09 March, 2019

Good and attractive temptations நல்ல, கவர்ச்சிகரமான சோதனைகள்

Jesus is shown the glory of the world

1st Sunday of Lent

Today, we begin our reflection with a sad news item reported in the media a few days back (March 5, 2019). The title of the news item, as given in BBC, grabs our attention first:
Czech man mauled to death by lion he kept in back yard
A man has been mauled to death by a lion caged at his family home in the eastern Czech Republic.
Michal Prasek owned the nine-year-old big cat and another lioness for breeding, reportedly drawing concern from local residents. Mr Prasek's father found his body in the lion's cage and told local media it had been locked from the inside. The animals - living in separate pens - were shot dead by police called to the scene. A police spokesperson told local media that the shootings were "absolutely necessary for them to get to the man".
Mr Prasek, 33, bought the lion in 2016 and the lioness last year, and kept them both in home-made enclosures in his back yard in the village of Zdechov. He had previously been denied planning permission to build the pens, and was subsequently fined for illegal breeding. But his conflict with the authorities reached a stalemate after he refused to let anyone onto his property.
A lack of alternative facilities in the Czech Republic, or any evidence of animal cruelty, also meant the lions could not be forcibly removed.
Mr Prasek made headlines last summer after a cyclist collided with the lioness as he was taking her for a walk on a leash. After intervention by police, the incident was deemed a traffic accident.
"Today's incident will perhaps finally help to resolve this long-term problem," said Zdechov mayor Tomas Kocourek. (BBC)

This news contains quite many disturbing elements and serves as a ‘parable’ to teach us how to deal with ‘temptations’ - the central theme of the Gospel on the First Sunday of Lent:
  • The lion cub (temptation at the initial stage), cute and seemingly harmless, reveals its innate nature when it grows up.
  • An individual can dig “one’s own grave” when the warnings given by neighbours are not heeded.
  • It is a pity that Mr Prasek died inside the cage he himself had designed (the circumstances we create to nurture our temptations), not knowing how to escape, or, not having the chance to escape.
  • Society as well as authorities, under the pretext of not having legal authority, become silent spectators in the face of obvious risks taken by individuals.

Every year, the First Sunday of Lent invites us to think about temptations. Temptation is an essential part of human life. No one escapes temptation - not even Jesus! Today’s Gospel (Luke 4:1-13) talks about this. How do we see temptation and the tempter… (call him / her satan, devil, the evil one, whatever)?

Years back, I was discussing this topic with a priest friend of mine. The moment he saw the theme ‘temptation’, he broke into an old Tamil film song that talked of the hero being beset with problems. “Sothanai mel sothanai podhumadaa saami…” (In Tamil, we generally use the word ‘sothanai’ for trials and temptations.) Lord, enough of this wave after wave of temptations and tribulations, cries the hero of this movie! One can easily feel the sense of desperation that runs through that song.

As human beings, we make an easy link between pain, trials, temptations and GOD. Every painful situation raises the WHY question and we easily raise questions like: Why does God make me / allow me to / go through this trial? Or, worse, why does God send me this trial?
One of the petitions we make in the prayer “Our Father”, has different versions: “Lead us not into temptations”, “Do not bring us to the test”. This petition seems to suggest that God is leading us to temptation, or, at the least, allows us to be tempted.

The opening lines of today’s Gospel give us some insight into where does temptation come from.
And Jesus, full of the Holy Spirit, returned from the Jordan, and was led by the Spirit for forty days in the wilderness, tempted by the devil. (Lk. 4:1-2)
The Holy Spirit led Jesus to the wilderness (desert) and the devil tempted Jesus there. The Holy Spirit chose the wilderness as a suitable place for Jesus to continue to savour the experience of Jordan - Now when all the people were baptized, and when Jesus also had been baptized and was praying, the heaven was opened, and the Holy Spirit descended upon him in bodily form, as a dove, and a voice came from heaven, “Thou art my beloved Son; with thee I am well pleased.” (Lk. 3:21-22)
But the devil had other plans. He/she wanted to rob this peak experience from Jesus. The devil approached Jesus when he was weak and famished. This is Satan’s signature trap. 

The traps that Satan set for Jesus and the way Jesus responded to them are lessons for our life. We can surely learn a lesson or two… or perhaps, three from the three temptations that Jesus faced - Luke 4:1-13. The devil did not tempt Jesus with anything bad. All the suggestions were harmless, innocent, and attractive.
This is the first lesson we learn from temptations… that temptations are good and attractive! The devil, almost, all the time, comes clothed in light. If the devil were to come to us in a grotesque form, either we shall run away from it, or, chase the devil away. The second lesson? That temptations or the devil come at the most opportune moment. Jesus was hungry. He needed to eat something. Needs and wants are the seedbed for temptations… more in the case of wants than needs.

