06 March, 2020

‘Weakness’ and ‘Glory’ ‘நலிவுறுதல்’, ‘மகிமை பெறுதல்’

Transfiguration – Titian, c1560, San Salvador

2nd Sunday of Lent – International Women’s Day

Every year, on the first Sunday of Lent, we are invited to look at Jesus being tempted by the devil in the desert. On the second Sunday of Lent, we are invited to a mountain top to witness the transfiguration of Jesus. Last Sunday we met Jesus, in one of his weakest moments. Today we meet him in a moment of glory. Both these events provide an opportunity to reflect on the concepts of ‘weakness’ and ‘glory’. This year,  since the Second Sunday of Lent coincides with March 8 – the International Women’s Day, there is an additional invitation for each one of us to think about ‘weakness’ and ‘glory’ in the context of women.

Five years back, on March 8, 2015, on the International Women’s Day, BBC had broadcast a documentary – ‘India’s Daughter’. This documentary, created by Leslee Udwin, a lady from the United Kingdom, had earned a ban in India and whipped up a lot of discussion. This documentary talks of that painful, tragic night (16 December 2012) in Delhi, when a young lady (now, popularly known as ‘Nirbhaya’, meaning, ‘fearless’) was brutally gang raped in a running bus and later thrown out of the bus. She ultimately succumbed to the brutality unleashed on her.

This case drew unprecedented protests across India and the case was put on fast track to deliver justice. The culprits were given death sentence in 2013. Ever since January 2020, there have been quite a few news items about the delay in carrying out the death sentence. Whether carrying out death sentences is the solution to the problems women face in India, or elsewhere in the world, is a big question. The ‘Nirbhaya’ case as well as the case of Asifa Bano, an eight-year-old girl in Kashmir in 2018, and many other instances, haunt the Indian conscience.

We know that among the many cultures that give women high honour, India must be ranking very high, since we have enshrined many female deities in our temples. But, in real life, women face the most brutal treatment from men and women alike! This is not the case in India alone. All over the world, women are treated badly.

On 3 March, 2020, there was a new UN (United Nations) report on how women are treated today. This report is titled: “A New Era for Girls: Taking stock on 25 years of progress.” Twenty-five years after the historic Beijing women’s conference in China (September, 1995) – a milestone in advancing equal rights – violence against women and girls is not only common, but widely accepted, says the new UN report.

The report highlighted that in 2016, women and girls accounted for 70 per cent of detected trafficking victims globally, mostly involving sexual exploitation. Moreover, an astonishing one-in-20 girls between the ages of 15 and 19, has experienced rape in her lifetime. According to this report, each year 12 million girls are married in childhood, and four million risk FGM (Female genital mutilation).

“While the world has mustered the political will to send many girls to school, it has come up embarrassingly short on equipping them with the skills and support they need not only to shape their own destinies, but to live in safety and dignity”, said the UNICEF chief Henrietta Fore.
“Access to education is not enough”, maintained the UNICEF chief, adding, “we must also change people’s behaviours and attitudes towards girls... True equality will only come when all girls are safe from violence, free to exercise their rights, and are able to enjoy equal opportunities in life.”

This year, the International Women’s Day is celebrated with the theme: An equal world is an enabled world. Equality is surely a very noble, but, achievable dream! As we reflect on the Transfiguration of our Lord, we pray that our world will be transformed (transfigured) into a place where every woman and girl child feels safe, secure and respected as an equal partner!

The underlying requirement of any transformation (transfiguration) is change. Change is an essential part of human beings as well as other living forms. When change ends, we usually presume that life has ended. But, even after death, change (we call it decay) takes place. Change is the common thread that ties the first reading (Genesis 12:1-4) as well as the gospel (Matthew 17:1-9) – change of place for Abram, and the transfiguration of Jesus.
Change is a key theme during the Lenten season - change of heart, change of our lifestyle. Most of us would tend to believe that when our surrounding changes we also change. On deeper analysis, we can see that radical, lasting changes begin, mostly, from within.

