07 March, 2024

Called to win over darkness இருளை வெல்வதற்கு அழைப்பு

 
For God so loved the world…

4th Sunday of Lent – Laetare Sunday

Every year, we celebrate the 4th Sunday of Lent as ‘Laetare Sunday’ – Rejoicing Sunday. The Latin word ‘Laetare’ is taken from the Entrance antiphon of today’s Mass, from Isaiah: “Rejoice with Jerusalem, and be glad for her” (Is. 66:10). What we have seen and heard from October 7, 2023, via the mainstream media, about the present situation in Jerusalem and, more painfully, in Gaza, does not permit us to say: ‘Rejoice with Jerusalem’.

Down the centuries, Jerusalem and the Holy Land have seen many calamities one after another. One such calamity is spoken of in the First Reading today taken from the Second Book of Chronicles - 2 Chr. 36:14-16, 19-23. “Their enemies burnt the house of God, tore down the walls of Jerusalem, set all its palaces afire, and destroyed all its precious objects. Those who escaped the sword were carried captive to Babylon…” (2 Chr. 36:19-20).
But the First Reading does not end on this note of destruction and despair. Here are the closing verses of hope about the rebuilding of Jerusalem: “Thus says Cyrus, king of Persia: All the kingdoms of the earth the LORD, the God of heaven, has given to me, and he has also charged me to build him a house in Jerusalem, which is in Judah. Whoever, therefore, among you belongs to any part of his people, let him go up, and may his God be with him!” (2 Chr. 36:23)

At present, the mainstream media constantly bombards us with images and news stories of destruction orchestrated by the power-crazy Prime Minister of Israel, Benjamin Netanyahu. On the other hand, we also know that there are thousands of individuals, from Israel and Palestine who wish to put an end to the agony in the Holy Land. The news and views of these individuals do not get the attention of the mainstream media. When we are invited by the liturgy of this Sunday to ‘rejoice with Jerusalem’, we shall devote at least a few moments to reflect on hope-filled news coming from the Holy Land. One such news appeared on February 26, 2024, in the monthly Catholic magazine ‘America’, run by the Jesuits of the United States. The title of the news article itself gives us reason to rejoice: ‘We can live together’: A Palestinian doctor and political activist on Gaza, a ceasefire and the future of Israel-Palestine.

Dr. Mustafa Barghouti, a 70-year-old physician and Palestinian political activist, committed to nonviolence, has given an interview to ‘America’ magazine in which he reiterates how the problem of Israel-Palestine can and must be resolved in a nonviolent way. Speaking about the war in Gaza, Dr. Barghouti said that he wanted an immediate ceasefire and, after that, the establishment of an independent Palestinian state or “one democratic state” with equal rights for both Israelis and Palestinians. The idea of one democratic state is not new; it has been discussed in academic and political circles over the last 20 years; but since this idea is not advantageous to power-crazy politicians, it has not been pursued or made public. Notwithstanding the conflict and widespread hate today, Dr. Barghouti is convinced “we [Palestinians and Israeli Jews] can live together.”

Dr. Barghouti was born in Jerusalem and lives in Ramallah, the administrative centre of the Palestinian state. He founded the Palestinian Medical Relief Society and is the president of the Union of Palestinian Medical Relief Committees, a nongovernmental organization that provides health care and community services to people in the occupied territories, including Gaza. He confirmed in the interview his commitment to nonviolence, just as he did in another interview: “I will never depart from this belief (of nonviolence). I never changed my mind, even when the Israeli army shot me while I was treating an injured person in my white coat as a doctor. And I still carry the 35 shrapnel (small pieces of metal that fly around when a bomb explodes) in my back. But that didn’t change my mind or opinion that nonviolence is the best way. I believe in that, and I practice that.” He was nominated for the Nobel Peace Prize in 2010.

We know for sure that there are thousands of peace-loving persons like Dr. Barghouti living in Israel and Palestine. But, their ideas do not spread far and wide. Hence, on ‘Laetare Sunday’, we wish to bring these rare flashes of hope and celebrate them in our liturgy. We need to believe that this world is still filled with good willed persons who work for reconciliation and forgiveness.