In the first, as well as the third temptations, the devil tries to hook Jesus with a challenge… “If you are the Son of God…” (Lk. 4: 3,9). I am reminded of how children challenge one another into bravery or bravado. “Hey, if you are brave enough, climb this tree, do this or do that…” Such a challenge implies that if someone does not take up the challenge, he/she is a coward. The definition of bravery lies in climbing the tree. Such bravado usually leaves our kids with a few bruises, or broken bones!

With the formula, “If you are the Son of God…” the devil tries to define what it means to be a Son of God… Turn these stones into bread. What for? If the devil had at least suggested that Jesus could satisfy his hunger with the bread, there would be some meaning in turning stones into bread. But, both the gospel accounts of Luke and Matthew mention that the devil wanted the stones to be turned into bread. Period. This is simple magic, simple exhibition of power. The devil seems to say that such a magic would prove or establish Jesus as the Son of God. The devil was trying to give Jesus a job description of the Son of God. Jesus did not want to fit into this definition as prescribed by the devil. Jesus, who did not want to use his power to satisfy his personal hunger, would use the same power later on to feed thousands. Power is not to be used to enhance one’s own needs and wants.
It is interesting to note that the phrase ‘if you are the Son of God’ is repeated on Calvary: And those who passed by derided him, wagging their heads and saying, “You who would destroy the temple and build it in three days, save yourself! If you are the Son of God, come down from the cross.” (Mt. 27:39-40)
It is again repeated without the conditional ‘if’ by the centurion and other soldiers: When the centurion and those who were with him, keeping watch over Jesus, saw the earthquake and what took place, they were filled with awe, and said, “Truly this was the Son of God!” (Mr. 27:54)

The second temptation was too good to be true. The devil was offering the whole world on a platter. After all, Jesus came as a human being just to win over the world. Now, it was offered on a platter. Of course, there were strings attached to this offer. Jesus needed to make compromises, a simple surrender to the devil. Jesus, who refused this offer, would later on surrender to God the Father while on the cross. Through that surrender, he would win the world. Fr Bill Grimm commenting on this temptation, portrays Jesus’ position as - "Better to be a powerless worshipper of the Lord, than a powerful worshipper of the evil". We need to examine ourselves and see where we stand with regard to the powers of the world. Compromises and the resultant corruption seem to have seeped into all the spheres of human life today. Compromise and corruption seem to be the rule rather than the exception.

The third temptation of Jesus would have thrilled any one of us living today. We live in an ‘instant’ world. We need quick results. Instead of spending 30 years of seclusion in Nazareth, 3 years of hard public life, 3 days of hunger and brutal treatment, and the final 3 hours of excruciating torture on the cross, all Jesus needed to do was to jump down from the pinnacle of the Jerusalem temple. The whole world would be at his feet. The moment he jumped, heavens would have opened; myriads of angels would have come to carry him down to the ground in one of the most spectacular special-effects-scene. The whole of Jerusalem, nay, the whole world would have witnessed who the Messiah was. One moment of brilliance, instant success. What else one could ask for? Thank God, Jesus was not an ‘instant’ person. He chose the 30+3+3+3 path!

'Tis one thing to be tempted, another thing to fall' (William Shakespeare). Jesus was tempted, but did not fall. ‘Being tempted’ happens to all of us; but ‘falling’ is our personal choice. Let us pray that the Lord gives us enough backbone to stand erect and not fall.

Jesus is tempted
https://www.torch.op.org/

தவக்காலம் முதல் ஞாயிறு

கடந்த வாரம் (மார்ச் 5ம் தேதி) வெளியான ஒரு துயரமான செய்தி, நம் ஞாயிறு சிந்தனைகளுக்கு வித்திடுகிறது. இச்செய்திக்கு தமிழில் வழங்கப்பட்டுள்ள தலைப்பு, நம் சிந்தனைகளை இன்னும் ஆழப்படுத்துகிறது. "அடைத்து வளர்த்த சிங்கத்தால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்" (பிபிசி-தமிழ் - மார்ச் 6) என்ற இத்தலைப்பும், இச்செய்தியும் இன்று நாம் சிந்திக்கவிருக்கும் 'சோதனை' என்ற கருத்துக்கு, பொருத்தமானதோர் உவமையாக அமைகிறது.

