30 March, 2019

All is forgiven - Papa எல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டன - அப்பா


“The Return of the Prodigal Son” by Pompeo Batoni

4th Sunday of Lent

Today, the Fourth Sunday of Lent, is called Laetare Sunday – Rejoicing Sunday. There could be hundreds of reasons why we rejoice in our life. Today’s first reading from Joshua as well as the Gospel of Luke give us two reasons for rejoicing. We rejoice, when we receive something which we have never imagined or dreamt of. We also rejoice, perhaps, more so, when we receive back something we had lost. We have experienced both these types of happiness in our lives. The reading from Joshua (Joshua 5:9a,10-12) talks of the first type of happiness, while Luke’s gospel - the famous parable of the ‘Prodigal Son’ (Luke 15:11-32) - talks of the second type of happiness.
Here is the passage from Joshua:
Joshua 5: 9-12
And the LORD said to Joshua, "This day I have rolled away the reproach of Egypt from you."… While the people of Israel were encamped in Gilgal they kept the passover on the fourteenth day of the month at evening in the plains of Jericho. And on the morrow after the passover, on that very day, they ate of the produce of the land, unleavened cakes and parched grain. And the people of Israel … ate of the fruit of the land of Canaan that year.

The Israelites who entered Canaan, belonged to a generation born in slavery in Egypt. Hence, they would have never had the experience of cultivating their own food. Every aspect of their food, namely, what they would eat, how much and when etc. depended on the Egyptians. They were denied these basic decisions about their food. Hence, cooking and sharing their own Passover meal must have been a great experience of regaining their self respect.
A passage like this sadly reminds us of millions of people who are denied their self-respect and are treated like animals due to the conflicts that rage in different parts of the world. We bring all these helpless victims to the Lord on this Sunday.

For this Rejoicing Sunday we are invited to dwell on one of the most famous parables of Jesus which speaks of the ‘lost-and-found’ happiness, of a ‘broken-and-mended relationship’ between a father and a son – the parable of the Prodigal Son.

Fr Robert Ombres O.P., talks about two types of dangers attached to ‘famous parables’ and ‘familiar passages’ from the Bible. The Parable of the Prodigal Son is both famous and familiar.
Fr Ombres says, “Because the parable is so well-known, in listening to it we probably knew what was coming next and could even race ahead while it was being read out. So let’s take step back, and then perhaps the parable will speak to us in a fresh way.”
Fr Ombres also warns us about remaining a spectator and not a participant, when he hear familiar Bible passages. “When we read the Bible, with its histories and its stories, do we basically think we are spectators looking out of a window at something that this happening out there to others? Or do we think of reading the Bible as more like looking into a mirror, when we too are very much in the picture?”

If we can treat the parable of the Prodigal Son as a mirror, we can learn a lot of lessons. Can we give it a try today?

Fr William Grimm, a Maryknoll priest from Tokyo shares Sunday reflections via the Union of Catholic Asian News Website - UCAN. He begins his reflections on the title of this parable. According to him, this is not a story of a prodigal son, but a prodigal father. The parable says: “He divided his living between them (meaning, the elder and the younger sons.)(Luke 15:12). This leaves nothing to the father. The ‘prodigality’ of the father begins right there! Let us get back to Fr Grimm: Right from the start of the story, then, the one who is ‘extremely generous, perhaps to the point of wastefulness’ – the definition of ‘prodigal’ – is not the son, but the father.

Fr Grimm goes on to show how the father was ‘prodigal’ especially in his forgiveness. This is what captivated my mind in his reflections. He explains it thus:
It is time to ask when the forgiving happens in this story. Can it be when the son faces facts? No, it cannot be then, because, no one at home can hear him coming to his senses.
Can it be when he turns and begins his journey home? No, it cannot be then, he is too far off for the father to know.
Can it be when he falls at his father’s feet? No, it is not then, because, the father does not let him finish his confession.
So, when is the son forgiven?
The Gospel tells us that the father saw his son while he was still far off. The reason is clear. The father was standing outside, looking into the distance for his son’s return. In other words, when the son walked out the door, his father went out too. He stood there, waiting for his son to come to his senses and return. The father forgave the son’s sin as soon as it was committed. All that remained was for the son to come home and accept forgiveness….
That’s the point of Jesus’ parable.
The father, of course, is God, God whose love is so prodigal that no matter what foolishness I commit, forgiveness is there from the start. Jesus is saying that all I need to do is come to my senses, turn around and accept the gift God always offers.

In God there is no ‘before-after’ effect of sin. He ALWAYS forgives… Ever loving and forgiving, never tiring! Similar sentiments have been expressed by Pope Francis on quite a few occasions. In the very first Angelus message he gave in St Peter’s Square three days after being elected, Pope Francis said: “Never forget this: The Lord never tires of forgiving, but at times we get tired of asking for forgiveness!”

The Parable of the Prodigal Son (or Father) is a painful reminder to us of the estranged relationships that exist in our families. While reflecting on this famous parable, I was reminded of the short story "The Capital of the World", written by Ernest Hemingway.
In it, he told the story of a father and his teenage son who were estranged from one another.  The son’s name was Paco.  He had wronged his father.  As a result, in his shame, he had run away from home. In the story, the father searched all over Spain for Paco, but still he could not find the boy.  Finally, in the city of Madrid, in a last desperate attempt to find his son, the father placed an ad in the daily newspaper.  The ad read:  “PACO, MEET ME AT THE HOTEL MONTANA.  NOON TUESDAY.  ALL IS FORGIVEN.  PAPA”
The father in Hemingway's story prayed that the boy would see the ad; and then maybe, just maybe, he would come to the Hotel Montana.  On Tuesday, at noon, the father arrived at the hotel.  When he did, he could not believe his eyes. An entire squadron of police officers had been called out in an attempt to keep order among eight hundred young boys.  It turned out that each one of them was named Paco.  And each one of them had come to meet his respective father and find forgiveness in front of the Hotel Montana. Eight hundred boys named Paco had read the ad in the newspaper and had hoped it was for them.  Eight hundred Pacos had come to receive the forgiveness they so desperately desired.

Hemingway’s story does not sound unique, since thousands… no, millions… of young men and women go through strained relationships with their parents. Many of those who leave home, reach various cities, with dreams of getting some security and future there. Unfortunately, for most of them, cities turn out to be more of a nightmare than a dream, a jungle rather than a home. We are painfully aware of the break in relationship among the different members of the family. Either they step out of the house and get lost in the crowds or, more painfully, they stay at home and decide to get lost from their loved ones.

Let us close our reflections with the words of Fr Grimm:
Lent is a time for me to come to my senses and return to my Father. I do not need fancy words. I do not need to buy forgiveness with good deeds or intentions. All I need to say, “Father, I have flunked.” Then we go out to share the Good News that God is waiting for the whole world to come to its senses, waiting to embrace it with the love that is always there for it.

“The Return of the Prodigal Son” by Rembrandt van Rijn

தவக்காலம் 4ம் ஞாயிறு

தவக்காலத்தின் 4ம் ஞாயிறை, Laetare Sunday - அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடுகிறோம். நாம் வாழ்வில் மகிழ்வடைய பல நூறு காரணங்கள் இருக்கும். அவற்றில் இரு காரணங்களை இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
வாழ்வில் இதுவரை நாம் பெறாத ஒன்றைப் பெறும்போது மகிழ்வடைகிறோம். அதேவண்ணம், அல்லது, அதைவிடக் கூடுதலாக, வாழ்வில் நாம் இழந்ததை மீண்டும் பெறும்போது மகிழ்வடைகிறோம். நாம் அனுபவித்துள்ள இவ்விரு சூழல்களையும் நினைவுறுத்துகின்றன, இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும். யோசுவா நூலில் நாம் காணும் வரிகள், விடுதலையும், தன்னிறைவும் அடைந்த எந்த ஒரு சமுதாயமும் பெருமையுடன் சொல்லக்கூடிய வரிகள்:
யோசுவா 5: 9-12
அந்நாள்களில், ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன் என்றார். இஸ்ரயேலர்... எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்... கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.

