24 February, 2022

Blind leading the blind பார்வையற்ற வழிகாட்டிகள்

  
Blind Guides – Luke 6:39

8th Sunday in Ordinary Time

What began as an outbreak of a virus among a few people in the city of Wuhan, China, in December 2019, became a worldwide pandemic by the beginning of March 2020. In a few days (11 March 2022) we shall commemorate the second anniversary of COVID-19 pandemic. 
During these past two years, we have been saturated with news-stories and images that were mostly negative and life-threatening. In spite of this overload of negative stories, our life as well as the human spirit have not only survived but, in some ways, have flourished. Looking at this phenomenon, I am reminded of a quote from Oren Lyons, a Native American Faith-keeper: “Life will go on as long as there is someone to sing, to dance, to tell stories and to listen.”

John Shea, an expert on the theme of ‘storytelling in world religions’, also talks of the power of stories in his famous book ‘Stories of God – An Unauthorized Biography’: “When we reach our limits, when our ordered worlds collapse, when we cannot enact our moral ideals, when we are disenchanted, we often enter into the awareness of Mystery… Our dwelling within Mystery is both menacing and promising, a relationship of exceeding darkness and undeserved light. In this situation, with this awareness, we do a distinctively human thing. We gather together and tell stories of God to calm our terror and hold our hope on high.”
Jesus knew the power of stories and hence he used them to drive home very deep truths about the Heavenly Father, and the Kingdom of God, using stories and imageries. We call these stories, Parables.

Parables like the Good Samaritan and the Prodigal Son, as well as some of the expressions Jesus had used in the Gospels have universal appeal. They are used by many non-Christians. We heard one such ‘universal’ expression last Sunday – namely, ‘turning the other cheek’. In today’s Gospel, we come across some more expressions that are used in our everyday conversation. “The blind leading the blind”, “the splinter in my brother’s eye”, “from the fullness of the heart the mouth speaks” are some of the popular expressions we use in our conversations.

The first reading today, taken from the Book of Sirach, uses strong imageries of the sieve, the kiln and the tree to drive home the truth about how careful we ought to be with our words.
When a sieve is shaken, the husks appear; so do one’s faults when one speaks. As the test of what the potter molds is in the furnace, so in tribulation is the test of the just. The fruit of a tree shows the care it has had; so too does one’s speech disclose the bent of one’s mind. Praise no one before he speaks, for it is then that people are tested. (Sirach 27:4-7)
Although these imageries are useful for our life, for lack of time, we shall concentrate on the parables and imageries used in our Gospel today.

For the past two Sundays we have heard passages taken from the ‘Sermon on the plains’, as recorded in Luke’s gospel. Today we are given the final part of this sermon. Today’s gospel begins with the words: “Jesus told his disciples a parable…” (Lk. 6:39)
The first ‘parable’ or imagery that Jesus uses is ‘the blind leading the blind’. Jesus places before his disciples and before us the obvious questions: “Can a blind person guide a blind person? Will not both fall into a pit?” (Lk. 6:39) Immediately after these two questions, Jesus makes a seemingly disconnected statement, namely, “No disciple is superior to the teacher; but when fully trained, every disciple will be like his teacher.” (Lk. 6:40) The teacher-disciple statement gives us a clue as to how to interpret the imagery of ‘the blind leading the blind’.
The emphasis of Jesus is not on whether a visually challenged person cannot and should not lead another; it is rather that a person (like a teacher) who leads, should not be ‘blind’! All of us know that many visually challenged persons have inspired thousands of others to achieve greatness. We can surely think of persons like Helen Keller, John Milton etc.

While searching the internet for inspiring persons who are visually challenged, I came across many stories. Among them was the story of Mr.Zahid, a newspaper vendor in the city of Karachi, Pakistan. The three minutes video on Zahid, posted in the website “Lift Up Ideas”, gives us a glimpse of his life. More than that, the narration of Zahid, gives us an uplifting philosophy of life.
“I am blind by birth. My parents had an arranged marriage. They got divorced. My father also got married. My Mother was also young, so she also got married. This was a turning point in my life. I decided I will do something in my life.” Thus begins the narration of Zahid. Then he talks about the important lessons he learnt at school: “I had learnt this thing from school. I should not beg. I should not give up. I had to do something.” After this, Zahid uses a poetic language (with some exaggeration) about his firm stand against begging. “Build your own paradise if you can. The fire of hell is better than a begged heaven.”
Mr Zahid sells newspapers on the streets of Karachi. Each newspaper costs 18 Rs (Pakistan Rupees). When people pay him 20 Rs. for the paper, he is very insistent on giving them back the change - Rs.2. He explains why he insists on giving Rs 2 back to the customer. “When you take something from someone (for free) once, you would want it again. For example, when someone buys a newspaper worth PKR 18 and gives me PKR 20, I return him two rupees. People ask me why do I do this? and I say that I sell 200 newspapers a day. If I take extra two Rupees on one paper then I would want those two rupees from every paper I sell. When a man becomes greedy, nothing can help him.”
Mr Zahid closes his narration thus: “If you have any tragedy in life, don’t make things worse by crying over it. Don’t ruin your life by crying over what happened. Move forward and learn to face the challenges of life.”
Mr Zahid, a newspaper vendor from Pakistan is truly a leader. If only all of us follow his life-principles, namely, never beg, never be greedy and never cry over tragedies in life – life on earth will be a lot better for all of us.

Another visually challenged person in Mumbai challenges all of us on the way we look at life. Here is a story posted by this person on the ‘Humans of Bombay’ page on Facebook:
“I was declared blind by doctors just minutes after I was born. The medical facilities for the blind are not that great in UP so I was sent to Bombay when I was 16 for better treatment but my first surgery failed. I accepted my destiny and completed my schooling from the Victoria Memorial School for the blind.”
After completing his post-graduation he got a job with the State Bank of India. He goes on to say: “When I reached a point where I was making enough money, I married the love of my life. I’ve never seen her, but I know she has a beautiful heart, because there hasn’t been a day when she’s made me feel like I lack something - we’ve lived a beautiful life together with our daughter.”
When asked “What advice would you give people?”, he says: “After 55 years of having no sight, the only thing I can say is that life is beautiful, if you want it to be. The second you love and accept the way you are, the world becomes a wonderful place to live…When I hear stories of people suffering from depression or young children committing suicide — I feel like there’s where the problem is. The lack of love is the real handicap anyone can have and these are the people who need to be loved even harder.” 
(Excerpts from ‘The Indian Express’, August 2, 2017)

Jesus introduces the second ‘parable’ with a second set of questions. We can sense a trace of irritation in the words of Jesus: Why do you notice the splinter in your brother's eye, but do not perceive the wooden beam in your own? How can you say to your brother, 'Brother, let me remove that splinter in your eye,' when you do not even notice the wooden beam in your own eye? (Luke 9: 41-42a)
It is interesting to note that in the first ‘parable’ Jesus uses the third person – the blind leading the blind, the teacher and disciple etc. In the second ‘parable’, the questions are addressed in the second person – ‘you’. Hence, the questions hit us directly and push us towards a self-examination.

In his second parable, Jesus follows up these questions with a very strong ‘advice’, once again, directly addressed to us: “You hypocrite!  Remove the wooden beam from your eye first; then you will see clearly to remove the splinter in your brother's eye.” (Luke 9: 42b)
The word ‘hypocrite’ comes from the Greek word ‘hypokrites’, which means “an actor” or “a stage player.” Usually, in a Greek play, the actors wear a ‘mask’ and ‘pretend’ to be another person. This is fine, as long as this pretention is confined to the stage. Unfortunately, there are persons who put on masks in daily life and pretend to be someone else. Finding such a tendency in the Pharisees, Jesus addressed them as ‘hypocrites’ very often. In today’s Gospel such a term is addressed to his disciples and to us. This wake-up call of Jesus should help us to take up a serious soul-search!

Are we ready to cast away the ‘beams’ of our faults and gain a clearer vision, so that we are able to help our brothers and sisters to get rid of their ‘splinters’? We can begin this ‘clean-up’ process at home. We are sadly aware that the ‘beam-and-splinter-game’ is very often played between parents and children.

In the series “fowllanguagecomics.com” created by Brian Gordon, there is a section on ‘parenting’. In one of those cartoons, titled – “A Parent’s Prayer”, a mother/father fowl makes a fervent appeal to God:
God grant me the serenity to accept my kids can be jerks,
The courage to not scream at them constantly,
And wisdom to realize where they got it from.

Specks and Planks

பொதுக்காலம் 8ம் ஞாயிறு

2019ம் ஆண்டு, டிசம்பர் மாதம், சீனாவின் வூஹான் என்ற நகரில் ஒரு தொற்றுக்கிருமியாக துவங்கிய நோய், 2020 மார்ச் மாதம், உலகெங்கும் கோவிட் 19 பெருந்தொற்றாக பரவியது. இன்னும் சில நாள்களில் இந்த பெருந்தொற்றின் இரண்டாம் ஆண்டு நிறைவு பெறுகிறது.
கடந்த இரு ஆண்டுகளாக, நம்மை வாட்டி வதைக்கும் எதிர்மறை செய்திகளையும், காட்சிகளையும் கண்டு, கேட்டு, நம் எண்ணங்களும், உணர்வுகளும் சோர்வடைந்துள்ளன. இருப்பினும், இவ்வுலகில் வாழ்வும் மனித நேயமும் தொடர்கின்றன. இந்தச் சூழலைக் காணும்போது, அமெரிக்கப் பழங்குடியில் பிறந்த வழக்கறிஞர் Oren Lyons அவர்கள் கூறியுள்ள கூற்று, நினைவில் தோன்றுகிறது: "உலகின் ஏதோ ஒரு மூலையில், யாரோ ஒருவர் பாடுவதற்கும், ஆடுவதற்கும், கதை சொல்வதற்கும், கதை கேட்பதற்கும் இருக்கும்வரை வாழ்வு தொடரும்" என்பதே அக்கூற்று. கலையும் கதையும் இவ்வுலகில் இருக்கும்வரை வாழ்க்கை தொடரும் என்பது, மனதுக்கு நிம்மதி தரும் ஓர் எண்ணம். இவ்வுலகின் இயக்கத்தையும், இவ்வுலகை இயக்கும் கடவுளையும் கலை வடிவில், கதை வடிவில் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

கதைகளுக்கு உள்ள ஆற்றலை நன்கு உணர்ந்தவர் இயேசு. எனவே, அவர் கடவுளைப்பற்றி, கடவுளின் அரசைப்பற்றி விரிவான இறையியல் விளக்கங்களை சொல்லித் தரவில்லை. கடவுளையும், அவரது அரசையும் அவர் கதைகள், மற்றும் உவமைகள் வழியே அறிமுகப்படுத்தினார்.
கடந்த இரு ஞாயிறு வழிபாடுகளில், இயேசு, 'சமவெளிப் பொழிவில்' கூறிய உண்மைகளை லூக்கா நற்செய்தி வழியே சிந்தித்துப் பயனடைந்தோம். இன்று, மூன்றாவது வாரமாக, அதே சமவெளிப் பொழிவின் இறுதிப் பகுதியைச் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். இப்பகுதியில், இயேசு உண்மைகளையும், உவமைகளையும் கலந்து பேசியுள்ளார். "அக்காலத்தில், இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது" (லூக்கா 6:39) என்று, இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.
பார்வையற்ற வழிகாட்டி, கண்ணில் உள்ள மரக்கட்டை, கண்ணில் உள்ள துரும்பு, கெட்ட மரம், நல்ல மரம் என்ற உருவகங்கள் வழியே, இயேசு, நம் வாழ்வுக்குத் தேவையான பாடங்களைச் சொல்லித்தர வருகிறார்.

