11 March, 2018

Rejoicing from within அகம் + மகிழ்தல்


For God So Loved The World

4th Sunday of Lent

On March 11, this Sunday, Pope Francis completes 60 years of religious life. On March 13, coming Tuesday, he will complete 5 years of service as the Bishop of Rome. As he celebrates his Diamond Jubilee as a Jesuit, and as he completes his service as the leader of the Catholic Church, we pray that the Good Shepherd guides him as his worthy Vicar on earth!

The 4th Sunday of Lent is celebrated as ‘Laetare Sunday’ – Rejoicing Sunday. Rejoicing is part and parcel of our lives. We have hundreds of reasons to rejoice. Surely one of them is when we experience forgiveness - giving and receiving. To celebrate this Rejoicing Sunday meaningfully, Pope Francis suggested a ‘feast of forgiveness’ in 2014.
“This coming Friday and Saturday will be a special penitential moment, called “24 hours for the Lord”. It will be a feast of forgiveness, which will take place simultaneously in many dioceses and parishes around the world. It will be a feast of forgiveness.” This was the invitation for the ‘Feast of Forgiveness’ extended to the whole world by Pope Francis, on March 23, 2014.
For the past four years we have been celebrating this ‘Feast of Forgiveness’ on the eve of the 4th Sunday of Lent. This year, on 9 and 10 of March, we celebrated the sacrament of reconciliation along with “24 hours for the Lord”.

True joy wells up from within when we experience the noble sentiments of forgiving and being forgiven. Reconciliation paves the way for true Rejoicing. This was evident in a news item that was published six years back in New York Times. What began as a glance over this news, turned into curiosity and led me towards some serious reflection. As I was reflecting on today’s Gospel, this news item, especially the picture (actually a video clipping) attached to it, was frequently flashing across my mind.
Let me share with you my thoughts on the picture as well as on the news feature. (The Vanishing Mind: Life, With Dementia - NYTimes, Feb.25,2012) Although this feature was about the problem of Alzheimer’s or Dementia in a prison in California, my attention was turned towards other factors related to this news.

First about the picture: This picture had a background – the high-rise wall, as found in any high-security prison. On the top of the wall ran a barbed wire. This barbed wire must have had a high-voltage electric current running through it 24x7. This ‘fortress’ was meant as a protection. ‘Protection’ for whom and against whom? Any child would answer this question saying that this ‘fortress’ was meant to protect the society from the criminals kept inside the walls. But, when I saw this picture, my mind thought otherwise… I thought that this wall was to protect the ‘inmates’ from the outside world. This reversal occurred to me because of what I saw in the foreground of this picture. In the foreground, there were two persons – one black and another white. The black person was about 50 years old and the white person was about 80. The black person had his hands wrapped around the shoulders of the white person and, possibly, was leading him somewhere. One can see the kindness in the eyes of the black person looking at the older white person.

The black person is Secel Montgomery Sr. In the video clipping, Sacel talks about how he killed his sister-in-law by stabbing her many times since she refused to give him money to buy drugs. Even in the prison his record had not been ‘clean’. Despite that, he has recently been entrusted with an extraordinary responsibility. He and other convicted killers at the California Men’s Colony help care for prisoners with Alzheimer’s disease and other types of dementia, assisting ailing inmates with the most intimate tasks: showering, shaving, applying deodorant, even changing adult diapers, says the feature.
If this experiment meets with even 50% of success, then, I feel that ‘salvation has come to California Men’s Colony’. “It’s a long road to recovery and I’m working on it…” are the closing words spoken by one of the prisoners in the video clipping. Isn’t this salvation? For this salvation to reach its fruition, these ‘inmates’ need to be shielded from the outside world… Now, tell me, whom should the high-rise wall protect?

Secondly, about the news-feature: The moment we think of prison cells, the first thoughts that crowd our minds are – crime, hatred, violence, abuse, punishment. I am of a firm opinion that punishment and imprisonment can only bring about minimal, temporary changes in a person. The real, lasting changes can come about only through love and kindness. We have heard of so many ‘so called criminals’, who have changed their entire life-style due to some kindness shown to them inside those hopeless cells.
Is there a place for kindness, compassion, and help in such a prison? You bet. I don’t think there is any place in the world so hopeless that can refuse entry to love and kindness. What is happening in California Men’s Colony is only the tip of the iceberg. All over the world, in so many millions of prison cells there is a chance, a place for love. Although this is not discussed in the feature, I can see how these little acts of love shown in those prison cells, bless those who give as well as those who receive.

Usually we are accustomed to seeing prisoners at the receiving end… of love and compassion from those who visit them. Sometimes these external helpers may tend to ‘preach’ to those who are inside. At such moments, we are aware what these ‘insiders’ would say: “It is easy for you to say these things… If you were in my place, then you would know!” An ‘outsider’ cannot bring significant changes on these ‘insiders’. What is the other alternative?
Real, lasting help can come from someone who is one among them. Imagine that a blameless person, wanting to help the prisoners, gets himself imprisoned; becomes one of the prisoners and then, from within, begins to change them… This help would be more acceptable than the help given by an ‘outsider’. But, is this possible in real-life? I don’t know. But, it has happened in other situations as in the case of St.Damien Joseph de Veuster of Moloka'i. He had worked for the leprosy (Hansen's disease) patients in Hawaii; was affected by the disease himself and died at the age of 49. His self-identification with the leprosy patients was total and complete. I am sure St.Damien must have got his inspiration for total identification and total immersion from Jesus’ Incarnation.

This total immersion, identification and Incarnation is spoken of in today’s Gospel in one of the most famous verses in the Bible: God so loved the world that he gave his only Son, that whoever believes in him should not perish but have eternal life. (John 3: 16)
John 3:16 is probably the best loved verse in the Bible and it has been called "everybody's text" and the “gospel of the gospels”… This text is the very essence of the gospel. It tells us that the initiative in salvation is God’s love for man. As St. Augustine puts it: "God loves each one of us as if there were only one of us to love."

We have heard hundreds, perhaps thousands of love stories or stories of love. Most of these stories are just one frame from a full-length movie called life. What is happening in California prison day after day may not be ‘news-worthy’ on a daily basis. Similarly what is happening in our ordinary, day to day life is also a love story which may not get media attention.
As we are meditating on ‘God-so-loved-the-world’, we shall set aside some moments today and in the coming days during this Lenten Season to think of the continuous, but unrecognised love stories we experience in our own families. I know of families where the parent, the life-partner, a sibling is taking care of persons who cannot take care of themselves. This is not just a one-day, one month love-affair…But a year-long affair… for ten, twenty, thirty, forty and more years… Let us salute these silent stalwarts of true love and dedication who will not adorn any history book.

As we are reflecting on love, we cannot but think of the twisted, topsy-turvy definitions and images created around the word ‘love’. This misleading trend, prevalent in the world, is compared to getting cosy with darkness. We hear Jesus talking about this in the second half of today’s gospel: “The light has come into the world, and men loved darkness rather than light, because their deeds were evil. For every one who does evil hates the light, and does not come to the light, lest his deeds should be exposed.” (John 3: 19-20)

There is a funny story to drive home the point how darkness can become so ‘comfortable’ to us that we are willing to stay in the dark: We act like the desert nomad in the story who woke up hungry in the middle of the night. He lit a candle and began eating dates from a bowl beside his bed. He took a bite from one and saw a worm in it; so he threw it out of the tent. He bit into the second date, found another worm, and threw it away also. Reasoning that he wouldn't have any dates left to eat if he continued to look for worms, he blew out the candle and quickly ate the rest of the dates!

Putting out the light of true conscience, we can swallow worm-infested ideas and still feel comfortable… Or, we can enjoy the light as per the invitation of Jesus in the last line of today’s Gospel: But he who does what is true comes to the light, that it may be clearly seen that his deeds have been wrought in God. (John 2:21)
On March 9, Friday, “A Wrinkle in Time”, a science fantasy film was released. The trailer of this movie has the following line: “The only way to defeat the darkness is to become the light.” This statement brings to mind the famous line used by Amnesty International: “It's better to light a candle than to curse the darkness.”
Are we willing to come to the light that is Christ, in order to become the light of the world? Are we willing to light a candle, become a candle to dispel the darkness? Or, are we comfortable staying in despair and cursing the darkness that surrounds us?

Better to light one small candle...


