11 February, 2022

‘Blessed consciousness’ ‘பேறுபெற்ற மனநிலை’

 
Blessed are you who are poor…

6th Sunday in Ordinary Time

Sunday Readings: 
Jeremiah 17:5-8; 1 Corinthians 15:12,16-20; Luke 6:17,20-26

A workshop was in progress. The resource person conducting the workshop asked the participants, a strange and unexpected question: “What do you think is the most valuable land in the world?” Several persons came up with various guesses, such as Manhattan (New York), the oil fields of the Middle East, and the gold mines of South Africa, before the resource person indicated that they were way off track. He paused for a moment, and said, “You’re all wrong. The most valuable land in the world is the graveyard. In the graveyard are buried all of the unwritten novels, never-launched businesses, unreconciled relationships, and all of the other things that people thought, ‘I’ll get around to that tomorrow.’ One day, however, their tomorrows ran out.” (Todd Henry).

Todd Henry the founder of the ‘Accidental Creative’, a company that helps creative people and teams be prolific, brilliant and healthy, recounts this incident in his book by the same title: “The Accidental Creative” (2011) and goes on to say, “That day I went back to my office and I wrote down two words in my notebook and on the wall of my office that have been my primary operating ethic for the last several years: DIE EMPTY.”
In fact, in 2013, Todd Henry wrote another book with the title – “Die Empty”. The title of the book grabbed my attention in a special way. How many of us carry so many ‘unfinished’ works to our graves! Blessed are those who can share everything they have on this side of the grave, and reach the grave totally empty! This sounds like a fitting ‘beatitude’ that can serve in funerals.

This Sunday we are invited to reflect on the ‘beatitudes’. The moment we hear the term ‘beatitudes’, we tend to think more of the opening segment of the ‘Sermon on the Mount’ (Matthew 5). In today’s liturgy we are presented with Luke’s ‘Sermon on the Plain’ (Luke 6). As these titles suggest, there are differences and similarities between these gospel passages.

The ‘Sermon on the Mount’ in Matthew's Gospel, gives the impression that Jesus is speaking with the authority and voice of God. The mountaintop is a symbol of closeness to God. Those who ascend the mountain, see God and speak for God; recall the story of Moses and the Ten Commandments. Luke, on the other hand, introduces the plain as the location of Jesus' teaching. Jesus teaches on level ground, alongside the disciples and the crowd. Luke presents Jesus' authority in a different light. He is God among us.

While Matthew presents a list of ‘beatitudes’, Luke presents the more radical and challenging ‘beatitudes and woes’. Matthew gives eight ‘beatitudes’, while Luke gives four ‘beatitudes’ and four ‘woes’. In Matthew, Jesus uses the third person (“they will be filled”), whereas in Luke, Jesus speaks to us directly, in the second person (“you will be filled”).  Matthew speaks only of the reward promised to those who live according to Jesus’ message, while Luke presents the consequences we face, when we do not follow the message of Christ.

As we listen to this Gospel, the Beatitudes jar our sensibilities. Those who are poor, hungry, weeping, or persecuted are called ‘blessed’. This is, indeed, a Gospel of reversals. Those often thought to have been forgotten by God are called ‘blessed’. In the list of “woes,” those whom we might ordinarily describe as blessed by God are warned about their peril. Riches, possessions, laughter, reputation . . . these are not things that we can depend upon as sources of eternal happiness. They not only fail to deliver on their promise; our misplaced trust in them will lead to our demise. The ultimate peril is in misidentifying the source of our eternal happiness.

Luke presents the beatitudes in the contrasting, binary style of ‘poor-rich’ ‘hungry-filled’ and ‘weeping-laughing’, thus reinforcing what Mary had said a few chapters earlier in the Magnificat: “He has scattered the proud in the thoughts of their hearts. He has brought down the powerful from their thrones and lifted up the lowly; he has filled the hungry with good things, and sent the rich away empty.” (Luke 1:51-53)

Our reflection on the Lucan Beatitudes also invites us to reflect on Jesus, the Giver of Blessings. Let me share (extensively) the thoughts of Fr Ron Rolheiser, the Oblate Priest, writer and professor of theology. He has spoken of Jesus as operating out of a ‘Blessed consciousness’:
There’s a Buddhist parable that runs something like this: One day as the Buddha was sitting under a tree, a young, trim soldier walked by, looked at the Buddha, noticed his weight and his fat, and said: “You look like a pig!” The Buddha looked up calmly at the soldier and said: “And you look like God!” Taken aback by the comment, the soldier asked the Buddha: “Why do you say that I look like God?” The Buddha replied: “Well, we don’t really see what’s outside of ourselves, we see what’s inside of us and project it out. I sit under this tree all day and I think about God, so that when I look out, that’s what I see. And you, you must be thinking about other things!”
There’s an axiom in philosophy that asserts that the way we perceive and judge is deeply influenced and colored by our own interiority… Thomas Aquinas expressed this in a famous axiom: Whatever is received is received according to the mode of its receiver.
If this is true, and it is, then, as the Buddhist parable suggests, how we perceive others speaks volumes about what’s going on inside of us. Among other things, it indicates whether we are operating out of a blessed or a cursed consciousness.
Let’s begin with the positive, a blessed consciousness:  We see this in Jesus, in how he perceived and in how he judged. His was a blessed consciousness. (Fr Rolheiser)

Right from the moment when the Angel Gabriel came to the young lady Mary to talk about Jesus becoming a human, words of blessings were shared: “Hail full of grace…” (Lk. 1:28) was the first blessing that Mary received from the Angel. Later, her cousin Elizabeth heaped more blessings on Mary: “Blessed are you among women and blessed is the fruit of your womb!” (Lk 1: 42) Hence, right from the moment of conception Jesus was blessed.
As the gospels describe it, at his baptism, the heavens opened and God’s voice was heard to say: “This is my blessed one, in whom I take delight.” And, it seems, for the rest of his life Jesus was always in some way conscious of his Father saying that to him: “You are my blessed one!” As a consequence, he was able to look out at the world and say: “Blessed are you when you are poor, or when you are persecuted, or suffering in any way. You are always blessed, no matter your circumstance in life.” He knew his own blessedness, felt it, and, because of that, could operate out of a blessed consciousness, a consciousness that could look out and see others and the world as blessed.
Sadly, for many of us, the opposite is true: We perceive others and the world not through a blessed consciousness but through a cursed consciousness.  We have been cursed and because of that, in whatever subtle ways, we curse others.
If any of us could play back our lives as a video we would see the countless times, especially when we were young, when we were subtly cursed, when we heard or intuited the words: Shut up! Who do you think you are! Go away! You aren’t wanted here! You’re not that important! You’re stupid! You’re full of yourself! 
All of these were times when our energy and enthusiasm were perceived as a threat and we were, in effect, shut down. And the residual result in us is shame, depression, and a cursed consciousness.  Unlike Jesus we don’t see others and the world as blessed. Instead, like the young soldier looking at an overweight Buddha under a tree, our spontaneous judgments are swift and lethal: “You look like a pig!”
Whatever is received is received according to the mode its receiver. Our harsh judgments of others say less about them than they say about us. Our negativity about others and the world speaks mostly of how bruised and wounded, ashamed and depressed, we are – and how little we ourselves have ever heard anyone say to us: “In you I take delight!” (Fr Rolheiser)

The Beatitudes are often described as a framework for Christian living. This Sunday we are invited to look into ourselves and check whether we operate out of a ‘blessed consciousness’ or a ‘cursed consciousness’. Our vocation as Christians is not only lead a blessed life but to become a blessing to all those around us!

Blessed are you who hunger now…
 
பொதுக்காலம் 6ம் ஞாயிறு

ஞாயிறு வாசகங்கள்: 
எரேமியா 17:5-8; 1 கொரிந்தியர் 15:12,16-20; லூக்கா 6:17, 20-26

கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்கருத்தரங்கை வழிநடத்தியவர், அரங்கத்தில் கூடியிருந்தோரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். "இவ்வுலகில் மிகவும் விலை உயர்ந்த நிலம் எங்கே உள்ளது?" என்று அவர் கேட்டதும், பதில்கள் பறந்துவந்தன. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகள், வைரச் சுரங்கங்கள் நிறைந்த தென்னாப்பிரிக்கா, நியூ யார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதி என்று பலவகை பதில்கள் சொல்லப்பட்டன.
"நீங்கள் சொன்ன அத்தனை பதில்களும் தவறு" என்று கூறியப் பேச்சாளர், சில நொடிகள் மௌனம் காத்தார். பின்னர், "இவ்வுலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நிலம், நமது கல்லறைத் தோட்டம், அல்லது, சுடுகாடு. ஏனெனில், அங்குதான் பலர், தாங்கள் அடையாத கனவுகளுடன், எழுதாதக் கதைகளுடன், துவங்காத வர்த்தகத் திட்டங்களுடன், ஒப்புரவாகாத உறவுகளுடன் புதைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர், 'அடுத்த நாள் செய்துகொள்வோம்' என்று ஒவ்வொரு நாளும் கூறிவந்தனர். அவர்கள் கூறிய அந்த 'அடுத்த நாளை'ச் சந்திக்காமல் விடைபெற்றனர்" என்று பேச்சாளர் கூறினார்.

இந்நிகழ்வைப் பற்றி தன் நூல் ஒன்றில் (The Accidental Creative - 2011) குறிப்பிடும் டாட் ஹென்றி (Todd Henry) என்ற எழுத்தாளர், அந்த கருத்தரங்கைவிட்டு நேராக தன் அலுவலகம் சென்று, இரு சொற்களை தன் குறிப்பேட்டிலும், தன் அறையின் சுவரிலும் எழுதி வைத்ததாகக் கூறியுள்ளார். அன்றிலிருந்து அவர் வாழ்வை வழிநடத்திய அவ்விரு சொற்கள்: "DIE EMPTY", அதாவது, "காலியாக இறப்பாய்". ஹென்றி அவர்கள், "Die Empty" என்ற அவ்விரு சொற்களை, 2013ம் ஆண்டு எழுதிய ஒரு நூலின் தலைப்பாகக் கொடுத்தார்.

மனித வாழ்வில் தவிர்க்கமுடியாத எதார்த்தங்களாக இருக்கும் மரணம், கல்லறை, ஆகியவை, நமக்கு, வாழ்வின் முழுப்பொருளையும் உணர்த்த வல்லவை. மரணத்திற்கு முன், நம் வாழ்வை, திறமைகளை, சக்தியை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு, காலியாக கல்லறைக்குச் செல்வது எவ்வளவோ மேல். ஆனால், நம்மில் பலர், கனவுகளை, பிரச்சனைகளை, ஏக்கங்களை, கவலைகளை சுமந்தவண்ணம் நம் கல்லறையை அடைகிறோம். "காலியாக இறப்பாய்" என்று ஹென்றி அவர்கள், கூறுவதைக் கேட்கும்போது, கல்லறைக்குள் போகும்போது, காலியாக ('ஜாலி'யாக) செல்வோர் பேறுபெற்றோர் என்று சொல்லத் தோன்றுகிறது.

கல்லறையை அடைவதற்குமுன், நம் வாழ்வை பிறருக்கு வழங்கிய நிறைவை நாம் உணர்ந்திருந்தால், கல்லறையைத் தாண்டி நம் வாழ்வு தொடரும் என்ற நம்பிக்கையோடு நாம் கண்களை மூடியிருந்தால், நாம் உண்மையில் பேறுபெற்றோர். கல்லறைக்கு இப்பக்கமும், மறுபக்கமும் நாம் வாழும், வாழப்போகும் வாழ்வு, நிறைவுடன் இருக்க, நற்செய்தியில் நமக்கு பல வழிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு முக்கியமான வழிகாட்டி, இயேசு வழங்கியுள்ள 'பேறுபெற்றோர்' என்ற கூற்றுகள். இந்தக் கூற்றுகள் இன்று நம்மை நற்செய்தி வழியே அடைந்துள்ளன.

'பேறுபெற்றோர்' என்ற சொற்றொடரைக் கேட்டதும், மத்தேயு நற்செய்தி 5ம் பிரிவில் இயேசு கூறியுள்ள புகழ்பெற்ற வாக்கியங்கள், முதலில் நம் நினைவுக்கு வருகின்றன. ஆனால், இன்றைய வழிபாட்டில், லூக்கா நற்செய்தி 6ம் பிரிவில் இயேசு கூறும் பேறுபெற்றோர் வாக்கியங்கள், நற்செய்தியாக நம்மை வந்தடைந்துள்ளன.

மத்தேயு நற்செய்தியில், இயேசு, மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர்ந்து, கற்பித்ததால், அதை, 'மலைப்பொழிவு' என்றும், லூக்கா நற்செய்தியில், இயேசு, தன் சீடர்களுடன், மலையிலிருந்து இறங்கி வந்து, சமவெளியான ஓரிடத்தில் நின்று கற்பித்ததால், அதை, 'சமவெளிப்பொழிவு' என்றும் அழைக்கிறோம்.
மலைப் பகுதி கடவுளின் உறைவிடமாகக் கருதப்பட்டதால், மலைகளில் கடவுளைச் சந்திக்கவும், அவரது பெயரால் உண்மைகளைக் கூறவும் ஆற்றல் பெறுகிறோம். சீனாய் மலையில் கடவுளைச் சந்தித்த மோசே, அவர் தந்த கட்டளைகளை இஸ்ரயேல் மக்களுக்குத் தந்ததை நாம் அறிவோம் (விடுதலைப்பயணம் 19,20). இறைவனோடு நெருங்கியவராய், இறைவன் சார்பில் பேசும் இயேசுவை, மத்தேயு நற்செய்தியின் 'மலைப்பொழிவில்' நாம் சந்திக்கிறோம். லூக்கா நற்செய்தியில், மலையிலிருந்து இறங்கிவந்து மக்களோடு மக்களாக நின்று, இயேசு 'சமவெளிப்பொழிவை' வழங்குகையில், 'கடவுள் நம்மோடு' என்ற உண்மையை உணர்கிறோம்.

மத்தேயு நற்செய்தியில், இயேசுவின் கூற்றுகள், 'பேறுபெற்றோர்' என்ற ஆசி மொழிகளாக மட்டும் ஒலிக்கின்றன. லூக்கா நற்செய்தியில், இக்கூற்றுகள், 'பேறுபெற்றோருக்கு' ஆசிகளாகவும், 'கெடுற்றோருக்கு' எச்சரிக்கைகளாகவும் கூறப்பட்டுள்ளன. நற்செய்தியாளர் மத்தேயு, 'ஏழையரின் உள்ளத்தோர்', 'துயருறுவோர்' 'கனிவுடையோர்' என்ற பொதுவானச் சொற்களைப் பயன்படுத்தியதால், இயேசு, வேறு யாரையோ குறிப்பிடுவது போன்ற உணர்வு எழுகிறது. லூக்கா நற்செய்தியிலோ, இயேசு, தன் ஆசி மொழிகளையும், எச்சரிக்கைகளையும், தன்னைச் சூழ்ந்து நின்ற மக்களிடம், 'நீங்கள்' என்ற சொல்லைப் பயன்படுத்தி, நேரடியாகக் கூறுகிறார்.
சமவெளியில், நம்மில் ஒருவராக தன்னையே இணைத்துக்கொண்டு, இயேசு நம்மிடம் நேரடியாகக் கூறும் ஆசி மொழிகளும், எச்சரிக்கைகளும், நமக்குள் எத்தகைய தாக்கங்களை உருவாக்குகின்றன என்பதை, ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்வது நல்லது.

இநத் ஆன்ம ஆய்வை மேற்கொள்வதற்குமுன், இயேசு, ஆசி மொழிகளை வழங்கினார் என்ற உண்மையை, கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்து, பயன்பெறுவோம். இயேசு, தன் வாழ்நாள் முழுவதும், ஆசீர் ஒன்றையே, இவ்வுலகிற்கு வழங்கினார். குறிப்பாக, துயரங்களால் துவண்டோரை, தன் ஆறுதலான சொற்களாலும், நலம் வழங்கும் அற்புதங்களாலும் நிறைத்தார். ஆசி வழங்குவது, இயேசுவுக்கு, இயல்பாக அமைந்த ஒரு பண்பு. இத்தகையப் பண்பு, ஆசீரால் நிறைந்திருக்கும் ஒரு மனதிலிருந்துமட்டுமே வெளிவரக்கூடும். இதைப் புரிந்துகொள்ள, புத்தமதத்தில் கூறப்படும் ஓர் உவமை உதவியாக இருக்கும்.

ஒருநாள், புத்தர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, அழகும், உடல் கட்டமைப்பும் கொண்ட ஒரு படைவீரர் அவ்வழியே வந்தார். குண்டாக, அதிக எடையுடன் மரத்தடியில் அமர்ந்திருந்த புத்தரைப் பார்த்த அந்த வீரர், "உம்மைப் பார்த்தால், ஒரு பன்றியைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார். புத்தர், அமைதியாக, அந்த வீரரைப் பார்த்து, "உம்மைப் பார்த்தால், ஒரு தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த வீரர், "என்னைப் பார்த்தால், தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது என்று உம்மால் எப்படி சொல்லமுடிந்தது?" என்று கேட்டார். புத்தர் மறுமொழியாக, "நாம் உண்மையிலேயே, வெளி உலகை, வெளியிலிருந்து பார்ப்பது கிடையாது. நமக்குள் இருப்பனவற்றைக் கொண்டு, வெளி உலகைப் பார்க்கிறோம். நான், இந்த மரத்தடியில் அமர்ந்து, இறைவனைத் தியானித்து வருகிறேன். எனவே, நான் காண்பதனைத்திலும், இறைவனைக் காண்கிறேன். நீரோ, வேறு பலவற்றை சிந்தித்துக் கொண்டிருப்பதால், வேறு விதமாகப் பார்க்கிறீர்" என்று அமைதியாகக் கூறினார்.

இவ்வுலகைப்பற்றி, பிறரைப்பற்றி நாம் கொண்டிருக்கும் சிந்தனைகள், கண்ணோட்டம் அனைத்தும் நமக்கு உள்ளிருந்து உருவாகின்றன. நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது, ஆசீர் பெற்ற ஒரு மனநிலையா, அல்லது, சபிக்கப்பட்ட ஒரு மனநிலையா என்பதை ஆய்வு செய்வது நல்லது. ஆசீர் பெற்ற மனநிலை, அனைவரையும், அனைத்துலகையும் ஆசீர்வதிக்கப்பட்டதாய் காணும். சபிக்கப்பட்ட மனநிலையோ, அனைத்தின் மீதும் சாபங்களை அள்ளி வீசும். நம்மில் பலர், நமக்கு வந்துசேரும் ஆசிகளை அலட்சியம் செய்துவிட்டு, அவ்வப்போது வரும் துயரங்களை, நம் சாபங்களாக பெரிதுபடுத்துவதால், பெரும்பாலான நம் வாழ்வு சபிக்கப்பட்ட மனநிலையிலேயே கழிகிறது.

இயேசுவின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும், ஆசீர் பெற்ற மனநிலையிலிருந்து வெளிவந்தவை. அவர் இவ்வுலகில் மனிதராகப் பிறக்கப்போகிறார் என்ற அற்புதச் செய்தியை, இளம்பெண் மரியாவிடம் பகிரவந்த கபிரியேல் தூதர், மரியாவை, "அருள்மிகப் பெற்றவரே" (லூக். 1:28) என்று வாழ்த்தினார். மரியாவைச் சந்தித்த உறவினர் எலிசபெத்து, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக். 1:42) என்று, மனநிறைவான ஆசி வழங்கினார்.

இவ்வாறு, கருவில் தோன்றியதுமுதல், ஆசீரால் நிரப்பப்பட்ட இயேசு, தன் பணிவாழ்வைத் துவங்கிய வேளையிலும், ஆசீரால் நிரப்பப்பெற்றார். "நீரே என் அன்பார்ந்த, - ஆசி பெற்ற - மகன்" (காண்க - லூக். 3:22) என்று இறைத்தந்தையின் ஆசீரால் அவர் நிரப்பப்பெற்றார். ஆசீரால் நிறைந்து வழிந்த இயேசு, தன் சமவெளிப்பொழிவை, ஆசீர்வாதங்களுடன் ஆரம்பித்தார்:
லூக்கா நற்செய்தி 6: 20-21
"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவுபெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.

ஆசீர் வழங்கிய அதே வேளையில், இயேசு, கசப்பான உண்மைகளை, கேடுகளாக, எச்சரிக்கைகளாக வழங்கவும் தயங்கவில்லை.
இன்றைய நற்செய்தியில், இயேசு கூறியிருக்கும் பேறுகளையும், கேடுகளையும் தவறாகப் பொருள்கொள்ள வாய்ப்புண்டு. அதாவது, இயேசு, ஏழ்மையை, பட்டினியை, அழுகையை, ஆசீர்வாதங்களாக உயர்த்திப் பேசுவதாக எண்ணிப்பார்க்க வாய்ப்புண்டு. இயேசு, இக்கொடுமைகளை மேன்மைப்படுத்தவில்லை; இவற்றால் துன்புறுவோரை மேன்மைப்படுத்தினார். ஏழ்மை, பட்டினி, அழுகை ஆகிய கொடுமைகளால் துன்புறுவோர், இறைவனை நோக்கி அடிக்கடி திரும்ப, இறைவனை தங்கள் வாழ்வின் ஆதாரம் என்று எண்ணிப்பார்க்க, அவர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. இதற்கு மாறாக, செல்வத்தில், அதிகமான உணவில், மகிழ்வில் ஆழ்ந்திருப்போர், தவறான ஒரு தன்னிறைவு அடைவதால், அவர்களின் பார்வை இறைவனை நோக்கித் திரும்புவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. இந்த உண்மையை இடித்துரைக்கவே, இயேசு ஒன்றுக்கொன்று முரணான இவ்விரு குழுவினரை இணைத்துப் பேசியுள்ளார்.

ஏழைகள் - செல்வர்கள், பட்டினியாய் இருப்போர் - உண்டு கொழுத்திருப்போர், அழுது கொண்டிருப்போர் - சிரித்து இன்புறுவோர், வெறுத்து, ஒதுக்கி, இகழப்படுவோர் - புகழ்ந்து பேசப்படுவோர் என்று, ஒன்றுக்கொன்று முரணான நான்கு பிரிவினரைச் சுட்டிக்காட்டி இயேசு பேசுவது, அன்னை மரியாவின் புகழ்ப்பாடலில் நாம் காணும் முரண்பாடுகளை நினைவுறுத்துகின்றன. தாழ்வுற்றோரை உயர்த்தும் இறைவன், செருக்குற்றோரை சிதறடிக்கிறார்; பசித்தோரை நலன்களால் நிரப்பி, செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார் (லூக்கா 1:47-53) என்ற முரண்பாடுகளை, அன்னை மரியாவின் புகழ்ப்பாடலில் காண்கிறோம். தன் நற்செய்தியின் துவக்கத்தில், அன்னை மரியாவின் புகழ்ப்பாடலை கூறியுள்ள நற்செய்தியாளர் லூக்கா, மீண்டும் ஒருமுறை, அந்த முரண்பாடுகளை நினைவுறுத்தும் வண்ணம், இயேசுவின் சமவெளிப்பொழிவில் நான்கு முரண்பாடுகளை முன்வைக்கிறார்.

மத்தேயு, லூக்கா என்ற இரு நற்செய்திகளிலும், பேறுபெற்றோர் என, இயேசு, பட்டியலிட்டுள்ள புண்ணியங்கள், நிறை வாழ்வுக்கு வழிகாட்டும் விளக்குகள். மதம், இனம் என்ற வட்டங்களைக் கடந்து, “பேறுபெற்றோர் வாக்கியங்கள், மகாத்மா காந்தி உட்பட, பல உன்னத மனிதர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன. இன்றைய நற்செய்தி வழியே, பேறுகளையும், கேடுகளையும் இணைத்து, இயேசு கூறும் ஆசி மொழிகளால் மனநிறைவும், அவர் கூறும் எச்சரிக்கைகளால் விழிப்புணர்வும் பெறுவோமாக. நாம் அனைவரும் ஆசீர் பெற்ற மனநிலையுடன் வாழவும், நிறைவுபெற்ற மனதுடன் பிறருக்கு ஆசீர் வழங்குபவர்களாக வாழவும் இறைவன் நம்மை உருவாக்குவாராக.

No comments:

Post a Comment