Reconciliation and forgiveness are two key concepts of the Season of Lent. To highlight these concepts as well as to celebrate the ‘Rejoicing Sunday’ meaningfully, Pope Francis suggested a ‘feast of forgiveness’ in 2014. For the past ten years we have been celebrating this ‘Feast of Forgiveness’ on the eve of the 4th Sunday of Lent. The main event of this feast is the ’24 Hours for the Lord’, in which the churches around the world are kept open for 24 hours and priests are available for the Sacrament of Reconciliation. "Walk in newness of life" (Rom 6:4) is the theme chosen by Pope Francis for this year's celebration of reconciliation and forgiveness.

Close on the heels of this meaningful Feast of Forgiveness and Reconciliation, we are given the opportunity to reflect on how ‘God was reconciling the world to himself in Christ’ (2 Cor. 5:19). The reconciliation of the world in Christ was brought about by the total immersion of Jesus in the human race. We call this immersion – the Incarnation. In today’s Gospel (John 3: 14-21), we hear the famous verse talking about Incarnation: God so loved the world that he gave his only Son, that whoever believes in him should not perish but have eternal life. (John 3: 16) This is probably the best loved verse in the Bible. It tells us that the initiative in salvation is God’s love for man.

As we are meditating on the deeply theological expression ‘God-so-loved-the-world’, we shall set aside some moments today and in the coming days during this Lenten Season to think of the continuous, but unrecognized love stories we experience in our own families. Most of us know many families where the parent, the life-partner, a sibling is taking care of persons who cannot take care of themselves. This is not just a one-day, one month love-affair… But a year-long affair… for ten, twenty, thirty, forty and more years… Let us salute these silent stalwarts of true love and dedication who will not adorn any mainstream media or history book.

As we are reflecting on love, we cannot but think of the twisted, topsy-turvy definitions and images created by the commercial world around the word ‘love’. These misleading definitions put out the light of true love and mislead the world, especially the younger generation to get cozy with darkness. In the second half of today’s gospel, we hear Jesus talking about how people get accustomed to darkness and feel uncomfortable with light: “The light has come into the world, and men loved darkness rather than light, because their deeds were evil. For every one who does evil hates the light, and does not come to the light, lest his deeds should be exposed.” (John 3: 19-20)

There is a funny story to drive home the point as to how darkness can become so ‘comfortable’ to us that we are willing to stay in the dark. This is the story of a desert nomad who woke up hungry in the middle of the night. He lit a candle and began eating dates from a bowl beside his bed. He took a bite from one and saw a worm in it; so, he threw it out of the tent. He took the second date, brought it close to the candle and found another worm, and threw it away also. It was the same with the third one too. Reasoning that he wouldn't have any dates left to eat, if he continued to look for worms, he blew out the candle and quickly ate the rest of the dates!
Putting out the light of true conscience, we can swallow worm-infested ideas and still feel comfortable… On the other hand, we can enjoy the light as per the invitation of Jesus in the last line of today’s Gospel: But he who does what is true comes to the light, that it may be clearly seen that his deeds have been wrought in God. (John 2:21)

The contrasting concepts of ‘darkness and light’ have inspired many noble persons to leave for the posterity some inspiring statements. Fyodor Dostoevsky, the renowned Russian author, in his novel “Crime and Punishment” published in 1866 says: “The darker the night, the brighter the stars.” This statement reminds us to seek out the positive aspects even when surrounded by darkness, and to appreciate the small moments of joy and inspiration.

Martin Luther King Jr., brought out the first volume of sermons with the title ‘Strength to Love’ in the year 1963. This book remains a concrete testament to King’s lifelong commitment to preach the ‘social gospel’. One of the famous statements in this book goes like this: “Darkness cannot drive out darkness; only light can do that. Hate cannot drive out hate; only love can do that.”

With the overload of evil forces constantly submerging our minds and hearts in darkness, we are called to become agents of light and hope. Are we willing to come to Christ the Light of the World, in order to become sparks of that light? Are we willing to light a candle, become a candle ourselves to dispel the darkness? Or, are we comfortable staying in despair and cursing the darkness that surrounds us? Lenten season invites us to take up these crucial, life-changing questions and answer them honestly. 