Dementia Behind Bars

தவக்காலம் 4ம் ஞாயிறு

மார்ச் 11, இஞ்ஞாயிறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் துறவற வாழ்வில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மார்ச் 13, வருகிற செவ்வாயன்று, அவர், திருஅவைத் தலைவராகப் பொறுப்பேற்று, ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இயேசு சபைத் துறவியாக, வைர விழாவையும், திருஅவையின் தலைவராக ஐந்து ஆண்டு பணிவாழ்வையும் கொண்டாடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்க மன்றாடுவோம்.

தவக்காலத்தின் 4ம் ஞாயிறை, 'அகமகிழ்தல்' ஞாயிறெனக் கொண்டாடுகிறோம். எருசலேமுடன் இணைந்து அகமகிழவும், அக்களிக்கவும் நம்மை அழைக்கும் இன்றையத் திருப்பலியின் வருகைப் பல்லவியிலிருந்து (எசாயா 66:10), இந்த ஞாயிறு, 'அகமகிழ்தல்' ஞாயிறு என்ற பெயரைப் பெற்றுள்ளது.
அகமகிழ்தல், (அகம் + மகிழ்தல்) அல்லது, அக்களித்தல் (அகம் + களித்தல்) என்ற இரு சொற்களிலும், 'அகம்' என்ற சொல் முக்கியமானது. நமது அகம், அதாவது, நமது உள்ளம், நிறைவடையும்போது உருவாவதே, உண்மையான மகிழ்வு. இதற்கு மாறாக, உள்ளத்தில் வெற்றிடம், வெறுப்பு, வேதனை, ஆகியவை நிறைந்திருக்கும்போது, வெளிப்புறமாக சிரித்து, குதித்து, கும்மாளமிட்டு மகிழ்வை வெளிப்படுத்துவது, போலியான மகிழ்வாக அமையும். தவக்காலத்தில், மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய அனுபவங்களால், நமது உள்ளங்கள் நிறைவடையும்போது உருவாகும் உண்மையான மகிழ்வைக் கொண்டாட, திருஅவை இன்று நம்மை அழைக்கிறது. இந்த மகிழ்வின் சில அம்சங்களைப் புரிந்துகொள்ள, நாம் ஒரு சிறைச்சாலைக்குச் செல்வோம்.

சில ஆண்டுகளுக்கு முன், 'நியூ யார்க் டைம்ஸ்' செய்தித்தாளில் ஒரு சிறைச்சாலையை மையப்படுத்தி வெளியான ஒரு செய்தி, உண்மையான மகிழ்வைப் புரிந்துகொள்ளவும், இன்றைய நற்செய்தி சொல்லும் உண்மைகளை உணர்ந்துகொள்ளவும் உதவியாக இருக்கும். அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு சிறைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மாற்று முயற்சியைப் பற்றிய செய்தி அது. (The Vanishing Mind - Life, With Dementia: NYTimes, Feb.25,2012) அச்செய்தியுடன் இணைக்கப்பட்டிருந்த புகைப்படம், முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது. சிறைக்கூடங்களுக்கே உரிய மிக உயர்ந்த சுவர்களும், அச்சுவர்களின் மேல்மட்டத்தில் முள்கம்பி வலைகளும் அந்தப் புகைப்படத்தின், பின்னணியாக அமைந்தன. அந்த முள்கம்பி வலைகளில் 24 மணி நேரமும் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தப் 'பாதுகாப்பு'ச் சுவர் பின்னணியில் இருக்க, முன்னணியில் நாம் காண்பது இதுதான்... ஒரு கறுப்பின மனிதர், வயது முதிர்ந்த வெள்ளை இன மனிதர் ஒருவரின் தோள்மீது ஆதரவாய் கரம்வைத்திருப்பதைப் போல் அப்படம் எடுக்கப்பட்டிருந்தது. கறுப்பினத்தவருக்கு 50 வயதிருக்கலாம். வெள்ளை இனத்தவருக்கு, 80 வயதிருக்கலாம். கறுப்பின மனிதரான Sacel Montgomery அவர்களின் கண்களில் வெளிப்பட்ட கனிவு, அந்தப் புகைப்படத்தில் அழகாகப் பதிவாகியிருந்தது.

