12 May, 2013

Mothering care… Smothering flare… அன்னையாகும் அழைப்பு... அனைவருக்கும்


Mother Quotes – Quote by George Herbert


This Sunday, the Feast of the Ascension of Our Lord, Pope Francis is raising 800 plus persons to the altar as Saints of the Catholic Church. This announcement was made by Pope Emeritus, Benedict XVI on February 11th, 2013. But, on the same day he had also announced his decision to step down from his leadership role. Hence, the whole world was caught up with that news and the ‘new saints’ were almost forgotten. Of these new Saints, more than 800 of them are lay persons, martyrs from Italy killed by the Ottoman soldiers for refusing to convert to Islam. (More on the new Saints… at the end!)
This Sunday – the second Sunday of May – is celebrated as Mother’s Day in more than 80 countries around the world. On May 13th, Monday, we celebrate the Feast of Our Lady of Fatima. I would like to confine my reflections mainly to Mother’s Day and add a tail-piece on Our Lady of Fatima.

Mother’s Day… Is it Mothers’ Day - Plural? Or Mother’s Day - Singular? Anna Jarvis, the lady who popularised this day in the U.S., answers this question. Here is an extract from Wikipedia:
In 1912, Anna Jarvis trademarked the phrases "second Sunday in May" and "Mother's Day", and created the Mother's Day International Association. "She was specific about the location of the apostrophe; it was to be a singular possessive, for each family to honour their mother, not a plural possessive commemorating all mothers in the world."
We are not celebrating ‘Mother’ as a concept, but Mother as a concrete person – Mom – in our personal lives. We are thankful to Anna Jarvis for her efforts to popularise this lovely day. Unfortunately, Anna was appalled by the way this day was commercialised in a few years. This day, sadly, has been hijacked by the commercial world very much. We need to redeem this day as well as the concept of ‘mother’ from the clutches of the market people!

Reading through quite a few vignettes on the evolution of this day, I was very impressed with the "Mother's Day Proclamation" by Julia Ward Howe… once again, from the Wikipedia:
The "Mother's Day Proclamation" by Julia Ward Howe was one of the early calls to celebrate Mother's Day in the United States. Written in 1870, Howe's Mother's Day Proclamation was a pacifist reaction to the carnage of the American Civil War and the Franco-Prussian War. The Proclamation was tied to Howe's feminist belief that women had a responsibility to shape their societies at the political level.

Mother's Day Proclamation
Arise, then, women of this day!
Arise, all women who have hearts,
Whether our baptism be of water or of tears!
Say firmly:
"We will not have great questions decided by irrelevant agencies,
Our husbands will not come to us, reeking with carnage, for caresses and applause.
Our sons shall not be taken from us to unlearn
All that we have been able to teach them of charity, mercy and patience.
We, the women of one country, will be too tender of those of another country
To allow our sons to be trained to injure theirs."
From the bosom of the devastated Earth a voice goes up with our own.
It says: "Disarm! Disarm! The sword of murder is not the balance of justice."
Blood does not wipe out dishonor, nor violence indicate possession.
As men have often forsaken the plough and the anvil at the summons of war,
Let women now leave all that may be left of home for a great and earnest day of counsel.
Let them meet first, as women, to bewail and commemorate the dead.
Let them solemnly take counsel with each other as to the means
Whereby the great human family can live in peace,
Each bearing after his own time the sacred impress, not of Caesar,
But of God…
This poem, as we see, was written in the context of a war. Our world is constantly at war and hence this poem seems to have an everlasting appeal.