The light has come into the world

தவக்காலம் 4ம் ஞாயிறு - 'அகமகிழ்தல்' ஞாயிறு

தவக்காலத்தின் 4ம் ஞாயிறை, 'அகமகிழ்தல்' (Laetare) ஞாயிறெனக் கொண்டாடுகிறோம். இன்றையத் திருப்பலியின் வருகைப் பல்லவியில், எருசலேமே அகமகிழ்; அவள் மீது அன்பு கொண்ட அனைவரும் ஒன்று கூடுங்கள். துயருற்ற நீங்கள் மகிழ்ந்து, அக்களியுங்கள் (எசாயா 66:10), என்று காணப்படும் சொற்களின் அடிப்படையில், இந்த ஞாயிறு, 'அகமகிழ்தல்' ஞாயிறு என்ற பெயரைப் பெற்றுள்ளது. ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக (2023, அக்டோபர் 7 முதல்) எருசலேமிலும், அதைவிட குறிப்பாக, காசாப் பகுதியிலும் நடைபெற்றுவரும் போரையும், அழிவுகளையும் காணும்போது, 'எருசலேமே அகமகிழ்' என்று மனதாரக் கூறமுடியுமா என்ற கேள்வி நம்மை வாட்டுகிறது.

வரலாற்றில் பல முறை எருசலேமும், புனித பூமியும் போர்களையும், அழிவுகளையும் கண்டு வந்துள்ளன. அந்த அழிவுகளில் ஒன்றை, இன்றைய முதல் வாசகம் (குறிப்பேடு 2ம் நூல் 36:14-16,19-23) நமக்கு நினைவுறுத்துகிறது: கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்; அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர். மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினான். (குறிப்பேடு 2ம் நூல் 36:19-20) ஆனால், முதல் வாசகத்தின் இறுதி பகுதி நம்பிக்கை தரும் சொற்களுடன் நிறைவுபெறுகிறது. “பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!” (குறிப்பேடு 2ம் நூல் 36:23)

இஸ்ரேல் நாட்டின் இன்றையப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) அதிகார வெறியினால், இன்றைய புனித பூமியில் உருவாகிவரும் அழிவுகளையே நாம் ஊடகங்கள் வழியே கண்டுவருகிறோம். இருப்பினும், இது முழு உண்மை அல்ல. புனித பூமியில், இஸ்ரேல், பாலஸ்தீனா ஆகிய இரு நாடுகளிலும், அமைதியை, ஒப்புரவை விரும்பும் பல்லாயிரம் மக்கள், குறிப்பாக, அறிவு சார்ந்த ஆன்றோர் உள்ளனர். அவர்கள் கூறும் எண்ணங்களோ, அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளோ, ஊடகங்களில் பேசப்படுவதில்லை. காரணம், இந்த ஒப்புரவு முயற்சிகளால் அரசியல்வாதிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. அரசியல் தலைவர்கள், வெறுப்பை வளர்த்து, ஆயுதங்களைப் பயன்படுத்தி, அதன் வழியே ஆயுத வர்த்தகத்தை வளர்ப்பதிலேயே குறியாய் உள்ளனர்.
இருப்பினும், அகமகிழ்தல் ஞாயிறைக் கொண்டாடும் இந்த திருவழிபாட்டு நேரத்திலாவது, புனித பூமியில் ஒப்புரவைக் கொணர விழைவோரைக் குறித்து இறைவன் சந்நிதியில் நினைவுகூர்ந்து அவர்களுக்காக நன்றி செலுத்துவது, நம் கடமை. அதுவே, இந்த ஞாயிறன்று நாம் கொண்டாடும் அகமகிழ்தல் என்ற எண்ணத்திற்கு அர்த்தம் கொடுக்கும்.