கலிபோர்னியாவில் உள்ள அந்த கடுங்காவல் சிறைக்கூடத்தில் உள்ளவர்கள் அனைவரும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை அனுபவிப்பவர்கள். அவர்களில் ஒருவரான Sacel அவர்கள், ஒரு பெண்ணை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்தவர். 25 ஆண்டுகளாக அந்தச் சிறையில் இருக்கிறார். சிறையிலும், பலமுறை, காவல் துறையினரோடும், மற்ற கைதிகளுடனும் கைகலப்பில் ஈடுபட்டவர்.
2012ம் ஆண்டின் துவக்கத்தில், சிறை அதிகாரிகள் Sacel அவர்களிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்தனர். அவருக்கு மட்டுமல்ல... சிறையில், நல்ல உடல் நிலையில் இருந்த பலருக்கும் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதே சிறையில், பல ஆண்டுகளாக அடைபட்டிருக்கும் ஒரு சில கைதிகள், Alzheimer's எனப்படும் நினைவுமறதி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் பொறுப்பு, Sacel அவர்களுக்கும், மற்ற கைதிகளுக்கும் கொடுக்கப்பட்டது. நோயுற்ற இந்த கைதிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், காலை முதல் மாலை வரை, இவர்கள் செய்தனர். உணவூட்டுதல், குளிப்பாட்டுதல், சக்கர நாற்காலியில் வைத்து அவர்களைத் தள்ளிச் செல்லுதல் என, பல உதவிகளை இவர்கள் செய்தனர். இந்தப் பணிகளால், சிறைக் கைதிகள் மத்தியில் உருவான தோழமை, அந்தச் சிறைக்கூடத்தில் வெளிப்பட்ட மகிழ்வு, அமைதி இவற்றைப்பற்றி அந்தச் செய்தி விளக்கமாகக் கூறியது.

சிறைக்கூடங்கள் என்றதுமே, குற்றம், தண்டனை, வெறுப்பு, கொடுமை, என்ற முற்சார்பு எண்ணங்களே (Prejudice) நம் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும். சிறைக்குள்ளும் கனிவு இருக்குமா? நிச்சயம் இருக்கிறது. கனிவு, பாசம், பரிவு, அன்பு என்ற உன்னத உணர்வுகள் நுழைய முடியாத இடங்கள் இருக்கவே முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். கலிபோர்னியா சிறையில் நடப்பது, உலகின் பல சிறைகளில் நடைபெறுகின்றது. ஆனால், சிறைகளில் நடக்கும் கலவரங்களை, கொலைகளை தலைப்புச் செய்திகளாகத் தரும் நமது ஊடகங்கள், இத்தகைய நற்செய்திகளை நமக்குச் சொல்வது, மிக, மிக அபூர்வம்.

கலிபோர்னியா சிறையில் நிகழ்ந்துவரும் மாற்றம், இன்றைய நற்செய்திக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. குற்றம் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள், அவர்களது வாழ்வில், தற்காலிகமான, மேலோட்டமான, மாற்றங்களை உருவாக்கலாம். ஆனால், சிறைக்கூடங்களில் பரிவும், பாசமும், வெளிப்படும்போது, அவை, குற்றவாளிகளில், நிரந்தரமான மாற்றங்களை உருவாக்கி, அவர்கள் மீண்டும் மனிதர்களாக வாழ வைத்துள்ளன என்பதை நாம் அறிவோம். இதுவே, அவர்கள் அடையும் மீட்பென நாம் கருதலாம்.

மீட்பு என்றதும், சட்டப்படி, தண்டனையிலிருந்து தப்பிப்பதை மட்டும் சொல்லவில்லை. சிலசமயங்களில், சிறையிலிருந்து விடுதலை கிடைக்காவிட்டாலும், சிறைக்குள்ளேயே அவர்கள் வாழ்வு பெருமளவு மாறியுள்ள உண்மைகளும் நாம் அறிந்ததே. இந்த வாழ்வு மாற்றம் அவர்களுக்குள்ளிருந்து வரலாம். அல்லது, வெளியிலிருந்து வரலாம். வெளியிலிருந்து, பார்வையாளர்களாக, அல்லது ஆலோசனை வழங்குபவர்களாகச் செல்வோர், பல்வேறு எண்ணங்களைச் சொல்லும்போது, சிறைக்குள் இருப்பவர்கள், "வெளியில இருந்துகிட்டு இப்படி பேசுறது ஈசிங்க... நாங்க இருக்கிற நிலையில நீங்க இருந்து பாருங்க, அப்பத் தெரியும் எங்கப் பிரச்சனை, போராட்டம் எல்லாம்" என்று சொல்லும் பதிலையும் நாம் கேட்டிருக்கிறோம்.

