14 September, 2023

Forgiveness = Breath of Life மன்னிப்பு = வாழ்வின் மூச்சு


24th Sunday in Ordinary Time

Jordyn Howe, a teenager (14), took his step father’s gun to school one day and while showing the gun to his friends in the school bus, accidentally shot his fellow student Lourdes, aged 13, and killed her. Jordyn faced up to 22 months in prison, and initially, Ady Guzman-De Jesus, the mother of Lourdes, demanded a harsh punishment. But after Ady met with Jordyn and a judge, she came up with a different plea deal, and the court agreed.
Jordyn would spend one year in a juvenile detention centre and would also spend time touring the state of Florida with Ady, talking about the dangers of guns. Ady Guzman-De Jesus’s extraordinary gesture of forgiveness moved everyone in the court as she hugged Jordyn despite her grief over her lost daughter. For Ady, the ruling had helped to bring her peace. She told the reporters waiting outside the court: “I forgive him because I’ve found peace, because I feel like my daughter now is in peace. It won’t bring my daughter back, but at least it will keep her name alive. I believe this is what my daughter would have wanted me to do.”

Today’s Gospel invites us to reflect on one of the sublime abilities human beings possess – the ability to forgive and be forgiven. Both these are two sides of the same coin, as expressed by St Francis of Assisi in his famous prayer for peace: “In pardoning, we are pardoned.” It is appropriate that we are called to reflect on this noble ability after having passed through two special days in the past week, namely, September 11 – the day to remember the 9/11 attack in New York, and September 14 – the Feast of the Exaltation of the Cross. Here is a news item that ties up both these days – September 11 and 14.

It is now 22 years since the ‘9/11 attacks’ took place in New York. This place is now called Ground Zero and there is the 9/11 Memorial and Museum at Ground Zero. This Memorial has many meaningful exhibits, one of them being a cross called the World Trade Center cross, as well as the Ground Zero cross. Here is a newspaper report on this cross:
A cross-shaped steel beam found amid the wreckage in the days following the September 11 terrorist attack has been lowered 70 feet down into the bowels of where the twin towers once stood to become part of the exhibit at the National September 11th Memorial and Museum. The two-ton, 20-foot-high T-beam, which has now become a religious relic,… was a symbol of hope for many working on rescue and recovery there, so much so that the construction worker who discovered it believes he stumbled on to a miracle. 'I saw Calvary in the midst of all the wreckage, the disaster,' Frank Silecchia recalled. 'It was a sign... that God didn't desert us.' (By Daily Mail Reporter, 25th July 2011)

Although the American Atheists have objected to this Cross being part of the Memorial, it is very heartening to see that thousands have drawn inspiration from the Cross. The Cross inspires people in so many ways and teaches us so many lessons. One of the lessons learnt from the Cross and, more particularly, from the Crucified Christ is forgiveness. He preached and practised forgiveness all his life. He ‘breathed’ forgiveness and hence when he was about to stop breathing, he wanted to leave that as his last breath praying: “Father forgive them…”. When we celebrated the Exaltation of the Cross last Thursday, we remembered the great lesson of forgiveness taught by Jesus hanging on the cross.

It would be hard for us to deal with all that Jesus did and said about forgiveness. We shall focus on just two aspects of forgiveness taught by Jesus in today’s Gospel - Matthew 18:21-35. The first aspect comes in the form of a numerical answer given by Jesus to the question posed by Peter - How many times do we forgive someone who makes a mistake? All of us must have faced this question in our lives. Peter had this doubt too. Here are the opening lines from today’s Gospel:
Then Peter came up and said to Jesus, “Lord, how often will my brother sin against me, and I forgive him? As many as seven times?” Jesus said to him, “I do not say to you seven times, but seventy times seven.” (Matthew 18: 21-22)