புனித பூமியில், அமைதியை, ஒப்புரவைக் கொணர விழையும் ஒரு மருத்துவரைப் பற்றிய செய்தி, கடந்த மாதம், பிப்ரவரி 26ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணிபுரியும் இயேசு சபையினரால் நடத்தப்படும் 'America' என்ற மாத இதழில் வெளியானது. முஸ்தபா பர்கூத்தி (Dr. Mustafa Barghouti), என்ற 70 வயதான மருத்துவர், 'America' மாத இதழுக்கு அளித்த பேட்டியில், தற்போது அங்கு உடனடியாக நிலவவேண்டிய போர்நிறுத்தம், இஸ்ரேல், பாலஸ்தீனா ஆகிய இரண்டும், இரு வேறு நாடுகளாக, அல்லது, ஒரே குடியரசில் இரு வேறு குழுக்களாக ஒப்புரவுடன் வாழக்கூடிய சாத்தியங்கள் ஆகியவற்றைக் குறித்து பேசியுள்ளார். அவரது பேட்டியில், ஆயுதமற்ற, அகிம்சையைப் பற்றி அவர் கூறியுள்ள சொற்கள் உள்ளத்தைத் தொடுகின்றன: "நான் ஒரு மருத்துவராக, வெள்ளை மேலுடையை அணிந்து, காயமுற்றிருந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும்போது, என்னை இஸ்ரேல் இராணுவம் சுட்டது. அதனால், 35 வெடிகுண்டு துண்டுகள், இன்னும் என் உடலில் பதிந்துள்ளன. இருப்பினும், அகிம்சை ஒன்றே இஸ்ரேல் பாலஸ்தீனா நாடுகளைக் காப்பாற்றமுடியும் என்ற என் நிலைப்பாட்டிலிருந்து நான் மாறமாட்டேன்." என்று கூறியுள்ளார். மருத்துவர் பர்கூத்தி அவர்கள், 2010ம் ஆண்டு நொபெல் அமைதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் பர்கூத்தி அவர்களைப் போலவே, அமைதியையும், ஒப்புரவையும் விரும்பும் பல்லாயிரம் நல்ல உள்ளங்கள் இஸ்ரேல் பாலஸ்தீனா நாடுகளில் வாழ்கின்றனர். ஆனால், அவர்களது நல்லெண்ணங்களை ஊடகங்கள் வெளியிடுவதில்லை. ஒப்புரவு, மன்னிப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் இந்த அறிஞர்களின் எண்ணங்களை அகமகிழ்தல் ஞாயிறன்று நாம் கொண்டாடுவோம்.

தவக்காலத்தில், மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய அனுபவங்களால், நமது உள்ளங்கள் நிறைவடையும்போது உருவாகும் உண்மையான மகிழ்வைக் கொண்டாட, தாய் திருஅவை இன்று நம்மை அழைக்கிறார். 'அகமகிழ்தல்' ஞாயிறுக்கு முந்தைய வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களை, 'மன்னிப்பின் விழா'வாகக் கொண்டாட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார். இந்த இரு நாள்களிலும், பகலும், இரவும், ஒப்புரவு அருளடையாளம் பெறுவதற்காக, உலகெங்கிலும் உள்ள ஆலயங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார். 2014ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும் இந்த மன்னிப்பின் விழாவுக்கு, "புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி" (உரோமையர் 6:4) என்ற சொற்கள், இவ்வாண்டின் மையக்கருத்தாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மன்னிப்பையும், ஒப்புரவையும் கொண்டாடிய வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களைத் தொடர்ந்துவரும் இந்த ஞாயிறன்று, தந்தையாம் இறைவன் எவ்வாறு இவ்வுலகை கிறிஸ்துவோடு ஒப்புரவாக்கினார் (காண்க. 2 கொரி. 5:19) என்பதை சிந்திக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புரவை உருவாக்க, இயேசு, தன்னையே நம்மில் ஒருவராகக் கரைத்துக்கொண்டார். அந்தக் கரைதலை நாம் 'மனுவுருவாதல்' என்று குறிப்பிடுகிறோம். மனுவுருவாதலின் ஆழத்தை உணர்த்தும் அழகிய சொற்களை இன்றைய நற்செய்தியில் (யோவான் 3:14-21) கேட்கிறோம். “தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3:16)

விவிலிய வாக்கியங்கள், குறிப்பாக, நான்கு நற்செய்திகளின் வாக்கியங்கள் பல, மேற்கோள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாக்கியங்களிலேயே மிக அதிக அளவில் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு வாக்கியம் உள்ளது  என்றால், அது நாம் இப்போது வாசித்த இறைவாக்கியம் - யோவான் 3:16 - என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த வாக்கியம் "நற்செய்திகளின் நற்செய்தி" (Gospel of the gospels) என்று சொல்லப்படுகிறது. அன்பின் ஆழத்தைச் சொல்லும் ஓர் இலக்கணம் இது.