வெளியிலிருந்து வரும் போதனைகளால் பயனில்லை எனில், வேறு வழி என்ன? மற்றொரு வழியை நாம் இவ்வாறு கற்பனை செய்து பார்க்கலாம். குற்றமற்ற ஒருவர், சிறைப்பட்டோரைத் திருத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், அவர்கள் மத்தியில் தானும் ஒரு கைதியாக வாழ முன்வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் ஒருவராகவே மாறிவிட்ட அவர், கைதிகள் மீது அன்பும், பாசமும் காட்டி, அவர்களை நல்வழிப்படுத்த முடியும். இதை நாம் கற்பனையாக எண்ணிப் பார்க்கலாம். நடைமுறையில், சட்ட வழிமுறையில், இது சாத்தியமா என்று தெரியவில்லை.

இதையொத்த ஓர் உண்மை, நம் மீட்பு வரலாற்றில் சாத்தியமானது. பாவங்களால் சிறைப்பட்ட உலகை மீட்பது எப்படி என்று கேள்வியும், பரிதவிப்பும் எழுந்தபோது, இறைவன் அதற்கு விடை பகர்ந்தார். மனிதரின் மீட்பு மனிதரிடமிருந்தே வரவேண்டும் என்று தீர்மானித்தார். தன் மகனை, மனிதரில் ஒருவராக அனுப்பிவைத்தார். இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு விவிலிய வாக்கியம், இன்று, நமது நற்செய்தியில் பறைசாற்றப்பட்டுள்ளது. தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.(யோவான் 3: 16)

விவிலிய வாக்கியங்கள், குறிப்பாக, நான்கு நற்செய்திகளின் வாக்கியங்கள் பல, மேற்கோள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாக்கியங்களிலேயே மிக அதிக அளவில் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு வாக்கியம் உள்ளது  என்றால், அது நாம் இப்போது வாசித்த இறைவாக்கியம் - யோவான் 3:16 - என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த வாக்கியம் "நற்செய்திகளின் நற்செய்தி" (Gospel of the gospels) என்று சொல்லப்படுகிறது. அன்பின் ஆழத்தைச் சொல்லும் ஓர் இலக்கணம் இது.

அன்பின் ஆழத்தைக் கூறும் பல நூறு கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்தக் கதைகளில் சொல்லப்படுவதெல்லாம் ஒரு சில நாட்களில், மணித்துளிகளில் காட்டப்படும் ஆழமான அன்பு உணர்வுகள். இந்த உணர்வுகள் உண்மையானவை, உன்னதமானவைதான். ஆனால், கலிபோர்னியா சிறையில், ஒவ்வொரு நாளும், திரும்பத் திரும்ப நிகழும் அன்புச் செயல்கள், கதைகளாக வெளிவருவதில்லை. அதேபோல், அன்பை வெளிப்படுத்தும் எத்தனையோ நிகழ்வுகள், நம் தனிப்பட்ட வாழ்விலும், நம் குடும்பங்களிலும், ஒவ்வொரு நாளும், நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இவை, கதைகளாக வெளிவருவதில்லை.

'அகமகிழ்தல்' ஞாயிறன்று, நேரம் ஒதுக்கி, நமது குடும்பங்களில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அசைபோடுவோம். ஒவ்வொரு நாளும் நடக்கும் இந்தச் சின்னச் சின்ன நிகழ்வுகளில் சொல்லாமல் சொல்லப்படும் உன்னத அன்பு உணர்வுகளை இன்று அசைபோடுவோம்.

