03 March, 2019

Beams that blind us மரக்கட்டைகளால் மறையும் பார்வை

Judging others

8th Sunday in Ordinary Time

As children, we have grown up with stories – bed-time stories, day-time stories, stories at home, at school, and among friends. Jesus knew the power of stories and hence he used them to drive home very deep truths about the Heavenly Father, the Kingdom and our everyday life.
“Stories have power. They delight, enchant, touch, teach, recall, inspire, motivate, challenge. They help us understand. They imprint a picture on our minds. Want to make a point or raise an issue? Tell a story. Jesus did it. He called his stories parables.” - Janet Litherland, ‘Storytelling from the Bible’

Parables like the Good Samaritan and the Prodigal Son, as well as some of the expressions Jesus had used in the Gospels have universal appeal. They are used by many who are not Christians. Quite many of them serve as the measure of human life in general, irrespective of one’s religious affiliations. We heard one such expression last Sunday – namely, ‘turn the other cheek’. In today’s Gospel we come across some more expressions that are used in our everyday conversation. “The blind leading the blind”, “the splinter in my brother’s eye”, “from the fullness of the heart the mouth speaks” are some of the popular expressions we use now and then in our conversation.

For the past two Sundays we have heard passages taken from the ‘Sermon on the plains’, as recorded in Luke’s gospel. Today we are given the final part of this sermon. Today’s gospel begins with the words: “Jesus told his disciples a parable…” (Lk. 6:39)

The first ‘parable’ or imagery that Jesus uses is ‘the blind leading the blind’. Jesus places before his disciples and before us the obvious questions: “Can a blind person guide a blind person? Will not both fall into a pit?” (Lk. 6:39) Immediately after these two questions, Jesus makes a seemingly disconnected statement, namely, “No disciple is superior to the teacher; but when fully trained, every disciple will be like his teacher.” (Lk. 6:40) The teacher-disciple statement gives us a clue as to how to interpret the imagery of ‘the blind leading the blind’.

The emphasis of Jesus is not on whether a visually challenged person cannot and should not lead another; it is rather that a person (like a teacher) who leads, should not be ‘blind’! All of us know that many visually challenged persons have led thousands of others to peaks of greatness. We can surely think of persons like Helen Keller, John Milton etc. The story of Erik Weihenmayer, the first  visually challenged person, to reach the summit of Mount Everest on May 25, 2001 and the Seven Summits in the different continents of the world in September 2002, is a true source of inspiration!

When I was searching the internet for inspiring persons who are visually challenged, I came across many stories similar to Erik. But, one of those stories caught my attention more than the other stories. It is the story of Mr.Zahid, a newspaper vendor in Karachi, Pakistan. The three minutes video on Zahid, posted in the website “Lift Up Ideas” as well as YouTube, gives us a glimpse of his life. More than that, the narration of Zahid, gives us an uplifting philosophy of life.
“I am blind by birth. My parents had an arranged marriage. They got divorced. My father also got married. My Mother was also young, so she also got married. This was a turning point in my life. I decided I will do something in my life.” Thus begins the narration of Zahid. Then he talks about the important lessons he learnt at school: “I had learnt this thing from school. I should not beg. I should not give up. I had to do something.”

After this, Zahid uses a poetic language (with some exaggeration) about his firm stand against begging. “Build your own paradise if you can. The fire of hell is better than a begged heaven.”

Mr Zahid sells newspapers on the streets of Karachi. Each newspaper costs 18 Rs (Pakistan Rupees). When people pay him 20 Rs. for the paper, he is very insistent on giving them back the change - Rs.2. He explains why he insists on giving Rs 2 back to the customer. “When you take something from someone (for free) once. You would want it again. For example when someone buys a newspaper worth PKR 18 and gives me PKR 20 I return him two rupees. People ask me why do I do this ? and I say that I sell 200 newspapers a day. If I take extra two Rupees on one paper then I would want that two rupees from every paper I sell. When a man becomes greedy, nothing can help him.”

Mr Zahid closes his narration thus: “If you have any tragedy in life, don’t make things worse by crying over it. Don’t ruin your life by crying over what happened. Move forward and learn to face the challenges of life.”
Mr Zahid, a newspaper vendor from Pakistan is truly a leader. If only all of us follow his tenets of life – namely, never beg, never be greedy and never cry over tragedies in life – life on earth will be a lot better for all of us.

Jesus introduces the second ‘parable’ with a second set of questions. We can sense a trace of anger in the world so Jesus:
Why do you notice the splinter in your brother's eye, but do not perceive the wooden beam in your own? How can you say to your brother, 'Brother, let me remove that splinter in your eye,' when you do not even notice the wooden beam in your own eye? (Luke 9: 41-42a)

It is interesting to note that in the first ‘parable’ Jesus uses the third person – the blind leading the blind, the teacher and disciple etc. In the second ‘parable’, the questions are addressed in the second person – ‘you’. Hence, the questions hit us directly and push us towards a self-examination.

When we take up such an examen of consciousness (a term used in the Jesuit circles), we see that many of us easily slip into the habit of making facile and, often, false judgement on others:
In his little book, Illustrations of Bible Truth, H.A. Ironside points out the folly of judging others. He relates an incident in the life of Bishop Potter. The Bishop was sailing for Europe on one of the great transatlantic ocean liners. When he went on board, he found that another passenger was to share the cabin with him. After going to see the accommodations, he came up to the purser’s desk and inquired if he could leave his gold watch and other valuables in the ship’s safe. He explained that ordinarily he never availed himself of that privilege, but he had been to his cabin and had met the man who was to occupy the other berth. Judging from his appearance, he was afraid that he might not be a very trustworthy person. The purser accepted the responsibility for the valuables and remarked, “It’s all right, Bishop, I’ll be very glad to take care of them for you. The other man has been up here and left his valuables for the same reason!”

In his second parable, Jesus follows up these questions with a very strong ‘advice’, once again, directly addressed to us!
“You hypocrite!  Remove the wooden beam from your eye first; then you will see clearly to remove the splinter in your brother's eye.” (Luke 9: 42b)

The word hypocrite ultimately came into English from the Greek word ‘hypokrites’, which means “an actor” or “a stage player.” Usually, in a Greek play, the actors wear a ‘mask’ and ‘pretend’ to be another person. This is fine, as long as this pretention is confined to the stage. Unfortunately, there are persons who put on masks in daily life and pretend to be someone else.
Finding such a tendency in the Pharisees, Jesus addressed them as ‘hypocrites’ very often. In today’s Gospel such a term is addressed to his disciples and to us. This wake-up call of Jesus should help us to take up a serious soul-search!
Are we ready to cast away the ‘beams’ of our faults and gain a clearer vision, so that we are able to help our brothers and sisters to get rid of their ‘splinters’? We can begin this ‘clean-up’ process at home. We are sadly aware that the ‘beam-and-splinter-game’ is very often played between parents and children.

In the series “fowllanguagecomics.com” created by Brian Gordon, there is a section on ‘parenting’. In one of those cartoons, titled – “A Parent’s Prayer”, a mother/father fowl makes a fervent appeal to God:
God grant me the serenity to accept my kids can be jerks,
The courage to not scream at them constantly,
And wisdom to realize where they got it from.

Our closing thoughts are on India-Pakistan peace. We pray that the goodwill gesture on the part of Pakistan in releasing Wing Commander Abhinandan Varthaman brings out the goodwill from the Indian government. We pray that all the political leaders as well as the media cast away the ‘beams’ of hatred crowding their vision and begin a process of dialogue, keeping the welfare of the people always at the centre of their peace negotiations!  

Luke 6:42

பொதுக்காலம் 8ம் ஞாயிறு

குழந்தைப் பருவம் முதல், கதைகள் மீது நமக்குள்ள ஈர்ப்பை நாம் அறிவோம். அந்த ஈர்ப்பு, ஒரு தேவையாக, அல்லது, தாகமாக மாறிவிட்டது என்று கூடச் சொல்லலாம். "கதை சொல்வது, விவிலியத்திலிருந்து" (Storytelling from the Bible) என்ற நூலை எழுதிய Janet Litherland என்பவர், கதைகளுக்குள்ள ஈர்ப்புச் சக்தியைப் பற்றி இவ்விதம் கூறுகிறார்: "கதைகள் சக்திவாய்ந்தவை. அவை நம்மைக் கவர்ந்திழுக்கும், செயலாற்றத் தூண்டும்... நமக்கு மகிழ்வைத் தரும், கல்வி புகட்டும், சவால் விடும். வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ள கதைகள் உதவிசெய்யும். அவை, நம் எண்ணங்களில் நீண்டகாலம் பதிந்துவிடும். ஓர் உண்மையை எடுத்துச்சொல்ல விருப்பமா? கதையாய்ச் சொல்லுங்கள். இயேசு இவ்விதம் சொன்னார். தன் கதைகளை, அவர், உவமைகள் என்று கூறினார்."

உண்மையை ஏடுத்துச்சொல்ல, உவமைகளைச் சொல்லவேண்டும். நான்கு நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள இயேசுவின் கூற்றுகளை ஒன்றாகத் திரட்டினால், அவற்றில் ஏறத்தாழ பாதி அளவு, கதைகளாகவும், உவமைகளாகவும் இருப்பதை உணரலாம். ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள், ஒரு படி மேலேச் சென்று, இயேசு பேசியதெல்லாம் உவமைகள் வழியாகவே என்றும் கூறுவர்.
இயேசு ஏன் உவமைகளில் பேசினார்? உவமைகள் வழியே சொல்லப்படும் உண்மைகளை உலகம் எளிதாக ஏற்றுக்கொள்ளும். இதுதான் முக்கியக் காரணம். உண்மை, நேரடியாக, வெளிப்படையாகத் தோன்றும்போது, அது நம்மை அச்சத்தில் ஆழ்த்தக்கூடும். அதை வரவேற்க, நாம் தயங்குவோம். அதே உண்மை, ஓர் உவமையாக, கதையாக நம்மை அடையும்போது, உள்ளத்தில் ஆழமாய்ப் பதியும், மாற்றங்களையும் உருவாக்கும்.

கடந்த இரு ஞாயிறு வழிபாடுகளில், இயேசு, 'சமவெளிப் பொழிவில்' கூறிய உண்மைகளை சிந்தித்துப் பயனடைந்தோம். இன்று, மூன்றாவது வாரமாக, அதே சமவெளிப் பொழிவின் இறுதிப் பகுதியைச் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். இப்பகுதியில், இயேசு உண்மைகளையும், உவமைகளையும் கலந்து பேசியுள்ளார். "மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது" (லூக்கா 6:39) என்று, இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.

பார்வையற்ற வழிகாட்டி, கண்ணில் உள்ள மரக்கட்டை, கண்ணில் உள்ள துரும்பு, கெட்ட மரம், நல்ல மரம் என்ற உருவகங்கள் வழியே, இயேசு, நம் வாழ்வுக்குத் தேவையான பாடங்களைச் சொல்லித்தர வருகிறார். சீராக் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகத்திலும், நமது பேசும் திறனை அல்லது குறையைச் சுட்டிக்காட்ட, சலிக்கும் சல்லடை, சூளையில் வைக்கப்படும் கலன், கனிதரும் மரம் ஆகிய உருவகங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்துமே நம் வாழ்வுக்குப் பயனளிக்கும் எண்ணங்கள் என்றாலும், நேரம் கருதி, நாம் நற்செய்தியில் இயேசு கூறியுள்ள இரு உருவகங்களில் நம் கவனத்தைச் செலுத்துவோம்.

உடல் சார்ந்த பார்வைத் திறன், உள்ளம் சார்ந்த பார்வைத் திறன், பார்க்கும் திறன் இருந்தும், பார்க்க மறுப்பது போன்ற கருத்துக்களை நம் உள்ளங்களில் ஆழப் பதிப்பதற்கு, இயேசு பயன்படுத்தியுள்ள இரு உருவகங்களைப் புரிந்துகொள்ள முயல்வோம். முதல் உருவகத்தில், "பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?" (லூக்கா 6:39) என்று, இயேசு எழுப்பும் இரு கேள்விகள், யார், யாருக்கு வழிகாட்ட முடியும், வழிகாட்ட வேண்டும் என்பதைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இந்த இரு கேள்விகளைத் தொடர்ந்து, இயேசு, குரு, சீடர் என்ற கருத்தை இணைத்திருப்பது, நம்மை இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது.

உடல் அளவில் பார்வையிழந்தோர், மற்றவர்களுக்கு வழிகாட்ட இயலாது, கூடாது என்பதை, இயேசு, இவ்வுவமை வழியே வலியுறுத்துகிறார் என்று சிந்திப்பதைவிட, வழிகாட்ட விழையும் குரு, தன் சீடர்களைவிட, தெளிவான பார்வை பெற்றிருக்கவேண்டும் என்பதை, இயேசு, இவ்வுவமை வழியே வலியுறுத்துகிறார், என்ற கோணத்தில் சிந்திப்பது, பொருத்தமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
குறிப்பாக, நாம் வாழும் இன்றைய உலகில், வழிகாட்டும் பொறுப்பில் இருக்கும் பல அரசியல் தலைவர்களும், மதத்தலைவர்களும், பார்க்கும் திறன் இருந்தும், பார்க்க மறுப்பது, அல்லது, குறுகியப் பார்வை கொண்டிருப்பது ஆகிய குறைகளால் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் உருவாக்கும் ஆபத்துக்களைப் புரிந்துகொள்ள, இந்த உருவகங்கள் வழியே முயல்வோம்.

நம் முயற்சியின் முதல் படியாக, பார்வைத் திறன் அற்றவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்ட இயலாது என்ற எண்ணத்தை நம் உள்ளத்திலிருந்து நீக்க முயல்வோம். பார்வைத்திறன் இல்லாதபோதும், தங்கள் உழைப்பாலும், திறமைகளாலும் புகழின் சிகரத்தை அடைந்த பலரை நாம் அறிவோம். இவர்களது விடாமுயற்சி, பல்லாயிரம் பேருக்கு வழிகாட்டி வருகிறது என்பதையும் நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக, பார்க்கும் திறன், கேட்கும் திறன், பேசும் திறன் அனைத்தையும் இழந்தாலும், வரலாற்றில் ஓர் உன்னத சிகரத்தை அடைந்த ஹெலன் கெல்லர், பார்வைத்திறனை இழந்த பின்னரும், கவிதைகளை உருவாக்கிய ஜான் மில்டன் போன்றோரை நாம் அவ்வப்போது நினைவில் கொள்கிறோம். பார்வை இழந்த பலரும் வாழ்வில் நம்பிக்கை இழந்த பலரும், அவர்கள் காட்டிய வழியில், கட்டாயம் முயற்சிகள் மேற்கொண்டிருப்பர் என்பதை மறுக்க இயலாது.

பார்வைத்திறன் இல்லாதபோதும், பிறருக்கு நல்வழி காட்டியவர்களைப்பற்றி, இணையத்தளத்தில் தேடும்போது, புகழ்பெற்ற பலரது கதைகள், நம் கண்களில் படுகின்றன. ஆனால், இவை அனைத்தையும் விட, பாகிஸ்தான், கராச்சி நகரில் செய்தித்தாள் விற்கும் திருவாளர் ஷாஹித் (Zahid) அவர்களின் கதையும், அவர் கூறும் வாழ்க்கைத் தத்துவங்களும் உண்மையில் நம் உள்ளத்தைத் தொடுகின்றன.

“Lift up ideas” அதாவது, எண்ணங்களை மேலே எழுப்புங்கள்என்ற இணையத்தளத்திலும், YouTubeலும் பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று நிமிட காணொளியில் நாம் காணும் ஷாஹித் அவர்களின் வாழ்வும், வாழ்வைக்குறித்து அவர் பகிர்ந்துகொள்ளும் உண்மைகளும், நம் உள்ளத்தை உயர்த்துகின்றன.
"நான் பிறவியிலேயே பார்வையற்றவன். என் பெற்றோர், விவாகரத்து செய்துகொண்டு, வெவ்வேறு திருமணங்கள் செய்துகொண்டனர்" என்று தன் கதையைத் துவக்கும் ஷாஹித் அவர்கள், தான் பள்ளியில் கற்றுக்கொண்ட முக்கிய பாடங்கள் "பிச்சையெடுக்கக் கூடாது. நம்பிக்கையிழக்கக் கூடாது" என்று கூறுகிறார்.
மிகைப்படுத்தி சொல்லப்பட்டிருப்பதைப்போல் தோன்றினாலும், கவிதை நயத்துடன், அவர் கூறியுள்ள ஒரு கருத்து, ஆழமாக நம் உள்ளத்தில் பதிகிறது: "உன்னால் முடிந்தால், உன்னுடைய விண்ணகத்தை உருவாக்கிக்கொள். பிச்சையெடுத்து பெறும் விண்ணகத்தைவிட, நரகத்தின் நெருப்பு மேலானது" என்று ஷாஹித் அவர்கள், பிச்சையெடுப்பதற்கு எதிராக தன் கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.

கராச்சி நகர் சாலைகளில், செய்தித்தாள்களை விற்று, தன் பிழைப்பை நடத்துகிறார் ஷாஹித். 18 ரூபாய்க்கு விற்கப்படும் அந்தச் செய்தித்தாளுக்கு, மக்கள் தன்னிடம் 20 ரூபாய் தரும்போது, மீதிச் சில்லறையான 2 ரூபாயை அவர்களுக்கு கட்டாயமாக தான் திருப்பித்தருவதாகக் கூறியுள்ளார். அதை அவரே வைத்துக்கொள்ளலாம் என்று அவர்கள் கூறினாலும், அவர் வலுக்கட்டாயமாக அவர்களுக்கு 2 ரூபாயைத் திருப்பித் தந்துவிடுகிறார். காரணம் கேட்டால், அந்த 2 ரூபாய் மீண்டும், மீண்டும் கிடைக்கும் என்ற ஆசை தனக்குள் உருவாவதைத் தடுக்கவே தான் அப்படி செய்வதாகக் கூறுகிறார். சில்லறைகள் வழியே நமக்குள் நுழையும் பேராசை, நமக்கு ஆபத்தாக முடியும் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கும் ஷாஹித் அவர்கள், "ஒருவர் பேராசை கொண்டால், அவருக்கு வேறு எதுவும் உதவி செய்ய இயலாது" என்று கூறுகிறார்.
"உன் வாழ்வில் பெரும் துன்பம் நிகழும்போது, அதை இன்னும் மோசமாக்கும் வண்ணம் கண்ணீர் வடிக்காதே. நடந்ததைக் குறித்து அழுவதால், வாழ்க்கை இன்னும் மோசமாகும்" என்பது, ஷாஹித் அவர்கள் கொண்டிருக்கும் வாழ்க்கைத் தத்துவம்.

ஷாஹித் அவர்களைப் போல், தங்கள் உழைப்பை நம்பி, தங்களுக்குக் கிடைக்கும் ஊதியம் போதும் என்ற மன நிறைவுடன், அனைவரும் வாழ்ந்தால், இவ்வுலகில், எத்தனையோ தீமைகளை நாம் களையமுடியும். அவ்வழியில், ஷாஹித் அவர்கள், பார்வைத்திறன் அற்றவர் என்றாலும், பார்வைத்திறன் கொண்ட நமக்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு நோயைக் குறித்து, இரண்டாவது உருவகத்தில், இயேசு கேள்விகளை எழுப்புகிறார். நம்மில் இருக்கும் குறைகளைப் பற்றி அக்கறை கொள்ளாமல், அடுத்தவர் மீது அவசர முடிவுகள் எடுக்கும் பார்வைக் கோளாறு என்ற இந்த நோயைக் குறித்து சிந்திப்பது பயனளிக்கும். இப்பகுதியில், இயேசு, கோபம் கலந்த தொனியில் பேசுவதை உணர முடிகிறது:
நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்?” (லூக்கா 6:41-42) என்று இயேசு எழுப்பும் கேள்விகள், அடுத்தவரைப் பற்றி, அவசரமான முடிவெடுக்க நாம் கொண்டுள்ள ஆர்வத்தை தோலுரித்துக் காட்டுகிறது. இத்தகைய மனநிலை கொண்டோரை, 'வெளிவேடக்காரர்' என்று இயேசு கடிந்துகொள்கிறார்.

"வெளிவேடக்காரர்" அல்லது, ஆங்கிலத்தில், hypocrite என்ற சொல், 'hypokrites' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது. மேடையில் தோன்றி, முகமூடி அணிந்து நடிப்பவர்களுக்கு, 'hypokrites' என்று பெயர். மேடையேறி், முகமூடியணிந்து நடிப்பதில் தவறு ஏதுமில்லை. ஆனால், மேடையில் முகமூடி அணிவதுபோல், வாழ்விலும் முகமூடி அணிந்து வாழ்வோரைக் குறித்தே இயேசு "வெளிவேடக்காரர்" என்ற சொல்லை, ஒரு கடுமையான சொல்லாகப் பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக, பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோர், மக்களுக்கு முன் முகமூடிகள் அணிந்து வாழ்வதை, இயேசு கண்டனம் செய்தார்.

முகமூடி அணிந்து, இரட்டை வாழ்க்கை வாழ்தல் என்ற குறை, நம் அரசியல் மற்றும் மதத் தலைவர்களின் பார்வையை மறைக்கும் மரக்கட்டையாக மாறிவிடுகிறது. அந்தக் குறையை மக்கள் உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, மக்களிடம் காணப்படும் 'துரும்பு' போன்ற குறைகளை பெரிதுபடுத்துவதையும், அவற்றைக் களைய முற்படுவதையும் குறித்து, இயேசு தன் இரண்டாவது உருவகத்தில் குறிப்பிடுகிறார். அதே நோய், தன் சீடர்களையும், நம்மையும் ஆட்டிப்படைக்கக் கூடாது என்பது இயேசுவின் கவலை.

நம்மைப் பற்றிய அரைகுறையான பார்வை, அடுத்தவரைக் குறித்து அவசரமான, அர்த்தமற்ற முடிவுகள் ஆகியவற்றை விளக்கும் பல கதைகளில் இதுவும் ஒன்று:
கப்பல் பயணம் ஒன்றில், ஆயர் ஒருவர், முன்பின் அறிமுகம் இல்லாத மற்றொரு மனிதரோடு ஒரே அறையில் தங்கவேண்டியிருந்தது. அந்த மனிதரைப் பார்த்ததும், ஆயருக்கு நல்ல எண்ணங்கள் ஏற்படவில்லை. எனவே, அவர், இரவு உறங்கச் செல்வதற்கு முன், கப்பல் பொறுப்பாளரின் அறைக்குச் சென்றார். தன்னிடம் இருந்த விலையுயர்ந்த மோதிரம், கைக்கடிகாரம், 'பர்ஸ்' அனைத்தையும் அந்தப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "என் அறையில் இருப்பவர் மீது எனக்கு நம்பிக்கையில்லை. எனவே, இதை இன்றிரவு இங்கேயே வைத்திருங்கள்" என்று சொன்னார்.
ஆயர் தந்த அனைத்தையும் வாங்கிய பொறுப்பாளர் சிரித்தார். ஆயர் அவரிடம் காரணம் என்ன என்று கேட்டபோது, "உங்களோடு தங்கியிருக்கும் அந்த மனிதர் பத்து நிமிடங்களுக்கு முன் இங்கு வந்து, தன்னிடம் இருந்த பணம், கைக்கடிகாரம், தான் அணிந்திருந்த சங்கிலி அனைத்தையும் என்னிடம் தந்து, நீங்கள் சொன்ன அதே சொற்களை அவரும் சொன்னார்" என்று அந்தப் பொறுப்பாளர் கூறினார்.

இதையொத்த எண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு வேடிக்கைக் கவிதையின் உரைநடை சுருக்கம் இதோ:
விண்ணகத்தின் வாசலில் நுழைந்ததும், எனக்குப் பேரதிர்ச்சி. அங்கிருந்த அழகும், பிரம்மாண்டமும் என் அதிர்ச்சிக்குக் காரணம் அல்ல. அங்கிருந்தோரைப் பார்த்தபோது, உண்டான அதிர்ச்சி அது. எனக்குத் தெரிந்த திருடர்கள், போய்யர்கள், குடிகாரர்கள் அனைவரும் அங்கிருந்தனர். சாகும்வரை, எனக்குத் தொல்லை கொடுத்து வந்த என் அடுத்த வீட்டுக்காரர், அங்கு மகிழ்வுடன் அமர்ந்திருந்தார்.
என் அருகில் நின்ற இயேசுவிடம், "இதற்கு என்ன அர்த்தம்? எப்படி இத்தனை பாவிகள் இங்கிருக்க முடியும்?" என்று கேட்டேன். இயேசு என்னைப் பார்த்து சிரித்தார், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. பின்னர், அவர்கள் அனைவரும் மிக அமைதியாக இருந்ததைக் கண்டு, "ஏன் இவர்கள் இவ்வளவு அமைதியாக இருக்கின்றனர்?" என்று கேட்டேன். இயேசு என்னிடம், "அவர்கள் எல்லாரும் உன்னை இங்கு கண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அமைதியாக இருக்கின்றனர்" என்று சொன்னார்.

நம்மைப்பற்றிய அரைகுறையான கண்ணோட்டம், அடுத்தவரைப்பற்றிய அவசரக் கண்ணோட்டம் என்ற இரண்டும் கலந்த பார்வைக் கோளாறு என்ற இந்த நோய்க்கு இயேசு கூறும் மருந்து, அடுத்த வரிகளில் கூறப்பட்டுள்ளது. வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும். (லூக்கா 6: 42ஆ).
இந்த நோயைத் தீர்க்கும் முதல் படி, மரக்கட்டையாக நம் கண்களில், உள்ளங்களில் ஆழப்பதிந்திருக்கும் குறைகளை 'எடுத்து எறியுங்கள்' என்று இயேசு கேட்கிறார். அதன்பின், தெளிவான பார்வையுடன், உண்மையான அக்கறையுடன், நம் சகோதரர், சகோதரியிடம் காணப்படும் குறைகளை அகற்றமுடியும் என்று இயேசு நமக்குச் சொல்லித் தருகிறார்.
பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே நிலவும் உறவில் பெரும் தடையாக இருப்பது, பார்வைக் கோளாறுகள் என்பதை நாம் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறோம். Brian Gordon என்பவர், பறவைகளை வைத்து உருவாக்கியுள்ள fowllanguagecomics.com என்ற வலைத்தளத்தில், ஒரு தாய் அல்லது தந்தை பறவை செபிப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கருத்துப்படத்தில் பின்வரும் அழகான செபம் இடம்பெற்றுள்ளது:
"இறைவா, என் குழந்தைகள் அடங்காத முட்டாள்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத் தாரும். அவர்களை நோக்கி எப்போதும் கத்தாமல் இருக்கும் துணிவைத் தாரும். அவர்களுக்கு இந்த குணங்கள் எங்கிருந்து வந்தன என்பதைப் புரிந்துகொள்ளும் ஞானத்தைத் தாரும்"

நமது வாழ்வில் முகமூடிகளைக் களைந்து, குறிப்பாக, நம் பார்வையில், மரக்கட்டைகளாகத் தைத்து நிற்கும் குறைகளை தூர எறிந்து, தெளிவான பார்வையுடன் பிறரது குறைகளை அகற்ற உதவிகள் செய்யவும், அவர்களை உன்னத வழிகளுக்கு அழைத்துச் செல்லவும் இறைவன் நமக்கு அருள்தர வேண்டுமென்று செபிப்போம்.
இறுதியாக, நம் எண்ணங்கள், இந்தியா பாகிஸ்தான் உறவை நோக்கித் திரும்புகின்றன. விமானப்படை வீரர் அபினந்தன் வர்தமன் அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததன் வழியே, பாகிஸ்தான் அரசு துவங்கியுள்ள சமாதான முயற்சிகளுக்கு ஈடான முயற்சிகளை இந்தியாவும் மேற்கொள்ளவேண்டும் என்றும், இவ்விரு நாடுகளின் தலைவர்கள், தங்கள் பார்வைக் கோளாறுகளைக் களைந்து, நாட்டு மக்களின் நலனை மையப்படுத்தி, பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் மன்றாடுவோம்.


The Parent’s Prayer

No comments:

Post a Comment