It is interesting to note that the opening lines of the gospel passages of last Sunday and this Sunday sound similar. Last Sunday, Jesus began saying, “If your brother sins against you, go and tell him his fault, between you and him alone” (Mt. 18:15), implying that even if my brother is the one who sins, it is my duty to begin the process of reconciliation. Peter must have accepted this challenging proposition; but, there was the next question. Hence this week’s gospel begins with Peter’s question: How often will my brother sin against me, and I forgive him? (Mt. 18:21)

When Jesus replied, “Seventy times seven,” it was not a lesson in mathematics. Forgiveness goes beyond numbers and calculations. When Peter asked Jesus whether forgiving seven times would be sufficient enough, Peter would have imagined that Jesus would appreciate him. Forgiving someone seven times was quite a generous gesture for a Jew, since the number 7 meant fullness. But, Jesus tells him to go beyond. I imagine the conversation between Jesus and Peter in this fashion:
Peter: Lord, how often will my brother sin against me, and I forgive him? As many as seven times?
Jesus: Peter, your question is pretty surprising to me. Your question - ‘How often should I forgive my brother?’ sounds like, ‘How often should I breathe?’ If you don’t breathe, you die. If you don’t forgive, you die too. The simple formula… forgive always as you would breathe always.
This message was communicated to Peter when Jesus said “not seven times, but seventy times seven.” This is the first lesson that Jesus gives in today’s gospel. Very challenging indeed!

The second lesson is equally challenging. Jesus teaches that we are called to forgive, irrespective of how great or small is the sin. To illustrate this point, Jesus presents the ‘Parable of the Unforgiving Servant’, where one owes a debt of ‘ten thousand talents’ and another, ‘a hundred denarii’. Some of the Bible scholars have converted these amounts in terms of daily wages. Ten thousand talents are equivalent to wages paid for 6,000,000 days, whereas, a hundred denarii are equivalent to wages paid for 100 days.

As we listen to the parable, we come across the scene where, “out of pity for him the lord of that servant released him and forgave him the debt” (Mt. 18:27). What follows this forgiveness, shocks us. But that same servant, as he went out, came upon one of his fellow servants who owed him a hundred denarii; and seizing him by the throat he said, ‘Pay what you owe.’ So his fellow servant fell down and besought him, ‘Have patience with me, and I will pay you.’ He refused and went and put him in prison till he should pay the debt. (Mt. 18:28-30)

If we wish to speak in figurative terms, we can imagine that the debt ‘ten thousand talents’ was an ocean, while ‘hundred denarii’ was only a cup of water. The one who owed the king ten thousand talents was drowning in the ‘ocean of debt’ fighting for every breath. At that moment, the saving hands of the king pulled him out. But, just a few moments later, forgetting the fresh lease of life he and his family had received, this servant tried to choke the life out of his fellow servant, who owed him just a ‘cup of water’.

Getting forgiven and forgiving are like the breath we inhale and exhale. If one of them stops, or, becomes weak, we end up sick. By not practising forgiveness, the first servant made a mockery of the forgiveness he had received. Hence, in the third part of the parable, we see that the king punishes the unforgiving servant severely. Jesus closes this parable as well as today’s gospel with a warning: “So also my heavenly Father will do to every one of you, if you do not forgive your brother from your heart.” (Mt. 18:35) 

These words of Jesus can be interpreted to mean that when we do not forgive our brother from our heart, we resist or reject God’s forgiveness to us. When we do not forgive others, we tend to inflict pain on ourselves and the wound begins to fester. Thoughts of revenge and bottled-up anger are harmful to us.
“Anger is an acid that can do more harm to the vessel in which it is stored than to anything on which it is poured” said, Mark Twain. In stark contrast to this, he had defined forgiveness in these beautiful words: Forgiveness is the fragrance that the violet (flower) sheds on the heel that has crushed it.”
There are two more statements that talk of what forgiveness, or unforgiveness can do to us:
"Forgive others not because they deserve forgiveness; but because you deserve peace"
“Refusing to forgive someone is like drinking poison, and waiting for the other person to die”

The French writer Victor Hugo, in his last novel “Ninety Three”, narrates an event that can be considered as a lovely parable for uncontrolled anger and revenge. During the French Revolution, a ship was sailing at sea negotiating the waves and the wind. While at sea, the sailors realized that a cannon which was not properly secured, rolled out of control and damaged the ship partially. One of the sailors risked his life to secure the cannon and saved their ship. The cannon that was not properly secured could have easily destroyed the ship. Similarly, while we are negotiating the external storms that threaten our life’s journey, our uncontrolled feelings of anger and revenge can destroy us from within.

On October 4, the Feast of St Francis of Assisi, we begin the Synod on Synodality in Vatican. We have been preparing for this Synod from October 2021. May St Francis of Assisi inspire every one of us, and thus the whole Church, to become ‘instruments of peace, reconciliation and forgiveness’:
Lord, make me an instrument of your peace
Where there is hatred, let me sow love
Where there is injury, pardon…
O Divine Master, grant that I may
Not so much seek to be consoled as to console
To be understood, as to understand
To be loved, as to love.
For it is in giving that we receive
And it's in pardoning that we are pardoned
And it's in dying that we are born to Eternal Life - Amen

In pardoning, we are pardoned…

பொதுக்காலம் 24ம் ஞாயிறு

ஜோர்டின் (Jordyn Howe) என்ற 14 வயது இளைஞன், தன் தாயோடும், வளர்ப்புத்தந்தையோடும் வாழ்ந்துவந்தார். தன் வளர்ப்புத்தந்தையிடம் இருந்த துப்பாக்கியை, ஒரு நாள், பள்ளிக்கு எடுத்துச்சென்றார், ஜோர்டின். பள்ளிப் பேருந்தில், தன் நண்பர்கள் குழுவில், ஜோர்டின் அந்தத் துப்பாக்கியை, பெருமையாகக் காட்டிக் கொண்டிருந்தபோது, அதைத் தவறுதலாகச் சுட்டுவிடவே, பேருந்தில் அமர்ந்திருந்த லூர்தெஸ் (Lourdes) என்ற இளம்பெண், குண்டடிப்பட்டு இறந்தார்.
லூர்தெஸின் தாய், ஏடி (Ady Guzman) அவர்கள், செய்தி கேட்டு, நொறுங்கிப் போனார். இளையவர் ஜோர்டின் மீது வழக்கு நடைபெற்றபோது, ஏடி அவர்களும், நீதி மன்றத்தில் அமர்ந்திருந்தார். வளர் இளம் பருவக் கைதிகள் மறு சீரமைப்பு மையத்தில், ஜோர்டின் 22 மாதங்கள் தங்கவேண்டுமென்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இறந்த இளம்பெண்ணின் தாய் ஏடி அவர்கள், நீதி மன்றத்தில் எழுந்துநின்று, ஜோர்டினுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தைக் குறைக்கும்படி, நீதிபதியிடம் மன்றாடினார். நீதி மன்றத்தில் இருந்தோர், அதிர்ச்சியடைந்தனர். அந்த அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க, இளைஞன் ஜோர்டினின் தண்டனைக்காலம், ஓராண்டாகக் குறைக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்கள், ஏடி அவர்களிடம், இது குறித்து கேட்டபோது, அவர், தான் எடுத்த முடிவைக்கண்டு, தன் மகள் லூர்தெஸ், மிகவும் மகிழ்ந்திருப்பார் என்று கூறினார். அத்துடன், நீதி மன்றத்தில், ஏடி அவர்கள், இளையவர் ஜோர்டினை அணைத்துக் கொண்டது, மன்னிப்பின் அடையாளமாக ஒளிர்ந்தது.
மன்னிப்பு, லூர்தெஸின் தாய் ஏடி அவர்களையும், இளையவர் ஜோர்டினையும் மாறுபட்டதொரு வாழ்வுக்கு, அழைத்துச்செல்லும் வாயிலாக அமைந்தது. ஓராண்டு தண்டனைக்காலம் முடிந்து திரும்பிவந்த இளையவர் ஜோர்டினும், லூர்தெஸின் தாய் ஏடி அவர்களும் இணைந்து, பல பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு உரையாற்றினர். துப்பாக்கிக் கலாச்சாரத்தால் விளையும் துன்பங்களை, தங்கள் சொந்த வாழ்வின் அனுபவங்களிலிருந்து அவர்கள் பகிர்ந்துகொண்டது, பலரது மனங்களைத் தொட்டது.

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரையும், மனிதராகவும், புனிதராகவும் மாற்றும் அற்புதப் பண்பான மன்னிப்பைப்பற்றி சிந்திக்க, இன்றைய வழிபாட்டு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. மன்னிப்பு பெறுவதும், வழங்குவதும், வாழ்வு என்ற நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றை தனித்தனியே பிரித்துப்பார்க்க முடியாது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம். மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், ‘அமைதியின் கருவியாய் என்னை உருவாக்கும் என்ற வேண்டுதலுடன் ஆரம்பமாகும் அந்த அழகிய செபத்தில், "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்" என்று சொல்லியிருக்கிறார்.

மன்னிப்பை, தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த இயேசு, இன்றைய நற்செய்தியில், மன்னிப்பைப்பற்றி கூறியுள்ள இரு கருத்துக்களை, சிறிது ஆழமாகச் சிந்திப்போம்.
முதல் கருத்து, ஒருவர் தவறு செய்யும்போது, எத்தனை முறை மன்னிப்பது என்ற கேள்வியின் பதிலாகக் கூறப்பட்டுள்ளது. நம் எல்லாருக்கும் எழும் இந்தக் கேள்வி, பேதுருவுக்கும் எழுந்தது. அந்தக் கேள்வியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:
அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.” (மத்தேயு 18:21-22)

சென்ற ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியின் துவக்கமும், இந்த வார நற்செய்தியின் துவக்கமும், ஏறத்தாழ, ஒரேவிதமான சொற்களுடன் துவங்குகிறது. "உங்கள் சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்" (மத். 18:15) என்று சென்ற வார நற்செய்தியை, இயேசு ஆரம்பித்தார். "என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால்" (மத். 18:21) என்ற சொற்களுடன், இந்த வார நற்செய்தியை, பேதுரு துவக்குகிறார்.
தவறுகளை பிறர் செய்தாலும், ஒப்புரவு முயற்சிகளை நாம் துவக்கவேண்டும் என்பதை, இயேசு, சென்ற வாரம், தெளிவாகக் கூறினார். கடினமான அச்சவாலை ஏற்றுக்கொண்ட பேதுருவுக்கு, அடுத்து ஒரு கேள்வி எழுகிறது. என் சகோதரர், அல்லது சகோதரி எனக்கெதிராக பாவம் செய்தால், அவர்களை, எத்தனை முறை நான் மன்னிக்கவேண்டும் என்ற கேள்வியைத் தொடுக்கிறார்.

ஏழு முறை மன்னிக்கலாமா? இது பேதுருவின் கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை... இது இயேசுவின் பதில். 7,70 என்ற எண்களை வைத்து, கூட்டல், பெருக்கல், கணக்குகளை ஆரம்பிக்கவேண்டாம். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. கணக்கற்ற முறையில் மன்னிக்கவேண்டும் என்ற கருத்தை உணர்த்தும் பாடம்.
யூதர்களுக்கு ஏழு என்ற எண், நிறைவைக் குறிக்கும் ஓர் எண். எனவே, பேதுரு, “தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா?” என்ற இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ஏதோ பெரியதொரு சாதனையைப்பற்றி, ஒரு முழுமையான, நிறைவான முயற்சியைப்பற்றி தான் பேசிவிட்டதாக, அவர் எண்ணியிருக்கலாம். இயேசுவோ, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி, எப்போதும் மன்னிக்கவேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார்.

இயேசு சொன்னதை, நாம், வேறு சொற்களில், இவ்வாறு கற்பனைசெய்து பார்க்கலாம். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘எத்தனை முறை மன்னிக்க வேண்டும்’ என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்’ என்று கேட்பதுபோல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்துவிடும். அதேபோல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால், உள்ளம் இறந்துவிடும்.” இப்படிச் சொல்வதற்கு பதில், இயேசு "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.

எத்தனை முறை மன்னிப்பது என்ற கேள்விக்கு, அளவற்ற முறை மன்னிப்பு வழங்கவேண்டும் என்பது, இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்லித்தரும் முதல் பாடம். அடுத்து, எத்தனை பெரிய தவறை மன்னிப்பது என்ற கேள்விக்குப் பதில் சொல்வதுபோல், அவர், ஓர் உவமையைக் கூறுகிறார். மத்தேயு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ள இந்த உவமை, எல்லைகள் ஏதுமின்றி, மன்னிக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இந்த உவமையில் மூன்று பகுதிகளை நாம் காணலாம். அரசருக்கும், பணியாளருக்கும் இடையே நிகழும் அற்புதமான மன்னிப்பு நிகழ்ச்சி முதல் பகுதியாகவும், மன்னிப்பு பெற்ற பணியாளர், தன் உடன் பணியாளரை மன்னிக்க மறுத்தது, இரண்டாவது பகுதியாகவும், மன்னிப்பு தர மறுத்த பணியாளரை, அரசர், மீண்டும் தண்டித்தது, மூன்றாவது பகுதியாகவும் அமைந்துள்ளன.

எத்தனை பெரிய தவறாக இருப்பினும் மன்னிக்கவேண்டும் என்ற கருத்தைப் புரிந்துகொள்ள, இந்த உவமையில் இயேசு பயன்படுத்தியுள்ள கடன் தொகைகள் உதவியாக உள்ளன. அரசரிடம் பணியாளர் பட்டக் கடன், 'பத்தாயிரம் தாலந்து' என்றும், உடன் பணியாளர் பட்டக் கடன், 'நூறு தெனாரியம்' என்றும் இயேசு குறிப்பிடுகிறார். ஒருநாள் கூலி என்ற அளவுகோல் கொண்டு பார்த்தால், 'பத்தாயிரம் தாலந்து' என்ற எண்ணிக்கை, 60,00,000 நாட்கள், அதாவது, ஏறத்தாழ 16,440 ஆண்டுகளுக்கு உரிய கூலித்தொகை. இதற்கு மாறாக, உடன் ஊழியர் பட்டக் கடன் 100 நாள் கூலிக்கு இணையானது.

'பத்தாயிரம் தாலந்து', கடலளவு நீர் என்றால், 'நூறு தெனாரியம்' கையளவு நீர்! கடலளவு கடனில் மூழ்கி, மூச்சுவிடப் போராடிக்கொண்டிருந்த பணியாளரை, அரசர் கரம் நீட்டி, வெளியில் கொணர்ந்து, அப்பணியாளரும், அவரது குடும்பத்தாரும் வாழும்வண்ணம், மன்னிப்பு என்ற உயிர் மூச்சை வழங்கினார். அந்தப் பணியாளரோ, தனக்கு அரசர் வழங்கிய உயிர் மூச்சை மறந்துவிட்டு, தன் உடன் பணியாளரின் மூச்சை நிறுத்தும் முயற்சியாக, அவருடைய கழுத்தை நெரித்தார் என்று வாசிக்கும்போது, அதிர்ச்சி அடைகிறோம்.

நாம் ஒவ்வொருவரும் சிறுவயது முதல் பல்வேறு சூழல்களில் மன்னிப்பை பெற்று வளர்ந்துள்ளோம். மன்னிப்பினால் பக்குவம் அடையும் நம் உள்ளம், அடுத்தவரையும் மன்னிக்கப் பழகுகிறது. இதற்கு மாறாக, நாம் பெற்றுள்ள மன்னிப்புக்களை மறந்துவிட்டு, அல்லது, மறுத்து, ஒதுக்கிவிட்டு, பகைமையிலும், பழி உணர்விலும், நம் மனம் நிறையும்போது, அது, உலோகக் கிண்ணம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அமிலத்தைப் போல, நம் மனதை அரித்தவண்ணம் உள்ளது.

மன்னிப்பு பெறுவதும், தருவதும் நாம், உள்ளிழுத்து, வெளிவிடும் மூச்சுக்காற்றைப் போல, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த செயல்பாடுகள். ஒன்று குறைந்தாலும், நோயுறுவோம். பத்தாயிரம் தாலந்து கடனிலிருந்து மன்னிப்பு பெற்ற பணியாளர், தான் பெற்ற மன்னிப்பை, அடுத்தவருக்குத் தர மறுத்தபோது, அவர் பெற்ற மன்னிப்பும், நோயுற்று, விலை மதிப்பற்று போனது. இதையே, இவ்வுவமையின் இறுதியில் இயேசு இவ்விதம் கூறுகிறார்: உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார். (மத்தேயு 18:35)
இறைவன் நம்மை மன்னிக்கமாட்டார் என்று சொல்வதைவிட, நாம் மற்றவர்களை மன்னிக்க முடியாதபோது, அந்த உணர்வு, நம்மை நாமே மன்னிக்க முடியாதவாறு சிறைப்படுத்தும் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

மன்னிப்பு நம் இயல்பாகவே மாறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பலர் சொன்ன கருத்துக்களில் என் மனதில் ஆழமாய்ப் பதிந்தவை, Mark Twain அவர்கள் சொன்ன அற்புதமான வார்த்தைகள்: Forgiveness is the fragrance that the violet sheds on the heel that has crushed it” அதாவது, தன்னை மிதித்து, சின்னாபின்னமாக்கிய கால்களில், நீலமலர் தன் நறுமணத்தைப் பதிக்கிறதே, அதுதான் மன்னிப்பு.”
நாம் வழங்கும் மன்னிப்பினால் மற்றவர்கள் அடையும் நன்மையைவிட, நாம் அடையும் நன்மையே அதிகம் என்பதை, ஓர் அழகிய ஆங்கிலக் கூற்று இவ்வாறு கூறுகிறது: "Forgive others, not because they deserve forgiveness; but because you deserve peace" அதாவது, "மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கு, அவர்களுக்கு மன்னிப்பு தேவை என்பதால் அல்ல; உனக்கு அமைதி தேவை என்பதால், மன்னிப்பு வழங்கு."
மன்னிக்க மறுப்பதைக் குறித்து சொல்லப்பட்டுள்ள மற்றொரு கூற்றும், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது: Refusing to forgive someone is like drinking poison, and waiting for the other person to die” அதாவது, "ஒருவரை மன்னிக்க மறுப்பது, நஞ்சை நாம் குடித்துவிட்டு, அடுத்தவர் இறப்பார் என்று எதிர்பார்ப்பதற்குச் சமம்."

மன்னிக்க மறுத்து, நாம் வளர்த்துக்கொள்ளும் பழிவாங்கும் எண்ணங்கள், நமக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதைக் கூறும் ஒரு உவமை இது. பிரெஞ்சு புரட்சிக்காலத்தில் நிகழ்ந்த வன்முறைகளை விவரிக்கும் வண்ணம், பிரெஞ்சு எழுத்தாளரான விக்டர் ஹியூகோ (Victor Hugo) அவர்கள் எழுதிய நெடுங்கதை, தொண்ணூற்று மூன்று (Ninety Three). இந்த நெடுங்கதையில் இடம்பெறும் நிகழ்ச்சி இது:
நடுக்கடலில் சென்ற கப்பலொன்று புயலில் சிக்கியது. காற்றின் வேகத்தால் பல திசைகளிலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்ட வேளையில், திடீரென கப்பலின் அடித்தளத்திலிருந்து பெரும் ஓசை ஒன்று எழுந்தது. அடித்தளத்தில், சங்கிலியால் பிணைத்து வைக்கப்பப்பட்டிருந்த பீரங்கி வண்டி, கட்டவிழ்த்து, கப்பலின் சுவர்களில் மோதிக்கொண்டிருந்தது என்பதை, கப்பல் பணியாளர்கள் உணர்ந்தனர். அவர்களில் ஒருவர், தன் உயிரைப் பணயம் வைத்து, கீழ்த்தளத்திற்குச் சென்று, பீரங்கி வண்டியை மீண்டும் சங்கிலியால் பிணைத்தார். கப்பலைக் காப்பாற்றினார்.
வெளியில் வீசும் புயலைவிட, கப்பலுக்குள் கட்டவிழ்க்கப்பட்ட பீரங்கி வண்டி, கப்பலுக்கு விளைவிக்கக்கூடிய அழிவு பெரும் ஆபத்தானது என்பதை அந்தப் பணியாளர் உணர்ந்ததால், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், அந்த முயற்சியை மேற்கொண்டார். அதைப்போலவே, நம் மனங்களில் கட்டுப்பாடின்றி அலைபாயும் வெறுப்பு உணர்வுகள், வெளி உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளைவிட, நமக்கு, பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.

இன்றைய உலகில், மனிதக் குடும்பத்தை துன்புறுத்திவரும் பல நோய்களுக்குத் தேவையான ஓர் அற்புத மருந்து, மன்னிப்பு. நம் ஒவ்வொருக்குள்ளும் ஊற்றெடுக்கும் இந்த அற்புத மருந்தை மறந்துவிட்டு, அல்லது நமக்குள்ளேயே மறைத்து, புதைத்துவிட்டு, வெறுப்பு என்ற விஷத்தை நாம் வெளிக் கொணர்கிறோம். மன்னிப்பு என்ற மருந்தால், இவ்வுலகின் பல நோய்கள் குணமாகவேண்டும் என்று மன்றாடுவோம்.

அக்டோபர் 4ம் தேதி, அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் திருநாளன்று, வத்திக்கானில் உலக ஆயர்கள் மாமன்றம் துவங்குகிறது. "Synod on synodality", அதாவது, கூட்டொருங்கியக்கம் என்பதை மையப்படுத்தி நடைபெறவிருக்கும் இந்த மாமன்றத்திற்கு கடந்த இரு ஆண்டுகளாக திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் நம்மையே தயாரித்து வந்துள்ளோம். 'அமைதியின் கருவியாய் என்னை உருவாக்கும்' என்ற அழகிய இறைவேண்டுதலை எழுப்பிய புனித பிரான்சிஸ் அவர்களின் திருநாளன்று துவங்கும் இந்த மாமன்றத்தின் வழியே நாம் ஒவ்வொருவரும் அமைதி, மன்னிப்பு, ஒப்புரவு ஆகியவற்றின் கருவிகளாக இவ்வுலகில் வாழ, அப்புனிதரின் வேண்டுதலோடு இணைந்து செபிப்போம்:
ஆண்டவரே, என்னை அமைதியின் கருவியாய் உருவாக்கும்
வெறுப்பு உள்ள இடத்தில் அன்பையும்,
காயம் உள்ள இடத்தில் மன்னிப்பையும் நான் விதைப்பேனாக.
ஆறுதல் பெறுவதைவிட, ஆறுதல் வழங்கவும்,
பிறர் என்னைப் புரிந்துகொள்வதைவிட, நான் அவர்களைப் புரிந்துகொள்ளவும்
அன்பை பெறுவதைவிட, அன்பு செலுத்தவும் எனக்கு உதவியருளும்.
ஏனெனில், தருவதில் நாங்கள் பெறுகிறோம்
மன்னிப்பதால் மன்னிப்படைகிறோம்
இறப்பதால் முடிவற்ற வாழ்வில் பிறக்கிறோம் - ஆமென்.


No comments:

Post a Comment