பல குடும்பங்களில், உடல்நலம், மனநலம் குன்றிய குழந்தைகள், வாழ்க்கைத் துணை, பெற்றோர் என்று, எத்தனையோ பேருக்கு, ஒவ்வொரு நாளும், தாய், தந்தை, கணவன், மனைவி, உடன்பிறந்தோர் என்று, ஒவ்வொருவரும் செய்யும் சேவைகள் அற்புதமானவை. அவற்றை, சேவைகள் என்று கூட அவர்கள் கருதுவதில்லை, கூறுவதில்லை. இந்த உன்னதமான உண்மை நிகழ்வுகள், எந்தப் பத்திரிக்கையிலும், புத்தகத்திலும் வெளியாவதில்லை. பத்து, இருபது, முப்பது, நாற்பது என்று, பல ஆண்டுகள், ஒவ்வொரு நாளும் தொடரும் இந்த அன்புப் பணிகளை, கதைகளாக, ஒரு சில பக்கங்களில் சொல்லிவிடவும் முடியாது. வெளி உலகிற்கு தெரியாத வண்ணம், ஒவ்வொரு நாளும், அன்புப் பணியில் தங்களையே தகனமாக்கும் ஆயிரமாயிரம் அன்பு இதயங்களுக்காக, இறைவனிடம் இன்று சிறப்பாக நன்றி சொல்வோம்.

'அன்பு' என்ற இந்த உன்னதமான உண்மைக்கு, பல விபரீதமான இலக்கணங்களைப் புகட்டிவரும் உலகப் போக்கையும் இன்று சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. உண்மையான அன்பை, மகிழ்வை வெளிச்சத்திற்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தும் இருளைக் குறித்து இன்றைய நற்செய்தியின் பிற்பகுதி இவ்வாறு சொல்கிறது:
யோவான் 3: 19-20
ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்... தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.

இருளுக்கு அதிகம் பழகிவிட்டால், ஒளி நம்மைத் துன்புறுத்தும். வேதனையான இந்த உண்மையை, வேடிக்கையான முறையில் கூறும் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
பாலை நிலத்தைக் கடந்துகொண்டிருந்தார், ஒரு வழிபோக்கர். இரவாகிவிட்டதால், அங்கேயே கூடாரம் அடித்துத் தங்கினார். நள்ளிரவில், திடீரென, அவருக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. தன்னிடம், ஒரு சிறு மூட்டையில், அத்திப் பழங்கள் இருந்தன என்பது நினைவுக்கு வந்தது. எழுந்தார், விளக்கை ஏற்றினார், அத்திப்பழ மூட்டையை அவிழ்த்தார். முதல் பழத்தை எடுத்துக் கடித்தபோது, பழத்துக்குள் இருந்து புழு ஒன்று வந்ததைப் பார்த்தார். எனவே, அந்தப் பழத்தைத் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தைக் கடித்தார். அதற்குள்ளிருந்தும் புழு வந்ததைப் பார்த்தார். விளக்குக்கு அருகே கொண்டு சென்று ஆராய்ந்தார். புழு நன்றாகவேத் தெரிந்தது. அதையும் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தை எடுத்து விளக்கின் அருகே கொண்டு செல்லும்போதே உள்ளே புழு இருப்பது தெரிந்தது. இப்படியே ஆய்வு செய்துகொண்டிருந்தால், தான் சாப்பிட ஒரு பழமும் இருக்காது என்று அவர் உணர்ந்தார். உடனே அவருக்கு ஓர் எண்ணம் எழுந்தது. விளக்கை அணைத்து விட்டு, மீதிப் பழங்களை இருளில் சாப்பிட்டு முடித்தார்.

இந்தக் கதைக்கு பெரிய விளக்கங்கள் தேவையில்லை. மனசாட்சி என்ற விளக்கை அணைத்துவிட்டால், பூச்சியும், புழுவும் மண்டிக்கிடக்கும் நம் எண்ணங்களெல்லாம் சரியென்றே தோன்றும். நமது 'பசிகளும்' அடங்கிவிட்டதாகத் தோன்றும்.
இதற்கு நேர் மாறாக, உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள். (யோவான் 3: 21) என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஓர் அழைப்பை, இறைமகன் கிறிஸ்து நமக்கு விடுக்கிறார்.
மார்ச் 9, இவ்வெள்ளியன்று, "A Wrinkle in Time" என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியில் (Trailer) இடம்பெறும் ஓர் அழகிய வாக்கியம் இது: ஒளியாக மாறுவதே, இருளை வெல்வதற்கு ஒரே வழி. “The only way to defeat the darkness is to become the Light.”
கிறிஸ்து என்ற ஒளியை நெருங்கிச் செல்ல, அவரைப்போல் ஒளியாக மாற நமக்கு விடுக்கப்படும் அழைப்பை ஏற்போமா? அல்லது இருளில் நம்மேயே மறைத்துக்கொண்டு, சுகம் காண்போமா?


No comments:

Post a Comment