21 February, 2010

TEMPTATIONS… ALL AROUND US. சோதனை மேல் சோதனை


Every First Sunday in Lent is assigned to temptation. Assigned to? Well, devoted to temptation. Devoted to? Hmm… Whichever way you say this, it jars. Right? That is what temptation does to us. It makes us feel uncomfortable. Yet it is an essential part of human life. No one escapes temptation. Not even Jesus. Today’s Gospel talks about this. How do we see temptation and the tempter… call him / her satan, devil, the evil one, whatever?
Last year when I was discussing this topic with a friend of mine, the moment he saw the theme temptation, he broke into an old Tamil film song that talked of the hero being beset with problems. (Sothanai mel sothanai podhumadaa saami) Lord, enough of this wave after wave of temptations and tribulations, he cries! One can easily feel the sense of desperation that runs through that song.
For people who believe strongly in fate, temptations are seen as predestined plan to attack us for no reason at all. Temptations are like the flash floods that carry us alive. When we begin to imagine temptations in such a way, we seem to give undue power to temptations. We know that temptations are powerful. But, are we simply puppets in the hands of the tempter? To attribute so much power to temptations and the evil forces that manufacture these temptations leave us with lot of negativity in life.
The present generation suffers from what I would like to call ‘negative-syndrome’. Part of this ‘negative syndrome’ comes out of our media which revels in highlighting disasters, destruction, scandals and more tragedies. Why do the media indulge in these? Nothing sells like tragedy and disaster. That is why.
We know that the world is a mixed bag of the good and the bad. For every disaster that happens, there is always a blessing that happens too. In the recent earthquake that devastated Haiti, there were many distressing facts and figures. There were equally, if not more, uplifting events. The media was more interested in reporting the negatives more than the positives. Since we hear and see such negative news day after day, we tend to give up on the world very quickly. This is the most dangerous temptation our present generation faces! The temptation of believing that there are far too many evil forces around us and that we can do nothing about them.
We can surely learn a lesson or two… or perhaps, three from the three temptations that Jesus faced. Here is Luke’s account of the temptations of Jesus.

Luke 4:1-13 (New International Version - UK)
Jesus, full of the Holy Spirit, left the Jordan and was led by the Spirit into the wilderness, where for forty days he was tempted by the devil. He ate nothing during those days, and at the end of them he was hungry.
The devil said to him, "If you are the Son of God, tell this stone to become bread."
Jesus answered, "It is written: 'People do not live on bread alone.'"
The devil led him up to a high place and showed him in an instant all the kingdoms of the world. And he said to him, "I will give you all their authority and splendor; it has been given to me, and I can give it to anyone I want to. If you worship me, it will all be yours."
Jesus answered, "It is written: 'Worship the Lord your God and serve him only.' [c]"
The devil led him to Jerusalem and had him stand on the highest point of the temple. "If you are the Son of God," he said, "throw yourself down from here. For it is written:
" 'He will command his angels concerning you to guard you carefully;
they will lift you up in their hands, so that you will not strike your foot against a stone.'"
Jesus answered, "It is said: 'Do not put the Lord your God to the test.'"
When the devil had finished all this tempting, he left him until an opportune time.

The devil did not tempt Jesus with anything bad. All the suggestions were harmless, innocent, and attractive. This is the first lesson we learn from temptations… that almost all temptations are good and attractive! The devil, almost all the time, comes clothed in light. The second lesson? That temptations or the devil come at the most opportune moment. Jesus was hungry. He needed to eat something. Needs and wants are the seedbed for temptations… more in the case of wants than needs.
The devil tries to hook Jesus with a challenge… “If you are the Son of God…” I am reminded of how children goad one another into bravery or bravado. “Hey, if you are brave enough, climb this tree, do this or do that…” Such a challenge implies that if someone does not take up the challenge, he/she is a coward. The definition of bravery is in climbing the tree. Such bravado usually leaves our kids with a few bruises, or broken bones!
The devil tries to tell Jesus what it means to be a Son of God… Turn these stones into bread. What for? If the devil had at least suggested that Jesus could satisfy his hunger with the bread, there would be some meaning in turning stones into bread. But, both the gospel accounts of Luke and Matthew mention that the devil wanted the stones to be turned into bread. Period. This is simple magic, simple exhibition of power. The devil seems to say that such a magic would prove or establish Jesus as the Son of God. The devil was trying to give Jesus a job description of the Son of God. Jesus did not want to fit into this definition as prescribed by the devil. Jesus who did not want to use his power to satisfy his personal need of hunger, would use the same power later on to feed thousands. Power is not to be used to enhance one’s own needs and wants.

The second temptation was too good to be true. The devil was offering the whole world on a platter. After all, Jesus came as a human being just to win over the world. Now, it was offered on a platter. Of course, there were strings attached to this offer. Jesus needed to make compromises, a simple surrender to the devil. Jesus, who refused this offer, would later on surrender to God the Father while on the cross. Through that surrender, he would win the world. Compromises and the resultant corruption seem to have seeped into all the spheres of human life today. Compromise seems to be the rule rather than the exception.

The third temptation of Jesus would have thrilled any one of us living today. We live in an ‘instant’ world. We need quick results. Instead of spending 30 years of seclusion in Nazareth, 3 years of hard public life, 3 days of hunger and brutal treatment, and the final 3 hours of excruciating torture on the cross, all Jesus needed to do was to jump down from the pinnacle of the Jerusalem temple. The whole world would be at his feet. The moment he jumped, heavens would have opened; myriads of angels would have come to carry him down to the ground in one of the most spectacular special-effects-scene. The whole of Jerusalem, nay, the whole world would have witnessed who the Messiah was. One moment of brilliance, instant success. What else one could ask for? Thank God, Jesus was not an ‘instant’ person. He chose the 30+3+3+3 path!

'Tis one thing to be tempted, another thing to fall' (William Shakespeare). Jesus was tempted, but did not fall. The famous ‘Our Father’ has the petition: Lead us not into temptation. The translation of this petition in Tamil is closer to what Shakespeare is talking about. It says, “Do not make us fall in temptation.” ‘Being tempted’ happens to all of us; but ‘falling’ is our personal choice. Let us pray that the Lord gives us enough backbone to stand erect and not fall.


ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறு இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திருச்சபை நம்மை அழைக்கிறது. தவக்காலம் ஒரு வசந்த காலம், புத்துயிர் தரும் காலம், நம்மைப் புதுப்பிக்கும் காலம் என்று தவக்காலத்தைப் பற்றி கொஞ்சம் வித்தியாசமாக சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இன்று சோதனைகளைப் பற்றியும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம்.
சோதனை என்ற வார்த்தையைக் கேட்டதும், ஓடிவிடவேண்டும் போல் எனக்குத் தோன்றும். அவ்வளவு பயம். சோதனை ஒரு எதிரிபோலவும், என்னைத் தாக்குவதற்காக எப்போதும் காத்திருக்கும் ஒரு மிருகம் போலவும் என் கற்பனையில் பல உருவங்கள் உலா வருவதால் இந்த பயம். ஆர அமர சிந்தித்தால், சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய அம்சம் என்பது முதலில் நாம் உணர வேண்டிய உண்மை என விளங்கும். சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை. இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும் நமக்கு நல்ல பாடங்கள்.

சென்ற ஆண்டு தவக்காலத்தின் இந்த முதல் ஞாயிறுக்கான மறையுரை பற்றி இன்னொரு குருவோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். சோதனை என்ற வார்த்தையை நான் சொன்னதும், அவர் ஒரு பழைய திரைப்பட பாடலைப் பாட ஆரம்பித்தார். "சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி." என்ற பாடல். இந்தப் பாடலைப் பாடும் படத்தின் நாயகனின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள், தீர்க்க முடியாதது போல் தோன்றும் பிரச்சனைகள். எனவே, விரக்தியில், சோகத்தில் இந்தப் பாடல் பாடப்படும்.
சில சமயங்களில் திரைப்படங்களில் காட்டப்படும் சூழ்நிலைகளைத் தாண்டி சில திரைப்பட பாடல்களை நாம் அடிக்கடி கேட்டு வருவதால், அந்தப் பாடல்கள் கூறும் சொற்கள் நம் நினிவுகளில் ஆழமாய் பதிந்து விடும். இந்தத் திரைப்படத்தைப் பார்க்காதவர்களும் இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள், ஒரு வேளை என் நண்பரைப் போல் சில சூழ்நிலைகளில் இந்தப் பாடலைப் பயன்படுத்தியிருப்பார்கள். சோகத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட இந்தப் பாடலைப் பாடும் போது, எதுவுமே செய்யமுடியாத ஓர் இயலாத் தன்மை மனதை ஆக்ரமிக்கும்.

நம்மை மீறிய ஒரு சக்தியில் நாம் மாட்டிக்கொண்டோம் எனவே நம்மால் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்பன போன்ற எண்ணங்களை, உணர்வுகளை பல சமயங்களில் நாம் உணர்ந்திருக்கிறோம். தலைவிதி, தலை எழுத்து என்ற எண்ணங்களில் ஊறிப் போயிருக்கும் இந்திய மனங்கள் சோதனைகளைப் பார்க்கும் கண்ணோட்டம் என்ன? நம்மால் சமாளிக்க முடியாத ஒரு பெரும் படையைச் சந்திப்பது போலவும், தப்பித்துக் கொள்ள முடியாத அளவு பெருகியுள்ள ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவது போலவும் நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். இப்படி சோதனைகளைப் பற்றிய எண்ணங்களை நாம் வளர்த்துக் கொள்வதால், சோதனைகளுக்கு ஒரு அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். இது ஒரு ஆபத்தான எண்ணம்.
சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ் மனதில் உள்ள தீய நாட்டங்கள், மிருக உணர்வுகள் இவைகளைத் தட்டி எழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவைகளோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. இதை நாம் நம்ப வேண்டும். நமது சொந்த சக்திக்கு மீறியதாய்த் தோன்றும் சோதனைகள் வரும்போது, இறைவனின் சக்தி நமக்குத் துணை வரும் என்ற நம்பிக்கையும் நம்மில் வளர வேண்டும். சின்ன வயதில் நமக்குச் சொல்லித் தந்த 'காவல் சம்மனசு' கதைகள் வெறும் கற்பனைக் கதைகளா? கட்டுக் கதைகளா? அல்லது நம்மைக் காப்பதற்கு இறைவன் எப்போதும் நம்முள் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்தும் அடையாளங்களா?