அன்பின் ஆழத்தைக் கூறும் பல நூறு கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்தக் கதைகளில் சொல்லப்படுவதெல்லாம் ஒரு சில நாட்களில், மணித்துளிகளில் காட்டப்படும் ஆழமான அன்பு உணர்வுகள். இந்த உணர்வுகள் உண்மையானவை, உன்னதமானவைதான். ஆனால், நம் இல்லங்களில், நம் குடும்பங்களில், ஒவ்வொரு நாளும், திரும்பத் திரும்ப நிகழும் அன்புச் செயல்கள், கதைகளாக, செய்திகளாக வெளிவருவதில்லை. 'அகமகிழ்தல்' ஞாயிறன்று, நேரம் ஒதுக்கி, நமது குடும்பங்களில் ஒவ்வொரு நாளும் நடக்கும் அன்பு நிகழ்வுகளை அசைபோடுவோம். இந்தச் சின்னச் சின்ன நிகழ்வுகள் வழியே, சொல்லாமல் சொல்லப்படும் உன்னத அன்பு உணர்வுகளை இன்று அசைபோடுவோம்.

பல குடும்பங்களில், உடல்நலம், அல்லது, மனநலம் குன்றிய குழந்தைகள், வாழ்க்கைத் துணை, பெற்றோர் என்று, எத்தனையோ பேருக்கு, ஒவ்வொரு நாளும், தாய், தந்தை, கணவன், மனைவி, உடன்பிறந்தோர் என்று, குடும்பத்தில் மற்றவர்கள் செய்துவரும் பணிவிடைகள் அற்புதமானவை. இந்த உன்னதமான உண்மை நிகழ்வுகள், எந்த ஊடகத்திலோ, நூல்களிலோ வெளியாவதில்லை. பத்து, இருபது, முப்பது, நாற்பது என்று, பல ஆண்டுகள், ஒவ்வொரு நாளும் தொடரும் இந்த அன்புப் பணிகளை, கதைகளாக, ஒரு சில பக்கங்களில் சொல்லிவிடமுடியாது. வெளி உலகிற்கு தெரியாத வண்ணம், நம் குடும்பங்களில், ஒவ்வொரு நாளும், அன்புப் பணியில், தங்களையே தகனமாக்கும் ஆயிரமாயிரம் இதயங்களுக்காக, இறைவனிடம் இன்று சிறப்பாக நன்றி சொல்வோம்.

'அன்பு' என்ற இந்த உன்னதமான உண்மைக்கு, பல விபரீதமான இலக்கணங்களைப் புகட்டிவரும் உலகப் போக்கையும் இன்று சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. உண்மையான அன்பை, மகிழ்வை வெளிச்சத்திற்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தும் இருளைக் குறித்து இன்றைய நற்செய்தியின் பிற்பகுதி இவ்வாறு சொல்கிறது: ஒளி உலகிற்கு வந்திருந்தும், தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்... தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. (யோவான் 3:19-20

இருளுக்கு அதிகம் பழகிவிட்டால், ஒளி நம்மைத் துன்புறுத்தும். வேதனையான இந்த உண்மையை, வேடிக்கையான முறையில் கூறும் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. 
பாலை நிலத்தைக் கடந்துகொண்டிருந்தார், ஒரு வழிபோக்கர். இரவாகிவிட்டதால், அங்கேயே கூடாரம் அடித்துத் தங்கினார். நள்ளிரவில், திடீரென, அவருக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. தன்னிடம், ஒரு சிறு மூட்டையில், அத்திப் பழங்கள் இருந்தன என்பது நினைவுக்கு வந்தது. எழுந்தார், விளக்கை ஏற்றினார், அத்திப்பழ மூட்டையை அவிழ்த்தார். முதல் பழத்தை எடுத்துக் கடித்தபோது, பழத்துக்குள் இருந்து புழு ஒன்று வந்ததைப் பார்த்தார். எனவே, அந்தப் பழத்தைத் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தைக் கடித்தார். அதற்குள்ளிருந்தும் புழு வந்ததைப் பார்த்தார். விளக்குக்கு அருகே கொண்டு சென்று ஆராய்ந்தார். புழு நன்றாகவேத் தெரிந்தது. அதையும் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தை எடுத்து விளக்கின் அருகே கொண்டு செல்லும்போதே உள்ளே புழு இருப்பது தெரிந்தது. இப்படியே ஆய்வு செய்துகொண்டிருந்தால், தான் சாப்பிட ஒரு பழமும் இருக்காது என்று அவர் உணர்ந்தார். உடனே அவருக்கு ஓர் எண்ணம் எழுந்தது. விளக்கை அணைத்துவிட்டு, மீதிப் பழங்களை இருளில் சாப்பிட்டு முடித்தார்.

இந்தக் கதைக்கு பெரிய விளக்கங்கள் தேவையில்லை. மனசாட்சி என்ற விளக்கை அணைத்துவிட்டால், பூச்சியும், புழுவும் மண்டிக்கிடக்கும் நம் எண்ணங்களெல்லாம் சரியென்றே தோன்றும். நமது 'பசிகளும்' அடங்கிவிட்டதாகத் தோன்றும். இதற்கு நேர் மாறாக, உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள். (யோவான் 3: 21) என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில், மனதிற்கு நிறைவுதரும் ஓர் உண்மையை இறைமகன் கிறிஸ்து உணர்த்துகிறார்.

எதிரெதிர் துருவங்களாக இருக்கும் 'ஒளி' மற்றும் 'இருள்' என்ற எண்ணங்கள், பல உன்னத உள்ளங்களைத் தூண்டியதால், பல தலைமுறைகளுக்குத் தேவையான உயர்ந்த கூற்றுகளை நாம் பெற்றுள்ளோம். ­ஃபியோடோர் தொஸ்தோவ்ஸ்கி (Fyodor Dostoevsky) என்ற இரஷ்ய எழுத்தாளர், 1866ம் ஆண்டு  வெளியிட்ட 'குற்றமும் தண்டனையும்' (Crime and Punishment) என்ற நெடுங்கதையில், "இரவு நேரத்தில், எவ்வளவுக்கெவ்வளவு இருள் மண்டிக்கிடக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு விண்மீன்கள் இன்னும் கூடுதலாக ஒளிவீசுகின்றன" (“The darker the night, the brighter the stars.”) என்ற கூற்றை பதிவு செய்துள்ளார். இருள் நம்மை அதிகம் சூழ்ந்திருக்கும்போது, சிறு, சிறு மகிழ்வுகளையும், நல்லெண்ணங்களையும் நாம் கூடுதலாக உணரவேண்டும் என்ற உண்மையை இக்கூற்று தெளிவாக்குகிறது.

கறுப்பின மக்களின் சம உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் (Martin Luther King Jr.) அவர்கள், 1963ம் ஆண்டு வெளியிட்ட 'அன்பு செய்வதற்கு சக்தி' (Strength to Love) என்ற நூலில் பதிவு செய்துள்ள ஒரு கூற்று, மிக எளிதான, அதே வேளையில், மிக ஆழமான உண்மையைக் கூறுகிறது. "இருளைக்கொண்டு இருளைத் துரத்த இயலாது, ஒளி மட்டுமே அதைச் செய்யக்கூடும். வெறுப்பைக்கொண்டு வெறுப்பை விரட்டியடிக்க முடியாது. அன்பு மட்டுமே அதைச் செய்யக்கூடும்." (“Darkness cannot drive out darkness; only light can do that. Hate cannot drive out hate; only love can do that.”)

 தீய சக்திகள் அணிதிரண்டு, இவ்வுலகை இருளில் மூழ்கச்செய்துகொண்டிருக்கும் இன்றையச் சூழலில், ஒளியாக விளங்கும் கிறிஸ்துவை நெருங்கிச் செல்ல, அவரைப்போல் ஒளியாக மாற, நாம் அழைக்கப்படுகிறோம். அந்த அழைப்பை ஏற்கப்போகிறோமா? அல்லது, இருளில் நம்மேயே புதைத்துக்கொண்டு, சுகம் காணப்போகிறோமா? எது நம்மை உண்மையில் அகமகிழ்வோடு வாழவைக்கும் என்பதை, ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ள, தவக்காலம் தகுந்ததொரு காலம்.


No comments:

Post a Comment