எகிப்தில் அடிமைகளாக பல தலைமுறைகள் துன்புற்ற இஸ்ரயேல் மக்கள், உண்ணும் உணவு, உண்ணும் நேரம், உண்ணும் அளவு ஆகிய அனைத்திற்கும், எகிப்தியர்களிடம், கைகட்டி, வாய் பொத்தி, நின்றவர்கள். இப்போது, அவர்கள், தங்கள் உரிமையாகப் பெற்றுக்கொண்ட கானான் நாட்டில், தங்கள் நிலங்களில் விளைந்த தானியங்களை, வேண்டிய அளவு, வேண்டிய நேரம் தங்கள் விருப்பப்படி உண்டனர் என்பதை இவ்வாசகம் கூறுகிறது.
கானான் நாட்டை அடைந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருமே எகிப்தில் அடிமைகளாகப் பிறந்தவர்கள். எனவே, அவர்களில் யாரும் அதுவரை சுதந்திரமாக தாங்களே பயிரிட்டு, தயாரித்த உணவை உண்ட அனுபவம் துளியும் இல்லாதவர்கள். அவர்கள் வாழ்வில் அதுவரைப் பெற்றிராத ஓர் அனுபவத்தை முதல் முறையாகப் பெற்றதால் உண்டான மகிழ்வை இந்த வாசகம் தெளிவுபடுத்துகிறது.

இழந்த ஒன்றை மீண்டும் பெறும்போது உண்டாகும் மகிழ்வை நற்செய்தியில் கூறப்பட்டுள்ள உவமை விளக்குகிறது. இயேசு கூறிய அத்தனை உவமைகளிலும், மிக அதிகப் புகழ்பெற்ற உவமை, 'ஊதாரிப் பிள்ளை' என்று வழங்கப்படும் 'காணாமற்போன மகன்' உவமை.

மிகவும் புகழ்பெற்ற உவமைகளுக்கே உரிய ஓர் ஆபத்து, 'காணாமற்போன மகன்' உவமைக்கும் உள்ளது. அதாவது, இந்த உவமை நம் அனைவருக்கும் ஏறத்தாழ மனப்பாடமாகத் தெரிந்த உவமையாக மாறிவிட்டது. எவ்வளவு தூரம் நமக்குத் தெரியும் என்றால், இந்தக் கதையை யாராவது வாசிக்கவோ, சொல்லவோ துவங்கியதும், இக்கதையின் முடிவை நாம் மனதுக்குள் சொல்லி முடித்துவிடுவோம். எனவே, இவ்வுவமை வாசிக்கப்படும் வேளையில் நாம் பொறுமை இழந்து, தவிப்போம்; அல்லது, தெரிந்த முடிவு என்பதால், வேறு விடயங்களில் நம் மனதை அலைபாய விடுவோம்.

இந்த உவமையோ, அல்லது, வேறு விவிலியப் பகுதிகளோ நம் வழிபாடுகளில் வாசிக்கப்படும் வேளையில் மற்றுமோர் ஆபத்தும் உருவாகிறது. அதாவது, இந்த உவமையில் கூறப்படும் நிகழ்வுகள், வேறு யாருக்கோ, எங்கோ நடக்கும் நிகழ்வுகளாக எண்ணி, நாம் பார்வையாளர்களாக மாறும் ஆபத்து உருவாகிறது.
இந்த நம் மனநிலையை, ஓர் உருவகமாகக் கூறவேண்டுமெனில், நம் வீட்டின் சன்னலருகே அமர்ந்து, அந்த சன்னல் கண்ணாடி வழியே, வெளியில் நடப்பனவற்றைப் பார்க்கும் பார்வையாளருடைய மனநிலையில் நாம் இந்த உவமையைக் கேட்கும் ஆபத்து உள்ளது. இன்று, இவ்வுவமையை, ஒரு சன்னல் கண்ணாடியாகப் பயன்படுத்தி, மற்றவர்கள் வாழ்வைப் பார்க்க முயல்வதற்குப் பதில், இதை முகம் பார்க்கும் கண்ணாடியாகப் பயன்படுத்தி, நம் வாழ்வைக் காண முயல்வோம்.

'காணாமற்போன மகன்' உவமை என்ற இந்தக் கண்ணாடியின் வழியே, நம்மையேக் காணும்போது, இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள மூன்று கதாப்பாத்திரங்களாக நாம் வெவ்வேறு நேரங்களில் வாழ்ந்திருக்கிறோம் என்பதை உணர்கிறோம்.
தன்னிலை இழந்து, தந்தையைவிட்டு விலகிச்சென்ற இளைய மகனாக நாம் இருந்த வேளைகள் பல உண்டு. அதேவண்ணம், தன்னை மட்டுமே நல்லவனாக, உயர்ந்தவனாக எண்ணி, தன் உடன்பிறந்த சகோதரனையும் ஏற்க மறுத்த மூத்த மகனாக நாம் வாழ்ந்த நேரங்களும் உண்டு. தவக்காலத்தில், இவ்விரு நிலைகளையும் களைந்து வாழும் வரத்தை, நமக்காகக் காத்திருக்கும் தந்தையிடம் இறைஞ்சுவோம்.

இந்த உவமை என்ற கண்ணாடிவழியே நமக்குக் காட்டப்படும் தந்தையை இன்னும் சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம். 'காணாமற்போன மகன்' உவமை, பொதுவாக, 'ஊதாரி மகன்' உவமை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உவமையை, 'ஊதாரி மகன்' உவமை என்று சொல்வதற்குப் பதில், 'ஊதாரித் தந்தை' உவமை என்று சொல்வதே பொருத்தமாகத் தெரிகிறது. பின்விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல், வருங்காலத்திற்குச் சேமித்து வைப்பதைப்பற்றி யோசிக்காமல், வீண் செலவு செய்யும் ஒருவரைத்தான் ஊதாரி என்று கூறுகிறோம்.
தனக்கு கிடைத்த சொத்தை, தாறுமாறாய் செலவு செய்த இளையமகன், ஊதாரிதான். அதேபோல், வயது முதிர்ந்த காலத்தில், தன் பாதுகாப்பிற்கென எதையும் வைத்துக்கொள்ளாமல், 'தன் சொத்தைப் பகிர்ந்தளித்த' (லூக்கா 15:12) தந்தையும் ஊதாரிதானே! திரும்பி வந்த மகனை எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல்தலைகால் புரியாமல் அவன் மீது அன்பு காட்டும் தந்தை ஒரு ஊதாரி தானே! மனம் திருந்தி வந்த மகன், மன்னிப்புக் கேட்பதற்கு முயற்சி செய்தபோது, அதற்கு சிறிதும் இடமளிக்காமல், ஒரு விழாவைத் துவக்கிவைத்த தந்தையை, 'ஊதாரி தந்தை' என்று அழைக்காமல், வேறு எவ்விதம் அழைப்பது?

ஜப்பான் நாட்டில் பணியாற்றிவரும் அருள்பணி வில்லியம் கிரிம் (William Grimm) அவர்கள், ஞாயிறு மறையுரைகளை வலைத்தளத்தில் வழங்கி வருபவர். இந்த ஞாயிறுக்கென அவர் வழங்கியுள்ள மறையுரையில், 'ஊதாரித் தந்தை' உவமையை, புதியக் கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிறார்.

தந்தையின் ஊதாரித்தனம் அவர் காட்டிய மன்னிப்பில் வெளிப்படுகிறது என்று, அருள்பணி கிரிம் அவர்கள் கூறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிய இளைய மகனை, தந்தை எப்போது மன்னித்தார்? என்ற கேள்வியை, எழுப்பி, அதற்கு, பின்வருமாறு அவர் விடையளிக்கிறார்:
இளையமகன் வேறொரு நாட்டில் பசியால் துடித்தபோது, தந்தை அவரை மன்னித்தாரா? இல்லை. தன் மகனுக்கு என்ன நேரந்ததென்று தெரியாமல் அவர் தவித்தாரே தவிர, அந்நேரத்தில் அவர் மன்னிக்கவில்லை.
பசியால் துடித்த மகன், மறுபடியும் தன் தந்தையின் இல்லத்திற்குச் செல்வேன் என்று தீர்மானித்தபோது, அவருக்கு மன்னிப்பு கிடைத்ததா? இல்லை.
தந்தையிடம் திரும்பிவந்து, தன் குற்றங்களைக் கூறியபோது, மகன் மன்னிக்கப்பட்டாரா? இல்லை. மகன் சொல்லவந்ததை, தந்தை, செவிமடுத்தாகவே தெரியவில்லையே. விருந்துக்கு ஏற்பாடு செய்வதிலேயே அவரது முழு கவனமும் இருந்ததே தவிர, மன்னிப்பைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை.
அவ்வாறெனில், எப்போது மன்னிப்பு வழங்கப்பட்டது?
இளைய மகன் வீட்டைவிட்டு வெளியேறியபோதே, அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது. அவரோடு சேர்ந்து, தந்தையும் வீட்டைவிட்டு வெளியேறி, வாசலிலேயே காத்துக் கிடந்தாரே! தன் சொத்தை மட்டுமல்லாமல், மன்னிப்பையும் வாரி வழங்கிய ஊதாரித் தந்தையின் உச்சநிலை பாசம் அதுதான்!

பாவம் ஒன்று நிகழும் வேளையிலேயே, மனம் பதைபதைத்து, மன்னிப்பை வழங்க விரைந்து வருபவர், நம் விண்ணகத் தந்தை என்பதை, இயேசு இவ்வுவமையில் சித்திரிக்கிறார். மன்னிப்பு வழங்குவதில் மனம் தளராத விண்ணகத் தந்தையைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி சொல்லிவரும் கருத்து இதோ: "மன்னிப்பு வழங்குவதில் தந்தையாம் இறைவன் எப்போதும் சலிப்படைவதே இல்லை. மன்னிப்பு கேட்பதில், நாம்தான் சலிப்படைந்துவிடுகிறோம். எனவே, சலிப்பின்றி நம் தந்தையை அணுகிச் செல்லத் துணிவோம்" என்று திருத்தந்தை கூறிவருகிறார்.

காணாமற்போன மகன் உவமையை இன்றையச் சூழலில் பொருத்திப் பார்க்கும்போது, நெருடலான பலப் பிரச்சனைகள் நெஞ்சைச் சுடுகின்றன. இப்பிரச்சனைகளில் ஒன்றை வெளிச்சம்போட்டு காட்ட ஒரு சிறுகதை நமக்கு உதவியாக இருக்கும். இலக்கியத்தில் நொபெல் பரிசு வென்ற அமெரிக்க எழுத்தாளர் Ernest Hemingway அவர்கள் எழுதிய ‘The Capital of the World’ என்ற சிறுகதையில், இடம்பெறும் ஒரு நிகழ்வு இது:
ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த தந்தை ஒருவருக்கும், பாக்கோ’ (Paco) என்ற அவரது 'டீன் ஏஜ்' மகனுக்கும் இடையே உறவு முறிந்தது. வீட்டைவிட்டு வெளியேறிய  பாக்கோவைத்  தேடி அலைந்தார், தந்தை. இறுதியில், அவர் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மத்ரித் சென்று தேடினார். பல நாட்கள் தேடியபின், ஒருநாள் செய்தித்தாளில் விளம்பரம் ஒன்று வெளியிட்டார்: “Paco, meet me at the Hotel Montana. Noon Tuesday. All is forgiven. Papa” "பாக்கோ, மொன்டானா ஹோட்டலில் என்னைச் சந்திக்க வா. உனக்காக நான் செவ்வாய் மதியம் அங்கு காத்திருப்பேன். அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன. இப்படிக்கு, அப்பா" என்ற வார்த்தைகள், அவ்விளம்பரத்தில் காணப்பட்டன. செவ்வாய் மதியம் மொன்டானா ஹோட்டலுக்குச் சென்ற அப்பாவுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 800க்கும் அதிகமான இளையோர் ஹோட்டலுக்கு முன் திரண்டிருந்ததால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை வரவழைக்கப்பட்டது.
பாக்கோ’ (Paco) என்பது, ஸ்பெயின் நாட்டில் பலரும் பயன்படுத்தும் ஒரு செல்லப்பெயர். அங்கு வந்திருந்த அனைவருமே பாக்கோஎன்ற பெயர் கொண்டவர்கள். அதைவிட அதிகமாக மனதை நெருடும் உண்மை, அவர்கள் அனைவருமே பெற்றோருடன் ஏற்பட்ட மோதலில் வீட்டைவிட்டு வெளியேறியவர்கள். அவர்கள் அனைவரும் தங்கள் தந்தையை எதிர்பார்த்து, அங்கு காத்திருந்தனர் என்று, Hemingway அவர்கள் தன் சிறுகதையை முடித்துள்ளார்.

இக்கதைக்கு பெரிய விளக்கங்கள் தேவையில்லை. இன்றும், நமது குடும்பங்களில் நிகழும் உறவுப் பிரச்சனைகளால் நகரங்களில் தொலைந்துபோகும் எத்தனையோ இளையோரைக் குறித்து நாம் நன்கு அறிவோம். குடும்பங்களில் ஏற்படும் உறவு முறிவுகளால், வீட்டில் இருந்தவண்ணம், பெற்றோரிடமிருந்து அதிகம் விலகி, அல்லது, வீட்டைவிட்டு வெளியேறி, காணாமற்போகும் மகன், மகள், பெற்றோர், கணவன், மனைவி, வயதான தாத்தா, பாட்டி என்று... இந்தப் பட்டியல் மிக நீளமானது. தவக்காலம், ஒப்புரவின் காலம். இந்த உறவு முறிவுகளைக் குணமாக்க தகுந்ததொரு காலம்.

உண்மையான மகிழ்வைப்பற்றி சிந்திக்க வாய்ப்பு வழங்கும் 'மகிழ்ச்சி ஞாயிறன்று' வாழ்வில் இதுவரை நாம் பெறாத ஒன்றைப் பெறும்போது அடையும் மகிழ்வை, அல்லது, வாழ்வில் நாம் இழந்ததை மீண்டும் பெறும்போது அடையும் மகிழ்வைப் பற்றி குறிப்பிட்டோம். இழந்ததை மீண்டும் பெறும் அற்புதமான நிகழ்வை மூன்று உவமைகளில் லூக்கா நற்செய்தி 15ம் பிரிவில் காண்கிறோம். காணமற்போன ஆடு காணாமற்போன நாணயம், இரண்டையும் மீண்டும் அடைந்தவர்கள், அக்கம்பக்கத்தில் இருந்த அனைவரோடும் மகிழ்ந்தனர் என்று கூறும் இயேசு, அவ்வுவமைகளின் இறுதியில் சொல்லும் வார்த்தைகள் இவை:

லூக்கா 15: 7,10
மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்... மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.
'மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து, விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்' என்றும், 'கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்' என்றும் இயேசு கூறுவது, நமக்கும் மகிழ்வைத் தருகிறது. கூடவே ஒரு கேள்வியையும் எழுப்புகிறது. விண்ணுலகிலும், கடவுளின் தூதரிடையிலும் உருவாகும் மகிழ்ச்சியைக் குறிப்பிடும் இயேசு, கடவுளிடம் மகிழ்வு உண்டாகும் என்று ஏன் குறிப்பிடவில்லை என்ற கேள்வி எழுகிறது.
இந்தக் கேள்விக்கு ஒரு சில வரிகளில் பதில் சொல்லாமல், உலகப் புகழ்பெற்ற உவமையின் வழியாக இயேசு பதில் சொல்லியுள்ளார். மனம் திருந்தும் ஒரு பாவியைக்குறித்து இறைவன் அடையக்கூடிய மகிழ்வை, காணாமற்போன மகன் உவமையில் விரிவாகக் கூறுகிறார். இந்த உவமையின் இறுதியில் அந்த தந்தை அடைந்த மகிழ்வைக் குறிப்பிடும் இயேசு, 'அதேபோல் கடவுள் மகிழ்வார்...' என்ற ஒப்புமைகள் ஏதுமின்றி தன் கதையை முடிக்கிறார்.
'காணாமற்போன மகன்' உவமை வழியே இயேசு நம் மனத்திரையில் தீட்டும் தந்தையைப் புரிந்துகொள்வது, நம் அனைவருக்குமே பெரியதொரு சவால். தான் உழைத்து சேர்த்த சொத்தின் ஒரு பகுதியை முற்றிலும் அழித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவரும் மகனிடம் ஒரு கேள்வியும் எழுப்பாமல், அவன் திரும்பி வந்தது போதும் என்று விழா கொண்டாடும் தந்தையின் உருவம் நம் மனதில் பதிந்தால் போதும்; அந்தத் தந்தையின் வடிவத்தில் இறைவனின் பாசத்தை நாம் ஓரளவு புரிந்துகொண்டால் போதும்; என்ற நம்பிக்கையில் இயேசு தன் கதையை முடித்துள்ளார். இதுதான், இந்த உவமையின் அழகை இன்னும் கூட்டியுள்ளது.
நிபந்தனை ஏதுமின்றி ஊதாரித்தனமாக அன்பு செய்யும் தந்தையைப் புரிந்துகொள்ளவும், அவரது அணைப்பில் சரணடையவும் இந்த தவக்காலம் நமக்கு உதவுவதாக!


26 March, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை 5


Trocaire – Lenten Campaign

பூமியில் புதுமை – நிலம் திருடும் நிறுவனங்களுக்கு எதிராக...

Trócaire என்றழைக்கப்படும் 'அயர்லாந்து கத்தோலிக்க உதவி மற்றும் முன்னேற்ற இயக்கம்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், 2019ம் ஆண்டின் தவக்காலத்திற்கென, பொருள் நிறைந்ததொரு கொள்கைப்பரப்பு முயற்சியை (Lenten Campaign) மேற்கொண்டுள்ளனர். "கொலையைத் தொழிலாக்குதல்: தொழில் நிறுவனங்களின் நிலம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குக் கணக்குக் கேட்பது" என்ற மையக்கருத்துடன், இத்தவக்கால முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகெங்கும், குறிப்பாக, வளர்ந்துவரும் வறிய நாடுகளில், நிலம், நீர், நிலத்தடி கனிமங்கள் என, இயற்கை வளங்களை, நீதியற்ற முறைகளில் அபகரித்து வரும் பெரும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் கொள்ளை முயற்சிகளை தடுத்து நிறுத்த, Trócaire அமைப்பு, போராடி வருகிறது. இவ்வமைப்பினர் மேற்கொண்டுள்ள தவக்கால விழிப்புணர்வு முயற்சியில், அயர்லாந்து கத்தோலிக்கர்கள் அனைவரும் இணையுமாறு, அந்நாட்டு ஆயர்கள், தங்கள் தவக்கால அறிக்கை வழியே விண்ணப்பித்துள்ளனர்.
உலகில் இன்று இயங்கிவரும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களில், முதல் பத்து நிறுவனங்கள் இணைந்து, ஓராண்டில் சம்பாதிக்கும் மொத்த வருமானம், 180 வறிய நாடுகளின் மொத்த ஆண்டு வருமானத்தைவிட கூடுதலாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் தொழிற்சாலைகளை அமைத்தால், நாட்டில் வேலைவாய்ப்பு கூடும் என்ற நம்பிக்கையில், வறுமைப்பட்ட நாடுகளின் அரசுகள், தங்கள் நாட்டிற்குள் பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்று, தங்கள் நாட்டின் இயற்கை வளங்களை இந்நிறுவனங்களுக்கு விற்று வருகின்றன. இந்தப் பகல் கொள்ளையைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோர், வெகு எளிதாகக் கொலை செய்யப்படுகின்றனர்; அல்லது, காணாமல் போகின்றனர்.
Trócaire அமைப்பு, இத்தவக்காலத்தின் ஆரம்பத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பதிவு செய்துள்ள வேதனையான புள்ளி விவரங்களில், ஒரு சில இதோ:
2018ம் ஆண்டு, தங்கள் நிலத்தையும், மக்களின் உரிமைகளையும் காக்க போராடியவர்களில், 247 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில், பன்னாட்டு நிறுவனங்களின் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராடிய 1400க்கும் அதிகமான மனித உரிமையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
வறுமைப்பட்ட நாடுகளின் அரசுகள், அயர்லாந்தைப்போல், ஆறு மடங்கு பரப்பளவும், இயற்கை வளங்களும் கொண்ட நல்ல நிலங்களை, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளன.
Trócaire அமைப்பினர் இத்தவக்காலத்தில் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வுப் போராட்டம், நல்ல பலன்களைத் தரவேண்டுமென வாழ்த்துவோம்.

Jesus talks with Nicodemus at night

ஒத்தமை நற்செய்தி முடங்கியவருக்கு முழு விடுதலை 5

முடக்குவாதமுற்ற தங்கள் நண்பரை சுமந்துவந்த நால்வரும், எப்படியாவது இயேசுவை நெருங்கிவிட வேண்டும் என்ற ஆவலுடன் வந்தவர்கள் என்பதை, கடந்த சில தேடல்களில் சிந்தித்து வருகிறோம். இயேசுவைக் காண விழைந்தோரையும், அவர் வழியே நன்மைகள் பெற விழைந்தோரையும் நாம் நற்செய்திகளில் சந்திக்கிறோம். இவர்களில் சிலர், இயேசுவை நெருங்கிவர ஆவல் கொண்டிருந்தாலும், சமுதாயம், அவர்கள் மீது விதித்திருந்த தடைகளின் காரணமாக, அவர்களால், இயேசுவை நெருங்க முடியவில்லை. குறிப்பாக, நோயால் பாதிக்கப்பட்டோரும், பாவிகள் என்று முத்திரை குத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களும், இயேசுவை நெருங்க முடியாமல் தவித்தனர். அத்துடன், சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்த பரிசேயர்கள், மதத்தலைவர்கள் சிலரும் இயேசுவை நெருங்கிவர ஆவல் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள், சமுதாயத்தில் தங்களுக்கிருந்த மதிப்பை விட்டுக்கொடுக்க மனமின்றி தவித்தனர்.
"மக்களின் விவிலியம்" என்ற நூலை எழுதிய மறைப்போதகர், ஜோசப் பார்க்கர் அவர்கள், Unusual Methods, அதாவது, 'வழக்கத்திற்கு மாறான வழிமுறைகள்' என்ற பிரிவில், முடக்குவாதமுற்றவரை சுமந்துவந்த நால்வரைப்பற்றி பேசும்போது, வேறுபட்ட வழிகளைப் பயன்படுத்தி, இயேசுவை நெருங்கிவந்த மூவரை, எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டுள்ளார்.

முதல் எடுத்துக்காட்டு, நிக்கதேம். இவர், இயேசுவைச் சந்திக்கும் நிகழ்வை, யோவான் நற்செய்தி 3ம் பிரிவில் (யோவான் 3:1-21) வாசிக்கிறோம். இந்நிகழ்வில், நிக்கதேம் அவர்கள், ஒரு பரிசேயர் என்றும், யூதத் தலைவர் என்றும் அறிமுகம் செய்யும் யோவான், அடுத்த வரியில், "அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்தார்" (யோவான் 3:2) என்று குறிப்பிட்டுள்ளார். பரிசேயராக இருந்த காரணத்தால், பகல் நேரத்தில், பகிரங்கமாக அவரால் இயேசுவைச் சந்திக்க முடியவில்லை. இருப்பினும், இயேசுவைச் சந்திக்க அவர் கொண்டிருந்த ஆர்வம், இந்த இரவு சந்திப்பை மேற்கொள்ள, அவரை உந்தித் தள்ளியது. அன்றிரவு முழுவதும், அவர், இயேசுவுடன் தங்கி, பல்வேறு உண்மைகளைக் கற்றுக்கொண்டார். இந்த உரையாடலில், இயேசு கூறிய பல ஆழமான கூற்றுகளில், "தம் ஒரே... மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:16) என்ற கூற்று, புகழ்பெற்ற மேற்கோளாக விளங்குகிறது.

அந்த சந்திப்பின் வழியே, இயேசுவுக்கும், நிக்கதேமுக்கும் இடையே ஆரம்பமான நட்பு, மறைமுகமாகத் தொடர்ந்திருக்கவேண்டும். நிக்கதேம் மட்டுமல்ல, இன்னும் பலர், இயேசுவுடன் தாங்கள் கொண்டிருந்த உறவை வெளிப்படுத்த முடியாமல் வாழ்ந்தனர். இவர்களில் இருவரை, இயேசுவின் மரணம், மீண்டும் அவரிடம் கொண்டுவந்து சேர்த்தது என்பதை, நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டுள்ளார்.
யோவான் 19: 38-40
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர், இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோக, பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள்.
HT Video Catechism - Zachcheaus

மறைப்போதகர் பார்க்கர் அவர்கள் குறிப்பிடும் இரண்டாவது எடுத்துக்காட்டு, சக்கேயு. இரக்கத்தின் நற்செய்தி என்றழைக்கப்படும் லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், சக்கேயு இவ்வாறு அறிமுகமாகிறார்:
லூக்கா 19:1-3
இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.

சக்கேயு, செல்வராக இருந்தாலும், வரிதண்டுவோருக்குத் தலைவராக இருந்ததால், இஸ்ரயேல் சமுதாயம், அவரை, பாவி என்று முத்திரை குத்தி, ஒதுக்கி வைத்தது. எனவே, இயேசுவைச் சுற்றி நின்ற கூட்டத்தில், அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அத்துடன், அவர், உடல் வளர்ச்சியின்றி, குட்டையாய் இருந்ததால், அவரால் இயேசுவை நெருங்கிச் செல்ல இயலவில்லை. இருப்பினும், இயேசுவைக் காணும் ஆவல், அவருக்கு மற்றொரு வழியை உருவாக்கித் தந்தது. "அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்" (லூக்கா 19:4) என்று நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார்.

இந்நிகழ்வை, ஒரு கற்பனைக்காட்சியாகக் காணமுயல்வோம். எரிகோ நகர வீதிகளில் இயேசு நடந்து வந்தபோது, நிமிர்ந்து பார்த்தார். சிறிது தூரத்தில், ஒரு மரத்தின் மீது, நடுத்தர வயதுள்ள ஒருவர் அமர்ந்திருந்ததைப் பார்த்த இயேசுவுக்கு வியப்பு. சிறுவர்கள், மரமேறி அமர்வது, சாதாரண விடயம். இந்த ஆள், ஏறக்குறைய, 30 அல்லது 40 வயதானவர்... இவர் ஏன் மரமேறியிருக்கிறார்? ஒருவேளை மனநிலை சரியில்லாதவரோ? அப்படியும் தெரியவில்லை. அவர் உடையைப் பார்த்தால், நல்ல வசதி படைத்தவர் போல் தெரிகிறது. பின் ஏன் மரமேறியிருக்கிறார்?
இவ்வாறு எண்ணியபடி நடந்து சென்ற இயேசுவுக்கு, அவரைப்பற்றி அறிய ஆர்வம். அருகில் இருந்தவர்களிடம் கேட்கிறார், அவர் யார் என்று. கூட்டத்தில் ஒரு சிலர், இயேசு காட்டிய மனிதரைப் பார்க்கின்றனர். கோபம், வெறுப்பு, கேலி ஆகிய எதிர்மறை உணர்வுகள், அவர்கள் பதிலில் தொனிக்கின்றன. "ஓ, அவனா? அவன் ஒரு பாவி... துரோகி" என்று அவர்கள் அடுக்கிவைத்த அடைமொழிப் பட்டங்களை ஒதுக்கிவிட்டு, அவர் பெயர் என்ன என்று கேட்கிறார் இயேசு. யாருக்கும் அவர் பெயர் தெரியவில்லை.
பாவி, துரோகி என்று அடை மொழிகளாலேயே அவரை இதுவரை அழைத்து வந்ததால், அவருடையப் பெயர் யாருக்கும் நினைவில் இல்லை. இயேசுவும் விடுவதாக இல்லை. மீண்டும், மீண்டும் பெயரைக் கேட்கிறார். தங்கள் ஞாபகச் சக்தியைக் கசக்கிப் பிழிந்து, இறுதியாக, "சக்கேயு" என்று சொல்கின்றனர். இயேசு அந்த மரத்திற்கு கீழ் வந்தவுடன், மேலே பார்த்து, அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்." என்றார். (லூக்கா 19:5)
பாவி, துரோகி, புல்லுருவி, நாசக்காரன்... என்று, மக்கள் தன்னை வெறுப்போடு அழைத்த அடைமொழிகளையே மீண்டும், மீண்டும் கேட்டு, தன் பெயரை, தானே மறந்து போயிருந்த சக்கேயுவுக்கு, இயேசு தன்னை பெயர் சொல்லி அழைத்தது, ஆனந்த அதிர்ச்சியைத் தந்திருக்கவேண்டும். இன்னொரு யூதர், தன்னை, பெயர் சொல்லி அழைத்ததும், சக்கேயுவின் மனதில் உருவாக்கப்பட்டிருந்த சிறைகள் திறந்தன. சங்கிலிகள் அறுந்தன. இயேசுவைக் காணும் ஆவலுடன், மரமேறிய சக்கேயு என்ற பாவி, மனம் திரும்பி, மன்னிப்பு பெற்ற மனிதராக மரத்திலிருந்து இறங்கினார்.

மறைப்போதகர் ஜோசப் பார்க்கர் அவர்கள், தன் நூலில் குறிப்பிட்டுள்ள மூன்றாவது எடுத்துக்காட்டு, இரத்தப்போக்குடைய பெண். இரத்தப்போக்கு நோயின் காரணமாக, சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த பெண், கூட்டத்தின் நடுவே வந்து, இயேசுவின் ஆடையைத் தொட்டது, உண்மையிலேயே பாராட்டுக்குரிய துணிவுதான். ஒத்தமை நற்செய்தி மூன்றிலும் கூறப்பட்டுள்ள இப்பெண்ணைக் குறித்தும், அவரது நோய் நீங்கப்பெற்ற புதுமையைக் குறித்தும் நம் தேடலை பின்னர் மேற்கொள்வோம்.

இயேசுவைக் காண்பதற்கு வெவ்வேறு வழிகளைப் பின்பற்றிய இந்த மூவரைப் போலவே இன்னும் சிலரை நாம் நற்செய்திகளில் சந்திக்கிறோம். இவர்களில், நான்காவது எடுத்துக்காட்டாக, தீய ஆவி பிடித்திருந்த தன் மகளின் சார்பாக இயேசுவைச் சந்திக்கச் சென்ற கானானியப் பெண்ணை (மத்தேயு 15:21-28; மாற்கு 7:24-30) நாம் எண்ணிப்பார்க்கலாம்.

தாழ்த்தப்பட்ட கானானிய இனம், அவ்வினத்தில் பிறந்த பெண், தீயஆவி பிடித்த ஓர் இளம்பெண்ணுக்குத் தாய் என்று, அடுக்கடுக்காக, தன் மீது சுமத்தப்பட்ட பல தடைகளை, துணிவுடன் தாண்டி, அப்பெண், இயேசுவை அணுகி வருகிறார். அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இயேசுவிடம், மீண்டும், மீண்டும், அவர் வருகிறார். இஸ்ரயேல் மக்களை குழந்தைகளாகவும், பிற இனத்தவரை நாய்களாகவும் உருவகித்துப் பேசும் இயேசுவின் கடினமான சொற்களையும் மீறி, அப்பெண், இயேசுவை அணுகி வருகிறார்.
தன் மகளை எப்படியாகிலும் குணமாக்கிவிடவேண்டும் என்ற ஒரே  குறிக்கோளுடன்... அதை, ஒருவகையான வெறி என்று கூடச் சொல்லலாம்... அத்தகைய வெறியுடன் அப்பெண் இயேசுவை அணுகியிருந்ததால், அவர் கூறிய கடினமான சொற்களையும் நேர்மறையான கண்ணோட்டத்துடன் புரிந்துகொண்டு, அந்தத் தாய், தன் விண்ணப்பத்தை மீண்டும், மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் (மத்தேயு 5: 28) என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.


இயேசுவைக் காணும் ஆவலால் உந்தப்பட்ட இந்த நால்வரைப் போலவே, முடக்குவாதமுற்றவரைத் தூக்கிவந்த நால்வரும், கூரையைப் பிரித்து, தங்கள் நண்பரை இயேசுவுக்கு முன் சமர்ப்பிக்கின்றனர். அவர்களது ஆர்வமும், நம்பிக்கையும் அந்தப் புதுமைக்கு வழிவகுத்தன. இதனை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

23 March, 2019

Perspective on tragedies துயரங்களில் தெளிவான பார்வை


Burning Bush

3rd Sunday of Lent

1980, March 24, was a black day in the history of El Salvador. On that day, the Archbishop of San Salvador, Oscar Romero was assassinated when he was celebrating the Holy Mass. Last year, October, Bl.Romero was declared as a Saint. Hence, this year we commemorate him as a Saint for the first time, on March 24, this Sunday.
The fact that Archbishop Romero was killed during the Holy Mass, although seen as a high point in his holy life, still leaves us with some uneasy questions. Moreover, during the funeral of Archbishop Romero, there was another attack to disperse the crowd, in which, 31 persons were murdered. Being killed while celebrating the Holy Mass and people getting killed while attending the funeral pose more questions than answers.

Here is another news item published on March 14 by one of the catholic news agency – UCAN.
A newly ordained Catholic priest - Father Dibyaranjan Digal – is forbidden to say his First Mass in his native parish, since the people in his native village consider him a “bad omen” after 11 of his close relatives died in a road accident on his ordination day.
He lost 11 of his relatives when a bus carrying 50 people to his ordination ceremony overturned and fell in a gorge. The accident shocked the 29-year-old priest as he came to know about it just before the start of the ceremony. Of course, the news agency has given the title: “Superstition stops Indian priest's first Mass”.

When the tsunami swept over the coasts of India on December 26, 2004, what happened in Velankanni raised quite a few questions related to faith. As we know well, the tsunami came on a Sunday, the very next day after Christmas – on the Feast of the Holy Family. So, the crowd of devotees in Velankanni was rather high. After the Mass, people went to the shore to have a dip. Many of them were swept away by the tidal waves. Why should this tragedy occur in a shrine after the Sunday Mass? There is no easy answer to this question.

I still remember one of my friends telling me that the tsunami was partial to one language group over another. Sunday Masses in Velankanni are celebrated in various languages. On December 26th, when one of those Masses in a particular language was over, the people who attended that Mass went to the shore, while another Mass in another language commenced in the Basilica. Most of the people who went to the shore were washed away while those who were attending Mass were saved. When my friend said that the tsunami was partial to one language, I could hear an echo from his heart… God was partial! I guess this was a faint attempt to understand what happened in a shrine.

Quite a few tragedies have happened in shrines, temples, mosques and churches. Recently, on Friday, March 15, two consecutive terrorist attacks took place at mosques in Christchurch, New Zealand, during Friday Prayer. The attacks began at the Al Noor Mosque at 1:40 pm, and continued at the Linwood Islamic Centre at about 1:55 pm. The attacks killed 50 people and injured 50 more. 

We have also heard of people getting killed in road accidents while going to a shrine on a pilgrimage or returning from a shrine. Many people who survive these tragedies give up their faith since they see an intrinsic connection between God and these tragedies. It would take a long time for some of them to realise that road accidents and terrorist attacks are not caused by God but by human mistakes.

It is so easy to blame God for many of the human tragedies, especially when these tragedies occur in holy places. Our Gospel today addresses one such instance. The Gospel passage today (Luke 13: 1-9) begins with a news item brought to the notice of Jesus:

Now there were some present at that time who told Jesus about the Galileans whose blood Pilate had mixed with their sacrifices. – Luke 13:1

Pilate had murdered some Galileans in the temple. What was worse, he had mingled their blood with the blood of the sacrificed animals. When this news was passed on to Jesus, those around Jesus were not asking a political question as to the motive of Pilate. They were making statements like these: Pilate killed those who were offering sacrifice in a temple. Even holy places like a temple and holy events like sacrifices don’t seem to protect people. What Pilate did was a sacrilege. Israelites were forbidden to offer human sacrifice; but Pilate did exactly that and he dared to do it in the temple itself. After having done such a heinous crime, will Pilate go scot-free? These God-related questions were buried under this piece of news shared with Jesus.

What was the response of Jesus? He seemed to side-step the (THE) issue. He seemed to tell the listeners not to judge those who were killed. He added another instance of people getting killed by the falling tower in Siloam. Are these victims more to be blamed? Jesus was surely more interested in not allowing us to sit in judgement over the people who had suffered such misfortunes. Instead, he told us clearly that such incidents should serve as occasions for our introspection and conversion… personal and communal conversion.

Personal conversion is surely possible through pain, provided we are able to read the signs properly. Communal conversion is also called for in tragedies. It is so easy to blame God in any tragedy especially when it is of a great magnitude, like earthquakes and tsunamis. Isn’t this blame game a disguise to shirking our responsibilities? We need to shift the usual ‘where is God’ questions to ‘where are we’ and ‘where are human beings’ questions in such tragedies.

Science and technology are making it clear day by day that even earthquakes, tsunamis, and hurricanes have intrinsic connection with the way our present generation is exploiting nature.
Even granting that earthquakes are more of a natural disaster, we can surely raise questions on why there are more casualties in poor countries like Haiti and Nepal during an earthquake. Much of the blame for such enormous numbers can be laid at the door of human beings for poor construction of houses, tardy measures during emergencies, lots of political and other interests (including the use of religion) trying to hamper aids… Wasn’t there the human negligence of communication gap during the tsunami in 2004, given the time difference between Indonesia and India? A careful analysis will surely produce a checklist where human beings will stand more accused (almost totally accused) than God.

The response of Jesus, although it looks like side stepping the issue, can surely make us own up our roles and responsibilities in natural as well as human-made tragedies.

We are still left with some questions about God during times of tragedies. I can think of two of them: Why is God so slow in dealing with tragedies? God is immensely patient. This is the focus of the parable of the fig tree given in the second part of today’s Gospel. God gives a second, third, even the nth chance for sinners and those who fail to yield results.

God’s infinite patience raises another question: Okay, let God wait for the unjust to turn around. Meanwhile, can’t God do something for the people who suffer, especially the just who suffer? Well, the first reading today from Exodus (Exodus 3: 1-8, 13-15) gives us an answer to this question. When God meets Moses in the burning bush, God tells him clearly that he has heard the cries of the people and has come down. His coming down will have to be ‘incarnated’ – made a reality by us, the humans. He asks Moses to help the people. Moses hesitates. All of us hesitate. Here is the answer to our question as to why God does not act promptly. God would like to rope in our commitment in helping people and this takes a LONG TIME.

Instead of raising questions related to God’s presence (or absence) and action (or inaction) in tragedies and human misery, it is better to take a clue from Jesus’ response that it is high time we got converted. We need conversion personal and communal when we meet tragedies in our lives. We need to roll up our sleeves and help people who suffer tragedies, instead of sit on judgement seat blaming the victims, and ultimately, blaming God!

The Vinedresser and the Fig Tree - James J. Tissot

தவக்காலம் 3ம் ஞாயிறு

1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, சான் சால்வதோர் பேராயர், ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், பேராயர் ரொமேரோ அவர்கள் புனிதராக உயர்த்தப்பட்டார். புனித ஆஸ்கர் ரொமேரோ அவர்களின் திருநாளை, மார்ச் 24, இந்த ஞாயிறன்று நினைவுகூருகிறோம்.
திருப்பலி நிறைவேற்றிய வேளையில், இவர் கொல்லப்பட்டார் என்ற செய்தியும், இவரது அடக்கம் நடைபெற்ற நாளன்று, கூடியிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 31 பேர் கொல்லப்பட்டனர் என்ற செய்தியும் நமக்குள் கலப்படமான உணர்வுகளை, சிந்தனைகளை எழுப்புகின்றன. திருப்பலி, அடக்கச் சடங்கு என்ற புனிதமான நிகழ்வுகளில் மக்கள் கொல்லப்படுவது கேள்விகளை எழுப்புகின்றன. ஒரு சில வேளைகளில், இக்கேள்விகளுக்கு, தெளிவற்ற, தவறான பதில்களும் தரப்படுகின்றன.

இவ்வாண்டு (2019) சனவரி மாதம், ஒடிசா மாநிலத்தின் பாமுனிகம் (Bamunigam) என்ற ஊரில், திவ்யரஞ்சன் திகால் (Dibyaranjan Digal) என்ற இளையவர், அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். அந்த விழாவுக்கென ஊரிலிருந்து மக்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு வாகனம், விபத்திற்குள்ளாகி, 11 பேர் இறந்தனர். இதை, தீயதோர் அடையாளமாகக் கருதிய ஊர் மக்கள், இளம் அருள்பணியாளர் திவ்யரஞ்சன் அவர்கள், தங்கள் ஊரில் திருப்பலி நிறைவேற்றக்கூடாது என்று தடுத்துவிட்டனர். அருள்பணியாளர் திவ்யரஞ்சன் அவர்களின் திருப்பொழிவு விழாவையொட்டி இந்த விபத்தும், மரணங்களும் நிகழ்ந்ததால், அவரே, விபத்துக்குக் காரணம் என்றும், அவர், ஆபத்தைக் கொணரும் ஓர் அடையாளம் எனவும், மக்கள் முத்திரை குத்திவிட்டனர். புனிதமான திருப்பொழிவு நிகழ்வில், ஏன் இவ்வாறு நிகழவேண்டும் என்ற நெருடலான கேள்வி எழுகிறது.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி, கிறிஸ்மஸ் முடிந்து அடுத்தநாள், ஞாயிறு, திருக்குடும்பத் திருநாளன்று, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா மற்றும் பல ஆசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமிப் பேரலைகள், பல இலட்சம் மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டன. அந்த ஞாயிறன்று, வேளாங்கண்ணி திருத்தலத்தில், ஞாயிறு திருப்பலியை முடித்துவிட்டு கடற்கரைக்குச் சென்றவர்களை, சுனாமிப் பேரலைகள், கடலோடு அடித்துச்சென்றன. திருத்தலம் ஒன்றில், திருப்பலி முடித்தவர்களுக்கு ஏன் இந்தக் கொடூரம்? என்ற கேள்வி எழுகிறது.
அண்மையில், (மார்ச் 15) நியூசிலாந்து நாட்டின் Christchurch பகுதியில் இருந்த இரு இஸ்லாமியத் தொழுகைக்கூடங்களில், வெள்ளி நண்பகல் தொழுகைக்குக் கூடியிருந்த மக்கள் மீது  நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 50 பேர் கொல்லப்பட்டது குறித்து நமக்குள் கேள்விகள் பல எழுகின்றன.

விபத்து, துப்பாக்கிச் சூடு ஆகியவை மனிதர்களால் உருவாகும் ஆபத்துக்கள் என்றாலும், அவை, திருத்தலங்களில், கோவில்களில், புனிதமான நிகழ்வுகளில் ஏற்படும்போது, பல கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகளின் பின்னணியில், கடவுளை இணைப்பது நம் வழக்கம். பல நேரங்களில், இந்தக் கேள்விகளுக்கு, சில குழப்பமான, அபத்தமான பதில்களும் தர முயல்கிறோம்.

சுனாமிப் பேரழிவு முடிந்து பல மாதங்கள் ஆன பின், என் நண்பர் ஒருவர், வேளாங்கண்ணியில் அன்று நடந்த அழிவில் மேலும் ஓர் எண்ணத்தை இணைத்து, விளக்கம் அளிக்க முயன்றார். ஞாயிற்றுக் கிழமைகளில், வேளாங்கண்ணியில், பல மொழிகளில் திருப்பலிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் இருக்கும். ஒரு மொழியில் திருப்பலி முடிந்தது. அந்த மொழியைச் சேர்ந்தவர்கள் கடற்கரைக்குச் சென்றனர். மற்றொரு மொழியில் திருப்பலி ஆரம்பமானது. அந்த வேளையில் சுனாமி தாக்கியது.
ஒரு மொழி பேசுவோரைக் கோவிலுக்குள் அழைத்து காத்த இறைவன், ஏன் வேறொரு மொழி பேசுவோரைக் கடற்கரைக்கு அனுப்பினார்? என்ற கேள்வியை என் நண்பர் எழுப்பினார். அக்கேள்வியின் வழியே, அவர் கூறவந்த கருத்தைக் கேட்டு, எனக்கு எரிச்சல் வந்தது. மொழிவாரியாக, கடவுள் பாகுபாடுகள் பார்க்கிறவரா? கடவுள் மேல் இப்படியெல்லாம் பழிகள் சுமத்த வேண்டுமா? என்று எரிச்சலடைந்தேன்.

1999ம் ஆண்டு, சனவரி மாதம், ஒடிசாவில், இந்து அடிப்படைவாதக் குழுவினர், கிரகாம் ஸ்டெயின்ஸ் (Graham Stuart Staines) என்ற கிறிஸ்தவப் போதகரையும், அவரது இரு குழந்தைகளையும் உயிரோடு எரித்தனர். அதே ஆண்டு, அக்டோபர் மாதத்தில், ஒடிசாவில் மிகப் பெரிய புயல் வீசியதில், பல்லாயிரம் பேர் இறந்தனர். போதகரைக் கொலை செய்ததால், அந்தப் புயலை இறைவன் அனுப்பினார் என்ற தவறான, மிகக் கீழ்த்தரமான விளக்கம் சொன்னவர்களும் உண்டு. நம் மனித அறிவால் புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுகளில், கடவுளைப் புகுத்திவிடுகிறோம். அந்நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பாவிகள் என்று முத்திரை குத்திவிடுகிறோம்.

நமது எண்ணங்களைத் தூய்மைப்படுத்தும் வண்ணம், இன்றைய நற்செய்தி ஒருசில சவால்களை நம்முன் வைக்கிறது. - லூக்கா நற்செய்தி 13: 1-9
அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.
என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இச்செய்தியை ஏன் இயேசுவிடம் கூறினர் என்பதை சிந்திக்கும்போது, நமக்கு சில தெளிவுகள் கிடைக்கின்றன. கோவிலில், அல்லது, ஒரு திருத்தலத்தில், பலி செலுத்திக் கொண்டிருந்தவர்களை, பிலாத்து ஏன் கொன்றான் என்ற கேள்விக்கு, அரசியல் பதில்கள் பல இருக்கலாம். ஆனால், அந்தப் பதில்களைத் தேடி, இயேசுவிடம் வரத் தேவையில்லை. இச்செய்தியை இயேசுவிடம் சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம், இந்நிகழ்வில், கடவுள் எங்கே இருக்கிறார் என்ற விளக்கம் பெறுவதற்காகத்தான்.

கடவுளைத் தொடர்புபடுத்தி, அவர்கள் உள்ளத்தில் எழுந்த கேள்விகளை, நாம் இவ்வாறு நினைத்துப் பார்க்கலாம். கோவிலில், பலி நேரத்தில், இந்தக் கொலை நடந்திருக்கிறதே. கோவில், பலி இவையெல்லாம் அந்த கலிலேயரைக் காப்பாற்ற முடியவில்லையா? கோவிலில், பலி நேரத்தில், பிலாத்து கொலை செய்திருக்கிறானே, அவனைக் கடவுள் ஒன்றும் செய்ய மாட்டாரா?

ஒரு சில விவிலியப் பதிப்புகளில் பிலாத்து செய்தது, இன்னும் பயங்கரமாய் கூறப்பட்டுள்ளது. "பிலாத்து அவர்களைக் கொன்று, அவர்கள் இரத்தத்தை அந்தப் பலியின் இரத்தத்தோடு கலந்தான்" என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இது சாதாரண கொலை அல்ல. இஸ்ராயேல் மக்களிடையே தெய்வ நிந்தனை என்று தடை செய்யப்பட்டிருந்த மனிதப் பலியை, பிலாத்து, நடத்தினான். இறைவனின் சந்நிதியை, இஸ்ராயலரின் வாழ்வு நெறிகளை, மோசே தந்த சட்ட நெறிகளைக் களங்கப்படுத்தும் ஒரு பெரும் குற்றத்தை, பிலாத்து செய்திருக்கிறானே, அவனைக் கடவுள் ஒன்றும் செய்யமாட்டாரா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதேடியே, இச்செய்தி இயேசுவிடம் சொல்லப்பட்டது.

பிலாத்து கொன்றான் என்ற செய்தியின் பின்புலத்தில் பொதிந்திருந்த இக்கேள்விகளுக்கு இயேசு நேரடியாக விடை தந்ததுபோல் தெரியவில்லை. சொல்லப்பட்ட செய்திக்கு, நடந்த நிகழ்வுக்கு இயேசு விளக்கம் சொல்லவில்லை. மாறாக, அந்நிகழ்வினால் பாதிக்கப்பட்டோரைக் குறித்து, அவசரத் தீர்ப்புக்களை வழங்கவேண்டாம் என்று எச்சரிப்பதே, இயேசுவின் முக்கிய நோக்கமாய் இருந்தது. அவர்கள் சொன்ன செய்தியையும், வேறொரு செய்தியையும் இணைத்து, இன்றைய நற்செய்தியில், இயேசு கூறும் விளக்கத்திலிருந்து, பாடங்கள் கற்றுக்கொள்வது நல்லது.

கோவிலில் நடந்த இந்த கொலையுடன், சீலோவாமில் கோபுரம் ஒன்று விழுந்ததால் 18 பேர் உயிரிழந்த நிகழ்வை இயேசு இணைத்தார். பிலாத்து செய்த கொலை போன்று, மனிதர்களால் மனிதர்களுக்கு அழிவுகள் ஏற்படும் நிகழ்வுகளிலும், கோபுரத்தின் இடிபாடு போன்று இயற்கை வழியே, அல்லது விபத்துக்கள் வழியே மனிதர்களுக்கு அழிவுகள் ஏற்படும் நிகழ்வுகளிலும், அவை ஏன் நடந்தன என்ற விளக்கங்கள் தருவதை விட, அந்த அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களைக் குறித்து அவசர முடிவுகள், தீர்ப்புகள் வேண்டாம் என்பதைச் சொல்வதிலேயே இயேசு குறியாய் இருந்தார். அழிவுக்கு உள்ளானவர்களைப் பாவிகள் என்று அவசரத் தீர்ப்பிட வேண்டாம். அவர்களை விட நாம் பெரும் பாவிகள். எனவே இந்நிகழ்வுகள் நமக்கு எச்சரிக்கைகளாய் இருக்கட்டும் என்பதையே இயேசு அழுத்தந்திருத்தமாய் சொன்னார். திட்டமிட்டு மனிதர்களால் நடக்கும் தீமைகளாலோ, விபத்துக்களாலோ பாதிக்கப்பட்டவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார்; ஆனால், அந்நிகழ்வுகள் வழியே இறைவன் கொடுக்க விழையும் எச்சரிக்கைகளை நாம் ஏற்றுக் கொள்வது நலம் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகிறார்.

துன்பங்கள் நிகழும்போதெல்லாம், கடவுளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, கேள்விகள் கேட்பதற்குப் பதில், நம்மை அங்கு நிறுத்தி, இத்துன்பம் நிகழ்வதற்கு நாம் எவ்வகையில் காரணமாய் இருந்தோம் என்று ஆய்வு செய்வது நல்லது. இத்துன்பங்களைத் தடுக்க, அல்லது, இத்துன்பங்களிலிருந்து மக்களைக் காக்க கடவுள் என்ன செய்யவேண்டும் என்று அவருக்கு ஆலோசனைகள் வழங்குவதை விட்டுவிட்டு, இத்துன்பத்திலிருந்து மக்களை மீட்க நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்பது பயனளிக்கும்.  

2010ம் ஆண்டு ஹெயிட்டி நாட்டிலும், 2015ம் ஆண்டு, நேபாளத்திலும் ஏற்பட்ட நில நடுக்கங்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இயற்கைப் பேரழிவுகளின்போது, நம்முடைய மனங்களில், 'கடவுள் எங்கே' என்ற கேள்வி, வெகு இயல்பாக, எளிதாக, எழுந்திருக்கும். கடவுள் எங்கே என்ற கேள்விக்குப் பதில், இந்த நிலநடுக்கத்தில் நாம் எங்கே, மனித சமுதாயம் எங்கே என்ற கேள்விகளையும் எழுப்பலாம்.
நிலநடுக்கமே, இப்போது, இயற்கையின் விபரீதமா, அல்லது, மனிதர்கள், இயற்கையை, அளவுக்கதிகமாய் சீர்குலைத்து வருவதன் எதிரொலியா, என்ற விவாதம் எழுந்துள்ளது. அப்படியே, நிலநடுக்கம், இயற்கையில் எழும் விபரீதம் என்பதை ஏற்றுக்கொண்டாலும், ஹெயிட்டி, நேபாளம் போன்ற ஏழை நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கங்களில், பெருமளவில் உயிர்கள் பலியாவதற்கு, அங்கு கட்டப்பட்டிருக்கும் தரக் குறைவான கட்டடங்களே காரணம் என்பது வெளிச்சமாகும்போது, மனசாட்சியுள்ள மனிதர்கள் எங்கே என்ற கேள்வி ஓங்கி ஒலிக்கிறது.
வறிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும்போது, வறியோரின் குடியிருப்புக்களே பெருமளவில் தரைமட்டமாகின்றன என்பதும், அந்த இடிபாடுகளில் சிக்கியிருப்போர் வறியோர் என்ற காரணத்தால், அவர்களை மீட்கும் பணிகளிலும் அக்கறையற்ற தாமதங்கள் உருவாகி, இன்னும் பல நூறு உயிர்கள் பலியாகின்றன என்பதும், நம்மைப்பற்றிய கேள்விகளையே எழுப்புகின்றன. ஆசியக் கடற்கரைகளை சுனாமி தாக்கியபோதும், தகுந்த நேரத்தில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தால், பல்லாயிரம் உயிர்களைக் காப்பற்றியிருக்கலாம் என்பதை நாம் அறிவோம். துன்ப நேரங்களில், கடவுளை நோக்கி, நாம் வழக்கமாக, எளிதாக எழுப்பும் கேள்விகளை, நம் மனதை நோக்கியும், சமுதாயத்தை நோக்கியும் எழுப்பி, நம் தேடல்களைத் தொடர்ந்தால், இன்னும் பல தெளிவுகள் கிடைக்கும்.

உலகெங்கும், அநியாயங்கள் பல நடந்தும், கடவுள் ஏன் சும்மா இருக்கிறார்? என்பது, கடவுளைப்பற்றி அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. அக்கேள்விக்கு, "அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழியை பதிலாகச் சொல்கிறோம். இப்பழமொழியின் இரண்டாம் பகுதியில் எனக்கு அதிக உடன்பாடு இல்லை. தெய்வம் நிற்கும்... ஆம்... காத்து நிற்கும். கொல்வதற்கல்ல, வாழவைப்பதற்கு. வாழ வைப்பதற்காக இறைவன் காட்டும் பொறுமையை ஆழமாய் உணர்த்தவே, இன்றைய நற்செய்தியில், அத்தி மர உவமையைச் சொல்கிறார் இயேசு. - லூக்கா நற்செய்தி 13: 6-9
அத்தி மரங்கள், சீக்கிரம் பூத்து, காய்த்து, கனிதரும் வகையைச் சேர்ந்தவை. அவற்றிற்கு அதிக உரம், நீர் தேவையில்லை. அப்படிப்பட்ட மரம், மூன்றாண்டுகள் ஆகியும், பலன் தரவில்லை. தோட்டத்து உரிமையாளர் அதை வெட்டியெறிய உத்தரவிடும்போது, தோட்டத் தொழிலாளி, மேலும் ஓராண்டு பொறுமை காட்டுமாறு வேண்டுகிறார். மற்றோர் ஆண்டு தரப்படுகிறது, கூடுதல் உரமும் இடப்படுகிறது. அதேபோல், நாம் உண்மையான பலன் தருவதற்கு, இறைவன் நின்று, நிதானமாய் செயல்படுவார் என்பதை இவ்வுவமை சொல்லித்தருகிறது.

அநியாயங்கள் செய்வோரைத் தண்டிக்க இறைவன் நேரம் எடுத்துக்கொள்ளட்டும், பொறுமை காட்டட்டும். அவர்கள் திருந்துவார்கள் என்று காத்திருக்கட்டும். ஆனால், காத்திருக்கும் அந்நேரத்தில், நல்லவர்கள், அப்பாவிகள் வதைபடுகிறார்களே. அதற்காகவாவது கடவுள் எதையாவது செய்யலாமே என்பது, கடவுளுக்கு நாம் வழங்கும் ஆலோசனை. அவ்விதம் ஆலோசனை வழங்கும்போது, கடவுள், நம்மையும், எதையாவது செய்வதற்கு அழைக்கிறார், விடுதலைப் பயண நூல் வழியே.
இன்றைய முதல் வாசகத்தில், மோசேயிடம் எரியும் முட்புதர் வழியே கடவுள் தந்தசெய்தி அதுதான்: எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்... அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.(விடுதலைப் பயணம் 3:7-8) இப்படிக் கூறும் கடவுள், மோசேயை, அந்த விடுதலைப் பணியை ஏற்கச் சொல்கிறார்.
மோசே தயங்குகிறார். "நான் போய் என்ன செய்ய முடியும். என்னை உயிரோடு குழிதோண்டி புதைத்துவிடுவார்களே" என்று ஒதுங்கிவிட மோசே எண்ணினார். இறைவன் அவருக்கு நம்பிக்கை தந்து, அவரது தயக்கங்களை நீக்கி, அவர் வழியாகக் கொணர்ந்த விடுதலை, வரலாறானது.

துன்ப நிகழ்வுகள், நம்மையோ, நம் உலகையோ தாக்கும்போது, கடவுள் எங்கே, கடவுள் ஏன் இவ்வாறு செய்தார், அல்லது அவர் ஏன் செயல்படவில்லை என்ற கேள்விகளை ஒதுக்கி வைப்போம். துன்ப நிகழ்வுகள், நம் வாழ்வைத் திருத்தி அமைக்க வழங்கப்படும் எச்சரிக்கைகள் என்பதையும், அதேநேரம், நம்மைத் தேடிவரும் அழைப்புக்கள் என்பதையும் உணர முயல்வோம். உலகில் நிகழும் துயரங்களைக் குறைப்பதற்கு, இறைவனோடு இணைந்து உழைக்கும் வரம் வேண்டுவோம்.