Mother’s Day also brings to mind the ‘Mothering Sunday’ that was in vogue in England. This Sunday, the second Sunday in May, has been officially designated as "Mother's Day" since May 9, 1914. But in England as far back as the 1600's there has been a tradition of a "Mothering Sunday." Originally born out of the Catholic celebrations of Mary, the Mother of Christ, the English "Mothering Sunday" allowed poor women who worked and lived as servants in wealthy households a day off to return home and be with their own families. (Leonard Sweet)

The idea of allowing the poor domestic female employees of rich families to return home to their own kids for a day and call it ‘Mothering Sunday’ sounds atrocious. But, the same stories of agony continue today. How many women have to leave their families and children, even leave their country, in order to take care of the kids of rich families? Or, slog in ‘alien soil’ to keep the family from starving? How many mothers are still being ‘used’ as machines both at home and in the work place?
The recent tragedy in Dhaka, Bangladesh is ONCE AGAIN a wake up call for all of us to think… Think of how multi-national companies exploit cheap labour in the so called ‘third world’. Most of these cheap labourers are women. Most of the 1000 plus persons killed in the building collapse in Dhaka on April 24th, are young ladies… young mothers.
The extent of exploitation is clear when one thinks of the ‘economics’ of the garments manufactured in those buildings. It is said that the price of a piece of garment that goes out of those buildings is generally 3 to 4 dollars. But, when they reach the fancy malls, they are sold with a price tag of 30 to 40 dollars. What is more painful is the fact that the women who work in these garment factories are paid only 38 dollars per month… less than the price of one piece of the garments they had made!
Let the death of these young ladies of Bangladesh, sacrificed brutally on the altar of greed, not go in vain. On this Mother’s Day, we salute these ladies as well as millions of other ladies without whose labour this world would come to a stand still!  

One line in the ‘Mother’s Day Proclamation’ caught my special attention:
“Let them solemnly take counsel with each other as to the means
Whereby the great human family can live in peace,
Each bearing after his own time the sacred impress, not of Caesar,
But of God.”
Imprinting the image of Caesar or God on this world… on each individual? A challenge worth considering. The image of Caesar, symbolising political and financial power, has made the world a battlefield all the time. As against this, Julia’s poem talks of imprinting the image of God which symbolises peace and love.
Mary, the Mother of Christ, constantly imprints God’s image on this world not only during her life time, but also after her return to heaven. Through her apparitions in different places in different decades, her only aim was to imprint the image of God more and more on the world. Especially, during the apparitions of in Fatima, Mary had revealed about the devastations of war and the need to pray for peace.

On this special day – Mother’s Day – we shall celebrate our own Moms. We shall celebrate God the Mother. We also celebrate maternal instincts planted in each of us. Only with motherly care can we impress God on the world. Only with motherly care can we sustain this world in peace!
-------------------------------------------------------------------------------------------
Additional information on the Canonisation on May 12, 2013:
In his first canonisation ceremony, Pope Francis will raise to the altars an estimated 800 Italian laymen martyrs killed by Ottoman soldiers in the 15th century. Many of the martyrs’ skulls adorn the walls of the sanctuary in the cathedral at Otranto, a small port town at the eastern tip of southern Italy, where the massacre took place in 1480. The announcement of the May 12 canonisation was made by Emeritus Pope Benedict XVI on February 11, but the news was overshadowed by the announcement of his resignation on the same day.
When the residents of Otranto refused to surrender to the Muslim army after a weeklong siege of their town, the soldiers were ordered to kill all males over the age of 15. Many were given the option of converting to Islam instead, but Blessed Antonio Primaldo, a tailor, spoke on the prisoners’ behalf. “We believe in Jesus Christ, Son of God, and for Jesus Christ we are ready to die,” he said, according to Blessed John Paul II, who visited Otranto in 1980 for the 500th anniversary of the martyrs’ deaths.
In 1771, the Church recognised the validity of the local veneration of Primaldo and his companions and allowed them to be called Blessed. In 2007, Pope Benedict formally recognised their martyrdom and in 2012 he recognised a miracle attributed to their intercession. Although martyrs do not need a miracle in order to be beatified, a miracle must be recognised before they can be pronounced saints.
The second canonization is of Mother Laura Montoya Upegui from Colombia. Mother Laura (1874-1949) is the founder (1914) of the Congregation of the Missionaries of Mary Immaculate and St. Catherine of Siena. The Order has branches in many countries in Central and South America, the Caribbean, Italy and Angola. Mother Laura is now recognized as the first saint of Colombia after she was beatified in 2004 by Pope John Paul II.
Maria Guadalupe Garcia Zavala (1878-1963) is also raised to the altars on May 12. The Mexican nun is known as Mother Lupita. In 1901 she founded the Congregation of the Servants of Saint Margaret Mary and the Poor. (SSMMP). The Order has some 150 sisters and is active  in Mexico, Peru, Greece, Iceland and Italy in ministry to the poor. Mother Lupita was beatified in 2004 by Pope John Paul II.


Raised-by-a-queen

இன்று அன்னை தினம். உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறன்று அன்னை தினம் கொண்டாடப்படுகிறது. கத்தோலிக்கத் திருஅவையில், இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த ஞாயிறன்று, 800க்கும் அதிகமானோரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்துகிறார். நாளை, மே 13ம் தேதி, திங்களன்று பாத்திமா நகர் புனித அன்னை மரியாவின் திருநாளையும் கொண்டாடவிருக்கிறோம்.
ஒவ்வொரு விழாவும் கொண்டாட்டங்களைக் கொணர்ந்தாலும், கூடவே ஒரு சில கேள்விகளையும் கொணர்கின்றன. இவ்விழாக்களின் வரலாற்றுப் பின்னணிகளுடன், இக்கேள்விகளுக்கு ஓரளவு தெளிவான விடைகளைத் தேடினால், இவ்விழாக்களை இன்னும் பொருளுள்ள வகையில் கொண்டாடமுடியும்.

அன்னை தினத்தில் நம் கேள்விகளை ஆரம்பிக்கிறோம்... இந்த நாளை அன்னை தினம் என்று ஒருமையில் அழைப்பதா? அன்னையர் தினம் என்று பன்மையில் அழைப்பதா? என்ற கேள்வி எழலாம். அமெரிக்காவில் இத்தினத்தை அதிகாரப் பூர்வமான ஒரு நாளாக அரசு அறிவிக்க வேண்டுமென்று பல வழிகளிலும் பாடுபட்ட Anna Jarvis என்பவர் இக்கேள்விக்குச் சரியான விடை அளிக்கிறார்:
"இது அன்னை தினம்தான். அன்னையர் தினம் அல்ல. நம் ஒவ்வொருவரின் அன்னையைத் தனிப்பட்ட வகையில் சிந்தித்து, அவருக்கு நாம் செலுத்தும் காணிக்கை, இந்த நாள். அன்னையர் என்ற பன்மை வடிவம் கொடுத்து, முகமற்ற ஒரு கருத்தைக் கொண்டாடும் நாள் இதுவல்ல." என்று அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
Anna Jarvis பாடுபட்டு உருவாக்கிய இந்த நாள், சில ஆண்டுகளிலேயே வியாபார மயமாகிவிட்டதைக் கண்டு அவர் மிகவும் மனம் நொந்தார். வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துகள், இனிப்பு வகைகள் என்று அன்னை தினம், வியாபாரத் திருநாளாக மாறிவிட்டதை நாம் மறுக்க முடியாது. இந்த வியாபாரப் பிடியிலிருந்து அன்னை தினத்தை விடுதலை செய்து, நம் ஒவ்வொருவரின் அன்னைக்கும் உரிய மதிப்பை வழங்குவது நம் கடமை!

அம்மாவை, அன்னையை, தாயை மையப்படுத்திய வழிபாடுகளும், விழாக்களும் மனித வரலாற்றில் பல பழமைக் கலாச்சாரங்களில் மதிப்புடன் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணம் 19ம் நூற்றாண்டில் ஆரம்பமானது. சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe 1870ம் ஆண்டு சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். "அன்னைதின அறைகூவல்" (Mother's Day Proclamation) என்ற பெயரில் வெளியான இந்தக் கவிதை உலகெங்கும் அன்னை தினத்தைக் கொண்டாடுவதற்கு வித்திட்டது. இக்கவிதை விவரிக்கும் பெண்மை, தாய்மைப் பண்புகள் நமது இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பாடங்களைச் சொல்கிறது. இதோ அக்கவிதை:
மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே எதிர்த்து நில்லுங்கள்!
உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.
உறுதியாகச் சொல்லுங்கள்:
வாழ்வின் மிக முக்கியக் கேள்விகளின் விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.
சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் எங்கள் ஆரவார வரவேற்பையும், அரவணைப்பையும் பெறுவதற்கு நாங்கள் இணங்கமாட்டோம்.
பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித்தரும் நிறுவனங்களிடம் எங்கள் குழந்தைகளை ஒப்படைக்க மாட்டோம்.
ஒரு நாட்டின் பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டின் பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள் அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.

நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம் எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள் ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.
போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச் சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும்..
உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.
தாய், அல்லது அன்னை என்றதும் வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக் கிடக்கும் பெண்ணாக அவர்களை எண்ணிப்பார்த்த காலத்தைக் கடந்து, சமுதாயத்தில் நல்ல முடிவுகளை எடுக்க, பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்களது மென்மை கலந்த உறுதி உலகின் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகளை உருவாக்கும் என்று 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்கவிதை முழங்குகிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இக்கவிதை எழுதப்பட்டது. அப்போரின் விளைவுகளைக் கண்ட Julia Ward Howe எழுதிய இவ்வரிகள், இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள அவலங்களைக் களையும் உறுதியைத் தருகின்றன.

அன்னை தினத்திற்குக் கூறப்படும் மற்றொரு பின்னணியும் நம் கவனத்தை ஈர்க்கின்றது. Leonard Sweet என்பவர் தன் மறையுரையில் இந்தப் பின்னணியைப் பற்றிக் கூறுகிறார். இங்கிலாந்தில் 'Mothering Sunday' என்ற பழக்கம் 16ம் நூற்றாண்டிலேயே இருந்தது. மே மாதம் மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்பது கத்தோலிக்க பரம்பரையில் வளர்ந்துள்ள ஓர் எண்ணம். அந்த மே மாதத்தின் ஒரு ஞாயிறு மரியன்னையின் நினைவாக 'Mothering Sunday' என்று அழைக்கப்பட்டது.
16ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பல செல்வந்தர்களின் இல்லங்களில் பெண்கள் இரவும் பகலும் பணி செய்து வந்தனர். அவர்களுக்கு விடுமுறை நாள் என்பதெல்லாம் கிடையாது. தங்கள் இல்லங்களுக்குச் சென்று தங்கள் குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்யும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடையாது. எனவே, மே மாதத்தின் ஒரு ஞாயிறன்று இந்தப் பணிப்பெண்கள் தங்கள் குடும்பங்களுக்குச் சென்று, தங்கள் குழந்தைகளுடன் அந்த நாளைச் செலவிட விடுமுறை வழங்கப்பட்டது. அந்த நாளுக்கு 'Mothering Sunday' அதாவது 'அன்னையாகும் ஞாயிறு' என்றும் பெயர் சூட்டப்பட்டது.

16ம் நூற்றாண்டில் நிலவிய இந்தச் சூழல் மனதை உறுத்துகிறது. செல்வந்தர் வீட்டு வேலைகளில் ஆண்டு முழுவதும் துன்பப்படும் பெண்களுக்கு ஒரு ஞாயிறை விடுமுறையாகத் தந்து 'அன்னையாகும் ஞாயிறு' என்று அழைப்பதை அநீதி என்று மனம் சொல்கிறது. ஆயினும், இப்படிப்பட்ட ஓர் எண்ணமாவது இருந்ததே என்று நமக்கே நாம் ஓரளவு சமாதனம் சொல்லிக் கொள்ளலாம். 16ம் நூற்றாண்டில் நிலவிய இதே நிலை இன்றும் தொடர்வதை நாம் அறிவோம். வறுமையின்  காரணமாகக் குடும்பங்களை, குழந்தைகளைப் பிரிந்து வேறு இல்லங்களில், வேற்று நாடுகளில் பணி செய்யும் அன்னையர் பல கோடி பேர் உள்ளனர். அவர்களை இன்று சிறப்பாக எண்ணி நம் செபங்களை எழுப்புவோம். பொருளாதார நிர்ப்பந்தங்களால் தங்கள் தாய்மை நிலைக்குரிய உணர்வுகளைப் புதைத்துவிட்டு பரிதவிக்கும் இவர்களுக்கு விரைவில் ஒரு விடிவு கிடைக்கவேண்டும் என்று சிறப்பாக செபிப்போம்.

