05 October, 2023

A Call to wipe out violence வன்முறையை வேரறுக்க அழைப்பு

 
The Parable of the Tenants

27th Sunday in Ordinary Time

On October 1, 2017, many of us were shocked to hear of the mass shooting that took place in U.S.A. On that fatal day, 64-year-old Stephen Paddock opened fire from the 32nd floor of the hotel where he was staying, on a crowd attending a music festival. He fired more than 1,000 bullets, killing 60 people and wounding at least 413. The ensuing panic brought the total number of injured to 867. About an hour later, he was found dead in his room from a self-inflicted gunshot wound. The motive for the shooting is officially not known. This incident is the deadliest mass shooting by a single gunman in American history. ‘The Las Vegas massacre’ as it was called by the media had shocked the world, once more, due to its sheer madness. A seemingly normal person suddenly kills 60 people and fatally wounds more than 400 persons for apparently no reason at all.
The statement made by the local police shocks us. The sheriff of the Las Vegas Metropolitan Police Department said, “What we know is Stephen Paddock is a man who spent decades acquiring weapons and ammo (ammunitions?) and living a secret life, much of which will never be fully understood.” This seems to be a well-planned violence on the part of Stephen.

Violence almost always borders on madness. But there have also been many instances where one can see this madness being well planned. In many of the terrorist attacks, we can see a ‘method-to-madness’ carried out in full details. We hear of the masterminds who plan these attacks. Most of these masterminds are intelligent and well-qualified persons. When these masterminds put their minds to maximum use, they must be putting their conscience to sleep. In recent years, the role played by governments in state sponsored violence is painfully shocking. The violence unleashed upon innocent people in Ukraine, Sudan, Syria and Manipur are the painful samples of state sponsored violence.

What caught my attention in the mass shooting in the U.S., was the name of the town in which this massacre took place. The town is called ‘Paradise’. In the Bible, the term ‘paradise’ is used six times – thrice in the Old Testament and thrice in the New Testament. The most popular of these six verses, is the promise given by Jesus on the cross to the criminal crucified with him – “Truly I tell you, today you will be with me in Paradise.” (Luke 23:43)
The Biblical notion of ‘Paradise’ is a place of great beauty and peace created by God. Many commentators refer to the Garden of Eden as the Paradise created by God for Adam and Eve and the future generations of men and women. Taking a cue from this, we tend to refer to any beautiful, peaceful place on earth as Paradise. Down the centuries, we, human beings, due to our evil tendencies, especially due to our uncontrolled violence, have created hell out of the Paradise created by God. The senseless violence that took place in the town named ‘Paradise’, is a sample of the human tendency to create hell even in paradise!

There are three reasons why we are dwelling on thoughts of violence today. The first reason – Every year, October 2 is observed as the International Day of Non-violence. As many of us know, October 2 is celebrated as Gandhi Jayanthi (the Birthday of Gandhi) in India. We can presume that when Gandhi was born on October 2, 1869, non-violence was also born with him as his twin. In the year 2007, this day was declared by the U.N. as the International Day of Non-violence as a mark of respect to Gandhi, the great apostle of non-violence. We hear that the Indian government took enormous efforts to establish this International Day in the U.N. Unfortunately, non-violence seems like a distant memory in India in the recent years. The painful memory of what happened in Manipur – to two ladies as well as to two teenagers – is still raw in our minds and hearts. October 2 – the International Day of Non-violence – is the first reason to talk of violence, or, non-violence today.

The second reason is the Feast of St Francis of Assisi celebrated on October 4. For St Francis, all human beings as well as all the creatures of the world were his kith and kin. We know that in 1219, St Francis took a lot of risk in meeting with the sultan, Malek al-Kamil, when the Fifth Crusade was in full swing. The famous prayer of St Francis ‘Make me a channel of your peace’ is his testimony of how to win over violence with love. It is very significant that we have begun the ‘Synod on Synodality’ on the Feast of St Francis. October 4, is the second reason to talk of violence, or, non-violence today.

The third reason to reflect on violence comes from today’s liturgical readings. In the gospel reading – Matthew 21: 33-43 – we come across one of the parables of Jesus where he portrays the planned violence on the part of the tenants in a vineyard.
Reading this parable gives us a creepy feeling as if we were reading our daily newspaper. We come across such events of planned violence almost on a daily basis. The tenants wanted to become owners. Such a reversal could be achieved only through violence, they thought. We could so easily point out fingers at those – especially our political mafia – who claim unjust ownership where there is none.

Every time we point one finger at others, we are challenged to look at three more fingers pointing at us. We are tenants, pilgrims here on earth. But, so often we fancy that we own this world. The present generation stands accused in front of God for claiming ownership of this globe and treating this globe violently. When God, the prime designer of the whole universe has taken so much effort to fashion this world, we seem to thwart God’s plans to our own ends. This ‘violence’ is expressed in the first reading from Prophet Isaiah:
Isaiah 5:1-2
My loved one had a vineyard on a fertile hillside. He dug it up and cleared it of stones and planted it with the choicest vines. He built a watchtower in it and cut out a winepress as well. Then he looked for a crop of good grapes, but it yielded only bad fruit.

The Prophet then goes on to talk about how the disappointed owner would destroy this vineyard. Here are those ominous lines:
Isaiah 5:3-6
Now you dwellers in Jerusalem and men of Judah, judge between me and my vineyard.
What more could have been done for my vineyard than I have done for it? When I looked for good grapes, why did it yield only bad?
Now I will tell you what I am going to do to my vineyard: I will take away its hedge, and it will be destroyed; I will break down its wall, and it will be trampled. I will make it a wasteland, neither pruned nor cultivated, and briers and thorns will grow there. I will command the clouds not to rain on it.
The last few lines remind us about what is happening around us these days. Wasteland, no crops, no rains, or, on the other hand, raging fires and floods… I am not sure whether we have woken up to these realities still.

Our final thoughts turn towards Vatican where the ‘Synod on Synodality’ started on October 4, last Wednesday. We are aware that this Synod has a special significance since it has given more participation to the laity and has given them the power to vote. (Till now, only Bishops were allowed to vote in Synods.) We pray that this Synod may give us a better understanding of the true nature of the Church, which is an all-inclusive family of God. We pray that the words of St Paul to the Philippians which we hear in the Second Reading today, especially the Christian values of truth, nobility, justice, and purity may become more and more evident in the Church and in the whole world.
Philippians 4:6-9
Do not be anxious about anything, but in everything, by prayer and petition, with thanksgiving, present your requests to God. And the peace of God, which transcends all understanding, will guard your hearts and your minds in Christ Jesus.
Finally, brothers and sisters, whatever is true, whatever is noble, whatever is right, whatever is pure, whatever is lovely, whatever is admirable— if anything is excellent or praiseworthy— think about such things… And the God of peace will be with you.

Wild grapes from God’s vineyard

பொதுக்காலம் 27ம் ஞாயிறு

வன்முறை என்ற சொல் ஒவ்வொரு நாளும் நமது செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் இடம்பெறும் சொல்லாக மாறிவிட்டது. நமது ஊடகங்கள் காட்டும் வன்முறைகள் நம்மை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை அறியாத அளவு, நாம் வன்முறைக் கலாச்சாரத்தில் ஊறிப்போயிருக்கிறோம். அண்மைய ஆண்டுகளில் வெளியாகிவரும் திரைப்படங்களில் வன்முறை பல வடிவங்களில், பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்படுகின்றது. திரைப்பட நாயகர்களை, தெய்வங்களாகத் தொழுதுவரும் நம் இளைய தலைமுறையினர், அந்த நாயகர்களைப்போல், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, வன்முறைதான் சிறந்த வழி என்ற முடிவுக்குச் செல்லும் ஆபத்தில் உள்ளனர்.
தமிழில் நாம் பயன்படுத்தும் ‘வன்முறை’ என்ற சொல்லை பதம்பிரித்து பொருள் காணும்போது, பல சிந்தனைகள் எழுகின்றன. வன்முறை என்ற சொல், வன்மை, முறை என்ற இரு சொற்களின் இணைப்பாகத் தெரிகின்றது. வன்மை என்ற சொல், மென்மைஎன்ற சொல்லின் எதிர்மறை. கோபம், கொடூரம், இவற்றை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை. ஆனால், இந்த சொல்லுடன் 'முறை' என்ற சொல்லை இணைத்திருப்பது, புதிராக இருந்தாலும், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டில், வன்மையானச் செயல்கள், முறையோடு, திட்டமிட்டு நடத்தப்படுவதால், இதை ‘வன்-முறை’ என்று சொல்வது, பொருத்தமாகத் தெரிகிறது. வன்முறைகளில் ஈடுபடும் குழுக்கள், வன்முறைகளுக்காக ஏவிவிடப்படும் கூலிப்படைகள், கொலைப்படைகள், ஏதோ ஒரு தொழில் நிறுவனத்தில் பணிபுரிவதுபோல், தங்களுக்குக் குறித்துவிடப்பட்ட பணியை, 'கச்சிதமாக' முடிக்கின்றனர். வன்முறையை ஒரு வர்த்தகப் பொருளைப்போல் பட்டியலிட்டு விற்கின்றனர். உயிரைப் பறிக்க ஒரு தொகை, ஆள் கடத்தல், உடலை ஊனமாக்குதல் இவற்றிற்கு ஒரு தொகை என்று, வன்முறை, விற்பனை செய்யப்படுகிறது.