The first reading from the Book of Genesis talks of the baby steps Abram took in order to be changed to Abraham. God invites Abram to leave his familiar surroundings into the unknown, trusting in God alone. Not a great deal, one would say. If this were to happen when a person was in the prime of life, it surely is not a great deal. But, when Abram was called for this ‘adventure’, he was 75 years old. Baby steps at the age of 75? Here is the invitation from God:
Genesis 12: 1-4
The LORD had said to Abram, “Go from your country, your people and your father’s household to the land I will show you. I will make you into a great nation, and I will bless you; I will make your name great, and you will be a blessing. I will bless those who bless you, and whoever curses you I will curse; and all peoples on earth will be blessed through you.”
So Abram went, as the LORD had told him; and Lot went with him. Abram was seventy-five years old when he set out from Harran.

When we read this passage, our minds instinctively turn to many senior persons who, in a way, are ‘forced’ to take the leap into the unknown. I am thinking of parents who have to shift their familiar surroundings in order to be with their children who have settled down in another country. Spare a moment to pray for them. God promised to Abram: “I will bless you; I will make your name great, and you will be a blessing… and all peoples on earth will be blessed through you.” We pray that senior persons, who have to face the tough decision of uprooting and planting themselves in unfamiliar circumstances, be filled with God’s blessings and become a blessing to others!

Reflecting on today’s Gospel on the Transfiguration of Jesus (Matthew 17: 1-9), Fr. John Eckert, a Pastor in USA, makes some interesting observations which are worth our special attention:
Like Peter, James, and John, if we’re going to encounter the splendor of our Lord, we have to let ourselves be led out of our daily routine, and up a high mountain. Notice one slight difference though, between the mountain we heard about in last week’s Gospel and the mountain we hear about this Sunday. During the temptation, the devil took Jesus up a very high mountain. Our Lord, however, leads the three up a high mountain. The wording is the same, except for that word very. I point this out because the devil likes to deal in extremes. Our Lord, on the other hand, does not do the extreme, but “builds on nature.” For Lent, you don’t have to rush to somewhere very far away; you do not have to take on penances which are very far beyond your normal routine. Rather, set some dedicated time aside, and ask our Lord to lead you deeper into your prayer life.

Israelites believed that mountains were special places to meet God. Jesus must have felt the same way. Hence, on arriving at the mountain top with his disciples, Jesus must have felt the embrace of God’s loving presence and this feeling must have resulted in his Transfiguration. As a climax of this experience, the endearing affirmation of the Father which sounded in the river Jordan (Mt. 3
:17) is repeated once again: “This is my Son, whom I love; with him I am well pleased. Listen to him!” (Mt. 17:5).

Change that begins from within can transform people and transform the world around them. This change is more than helped by true love. Here is a story from ‘The Song of the Bird’ that ties up change and love of God quite neatly:
I was a neurotic for years. Anxious, depressed, selfish. And everyone kept telling me to change.
And I resented them, and agreed with them, and wanted to change, but simply couldn’t, no matter how I tried. What hurt the most was that, like the others, my closest friend kept urging me to change. So I felt powerless and trapped.
One day he said “Don’t change. I love you as you are.”
Those words were music to my ears: “Don’t change. Don’t change. Don’t change... I love you as you are.”
I relaxed. I came alive. And, suddenly, I changed!
Now I know that I couldn’t really change till I found someone to love me whether I changed or not.
Is this how you love me, God?

In today’s Gospel, we meet, once again, the impetuous Peter who wanted to prolong the glorious ‘experience’ of the Transfiguration, by erecting tents. Peter had seen an ‘ordinary’, day to day edition of Jesus up to that point. Now, he was surprised by the ‘glorious’ Jesus whose ‘garments became white as light’. (Mt 17:2) Peter wished to remain there for the rest of his life.
Peter said to Jesus, “Lord, it is well that we are here; if you wish, I will make three booths here, one for you and one for Moses and one for Eli′jah.” (Mt 17:4) Very often we do have a similar temptation of putting God in cosy booths we have created.

God intervened and said, “This is my Son, whom I love; with him I am well pleased. Listen to him!” (Mt. 17:5). This was an indirect reminder to Peter as well as to us, not to be lost in the moment, but to keep silent and listen to the Son. What would the Son say? “It is nice to stay on like this. But, we need to get back to the people to ‘transfigure’ them.”