பல்வேறு கட்டாயங்களால் பணிசெய்யும் பெண்கள் என்று எண்ணிப்பார்க்கும்போது, நமது மனம் பங்களாதேஷில் Rana Plaza என்ற 8 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தை எண்ணிப் பார்க்கிறது. ஏப்ரல் 24ம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள். அவர்களில் பலர் இளம் அன்னையர். ஆடைகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்காக அடிமைகளாக உழைத்தவர்கள் இப்பெண்கள். இந்த விபத்து நிகழ்ந்து 17 நாட்கள் சென்று மே 10ம் தேதி, Reshma என்ற ஒரு பெண் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். இவரைப் போல் இன்னும் பலர் உயிரோடு மீட்கப்படலாம் என்ற நம்பிக்கை அங்கு உருவாகியுள்ளது. இருப்பினும், இந்த விபத்தினால் மனித சமுதாயம் இழந்ததுதான் அதிகம்.
பன்னாட்டு ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களுக்காக பங்களாதேஷ் நாட்டில் உற்பத்தியாகும் ஆடைகள் அந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும்போது அதன் விலை 3 அல்லது 4 டாலர்கள். அவை விற்பனையாகும்போது அதன் விலை 30 அல்லது 40 டாலர்கள். ஓர் ஆடையின் விற்பனை விலை கூட இப்பெண்களுக்கு மாத சம்பளமாகக் கிடைப்பதில்லை. அவர்கள் பெறும் சராசரி மாத சம்பளம் (இதை அடிமைகளின் கூலி என்றே சொல்லவேண்டும்) 38 டாலர்கள்.
ஆடைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் பேராசைக்கும், இந்நிறுவனங்களை எதிர்த்து நிற்கத் துணியாத அரசுகளின் கோழைத்தனத்திற்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வழிகளில் பலியாகும் பெண்களை இறைவன் சன்னிதிக்குக் கொணர்வோம். தங்கள் உயிர்பலி மூலம் பங்களாதேஷ் பெண்கள் நமக்கு அறிவுறுத்தும், நினைவுறுத்தும் பாடங்களை நாம் ஒவ்வொருவரும் பயில இறைவனின் அறிவொளியைத் தேடுவோம்.

Julia Ward Howe 1870ம் ஆண்டு எழுதிய கவிதையின் இறுதி வரிகள் இன்று நாம் கொண்டாடி மகிழும் அன்னை தினத்தையும், நாளை கொண்டாடவிருக்கும் பாத்திமா அன்னை திருநாளையும் இணைக்க உதவியாக உள்ளன.
உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.
உலகின் மேல் அதிகாரமான, ஆணவமான சீசரின் உருவம் பதியப் பதிய, மென்மேலும் போர்களாலும், வன்முறைகளாலும், வர்த்தக நிறுவனங்களின் பேராசைகளாலும் இந்த உலகம் சிதைந்து வருகிறது என்பதை நன்கு அறிவோம். சீசரின் உருவைப் பதிப்பதற்குப் பதிலாக, அன்பான, ஆறுதலான கடவுளின் உருவைப் பதிப்பது எப்படி என்பதை அன்னை மரியா தான் வாழ்ந்த காலத்தில் மட்டும் சொல்லித் தரவில்லை. அவர் விண்ணகம் சென்றபின்பும் பல இடங்களில் தோன்றி இந்தச் செய்தியைப் பகிர்ந்தார். சிறப்பாக பாத்திமா நகரில் அவர் தோன்றியபோது, உலகைச் சூழ்ந்திருந்த போரைக் குறித்தும், உலக அமைதிக்காக மக்கள் செபங்களை எழுப்ப வேண்டும் என்பது குறித்தும் சிறப்பான செய்திகளைக் கூறினார்.

பல்வேறு போர்களால், போராட்டங்களால் ஒரு சிலரது பேராசைகளால் தொடர்ந்து காயப்பட்டு வரும் நமது உலகிற்குத் தாய்மை, பெண்மை ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, இந்த அன்னை தினம், வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துக்கள் என்று வெறும் வியாபாரத் திருநாளாக மாறிவிடாமல், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக, அதன் வழியாக உலகில் நீதியும், அதன் அடிப்படையில் அமைதியும் வளர்வதற்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.
------------------------------------------------------------------------------------------
புதிய புனிதர்கள்...

Ottoman என்று அழைக்கப்பட்ட துருக்கிய பேரரசால் 1480ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி கொல்லப்பட்ட 800க்கும் அதிகமான இத்தாலியர்களை, மே மாதம் 12ம் தேதி, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர்களாக உயர்த்துகிறார். இத்தாலியின் தென் கோடியில் அமைந்துள்ள Otranto என்ற ஊரை, Ottomon படையினர் முற்றுகையிட்டனர். இருவாரங்கள் நீடித்த இந்த முற்றுகையின்போது, அவ்வூரில் இருந்த அனைவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தப்பட்டனர். உயிருக்குப் பயந்து, கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ஒரு குரு அவர்களுக்கு அறிவுரை கூறியும், அவ்வூர் மக்கள் மதம் மாற மறுத்தனர். எனவே, அவ்வூரில் இருந்த 15 வயதுக்கு மேற்பட்ட 800 ஆண்களை ஊருக்கருகே அமைந்திருந்த ஒரு சிறு குன்றுக்கு கொண்டு சென்றனர், படைவீரர்கள்.
மலையுச்சியில் அவர்களிடம் மதம் மாற இறுதி வாய்ப்பளிப்பதாகக் கூறிய படைவீரர்களிடம், Otranto நகரில் தையல் வேலை செய்துவந்த Antonio Primaldo என்பவர், "நாங்கள் இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம். அவருக்காக, இறக்கவும் தயாராக இருக்கிறோம்" என்று துணிவுடன் சொன்னார். அவர் காட்டிய துணிவு அங்கு நின்ற அனைவரிடமும் பரவியது. எனவே அவர்கள் அனைவரும் துணிவுடன் மரணத்தை எதிர் கொண்டனர்.
அன்று, அந்தக் குன்றின் மீது நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும் ஒரு மரபுவழி கதை உண்டு. அதாவது, அங்கிருந்தோர் அனைவரிலும், Antonio Primaldo அவர்களின் தலையே முதலில் வெட்டப்பட்டது. ஆனால், அவரது உடல் நிலத்தில் சாயாமல் நின்றது. வீரர்கள் அவ்வுடலைத் தள்ளியபோதும், அது அசையாமல் நின்றது. அங்கிருந்த அனைத்து கிறிஸ்தவர்களும் வெட்டி வீழ்த்தப்பட்ட பின்னர், இறுதியில் Antonio அவர்களின் உடல் தரையில் வீழ்ந்ததென்பது மரபுவழிக் கதை. இந்த மறைசாட்சிகள் அனைவரும் மே 12, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர்களாக உயர்த்தப்படுகின்றனர்.

இவர்களுடன், அருள் சகோதரிகளுக்கென இருவேறு துறவுச் சபைகளை உருவாக்கிய முத்திப்பேறு பெற்றவர்களான Laura di Santa Caterina da Siena அவர்களையும், Maria Guadalupe Garcia Zavala அவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர்களாக உயர்த்துகிறார்.
இந்தப் புனிதர் நிலை அறிவிப்புக்கள் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால், தான் தலைமைப் பதவியைத் துறக்கும் செய்தியையும் அதே நாளில் அவர் வெளியிட்டதால், இந்தப் புனிதர்கள் பற்றிய அறிவிப்புக்கள் அதிகமாய் நம் கவனத்தை ஈர்க்கவில்லை.


No comments:

Post a Comment