முறைப்படி, திட்டமிட்டு நடத்தப்படும் வன்மைகளின் உச்சக்கட்டமாக விளங்குவது, தீவிரவாதம். ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்கும் முன்பு, மிகத் துல்லியமான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்றும், தாக்குதலில் ஈடுபடுபவர்கள், அவற்றைத் திட்டமிடுபவர்கள் எல்லாருமே உயர்கல்வி முடித்த பட்டதாரிகள் என்றும் அறியும்போது, மனம் அதிகமாக வேதனைப்படுகிறது. தாங்கள் செய்யப்போவது, கொடுமையானச் செயல்கள் என்று தெரிந்தும், திட்டமிட்டு வன்முறைகளை நிறைவேற்றும் இவர்கள், தங்கள் மனசாட்சியைக் கொன்று புதைத்துவிட்டு, பின்னர் மக்களைக் கொல்கின்றனர்.

வன்முறை வெறியர்களை கட்டுப்படுத்த நாம் தெரிவு செய்துள்ள அரசு அதிகாரிகள், தலைவர்கள் ஆகியோர், வன்முறைகளைத் தூண்டிவிட்டு, அவற்றின் வழியே தங்கள் சுயநலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் போக்கு, அண்மைய ஆண்டுகளில், இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலும் வளர்ந்துவருவதை இவ்வேளையில் நாம் வேதனையோடு ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவின் மணிப்பூரில் இன்றும் தொடர்ந்துவரும் வன்முறைகள், உக்ரைன் நாட்டில் இரஷ்யா மேற்கொண்டுவரும் வன்முறைகள், சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் தொடர் வன்முறைகள், சூடான் நாட்டில் அண்மைய சில மாதங்களாக நடைபெற்றுவரும் இனவெறி வன்முறைகள் ஆகியவை, அரசுகளின் உதவியுடன் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகளுக்கு எடுத்துக்காட்டுகள்.

வன்முறையைப் பற்றி இன்று நாம் சிந்திப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. முதல் காரணம்... ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் 2ம் தேதி, நாம் கொண்டாடிவரும் காந்தி ஜெயந்தி. இந்த நல்ல நாளில் மகாத்மா காந்தி பிறந்தார். இதே நல்ல நாளில் மற்றொரு கண்ணியமான அரசியல் தலைவரான லால் பகதூர் சாஸ்திரி அவர்களும் பிறந்துள்ளார். இதே அக்டோபர் 2ம் தேதி, கர்மவீரர் காமராஜ் அவர்கள் இறந்த நாள். இந்த மூன்று தலைவர்களை நினைத்துப் பார்க்கும்போது, இவர்கள் பிறந்த இந்திய மண்ணில் நானும் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். அரசியல் என்ற சொல்லுக்கே ஒரு புனிதமான அர்த்தம் தந்தவர்கள் இவர்கள். ஆனால், இன்று அரசியல் என்றதும் அராஜகம், அடாவடித்தனம், வன்முறை, இவையே இச்சொல்லுக்கு இலக்கணமாகி வருவது வேதனையைத் தருகிறது.

1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தபோது, அகிம்சையும் அவருடன் இணைந்து இரட்டைப் பிறவியாகப் பிறந்ததோ என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. காந்தி என்றதும் உலகம் முழுவதும் அகிம்சையும் அதே மூச்சில் பேசப்படுகிறது. எனவே, 2007ம் ஆண்டு ஐ.நா. பொது அவை அக்டோபர் 2ம் தேதியை அகில உலக வன்முறையற்ற நாள் என்று அறிவித்துள்ளது. இந்த வன்முறையற்ற உலக நாளை ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ நாளாக உருவாக்க இந்தியத் தலைவர்கள் அரும்பாடு பட்டனர் என்று அறிகிறோம். வன்முறையற்ற உலக நாளை உருவாக்கிவிட்டு, அதனை இந்திய மண்ணில் நிஜமாக்க முடியாமல் நாம் தவிக்கிறோம். வன்முறையைப் பற்றி இன்று நாம் எண்ணிப்பார்க்க வன்முறையற்ற உலக நாளான அக்டோபர் 2 முதல் காரணம்.

இரண்டாவது காரணம் - அக்டோபர் 4, கடந்த புதனன்று நாம் கொண்டாடிய ஒரு புனிதரின் திருநாள். அசிசி நகர் புனித பிரான்சிஸ், மனிதர்களோடு மட்டுமல்லாமல், படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களோடும் பாசமான உறவுகளை வளர்த்துக்கொண்டவர். பகைமையையும், வன்முறைகளையும் களைந்து, அமைதியின் கருவிகளாக நாம் வாழ்வதற்குத் தேவையான அழகிய செபத்தை உருவாக்கியவர். வன்முறைகளின் எதிர் துருவமாக வாழ்ந்த புனித பிரான்சிஸ் அவர்களின் திருநாளன்று, வத்திக்கானில் உலக ஆயர்கள் மாமன்றம் துவங்கியிருப்பது பொருத்தமாகத் தெரிகிறது. வன்முறையற்ற உலகை உருவாக்க தாய் திருஅவைக்கு தனிப்பட்ட அழைப்பு உண்டு என்பதை உலகறிய பறைசாற்றுவது நம் பணி.

வன்முறையைப் பற்றி இன்று எண்ணிப்பார்க்க மூன்றாவது காரணம் நமக்கு இன்று தரப்பட்டுள்ள ஞாயிறு வாசகங்கள். இறைவாக்கினர் எசாயா மற்றும் மத்தேயு நற்செய்தி இரண்டிலும் திராட்சைத் தோட்டம் ஒன்றை மையப்படுத்தி சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை இணைத்துப் பார்க்கும்போது, வன்முறையைப்பற்றி இரு கோணங்களில் நாம் சிந்திக்க முடியும்.

ஒரு திராட்சைத் தோட்ட உரிமையாளருக்கு எதிராக, அத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் தொழிலாளர்கள் திட்டமிட்டு செய்யும் வன்முறைகளை நற்செய்தியில் இயேசு கூறியுள்ளார். கவனமாக தான் வளர்த்துவந்த ஒரு திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரர்களிடம் கொடுக்கிறார் ஒரு முதலாளி. அறுவடை நேரம் வந்ததும், தனக்குச் சேரவேண்டிய பங்கை கேட்டதற்கு, அவருக்குக் கிடைக்கும் பதில்கள் அநீதியானவை. திராட்சைத் தோட்டத் தொழிலாளிகள் செய்ததாக நாம் நற்செய்தியில் வாசிக்கும் வரிகள் இவை:
மத்தேயு நற்செய்தி 21: 35-36
தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள்,  ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.

இந்த நற்செய்திப் பகுதியை வாசிக்கும்போது, எதோ ஒரு தினசரி செய்தித்தாளை வாசிக்கும் உணர்வு எனக்குள் மேலோங்கியது. நாம் செய்திகளில் வாசிக்கும் ஒரு சில நிகழ்வுகளை, அந்நிகழ்வுகளுக்குப் பின்னணியில் வன்முறைகளைத் திட்டமிடும் பல தலைவர்களை நினைத்துப் பார்க்க வைத்தது. மக்களின் பிரதிநிதிகளாக பொறுப்பேற்கும் பல அரசியல் தலைவர்கள், தாங்கள் குத்தகைக்காரர்கள்தான் என்பதையும், தங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புக்கு கணக்கு கொடுக்கவேண்டியவர்கள் என்பதையும், சிறிதும் எண்ணிப் பார்க்காமல், எதோ அந்த நாடு, அந்த மாநிலம், அங்குள்ள மக்கள் எல்லாமே தனக்குரிய பொருள்கள் என்பதுபோல் அவர்கள் செயல்படும் போக்கு, பல நாடுகளில் வளர்ந்துவருவதை, இந்த உவமை எனக்கு நினைவுறுத்தியது. பொறுப்புக்களை மறந்து செயல்படும் தலைவர்களுக்கு அப்பொறுப்புக்களைப் பற்றி யாராவது நினைவுறுத்தினால், அவர்கள் பழிதீர்க்கப்படுவார்கள். தன்னை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்ற இறுமாப்பில் உருவாகும் வன்முறை, இன்றைய வாசகங்கள் தரும் ஒரு கோணம்.

மற்றொரு கோணம், நம் அனைவரையுமே குற்றவாளிகளாக்குகிறது. அதாவது, நாம் அனைவருமே இந்த உலகில் குத்தகைக்காரர்கள். இந்த உலகம் நமக்குச் சொந்தமானது அல்ல. இது நம் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை மறந்து, அல்லது வேண்டுமென்றே மறுத்து, நமது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்துவரும் வன்முறைகளையும் சிந்திக்க இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. சுவையுள்ள பழங்கள் தரும் திராட்சைத் தோட்டமாக இந்த உலகை இறைவன் உருவாக்க முயலும்போது, அந்தத் திட்டத்திற்கு எதிராக நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதை இறைவாக்கினர் எசாயா கூறியுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா 5:1-2
செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்: நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்: அவற்றைக் காக்கும் பொருட்டு, கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்:... நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார். மாறாக, காட்டுப்பழங்களையே அது தந்தது.

இறைவனின் கைவண்ணமான இந்த உலகை, இயற்கைச் சூழலை நமது பொறுப்பற்ற செயல்களால் சீரழித்து வருகிறோம். நமது பூமியை, தேவைக்கும் அதிகமாகக் காயப்படுத்தி வருகிறோம். இந்த காயங்களுக்குப் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை அவ்வப்போது இயற்கைப் பேரழிவுகள் நமக்குச் சொல்லித் தருகின்றன. இருந்தாலும், நாம் பாடங்களைக் கற்றுக் கொண்டதைப் போல் தெரியவில்லை.

பழங்களை எதிர்பார்த்து ஏமாந்துபோகும் இறைவனைப் பற்றி இறைவாக்கினர் எசாயா கூறும் இந்த வரிகளை வாசிக்கும்போது, நம் குடும்பங்களில் வளர்ந்து வரும் நம் குழந்தைகளைப் பற்றியும் எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. பல திட்டங்கள், கனவுகளோடு பல்வேறு பாடுகள் பட்டு நாம் வளர்க்கும் குழந்தைகள், நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, வேறு வழிகளில் செல்லும்போது, ஒவ்வொரு பெற்றோரும் படும் வேதனைகளை, இறைவனின் வேதனைகளாக, இறைவாக்கினர் எசாயா வர்ணித்துள்ளார். நம் குடும்பங்களில், இனிய சுவையுள்ள, நல்ல பழங்கள் தரும் கொடிகளாய் நம் குழந்தைகள் வளர வேண்டும் என்று, சிறப்பாக மன்றாடுவோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... அக்டோபர் 4, கடந்த புதனன்று, வத்திக்கானில் "Synod on synodality", அதாவது, கூட்டொருங்கியக்கம் என்பதை மையப்படுத்தி உலக ஆயர்கள் மாமன்றம் ஆரம்பமானது. இதுவரை நிகழ்ந்துள்ள ஆயர் மாமன்றங்களில் ஆயர்களே அதிகமாக கலந்துகொண்டனர். ஆயர்கள் மட்டுமே மாமன்றங்களில் நிறைவேற்றப்படும் முடிவுகளைக் குறித்து வாக்களித்தனர். இப்போது நடைபெறும் மாமன்றத்தில், பொதுநிலையினரின் பங்கேற்பு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்ல, திருஅவை வரலாற்றில் முதல் முறையாக இந்த மாமன்றத்தில், பொதுநிலையினர் வாக்களிக்கும் உரிமையும் பெற்றுள்ளனர். இந்த ஆயர் மாமன்றம் வழியே, கத்தோலிக்கத் திருஅவையின் ஒரு முக்கியமான பண்பை, அதாவது, திருஅவை, அனைவரையும் சமமாக உள்ளடக்கிய இறைவனின் குடும்பம் என்ற பண்பை உலகறிய செய்யும் என்ற நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வோமாக!

திருஅவை என்ற உலகளாவிய இந்த குடும்பத்தில் நிலவவேண்டிய பண்புகளை, திருத்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறியுள்ளார். இந்த பண்புகள், தற்போது நடைபெறும் ஆயர் மாமன்ற நாள்களிலும், இனி வரும் காலத்திலும் நம்மிடையே வளரவேண்டும் என்ற வேண்டுதலுடன், புனித பவுலடியாரின் சொற்களை மனதில் பதியவைப்போம்:
பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4: 6-9
ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும்... அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்... சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்.


1 comment: