29 April, 2018

No pain… no gain வலியின்றி வெற்றியில்லை


Prayers of the People: Fruit of the Vine, Fifth Sunday of Easter

5th Sunday of Easter

There are seven occasions in John’s Gospel where Jesus has made the famous ‘I am’ statements. All these statements are self-defining lines, not as a person blowing one’s own trumpet, but as someone trying to dispel darkness and resolve doubts and debates.
“I am the bread of life; he who comes to me shall not hunger.” John 6:35
“I am the light of the world; he who fallows me shall not walk in the darkness, but shall have the light of life.” John 8:12  
“I am the gate; if anyone enters through me, he shall be saved, and shall go in and out, and find pasture.” John 10:9
“I am the good shepherd; the good shepherd lays down his life for his sheep.” John 10:11
“I am the resurrection and the life; he who believes in me shall live even if he dies.” John 11:25
“I am the way, and the truth, and the life; no one comes to the Father, but through me.” John 14:6
“I am the true vine, you are the branches.” John 15:5

There are quite many hymns composed on these ‘I am’ statements of Jesus. These statements have also been used as famous quotes inscribed on trophies and imprinted on clothing. As hymns and quotes these statements sound very solemn and grand. But, we need to look at the context in which these statements were made, in order to understand them better.
Last week we considered one of these ‘I am’ statements of Jesus, - “I am the good shepherd; the good shepherd lays down his life for his sheep.” (John 10:11) This statement of Jesus was given as a reply to the debate started by the religious authorities. The curing of the visually challenged person triggered a hot debate and the Pharisees branded Jesus as a sinner and as an agent of the devil. Jesus clarified his role as the good shepherd (John 10). It is also possible to interpret Jesus comparing himself to a Good Shepherd in order to save the person who was ‘cast out’ by the religious authorities. This could be seen as Jesus trying to help the person, healed of his physical blindness, not to be blinded in spirit, by the threats of the religious authorities. Similarly all the ‘I am’ statements of Jesus were statements of clarification and assurance in the midst of doubts and debates.

Life’s trials can either break us into pieces or make us stronger. During trials, our true convictions come to light. These moments, as it were, give us an opportunity to define and re-define ourselves better. We also admire those who, due to their self-assurance (and not fake arrogance), remain calm during trials. We see this happening in Jesus’ life over and over again.
While the first five ‘I am’ statements in the above list were spoken in public, the last two were part of the private farewell discourse of Jesus to his disciples. Today’s gospel is part of this farewell discourse during the Last Supper. The mood at the Last Supper must have been quite depressing. To add to this gloom, Jesus had predicted that one of them would betray him and another would deny him. In a close knit group, such as the one around Jesus, such predictions must have sounded very shocking.

To assure the disciples that pain is part of a fruitful life, Jesus speaks of the vine and the branches. All of us know that the best wine that comes from the best vineyard is the final result of patience and perseverance. The idea of God as the vinedresser, Jesus as the true vine and we as branches is very consoling. Jesus has not promised only gladness right through. He speaks of branches that would be cut off and also branches that would be pruned in order to yield better results. No one will be spared of pain. But, the end result will be excellent fruit! To produce an excellent bunch of grapes the vine and the branches will have to suffer pruning. To produce an excellent wine, the grapes will have to be crushed. No pain… no gain. But amidst all this, the promise is – the enduring presence of Jesus and the personal care of God, the vinedresser.

Most of our pains arise out of conflicts between two worlds that we live in. The first chapter of ‘Living a Life That Matters’ written by my favourite author Harold S.Kushner talks about these two worlds – the world of work and commerce as well as the world of faith. The world of work and commerce honours people for being attractive and productive. It reveres winners and scorns losers, as reflected in its treatment of devoted public servants who lose an election or in the billboard displayed at the Atlanta Olympic Games a few years ago: ‘You don’t win the silver medal, you lose the gold.’ As in many contests, there are many more losers than winners, so most of the citizens of that world spend a lot of time worrying that they don’t measure up.
But, fortunately, there is another world … the world of faith, the world of the spirit. Its heroes are models of compassion rather than competition. In that world, you win through sacrifice and self-restraint. You win by helping your neighbour and sharing with him rather than finding his weakness and defeating him. And in the world of the spirit, there are many more winners than losers. (Kushner)
Jesus, during the Last Supper was talking to a bunch of disciples who felt themselves to be losers. Jesus was trying to tell them that they would be productive as long as they remain with Jesus and submit to the ‘pruning’ of the Father.

‘Jesus nut’ or ‘Jesus pin’ is the main rotor retaining nut (MRRN) that holds the main rotor to the mast of some helicopters, such as the UH-1 Iroquois helicopter; or more generally is any component which represents a single point of failure with catastrophic consequences. The term ‘Jesus nut’ may have been coined by American soldiers in Vietnam; the Vietnam War was the first war to feature large numbers of soldiers riding in helicopters. If the Jesus pin were to fail in flight, the helicopter would detach from the rotors and the only thing left for the crew to do would be to "pray to Jesus." (Wikipedia)
If we, the branches, are attached to the vine, we shall bear abundant fruit. If ‘Jesus nut’ is attached to the helicopter called life, we can soar higher and higher. If we detach ourselves from ‘Jesus nut’ we have no other option but to crash!
We pray that the Good Shepherd, who is also the True Vine from which life flows, and the ‘nut’ that binds the rotor of our flight, may lead us to ‘greener pastures, more fruitful life and safer flight’!
---------------------------------------
P.S.: A closing thought on April 29… The Day of Remembrance for all Victims of Chemical Warfare is an annual event held on April 29 as a "tribute to the victims of chemical warfare, as well as to reaffirm the commitment of the Organization for the Prohibition of Chemical Weapons (OPCW) to the elimination of the threat of chemical weapons..." It is officially recognised by the United Nations (UN) and has been celebrated since 2005.
Our minds are filled with the news and pictures of the alleged ‘chemical warfare’ conducted in Syria. In this context, I would like to gratefully acknowledge a voluntary group called ‘The White Helmets’, doing a wonderful service to the victims of the Syrian war.
Here is an excerpt from Wikipedia: The White Helmets, is a volunteer organisation that operates in parts of rebel-controlled Syria and in Turkey. The majority of their activity in Syria consists of urban search and rescue in response to bombing, medical evacuation, evacuation of civilians from danger areas, and essential service delivery. As of April 2018, the organisation claims to have saved over 114,000 lives and to have lost the lives of 204 White Helmet volunteers in the process.
The organisation has been the target of a ‘disinformation’ campaign by supporters of Syrian President Bashar al-Assad, Russia-sponsored media organisations such as Russia Today (RT), and alt-right personalities, with false claims of close ties with terrorist activities and other conspiracy theories.

Who are the White Helmets? - YouTube

பாஸ்கா காலம் 5ம் ஞாயிறு

மரத்தில் இருந்த இலைக்கு 'போர்' அடித்தது. இன்னும் எத்தனை நாள் இந்த மரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பது என்ற சலிப்பு அதற்கு. வானில் சிறகடித்துப் பறந்த பறவைகளைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட்டது. இலையின் ஏக்கம், எரிச்சலாக மாறியது. இந்தப் பாழாய்போன மரத்திலிருந்து எப்போதுதான் எனக்கு விடுதலை கிடைக்குமோ என்று புலம்பித் தீர்த்தது.
இலை, ஏங்கிக் காத்திருந்த அந்த விடுதலை நாள் வந்தது, இலையுதிர் காலத்தில். மரத்திலிருந்து விடுதலை பெற்ற இலை, தன்னை இதுவரைத் தாங்கி, வளர்த்துவந்த மரத்திற்கு விடைகூடச் சொல்லாமல், வீசியத் தென்றலில் மிதந்து சென்றது. பறவையைப் போல தானும் பறக்க முடிகிறதே என்று இலைக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி, ஒரு சில நொடிகளே நீடித்தது.
உதிர்ந்த இலை, இறுதியில் தரையில் விழுந்தது. என்னதான் முயன்றாலும், அதனால் மீண்டும் பறக்க முடியவில்லை. தான் பறந்தபோது, தன்னைத் தாங்கியதுபோல் தெரிந்த காற்று, இப்போது, தன் மீது புழுதியை வாரி இறைத்தது. காய்ந்து விழுந்த மற்ற இலைகள் அதன் மீது விழுந்து மூடின. மனிதர்கள் அதனை மிதித்துச் சென்றனர். இலைக்கு மூச்சுத் திணறியது.
கண்களில் நீர் பொங்க, அண்ணாந்து பார்த்தது இலை. தான் வாழ்ந்த மரக்கிளையில் அசைந்தாடிய மற்ற இலைகள், தன்னைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதைப்போல் இருந்தது. "நான் அங்கேயே தங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்ற ஏக்கம் இலையைச் சூழ்ந்தது.

மரத்துடன் இணைந்திருக்கும் வரையில் இலைக்கு இன்பமான வாழ்வு. பிரிந்தால், தாழ்வு... மரணம். இதையொத்த கருத்தை இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகிறார் இயேசு:
நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. (யோவான் 15:5)

உவமைகளிலும், உருவகங்களிலும் பேசுவது, இயேசுவுக்குக் கைவந்த கலை என்று நமக்குத் தெரியும். நானே வாழ்வு தரும் உணவு, நானே உலகின் ஒளி, நல்ல ஆயன் நானே என்று, இயேசு, தன்னை, உருவகப்படுத்திக் கூறியுள்ள வாக்கியங்கள், யோவான் நற்செய்தியில் ஏழுமுறை இடம்பெற்றுள்ளன. நம் வாழ்விலும், நம்மைப்பற்றியும், அடுத்தவரைப்பற்றியும், அவ்வப்போது உருவகங்களில் பேசுகிறோம். விளையாட்டாக, கேலியாகச் சொல்லும் உருவகங்களைவிட, இக்கட்டான, நெருக்கடியான வேளைகளில் நாம் சொல்லும் உருவகங்கள் ஆழந்த பொருளுள்ளவை. "உங்களை நான் மலைபோல நம்பியிருக்கிறேன்" என்று, ஓர் இக்கட்டானச் சூழலில், நண்பரிடம் சொல்லும்போது, அவர்மீது நமக்கு உள்ள ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படும். "என் மகள் கணக்குல புலி" என்று ஒரு தந்தை சொல்லும்போது, அவரது மகளைப்பற்றி அவர் கொண்டிருக்கும் உள்ளார்ந்த பெருமிதம் வெளிப்படும்.

நமது உண்மையான இயல்பு எப்போது அதிகம் வெளிப்படுகின்றது? எதிர்ப்பு, குழப்பம், போராட்டம் இவை பெருகும்போது, நமது உண்மை இயல்பு வெளிப்படும். வாழ்க்கை, மிகச் சீராக, சுமுகமாகச் செல்லும்போது, நாம் எதை நம்புகிறோம், எது நமது வாழ்வின் அடிப்படை என்ற கேள்விகளெல்லாம் எழாது. ஆனால், போராட்டங்களில், சங்கடங்களில் நாம் சிக்கிக்கொள்ளும்போது, நாம் எப்படிப்பட்டவர்கள், எதை நம்பி வாழ்கிறோம் என்ற உண்மைகள் வெளிப்படும். உண்மைத் தங்கமோ, போலித் தங்கமோ அழகியதொரு கண்ணாடி பேழைக்குள் இருக்கும்போது, ஒரே விதத்தில் மின்னும். வேறுபாடு தெரியாது. தீயில் இடப்பட்டால் தான் உண்மைத் தங்கமும், போலித் தங்கமும் தங்கள் உண்மை நிலைகளை வெளிப்படுத்தும்.

யோவான் நற்செய்தியில், இயேசு தன்னை உருவகப்படுத்திப் பேசிய 'நானே' என்ற வாக்கியங்கள் அனைத்தும், எதிர்ப்புகள், குழப்பங்கள் மத்தியில் சொல்லப்பட்டவை என்பதை உணரலாம். "நல்ல ஆயன் நானே" என்று இயேசு கூறியதை, சென்ற வார நற்செய்தியாக நாம் கேட்டோம். "உண்மையான திராட்சைச் செடி நானே" என்று, இயேசு, இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.
"நல்ல ஆயன் நானே" என்று இயேசு சொன்னது, தன் புகழைப் பறைசாற்ற, அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. ஒரு நெருக்கடியான நேரத்தில், அதுவும், தன்னால் நன்மைபெற்ற ஒருவர், மதத்தலைவர்களிடமிருந்து வெறுப்பைத் தேடிக்கொண்டார் என்பதை அறிந்த நேரத்தில், இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னார்.
பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்குகிறார். அந்த அன்பான, அற்புதமானச் செயலுக்குத் தவறானக் காரணங்கள் சொல்லி, இயேசுவை ஒரு பாவி என்று முத்திரை குத்துகின்றனர், பரிசேயர்களும், மதத்தலைவர்களும் (யோவான் 9:24); அது மட்டுமல்ல, இயேசுவின் புதுமையால் பார்வை பெற்றவரையும், யூத சமூகத்திலிருந்து வெளியேத் தள்ளினர் (யோவான் 9:34) என்று வாசிக்கிறோம். இந்நேரத்தில் இயேசு அங்கு செல்கிறார்.
பிறவியிலேயே பார்வை இழந்ததால், தன்னை ஒரு பாவி என்று முத்திரை குத்தி, வெறுத்து ஒதுக்கிய சமுதாயம், தான் பார்வை பெற்றபிறகும் தன்னை ஒதுக்கிவைத்ததை அறிந்து, அம்மனிதரின் உள்ளம் வேதனையில் வெந்து போயிருக்கும். அவர் உள்ளத்தில் நிறைந்த வேதனையாலும், வெறுப்பாலும், அவர் மீண்டும் தன் பார்வையை இழந்துவிடக்கூடாது என்ற பரிவினால், இயேசு, ஒரு நல்லாயனாக, அவரைத் தேடிச்சென்றார். 9ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்நிகழ்வைத் தொடர்ந்து வரும் 10ம் பிரிவில் இயேசு 'நல்ல ஆயன் நானே' (யோவான் 10:14) என்று தன்னையே அடையாளப்படுத்துகிறார்.

இதைவிட நெருக்கடியான ஒரு சூழலில், தன் சீடர்கள் தவித்தபோது, இயேசு, தன்னை ஒரு திராட்சைச் செடியாகவும், அவர்களை, கிளைகளாகவும் ஒப்புமைப்படுத்திப் பேசினார். தன் சீடர்களுடன் இறுதி இரவுணவைப் பகிர்ந்தபோது, இயேசு, இவ்வார்த்தைகளைச் சொன்னார். அந்த இறுதி இரவுணவு, கலகலப்பான, மகிழ்வானச் சூழலில் பகிரப்பட்ட உணவு அல்ல என்பது நமக்குத் தெரியும். பயம், கலக்கம், சந்தேகம் என்ற எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னார்.
இறுதி இரவுணவின்போது, சீடர்கள் கலக்கமடையக் காரணம் என்ன? பன்னிரு சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுப்பார்; மற்றொரு சீடர், இயேசுவை மறுதலிப்பார் என்ற இரு பெரும் கசப்பான உண்மைகளை, இயேசு அவ்வேளையில் பகிர்ந்துகொண்டார். உண்மைகள் பொதுவாகவே கசக்கும்; அதுவும், நம்பிக்கைத் துரோகம், மறுதலிப்பு என்ற உண்மைகள் பெரிதும் கசக்கும். இயேசு கூறிய கசப்பான உண்மைகளால், நம்பிக்கை இழந்து, பயத்தில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம், தன்னை ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்தி இயேசு பேசுகிறார். அந்தச் செடியின் கிளைகளாக, தன் சீடர்கள் வாழவேண்டும் என்பதை அவர்கள் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிப்பதற்காக இயேசு இவ்வுருவகத்தைப் பயன்படுத்துகிறார்.
திராட்சைச் செடியும், கொடியும், பல சவால்களை நமக்கு முன் வைக்கின்றன. செடியுடன் கொடிகள் இணைந்துவிட்டால், எல்லாம் சுகமாக இருக்கும் என்ற தவறான கற்பனையை இயேசு தரவில்லை. என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் என் தந்தை தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். (யோவான் 15:2) என்று இயேசு கூறினார். கனிகொடாத கொடிகள் வெட்டப்படும். கனிதரும் கொடிகளும், கூடுதல் கனி தரவேண்டுமெனில், துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இயேசு சொல்கிறார்.
திராட்சைச் செடியும், கொடியும் பல வேதனைகளைத் தாங்கினால் மட்டுமே, தரமானக் கனிகள் தோன்றும். அதேபோல், சுவையுள்ள இரசமாக மாறுவதற்கு, திராட்சைக் கனிகள் கசக்கிப் பிழியப்படவேண்டும். இத்துன்பங்களில் எல்லாம் இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள் எவை? திராட்சைத் தோட்டத்தை கவனத்தோடு, கரிசனையோடு நட்டு வளர்ப்பவர் விண்ணகத் தந்தை என்பதும், கிளைகள் அனுபவிக்கும் துன்பங்களில் இயேசுவும் உடனிருப்பார் என்பதும், இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள்.

இயேசுவுடன் இணையும் வாழ்வு, பயன்தரும் வாழ்வாக, உயர்ந்து செல்லும் வாழ்வாக அமையும் என்பதை விளக்க மற்றோர் உருவகம் உதவியாக இருக்கும். அமெரிக்க இராணுவத்தில், பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களில், மேலே சுழலும் இறக்கைகளை ஹெலிகாப்டருடன் பிணைக்க, MRRN என்ற திருகாணிகளைப் பயன்படுத்தினர். MRRN என்றால், Main Rotor Retaining Nut, அதாவது, ‘சுழல் விசையுடன் பிணைத்து வைக்கும் மையத் திருகாணி என்று பெயர். இப்பெயர், சொல்வதற்கு, நீளமாக, கடினமாக இருந்ததால், இதற்குப் பதில், இராணுவ வீரர்கள், இந்தத் திருகாணியை, 'இயேசு திருகாணி' (Jesus Nut) என்று பெயரிட்டனர். இந்தப் பெயர் வைக்கப்பட்டதன் காரணத்தை வீரர்களிடம் கேட்டபோது, அவர்கள் தந்த விளக்கம், அழகான உருவகமாகத் தெரிந்தது.
ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருக்கும்போது, இந்த MRRN, அல்லது, 'இயேசு திருகாணி' கழன்றுவிட்டால், மேலே சுற்றும் இறக்கைகள் ஹெலிகாப்டரிலிருந்து பிரிந்துவிடும். அந்த இறக்கைகளின் சுழற்சியால் அதுவரை வானத்தில் தாங்கப்பட்ட ஹெலிகாப்டர், நேரே பூமியில் விழுந்து நொறுங்க வேண்டியதுதான். அந்நேரத்தில், ஹெலிகாப்டரில் இருப்பவர்களை, இயேசு மட்டுமே காப்பாற்றமுடியும் என்பதை வீரர்கள் உணர்ந்ததால், அந்த மையத் திருகாணிக்கு, 'இயேசு திருகாணி' என்று பெயரிட்டனர்.
ஹெலிகாப்டரின் இறக்கைகள் போல சுற்றிச் சுழலும் நமது வாழ்வை, இறுகப் பிணைப்பதற்கு இயேசு என்ற திருகாணி இல்லையெனில், வானில் பறப்பதாய் நாம் நினைக்கும் வாழ்வு, பாதாளத்தில் மோதி, சிதற வேண்டியதுதான்.

பொறுமையாக, கடின உழைப்புடன் வளர்க்கப்பட்ட திராட்சைத் தோட்டம் வளமான, சுவையான கனிகளைத் தருவதுபோல், நாம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளும், இனி தொடரப்போகும் முயற்சிகளும் நல்ல கனிகளைத் தரவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.
இயேசு என்ற செடியுடன் இணைந்திருக்கும் வரை, நாம் மிகுந்த கனி தருவோம்.
இயேசு என்ற திருகாணியுடன் இணைந்திருக்கும் வரை, வானில் உயரப் பறப்போம்.

ஏப்ரல் 29 - வேதியல் போரினால் துன்புறுவோரை நினைவுகூரும் உலக நாள்

ஏப்ரல் 29, இஞ்ஞாயிறன்று, வேதியல் போரினால் துன்புறுவோரை நினைவுகூரும் உலக நாள் கடைபிடிக்கப்படும் வேளையில், சிரியாவில் துன்புறும் மக்கள் நம் நினைவுகளில் தோன்றுகின்றனர். இவர்களைக் காப்பதற்காக, தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும்  ஓர் இளையோர் அணியை, பெருமையுடன், நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறோம்.
சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் இடங்களில், வெள்ளை நிற தலைக்கவசம் அணிந்த வீரர்கள், பொதுமக்களைக் காப்பாற்ற விரைந்து செல்கின்றனர். சிரிய - இரஷ்ய கூட்டுப் படைகளின் தாக்குதலால் தரைமட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கிக் கிடக்கும் மக்களை மருத்துவனைகளில் சேர்க்கும் பணியை வெள்ளைத் தலைக்கவசங்கள் (White helmets) என்ற தன்னார்வ அமைப்பு செய்து வருகிறது.
ஜேம்ஸ் லெ மெசுரியெர் (James Le Mesurier) என்பவர் நிறுவிய இந்த அமைப்பில் 3000த்திற்கும் அதிகமான தன்னார்வப் பணியாளர்கள் உள்ளனர். சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கிய 2014ம் ஆண்டு முதல் இயங்கிவரும் ஒயிட் ஹெல்மெட்ஸ் அமைப்பைச் சார்ந்த பலர், பொறியாளர்கள், ஓவியர்கள், வங்கி அதிகாரிகள், மற்றும் மாணவர்கள். இவ்வமைப்பில், பெண்களும் பணியாற்றுகின்றனர். இதுவரை 1,14,000க்கும் அதிகமான உயிர்களை ஒயிட் ஹெல்மெட்ஸ் அமைப்பினர் காப்பாற்றியுள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
மீட்புப் பணிகள் மட்டுமல்லாது, வானிலிருந்து கட்டிடங்களை நோக்கி குண்டுகள் விழும்போது, எப்படி தற்காத்து கொள்ளவேண்டும் என்ற பயிற்சியையும் சிரிய மக்களுக்கு அளிக்கும் இவ்வமைப்பினர், போர் பகுதிகளில் நடக்கும் அட்டூழியங்களை நேரடியாகப் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இவர்கள் இந்தக் கொடூரங்களை உலகறியச் செய்வதனால், இவர்களை, தீவிரவாதிகளுக்கு துணை செல்லும் அமைப்பினர் என்று, சிரியா அரசும், இரஷ்ய அரசும் பழி சுமத்தி வருகின்றன. இருந்தாலும், இவர்கள் தங்கள் பணியை இதுவரை கைவிடவில்லை.
ஆபத்து நிறைந்த இப்பணியை ஒவ்வொரு நாளும் ஆற்றிவரும் இவ்வீரர்களில், இதுவரை, 204 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இவ்வமைப்பின் அறிக்கையொன்று கூறுகிறது.


2 comments: