04 August, 2022

A treasure in heaven விண்ணுலகில் குறையாத செல்வம்


19th Sunday in Ordinary Time

Last Sunday in the context of the parable of the foolish rich man (Luke 12: 13-21), Christ gave us a sharp warning: “Take heed, and beware of all covetousness; for a man’s life does not consist in the abundance of his possessions.” (Luke 12:15).  This Sunday’s liturgy is a sequel to what we reflected on last week. This week’s Gospel begins ten verses later… Luke 12: 32-48. In the intervening ten verses 22-31, Jesus talks about the lessons we could learn from the birds of the air and the lilies of the field. It is interesting that we, who have learnt, from the birds, the art and science of flying, have not learnt so many other lessons which birds can teach. One among them is the trust these birds have in getting provided by the Heavenly Father.

Today’s Gospel opens with the reassuring words of Jesus about the care of the Heavenly Father. “Fear not, little flock, for it is your Father’s good pleasure to give you the kingdom.” (Luke 12: 32). Instead of trusting God for our future, we go to great lengths to provide for our future. Sometimes this ‘providing for the future’ goes to sickening attempts at amassing wealth. Against this mad drive to store more and more wealth, even to the point of building bigger barns like the rich fool, Jesus, in today’s gospel, tells us how to build up a treasure in heaven: “Sell your possessions and give to the poor. Provide purses for yourselves that will not wear out, a treasure in heaven that will not be exhausted, where no thief comes near and no moth destroys.” (Luke 12: 33)

History tells us about the ways in which human beings have saved their wealth… starting from the days when we had to protect the cattle which were our main asset, to the present day when we have to protect papers (currencies) and metals (mostly gold, diamonds and platinum) in so many ways…

While searching for all the means we have invented to protect our treasures from thieves and moth, as well as from law and taxes, I came across some information from a book – ‘Stolen Indian Wealth Abroad – How to Bring it back?’ - a compilation of articles (by Dr R Vaidyanathan, Sri.S.Gurumurthy, Sri.M.R.Venkatesh, and Sri.Arun Shourie) published in May 2009. This book talks about how the rich – politicians, government officials, business magnets, film artists and cricketers – have stashed away black, dirty money and what it has done to India and to the world… or, what this money could do to India and to the world, if brought back.

Although India leads in terms of the amount of black money stashed away in other countries, it is not the only guilty country. In 2005, a book written by Raymond W.Baker - Capitalism’s Achilles Heel: Dirty Money And How To Renew The Free Market System claims that the black money in the year 2001 was $11.5 trillion which was increasing at the rate of $1 trillion every year, out of which $500 billion was stolen from developing countries.

I was curious to figure out what 1 trillion dollars would mean. If you wish to do this search, you can go to google and simply type ‘1 trillion dollars’. You will get 29,700,000 results in 0.46 seconds under various topics like:
What does one TRILLION dollars look like?
Visualizing One Trillion Dollars
What is a trillion dollars?
Videos for one trillion dollars
One Trillion Dollars Visualized etc.

One of those topics is: Numb and number: Is trillion the new billion? – which gives us many, many ways of understanding this number. This topic grabbed my attention due to the words ‘numb’ and ‘number’… In 1 trillion dollars we are talking of a number all right. But, this ‘number’ can surely make us ‘numb-er’ (higher level of inability to think, feel, or react normally).
One of the sites talking about 1 trillion dollars, gives us this idea, namely, if you can spend one million dollars a day, you need one million days, which is around 2740 years to spend 1 trillion dollars. Instead of simply playing with numbers as if they were only a matter of zeroes, we get a better picture if we can think of 1 trillion dollars in other contexts.

I tried to convert 1 trillion dollars in Rupees and tried to make sense of this ‘numb-er’ in the Indian context. If this money was distributed to every one – all the one billion plus people – in India, each one would get around 78,000 Rupees. This means that if the money stashed away in tax havens in one year (JUST ONE YEAR) is distributed to all the people in India, each one will get 78,000. For some, this would be pocket money. But, I know that there are people whose annual income is around 78,000 Rupees. Leaving aside all the well-to-do in our country, if this money were to be distributed to those who live below poverty line, they can live in reasonable comfort for at least three years.

Baker’s book seems to claim that the ‘unaccounted’ money was around 11.5 trillion dollars in 2001 which grows at the rate of 1 trillion dollars per year. If we go with Baker’s estimation, right now in 2022 there must be 33 trillion dollars of black money in tax havens. If this money can be distributed to the really, really poor people ALL OVER THE WORLD, they will be able to live in dignity (without begging) for TEN YEARS. Imagine, dear friends, a world where there would be no beggars at all… Wouldn’t that be heaven on earth?

Involuntarily our mind recalls the promise of creating ‘heaven on earth’ in India made by our present Prime Minister by bringing the ‘stolen’ money back to our country and making a deposit of 15 lakhs of rupees in everyone’s account. All of us know that after the present government took over, multiple 15 lakhs have been deposited in the bank accounts of a few rich people while the poor citizens of India to whom 15 lakhs were promised, lacked basic necessities to survive. Especially during the time of COVID-19 pandemic, the chasm between the rich and the poor in India has become fathomless. Having got tired of the fake promises of the present government, some have started raising questions. On February 3, 2020 there was an article in ‘India Today’ website with the following headline and lead: Rs 15 lakh promise: PM Modi, Amit Shah face charges of cheating, dishonesty in Ranchi court
The complainant HK Singh, an advocate, has filed a case against PM Modi and Amit Shah, accusing them of cheating people by promising to credit Rs 15 lakh in every person's bank account if they come to power.

As against the false heavens promised by our politicians, Jesus invites us to find ways and means to create our ‘treasure in heaven’. Here is the suggestion given by Jesus in today’s Gospel: “Sell your possessions and give to the poor. Provide purses for yourselves that will not wear out, a treasure in heaven that will not be exhausted, where no thief comes near and no moth destroys.” (Luke 12: 33) What Jesus is saying is a bit radical… to sell our possessions! What we need to do is simply give away what is superfluous.. (black money is, certainly, superfluous.) and this world would become heaven.

A final thought on how to ‘give to the poor’. Most of the time, we tend to give to the poor with much publicity, in which we assume a high position and, consequently, make the poor cringe before us to receive the benefits of our ‘giving’. A few days back, one of my friends (a priest) sent me a WhatsApp message on an award winning Iranian short film. This one-minute film shows how we can give to the poor without making them feel humiliated, but rather, feel dignified.

Here is the story line of this film: A financially broken father walks into a convenience store with his daughter. He looks furtively around to see whether anyone is watching him and then picks up bread from the shop and is about to walk away when the shopkeeper stops him, making the daughter confused. She asks her father as to what happened. Her father is about to apologize when the shopkeeper tells the girl, “Your father forgot the change” and hands over some cash to him. The man is on the brink of shedding tears. Another customer who has been watching this incident calls to the girl’s father and tells him, “Sir, you are also forgetting the bag of rice” and hands it over to the father.
At this moment, a text appears on the screen: Lesson learnt: Every thief is not a thief. Some could be poor and needy. We should help them in such a way that they are not humiliated (especially in front of relatives and children)…
You can watch this short (one-minute) video on YouTube: Award winning Iranian Short Film - Father , Daughter and Shopkeeper, posted on Jul 23, 2022

Today’s Gospel calls us to wake up and be accountable. Here are the closing words of Jesus in today’s Gospel: “From everyone who has been given much, much will be demanded; and from the one who has been entrusted with much, much more will be asked.” (Luke 12: 48b)

Where your treasure is…

பொதுக்காலம் 19ம் ஞாயிறு

தன் நிலத்தில் விளைந்தவை அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற மயக்கத்தில் வாழ்ந்த அறிவற்ற செல்வனை கடந்த ஞாயிறு திருவழிபாட்டில் சந்தித்தோம். அன்றைய நற்செய்தியில் இயேசு வழங்கிய ஓர் எச்சரிக்கை இவ்வாறு ஒலித்தது. இயேசு அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாதுஎன்றார். (லூக்கா 12:15)

அறிவற்ற செல்வனைப்பற்றிய அந்த உவமை, லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் 21ம் இறைவாக்கியத்துடன் முடிந்தது. இவ்வாரம், அதே 12ம் பிரிவின் 32ம் இறைவாக்கியத்துடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இடைப்பட்ட 10 இறைவாக்கியங்களில் இயேசு கூறுவதெல்லாம், வானத்துப் பறவைகளிலிருந்து, வயல்வெளி மலர்களிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையே. இன்றிருந்து நாளை நெருப்பில் எறியப்படும் காட்டுப் புல்லை அழகுடன் பராமரிக்கும் இறைவன், நம்மைக் காப்பாற்ற மாட்டாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார் இயேசு.

தந்தையாம் இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டோருக்கு, அவரது அரசில் இடம் உண்டு என்ற வாக்குறுதியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது: சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். (லூக்கா 12:32)
இதைச் சொன்ன அதே மூச்சில், செல்வத்தைப் பற்றிய சில தெளிவுகளையும் இயேசு நமக்குத் தருகிறார். இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் அவர் கூறும் அறிவுரைகள் இதோ: உங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். (லூக்கா 12:33-34)

திருடன் நெருங்காமல், பூச்சி அரிக்காமல் செல்வம் சேர்க்கும் வழிகள் என்னென்ன இருக்கக்கூடும் என்ற தேடலில் நான் ஈடுபட்டிருந்தபோது, திருட்டு, பூச்சி இவற்றிலிருந்து மட்டுமல்லாமல், சட்டம், வரி இவற்றிலிருந்தும் தம் செல்வங்களைக் காப்பாற்ற, இந்தியச் செல்வந்தர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள், பல செய்திகளாக, நூல்களாக வெளிவந்துள்ளதை அறியமுடிந்தது. அவற்றில் ஒரு குறிப்பிட்ட நூல், நமது சிந்தனைகளுக்கு மிகவும் துணையாக இருக்கும்.

2009ம் ஆண்டு வெளியான இந்நூலில், தவறான வழிகளில், தேவைக்கு அதிகமாக செல்வம் சேர்த்து, அதை அயல்நாடுகளில் பதுக்கிவைத்துள்ள இந்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பெரும் செல்வர்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகையர் என்ற ஒரு பெரும் படையினர், பல ஆண்டுகளாய் செய்து வந்துள்ள ஓர் அக்கிரமம் அலசப்பட்டுள்ளது. இந்தியாவில் திருடி, அயல்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ள செல்வங்கள். இவற்றை மீண்டும் கொண்டு வருவது எப்படி? (Stolen Indian Wealth Abroad – How to Bring it back?) என்பது, இந்நூலின் தலைப்பு.

செல்வங்களைத் தவறான வழிகளில் சேர்ப்பதும், குவிப்பதும் இந்தியாவில் மட்டும் நிலவும் குற்றம் என்று எண்ணவேண்டாம். இத்தகையக் குற்றவாளிகள் உலகின் அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். இப்படி தவறான வழிகளில் தவறான இடங்களில் குவிக்கப்பட்ட செல்வங்களால், உலகம் 2007ம் ஆண்டு பொருளாதாரத்தில் ஒரு பெரும் அழிவைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தச் சீரழிவு உலகை உலுக்கி எடுத்தபோதுதான், அரசுத் தலைவர்கள் இந்தக் கறுப்புப் பணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். உலகத் தலைவர்கள் பலரும் இக்குற்றத்தைத் தடுக்கும் வழிமுறைகளைத் தீவிரமாகச் சிந்தித்தபோது, இந்தியத் தலைவர்கள் அதைப்பற்றி அதிக அக்கறை காட்டவில்லை.

இந்தியத் தலைவர்களுக்கோ, உலகத் தலைவர்களுக்கோ கறுப்புப் பணம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. 2005ம் ஆண்டு கறுப்பு, அழுக்குப் பணத்தைப் பற்றி Raymond W. Baker என்பவர் ஒரு நூலை வெளியிட்டார் Capitalism’s Achilles Heel: Dirty Money and How to Renew the Free Market System). தனியுடைமை, முதலாளித்துவம் இவற்றால் சேகரிக்கப்பட்ட அழுக்குச் செல்வங்களைப் பற்றி இந்நூலில் அவர் அலசியிருக்கிறார். Baker அவர்களின் கணிப்புப்படி, 2001ம் ஆண்டில் உலகில் பதுக்கப்பட்டிருந்த கறுப்புப் பணத்தின் மதிப்பு 11.5 Trillion Dollars. இந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் ஒரு Trillion Dollar அதிகமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு Trillion Dollar என்பது எவ்வளவு பெரியத் தொகை? விளையாட்டாக சிந்திக்க வேண்டுமெனில், இந்தப் பணத்தில் நீங்கள் ஒரு மில்லியன், அதாவது பத்து லட்சம் டாலர்கள் ஒவ்வொரு  நாளும் செலவு செய்தால், இந்தப் பணத்தைச் செலவு செய்து முடிக்க பத்து லட்சம் நாட்கள், அதாவது 2740 ஆண்டுகள் ஆகும்.
பிரமிப்பும், அதிர்ச்சியும் தரும் இத்தகைய எண்ணிக்கை விளையாட்டுக்களை ஒதுக்கிவைத்துவிட்டு, சமுதாய அக்கறையோடு சிந்திக்க வேண்டுமென்றால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் என்ற வளரும் நாடுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும், கோடானக் கோடி மக்களுக்கு, ஒரு ட்ரில்லியன் டாலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால், அவர்கள் ஓராண்டுக்கு மற்றவரிடம் கையேந்தாமல், சுய மரியாதையோடு வாழமுடியும். அந்த அளவுக்குப் பணம் இது.

பணத்தின் மதிப்பை வெறும் எண்ணிக்கையாக, அதாவது, ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை பூஜ்யங்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, இவ்விதம் மக்கள் வாழ்வோடு, அதுவும் ஏழை மக்கள் வாழ்வோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் அந்தப் பணத்தின் மதிப்பு தெரியும். அதற்குப் பதில், இந்தப் பணம், வங்கிகளில் குவிந்திருந்தால், வெறும் பூஜ்யங்களாய்தான் இருக்கும்.
பணம் என்பது உரம் போன்றது. உரமானது குவித்து வைக்கப்பட்டிருக்கும்போது, அது நாற்றம் எடுக்கும். அதிக நாட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் உரம், தன் சக்தியையும், பயனையும் இழக்கும். ஆனால், அது நிலங்களில் பரப்பப்படும்போது, வளம் தரும் உயிராக மாறும். பயனற்று, நாற்றம் எடுக்கும் அளவுக்கு, ஒரு ட்ரில்லியன் டாலர்கள், ஒவ்வோர் ஆண்டும், பற்பல அயல்நாட்டு வங்கிகளில், கறுப்புப் பணமாய் குவிக்கப்படுகிறது.

Raymond W Baker அவர்கள், மற்றொரு வேதனை தரும் உண்மையையும், தன் நூலில் கூறியுள்ளார். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகும் இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் கறுப்புப் பணத்தில், பாதிக்குப் பாதி, அதாவது, 500 பில்லியன் டாலர்கள், வளரும் நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கப்படுகின்றன என்றும், Baker அவர்கள் கூறியுள்ளார். ஏழைகளின் உழைப்பை அநீதமான வழிகளில் உறிஞ்சி, உலகெங்கும் குவிக்கப்பட்டு நாற்றமெடுத்திருக்கும் கறுப்புப் பணம், உலகில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால், எல்லா ஏழைகளும் குறைந்தது பத்து ஆண்டுகளாவது யாரிடமும் கையேந்தி தர்மம் கேட்காமல், உடல், உள்ள நலனோடு வாழமுடியும். எவ்வளவு அழகான கற்பனை இது! வெறும் கற்பனை அல்ல, முயன்றால் நடைமுறையாகக்கூடிய ஓர் உண்மை! உலகில் எந்த ஒரு மனிதரும் அடுத்தவரிடம் கையேந்தாமல் சுய மரியாதையோடு பத்து ஆண்டுகள் வாழமுடிந்தால், இவ்வுலகம் விண்ணுலகம்தானே.

தற்போது இந்தியாவின் பிரதமராக இருப்பவர், இந்தியாவை விண்ணுலகமாய் மாற்றப்போவதாகக் கூறி மக்களின் வாக்குகளைப் பெற்றார். குறிப்பாக, யாரும், யாரிடமும் கையேந்தாமல் வாழ்வதற்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் வைப்பு நிதியை உருவாக்கப்போவதாகக் கூறி, 2014ம் ஆண்டு, மக்களின் வாக்குகளைப் பெற்றது, இப்போது நினைவுக்கு வருகிறது. அந்தப் பொய்யான வாக்கு நிறைவேறுவதற்குப் பதில், தற்போதைய அரசின் ஆட்சி காலத்தில் ஒரு சில செல்வந்தர்களின் வங்கிக் கணக்கில் மட்டும் 15 இலட்சம் அல்ல, பல்லாயிரம் முறை 15 இலட்சங்கள் குவிந்துள்ளதை நாம் வேதனையோடு உணர்கிறோம்.

மக்களை ஏமாற்ற, நம் அரசியல் தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு மாறாக, நாம் இவ்வுலகிலும், மறு உலகிலும் செல்வம் சேர்ப்பது எப்படி என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் அழகாக அறிவுறுத்தியுள்ளார்.
உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.” (லூக்கா 12:33) என்று இயேசு கூறும் அறிவுரை, தர்மம் செய்யும் வேளையில் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதையும் சிந்திக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது.