Getting down from the cosy comfort of the Transfiguration, to the ‘disfigured’ world requires lot of faith. Let us conclude our reflection for this Sunday praying for the ‘disfigured’ world, especially for the following intentions:
  • That all of us, especially those suffering from the onslaught of COVID-19, may come out of this crisis with God’s grace.
  • That through a ‘change of heart’ experienced by all of us, women all over the world are treated with dignity and equality.
  • That senior citizens who are forced to change from familiar surroundings to strange places may be blessed by God abundantly and thus become a blessing themselves.
  • That we learn deeper lessons of ‘change’ that is an inevitable part of our human experience, especially during the Lenten Season.

International Women’s Day 2020

தவக்காலம் 2ம் ஞாயிறு - உலக மகளிர் நாள்

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு, பாலைநிலத்தில், சோதனைக்குள்ளாகும் நிகழ்வையும், இரண்டாவது ஞாயிறன்று, அவர், மலைமீது, தோற்றமாற்றம் பெறும் நிகழ்வையும் சிந்திக்க தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். உடல் நலிவுற்று, தனிமையில் போராடிக்கொண்டிருந்த இயேசுவை, கடந்த வாரம் சந்தித்த நாம், இந்த வாரம், விண்ணக மகிமையில் ஒளிர்விடும் இயேசுவைச் சந்திக்கிறோம். மனிதவாழ்வில், நலிவுறும் நேரங்களும், மகிமையில் ஒளிர்விடும் நேரங்களும், மாறி மாறி வருவதை, தவக்காலத்தின் முதலிரு ஞாயிறுகளும் நமக்கு உணர்த்துகின்றன. நாம் ஒவ்வொருவரும், நலிவுறும் நேரங்களையும், மகிமை பெறும் நேரங்களையும் தகுந்த கண்ணோட்டத்துடன் புரிந்துகொள்வது பயனளிக்கும்.

நலிவுறுதல்’, ‘மகிமை பெறுதல் என்ற இரு மனித நிலைகளைச் சிந்திக்க, இஞ்ஞாயிறு, கூடுதலாக, இரு காரணங்கள் உள்ளன. நாம், எவ்வளவுதான் மகிமை பெற்றதாக எண்ணிக்கொண்டிருந்தாலும், அடிப்படையில், நாம் நலிவுற்றவர்கள் என்பதை, உலகெங்கும் பரவியிருக்கும் COVID-19 தொற்றுக்கிருமி, நமக்கு உணர்த்தி வருகிறது என்பது, முதல் காரணம். இரண்டாவது காரணம், மார்ச் 8, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக மகளிர் நாள். நலிவுற்றவர்கள் எனக் கருதப்படும் பெண்கள், அவர்களுக்கு உரிய, உண்மையான மகிமையைப் பெறுவதற்குத் தேவையானச் சூழலை, மனித சமுதாயம் உருவாக்கினால், இவ்வுலகம், உண்மையில் உருமாற்றமடையும். இந்த இரு உண்மைகளைப் புரிந்துகொள்ள, இந்த ஞாயிறு வழிபாடு நமக்கு உதவட்டும்.

2015ம் ஆண்டு, அனைத்துலக மகளிர் நாளைச் சிறப்பித்த வேளையில், பி.பி.சி (B.B.C) தொலைக்காட்சி, ஒளிபரப்பு செய்த ஓர் ஆவணப்படம், உலகின் கவனத்தை ஈர்த்தது.  "இந்தியாவின் மகள்" (India's Daughter) என்ற தலைப்பில், லெஸ்லி உட்வின் (Leslee Udwin) என்ற பெண்மணி உருவாக்கிய ஆவணப்படம் அது. 2012ம் ஆண்டு, இந்தியத் தலைநகர் டில்லியில், ஓர் இளம்பெண், பாலியல் வன்கொடுமைக்கும், கொடூரமான சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட நிகழ்வை மையப்படுத்தி, இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம், இந்தியக் கலாச்சாரத்தையும், இந்திய சமுதாயத்தையும், உலகினர் பார்வையில் களங்கப்படுத்துகிறது என்ற காரணம்காட்டி, இந்திய அரசும், அரசியல் தலைவர்களும், இப்படத்தை, இந்தியாவில் திரையிடுவதற்குத் தடை செய்தனர். இந்தப் படம் மையப்படுத்தியுள்ள அந்த இளம்பெண்ணின் வழக்கு, இந்தியர்களின் மனசாட்சியை இன்றும் கீறியவண்ணம் உள்ளது என்பது உண்மை.
இக்கொடுமையைச் செய்தவர்களுக்கு, 2013ம் ஆண்டு, தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. அத்தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து, இவ்வாண்டு சனவரி மாதம் முதல், பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இக்குற்றவாளிகளை தூக்கிலிடுவது, பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளுக்கு தகுந்த தீர்வுதானா என்பது, நாம் சிந்திக்கவேண்டிய பெரும் கேள்வி.
'நிர்பயா' என்று குறிப்பிடப்படும் இப்பெண்ணுக்கு, 2012ம் ஆண்டு நிகழ்ந்த கொடுமையைப் போலவே, 2018ம் ஆண்டு, அசிஃபா பானு என்ற 8 வயது சிறுமிக்கும், 2019ம் ஆண்டு, தெலங்கானாவில், 26 வயது நிறைந்த பெண் மருத்துவருக்கும் நிகழ்ந்தது. பெண்களை வதைப்பதில், இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் குற்றவாளிகளே. இக்கருத்தை, ஐ.நா.அவையின் அண்மைய அறிக்கை உறுதி செய்கிறது.

ஒவ்வோர் ஆண்டும், உலக மகளிர் நாள் நெருங்கும் வேளையில், ஊடகங்களும், உலக நிறுவனங்களும், பெண்களைப்பற்றிய கட்டுரைகளையும், நிகழ்ச்சிகளையும் வழங்கிவருகின்றன. ஐ.நா.அவையின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப், "இளம்பெண்களின் ஒரு புதிய யுகம்: 25 ஆண்டுகளின் முன்னேற்றம் குறித்து ஓர் ஆய்வு" என்ற தலைப்பில், மார்ச் 3, கடந்த செவ்வாயன்று, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
1995ம் ஆண்டு, சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற நான்காவது பெண்கள் உலக மாநாடு நிறைவுபெற்று, 25 ஆண்டுகள் சென்றபின்னரும், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகள் உலகெங்கும் பரவியுள்ளன என்பதோடு, இவ்வன்முறைகளை, கொடுமை என்று கண்டனம் செய்யாமல், இவை, மனித வாழ்வின் எதார்த்தம் என்று சமாதானம் சொல்லி, மௌனம் காக்கும் மனநிலை, மக்கள் நடுவே உருவாகியுள்ளது என்று இவ்வறிக்கை கூறுகிறது.

2016ம் ஆண்டு, நிகழ்ந்த மனிதவர்த்தகம் என்ற கொடுமைக்கு உள்ளானவர்களில், 70 விழுக்காட்டினர், பெண்களும், சிறுமிகளும் என்பதும், 15 வயதுக்கும், 19 வயதுக்கும் உட்பட்ட பெண்களில், 20ல் ஒருவர், பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதும், யூனிசெஃப் அறிக்கையில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்.
கல்வி கற்பதற்கு பெண்களை ஊக்கப்படுத்தும் போக்கு வளர்ந்திருந்தாலும், பெண்கள், தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி, பொதுவாழ்வில் காலடி எடுத்துவைக்கும் வேளையில், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க, சமுதாயம் தவறிவிட்டது என்று, யூனிசெஃப் இயக்குனர் ஹென்றியேட்டா ஃபோரே (Henrietta Fore) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்விக்கூடங்களில் மட்டுமல்லாமல், குடும்பங்களிலும், பெண்கள், பலவழிகளில், வன்முறைகளைச் சந்திக்கின்றனர் என்றும், ஒவ்வோர் ஆண்டும், 1 கோடியே, 20 இலட்சம் பெண் குழந்தைகளுக்கு திருமணம், 40 இலட்சம் பெண்களுக்கு பிறப்புறுப்பு சிதைவு போன்ற கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன என்றும், யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

அனைத்து வகையான வன்முறைகளிலிருந்து பெண்கள் விடுதலை அடைவதும், அவர்கள் தங்கள் உரிமைகளை, சுதந்திரமாகப் பயன்படுத்துவதும், சமுதாயத்தில் சம வாய்ப்புக்கள் பெறுவதும், பெண்களின் மகிமையை நிலைநிறுத்தும் அளவுகோல்கள். பெண்கள், சுதந்திரம், சம உரிமை ஆகிய மகிமைகளைப் பெறுவதற்கு, மனித சமுதாயத்தில் பெரும் மாற்றங்கள் நிகழவேண்டும்.

தவக்காலத்தின் உயிர்நாடியாக விளங்கும், மாற்றம், மனமாற்றம், உருமாற்றம் என்ற எண்ணங்களை அசைபோட, இந்த ஞாயிறு வாசகங்கள், நமக்கு அழைப்பு விடுக்கின்றன. உருக்குலைந்த இயேசுவை, சென்ற ஞாயிறு சந்தித்த நாம், உருமாறிய இயேசுவை, இந்த ஞாயிறு சந்திக்கிறோம். பாலை நிலத்தில், நாற்பது நாள் கடுந்தவம் மேற்கொண்ட இயேசு, உருகுலைந்திருந்த நேரத்தில், அவர், எவ்விதம் தன்னையே எளிதாக, விரைவாக, உருமாற்றிக்கொள்ள முடியும் என்ற குறுக்கு வழிகளை, சாத்தான் சொல்லித்தந்தது.
அந்த குறுக்கு வழிகளை ஏற்றுக்கொள்ளாத இயேசு, பாடுகள், மரணம் என்ற வேதனை நிறைந்த வழியில் தான் மாற்றம் பெறப்போவதாக தன் சீடர்களுக்கு சொல்கிறார். இயேசுவின் இந்தக் கூற்று, மத்தேயு நற்செய்தி 16ம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூற்றினால், அதிர்ச்சியடைந்து, மனம்தளர்ந்து போயிருந்த சீடர்களில் மூவருக்கு, உறுதி வழங்கும் வகையில் நிகழும் இயேசுவின் தோற்றமாற்றம், மத்தேயு நற்செய்தி, 17ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வு, நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ள இஞ்ஞாயிறன்று, தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகமும், (தொடக்கநூல் 12 : 1-4) மாற்றத்தைப்பற்றி கூறுகிறது. தனக்குப் பழக்கமான ஓர் இடத்தைவிட்டு, பழக்கமில்லாத இடத்திற்குச் செல்லவேண்டிய மாற்றத்தை ஏற்க, ஆபிரகாம் அழைக்கப்பட்டார். இளவயதில், மாற்றங்களை சந்திப்பது, எளிதாக இருக்கும்; வயது முதிர்ந்த காலத்தில், மாற்றங்கள் வரும்போது, அவற்றை ஏற்பதற்கு, பெரும் தயக்கம் உருவாகும். தான் பிறந்துவளர்ந்த ஊரைவிட்டு, வேறோர் ஊருக்குச்செல்ல, ஆபிரகாம் அழைக்கப்பட்ட வேளையில், அவருக்கு வயது 75. (தொ.நூ. 12:4) அந்த வயதில் ஒருவரால் பழக்கப்பட்ட இடங்களைவிட்டு, புதிய நாட்டிற்குப் போகமுடியுமா? வயது முதிர்ந்த காலத்தில் புதிய இடங்களுக்குச் செல்லவேண்டிய நிலை, இன்றைய உலகில் பலர் சந்திக்கும் சிக்கல்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக, மதுரையில், தங்கள் குடும்பத்தை வழிநடத்தி வந்த தம்பதியர், வயது முதிர்நத காலத்தில், சென்னையில் வாழும் தங்கள் மகனோடு சென்று தங்கவேண்டிய சூழல் உருவானது. மதுரையில் அவர்கள் வாழ்ந்துவந்த வீட்டைக் காட்டிலும், சென்னையில் அவர்கள் வாழ்ந்த வீட்டில் வசதிகள் அதிகம் இருந்தன. இருந்தாலும், அவர்கள், எதையோ இழந்தவர்கள் போல் சோகமாய் இருந்தனர். நீரைவிட்டு வெளியே எறியப்பட்ட மீன்களைப்போல் அவர்கள் தவித்தனர். மதுரையும், சென்னையும், தமிழ் நாட்டின் பகுதிகள் தான். இருந்தாலும், முதிர்ந்த வயதில் வந்த அந்த மாற்றங்களை, அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தமிழ்நாட்டை விட்டு, இந்தியாவின் பிற மாநிலங்களிலும், தாய் மண்ணை விட்டு, பிற நாடுகளிலும் வாழவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படும் பெற்றோரை எண்ணிப் பார்ப்போம். இவர்கள் அனைவரையும் நமது வேண்டுதல்களில் ஏந்தி வருவோம்.

ஆபிரகாமுக்கு இறைவன் இந்த அழைப்பைத் தந்தபோது, கூடவே தன் முழுமையான அசீரையும் தருவதாக, இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். அது மட்டுமல்ல, ஆபிரகாமே ஓர் ஆசியாக மாறுவார் என்றும் இறைவன் வாக்களிக்கிறார். (தொ.நூ. 12:2) வயது முதிர்ந்த காலத்தில் பழக்கப்பட்டச் சூழல்களை விட்டு, புதியச் சூழல்களுக்குச் செல்லும் பெற்றோர், ஆபிரகாமைப்போல், இறையாசீரைச் சுமந்துசெல்லவும், அதன் வழியாக, இறையாசீராகவே இவர்கள் மாறவும் வேண்டுமென செபிப்போம்.

இன்றைய நற்செய்தி கூறும் இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வை, பல கோணங்களில் நாம் சிந்திக்கலாம். இந்நிகழ்வைக் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ள அருள்பணி John Eckert என்பவர் கூறும் ஒரு சில கருத்துக்கள், நம்மை, சிந்திக்கத் தூண்டுகின்றன.
நாம், இயேசுவின் ஒளிமயமான தோற்றமாற்றத்தைக் காணவேண்டுமெனில், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரைப்போல, நம்மையும், இயேசு, நம் வழக்கமான வாழ்விலிருந்து, மாறியதொரு சூழலுக்கு அழைத்துச்செல்ல அனுமதிக்கவேண்டும்.
சூழலைப்பற்றிப் பேசும்போது, சென்ற வாரமும், இந்த வாரமும் மலைப்பகுதி என்ற கருத்து நற்செய்தியில் பதிவாகியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும். அதிலும், இவ்விரு மலைப்பகுதிகள், மத்தேயு நற்செய்தியில், ஒரு சிறு மாற்றத்துடன், பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இந்த வாரம், இயேசு, தன் மூன்று சீடர்களை, "ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்" (மத். 17:1) என்று வாசிக்கிறோம். சென்ற வாரம், அலகை, இயேசுவை, 'மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டியதாக' (காண்க. மத். 4:8) வாசித்தோம். அலகை இயேசுவைக் கூட்டிச்சென்றது, 'மிக உயர்ந்த ஒரு மலை'. இயேசு தன் சீடரை கூட்டிச் சென்றது, 'உயர்ந்த மலை'. 'மிக' என்ற ஒரே ஒரு சிறிய சொல், இவ்விரு சூழல்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. அலகை மேற்கொள்ளும் முயற்சிகள், மிகைபடுத்தப்பட்ட, எல்லைகடந்த வழியில், நம் வாழ்வைப் பாதிக்கும் என்பதை, 'மிக' என்ற சொல், சுட்டிக்காட்டுகிறது.

இதற்கு மாறாக, இயேசுவோ, உண்மையான, உயர்ந்த மலைக்கு நம் அனைவரையும் அழைத்துச் செல்லவும், அங்கு, தன் ஒளிமிகுந்த பிரசன்னத்தைக் காட்டவும் விழைகிறார்.
தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் செபம், தவம், தர்மம் என்ற அனைத்துச் செயல்களும், எல்லை கடந்ததாய் இருக்க வேண்டும், அதுவும், பலர் காண அமையவேண்டும் என்று விரும்பாமல், நம் தினசரி கடமைகளையே இன்னும் பொருளுள்ள முறையில், இன்னும் கூடுதல் கவனத்துடனும், கனிவுடனும் மேற்கொண்டால், அங்கு இயேசுவின் ஒளிமிகுந்த பிரசன்னத்தைக் காணலாம்.

மலை என்பது, இறைவன் வாழும் இடம் என்பதை, இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திருந்தது போல், இயேசுவும் உணர்ந்திருந்தார். அன்று, தன் சீடர்களுடன் மலைக்குச் சென்றதும், இறைவனின் பிரசன்னமும், அன்பும், தன்னைச் சூழ்ந்ததை இயேசு உணர்ந்திருக்கவேண்டும். அந்த உணர்வே, அவரை, தோற்றமாற்றமடையச் செய்திருக்கவேண்டும். இந்நிகழ்வின் உச்சக்கட்டத்தில், இயேசு, தந்தையின் அன்புக்குரிய மகன் என்று புகழப்படுகிறார்.

சீடர்கள் கண்முன் நடந்த இந்த உன்னதமான, உச்சக்கட்ட பூரிப்பிலேயே அனைவரும் தங்கிவிடலாம் என்று, பேதுரு ஆலோசனை சொல்கிறார். கடவுளின் அன்பு, நம்மில் உருவாக்கும் மாற்றங்கள், நமக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனிச்சொத்து என்று கருதி, அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கிவிட முடியாது. மீண்டும் மலையைவிட்டு இறங்கவேண்டும்; அதுமட்டுமல்ல, மற்றொரு மலைமேல் இறக்கவேண்டும் என்பதையும், இயேசு, தன் சீடர்களுக்கு நினைவுபடுத்துகிறார். இறையன்பைச் சுவைப்பது, பணிவாழ்வுக்கும், தியாகத்திற்கும் இட்டுச்செல்லவேண்டும். இல்லையெனில், அவ்வன்புக்கு அர்த்தம் இருக்காது என்பதை, இயேசு தெளிவாக்குகிறார்.

தவக்காலத்தின் இந்த இரண்டாம் ஞாயிறன்று ஆபிரகாமின் வாழ்வில் மாற்றங்களை நிகழ்த்த இறைவன் கொடுத்த அழைப்பையும், இயேசுவின் தோற்றமாற்றத்தையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நம் மனதில் எழும் ஒரு சில வேண்டுதல்களோடு நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
·          COVID-19 தொற்றுக்கிருமியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும், இறைவனின் அருளால் தங்கள் நலிவுற்ற நிலையிலிருந்து மாற்றம் பெற்று, முழுமையாக நலமடையவேண்டும் என்று செபிப்போம்.
·          உலகெங்கும் வாழும் மகளிர், வேதனைச் சிறைகளிலிருந்து விடுதலையடைந்து, பாதுகாப்புடனும், சம உரிமைகளுடனும் வாழ்வதற்குகந்த ஓர் உலகை உருவாக்கும் மனமாற்றத்தை, இறைவன், நம் அனைவருக்கும் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.
·          75 வயதில் தன் நாட்டைவிட்டு, வேறு நாட்டிற்கு அழைக்கப்பட்ட ஆபிரகாம், இறையாசீரைச் சுமந்து சென்றதுபோல், இறை அசீராகவே மாறியதுபோல், தங்கள் சூழ்நிலைகளை மாற்றவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் வயதான பெற்றோர், ஆபிரகாமைப் போல், செல்லும் இடமெல்லாம் இறையாசீரைச் சுமந்து செல்பவர்களாக மாற, அவர்களுக்காகச் செபிப்போம்.

·          ஒவ்வொரு மாற்றமும் நமக்குள் இருந்து உருவாகவேண்டும், ஆழ்ந்த அன்பு கொண்டால், அனைத்தும் மாறும், இறையன்பு, வெறும் உணர்வாக இல்லாமல், நம் வாழ்வில் செயலாக மாறவேண்டும் என்று, இயேசுவின் தோற்றமாற்றம் நமக்குச் சொல்லித்தரும் பல பாடங்களை, இத்தவக்காலத்தில் நாம் கற்றுக்கொள்ள, ஒருவர் ஒருவருக்காகச் செபிப்போம்.

No comments:

Post a Comment