கண்களால் இயேசுவைக் கண்டுகொள்கிறார். இதற்கு நேர் மாறாக, உடல் அளவில் பார்வை கொண்டிருந்த பரிசேயர்கள், படிப்படியாகத் தங்கள் அகத்தில் பார்வை இழப்பதையும் யோவான் கூறியுள்ளார். இவ்விரு துருவங்களுக்கும் இடையே, பார்வை பெற்ற மனிதரின் பெற்றோர், அரைகுறையாய் பெறும் பார்வையைக் குறித்தும், யோவான் பாடங்கள் சொல்லித் தருகிறார்.

இயேசு உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, பார்வையற்றவர் கண்களில் பூசினார். சிலோவாம் குளத்தில் கண்களைக் கழுவச்சொன்னார். அவரும் போய் கழுவினார். பார்வை பெற்றார் என்று, இப்புதுமையை ஒருசில இறைவாக்கியங்களில் யோவான் பதிவுசெய்துள்ளார். பார்வை பெற்றவர் தன் வழியே போயிருந்தால், புதுமை முடிந்திருக்கும், ‘சுபம் போட்டிருக்கலாம். புகழை விரும்பாத இயேசுவுக்கும் அது மிகவும் பிடித்த செயலாக இருந்திருக்கும். ஆனால், நடந்தது வேறு. அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார் (யோவான் 9:7) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். அவர் திரும்பி வந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின.

அவர் திரும்பி வந்ததற்கு என்ன காரணம்? பார்வை பெற்றவர், கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தவர். தனக்கு இந்தப் புதுமையை, இந்த மாபெரும் நன்மையைச் செய்தவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள, அவருக்கு தன் நன்றியைக் கூற, அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். பல்வேறு உடல் குறைகளால் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தன் நண்பர்கள் மத்தியில், தனக்கு நடந்ததை எடுத்துச்சொல்லி, மகிழ்வைப் பகிர்ந்துகொள்ள அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். தான் எதுவும் கேட்காதபோது, தனக்கு இந்தப் புதுமையைச் செய்த அந்த மகானிடம் தன் நண்பர்களையும் அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு அவர் திரும்பி வந்திருக்க வேண்டும்.

அதுவரை, அவரது குறையைப் பார்த்து, தர்மம் செய்துவந்த பலர், அவர் குணமாகி திரும்பி வந்தபின், அவரை அடையாளம் கண்டுகொள்ளமுடியாமல் சந்தேகப்பட்டனர். உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தால், உடலில், முக்கியமாக, முகத்தில் ஏற்படும் மாற்றங்களை நாம் பார்த்திருக்கிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது அனைவரும் அறிந்த பழமொழி. பார்வையிழந்து, பரிதாபமாய் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் இயேசுவின் தொடுதலால் அடையாளம் தெரியாத அளவு மாறியிருந்தார். சந்தேகத்தோடு தன்னைப் பார்த்தவர்களிடம் "நான்தான் அவன்." என்று பெருமையோடு, பூரிப்போடு சொன்னார். 'நான்தான் அவன்' என்று அவர் கூறிய அந்த நேரத்திலிருந்து இறைவனின் கருணைக்கு, புதுமைக்கு தான் ஒரு சாட்சி என்று புதிய வாழ்வை ஆரம்பித்தார். அவரது சாட்சிய வாழ்வுக்கு வந்த முதல் பிரச்சனை பரிசேயர்கள் தான். ஒன்றுமே இல்லாத இடங்களிலும் பிரச்சனையை உண்டாக்கும் திறமை படைத்தவர்கள் பரிசேயர்கள். அப்படிப்பட்டவர்கள், இந்தப் புதுமை, ஒய்வு நாளில் நடந்தது என்று தெரிந்தபின் சும்மா இருப்பார்களா?

புதுமையொன்று நிகழ்ந்தது என்பதில் மகிழ்வடைவதற்குப் பதில், அது ஓர் ஒய்வு நாளில் நடந்தது என்பதை பரிசேயர்கள் பிரச்சனையாக மாற்றினர். வாழ்க்கையில் மலைபோல் குவிந்திருந்த பல பிரச்சனைகளுடன் தினமும் வாழ்ந்தவர்கள் அந்தப் பிச்சைக்காரர்கள். அவர்களுக்கு, நல்ல நாள், பெரிய நாள், ஒய்வு நாள் என்றெல்லாம் பாகுபாடுகள் இருந்ததில்லை. எனவே, கண் பார்வை பெற்றவருக்கு, அது ஒய்வு நாள் என்பதே தெரிந்திருக்க நியாயமில்லை.

பார்வை பெற்றவர் பரிசேயர் முன்பு கூட்டிச் செல்லப்பட்டார். அவர்கள் கேள்வி கேட்டனர். அவர் பதில் சொன்னார். பரிசேயர்கள், அவரது பெற்றோரை வரவழைத்து விசாரித்தனர். அவர்கள் இந்த விவகாரத்திலிருந்து நழுவப் பார்த்தனர். பார்வையற்றவரை, கடவுளின் சாபம் பெற்றவர் என்று ஊர் மக்கள் ஒதுக்கியபோது, இது கடவுளின் சித்தம் என்று தங்கள் மகனை பரிவோடு ஏற்றுக்கொண்ட அந்த பெற்றோர், பார்வை பெற்று, இறைவனின் புதுமைக்கு ஒரு சாட்சியாக நின்ற தங்கள் மகனிடம் உருவான மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கினர். பரிசேயரின் சட்ட திட்டங்கள் அவ்வளவு தூரம் அவர்களைப் பயமுறுத்தி, அவர்கள் பார்வையைக் குறுகச் செய்திருந்தது.
அந்த பார்வையற்றவர், பிறந்தது முதல் தன் பெற்றோரையோ, பரிசேயர்களையோ பார்த்ததில்லை. அன்றுதான் முதல் முறையாக தன் பெற்றோரையும், பரிசேயர்களையும் பார்க்கிறார். தன் பெற்றோரது பயத்தைக் கண்டு அவர் பரிதாபப்பட்டிருப்பார். அதற்கு மேலாக, அவருடைய பரிதாபத்தை அதிகம் பெற்றவர்கள் அந்த பரிசேயர்கள். கடவுளுக்கும், ஆலயத்திற்கும் மிக நெருக்கத்தில் வாழும் இவர்கள் கடவுளை அறியாத குருடர்களாய் இருக்கிறார்களே என்று அவர் பரிதாபப்பட்டிருப்பார்.

பார்வை பெற்றவர் தன் ஊனக் கண்களால் இயேசுவை இன்னும் பார்க்கவில்லை, ஆனால், அகக் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிட்டார். எனவே, பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை. அவரது சாட்சியம் தீவிரமாக, ஆழமாக ஒலித்தது. அதைக் கண்டு, அவரைக் கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர் பரிசேயர்கள். அதுவரை ஒதுங்கி இருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அந்த சந்திப்பில், அம்மனிதரின் சாட்சியம் இன்னும் ஆழப்பட்டது. முழுமை அடைந்தது. படிப்படியாக அக ஒளி பெற்ற அவர், இறுதியில் இயேசுவைச் சந்தித்த போது, "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்" (யோவான் 9:38) என்று முழுமையாய் சரணடைகிறார்.
படிப்படியாக பார்வை பெற்ற அந்த ஏழைக்கு நேர் மாறாக, பரிசேயர்கள் படிப்படியாக பார்வை இழக்கின்றனர். அவர்கள் பார்வைக்குத் திரையிட்டது ஒரே ஒரு பிரச்சனை. இந்தப் புதுமை ஒய்வு நாளன்று நடந்தது என்ற பிரச்சனை. இயேசுவின் மீது அவர்கள் வளர்த்துவந்த பொறாமையும், வெறுப்பும், ஏற்கனவே அவர்கள் பார்வையை வெகுவாய் பாதித்திருந்தன. "ஒய்வு நாள் சட்டத்தை கடைபிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது." (யோவான் 9:16) என்று ஆரம்பிக்கும் அவர்களது எண்ண ஓட்டத்தை, யோவான் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிக் கொணர்கிறார். ஒய்வு நாள் என்ற பூட்டினால் இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட அவர்களது மனதில் ஒளி நுழைவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. தங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற அந்தப் பார்வையற்ற மனிதரைக் கண்டு பயந்தனர். இருளுக்கு பழகிவிட்ட கண்களுக்கு பார்வையற்றவர் கொண்டு வந்த ஒளி எரிச்சலை உண்டாக்கியது. அவர்களது எரிச்சல் கோப வெறியாக மாறவே, அவர்கள், பார்வை பெற்று, இயேசுவின் சாட்சியாக மாறிய மனிதரை, யூத சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளினர்.

