22 December, 2022

No place in the inn விடுதியில் இடம் கிடைக்கவில்லை

 
No Room in the Inn

Solemnity of Christmas

A few years back I was celebrating the Christmas Midnight Mass in one of the suburban parishes in Chennai. Every year when Christmas comes around, the thought of that Mass would cross my mind. This year too as we celebrate Christmas, the memory of that Mass is fresh.
The church of the suburban parish was overflowing with people all dressed up for the occasion. As the time for the homily drew near, I looked up at the audience and at the entrance to the church. Suddenly a thought crossed my mind and I began the homily with this question: “Friends, suppose Mary and Joseph of the original Christmas night were to walk into this church right now, what would happen? How would we feel?”
I could see a lot of smiles among the people… One of the ladies, as if speaking for the rest of them, said, “Oh, what a joy! That would be the most meaningful Christmas we would have ever celebrated! It would be a great blessing indeed.”

I told them not to be so quick in responding but, to think of the real situation a little more deeply. I continued to explain the situation in detail: “Sure! We would be the happiest people on earth if we knew that the two persons entering our church were Mary and Joseph. But, none of us know them. They are simply two strangers in our neighbourhood. We have not seen them earlier. They have, perhaps, travelled for three or four days on a donkey or a mule, or, they simply came walking many miles, (Remember hundreds of poor labourers who were forced to walk miles together, during the total lockdown in India. Their clothes are not clean, to say the least. They may not have had a wash. They are extremely tired. Above all, the lady is pregnant and is expecting the child any moment. Perhaps, she has already started having labour pains. That is why the man, Joseph, seeing a church close by, must have brought her in, trusting that they could get some help…”

As I was giving these details, their enthusiasm as well as their smiles vanished. There was a murmur. Most of them in that church were repatriates from a neighbouring country. Therefore, they knew first-hand what it would be like to land in a strange place in a crisis situation. I continued with the homily trying to share with them my ideas of the first Christmas and how it was not that glorious as we celebrate it today.

After the Mass and in the subsequent years during Christmas Season this question would come back to me quite often… What would I have done if Mary and Joseph walked into the church where I was celebrating the Midnight Mass? Would I have stopped celebrating the Mass and helped the poor couple? I would have certainly done so, if - a BIG IF - IF I had known that they were Mary and Joseph and that Mary was about to give birth to Jesus, the only reason why I was celebrating the midnight Mass in the church. What better place than a church for Jesus to be born! What a truly blessed Christmas Mass it would turn out to be!

All these are lovely holy thoughts… but, the reality would be different. Unfortunately, I would have been as ignorant as the people around the altar. Therefore, in all probability, I would have suggested some alternate place, an alternate solution for the poor couple and proceeded with the Midnight Mass. Neither I nor the people in the church could be faulted for our decisions. We simply did not know that real Christmas was going to happen among us!

The people of Bethlehem too did not know that during the first Christmas. They were busy inviting and entertaining their kth and kin. Hence, “there was no place for them (for Joseph and Mary) in the inn.” (Luke 2:7) Every year when Christmas comes, the words – no place in the inn – invite us to take up a self-examination. Has this situation improved in the past 20 centuries? 

Thomas Merton once gave a wonderful commentary on the words – no place in the inn: Into this world, this demented inn, in which there is absolutely no room for Him at all, Christ has come uninvited. But because He cannot be at home in it, because He is out of place in it, and yet must be in it, His place is with those others for whom there is no room. His place is with those who do not belong, who are rejected by power because they are regarded as weak, those who are discredited, who are denied status as persons, who are tortured, bombed, and exterminated. With those for whom there is no room, Christ is present in the world. He is mysteriously present in those for whom there seems to be nothing but the world at its worst.

The statement “there was no place for them in the inn.” (Luke 2:7) usually makes us feel annoyed towards the people of Bethlehem, especially the inn-keeper, who refused a place for the birth of Jesus. IF they had known that the long-awaited Saviour was at their door, would they have refused a place? Most certainly not. If an angel with ‘a multitude of heavenly host’ had appeared before them and said: “Behold your Saviour!”, not only the people in the inn, but the whole of Bethlehem would have gathered around Mary and Joseph to give them and the New-born a royal welcome… The key words here are: if they had known… a BIG IF, indeed! The people of Bethlehem did not know them. On the first Christmas night, God slipped into the human family in the quietest way possible and surprised all of us. Down these 20 centuries, God keeps surprising us in various other ways year after year.

This was not the only surprise that Jesus had in store for the people of Israel. The most awaited message of thousands of years, namely, “Your Saviour is born” was given on this very same day, but not in the way the people of Israel had expected. This message was not trumpeted from the pinnacle of Jerusalem temple, but to the shepherds in the fields. Surprise, again! The choice of the shepherds as well as the message given to them are crucial to our understanding of Christmas.

Today’s Gospel begins with the solemn words… “In those days a decree went out from Caesar Augustus that all the world should be enrolled… And all went to be enrolled, each to his own city. (Luke 2:1,3) If the whole world was to be enrolled, then why were the shepherds out in the field? Were they not to be enrolled? In all probability they were not counted among the human race. That is why they were there as part of the cattle. To them this great message was given.
The message given by the angel goes like this: “Be not afraid; for behold, I bring you good news of a great joy which will come to all the people; for to you is born this day in the city of David a Saviour, who is Christ the Lord. And this will be a sign for you: you will find a babe wrapped in swaddling cloths and lying in a manger.” (Lk. 2: 10-12)

Two groups of people mentioned in this message, help us to reflect on the true meaning of Christmas… In the message of the angel, the ‘you’ (meaning, the shepherds) and ‘all the people’ are contrasted. I would like to rephrase the message of the angel in the following words: “Don’t be afraid, my shepherds. I have brought good news of great joy meant for all the people. But, the people are too busy and pre-occupied with so many things to receive this news. Therefore, I am bringing it to you. A Saviour is born for you and like you… on the fringes of the human society. There was no place for him in the inn. A babe is lying in a manger wrapped in swaddling clothes. I am sure you will not miss the babe. I doubt whether the people would recognise a Saviour in this Babe. You would surely be able to recognise your Saviour easily. Go forth to meet your Saviour!”

While the town of Bethlehem was over crowded and the people were busy welcoming the arrival of their kith and kin, the shepherds went to the manger to welcome the Saviour of the world.  Do we have time and space to welcome the Saviour amidst the overcrowded Christmas programme?

Here is an imaginary scene, but could well happen to any one of us… Let us imagine a family where the father of the family has come home for Christmas after five years. He has been abroad, working hard. He has brought so many gifts. Children are overjoyed and have begun to decorate the house and the crib with all fancy stuff Daddy has brought. On Christmas night, Dad is bringing Baby Jesus to place Him in the crib… But, the crib is filled with so many things from abroad that there is no place for Baby Jesus there!
Is there room for the Saviour in our lives, or, are we too busy with Christmas decorations and gifts? Are we ready to recognise the Saviour lying in a manger wrapped in rags?

Coronavirus lockdown – Migrant workers

கிறிஸ்து பிறப்பு பெருவிழா

பல ஆண்டுகளுக்கு முன், சென்னையின் புறநகர் பகுதியில் இருந்த ஒரு கோவிலில் டிசம்பர் 24 இரவு கிறிஸ்மஸ் திருவிழிப்புத் திருப்பலியை நிகழ்த்தச் சென்றிருந்தேன். அந்தத் திருப்பலியின் நினைவு, ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்மஸ் நாளன்று மனதில் எழும். நள்ளிரவுத் திருப்பலிக்கு வந்திருந்தவர்கள் கூட்டம் கோவிலை முற்றிலும் நிறைத்திருந்தது. கோவிலுக்கு வெளியிலும் மக்கள் கூட்டம். அனைவரும், திருவிழாவுக்கு ஏற்றவகையில் புத்தாடை உடுத்தியிருந்தனர். மறையுரை வழங்கும் நேரம் நெருங்கியது. பீடத்திலிருந்த வண்ணம் மக்களை நிமிர்ந்து பார்த்தேன். கோவிலின் நுழைவாசலையும் பார்த்தேன். அப்போது, திடீரென எனக்குள் ஓர் எண்ணம் உதித்தது. அந்த எண்ணத்தை ஒரு கேள்வியாக்கி, மறையுரையைத் துவக்கினேன்:
"அன்பார்ந்தவர்களே, நாம் இங்கே திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தக் கோவிலுக்குள் மரியாவும், யோசேப்பும் நுழைந்தால் எப்படி இருக்கும்?" என்று கேட்டேன். கோவிலில் சலசலப்பு ஏற்பட்டது. பலர் முகத்தில் புன்னகை படர்ந்தது. ஒரு பெண்மணி சப்தமாகப் பதில் சொன்னார்: "ஓ, அது பெரிய பாக்கியமாக இருக்கும். அதைப்போல ஒரு சந்தோசம் இருக்கவே முடியாது." என்று சொன்னார். அவர் சொன்னதை ஆமோதிப்பதுபோல் பலர் தலை அசைத்தனர். ஒரு சிலர் இலேசாகக் கரவொலியும் எழுப்பினர்.

"அவ்வளவு அவசரமாக, ஆர்வமாகப் பதில் சொல்லிவிடாதீர்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்" என்று அவர்களுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்துவிட்டு, நான் தொடர்ந்தேன்:  "நம்மிடையே வந்திருப்பது அன்னை மரியா, புனித யோசேப்பு என்று நிச்சயமாகத் தெரிந்தால், ஒருவேளை நீங்கள் சொல்வதுபோல் மகிழலாம். ஆனால், கோவிலுக்குள் வந்திருக்கும் இருவரும் நமக்கு அறிமுகமில்லாதவர்கள். அவர்கள் ஊருக்குப் புதியவர்கள். பார்க்க பரிதாபமாக இருக்கிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்கள் பகலும் இரவும் கடினமான பயணம் செய்து வந்திருக்கிறார்கள். சரியாக உண்ணாமல், உறங்காமல் வந்திருக்கும் அவர்களது உடையெல்லாம் அழுக்கும் புழுதியுமாய் இருக்கிறது. அவர்கள் குளித்து நாட்கள் ஆகிவிட்டன.” 
 
பல மைல் தூரம் நடைபயணத்தை மேற்கொண்ட மரியாவையும், யோசேப்புவையும் நினைக்கும்போது, நம் எண்ணங்கள் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தை நினைத்துப் பார்க்கின்றன. கோவிட் பெருந்தொற்றை தடுக்கும் ஒரு முயற்சியாக இந்தியாவில் விதிக்கப்பட்ட முழு அடைப்பு நாள்களை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. முழு அடைப்பு காலத்தில், வறுமைப்பட்ட தொழிலாளிகள், தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பல மைல் தூரம் நடந்தே சென்ற காட்சிகள் நம் உள்ளங்களில் இன்னும் பதிந்துள்ளன. அத்தகைய வறியோர் குழுவைச் சேர்ந்த ஓர் இளம் தம்பதியர், இரண்டு மூன்று நாள்கள் நடந்து நம் கோவிலிக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்போம்.

நள்ளிரவுத் திருப்பலியில் நான் தொடர்நது விவரங்களைத் தந்தேன்: “இவை எல்லாவற்றையும் விட அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணி வேறு. எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் எனற நிலை. ஒருவேளை அந்தப் பெண்ணுக்கு பேறுகால வேதனை ஆரம்பித்திருக்கலாம். எனவேதான் யோசேப்பு அருகில் கோவிலைக் கண்டதும், அந்தப் பெண்ணுடன் அங்கு நுழைந்துவிட்டார்" என்று நான் அந்தக் காட்சியை விவரிக்க, விவரிக்க அவர்களிடையே ஆரம்பத்தில் உருவான சலசலப்பு, சிரிப்பு எல்லாம் அடங்கிவிட்டன. கொஞ்சம் இறுக்கமான அமைதி அங்கு நிலவியது. தொடர்ந்து நான் மறையுரையில், முதல் கிறிஸ்மஸ் நிகழ்ந்தபோது மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு ஆகிய மூவரும் சந்தித்த பிரச்சனைகளை அவர்களுடன் பகிர்ந்தேன்.

ஒவ்வொரு முறையும் கிறிஸ்மஸ் விழா நெருங்கும்போது, அந்தத் திருப்பலி என் நினைவுக்கு வரும். அந்த மக்களிடம் கேட்ட அந்தக் கேள்வியை எனக்கு நானே கேட்டு, விடை தேட முயன்றிருக்கிறேன். நான் கிறிஸ்மஸ் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, மரியாவும் யோசேப்பும் கோவிலுக்குள் வந்தால் நான் என்ன செய்திருப்பேன்? திருப்பலியை நிறுத்திவிட்டு அவர்களுக்கு உதவிகள் செய்யப் போயிருப்பேனா? நிச்சயமாக... அவர்கள் மரியா, யோசேப்பு என்று தெரிந்தால், கட்டாயம் அவர்களுக்கு உதவிகள் செய்யப் போயிருப்பேன். குழந்தை இயேசு பிறந்ததும், அக்குழந்தையுடன் மீண்டும் கோவிலுக்கு வந்து திருப்பலியைத் தொடர்ந்திருப்பேன்.

இப்படி நான் உறுதியாகச் சொல்வதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு. அவர்கள் மரியா, யோசேப்பு என்றும், பிறக்கப் போவது இயேசு என்றும் முன்கூட்டியே தெரிந்திருந்தால் இவற்றையெல்லாம் நான் நிச்சயம் செய்திருப்பேன். ஆனால், வந்திருக்கும் இவர்கள் இருவரும் என் கண்ணுக்கு சாதாரண, எளிய, வேற்றூர் மக்கள் என்பது மட்டும் தானே தெரிகிறது. இந்தச் சூழலில் என்ன செய்திருப்பேன்?
கோவில் பணியாளரை, பங்குப் பேரவையில் இருப்பவர்களை பீடத்திற்கு அழைத்து, ஓர் அவசர ஆலோசனை நடத்தி, அவர்கள் இருவருக்கும் வேறு ஏதாவது வகையில் உதவிகள் கிடைக்க வழி செய்துவிட்டு, என் திருப்பலியை நான் தொடர்ந்திருப்பேன்.

அவர்கள் இருவரும் மரியா, யோசேப்பு என்று நிச்சயமாகத் தெரிந்திருந்தால், ஒரு வகை செயல்பாடுகள். அவர்கள் யார் என்று தெரியாத சூழலில், வேறொரு வகை செயல்பாடுகள். இதுதான் முதல் கிறிஸ்மஸ் அன்று பெத்லகேம் ஊரில் நடந்தது. இதைத் தான் இன்று நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம். மரியாவும், யோசேப்பும் பெத்லகேம் ஊரை அடைந்து இடம் தேடுகிறார்கள். அவர்களுக்கு இடம் இல்லை. "அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்." (லூக்கா 2: 6-7)

விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற சொற்கள், ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ் விழாவன்று, நமக்கு பல்வேறு அர்த்தங்களைக் கொடுத்து, நம்மையே மீண்டும், மீண்டும் ஆன்ம ஆய்வுசெய்வதற்கு அழைப்பு விடுக்கின்றன. புனித பெனடிக்ட் துறவு சபையின் ஆழ்நிலை தியானப் பிரிவாக விளங்கும் Trappist சபையின் துறவியும், சிறந்த ஆன்மீக எழுத்தாளருமான Thomas Merton என்பவர், விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற நற்செய்தி சொற்களுக்கு அழகியதொரு விளக்கம் அளித்துள்ளார்: மதியிழந்த வண்ணம் செயல்பட்டுவரும் இந்த உலகம் என்ற விடுதியில் கிறிஸ்துவுக்கு இடம் இல்லை. அவர் இவ்வுலகிற்கு அழையாத விருந்தினராக வந்துள்ளார். தனக்கு இவ்வுலகில் இடமில்லை என்பது தெரிந்தும், அவர் இவ்வுலகிற்கு வந்தார். தன்னைப்போலவே இவ்வுலகில் இடமின்றி இருக்கும் மக்கள் நடுவில் தன் இடத்தை அவர் தெரிவு செய்துகொண்டார். சக்திவாய்ந்தவர்களால் புறம்தள்ளப் பட்டவர்கள் நடுவில், மனிதர்கள் என்ற மாண்பு மறுக்கப்பட்டவர்கள் நடுவில், வன்முறைகளால் வதைக்கப்பட்டு, தாக்கப்பட்டு, அனைத்தையும் இழந்தவர்கள் நடுவில், கிறிஸ்து தன் இடத்தைத் தெரிவு செய்துள்ளார். அனைத்து வழிகளிலும் இவ்வுலகில் இடமில்லை என்று ஒதுக்கிவைக்கப் பட்டவர்கள் நடுவே கிறிஸ்து இவ்வுலகில் பிரசன்னமாகியிருக்கிறார்.

விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லைஎன்ற சொற்களை நற்செய்தியில் வாசிக்கும்போதெல்லாம், நம்மில் பலர், பெத்லகேம் மக்கள்மீது, முக்கியமாக அந்த விடுதி காப்பாளர்மீது கோபப்பட்டிருக்கிறோம். நமது கோபம் நியாயமா? அவர்களும் நம்மைப் போல்தானே. தங்களிடம் இடம் கேட்டு வந்திருப்பது மரியா, யோசேப்பு என்றும், பிறக்கப் போகும் குழந்தைதான் இஸ்ரயேல் மக்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் காத்திருக்கும் மீட்பர் என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தால், அந்த விடுதி மட்டுமல்ல, பெத்லகேம் நகரம் முழுவதும் அங்கு திரண்டு வநது, அந்தப் பரிதாபமான வழிப்போக்கர்களை வரவேற்றிருப்பார்களே!