சோதனைகளுக்கு, அவற்றின் மூல காரணமான தீய சக்திகளுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை.
நாம் வாழும் உலகில் நல்லவைகளும், ஆக்கப்பூர்வமான செயல்களும் நடக்கின்றன. தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது செய்தித் தாள்கள், தொலைகாட்சி, வானொலி என்று அனைத்து தொடர்புச் சாதனங்களும் பெருமளவில் அழிவையே நமக்குப் படங்களாக, கதைகளாகச் சொல்லி நம் மனதை உருக்குலைய வைக்கின்றன. வசூலுக்குச் சுவையானவை இந்தக் கோரங்கள்! ஆனால், வாழ்க்கையில் இவை உண்டாக்குவது விபரீதங்கள். இவைகளையே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்க்கும் போது, "ச்சே, என்னடா உலகம்" என்ற எண்ணம் ஆழமாகப் பதிகிறது. இதே எண்ணத்தை உறுதிப்படுத்தும் திரைப்படப் பாடல்கள், அதுவும் அடிக்கடி கேட்கப்படும் பாடல் வரிகள் ஆழ் மனதில் இடம் பிடித்து விடுகின்றன. "சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி." என்று சொல்ல வைத்து விடுகின்றன. இப்படி ஓர் இயலாத் தன்மை நமக்கு ஊட்டப்படும் போது, இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு பிரமை, ஒரு மாயை நம்மில் வளர்வது பெரும் சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும்.

இயேசு சோதனைகளைச் சந்தித்தது, அவைகளை வென்றது நமக்கு நல்லதொரு பாடமாக இருக்கும்.
லூக்கா நற்செய்தி 4 1-13
அக்காலத்தில், இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார். அப்பொழுது அலகை அவரிடம், “நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்” என்றது. அதனிடம் இயேசு மறுமொழியாக, “ ‘மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார். பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், “இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்” என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்றார். பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; ‘உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும் ‘உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ என்றும் சொல்லியுள்ளதே” என்றார். அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

சிறு வயதில் இயேசுவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல நாடகங்களைப் பார்த்திருக்கேன். அந்த நாடகங்களில் எல்லாம் அவர் சோதிக்கப்பட்ட காட்சி கட்டாயம் இருக்கும். அந்தக் காட்சிகளில் சாத்தான் கருப்பு உடையுடன், முகமெல்லாம் கரி பூசி, தலையில் இரு கொம்புகள் வைத்து, பயங்கரமாய் சிரித்துக் கொண்டு வரும். பல முறை நான் அந்தக் காட்சியைப் பார்த்து பயந்திருக்கிறேன். இவ்வளவு பயங்கரமாய் சாத்தான் வந்தால், அதை விட்டு ஓடிவிடுவோம், அல்லது அதை விரட்டி அடிப்போம். ஆனால், வாழ்வில் நாம் சந்தித்துள்ள, இனியும் சந்திக்க இருக்கும் சாத்தான்களும், அவை கொண்டு வரும் சோதனைகளும் பயத்தில் நம்மை விரட்டுவதற்கு பதில், ஆர்வமாய் நம்மை கவருகின்றன என்பதுதான் உண்மை. சோதனைகள், சாத்தான்கள் அவ்வளவு அழகானவை. இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மூன்று சோதனைகளும் நல்ல சோதனைகள். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி சாத்தான் இயேசுவைத் தூண்டவில்லை.

இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம் கல்லை அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது சாத்தான். நேரம் அறிந்து, தேவை உணர்ந்து வந்த ஒரு சோதனை. தேவைகள் அதிகமாகும் போதுதானே, அவற்றை எப்படியாகிலும் நிறைவேற்றும் சோதனைகளும் கூடவே வரும்?
சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே அழகான வரிகள். "நீர் இறைமகன் என்றால், இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்." சிறுவர்கள் விளையாடும் போது, இது போன்ற சவால்கள் எழும். "நீ வீரனாய் இருந்தால்... இந்தப் பூச்சியைப் பிடிச்சிடு, அந்த மரத்துல ஏறிடு..." போன்ற சவால்கள். சவால்களைச் சந்திக்காவிட்டால், அந்தச் சிறுவன் வீரன் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு விடும். இதற்கு பயந்து வீர சாகசங்கள் செய்து அடிபட்டுத் திரும்பும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம்.
இயேசுவிடம் இப்படி ஒரு சவாலை முன் வைக்கிறது சாத்தான். "நீர் இறை மகன் என்றால்..." என்று சொல்லும்போது, இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது சாத்தான். இறைமகனுக்கு சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இறைமகன் என்பதை நிரூபிக்க, நிலை நாட்ட, புதுமைகள் நிகழ்த்த வேண்டும், அதுவும் தன்னுடைய சுய நலத் தேவையை நிறைவு செய்யும் வண்ணம் புதுமை செய்ய வேண்டும்.
தன் சக்தியை நிலை நாட்ட புதுமைகள் செய்பவர்கள் வித்தைகள் காட்டும் மந்திரவாதிகளாய் இருக்க முடியுமே தவிர, இறைவனாகவோ, இறைமகனாகவோ இருக்க முடியாது. தன் சுய நலனுக்கு, சுய தேவைக்குப் புதுமைகள் செய்வது புதுமைகள் செய்யும் சக்தியை அழுக்காக்கும், அர்த்தமில்லாததாய் ஆக்கும்.
இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதிலும் அழகானது. இயேசு தன் உடல் பசியை விட, ஆன்ம பசி தீர்க்கும் உணவைப் பற்றி பேசினார். “மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை” என்ற இணைச் சட்ட நூலில் மோசே சொன்ன வார்த்தைகளைக் கூறுகிறார். (இணை. 8:3)
தன் சொந்த பசியைத் தீர்த்துக் கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகள் திறமைகள் எதற்கு? சுய தேவைகளை நிறைவு செய்வதற்காகவா? சிந்திக்கலாம், இயேசுவிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகத்தைத் தன் வசமாக்கத்தானே இயேசு மனு உருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே! அப்படி இயேசு உலகை தன் மயமாக்க வேண்டுமானால், அவர் ஒரு 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய வேண்டும். சாத்தானோடு சமரசம்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்ட வட்டமாக மறுத்தார். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது, "தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன்" என்று இறைவனிடம் சரணடைந்தார்... உலகைத் தன் வசமாக்கினார்.
தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை இவைகள் முன் சரணடைந்திருக்கிறோம்? நல்லது ஒன்று நடக்க வேண்டுமென்று தீமைகளைச் சகித்துக் கொள்வதும், தீமைகள் நடக்கும் போது கண்களை மூடிக் கொள்வதும்... இப்படி நடப்பதற்கு காரணம், ஊரோடு ஒத்து வாழ்தல் என்று உபதேசம் செய்வதும்... நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பார்த்து, பழகி வந்துள்ள எதார்த்தங்கள். இப்படி சமரசம் செய்வதே நம் வாழ்க்கையாகி விட்டதா என்று சிந்திப்பது நல்லது.

மூன்றாவது சோதனை? இறைமகன் உலகை வெல்வதற்கு, உலகை மீட்பதற்கு எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை அலகைக் காட்டுகிறது. எருசலேம் தேவாலயத்தின் மேலிருந்து இயேசு குதிக்க வேண்டும். உடனே, வானங்கள் திறந்து, விண்ணவர் ஆயிரமாய் இறங்கி வந்து, இயேசுவின் பாதம் தரையை தொடாமல் அவரைத் தாங்கிய வண்ணம் தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வருவதற்கு ஒரு ஒத்திகைபோல இது அமையும். எருசலேம் முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இயேசுவின் சீடர்களாகிவிடுவர்.
30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் கடினமான பணி, இறுதி 3 நாட்கள் படும் வேதனை, இறுதி 3 மணி நேரங்கள் சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் தேவையில்லை. ஒரு நொடிப் பொழுது போதும். ஒரு எருசலேம் தேவாலய சாகசம் போதும். உலகம் இயேசுவின் காலடியில் கிடக்கும். விளையாடியது போதும் என்று இயேசு சாத்தானைக் கடினமாக விரட்டி அடிக்கிறார்.

மூன்றாவது சோதனையில் ஒரு கூடுதல் சிந்தனை உண்டு. சென்ற இரு சோதனைகளிலும் சாத்தான் வெறும் ஆலோசனைகள் சொல்ல, சாத்தானின் வாயடைக்க இயேசு இறை வாக்குகளைப் பயன்படுத்துகிறார். மூன்றாவது சோதனையில் அலகை இறை வார்த்தையைப் பயன்படுத்தி ஆலோசனை வழங்குகிறது. சாத்தானுக்கு வேதம், விவிலியம் தெரிந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. "Even the devil can quote the Bible" என்ற பழமொழி உண்டு. வேதங்கள், வேத நூல்கள் உட்பட நல்லவைகள் பலவும் பொல்லாத இடங்களில், பொல்லாத காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய ஒரு உண்மை. உண்மை, நீதி இவை அடிக்கடி விலை பேசப்படும் நமது நீதி மன்றங்களில் விவிலியத்தின் மீது அல்லது பிற வேத நூல்களின் மீது சத்தியப் பிரமாணங்கள் கொடுக்கப்படுகின்றன. வேதனை மேல் வேதனை... போதுமடா சாமி. 'Tis one thing to be tempted, another thing to fall' (William Shakespeare) சோதிக்கப்படுவது வேறு, சோதனையில் விழுவது வேறு. ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் வரிகள். இயேசு சோதிக்கப்பட்டார். ஆனால், சோதனையில் விழவில்லை. நாமும் சோதனைகளை சந்திக்கும் போது, அந்த இறைமகன் சொல்லித் தந்த அற்புத செபத்தின் வரிகளை நினைவில் கொள்வோம். "எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும்."

Rising from the ashes… சாம்பலிலிருந்து மீண்டும்...














We have begun the Lenten Season. When I was browsing through the internet to figure out my message for Lent, I came across the idea that the word Lent comes from the Anglo Saxon word ‘Lencten’ which means Spring. Spring and Lenten Season… seemed like a good combination.
Usually, when we think of Lent, the symbols of ash and sackcloth dominate our imagination. The ideas of fasting and penance with a tinge of guilt feelings creep in. For a change, it might be better to think of this Lenten Season in terms of Spring, Phoenix and Ash.
Spring: I have experienced something like a winter for the first time in my life in Rome. Winter in Rome pales in comparison to winter elsewhere in Europe or the U.S. Still, for me coming from South India, this was a different winter! It is a season that makes one stay indoors mostly. Since this season is preceded by the Fall season, trees and plants are pretty barren, devoid of leaves. These trees and plants almost wear a dead look under the snow. But, life does not give up. Under the heavy cover of snow life begins to germinate. Come Spring… life will be in full blossom. Lenten Season is an invitation to revive, to renew life like the Spring.
Phoenix: This legendary bird is surely an excellent symbol for the season of Lent. Here is what Wikipedia says about this bird: A phoenix is a mythical bird with a colorful plumage and a tail of gold and scarlet (or purple, blue, and green according to some legends). It has a 500 to 1,000 year life-cycle, near the end of which it builds itself a nest of twigs that then ignites; both nest and bird burn fiercely and are reduced to ashes, from which a new, young phoenix or phoenix egg arises, reborn anew to live again. The new phoenix is destined to live as long as its old self…
http://en.wikipedia.org/wiki/Phoenix_(mythology)
Ash: We are so accustomed to seeing fire as a source of destruction. We forget that fire can be life-infusing. We know the clichéd phrase ‘gold in the furnace’. Many wonders like the rebirth of the phoenix and purification of gold are still possible from fire. Our idea of ash is also loaded with destruction. But we know that ash is used as manure and ash is used in cleansing metal surfaces.
We have begun the Lenten Season with Ash Wednesday… a good beginning indeed. Let us rise up from ash like the phoenix, get purified like gold and enjoy the spring called the Lent.

Picture Sources:


http://unexpressedemotions.files.wordpress.com/2008/07/phoenix-bird6.jpg
அன்புள்ளங்களே, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக புதுமைகளைப் பற்றி பல சிந்தனைகளைப் பகிர்ந்து வந்தோம். இயேசு ஆற்றிய புதுமைகள் என்று மட்டும் பார்க்காமல், இயேசு உருமாறியது, சக்கேயு உருமாற்றம் பெற்றது, திருமுழுக்கு யோவான் பிறப்பு, கீழ்த்திசை ஞானிகளின் பயணம் என்று இன்னும் பல நற்செய்தி நிகழ்ச்சிகளைப் புதுமைகளாகச் சிந்தித்தோம். புதுமைகளைத் தொடர்ந்து சிந்திக்க நமக்குக் கிடைத்துள்ள அருமையான ஒரு வாய்ப்பு இந்த தவக்காலம். அன்பு நெஞ்சங்களே, இந்த தவக்காலம் முழுவதையுமே ஒரு புதுமையாக, புதுமைகள் நிகழும் ஒரு காலமாகச் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.
தவக்காலத்தைப் பற்றிய நம் கண்ணோட்டம் என்ன? சென்ற நவம்பர் மாதம் திருவருகைக் காலத்தை நாம் ஆரம்பித்த போது, ஒரு எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டேன். திருவருகைக் காலம் எதிபார்க்கும் காலம். எதை எதிர்பாக்கிறோம் என்பதைப் பொறுத்து, திருவருகைக் காலம் மகிழ்வான, நம்பிக்கை வளர்க்கும் காலமாய் இருக்குமா அல்லது துயரமான, நம்பிக்கையை வேரறுக்கும் காலமாக இருக்குமா என்று முடிவு செய்யலாம் என்பதை ஓர் உதாரணத்தோடு சிந்தித்தோம். அயல் நாட்டில் வேலைசெய்யும் தந்தை கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வீட்டுக்கு வருகிறார் என்றால் அவர் வரவுக்காக ஆனந்தமான எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், அதே தந்தை வேலையை விட்டு விலக்கப்பட்டு வீடு திரும்புகிறார், அல்லது அங்கு நடந்த ஒரு விபத்தில் உடல் ஊனமுற்று திரும்புகிறார் என்றால்... நம் மனநிலையில் எவ்வளவு வேறுபாடான உணர்வுகள் இருக்கும்.
திருவருகைக் காலத்தைப் போலவே, தவக்காலத்தையும் பல கோணங்களில் நாம் பார்க்கலாம். தவக்காலத்தைப் பற்றிய வரலாற்றுத் தெளிவு பெற இந்த விவிலியத் தேடலில் முயல்வோம். தமிழில் நாம் தவக்காலம் என்று அழைப்பதை ஆங்கிலத்தில் Lenten Season என்று அழைக்கிறோம். Lencten என்ற வார்த்தை ஒரு Anglo Saxon வார்த்தை. அதன் பொருள் வசந்தம். வசந்த காலம் தவக்காலம் இரண்டையும் இணைப்பதே ஒரு அழகான எண்ணம். புதுமையான எண்ணம்.

பொதுவாக, தவக்காலம் என்றதும் சாம்பல், சாக்குத்துணி, சாட்டையடி என்று வருத்தத்தில் ஆழ்த்தும் அடையாளங்கள் மனதை நிரப்பும். சோகம், துயரம், மன வருத்தம், ஒருவகை குற்ற உணர்வு, உடல் ஒறுத்தல் என்ற பாரமான எண்ணங்கள் மேலோங்கும். ஆனால், தவக்காலம் வசந்தத்தைக் கொண்டு வரும் புதியதொரு ஆரம்பம் என்ற பொருளிலும் பாப்பது நல்லது. ‘வசந்தம்’ கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான். ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன் மாற்றங்கள், வேதனைக்குரிய மாற்றங்கள் நடைபெற வேண்டும். சாம்பலிலிருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் Phoenix பறவையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறோம். இல்லையா? அந்தப் பறவையைத் தவக்காலத்தின் ஒரு அடையாளமாக நாம் சிந்திக்கலாம்.
தவக்காலத்திற்கும் வசந்த காலத்திற்கும் என்ன தொடர்பு? தவக்காலத்திற்கு Phoenix பறவை எப்படி ஓர் அடையாளமாகும்? சிந்திக்க வேண்டிய கேள்விகள். உலகின் பல நாடுகளில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை கடும் குளிர் காலம். இந்தக் குளிர் காலத்திற்கு முன்னால் மூன்று மாதங்கள் இலையுதிர் காலம். எனவே, இந்த இரு காலங்களிலும் மரங்கள் செடிகள் எல்லாம் தங்கள் இலைகளை இழந்து பனியில் உறைந்து போயிருக்கும். பனியில் உறைந்து போன தாவர உயிரினங்களைப் பார்க்கும் போது, இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் தான் மேலோங்கும். ஆனால், அந்த பனிக்குள்ளும் சிறு துளிர்கள் கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பனி விலகியதும் அந்தத் துளிர்கள் தலை நிமிரும். மீண்டும் தாவர உலகம் தழைத்து வரும். அதுதான் Lenten Season எனப்படும் வசந்த காலம்.
Phoenix பறவையும் அப்படியே. 500 அல்லது 1000 ஆண்டுகள் வாழ்ந்ததாய் சொல்லப்படும் இந்தப் பறவை அந்த வாழ்நாள் முடியும் வேளையில், தனக்கென கூடு ஒன்றைக் கட்டி அதற்குள் அமர்ந்துகொண்டு தன் கூட்டுக்குத் தீ மூட்டும். தீயில் எரிந்து அந்தப் பறவை சாம்பலாகும் போது, அதன் அடுத்தத் தலைமுறையான பறவை வெளி வரும். இந்தப் பறவை, இந்தக் கதை உண்மையா இல்லையா என்ற ஆராய்ச்சிகளை விலக்கி விட்டு சிந்தித்தால், கற்பனையில் பார்க்க அழகான ஒரு காட்சி இது. நெருப்புக்குள் நிகழும் புதுமைகள் தான் எத்தனை எத்தனை. நெருப்பை அழிக்கும் கருவியாகப் பார்த்து பழகி விட்ட நமக்கு, பல சமயங்களில் இந்த நெருப்புக்குள் நிகழும் புதுமைகள் மறந்து போக வாய்ப்புண்டு.
தீயில் இடப்படும் பொன் இன்னும் கூடுதலாக மின்னுவதைப் போல், தன்னையே தீயிட்டு கொளுத்திக்கொள்ளும் Phoenix மறுபிறவி எடுத்து வருவது போல் இந்த தவக்காலம், அங்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் நம்மையும் புதுபிறப்பாக மாற்ற வேண்டும். நம்மையும் புடமிட்டு மெருகேற்ற வேண்டும். தவக் காலத்தை திருநீற்று புதன், அல்லது சாம்பல் புதனோடு நாம் ஆரம்பிக்கிறோம். சாம்பலையும் நாம் அடிக்கடி அழிவின் அடையாளமாகவே பார்க்கிறோம். சாம்பல் உயிர் வளர்க்கும் உரமாக பயன்படுவதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். பொன்னைப் புடமிட நெருப்பு பயன்படுவது போல், இன்னும் பல உலோகங்களை சுத்தமாக்க சாம்பலும் பயன்படுகிறது இல்லையா? நெருப்பு, சாம்பல், Phoenix பறவை, வசந்தம் என்ற எண்ணங்களோடு நம் தவக்கால முயற்சிகள் ஆரம்பமாகட்டும்.

எந்த ஒரு முயற்சியுமே நம்பிக்கை இருந்தால் மட்டுமே மேற்கொள்ளப்படும். சீனாவின் பீஜிங்கில் 2008ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் உசேன் போல்ட் என்ற தடகள வீரர் பெற்ற தங்கப் பதக்கங்களின் செய்திகளையும், நீச்சல் போட்டிகளில் Michael Phelpsன் உலக சாதனைகளையும் பார்த்தோம், கேட்டோம். போட்டிகளின் போது கிடைக்கும் புகழ், ஆரவாரம் இவைகளின் பின்னணியில் அந்த வீரர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள்... பல ஆண்டுகளாய் நடந்த கடினமான முயற்சி, பயிற்சி இவைகள் கண்ணுக்குத் தெரியாத கடும்தவங்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
உடல் பயிற்சி முயற்சி போலவே, தவ முயற்சிகளும் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுபவைகளே. இறைவனை நேரில் காண்பதற்கு, அல்லது அவரது சிறப்பான அருள் ஒன்றைப் பெறுவதற்கு கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்ட ஞானிகளைப் பற்றி நம் இந்திய பாரம்பரியத்தில் பல கதைகள் உண்டு. பந்தயத்திற்கான பயிற்சிகளையும், நற்செய்தியை அறிவிக்க தேவையான தன்னடக்கம், தவ முயற்சிகளையும் இணைத்து பவுல் அடியார் கூறும் அழகான வரிகள் இவை:

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 9: 24-27
பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே... பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றி வாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன். பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.
திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 4: 7-8
நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்: நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.

கடந்த ஞாயிறு கானடாவின் Vancouverல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி யிருக்கும் இந்த நேரத்தில் பந்தய வீரர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும், நம் தவ முயற்சிகளையும் இணைத்து சிந்திப்பது நல்லது. உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, அறிவு ரீதியாகவோ, பயிற்சிகள், முயற்சிகள் இருந்தால் நல்ல பலனும் உண்டு.
உடல், மனம், அறிவு இவை ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்த, மேம்படுத்த மேற்கொள்ளப்படும் பயிற்சிக்கும் முயற்சிக்கும் வழிமுறைகள் உண்டு. தவக்கால முயற்சிகளுக்கும் நல்ல வழிமுறைகள் உண்டு. நாம் இந்த ஏழு வாரங்களிலும் இந்த வழி முறைகளைக் கற்றுக்கொள்ள கல்வாரி போகலாம். அங்கு சிலுவையில் தொங்கிய படி தன் போதனைகளை நடத்திய இறைமகன் இயேசுவின் காலடியில் அமர்ந்து தவக்கால பாடங்களைப் பயில ஆரம்பிப்போம்.

இயேசு சிலுவையில் கூறியதாய் சொல்லப்படும் ஏழு வாக்கியங்களை நம் தவக்காலத்தின் ஏழு வாரங்களுக்கான பாடங்களாக எடுத்துக் கொள்வோம். இந்த வாக்கியங்களைச் சிந்திப்பதற்கு முன், இந்த வாக்கியங்களை சொன்ன அந்தச் சூழலைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். எந்த ஒரு மனிதனும் சாகப்போகும் நேரத்தில் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்போம். மறு வாழ்வின் வாசலில் நிற்கும் அந்த மனிதரின் வார்த்தைகளில் ஆழமான அர்த்தங்கள் இருக்கும் என்று நம்புகிறோம். இறுதி மூச்சு போகும் வேளையில் அவர் சொல்வது மிக முக்கியமான ஒரு செய்தியாக இருக்கும் என்று நம்புகிறோம். அதுவும் இறக்கும் நிலையில் இருப்பவர் அதிக உடல் வேதனைப் படுகிறார் என்று தெரிந்தால், அந்த நேரத்தில் தன் வேதனையையும் பொறுத்துக் கொண்டு அவர் சொல்லும் வார்த்தைகள் இன்னும் அதிக மதிப்பு பெறும். இயேசு வேதனையின் உச்சியில் அந்த சிலுவையில் இந்த தவக்காலத்திற்கான நம் பாடங்களைச் சொல்லித் தருகிறார்.
இயேசுவின் வேதனையைக் கொஞ்சமாகிலும் உணர முயல்வோம். ரோமையர்கள் கண்டு பிடித்த சித்தரவதைகளின் கொடுமுடியாக, சிகரமாக அவர்கள் கண்டுபிடித்தது சிலுவை மரணம். சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்ரவதை பட்டு சாவார்கள். கைகளில் அறையப்பட்ட இரு ஆணிகளால் உடல் தாங்கப்பட்டிருப்பதால், உடல் தொங்கும். அந்த நிலையில் மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சு விடுவதற்கு உடல் பாரத்தை மேலே கொண்டுவர வேண்டியிருக்கும். அப்படி கொண்டு வருவதற்கு அந்த இரு ஆணிகளில் அறைந்த கைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கும். இப்படி விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண வேதனை அனுபவிப்பார்கள். ஒரு சிலர் இப்படி உயிரோடு போராடி எழுப்பும் மரண ஓலம் எருசலேம் நகருக்கும் கேட்கும் என்று விவிலிய ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இந்த மரண ஓலத்தை நிறுத்தவே, அவர்கள் மூச்சடைத்து விரைவில் இறக்கட்டும் என்பதற்காகவே அவர்கள் மீண்டும் மேலே எழுந்து வர முடியாதபடி அவர்கள் கால்களை முறித்துவிடுவார்கள். இதையே நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம்.
இந்த மரண ஓலத்தில், வேதனைக் கதறலில் சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் வெறுப்புடன் வெளி வரும். தங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்த தங்களை, பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் அவரது மரண சாசனம். அந்த மரண சாசனத்தின் முதல் வரிகள் இவை: "தந்தையே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்."
தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளுக்கு, அடிப்படையாக நமக்குத் தேவையானது, மன்னிப்பு. மன்னிப்பு பெறுவது, மன்னிப்பு வழங்குவது. இந்த கருத்துக்களை வரும் விவிலியத் தேடலில் சிந்திப்போம். நாம் ஆரம்பித்துள்ள இந்த தவக்காலம் புதுமைகளால், புதிய வாழ்வளிக்கும் வசந்தத்தால் நம்மை நிறைக்க வேண்டுமென ஒருவர் ஒருவருக்காய் வேண்டிக்கொள்வோம்.




14 February, 2010

VALENTINE Hijacked… இடம் மாறும் மையமும் ஓரங்களும்...

The Sermon on the Mount, especially the Beatitudes given for this Sunday lend themselves to good reflections, but I wish to spend time reflecting on February 14th - Valentine’s Day. Valentine (or St Valentine) may not be a historical figure. But, the legend around him is quite interesting. I am not sure how many of you know the stories about Valentine. I have read them for the first time. Let me share them with you.
The Roman festival of Lupercalia in February began a festival of love. In the third century, Claudius II was the emperor of Rome and was keen on having soldiers who were single rather than married men. To realise his ideal army, he banned love and marriage from his empire. Valentine, a priest, defied the emperor’s edict and got couples married in secret. When the emperor learnt of this, he imprisoned Valentine, tortured him and, finally, beheaded him on February 14th around the year 270.
While Valentine was in prison, he cured the blind daughter of the jailor. On the day of his execution, he wrote a note to this girl in which he used the famous phrase: “From your Valentine” While Valentine was in prison, the couples who were united in marriage by him, would come with flowers to meet him, or, would send him flowers as a token of their love for him.
When I read these stories about Valentine, the following thoughts crossed my mind:
The business world has simply hijacked this festival to suit its purpose – the purpose of ‘selling love’. Let me explain. Flowers were sent to Valentine when he was in prison. At present, probably no other festival sells so many flowers – especially, red roses – as Valentine’s Day. 189 million stems of roses are sold in the U.S. on Valentine's Day and 1.2 billion throughout the year. (http://wiki.answers.com/)
Here are some more details: According to TheRomantic.com, 110 million Valentine's roses are sold and delivered in a three-day period surrounding February 14th, the vast majority of which are red. Of those 110 million, 73% are purchased by men and only 27% are purchased by women… (http://news.holidash.com/2010/02/09/how-many-roses-are-sold-on-valentines-day/)
There are lot more statistics on how many chocolates, how many cards, and how many gifts – especially, diamond rings – are purchased on this day. All in all, this festival is a great occasion to ‘sell love’.
The parting words scribbled by Valentine to the jailor’s daughter are now the ‘mantra’ of this festival. “From your Valentine” or “To my Valentine”. Almost all the greeting cards printed for this festival end with these words… To make these words sound more ‘authentic’, there is a story that Valentine fell in love with the girl he cured. It is anybody’s guess where this story may have come from. May I have a ‘pinch of salt’, please?

I wish to reflect further on how the business world has hijacked this festival as well as other festivals and made them into profitable business propositions. Those who live in cities can see a shift of locus for our festivals. Earlier a festival was celebrated in one’s family, in a Church, Temple or Mosque, in the village or town square. Nowadays festivals seem to be celebrated in supermarkets, malls, hotels, disco places or holiday resorts… A clear shift from the religious, social worlds to the business world.
The business world has interpreted traditional festivals and has multiplied festivals in the last thirty to forty years. What is more tragic is that the coming generations would not even know which is the core of a festival and which are the fringes. Already I can see this happening – namely, the core becoming the fringe and fringes being brought to the centre.
I would like to share a parable to illustrate the interchange of core and fringes. A man bought a car. The latest TV was given to him as a gift for purchasing the car. The man forgot the car he purchased and took home the TV! What do you think of this man? To put it very politely, he is quite strange!
Another woman was given a rare painting as a gift. The painting came wrapped in a lovely gift-wrap. The lady dumped the painting in the trash, framed the gift-wrap and hung it on the wall. Strange, again… very strange.
All of us are strange. How easy it is for us to interchange core and fringes. The business world, which thrives on fringes has replaced the core of festivals with fringes… more especially for Valentine’s Day.

Whatever be the story of Valentine, it is a story of love conquering hatred. Claudius wanted men to join the army and hence banned love and marriage. No war, no army – even for the holiest of reasons – can be justified. Any attempt to break this chain of hatred is praiseworthy. This was what Valentine did and he did this silently. If Valentine had wished, he could have gathered all the youth of Rome into an army of love and waged a war of love against emperor Claudius. The youth would have easily joined this love force. Dear friends, I would like you to re-read the previous two sentences. I have used terms like ‘army of love’, ‘war of love’ and ‘love force’… terribly mis-matched words! Let me repeat… No war, no army – even for the holiest of reasons – can be justified. Valentine fostered love even though he knew that he was up against an emperor. This is the core of the original Valentine’s Day! Unfortunately, Valentine’s Day, February 14, 2010, is more about roses, cards, gifts, chocolates… etc. etc. Love comes with a price tag! Those who have no money… forget love. Whoever said, “Blessed are the poor…” was terribly mistaken.
Dear friends, I began this reflection talking of the Beatitudes. Kindly read today’s gospel: Luke 6: 20-26. Luke’s version of the list of beatitudes is special since it gives not only the blessing but the warning too.