செக் குடியரசு நாட்டில் வாழ்ந்த மிஹால் பிராஷெக் (Michal Prasek) என்ற இளைஞர், சில ஆண்டுகளுக்கு முன், இரு சிங்கக்குட்டிகளை வாங்கிவந்தார். சூழ இருந்தோர் சொன்னதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன் கிராமத்தில் இவ்விரு சிங்கங்களையும் வளர்த்துவந்தார்.
சட்டத்துடன் அவ்வப்போது அவருக்கு மோதல்கள் எழுந்தன. இருந்தாலும், அவர், தனக்குத் தெரிந்த முறையில் ஒரு கூண்டை உருவாக்கி, அதில் தன் இரு 'செல்ல மிருகங்களையும்' வளர்த்துவந்தார். சென்ற வாரம் ஒருநாள், மிஹால் அவர்களைக் காண, அவரது தந்தை சென்றபோது, சிங்கக் கூண்டில் தன் மகன் இறந்து கிடந்ததைப் பார்த்து, காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
இறந்துகிடந்த மிஹால் அவர்களை நெருங்கவிடாமல், சிங்கங்கள் அச்சுறுத்தியதால், அவ்விரு சிங்கங்களையும் சுட்டுக்கொன்று, மிஹால் அவர்களின் உடல் மீட்கப்பட்டது. இளையவர் மிஹால் அவர்கள், சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்தபோது, அவர் உருவாக்கிய கூண்டு, தவறான முறையில் மூடிவிடவே, மிஹால் அவர்களால் தப்பிக்கமுடியாமல் போனது என்பது தெரியவந்தது.

மேலும் சில நெருடலான விவரங்கள் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளன. செக் குடியரசு வகுத்துள்ள, விலங்குகள் நலம் குறித்த சட்டங்களின்படி, எந்த விலங்கையும் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தக்கூடாது என்பதால், அவ்விரு சிங்கங்களும் வேறு இடத்துக்கு மாற்றப்படவில்லை என்று இச்செய்தி கூறுகின்றது.
அத்துடன், கடந்த ஆண்டு, மிஹால் அவர்கள் தன் சிங்கத்துடன் வெளியில் நடந்து சென்ற வேளையில், சைக்கிளில் வந்த ஒருவர், அந்த சிங்கத்தின் மீது மோதி, அது, அப்பகுதியில் தலைப்புச் செய்தியாக மாறியது என்றும், ஆனால், அந்நிகழ்வை, ஒரு சாலை விபத்து என, காவல் துறையினர் பதிவு செய்தனர் என்றும், இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பலவழிகளிலும், வேதனையையும், அதிர்ச்சியையும் உருவாக்கும் இச்செய்தி, சோதனைகளுடன் நாம் கொள்ளும் ஆபத்தானத் தொடர்புகள், அதனால், நாம் அடையும் விளைவுகள், சோதனைகளில் சிக்கிக்கொள்வோருக்கு சமுதாயம் செய்யத்தவறும் கடமைகள், ஆகியவற்றிற்கு ஓர் உவமையாகத் தெரிகிறது.
·         சிங்கக்குட்டி, அதாவது, சோதனை, பார்க்க அழகாக, ஆபத்தின்றி இருக்கிறதென்று எண்ணி, அதை வளர்க்கத் துவங்கினால், வளர்ந்தபின், அது தன் இயல்பை வெளிப்படுத்தும் வேளையில், அதை சமாளிக்க இயலாமல் போகும்.
·         சிங்கம் வளர்ப்பதில் உள்ள ஆபத்துக்கள் குறித்து அயலவர் எச்சரிக்கை தரும்போது, அதற்கு செவிமடுக்க மறுத்தால், அது, பெரும் ஆபத்தில் முடிவடையும்.
·         இளையவர் மிஹால் அவர்களால் உருவாக்கப்பட்ட கூண்டுக்குள் அவரே அகப்பட்டுக்கொண்டதும், அவர் விரும்பி வளர்த்த சிங்கத்தால் கொல்லப்பட்டிருப்பதும், நமக்கு முக்கியமான பாடங்களாக அமைகின்றன.
·         தனியொருவர், ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடும்போது, அதிகாரத்தில் இருப்போர், சட்டத்தின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, அந்த முயற்சிகளைத் தடுக்க முடியாமல் தடுமாறுவது, இச்செய்தியில் வெளிச்சமாகிறது.
·         அதேபோல், ஓர் ஆபத்தை தலைப்புச்செய்தியாக்கத் துடிக்கும் ஊடகங்கள், அந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிகள் செய்கின்றனவா என்ற கேள்வியும் எழுகின்றது.

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசு சந்தித்த சோதனைகளைக் குறித்து சிந்திக்க, தாய் திருஅவை அழைப்பு விடுக்கிறார். சில ஆண்டுகளுக்குமுன், இந்த ஞாயிறுக்குரிய மறையுரையைப்பற்றி அருள்பணியாளர் ஒருவரோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைய நற்செய்தியின் மையக்கருத்து 'சோதனை' என்று நான் சொன்னேன். அவர் உடனே, "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற ஒரு திரைப்படப் பாடலைப் பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. 'சாமி, இனி எனக்குச் சோதனைகளை அனுப்பாதே' என்று கெஞ்சும் பாணியில் அமைந்துள்ள இந்தப் பாடல் வரியில், நாம் சந்திக்கும் சோதனைகளுக்குக் காரணம் கடவுள், என்ற கருத்து மறைந்துள்ளது.

சோதனைகள் கடவுளிடமிருந்து வருகின்றனவா? அப்படித்தான் நம்மில் பலர் எண்ணுகிறோம். பேசுகிறோம். பிரச்சனைகள் பல நம்மைச் சூழ்ந்து பயமுறுத்தும்போது, "கடவுளே, ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?" என்று கடவுளிடம் முறையிடுகிறோம். அல்லது, "கடவுள் ஏன்தான் இப்படி என்னைச் சோதிக்கிறாரோ, தெரியவில்லை" என்று மற்றவர்களிடம் புலம்புகிறோம்.

நாம் பயன்படுத்தும் 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபத்தில், "எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்" என்று, பழைய மொழிபெயர்ப்பில் எழுப்பிய விண்ணப்பம், புதிய மொழிபெயர்ப்பில், "எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்"  என்று கூறப்பட்டுள்ளது. இதே விண்ணப்பம், பிற மொழிகளில், வெவ்வேறு சொற்களில் கூறப்பட்டுள்ளது: "எங்களைச் சோதனைக்கு இட்டுச் செல்லாதேயும்", "எங்களைச் சோதனைக்கு அழைத்துச் செல்லாதேயும்" என்று பல வடிவங்களில் கூறப்படும் இந்த விண்ணப்பம், இறைவனுக்கும், சோதனைக்கும் உள்ள தொடர்பைக் குறித்து சிந்திக்க சவால் விடுகிறது. இந்த செபத்தை நாம் அடிக்கடி பயன்படுத்துவதால், இறைவனையும், சோதனையையும் இணைத்து நம் எண்ணங்கள் எவ்வாறு உள்ளன என்ற ஆன்ம ஆய்வை மேற்கொள்வது நல்லது.

சோதனைகள் கடவுளிடமிருந்து வருகின்றனவா? என்ற கேள்விக்கு, இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகள் ஓரளவு தெளிவைத் தருகின்றன.
இயேசு, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர், அவர், அதே ஆவியால், பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். (லூக்கா 4:1-2) என்ற சொற்களை ஆய்வு செய்யும்போது, இரு எண்ணங்கள் தெளிவாகின்றன:
·          பாலை நிலத்திற்கு அழைத்துச் சென்றது தூய ஆவியார்.
·          அங்கு, அலகை அவரைச் சோதித்தது. அதுவும், இயேசு, வலுவற்ற நிலையில் இருந்தபோது, அலகை அவரைச் சோதித்தது.

அடிப்படைத் தேவைகளும் எளிதாகக் கிடைக்காத ஓரிடம், பாலை நிலம். அவ்விடத்தில், இறைவனை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்பதை நமக்கு உணர்த்த, தூய ஆவியார், இயேசுவை, பாலை நிலத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு, இயேசு, நாற்பது நாள் தவத்திற்குப்பின், தன் சக்தியை இழந்து நின்றதைக் கண்ட அலகை, அத்தருணத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. இதுதான் அலகையின் தாரக மந்திரம். மனிதர்கள் நலிவுற்று, நம்பிக்கையிழந்து நிற்கும் வேளையில், கவர்ச்சிகரமான சோதனைகளுடன் நம்மைத் தேடி வருவது சாத்தானுக்கு பிடித்தப் பொழுதுபோக்கு.

அலகை, இயேசுவுக்கு தந்த சோதனைகளும், அவற்றை இயேசு சந்தித்த விதமும், நமக்குப் பாடங்களைச் சொல்லித்தருகின்றன. சோதனைகள் அழகானவை என்பது முதல் பாடம். இயேசுவின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாடகங்களைப் பார்த்திருக்கிறோம். அந்நாடகங்களில் வரும் சோதனைக் காட்சிகளில், சாத்தான், கருப்பு உடையணிந்து, முகமெல்லாம் கரி பூசி, தலையில் இரு கொம்புகள் வைத்து, நீண்ட இரு பற்களோடு பயங்கரமாய் சிரித்துக்கொண்டு வரும். இவ்வளவு பயங்கரமாய் சாத்தான் வந்தால், அதை விட்டு ஓடிவிடுவோம், அல்லது, அதை விரட்டியடிப்போம். ஆனால், வாழ்வில் நாம் சந்தித்துள்ள, இனியும் சந்திக்கவிருக்கும் சாத்தான்களும், அவை கொணரும் சோதனைகளும், பயத்தில் நம்மை விரட்டுவதற்குப் பதில், நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. அலகையும், அதன் சோதனைகளும், அவ்வளவு அழகானவை.

மேலோட்டமாகப் பார்த்தால், இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மூன்று சோதனைகளும் நல்ல சோதனைகள். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி அலகை இயேசுவைத் தூண்டவில்லை.

இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம் கல்லை அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி அவரது தேவையைப் நிறைவு செய்துகொள்ளத் தூண்டியது சாத்தான். நேரம் அறிந்து, தேவை உணர்ந்து வந்த ஒரு சோதனை. தேவைகளை அதிகமாக்கிக்கொள்ளும்போது, அவற்றை எவ்வழியிலாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற சோதனைகளும் அதிகமாகும்.

சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே அழகானது. "நீர் இறைமகன் என்றால், இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" (லூக்கா 4:3) என்ற சவாலை சாத்தான் முன்வைக்கிறது. சிறுவர்கள் விளையாடும்போது, இது போன்ற சவால்கள் எழும். "நீ வீரனா இருந்தா, இந்தப் பூச்சியைப் பிடிச்சிடு, அந்த மரத்துல ஏறிடு..." போன்ற சவால்கள். சவால்களைச் சந்திக்காவிட்டால், அச்சிறுவன் வீரன் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுவிடும். இதற்குப் பயந்து, வீர சாகசங்கள் செய்து, அடிபட்டுத் திரும்பும் சிறுவர்களைப் பார்த்திருக்கிறோம். இயேசுவிடம் இப்படி ஒரு சவாலை முன் வைக்கிறது சாத்தான்.
இன்றைய நற்செய்தியில், "நீர் இறை மகன் என்றால்..." என்ற கூற்றை, அலகை, இயேசுவிடம் இருமுறை கூறுகிறது (லூக்கா 4:3,9). இவ்வாறு சவால்விடும்போது, இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்கவேண்டும் என, அலகை, இலக்கணம் எழுதுவதையும் உணரலாம். இறைமகன் என்றால், புதுமைகள் நிகழ்த்தவேண்டும், அதுவும் தன்னுடைய சுயநலத் தேவையை நிறைவு செய்யும் வண்ணம் புதுமை செய்யவேண்டும் என்பது அலகை, இறைமகனுக்கு வகுத்த இலக்கணம். தன் சுயநலத் தேவையை நிறைவு செய்ய புதுமைகள் செய்பவர்கள், வித்தைகள் காட்டும் மந்திரவாதிகளாய் இருக்கமுடியுமே தவிர, இறைவனாகவோ, இறைமகனாகவோ இருக்க முடியாது.
இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதில், அழகானது. தன் உடல் பசியை விட, ஆன்மப் பசி தீர்க்கும் உணவைப்பற்றி பேசினார், இயேசு. மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை  என்று, மோசே சொன்ன சொற்களை இயேசு கூறுகிறார். (இணைச்சட்டம் 8:3) தன் சொந்த பசியைத் தீர்த்துக்கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும்.
நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகள், திறமைகள், எதற்கு? சுயத் தேவைகளை நிறைவு செய்வதற்கு மட்டுமா? சிந்திக்கலாம், இயேசுவிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.

இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகை வென்று, அதை தந்தையிடம் ஒப்படைக்கத்தானே இயேசு மனுவுருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அங்கு சாத்தான் வைத்த நிபந்தனை, அதிர்ச்சியளிக்கிறது.
இயேசு உலகை வெல்லவேண்டுமானால், அவர் ஒரு 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்யவேண்டும். சாத்தானோடு சமரசம்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது"தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன்" என்று இறைவனிடம் சரணடைந்தார்... உலகைத் தன் வசமாக்கினார்.
சக்தி பெறுவதற்கென, தீயோனிடம் சரண் அடைவதற்குப் பதில், சக்தியற்றவராக, இறைவனிடம் சரண் அடைவது மேல் என்று, இயேசு கூறும் மறுப்பைக் கேட்கும்போது, 'பிழைக்கத் தெரியாதவர்' என்று எண்ணத் தோன்றுகிறதா? தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை அச்சக்திகளுக்குமுன் சரணடைந்திருக்கிறோம்? இப்படி 'அட்ஜஸ்ட்' செய்வதே நம் வாழ்க்கையாகி விட்டதா? என்ற கேள்விகளுக்குப் பதில் தேட முயல்வோம்.

மூன்றாவது சோதனை? இறைமகன் உலகை வெல்வதற்கு, உலகை மீட்பதற்கு எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை அலகை காட்டுகிறது. எருசலேம் கோவிலின் மேலிருந்து இயேசு குதிக்கவேண்டும். உடனே, வானங்கள் திறந்து, விண்ணவர் ஆயிரமாய் இறங்கி வந்து, இயேசுவின் பாதம் தரையை தொடாமல் அவரைத் தாங்கிய வண்ணம், தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வருவதற்கு ஓர் ஒத்திகை போல இந்தக் காட்சி அமையும். எருசலேம் முழுவதும், ஏன், உலகம் முழுவதுமே இயேசுவின் சீடர்களாகிவிடுவர்.
30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் கடினமானப் பணி, இறுதி 3 நாட்கள் கொடிய வேதனை, இறுதி 3 மணி நேரங்கள் சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் தேவையில்லை. ஒரு நொடிப்பொழுது போதும். எருசலேம் கோவில் சாகசம் ஒன்று போதும். உலகம் இயேசுவின் காலடியில் கிடக்கும் என்ற கனவுகளை அடுக்கிவைத்தது, சாத்தான். விளையாடியது போதும் என்று, இயேசு, சாத்தானை விரட்டியடிக்கிறார்.

மூன்றாவது சோதனையில் ஒரு கூடுதல் சிந்தனை உண்டு. முதல் இரு சோதனைகளிலும், சாத்தான் வெறும் ஆலோசனைகள் சொல்ல, சாத்தானின் வாயடைக்க, இயேசு, இறை வாக்குகளைப் பயன்படுத்துகிறார். மூன்றாவது சோதனையிலோ, அலகை, இறை வார்த்தையைப் பயன்படுத்தி, ஆலோசனை வழங்குகிறது. சாத்தானும் வேதம் ஓதும்”, அல்லது, Even the devil can quote scripture” என்ற பழமொழிகளை அறிவோம்.
வேதங்கள், வேத நூல்கள் பலவும், தவறான இடங்களில், தவறானக் காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய ஓர் உண்மை. உண்மை, நீதி இவை அடிக்கடி விலை பேசப்படும் நமது நீதிமன்றங்களில், தலைவர்களின் பதவிப்பிரமாணங்களில், விவிலியத்தின் மீது, அல்லது, பிற வேத நூல்களின் மீது, சத்தியப் பிரமாணங்கள் எடுக்கப்படுகின்றன. வேதனை மேல் வேதனை... போதுமடா சாமி.

கண்மூடித்தனமாக நுகர்வுக் கலாச்சாரத்தைப் பின்பற்றி, சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், குறுக்கு வழிகளில் பலன் தேடுதல், சுய விளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீயச் சக்திகளோடு சமரசம் செய்தல் என்று நம்மைக் கவர்ந்திழுக்கும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து ஏதாவது பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியுமா? கற்றுக்கொண்டதை செயலாக்க விருப்பமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தவக்காலம் நல்லதொரு நேரம்.
நாம் துவங்கியிருக்கும் தவக்காலம், மேன்மைதரும் மாற்றங்களை உருவாக்கும் அருள்நிறை காலமாக விளங்க இறைவனை வேண்டுவோம். இந்த மாற்றங்கள் நமக்குள் நிகழவிடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தும் மனத்தளர்வு, நம்பிக்கையின்மை ஆகிய சோதனைகளை வெல்வதற்கு இறைவனிடம் துணிவை வேண்டுவோம்.


No comments:

Post a Comment