உள்ளத்தில் ஏற்படும், உணர்வுகளால், உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களால் நாம் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதைப் பலவாறாக நாம் கூறுகிறோம். பொதுவாக, எந்த ஒரு உணர்ச்சியுமே ஓர் எல்லையைத் தாண்டும்போது, அந்த உணர்ச்சி நம்மைக் குருடாக்கி விடுவதாகத்தான் அடிக்கடி கூறுகிறோம்.
'கண்மூடித்தனமான காதல்' என்று சொல்கிறோம். காதல் வயப்பட்டவர்களுக்கு பல்வேறு விடயங்கள் கண்களில் படுவதில்லை. "தலை கால் தெரியாமல்" ஒருவர் மகிழ்ந்திருப்பதாகக் கூறுகிறோம். கோபத்திலோ, வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பிலோ செயல்படுபவர்களை "கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுவதாகக் கூறுகிறோம்.
ஆத்திரம் கண்களை மறைக்கிறது... எனக்குக் கோபம் வந்தா என்ன நடக்கும்னு எனக்கேத் தெரியாது... சந்தேகக் கண்ணோடு பார்க்காதே... இப்படி பலவிதமான வாக்கியங்கள் நம் பேச்சு வழக்கில் உள்ளன. உள்ளத்து உணர்வுகளுக்கும், கண்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு. இதையே, இயேசு தன் மலைப்பொழிவில் அழகாய் கூறியுள்ளார். கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும்.(மத்தேயு 6:22-23)

உடலளவில் பார்வைத்திறன் இருந்தால் மட்டும் போதாது, அகத்திலும் பார்வை பெற வேண்டும் என்ற பாடத்தை இறைவன் நம் அனைவருக்கும் சொல்லித்தருகிறார். அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெறவேண்டும். தெளிவான, சரியான பார்வை பெறவேண்டும். மனதையும், அறிவையும் குறுக்கும் முற்சார்பு எண்ணங்களை அகற்றி, பரந்து விரிந்த பார்வை பெறவேண்டும். அக ஒளி பெறுவோம். அகிலத்திற்கு ஒளியாவோம். உடலளவில் பார்வைத்திறன் குறைந்தோரின் வாழ்வில் இறைவன் உள்ளொளி பெருக்கவேண்டுமென செபிப்போம்.

இறுதியாக ஓர் எண்ணம், ஒரு வேண்டுதல்... 2013ம் ஆண்டு, மார்ச் 19ம் நாள், புனித யோசேப்பு பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை ஏற்றுக்கொண்டார். மார்ச் 19, இஞ்ஞாயிறன்று தன் தலைமைப் பணியில் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, உடல், உள்ள நலனையும், தெளிவான பார்வை, தீர்க்கமான சிந்தனை ஆகிய கொடைகளையும் இறைவன் வழங்கவேண்டுமென்று செபிப்போம்.


No comments:

Post a Comment