15 April, 2018

Resurrection, not dazzling, but deepening… ஆரவாரமின்றி ஆழப்படுத்தும் உயிர்ப்பு


Jesus among the bewildered disciples

3rd Sunday of Easter

The people of Tamil Nadu, India, are fighting for water and fresh air through various protests. They are fighting against the central and state government to give them their fair share of the river water Cauvery. They are fighting against the giant corporation – Vedanta – that robs the people of Thoothukudi off their clean air, water and farm lands. The protests have been going on for the past 60 days. On April 10, one of the newspapers reported: In a major setback to Vedanta’s Sterlite copper smelter unit at Thoothukudi, the Tamil Nadu Pollution Control Board (TNPCB) has rejected the company’s plea to renew the consent to operate… When asked about the development, a highly placed source in the Environment Ministry said the request had been rejected in view of the stiff opposition that the company faced not just in and around Thoothukudi but also on social media. “Once the protests are over, the board would take a relook at the plea,” the source added. (The Hindu, April 10, 2018)

We hope and pray that the protests undertaken by the people in Tamil Nadu see hope-filled light of the Resurrection, at the end of the tunnel. When we think of the various ‘accidents’ caused by Sterlite Copper Company, our minds race back to the copper mine accident in Chile and how that accident brought about a ‘Resurrection experience’ for the people of Chile.

On August 5, 2010, 33 miners entered their usual shift, 2500 feet below the ground level, in the copper and gold mines in Atacama desert, Chile. A landslide deposited 700,000 tonnes of rock to block the passage. All the 33 miners were literally buried alive. Efforts at contacting them failed and hope began to dwindle. After 17 days, on August 22, they were located and a note, saying that all the 33 were alive, was sent through a hole. Locating them, after 17 long days of suspense, was the first miracle. Initial calculations predicted that it would take anywhere between 3 to 4 months to rescue the miners. So, the families were reconciled to be united to their loved ones for Christmas. The continual efforts bore fruit and all the 33 miners were saved in half the time predicted earlier.

October 12, 2010, midnight. Most of Chile was awake with anticipation. At 12.10 a.m. on October 13, a narrow tube like structure emerged out of the rocks and out came Florencio Avalos, a 31 year old miner. His seven year old son and his wife ran to him with tears streaming down their cheeks. Florencio embraced them and kissed them. The whole nation erupted in joy. All the church bells in the country were rung in thanksgiving. This cheer and joy continued the whole day when each of the miners came out.  

By 10 p.m. on October 13, all the 33 miners were rescued from the bowels of the earth after 69 days of struggle. The president of the Chilean Bishops Conference, Bishop Alejandro Goic Karmelic urged the whole nation to undertake fasting and prayer from October 12 when the rescue mission was started. Once the rescue mission was completed, he asked them to continue their prayers of thanksgiving for making Chile, a witness to the power of Christ’s Resurrection. Many of those miners, after their ‘resurrection’, went around the world, sharing their faith-experience. It is the unmistakable presence of God that inspired the men to refer to Him as the “34th man” in the mine. Jose Henriquez, one of the rescued miners, explained: “We began to feel the presence of this friend, of this invisible miner. We couldn’t see him but he was down there with us. We weren’t 33 down there but 34 and we were all very clear about that.”

Those who are involved in rescue operations as well as those who witness these ‘miracles’ either in person or over the TV, break into a spontaneous applause. Most of them break into tears too. I am surely one of them. Extreme joy and extreme sadness bring tears. These extreme situations also leave us stunned in disbelief. “Oh, my God, I can’t believe this” is the cry of a person bursting with joy or buried in agony. We hear of a similar situation in today’s Gospel: They (the disciples) still disbelieved for joy, and wondered… (Luke 24:41), when they saw the Risen Jesus standing in the midst of them. What Jesus did with the stupefied disciples was more stupefying. The same verse talks about this: And while they still disbelieved for joy, and wondered, Jesus said to them, "Have you anything here to eat?" (Luke 24:41)

The idea of the Resurrection was not a clear concept for the disciples, brought up in the Jewish tradition. So, Jesus could have easily taught them about the Resurrection, by showing himself in all his glory as he had done once earlier on Mount Tabor. Such a revelation would have cleared the doubts of the disciples once and for all. Jesus had other ideas. A brilliant manifestation of his glory would have surely dazzled the disciples; but, would that have left a lasting impression on them? I wonder! The way Jesus, the master-par-excellence, chose to reveal the great mystery of the Resurrection left lasting impressions on the disciples and changed their life entirely.

“Have you anything here to eat?” was the way Jesus began his lessons. In most of the post-resurrection encounters of Jesus with his disciples, food became a central element. Jesus sharing a meal with them can be seen from two perspectives.
The first perspective is drawn from our own life situations. When a family loses a dear one, especially if it is the sudden death of a younger person, the family would be devastated. The family members will neither eat nor sleep. Those who are close to this family will somehow force the family members to eat something. I see Jesus doing something similar among his disciples. The disciples of Jesus as well as Mother Mary must have stopped eating after the tragedy at Calvary. So, Jesus came to them to force them to eat, by sharing a meal with them.

The second perspective comes from the way Jesus and his disciples had been sharing food during their life together. Since their life had become very hectic, private moments of sharing a meal must have become rare. When such ‘private moments’ arrived, they were moments of deep sharing – not only sharing of food, but also sharing of their inner selves. The peak moment of such a sharing occurred three days back when Jesus shared the Paschal meal with his disciples. It was during that meal that he had assured them of his continued presence in the form of food – bread and wine.
When Jesus met them after the Resurrection, he wanted to remind them of that Special Supper. He also wanted to tell them that nothing had changed. By sharing another meal with them, he assured them that his presence continued with them.
Sharing of food, a very common feature in daily life is not simply the filling of one’s stomach with some edible stuff. It is filled with so many other aspects of human life. Especially when a meal is shared among those who are very close, food assumes a sacramental meaning.

Before sharing this meal, Jesus did another simple gesture among his disciples. Here is the first part of today’s gospel: “As they were saying this, Jesus himself stood among them. But they were startled and frightened, and supposed that they saw a spirit.  And he said to them, "Why are you troubled, and why do questionings rise in your hearts? See my hands and my feet, that it is I myself; handle me, and see; for a spirit has not flesh and bones as you see that I have." And when he had said this, he showed them his hands and his feet. And while they still disbelieved for joy, and wondered, he said to them, "Have you anything here to eat?" (Luke 24: 36-41)

Jesus showed them his pierced hands and feet as proofs of his Resurrection rather than the torn screen of the Temple or the empty tomb. Once again, Jesus made the experience of his Resurrection much more personal than a grand exhibition of his power and majesty. His pierced hands and feet were a deeper testimony of his power of love than any other outward manifestation. I am reminded of a lovely story from Tolstoy that talks about ‘hands’:
Tolstoy once told a story of a Czar and a Czarina who wished to honour the members of their court with a banquet. They sent out invitations and requested that the guests come with the invitations in their hands. When they arrived at the banquet, the guests were surprised to discover that the guards did not look at their invitations at all. Instead they examined their hands. The guests wondered about this, but they were also curious to see who the Czar and the Czarina would choose as the guest of honour to sit between them at the banquet. They were flabbergasted to see that it was the old scrub woman who had worked to keep the palace clean for years. The guards, having examined her hands, declared, "You have the proper credentials to be the guest of honour. We can see your love and loyalty in your hands."

Sharing of a meal, showing the wounded hands and feet had such a lasting impact on the disciples that they became messengers of the Resurrection even to the point of laying down their lives. The Risen Christ is not a magician who dazzles us momentarily by his brilliance, but a Saviour who accompanies us in the day to day events of our lives making a great difference!
“Have you anything here to eat?”

 உயிர்ப்புக்காலம் 3ம் ஞாயிறு

வானமும், மண்ணும் இணைந்து வழங்கும் கொடைகளான நீரையும், உலோகத்தையும் மையப்படுத்தி தமிழ்நாட்டில் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக, கடந்த 60 நாட்களுக்கும் மேலாக, மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் ஒரு சில நல்ல விளைவுகளைக் கொண்டுவந்துள்ளதைப் போல் தெரிகிறது. "தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்ந்து இயங்குவதற்கு, சுற்றுச்சூழல் அனுமதிக்கான உரிமம் புதுப்பிப்பு விண்ணப்பத்தை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது. இதனால் ஆலையை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்ற செய்தி, ஏப்ரல் 10, கடந்த செவ்வாயன்று வெளியானது. அங்கு போராடி வரும் மக்களுக்கு இச்செய்தி ஓரளவு நிம்மதியைக் கொணர்ந்தாலும், உயிர்த்த இயேசுவின் அருளால், இம்மக்கள், தங்கள் பிரச்சனைகளுக்கு, முழுமையான தீர்வைப் பெறவேண்டும் என்ற வேண்டுதலுடன் நம் ஞாயிறு சிந்தனைகளைத் துவக்குவோம்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை, மக்களுக்கு, பல்வேறு கொடுமையான விபத்துக்களை விளைவித்துவருவதையும், அதை எதிர்த்துப் போராடிவரும் மக்கள் ஓரளவு உயிர்த்து வருகின்றனர் என்பதையும் எண்ணிப்பார்க்கும் வேளையில், மற்றொரு நாட்டில், தாமிரச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தும், அவ்விபத்திலுருந்து அம்மக்கள் உயிர்பெற்றெழுந்ததும் நம் நினைவுக்கு வருகின்றன.
2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி, சிலே நாட்டின் அட்டக்காமா (Atacama) பாலைநிலத்தில் அமைந்துள்ள, தாமிர, தங்கச் சுரங்கம் ஒன்றில் 33 தொழிலாளர்கள், தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால், ஏழு இலட்சம் டன் எடையுள்ள பாறைகள் சுரங்கப் பாதையை அடைத்துவிட்டன. அந்த 33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில் 2,500 அடி ஆழத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோற்றுப்போயின. 17 நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 22ம் தேதி, அவர்கள் உயிருடன் இருந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. அதையே ஒரு புதுமை என்று பலர் கூறினர்.

அக்டோபர் 12ம் தேதி, அதாவது, அத்தொழிலாளிகள் புதைக்கப்பட்டு, 69 நாட்களுக்குப் பின், சிலே அரசு, மீட்புப் பணியின் இறுதிக் கட்டத்தைத் துவக்கியபோது, சிலே நாட்டின் பல கோவில்களில், தொடர் செபவழிபாடுகள், உண்ணா நோன்பு என்ற பல ஆன்மீக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதையுண்டவர்களில் முதல் தொழிலாளி, அக்டோபர் 13ம் தேதி அதிகாலையில், சுரங்கத்தைவிட்டு வெளியேறியபோது, அந்நாட்டின் கோவில் மணிகள் அனைத்தும் ஒலித்தன. இறுதித் தொழிலாளி, அக்டோபர் 13, இரவு 10 மணியளவில் வெளியேறினார். இந்தச் சாதனை முடிந்ததும், அந்நாட்டின் ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Alejandro Karmelic அவர்கள், "சிலே நாடு, இன்று உயிர்ப்பின் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்துள்ளது" என்று கூறினார்.

ஆயர் Karmelic அவர்கள், உயிர்ப்பைக் குறித்து, அக்டோபர் மாதத்தில் குறிப்பிட்டது பொருத்தமாகத் தெரிகிறது. உயிர்ப்புக்கும், வசந்தகாலத்திற்கும் தொடர்பு உள்ளது. பூமியின் வட பாதி கோளத்தில் (Northern hemisphere), மார்ச் ஏப்ரல் மாதங்களில் வசந்த காலம் வரும். அந்தக் காலத்தில்தான், திருஅவையில் தவக்காலமும், உயிர்ப்புத் திருநாளும் கொண்டாடப்படுகின்றன. பூமியின் தென் பாதி கோளத்தில் (Southern hemisphere), அமைந்துள்ள சிலே நாட்டில், செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் வசந்த காலம் வரும். எனவே, அந்த சுரங்கத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட அக்டோபர் மாதத்தில், அவர்கள் உயிர்ப்புத் திருநாளைக் கொண்டாடியிருந்தாலும் பொருத்தமாகவே இருந்திருக்கும்.
மேலும், சுரங்கத் தொழிலாளிகளை வெளியேக் கொணர்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிக்கு 'ஃபீனிக்ஸ்' (Phoenix) என்ற புராணப் பறவையின் பெயர் வைக்கப்பட்டிருந்தது. 500 அல்லது 1000 ஆண்டுகள் வாழ்ந்ததாய் சொல்லப்படும் 'ஃபீனிக்ஸ்' பறவை, தன் வாழ்நாள் முடியும் வேளையில், தனக்கென கூடு கட்டி, அதற்குள் அமர்ந்தவண்ணம், தன் கூட்டுக்குத் தீ மூட்டும். தீயில் எரிந்து, அந்தப் பறவை சாம்பலாகும்போது, அதன் அடுத்தத் தலைமுறையான பறவை வெளிவரும் என்பது பாரம்பரியக் கதை. சாம்பலை, அழிவின் அடையாளமாகக் காணாமல், அதிலிருந்து உயிர் வெளியேறுவதை உணர்த்தும் 'ஃபீனிக்ஸ்' பறவை, உயிர்ப்புக்கும் ஓர் அடையாளமாகத் திகழ்கிறது.

கல்வாரிக் கொடுமைகளுக்குப் பின், கதவுகளை மூடி, தங்களையே பூட்டி வைத்துக்கொண்ட சீடர்கள், இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின், அச்சமின்றி, இயேசுவை உலகறியச் செய்ததுபோல், முற்றிலும் மூடப்பட்டு, இனி வெளி உலகுடன் எந்தத் தொடர்பும் கிடைக்காது, இனி உயிரோடு மீளமாட்டோம் என்ற அச்சத்தில், சந்தேகத்தில் புதையுண்டிருந்த சிலே நாட்டு சுரங்கத் தொழிலாளிகள், வெளியே வந்தபின், பல நாடுகளுக்குச் சென்று இயேசுவை உலகறியச் செய்து வருகின்றனர். "அந்தச் சுரங்கத்தில் 33 பேர் புதைந்து போனோம். ஆனால் எங்களுடன் 34வது பேராக, இறைவன் எப்போதும் உடன் இருந்தார்" என்று இவர்கள் பறைசாற்றி வருகின்றனர்.

அழிவைக் கொணரும் நிலச்சரிவு, நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களிலிருந்து உயிர்கள் மீட்கப்படும் அற்புதங்கள் நிகழ்வதை நேரிலோ, அல்லது, தொலைக்காட்சியிலோ காணும்போது, நம்மையும் அறியாமல் கரவொலி எழுப்புகிறோம், நம் கண்களில் கண்ணீர் மல்குகிறது. மகிழ்வு, துயரம் இரண்டின் உச்சநிலைகளும் நம்பமுடியாத ஒரு நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுகின்றன. “Oh my God, I can't believe this”என் கடவுளே, என்னால் இதை நம்பவே முடியவில்லை என்று, மகிழ்வின் உச்சத்தில் கத்தியிருக்கிறோம். இதே சொற்களை, துயரத்தில் புதைந்தபோதும் நாம் சொல்லிக் கதறியிருக்கிறோம். மகிழ்வின் சிகரத்தில் நிறுத்தப்பட்ட இயேசுவின் சீடர்களைப் பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: சீடர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள்.(லூக்கா நற்செய்தி 24: 41)
யூத குலத்தில் பிறந்த சீடர்களுக்கு, உயிர்ப்பைக் குறித்த உண்மைகளில் அதிகத் தெளிவு இருந்ததில்லை. இச்சூழலில், உயிர்ப்பைக் குறித்தத் தெளிவை சீடர்கள் மனதில் ஆழமாகப் பதிக்க, இயேசு, தன்னையே, மகிமையின் மன்னராக அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கலாம். அதற்குப் பதிலாக, இயேசு, அவர்களுக்கு, மிக எளிய வழிகளில், தன் உயிர்ப்பின் உண்மையை விளக்கினார்.
தனது உயிர்ப்பை நம்பமுடியாத அளவு வியப்பும், மகிழ்வும் அடைந்த சீடர்களை, இன்னும் அதிகமாய் வியப்பில் ஆழ்த்தி, உயிர்ப்பின் வல்லமையை இயேசு அவர்களுக்குக் காட்டுவற்குப் பதிலாக, தன் உயிர்ப்பை நிரூபிக்க, இயேசு செய்தது, மிகவும் எளிமையான, சர்வ சாதாரணமான ஒரு செயல். இது நம்மை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” (லூக்கா 24: 41) என்று இயேசு கேட்கிறார்.

உயிர்த்தபின், இயேசு, தன் சீடர்களைச் சந்தித்த பல நிகழ்வுகளில், உணவு ஒரு முக்கிய அங்கமாகிறது. தன் உயிர்ப்பை நிரூபிக்க, சீடர்களின் நம்பிக்கையை வளர்க்க, இயேசு, உணவை, ஒரு கருவியாகப் பயன்படுத்தியதை, நாம் இரு கோணங்களில் சிந்திக்கலாம்.
முதல் கோணம்: பொதுவாக எந்த ஒரு குடும்பத்திலும் நிகழ்வது. ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்தால், அதுவும், வாழவேண்டிய வயதில் ஒருவர் மரணம் அடைந்தால், அக்குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள், தாங்கமுடியாத துயரத்தில் மூழ்குவர். உணவும், உறக்கமும், அவர்களிடமிருந்து விடைபெறும். இப்படிப்பட்ட ஒரு சூழலில், அக்குடும்பத்தினர் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள், எப்பாடு பட்டாவது, அவர்களை உண்ணும்படி வற்புறுத்துவர்.
இந்தக் கோணத்தில் நாம் இயேசுவின் செயலைச் சிந்திக்கலாம். தனது மரணத்தால் மனமுடைந்து போயிருக்கும் சீடர்களும், அன்னை மரியாவும், கடந்த மூன்று நாட்களாக உண்ணாமல் இருந்ததால், அவர்களை மீண்டும் உண்ணும்படி வற்புறுத்தவே, இயேசு உணவைப் பற்றிப் பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பரிவுள்ள ஒரு தாயின் அன்பு, உயிர்த்த இயேசுவில் வெளிப்படுவதைக் காணலாம்.
இரண்டாவது கோணம்: இயேசுவும் அவரது சீடர்களும் கடந்த மூன்று ஆண்டுகள் பணிவாழ்வில் அதிகம் மூழ்கிப் போயிருந்தவர்கள். எனவே, நிம்மதியாக ஓர் இடத்தில் அமர்ந்து உணவு உண்ட நேரங்கள் மிகக் குறைவே. அப்படி அவர்கள் சேர்ந்து உணவு உண்ட அரிய நேரங்களில், அவர்கள் மத்தியில் உணவு மட்டும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. அத்துடன் சேர்த்து, உணர்வுகளும், உண்மைகளும் பகிரப்பட்டன. இந்த ஆழமான பரிமாற்றங்களின் உச்சமாக, மூன்று நாட்களுக்கு முன், அவர்கள் உண்ட அந்த இறுதி பாஸ்கா இரவுணவு அமைந்தது. அந்த இறுதி இரவுணவின் தாக்கம், இன்னும் அவர்கள் மனதில் ஆழமாய்ப் பதிந்திருந்தது. ஆழ்ந்த உறவை நிலைநாட்டிய அந்த இறுதி இரவுணவை மீண்டும் அவர்களுக்கு நினைவுறுத்த, இயேசு உயிர்த்த பின்பும், அவர்களோடு உணவருந்த வந்திருந்தார் என்றும் எண்ணிப் பார்க்கலாம்.

தன் பிரசன்னத்தை உலகில் தொடர்ந்து நிலைநாட்ட, இயேசு, இறுதி இரவுணவின்போது, உணவைப் பயன்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். உயிர்ப்புக்குப் பின்னரும், தனது பிரசன்னம், இவ்வுலகில் தொடர்கிறது என்பதை, சீடர்களுக்கு வலியுறுத்திக் கூறுவதற்காக, இயேசு மீண்டும் உணவை பயன்படுத்துகிறார். உயிர்ப்பு என்பது, நம்மை வியப்பிலும், பிரமிப்பிலும் ஆழ்த்தும், ஒரு மந்திரச் செயல் அல்ல. நமது சாதாரண, அன்றாட வாழ்வில், நம்முடன் இணைந்த ஓர் அற்புதமே உயிர்ப்பு, என்ற ஓர் உண்மையை, இந்த உணவுப் பகிர்தல் வழியே இயேசு சொல்லித்தந்தார். இந்த நிகழ்வின் வழியே, இயேசு தன் சீடர்களிடம் சொல்லாமல் சொன்னது இதுதான்:
"கல்வாரிச் சிலுவையும், கல்லறையும் நம் உறவை அறுத்துவிட்டதென நீங்கள் எண்ணுகிறீர்கள். சிலுவையும், கல்லறையும் நம் உறவை அழித்துவிட முடியாது.  உங்களுடன் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த நான், இதோ உங்களோடு வாழ்வைத் தொடர வந்துள்ளேன். எனவே, உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?" உணவின் வழியாக, உயிர்ப்பைப்பற்றியும், தொடரும் தன் உறவைப்பற்றியும் இதைவிட அழகான பாடங்களைச் சொல்லித்தர முடியுமா என்பது சந்தேகம்தான்.

உணவின் வழியாக உயிர்ப்பின் பேருண்மையைக் கூறிய இயேசு, அதற்கு முன்னதாக, காயப்பட்ட தன் கரங்களையும், கால்களையும் சீடர்களுக்குக் காட்டுகிறார். (லூக்கா 24: 40) அவை, மற்றுமோர் எளிய அடையாளம். இரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) அவர்கள் கரங்களைப் பற்றி எழுதிய சிறுகதை நினைவுக்கு வருகிறது.
அரசர் ஒருவர், தன் அவையில் பணிபுரியும் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்து, அழைப்பிதழை அனுப்பினார். விருந்துக்கு வருபவர்கள், தங்கள் அழைப்பிதழைக் கையோடு கொண்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பணியாளர்களில் ஒருவர், சிறப்பு விருந்தினராக, அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமரும் வாய்ப்பு பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
விருந்தில் அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமரும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் அழைப்பிதழைக் கொண்டு வந்திருந்தனர். விருந்து மண்டபத்தில் நுழைந்தபோது, அவர்களுக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. வாயில் காப்பவர்கள், பணியாளர்கள் கொண்டு வந்திருந்த அழைப்பிதழைப் பார்க்கவில்லை, மாறாக, அவர்கள் உள்ளங்கைகளைப் பார்த்தனர். ஒவ்வொரு நாளும் அரண்மனையைக் கூட்டி, கழுவி, சுத்தம் செய்யும் பணிப்பெண்ணின் கைகளைப் பார்த்த வீரர்கள், "அரசரின் சிறப்பு விருந்தினராக அமரும் வாய்ப்பு, உங்களுக்கே உள்ளது; அரசர் மீது நீங்கள் கொண்டுள்ள விசுவாசமும், அன்பும் உங்கள் உள்ளங்கைகளில் தெரிகிறது" என்று சொல்லி, அவரை அழைத்துச் சென்று, அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமர வைத்தனர். உள்ளங்கை உணர்த்தும் உண்மைகளை உணர, உள்ளம் திறந்திருக்கவேண்டும்!

காலியானக் கல்லறை, அங்கு தோன்றிய வானதூதர், எருசலேம் கோவிலில் இரண்டாகக் கிழிந்தத் திரை என்ற பிரமிப்பூட்டும் அடையாளங்களைவிட, ஆணிகளால் அறையப்பட்டக் கரங்களும், கால்களும், சீடர்களின் மனங்களில், உயிர்ப்பின் அடையாளங்களாய், ஆழப் பதியவேண்டும் என்று இயேசு விழைந்தார்.
வெகு வெகு எளிதான வாழ்வு அனுபவங்களின் வழியாக, உயிர்ப்பு என்ற பேருண்மையை இயேசு எடுத்துரைத்ததால், சீடர்களின் உள்ளங்களில் இந்த மறையுண்மை வெகு ஆழமாகப் பதிந்தது. ஆழப்பதிந்தது மட்டுமல்லாமல், இந்த மறையுண்மைக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு அவர்கள் வாழ்வு மாறியது. தான் உயிர்த்ததை, பிரம்மாண்டமான ஒரு சக்தியாக இறைமகன் இயேசு காட்டியிருந்தால், அது, ஒரு நொடிப்பொழுது வியப்பில், சீடர்களை, பரவசம் அடையச் செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் வாழ்வு மாறியிருக்குமா என்பது சந்தேகம்தான். வாழ்வை மாற்றும் ஒரு சக்தியாக இயேசு உயிர்ப்பைக் காட்டியதால், அதன் தாக்கம் சீடர்களின் வாழ்வு முழுவதும் தொடர்ந்தது.
மனித உறவுகளை அறுப்பதில், மிகவும் உறுதியான, முடிவான துண்டிப்பு சாவு என்று நாம் நம்புகிறோம். அந்தச் சாவும் உண்மையிலேயே ஒரு முடிவு அல்ல, கல்லறைக்குப் பின்னும் உறவுகள் தொடரும் என்பதைக் கூறும் மறையுண்மையே உயிர்ப்பு. கிறிஸ்தவ மறையின் ஆணிவேரான 'உயிர்ப்பு' என்ற பேருண்மையை, அறிவுக்கெட்டாத ஏட்டளவு உண்மையாக இயேசு சொல்லித் தரவில்லை, மாறாக, அந்த மறையுண்மையை உணவு, காயப்பட்ட கரங்கள், கால்கள் என்ற எளிதான மனித நிகழ்வுகளின் வழியே இயேசு அன்று தன் சீடர்களுக்குச் சொல்லித்தந்தார். இன்று நமக்கும் சொல்லித் தருகிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்வோம்.
கடவுள் மந்திர, மாயங்கள் செய்யும் மந்திரவாதி அல்ல. நம் வாழ்வில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யும் அன்பர் அவர்.
மாயங்கள் செய்து, மலைக்க வைப்பது, மந்திரவாதியின் கைவண்ணம் - வாழ்வில்
மாற்றங்கள் செய்து, நிலைக்க வைப்பது, இறைவனின் அருள்வண்ணம்.


No comments:

Post a Comment