பொதுவாக, நாம் தர்மம் செய்யும்போது, நம்மை உயர்ந்த ஓரிடத்தில் வைப்பதும், நம்மிடம் கையேந்துபவர்களை தாழ்ந்ததோர் இடத்தில் வைப்பதும் நாம் பின்பற்றும் போக்கு. நாம் செய்யும் தர்மத்தின் வழியே, தர்மம் பெறுபவரையும் மதிப்புடன் நடத்தமுடியும் என்பதை, ஓர் இரானிய குறும்படம் மிக அழகாகக் காட்டுகிறது. இந்த ஒருநிமிட படத்தின் கதை இதோ:
தன் மகளுடன் மளிகைக் கடைக்குச் செல்லும் ஒரு ஏழைத்தந்தை, அங்கே, ரொட்டியை திருடிவிடுகிறார். திருடிவிட்டு திரும்ப எத்தனிக்கும் வேளையில், அந்தக் கடைக்காரர் அவரை கூப்பிட்டு நிற்கச் சொல்கிறார். இதைப் பார்க்கும் மகள், ஒன்றும் புரியாத நிலையில், தன் தந்தையைப் பார்த்து, "என்ன நடக்கிறது?" என்று கேட்கிறாள்.
இதைப் புரிந்துகொண்ட தந்தை, கவலைப்பட்டு, மனம் கலங்கி, கடைக்காரரிடம் மன்னிப்புக் கேட்க முயல்கிறார். அதற்குள், அந்தக் கடைக்காரர், தன் மகளிடம் பேசுவதை கேட்கிறார். "எனதருமை குழந்தையே, உன் தந்தை பணம் கொடுத்துவிட்டு, மீதியை வாங்க மறந்துவிட்டார்" என்று சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காதது போல, கொஞ்சம் பணத்தை எண்ணி, அந்த ஏழைத்தந்தையின் கைகளில் தருகிறார் கடைக்காரர். குற்ற உணர்வில் மூழ்கி, கண்களில் நீர் மல்க, ஒன்றும் செய்ய இயலாதவராக, தன் தலையைக் குனிந்தவாறே அந்த ஏழைத்தந்தை கடையை விட்டு வெளியேற ஒரு அடி எடுத்து வைக்கும்போது, அந்த கடையில் நின்றுக்கொண்டு, நடப்பதை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் ஒருவர்ஏழ்மையில் உணவுக்காக திருடியவரை கூப்பிட்டு, "சகோதரரே! நீங்கள் வாங்கிய இந்த அரிசிப்பையை மறந்துவிட்டுப் போகிறீர்களே, தயவுசெய்து எடுத்துச் செல்லுங்கள்." என்று சொல்லி, அரிசிப்பையை அவரிடம் கொடுக்கிறார். அதை, கனத்த மனதுடன் பெற்றுக்கொண்டு விடைபெறுகிறார், அந்த ஏழைத்தந்தை.

அவ்வேளையில், திரையில் பின்வரும் சொற்கள் பதிவாகின்றன:
Lesson learnt: Every thief is not a thief. Some could be poor and needy. We should help them in such a way that they are not humiliated (especially in front of relatives and children)…
நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம்: ஒவ்வொரு திருடரும், உண்மையில் திருடர் அல்ல. அவர்களில் சிலர் வறுமைப்பட்டவராய், தேவையில் உள்ளவராய் இருக்கக்கூடும். அவர்களுக்கு நாம் உதவிகள் செய்யும்போது, அவர்கள் அவமானமடைந்து போகாதவண்ணம் உதவிகள் செய்யவேண்டும். குறிப்பாக, அவர்களது உறவினர்கள், இன்னும் குறிப்பாக, அவர்களது குழந்தைகள் முன் அவர்கள் அவமானமடையாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

விண்ணுலகில் குறையாத செல்வத்துடன் வாழ விழையும் நாம், நம்மிடம் உள்ளது நமக்கென மட்டும் என்ற சுயநலத்துடன் செல்வங்களை சேர்க்காமல், வறியோருடன் பகிர்ந்துகொள்ள முயல்வோம். அப்படி பகிருத்துக்கொள்ளும் வேளையில், வறியோரின் மாண்பை உயர்த்தும்வண்ணம் நம் பகிர்வு அமையட்டும்.

No comments:

Post a Comment