சீராக் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகத்திலும் (சீராக் 27:4-7), நமது பேசும் திறனை அல்லது நம் பேச்சில் உள்ள குறையைச் சுட்டிக்காட்ட, சலிக்கும் சல்லடை, சூளையில் வைக்கப்படும் கலன், கனிதரும் மரம் ஆகிய உருவகங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்துமே நம் வாழ்வுக்குப் பயனளிக்கும் எண்ணங்கள் என்றாலும், நேரம் கருதி, நாம் நற்செய்தியில் இயேசு கூறியுள்ள இரு உருவகங்களில் நம் கவனத்தைச் செலுத்துவோம்.

முதல் உருவகத்தில், "பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?" (லூக்கா 6:39) என்று, இயேசு எழுப்பும் இரு கேள்விகள், யார், யாருக்கு வழிகாட்ட முடியும், வழிகாட்ட வேண்டும் என்பதைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இந்த இரு கேள்விகளைத் தொடர்ந்து, குரு, சீடர் என்ற கருத்தை இயேசு இணைத்திருப்பது, நம்மை இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது.

உடல் அளவில் பார்வையிழந்தோர், மற்றவர்களுக்கு வழிகாட்ட இயலாது, கூடாது என்பதை, இயேசு, இவ்வுவமை வழியே வலியுறுத்துகிறார் என்று சிந்திப்பதைவிட, வழிகாட்ட விழையும் குரு, தன் சீடர்களைவிட, தெளிவான பார்வை பெற்றிருக்கவேண்டும் என்பதை, இயேசு, இவ்வுவமை வழியே வலியுறுத்துகிறார் என்ற கோணத்தில் சிந்திப்பது, பொருத்தமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
குறிப்பாக, நாம் வாழும் இன்றைய உலகில், வழிகாட்டும் பொறுப்பில் இருக்கும் பல அரசியல் தலைவர்களும், மதத்தலைவர்களும், பார்க்கும் திறன் இருந்தும், பார்க்க மறுப்பது, அல்லது, குறுகியப் பார்வை கொண்டிருப்பது ஆகிய குறைகளால் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் உருவாக்கும் ஆபத்துக்களைப் புரிந்துகொள்ள, இந்த உருவகங்கள் வழியே முயல்வோம்.

நம் முயற்சியின் முதல் படியாக, பார்வைத் திறன் அற்றவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்ட இயலாது என்ற எண்ணத்தை நம் உள்ளத்திலிருந்து நீக்க முயல்வோம். பார்வைத்திறன் இல்லாதபோதும், தங்கள் உழைப்பாலும், திறமைகளாலும் புகழின் சிகரத்தை அடைந்த பலரை நாம் அறிவோம். இவர்களது விடாமுயற்சி, பல்லாயிரம் பேருக்கு வழிகாட்டி வருகிறது என்பதையும் நாம் அறிவோம்.
எடுத்துக்காட்டாக, பார்க்கும் திறன், கேட்கும் திறன், பேசும் திறன் அனைத்தையும் இழந்தாலும், வரலாற்றில் ஓர் உன்னத சிகரத்தை அடைந்த ஹெலன் கெல்லர், பார்வைத்திறனை இழந்த பின்னரும், கவிதைகளை உருவாக்கிய ஜான் மில்டன் போன்றோரை நாம் அவ்வப்போது நினைவில் கொள்கிறோம். பார்வை இழந்த பலரும் வாழ்வில் நம்பிக்கை இழந்த பலரும், அவர்கள் காட்டிய வழியில், கட்டாயம் முயற்சிகள் மேற்கொண்டிருப்பர் என்பதை மறுக்க இயலாது.

பார்வைத்திறன் இல்லாதபோதும், பிறருக்கு நல்வழி காட்டியவர்களைப்பற்றி, இணையத்தளத்தில் தேடும்போது, புகழ்பெற்ற பலரது கதைகள், நம் கண்களில் படுகின்றன. அவற்றில், பாகிஸ்தான், கராச்சி நகரில் செய்தித்தாள் விற்கும் திருவாளர் ஷாஹித் (Zahid) அவர்களின் கதையும், அவர் கூறும் வாழ்க்கைத் தத்துவங்களும் உண்மையில் நம் உள்ளத்தைத் தொடுகின்றன. “Lift up ideas” அதாவது, எண்ணங்களை மேலே எழுப்புங்கள்என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று நிமிட காணொளியில் நாம் காணும் ஷாஹித் அவர்களின் வாழ்வும், வாழ்வைக்குறித்து அவர் பகிர்ந்துகொள்ளும் உண்மைகளும், நம் உள்ளத்தை உயர்த்துகின்றன.
"நான் பிறவியிலேயே பார்வையற்றவன். என் பெற்றோர், விவாகரத்து செய்துகொண்டு, வெவ்வேறு திருமணங்கள் செய்துகொண்டனர்" என்று தன் கதையைத் துவக்கும் ஷாஹித் அவர்கள், "பிச்சையெடுக்கக் கூடாது. நம்பிக்கையிழக்கக் கூடாது" என்ற இரு முக்கியப் பாடங்களை தான் பள்ளியில் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்.
மிகைப்படுத்தி சொல்லப்பட்டிருப்பதைப்போல் தோன்றினாலும், கவிதை நயத்துடன், அவர் கூறியுள்ள ஒரு கருத்து, ஆழமாக நம் உள்ளத்தில் பதிகிறது: "உன்னால் முடிந்தால், உன்னுடைய விண்ணகத்தை உருவாக்கிக்கொள். பிச்சையெடுத்து பெறும் விண்ணகத்தைவிட, நரகத்தின் நெருப்பு மேலானது" என்று ஷாஹித் அவர்கள், பிச்சையெடுப்பதற்கு எதிராக தன் கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.

கராச்சி நகர் சாலைகளில், செய்தித்தாள்களை விற்று, தன் பிழைப்பை நடத்துகிறார் ஷாஹித். 18 ரூபாய்க்கு விற்கப்படும் அந்தச் செய்தித்தாளுக்கு, மக்கள் தன்னிடம் 20 ரூபாய் தரும்போது, மீதிச் சில்லறையான 2 ரூபாயை அவர்களுக்கு கட்டாயமாக தான் திருப்பித்தருவதாகக் கூறியுள்ளார். அதை அவரே வைத்துக்கொள்ளலாம் என்று அவர்கள் கூறினாலும், அவர் வலுக்கட்டாயமாக அவர்களுக்கு 2 ரூபாயைத் திருப்பித் தந்துவிடுகிறார். காரணம் கேட்டால், அந்த 2 ரூபாய் மீண்டும், மீண்டும் கிடைக்கும் என்ற ஆசை தனக்குள் உருவாவதைத் தடுக்கவே தான் அப்படி செய்வதாகக் கூறுகிறார். சில்லறைகள் வழியே நமக்குள் நுழையும் பேராசை, நமக்கு ஆபத்தாக முடியும் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கும் ஷாஹித் அவர்கள், "ஒருவர் பேராசை கொண்டால், அவருக்கு வேறு எதுவும் உதவி செய்ய இயலாது" என்று கூறுகிறார். "உன் வாழ்வில் பெரும் துன்பம் நிகழும்போது, அதை இன்னும் மோசமாக்கும் வண்ணம் கண்ணீர் வடிக்காதே. நடந்ததைக் குறித்து அழுவதால், வாழ்க்கை இன்னும் மோசமாகும்" என்பது, ஷாஹித் அவர்கள் கொண்டிருக்கும் வாழ்க்கைத் தத்துவம்.

ஷாஹித் அவர்களைப் போல், தங்கள் உழைப்பை நம்பி, தங்களுக்குக் கிடைக்கும் ஊதியம் போதும் என்ற மன நிறைவுடன், அனைவரும் வாழ்ந்தால், இவ்வுலகில், எத்தனையோ தீமைகளை நாம் களையமுடியும். அவ்வழியில், ஷாஹித் அவர்கள், பார்வைத்திறன் அற்றவர் என்றாலும், பார்வைத்திறன் கொண்ட நமக்கெல்லாம் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு நோயைக் குறித்து, இரண்டாவது உருவகத்தில், இயேசு கேள்விகளை எழுப்புகிறார். நம்மில் இருக்கும் குறைகளைப் பற்றி அக்கறை கொள்ளாமல், அடுத்தவர் மீது அவசர முடிவுகள் எடுக்கும் பார்வைக் கோளாறு என்ற இந்த நோயைக் குறித்து சிந்திப்பது பயனளிக்கும். இப்பகுதியில், இயேசு, எரிச்சல் கலந்த தொனியில் பேசுவதை உணர முடிகிறது: நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்கமுடியும்?” (லூக்கா 6:41-42) என்று இயேசு எழுப்பும் கேள்விகள், அடுத்தவரைப் பற்றி, அவசரமான முடிவெடுக்க நாம் கொண்டுள்ள ஆர்வத்தை தோலுரித்துக் காட்டுகிறது. இத்தகைய மனநிலை கொண்டோரை, 'வெளிவேடக்காரர்' என்று இயேசு கடிந்துகொள்கிறார்.

"வெளிவேடக்காரர்" அல்லது, ஆங்கிலத்தில், hypocrite என்ற சொல், 'hypokrites' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது. மேடையில் தோன்றி, முகமூடி அணிந்து நடிப்பவர்களுக்கு, 'hypokrites' என்று பெயர். மேடையேறி், முகமூடியணிந்து நடிப்பதில் தவறு ஏதுமில்லை. ஆனால், மேடையில் முகமூடி அணிவதுபோல், வாழ்விலும் முகமூடி அணிந்து வாழ்வோரைக் குறித்தே இயேசு "வெளிவேடக்காரர்" என்ற சொல்லை, ஒரு கடுமையான சொல்லாகப் பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக, பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோர், மக்களுக்கு முன் முகமூடிகள் அணிந்து வாழ்வதை, இயேசு கண்டனம் செய்தார்.
முகமூடி அணிந்து, இரட்டை வாழ்க்கை வாழ்தல் என்ற குறை, நம் அரசியல் மற்றும் மதத் தலைவர்களின் பார்வையை மறைக்கும் மரக்கட்டையாக மாறிவிடுகிறது. அந்தக் குறையை மக்கள் உணர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, மக்களிடம் காணப்படும் 'துரும்பு' போன்ற குறைகளை அவர்கள் பெரிதுபடுத்துவதையும், அவற்றைக் களைய முற்படுவதையும் குறித்து, இயேசு தன் இரண்டாவது உருவகத்தில் குறிப்பிடுகிறார். அதே நோய், தன் சீடர்களையும், நம்மையும் ஆட்டிப்படைக்கக் கூடாது என்பது இயேசுவின் கவலை.

நம்மைப் பற்றிய அரைகுறையான பார்வை, அடுத்தவரைக் குறித்து அவசரமான, அர்த்தமற்ற முடிவுகள் ஆகியவற்றை விளக்கும் பல கதைகளில் இதுவும் ஒன்று:
கப்பல் பயணம் ஒன்றில், ஆயர் ஒருவர், முன்பின் அறிமுகம் இல்லாத மற்றொரு மனிதரோடு ஒரே அறையில் தங்கவேண்டியிருந்தது. அந்த மனிதரைப் பார்த்ததும், ஆயருக்கு நல்ல எண்ணங்கள் ஏற்படவில்லை. எனவே, அவர், இரவு உறங்கச் செல்வதற்கு முன், கப்பல் பொறுப்பாளரின் அறைக்குச் சென்றார். தன்னிடம் இருந்த விலையுயர்ந்த மோதிரம், கைக்கடிகாரம், 'பர்ஸ்' அனைத்தையும் அந்தப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "என் அறையில் இருப்பவர் மீது எனக்கு நம்பிக்கையில்லை. எனவே, இதை இன்றிரவு இங்கேயே வைத்திருங்கள்" என்று சொன்னார்.
ஆயர் தந்த அனைத்தையும் வாங்கிய பொறுப்பாளர் சிரித்தார். ஆயர் அவரிடம் காரணம் என்ன என்று கேட்டபோது, "உங்களோடு தங்கியிருக்கும் அந்த மனிதர் பத்து நிமிடங்களுக்கு முன் இங்கு வந்து, தன்னிடம் இருந்த பணம், கைக்கடிகாரம், தான் அணிந்திருந்த சங்கிலி அனைத்தையும் என்னிடம் தந்து, நீங்கள் சொன்ன அதே சொற்களை அவரும் சொன்னார்" என்று அந்தப் பொறுப்பாளர் கூறினார்.

நம்மைப்பற்றிய அரைகுறையான கண்ணோட்டம், அடுத்தவரைப்பற்றிய அவசரக் கண்ணோட்டம் என்ற இரண்டும் கலந்த பார்வைக் கோளாறு என்ற இந்த நோய்க்கு இயேசு கூறும் மருந்து, அடுத்த வரிகளில் கூறப்பட்டுள்ளது. வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும். (லூக்கா 6: 42ஆ).
இந்த நோயைத் தீர்க்கும் முதல் படி, மரக்கட்டையாக நம் கண்களில், உள்ளங்களில் ஆழப்பதிந்திருக்கும் குறைகளை 'எடுத்து எறியுங்கள்' என்று இயேசு கேட்கிறார். அதன்பின், தெளிவான பார்வையுடன், உண்மையான அக்கறையுடன், நம் சகோதரர், சகோதரியிடம் காணப்படும் குறைகளை அகற்றமுடியும் என்று இயேசு நமக்குச் சொல்லித் தருகிறார்.

பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே நிலவும் உறவில் பெரும் தடையாக இருப்பது, இத்தகையப் பார்வைக் கோளாறுகள் என்பதை நாம் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறோம். Brian Gordon என்பவர், பறவைகளை வைத்து உருவாக்கியுள்ள fowllanguagecomics.com என்ற வலைத்தளத்தில், ஒரு தாய், அல்லது, தந்தை பறவை செபிப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கருத்துப்படத்தில் பின்வரும் அழகான செபம் இடம்பெற்றுள்ளது:
"இறைவா, என் குழந்தைகள் அடங்காத முட்டாள்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத் தாரும். அவர்களை நோக்கி எப்போதும் கத்தாமல் இருக்கும் பொறுமையைத் தாரும். அவர்களுக்கு இந்த குணங்கள் எங்கிருந்து வந்தன என்பதைப் புரிந்துகொள்ளும் ஞானத்தைத் தாரும்"

நமது வாழ்வில் முகமூடிகளைக் களைந்து, குறிப்பாக, நம் பார்வையில், மரக்கட்டைகளாகத் தைத்து நிற்கும் குறைகளை தூர எறிந்து, தெளிவான பார்வையுடன் பிறரது குறைகளை அகற்ற உதவிகள் செய்யவும், அவர்களை உன்னத வழிகளுக்கு அழைத்துச் செல்லவும் இறைவன் நமக்கு அருள்தர வேண்டுமென்று செபிப்போம்.

No comments:

Post a Comment