பரிதாபமான வழிப்போக்கர்களின் வழியாக இறைவன் வருவதை அவர்கள் உணர வில்லை... ஈராயிரம் ஆண்டுகள் கழித்து, சென்னைப் புறநகர் பகுதி கோவிலுக்கு அந்த வழிப்போக்கர்கள் மீண்டும் வந்திருந்தால், அவர்களை நானோ, அங்கு கூடியிருந்த மக்களோ, உணர்ந்திருப்போமா என்பதும் சந்தேகம்தான்.
"இவர்தான் உலக மீட்பர்" என்று வானதூதர் அணி எக்காளம் ஒலித்து பெத்லகேமில் அறிவித்திருந்தால், மீட்பின் வரலாறு வித்தியாசமாக இருந்திருக்கும். ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், விளம்பரமும் இல்லாமல், இறைவன் நம்மில் ஒருவராக, எம்மானுவேலாக வந்து, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுதான் கிறிஸ்து பிறப்பின் அழகு.

முதல் கிறிஸ்மஸ் அன்று இயேசு தந்தது இந்த ஆச்சரியம் மட்டுமல்ல. "இவர்தான் உலக மீட்பர்" என்று வானதூதர் அறிவித்திருக்கலாமே என்று எண்ணுகிறோமே அந்த எண்ணமும் நிறைவேறியது. "இவர்தான் உலக மீட்பர்" என்று வானதூதர் அறிவித்தனர். ஆனால், நாம் எதிர்ப்பார்த்ததுபோல் ஊருக்கு நடுவே எக்காளம் ஒலித்து இந்தச் செய்தி சொல்லப்படவில்லை. மாறாக, ஊருக்கு வெளியே, மந்தைகளோடு, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த இடையர்களுக்கு, வானதூதர், இந்தச் செய்தியைச் சொன்னார். இதுவும் கிறிஸ்மஸ் தரும் ஓர் ஆச்சரியம்தான்.

இந்த இடையர்களைப் பற்றியும், அவர்களுக்கு வழங்கப்பட்ட நற்செய்தியைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போம். ஊருக்குள் மக்கள் கணக்கெடுப்பு நடந்து கொண்டிருந்தது. அவரவர் தங்கள் பூர்வீக ஊரை, உறவைத் தேடிச்சென்று பெயர்களைப் பதிவு செய்யவேண்டும். எனவேதான் தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவுசெய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்.(லூக்கா 2:5) என்று நற்செய்தியில் இன்று வாசிக்கிறோம். இப்படி ஊர் விட்டு ஊர் சென்று தங்கள் பெயர்களை மக்கள் பதிவு செய்துகொண்டிருந்தபோது, இடையர்கள் ஏன் எங்கும் செல்லவில்லை? மக்கள் கணக்கெடுப்பு என்கிறோம். அப்படியானால், இவர்கள் மக்கள் கணக்கில் சேர்க்கப்படாதவர்களா?
இவர்கள், மனித சமுதாயத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்று அன்றைய சமுதாயம் ஒதுக்கிவைத்துவிட்டதால், இவர்கள், ஆடுகளோடு தங்களை ஒருங்கிணைத்து, சமுதாயத்தின் விளிம்பில் கிடந்தனர். அவர்களைத் தேடி, வானதூதர் வந்து, உலகிற்கெல்லாம் மகிழ்வைத் தரக்கூடிய நற்செய்தியை முதல் முறையாகப் பகிர்ந்து கொள்கிறார். மனிதர்கள் என்ற தகுதி கூட இல்லாமல், சமுதாயத்தின் கடைசி இடத்தில், விளிம்பில் வாழ்ந்தவர்களுக்கு கடவுள் முதலிடம் கொடுத்து ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார்.

அவர்களுக்கு வானதூதர் சொல்லும் வார்த்தைகளும் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் (லூக்கா 2: 10-11). இந்தச் செய்தியில், வானதூதர், எல்லா மக்கள்என்று ஓரிடத்திலும், இடையர்களுக்குச் சிறப்பிடம் அளித்து உங்களுக்கு, உங்களுக்காக என்று ஒருசில இடங்களிலும் பேசுகிறார்.

வானதூதர் சொன்ன வார்த்தைகளை நாம் இவ்விதம் பொருள் கொள்ளலாம். "அன்பு இடையர்களே, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தரும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இந்த செய்தி எல்லா மக்களுக்கும் உரியதுதான். ஆனால், இதைக் கேட்கும் நிலையில் மக்கள் இல்லை. அவர்கள் தங்கள் உறவினர்களை வரவேற்பதில், விருந்துண்பதில் எல்லா கவனத்தையும் செலுத்திவிட்டார்கள். இந்தச் செய்தியைப் பெறுவதற்கு அவர்கள் மனதில் இடம் இல்லை. எனவேதான் இந்தச் செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். இந்த மீட்பர் உங்களுக்காகப் பிறந்துள்ளார். அவரை அடையாளம் கண்டுகொள்வதும் உங்களுக்கு எளிது. ஏனெனில் அவரும் உங்களைப்போல் சமுதாயத்தின் விளிம்பில் பிறந்துள்ளார். தீவனத்தொட்டியில் துணிகளில் பொதிந்து கிடக்கும் அந்தக் குழந்தையில் இறைவனை உங்களால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். உங்கள் மீட்பரைச் சந்திக்கச் செல்லுங்கள்" வானதூதர் சொன்னச் செய்தியில், இந்த அர்த்தங்கள் பொதிந்திருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

தங்களை மீட்பவர் வருவார் வருவார் என்று பல்லாயிரம் ஆண்டுகள் காத்திருந்த இஸ்ரயேல் மக்கள், அவர் வந்தபோது, அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போனது. நாமும் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடும்போது, கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல், அவரை இழந்துவிட வாய்ப்புண்டு. இதோ ஒரு கற்பனைக் காட்சி...
ஐந்தாண்டுகள் கழித்து, அயல்நாட்டிலிருந்து அப்பா கிறிஸ்மஸுக்கு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் அனைவருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. எல்லாருக்கும் பல்வேறு பரிசுப்பொருட்கள் வாங்கி வந்துள்ளார் அப்பா. கிறிஸ்மஸ் அலங்காரங்களும் விதவிதமாக வாங்கி வந்துள்ளார். கிறிஸ்மஸ் குடில் ஒன்று செய்து, பல்வேறு அழகான பொம்மைகள், பூக்கள் என்று அப்பா வாங்கி வந்திருந்த அலங்காரப் பொருட்களால் அந்தக் குடில் முழுவதையும் நிறைத்தனர் அவரது குழந்தைகள். இறுதியில் அந்தக் குடிலில் குழந்தை இயேசுவை வைக்கவேண்டும் அவ்வளவுதான். குழந்தை இயேசுவை அங்கு கொண்டுவந்தபோதுதான் அவர்களுக்குத் தெரிந்தது, அவரை வைக்க அங்கு இடமில்லை என்று... அவ்வளவு தூரம் அவர்கள் அந்தக் குடிலை பல்வேறு அலங்காரப் பொருட்களால் நிறைத்திருந்தனர்.

சமுதாயத்தின் நடுவில் சகல மரியாதைகளுடன், பெரும் ஆரவாரத்துடன் நம் இறைவன் பிறக்காமல், சமுதாயத்தின் விளிம்பில் பிறக்கத் தீர்மானித்தார். அவர் பிறப்பதற்கு விடுதியில் இடமில்லை என்பதை விட, விடுதியில் இடம் வேண்டாம் என்று தீர்மானித்து, சமுதாயத்தின் விளிம்பில் பிறந்தார். தான் பிறந்த செய்தியையும் சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்த இடையர்களுடன் முதன் முதலாகப் பகிர்ந்து கொண்டார்.
இந்தக் கிறிஸ்மஸ் விழாவில் குழந்தை இயேசுவை வழக்கமான நம் ஆலய வழிபாடுகள் மத்தியிலும், கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மத்தியிலும் மட்டும் அடையாளம் கண்டுகொள்ளாமல், சமுதாயத்தின் ஓரங்களில் வாழ்வோர் நடுவிலும் அடையாளம் கண்டுகொள்ள தேவையான அருளை வேண்டுவோம். தீவனத் தொட்டியில் துணிகளில் பொதிந்து கிடப்பதுதான் உலக மீட்பர். இதை இன்றும் நம்ப முயல்வோம்.


No comments:

Post a Comment