இன்று பிப்ரவரி 14. Valentine's Day அல்லது காதலர் தினம் என்று அழைக்கப்படும் இந்த நாளைப் பற்றி நான் பேசவில்லையென்றால், நான் ஏதோ வேறு ஒரு உலகத்தில், வேறு ஒரு கோளத்தில் இருந்து வந்தவன் என்று கூட நீங்கள் நினைக்க வாய்ப்புண்டு. ஏனெனில், பிப்ரவரி 14 அவ்வளவு புகழ் பெற்ற ஒரு திருவிழாவாக மாறிவிட்டது.
மனித வாழ்வில் திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் கட்டாயம் தேவை. இவைகள் இல்லாத மனித வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால், எதற்கு திருவிழா, ஏன் கொண்டாட்டம் என்பதை உணர்வது நல்லது. அதுவும் அண்மைக்காலங்களில் மிகவும் பிரபலமாகி இருக்கும் இந்த நாளின் காரண, காரியங்களைப் பற்றி சிந்திப்பது மிகவும் நல்லது.
நான் சிறுவனாக இருந்த போது கொண்டாடப்பட்ட விழாக்களைப் போல் இப்போது குறைந்தது ஐந்து மடங்கு திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன. திருவிழாக்கள், அதனால் உண்டாகும் மகிழ்வு இவற்றிற்கு நான் எதிரி அல்ல. ஆனால், இந்த விழாக்களை வியாபார உலகம் ஒவ்வொரு ஆண்டும் அதிகமதிகமாக ஆக்கிரமித்து வருகிறதென்பதும், பல புதிய விழாக்களை வியாபார உலகம் ஆரம்பித்துள்ளதென்பதும் கவலை தரும் போக்கு.
வியாபார உலகத்தின் ஆக்கிரமிப்பு எப்படிபட்டது? வீடுகளிலும், கோவில்களிலும், ஊரின் பொது இடங்களிலும் கொண்டாடப்பட்டு வந்த விழாக்கள் இப்போது, supermarket அல்லது maalகளிலும், உணவு விடுதிகள், டிஸ்கோ இடங்கள் என்று வியாபாரத் தலங்களிலும் அதிகம் கொண்டாடப்படுகின்றன. விழாக்களின் உள் அர்த்தங்களை சிந்திக்க விடாமல், மேல் பூச்சுக்களில் நம்மை மயங்க வைத்து, இந்த மேல் பூச்சுக்கள்தாம் விழாக்களின் மையப்பொருள் என்று சொல்லும் அளவுக்கு விழாக்களை வியாபார உலகம் மாற்றிவிட்டதென்பதை ஓரளவாகிலும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

பிப்ரவரி 14 விழாவுக்கு இன்னொரு தனி சிறப்பு உண்டு. கடந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளாக இந்தியாவில் இந்த விழாவைக் குறித்த காரசாரமான விவாதங்கள், பல வன்முறை கலந்த கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த விவாதங்கள் நல்ல விதமாக, அறிவு பூர்வமாய் நடந்தால், இந்த விழாவைப்பற்றிய உண்மைகள், உள் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும். ஆனால், இந்த கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றையும் நம் தொடர்பு சாதனங்கள் ஒரு நாடகம் போல காட்டுவதால், இந்த விழாவை தேவைக்கும் அதிகமாக புகழ் உச்சிக்கு இவை கொண்டு சென்று விட்டனவோ என்று எனக்கு கலக்கமும் உண்டு. இந்த நாடகங்களை நாம் பார்த்து ரசிக்கிறோம், கை தட்டுகிறோம்... ஆனால், விழாவின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் போய்விடுகிறோம் என்றே நினைக்கிறேன். இந்த விழாவைப் பற்றி கொஞ்ச நேரமாகிலும் சிந்திக்க உங்கள் சிந்தனைகளை ஆரம்பித்து வைக்க நினைக்கிறேன்.

ஒரு கற்பனைக் கதை அல்லது உவமையோடு என் சிந்தனைகளை ஆரம்பிக்கிறேன். ஒருவர் ஒரு கார் வாங்கினார். கார் வாங்கியதால், ஒரு டி.வி. இலவசமாக அவருக்கு வழங்கப்பட்டது. அவர் வாங்கிய காரை வீட்டுக்கு ஓட்டிச் செல்லாமல் அங்கேயே விட்டு விட்டு, இலவசமாக கொடுக்கப்பட்ட டி.வி.யை மட்டும் வீட்டுக்கு எடுத்துச் சென்று, வீட்டில் வைத்து அழகு பார்த்தார். இவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இன்னொருவருக்கு, அவரது நண்பர் அதிக விலையுயர்ந்த, அழகான ஓவியம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். அந்த ஓவியம் ஒரு காகிதத்தில் சுற்றப்பட்டிருந்தது. பரிசைப் பெற்றவர், அந்த விலையுயர்ந்த ஓவியத்தைப் பக்கத்திலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, பரிசு சுற்றப்பட்டிருந்த காகிதத்தை எடுத்து ரசித்தார். அதை சட்டமிட்டு தன் வீட்டில் மாட்டினார். இவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நினைக்க என்ன இருக்கிறது? இருவரும் சுய நினைவை, சுய சிந்தனையை இழந்தவர்கள் என்று சொல்லமாட்டோமா? சொல்வோம். ஆனால், அதே போல் நாம் எத்தனை முறை நடந்திருக்கிறோம்? மையங்களை ஒதுக்கி விட்டு, ஓரங்களில் நம் கவனங்கள் நின்று விடவில்லையா? ஓரங்களைப் பெரிதுபடுத்தி, ஓரங்களுக்கு மாலையிட்டு, மரியாதைகள் செய்து ஓரங்களை மையங்களாக்கவில்லையா?

நாம் கொண்டாடும் பல திருநாட்களில் மையங்களும் ஓரங்களும் இடம் மாறிவிட்டன. யார் இந்த மாற்றத்தைச் செய்தது? நான் ஏற்கனவே கிறிஸ்மஸ் காலத்தில் ஒரு சிந்தனையில் பகிர்ந்து கொண்டதைப் போல், நம் வியாபார உலகம் இந்தத் திருநாட்களின் உண்மையான அர்த்தங்களை மையங்களிலிருந்து ஓரத்திற்கு ஒதுக்கி விட்டு, அந்த வியாபார உலகம் உருவாக்கிய ஓரங்களை... அதாவது, மலர்கள், வாழ்த்து அட்டைகள், அலங்காரங்கள், பரிசுப் பொருட்கள் என்ற இந்த ஓரங்களை மையத்திற்குக் கொண்டு வந்து கொலுவேற்றிவிட்டது. திருநாட்கள் வழியாக நமக்கு வந்து சேரும் அர்த்தங்கள் எனும் பரிசுகள் குப்பைக்குப் போய்விட்டன. அந்தத் திருநாட்களில் வாங்கப்படும் பல்வேறு பொருட்கள் என்ற அந்த பரிசு சுற்றப்பட்ட காகிதங்கள் சட்டமிட்டு மாட்டப்படும் அளவுக்கு மதிப்பு பெற்றுள்ளன.

மையமும் ஓரமும் மிக அதிகமாய் மாற்றப்பட்டுள்ள ஒரு விழா இந்த பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படும் Valentine விழா. இந்த விழாவுக்கான ஒரு மையம் இந்த விழா எழுந்த சூழல். இதன் வரலாறு. இந்த வரலாறு நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும், ஒரு முறை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
உரோமையப் பேரரசில் பிப்ரவரி 14 என்பது உரோமைய தேவர்கள், தேவதைகளின் அரசியான ஜூனோவின் திருநாள். இந்தத் திருநாளைத் தொடர்ந்து, Lupercalia என்ற திருநாளும் வரும். இத்திருநாட்களைத் தொடரும் நாட்களில், இளம்பெண்களின் பெயர்களைச் சீட்டுக் குலுக்கி போட்டு, இளைஞர்கள் தெரிவு செய்வர். தெரிவு செய்யப்பட்ட இளம்பெண்ணும், இளைஞனும், நண்பர்கள் என்று அறிவிக்கப்படுவர். இப்படி ஆரம்பமாகும் நட்பு, பின்னர் காதலாகி, திருமண வாழ்வில் முடிவடையும்.
மூன்றாம் நூற்றாண்டில் இரண்டாம் Claudius மன்னனாய் இருந்தபோது, போருக்கு, படைக்கு ஆட்கள் சேர்ப்பது பெரும் கடினமாய் இருந்தது. இளைஞர்கள் தங்கள் காதலைத் துறந்து படைகளில் சேர விரும்பவில்லை. எனவே, Claudius இந்த பிப்ரவரி 14க்கான திருநாளையும், அதைத் தொடரும் காதல், திருமணம் இவற்றையும் தன் பேரரசில் முற்றிலும் தடை செய்தான். அந்த நேரத்தில் உரோமையில் இருந்த Valentine என்ற கத்தோலிக்க குரு அரசனுக்குத் தெரியாமல், பல இளையோருக்கு திருமணங்கள் நடத்தி வைத்தார். இதை அறிந்த அரசன், அந்த குருவைக் கைது செய்து, சிறையிலடைத்து, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினான். Valentine சிறையில் சித்திரவதைகள் அனுபவித்தபோது, சிறைக் காவலரின் பார்வையற்ற மகளைக் குணமாக்கினார் என்ற கதை ஒன்று உண்டு. 270ஆம் ஆண்டளவில், பிப்ரவரி 14 அன்று Valentine தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தார்.

மனித வரலாற்றில் இதுவரை நடந்த எல்லா போர்களுமே (அவை எந்த காரணங்களுக்காய் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும்) வெறுப்பை, வெறியை வளர்த்து, வேதனைகளையே உருவாகியுள்ளன. இந்த வெறியை ஊட்டி வளர்க்க வீரர்கள் முன்வரவில்லை என்று Claudius காதலை, திருமணங்களைத் தடை செய்தான். அன்பைத் தடுத்தால் தானே, வெறியை உருவாக்க முடியும். அன்பைத் தடை செய்ய தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினான்.
வெறியை வளர்க்கும் இந்த அதிகாரத்தை எதிர்த்து, அன்பையும் காதலையும் வளர்க்க Valentine செய்தது அழகான ஒரு முயற்சி. அந்த முயற்சியையும் அவர் பகிரங்கமாய் செய்திருக்கலாம். அவர் நினைத்திருந்தால், அவரது 'அன்புப் படை'யில் ஆயிரக்கணக்கான இளையோரைச் சேர்த்து போராடியிருக்கலாம். (‘அன்புப் படை’ என்பதே முரண்பட்ட, ஒன்றோடொன்று பொருத்தாத சொற்றொடர்). Valentine போராட்டம், கலவரம் என்று மன்னனை எதிர்த்திருந்தால், அந்த கலவரங்களில் பல உயிர்கள் பலியாகியிருக்கும். அன்பின் பெயரால் இந்தக் கொலைகளைச் செய்ய விரும்பாத அந்த குரு அமைதியாக, அரசனுக்குத் தெரியாமல் அன்பை வளர்த்து வந்தார். அற்புதங்கள் நடத்தி வந்தார்.

மனித வரலாற்றில் வெறுப்பு, வெறி இவைகளே படை பலம், ஆட்பலம், அதிகார பலம் இவைகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்து, ஆரவாரமாய் வரலாற்றை ஆக்கிரமித்து வந்துள்ளன. அன்போ, அதைச் சார்ந்த அற்புதங்களோ அமைதியாக, ஆனால் ஆழமாக மனித வரலாற்றில் இடம் பிடித்துள்ளன.
படை பலத்தோடு ஆண்ட அரசன் Claudiusக்கு திருநாள் எதுவும் இல்லை. ஆனால், அன்பை வளர்த்த Valentineக்கு திருநாள் உண்டு. ஆனால், இந்த அழகான, ஆழமான பின்னணியை மறக்க வைக்கும் அளவுக்கு, Valentine's Day என்பதற்கு காதலர் தினம் என்ற வியாபாரப் பெயரைச் சூட்டி, வியாபார உலகம் அடையும் இலாபத்திற்கு நம் இளையோர் எல்லை மீறி பலியாகி வருவது கசப்பான உண்மை. பணம் இல்லையெனில், பரிசு இல்லையெனில் அன்போ, காதலோ இல்லை என்று எண்ணும் அளவுக்கு இந்த நாள் பணக்காரத் திருநாளாகி விட்டது.
இந்தத் விழா எவ்வளவு தூரம் வியாபாரமாகிவிட்டதென்பதற்கு இரு எடுத்துக்காட்டுகள். Valentine சிறையில் இருந்த போது, அவரால் திருமணத்தில் இணைத்து வைக்கப்பட்ட பல இளையோர் சிறையில் அவரைச் சந்தித்து, மலர்களையும், தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல பரிசுகளையும் கொடுத்தனர் என்ற கதையும், Valentine தலை வெட்டப்படுவதற்கு முன், குணமான அந்தப் பெண்ணுக்குத் தன் கைப்பட எழுதிய ஒரு வாழ்த்தை அனுப்பினார் என்ற வேறொரு கதையும் உண்டு. இந்த அன்பு பரிமாற்றங்கள் இன்று வியாபாரமாகி, இந்த விழாவுக்கென பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மலர்கள் விற்கப்படுகின்றன. Valentine அந்தப் பெண்ணுக்கு “From your Valentine” - அதாவது, “உன்னுடைய Valentineஇடமிருந்து” என்ற வார்த்தைகளை அவர் இறுதி வாழ்த்தாக எழுதி அனுப்பியதும் தற்போது வியாபாரமாகிவிட்டது.

பிப்ரவரி மாதத்தில், கிறிஸ்தவ பாரம்பரியத்தில் தவக்காலம் ஆரம்பமாகும். இந்த ஆண்டு தவக்காலம் வரும் பிப்ரவரி 17 திருநீற்று புதனோடு ஆரம்பமாக உள்ளது. வழக்கமாக, திருநீற்று புதனுக்கு முன்னால் ‘கார்னிவல்’ (Carnival) என்ற பெயரில் இன்னும் பல வரம்பு மீறும் கொண்டாட்டங்களை வியாபார உலகம் ஆரம்பித்துள்ளதும், அந்த கொண்டாட்டங்களில் இளையோர் ஈடுபடுவதும் கவலை தரும் மற்றொரு போக்கு...
பிப்ரவரி 14 என்று நினைக்கும் போது, உண்மை அன்பை, உண்மைக் காதலைக் கொண்டாடுவதற்கு பதில், அந்தப் புனிதமான உணர்வுகளுக்கு சாயம் பூசும் வியாபார உலகம் சொல்வது தான் உண்மை அன்பு, உண்மை காதல் என்று குழம்பிப் போயிருக்கும் நம் இளையோருக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்க இறை அருளை வேண்டுவோம்.

அன்பின் பலத்தை மட்டும் நம்பி வாழ்ந்த Valentine க்கு அடிப்படை காரணமாக இருந்தவர் இயேசு. அவரும் அன்பின் பலத்தை மட்டும் தன் வாழ்வில் நம்பி வாழ்ந்தவர். அவர் தந்த அந்த அற்புதமான மலைப் பொழிவு இன்றைய நற்செய்தியில் நமக்குத் தரப்பட்டுள்ளது. இந்த நற்செய்திக்கு விளக்கங்கள் தேவையில்லை. பேறுபெற்றோர் என்று இயேசு மத்தேயு, லூக்கா என்ற இரு நற்செய்திகளிலும் பட்டியலிடும் புண்ணியங்கள் நிறை வாழ்வுக்கு வழிகாட்டும் விளக்குகள். மதம், சமயம் என்ற வட்டங்களைக் கடந்து, இயேசுவின் மழைப் பொழிவு பல உன்னத மனிதர்களுக்கு வழிகாட்டியுள்ளது.
இன்று நமக்குத் தரப்பட்டுள்ள லூக்கா நற்செய்தியில் தனி சிறப்பு உண்டு. இந்தப் பகுதியில், பேறு பெற்றோர் என்று இயேசு கூறும் ஆசீர் மொழிகளைத் தொடர்ந்து, எச்சரிக்கைகளையும் இயேசு நமக்கு விடுத்துள்ளார். அந்த நற்செய்தியோடு நம் சிந்தனைகளை, எண்ணங்களை நிறைவு செய்வோம்.

லூக்கா நற்செய்தி - 6: 17, 20-26

07 February, 2010

Proud to be HUMBLE… துணிவிலிருந்து பிறப்பதே பணிவு...




“Humility is the foundation of all the other virtues hence, in the soul in which this virtue does not exist there cannot be any other virtue except in mere appearance.” Saint Augustine.

Ladies and Gentlemen, I am proud to introduce Humility. Pride (the real, healthy pride) and humility are two sides of the same coin. Humility is, probably, one of the most misunderstood virtues. The moment we think of humility, our minds would, probably, picture a silent, reserved person who does not even raise his / her head, a person who will seek the corner seat in the last row… etc. This is not the true picture of humility. Such humility, more often, would be false humility. True humility overflows from a heart filled with healthy pride. Here is a sample from Sir Isaac Newton: “If I have seen further than others, it is by standing upon the shoulders of giants.” Newton begins this quote by saying that he had seen further than others. There is a sense of pride and fulfilment in that statement. But, he acknowledges the help of others in his life. That is humility.
You may be wondering whether I am writing a treatise on humility. Dear Friends, humility is a common thread that runs through all the three readings found in this Sunday’s liturgy. To be more specific, here are the verses I am referring to:

Isaiah 6:5 – I am a man of unclean lips, and I live among a people of unclean lips
I Cor. 15:8-10 – Last of all he (Christ) appeared to me also, as to one abnormally born. For I am the least of the apostles and do not even deserve to be called an apostle, because I persecuted the church of God. But by the grace of God I am what I am, and his grace to me was not without effect.
Luke 5:8 – When Simon Peter saw this, he fell at Jesus' knees and said, "Go away from me, Lord; I am a sinful man!"

Those who beg for alms sometimes demean themselves as nothing, nobody, etc. Such statements come out of need and desperation. The statements we heard in today’s readings do not come from desperation. On the contrary, Isaiah, Paul and Peter are making these statements after their encounter with the divine, after they have been overwhelmed by God’s presence. These statements are, in essence, what true humility is. A true, proper perspective of who we are and what we can be with God.
I am sure all of us have met truly great persons in our lives. They hardly seem great; much less they impose their greatness on others. They don’t take any special effort to be humble or great. Both greatness and humility simply emanate from them. On the contrary, those who are small, need to exhibit their greatness as well as their other ‘virtues’.
Here is a nice story from ‘Illumination-Experiences on Indian Soil’ by Sri Chinmoy:
The King's Humility
One day a sage came to a King for an interview. The sage had to wait for a long time because the King was very busy. Finally, the King said he could come in.
When the sage entered the hall, the first thing he did was to take off his hat and bow to the King. Immediately the King took off his crown and bowed to the sage. The ministers and others who were around the King asked, "What are you doing? He took off his hat because he is an ordinary man. But you are the King. Why should you take off your crown?"
The King said to his ministers, "You fools, do you think I wish to remain inferior to an ordinary man? He is humble and modest. His humility is a peerless virtue. He showed his respect to me. If I did not take off my crown, then I would be showing less humility than an ordinary man, and I would be defeated by him. If I am the King, I should be better than everybody in everything. That is why I took off my crown and bowed to him!”

http://www.writespirit.net/stories_tales/stories_by_sri_chinmoy

Here are the words from one of the great pillars of Christianity – St Paul:
Christ said to me, "My grace is sufficient for you, for my power is made perfect in weakness." Therefore I will boast all the more gladly about my weaknesses, so that Christ's power may rest on me. That is why, for Christ's sake, I delight in weaknesses, in insults, in hardships, in persecutions, in difficulties. For when I am weak, then I am strong. (II Cor. 12:9-10)

பிப்ரவரி 07 - நாளும் ஒரு நல்லெண்ணம்
Bankei என்ற சென் குரு உரையாற்றுகையில் மாணவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியிலிருப்பவர்களும் அவரது உரையைக் கேட்க கூட்டமாய் வருவது வழக்கம். இதைக் கண்ட Nichiren என்ற மற்றொரு குருவுக்கு பொறாமையும், கோபமும் அதிகமானது. எனவே அவர் Bankei போதித்துக் கொண்டிருக்கும் போது, அவருடன் வாதிடும் நோக்கத்தில் அங்கு வந்து உரத்தக் குரலில், "ஏய், போதகரே, உம்மை மதிக்கும் எவரும் நீர் சொல்வதற்கு முற்றிலும் கீழ்படிவார்களாமே. எங்கே, என்னைக் கீழ்ப்படிய வைத்துவிடும், பார்ப்போம்." என்றார். Bankei அவரிடம், "இங்கே அருகில் வாருங்கள். நான் இதை எப்படி செய்கிறேன் என்று காட்டுகிறேன்." என்றார்.
Nichiren அவர் அருகில் சென்றார். Bankei புன்முறுவலுடன், "என் இடது பக்கமாய் வாருங்கள்." என்றார். Nichiren அப்படியே செய்தார். "மன்னிக்கவும். என் வலது பக்கம் வந்தால், நாம் இதைப் பற்றி இன்னும் தெளிவாகப் பேசலாம்." என்றார். Nichiren அப்படியே செய்தார். இப்போது, Bankei அவரிடம், "பார்த்தீர்களா? நான் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் செய்தீர்கள். நீங்கள் ஒர் உன்னதமானவர். இப்போது அமரவும், நாம் பேசுவோம்." என்றார்.
வெள்ளம் வரும் போது, வளைந்து கொடுக்கும் நாணல் பின்னர் நிமிர்ந்து நிற்கும். எதிர்த்து நிற்கும் பெரும் மரம் வேரோடு, வெள்ளத்தோடு போய்விடும்.

ஞாயிறு சிந்தனை
Shakespeare எழுதிய புகழ் பெற்ற ஒரு நாடகத்தில் வரும் பிரபலமான வரிகள் இவை:
A rose by any other name would smell as sweet
ரோஜா மலரை என்ன பெயரிட்டு அழைத்தாலும், அதன் மணம் அதே இனிமையோடு இருக்கும் என்பது அதன் பொருள். எந்த மலருக்கும் இது பொருந்தும். பெயரை மாற்றுவதால் ஒரு பொருளின் அடிப்படை குணம் மாறுவதில்லையே.
அதேபோல், மனிதர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு புண்ணியத்தைப் பல பெயர்களால் அழைக்கிறோம். அடக்கம், பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் இந்த புண்ணியம் அழைக்கப்படுகிறது. இந்தப் புண்ணியத்தைப் பற்றி பேசாத பெரியவர்கள் இல்லை.
“தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்” என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கமுடைமை என்று வள்ளுவர் அறத்துப்பாலில் கூறும் பத்து குறள்களை, அன்பர்களே, தயவுசெய்து ஒருமுறை இன்று வாசித்துப்பாருங்கள். 121 முதல் 130 வரையிலான பத்து குறள்களில் நாம் அனைவரும் மகிழ்வோடு, நிம்மதியோடு பெருமையோடு தலை நிமிர்ந்து வாழக்கூடிய வழிகளை மிக எளிமையாக வள்ளுவர் கூறியுள்ளார்.
தன்னடக்கம், புலனடக்கம் சிறப்பாக நாவடக்கம் என்ற பல எண்ணங்களைக் கூறியுள்ளார். நாம் அடிக்கடி இந்தக் குறள்களைக் கேட்டிருக்கிறோம். இவ்வாறு அடிக்கடி கேட்கும் உண்மைகள் உள்ளத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் போக வாய்ப்புண்டு. நீங்கள் அடிக்கடி கேட்டிருந்தாலும், இன்று மீண்டும் ஒருமுறை இக்குறள்களில் ஒரு சிலவற்றைக் கேட்போம்:
குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
குறள் 125:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
குறள் 127:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

குறள் 129:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

திருவள்ளுவர், திருக்குறள் பற்றிய விளக்கவுரை இப்போது ஏன் என்று குழம்பிப் போயிருக்கும் அன்பர்களே, இன்றைய ஞாயிறு வாசகங்களையும், இக்குறள்களோடு இணைத்து சிந்திக்க அழைக்கிறேன்.
இந்த ஞாயிறு திருவழிபாட்டில் நமக்குத் தரப்பட்டுள்ள மூன்று விவிலிய வாசகங்களிலும் பொதுவான ஒரு எண்ணம் உள்ளது. எசாயா, பவுல், பேதுரு என்ற மூன்று விவிலியத் தூண்களும் உள்ளத் தாழ்ச்சியோடு தங்களைப் பற்றிக் கூறும் வார்த்தைகளை இந்த மூன்று வாசகங்களும் தாங்கி வருகின்றன.
முதல் வாசகத்தில் இறைவனின் மாட்சியை கண்ணாரக் கண்டு எசாயா கூறும் வார்த்தைகள் இவை: எசாயா 6:5 - தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்.
இரண்டாம் வாசகத்தில், இயேசு அப்போஸ்தலர்கள் பலருக்குக் காட்சியளித்ததை வரிசைப்படுத்திச் சொல்லும் பவுல், இறுதியாக, இயேசு தனக்கும் தோன்றினார் என்பதை இவ்வாறு கூறுகிறார்: 1 கொரி. 15:8 - எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்.
நற்செய்தியில் இயேசு பேதுருவின் படகில் ஏறி போதித்தபின், அவர்களை அந்த நடுப்பகலில் மீன் பிடிக்கச் சொன்ன அந்த நிகழ்ச்சியில், பெருந்திரளான மீன்பிடிப்பைக் கண்டு பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து கூறும் வார்த்தைகள் இவை: லூக்கா. 5:8 - “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்”

எசாயா, பவுல், பேதுரு என்ற மூவருமே உள்ளத்தின் நிறைவிலிருந்து பேசிய வார்த்தைகள் இவை. தன்னிரக்கத்தில், வேதனையில், இயலாமையில் தங்களையே வெறுத்து, தங்களையே தாழ்த்திச் சொன்ன வார்த்தைகள் அல்ல. இது நமக்குத் தரும் முக்கியமான பாடம்: தாழ்ச்சி என்பது, பணிவு என்பது உள்ள நிறைவிலிருந்து வரும் போதுதான் உண்மையாக இருக்கும், உண்மையாக ஒலிக்கும். குறையில் உள்ளவர்கள் தங்களையே தாழ்த்திச் சொல்லும் வார்த்தைகள் ஏக்கத்திலிருந்து வருவன. பிறரிடம் கையேந்தி தர்மம் தேடுவோர் தங்களையேத் தாழ்த்திக் கொள்வது போன்ற நிலை அது. நிறைவிலிருந்து சொல்லப்படும் உண்மைகளில் எந்த உள்ளர்த்தமோ, தேடலோ, ஏக்கமோ இருக்காது.
தன்னிடம் உள்ள நிறை குறைகளை முழுவதும் அறிந்த ஒருவர், தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்வதே பணிவு. ஒரு சின்ன உதாரணம்: நான் கல்லூரியில் வகுப்புகள் எடுக்கும் போது, அன்றைய பாடத்திற்கு என்னால் முடிந்தவரை தயாரிப்போடு செல்வது வழக்கம். அன்றைய பாடத்தோடு தொடர்புடைய, அதுவும் அண்மையில் வந்த தகவல்களைச் சேகரித்து செல்வேன். இருந்தாலும், என்னை விட தொடர்பு சாதனங்களில் அதிகம் திறமையும், அறிவும் கொண்ட மாணவர்கள் என் வகுப்பில் இருந்தனர் என்பதும் எனக்கு நன்கு தெரியும். அவர்களில் ஒரு சிலர் தங்களுக்குத் தெரிந்தது ஆசிரியருக்குத் தெரிகிறதா என்று பார்ப்பதற்கு கேள்விகள் கேட்பர். வேறு சிலர் உண்மையில் அந்த விஷயங்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் கேள்விகள் கேட்பர். கேள்வி எந்த கோணத்தில் வந்தாலும் சரி, அவர்கள் கேட்கும் கேள்விக்கு முழுமையான பதில் தெரிந்தால், நான் விளக்கம் தருவேன். பாதி தெரிந்தால், அல்லது சரிவரத் தெரிய வில்லை என்றால், அடுத்த நாள் அதைப்பற்றி சொல்வதாகச் சொல்லியிருக்கிறேன். தனக்குத் தெரியவில்லை, அடுத்த நாள் அது பற்றி தெரிந்து கொண்டு சொல்கிறேன் என்று சொல்லும் ஆசிரியர்கள் மேல் மாணவர்களுக்கு மதிப்பு கூடுமே தவிர குறையாது. ஆனால், இப்படிச் சொல்வதற்கு துணிவு, தன்னம்பிக்கை, தன்னைப் பற்றிய தெளிவு இவைகள் தேவை. இவைகள் இல்லாத போது, சில ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களை இழிவாக, குறைவாக நினைப்பார்களோ என்ற பயத்தில் தெரியாதவைகளை, தெரிந்தது போல் அரையும் குறையுமாகச் சொல்லும் போது மாணவர்கள் மதிப்பில் பல படிகள் இறங்கி விடுவர் அந்த ஆசிரியர்கள்.
நிறைவும், குறையும் இரட்டைப் பிறவிகள். துணிவும் பணிவும் அதேபோல் இரட்டைப் பிறவிகள். இன்னும் சொல்லப்போனால், துணிவிலிருந்து பிறப்பதே பணிவு. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது முரண்பாடாகத் தெரியலாம். ஆனால், நிதானமாகச் சிந்தித்தால், தெளிவு கிடைக்கும். நான் சொல்லும் துணிவு உண்மையின் அடிப்படையில் எழுகின்ற துணிவு. வன்முறையையே வாழ்வாக்கி இருக்கும் ரவுடிகள், தாதாக்கள் காட்டும் துணிவு உண்மையில் துணிவல்ல, தங்கள் பயத்தை மூடி மறைக்கும் ஒரு வேஷம். தன்னை நன்கு உணர்ந்தவர்கள் தங்கள் திறமைகள், குறைகள் இவைகளை ஏற்றுக் கொண்டவர்கள், தங்கள் திறமைகள் மேல் நம்பிக்கை கொண்டு துணிந்து செயல்களில் இறங்குவார்கள். குறையுள்ள பகுதிகளில் பணிவோடு விலகிக் கொள்வார்கள். இவர்கள் இறை நம்பிக்கை உடையவர்களானால், தனது திறமை, சக்தி இவைகளை மட்டும் நம்பாமல், இறைவன் நமக்குபின் இருந்து செயல் படுகிறார் என்ற நம்பிக்கையோடு குறையுள்ள பகுதிகளிலும் துணிந்து இறங்குவார்கள். துணிவில் பிறக்கும் பணிவுக்கு இதுதான் நான் காணும் விளக்கம். இந்தத் துணிவை, அதில் பிறந்த பணிவை பெரும் சாதனையாளர்களிடம் பார்க்கிறோம். அறிவியல் மேதை ஐசக் நியூட்டன் சொல்வது இது: மற்றவர்களை விட நான் இன்னும் அதி தூரம் பார்க்க முடிந்ததற்கு ஒரு முக்கிய காரணம், நான் எனக்கு முன் சென்றவர்களின் தோள்களின் மேல் ஏறி நின்றேன்.
இறைவனின் தோள்களில் துணிவுடன் ஏறி நின்ற எசாயா, பவுல், பேதுரு இவர்களின் பணிவை இன்றைய வாசகங்களில் கேட்டோம்.
தன்னிறைவு, தன்னைப் பற்றிய தெளிவு, துணிவு இவைகள் இல்லாத போது அடுத்தவர்களை எப்போதும் நமக்குப் போட்டியாக நினைப்போம். இந்தப் போட்டியைச் சமாளிக்க, ஒன்று நம்மையே தேவைக்கும் அதிகமாகப் புகழ வேண்டியிருக்கும், அல்லது தற்பெருமையோடு தவிக்க வேண்டியிருக்கும். அல்லது, மிகவும் பரிதாபமாக போலி தாழ்ச்சியுடன், பணிவுடன் நடிக்க வேண்டியிருக்கும். போலி தாழ்ச்சிபற்றி பல கதைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. இந்திய ஆன்மீகவாதி ஒருவர் சொன்ன கதை இது:
தற்பெருமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த ஒரு அரசனை ஞானி ஒருவர் பார்க்க வந்தார். அரசன் அவரை உடனே சந்திக்கவில்லை. பல அலுவல்களில் மூழ்கி இருப்பது போல் நடித்துக் கொண்டு, அந்த ஞானியை காத்திருக்கச் செய்துவிட்டு பிறகு அரசன் அவரைச் சந்தித்தான். அரசனுக்கு முன் ஞானி வந்ததும், தன் தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி அரசனை வணங்கினார். உடனே, அரசனும் தான் அணிந்திருந்த மகுடத்தைக் கழற்றி ஞானியை வணங்கினான். இதைக் கண்ட அமைச்சர்களுக்குப் பெரும் ஆச்சரியம். அவர்களில் ஒருவர், "அரசே, என்ன இது? அந்த மனிதன் சாதாரண குடிமகன். அவன் தன் தொப்பியைக் கழற்றி வணங்கியது முறையே. அதற்காக நீங்கள் ஏன் உங்கள் மகுடத்தை கழற்றினீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அரசன் சொன்ன விளக்கம் இது: "முட்டாள் அமைச்சரே, அந்த மனிதனை விட நான் குறைந்து போக வேண்டுமா? அவன் தன் பணிவைக் காட்ட தொப்பியைக் கழற்றி எனக்கு வணக்கம் சொன்னான். அவனுக்கு முன் நான் என் மகுடத்தைக் கழற்றவில்லையெனில், அவன் பணிவில் என்னை வென்றுவிடுவான். நான் அவன் முன் தோற்றுவிடுவேன். யாரும், எதிலும் என்னை வெல்லக்கூடாது. புரிகிறதா?"

அரசன் தந்த விளக்கத்தைக் கேட்டு, தன் தாழ்ச்சியிலும் தன் பெருமையை நிலை நாட்டிய அரசனைக் கண்டு அமைச்சர் வாயடைத்து நின்றார். போலியான பணிவுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு இது.
வாழ்வில் சாதனைகள் பல புரிந்தாலும், தன்னடக்கத்தோடு வாழ்ந்த பலர் தாழ்ச்சியைப் பற்றி கூறியுள்ளனர்.
நம்மை விட உயர்ந்தோரிடம் பணிவாயிருப்பது நம் கடமை. நமக்கு இணையாய் இருப்போரிடம் பணிவாய் இருப்பது நல்ல பழக்கம். நமக்குக் கீழே பணிபுரிவோரிடம் பணிவாய் இருப்பதே உன்னதமானது, பெருமைக்குரியது. Benjamin Franklin
தாழ்ச்சி ஏன் இவ்வளவு விரும்பத்தக்கதெனின், கடவுளிடம் மிக நெருங்குவதற்கு இதுவே வழிவகுக்கும். Monica Baldwin
இதையே நம் தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரும் வேறொரு வகையில் சொல்கிறார்: அனைத்துக்கும் மேலானவரை நெருங்க, தாழ்ச்சியில் மேலோங்க வேண்டும்.

இறுதியாக, அன்புள்ளங்களே, தன்னிறைவு, தன்னம்பிக்கை இவைகளில் வளர்ந்து, இறைவனின் அருளோடு செயல்பட்ட பவுல் அடியார் சொல்லும் வார்த்தைகள் நமது இந்த ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்யட்டும்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12 9-10

கிறிஸ்து என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

31 January, 2010

Prophets still live among us… இறை வாக்கினர் இன்றும் நம் மத்தியில்...





On March 24th, 1980, Archbishop Oscar Romero was celebrating Mass. A professional assassin entered the chapel, aimed at the Archbishop’s heart and shot him. Just one bullet... took away the life of Archbishop Romero. Why was he killed? Romero’s role as a prophet was becoming increasingly uncomfortable for the decent and rich Catholics of El Salvador. After the death of his long time friend, Jesuit Father Rutilio Grande, the Archbishop became more vocal about TRUTH. Truth that was too close to comfort.
On March 23, the previous day to his murder, Archbishop spoke at a public meeting. During that meeting, he saw the rifle wielding soldiers who had surrounded the people… just to frighten the simple folks who had gathered to hear the Archbishop. He made the following appeal to the men of the armed forces: "Brothers, you came from our own people. You are killing your own brothers. Any human order to kill must be subordinate to the law of God, which says, 'Thou shalt not kill'. No soldier is obliged to obey an order contrary to the law of God. No one has to obey an immoral law. It is high time you obeyed your consciences rather than sinful orders. The church cannot remain silent before such an abomination. ...In the name of God, in the name of this suffering people whose cry rises to heaven more loudly each day, I implore you, I beg you, I order you: stop the repression" The day following this speech, Archbishop Romero was murdered. (http://www.silk.net/RelEd/ezineromero.htm)
This was not the first time and will not be the last time when a prophet had to pay a heavy price for what he or she believed in. Prophets are too dangerous for this world. The world thinks that they are too loud in speaking the truth. It wants them to be quieter. When the prophets don’t listen to this basic ‘good manners’ lessons, they are sent away from this world. A prophet is too dangerous for this world, for his/her country and for his/her hometown. Jesus had already spoken about this.

This Sunday’s gospel is a sequel to last Sunday’s. But, what a contrast! Last week we heard that the people in the synagogue of Nazareth were in great admiration of Jesus when he began to speak to them. Today we hear of their eagerness to get rid of Jesus… and how! They wanted to take him up a hill and throw him down – a rehearsal to Jesus dying on the hillock near Jerusalem?
A complete reversal from adulation to annihilation! What triggered such a reversal? Jesus called a spade a spade! Jesus must have observed some hard truths about his own people as he was growing up there. He must have been eager to drive home some basic truth. Speaking the truth brings in enlightenment sometimes and estrangement more often. Jesus probably knew what was awaiting him. So, he began his discourse with the famous saying: “No prophet is acceptable in his hometown.”

Luke 4: 21-30
Jesus began to say to them, "Today this Scripture has been fulfilled in your hearing." And all spoke well of him and marveled at the gracious words that were coming from his mouth. And they said, "Is not this Joseph’s son?" And he said to them, "Doubtless you will quote to me this proverb, 'Physician, heal yourself.' ‘What we have heard you did at Capernaum, do here in your hometown as well’." And he said, "Truly, I say to you, no prophet is acceptable in his hometown. But in truth, I tell you, there were many widows in Israel in the days of Elijah, when the heavens were shut up three years and six months, and a great famine came over all the land, and Elijah was sent to none of them but only to Zarephath, in the land of Sidon, to a woman who was a widow. And there were many lepers in Israel in the time of the prophet Elisha, and none of them was cleansed, but only Naaman the Syrian." When they heard these things, all in the synagogue were filled with wrath. And they rose up and drove him out of the town and brought him to the brow of the hill on which their town was built, so that they could throw him down the cliff. But passing through their midst, he went away.

‘Truth hurts’ is a clichéd statement. We need to add another equally well-known statement: Truth liberates. This liberation is possible only when we ‘see’ truth. Unfortunately, when truth is too close, we fail to recognise it. Let me give you a silly example. When we take food, sometimes, small pieces of food get stuck on our nose or near our lips. We would not be able to see these pieces unless someone tells us or we go in front of a mirror. I am reminded of a funny story I heard a long time back. A grandfather was famous for his moustache since it was oversized and bushy. It was a constant source of amusement to his grandson who was way too mischievous. One day as the grand father was fast asleep on an easy chair, the grandson placed a piece of rotten cheese on his moustache. The grandfather woke up with this unpleasant smell. He tried to find the source of this filthy odour. He went to the next room. The room smelt bad. He went out and the garden too smelt bad. He felt that the whole world was stinking. It took a long time for him to find out that the world was all right and that he had some problem buried in his moustache. When truth, especially uncomfortable truth, is too close, we fail to recognise them or refuse to acknowledge them. A prophet is required to tell us that a spade is a spade. We can surely recall the story "The Emperor's New Clothes" by Hans Christian Andersen where a child cried out the naked truth about the emperor.

The prophets spoke the truth and nothing but the truth. I feel extremely uneasy to use this phrase for the prophets since they are used in our courts! As truth is silenced in our courts, many of the prophets were silenced. They used the word of God as a surgeon’s knife to bring healing to the world suffering from various maladies. The imagery of the word of God as a knife is beautifully expressed in the Letter to the Hebrews: For the word of God is living and active. Sharper than any double-edged sword, it penetrates even to dividing soul and spirit, joints and marrow; it judges the thoughts and attitudes of the heart. (Hebrews 4:12) A prophet may become unpopular in her/his hometown, country and the world… But, believe me, prophets still live among us!

சனவரி 31 - நாளும் ஒரு நல்லெண்ணம்
“இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.”
இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் பொன்மொழிகள் இவை. இந்தக் கூற்றின் ஆழத்தை மனித வரலாறு ஒவ்வொரு நூற்றாண்டிலும் உணர்ந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் இறைவாக்கினராய், கறுப்பின மக்களின் விடுதலை வீரனாய், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்ந்து, அங்கேயே கொல்லப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் கூறிய பல பொன்மொழிகளில் இரண்டு நமது இன்றைய நல்லெண்ணங்கள் ஆகட்டும்.
இருள் இருளை விரட்ட முடியாது. ஒளியே இருளை விரட்டும். அதுபோல் வெறுப்பு வெறுப்பை வெல்ல முடியாது. அன்பே வெறுப்பை வெல்லும்.
நீ குனிந்து கொடுக்காதே. நீ குனிந்தால் தான் வேறொருவர் உன் முதுகில் ஏறி சவாரி செய்ய முடியும்.
இதையே நம் பழமொழியும் சொல்கிறது: “குட்ட குட்ட குனிபவன் முட்டாள், குனிய குனிய குட்டுபவனும் முட்டாள்” என்று. நம் தேசியக் கவிஞர் தாகூர் இதை வேறொரு வகையில் அழகியதொரு செபமாய்க் கூறியுள்ளார்: “தலைக்கனம் மிகுந்த செல்வந்தர் முன் நான் மண்டியிட்டுப் பணியா சக்தியை எனக்குத் தருவாய்.”

ஞாயிறு சிந்தனை
சரியாக 30 ஆண்டுகளுக்கு முன், 1980ஆம் ஆண்டு மார்ச் 24 காலை 6 அல்லது 7 மணி அளவில் பேராயர் ஒருவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும் போது, குறிவைத்துச் சுடுவதில் சிறந்த, கூலிப்படையைச் சார்ந்த ஒருவன் கோவிலின் பின் புறம் வந்து நின்று குறிவைத்து சுட்டான். ஒரே ஒரு குண்டு. பேராயரின் இதயத்தில் பாய்ந்தது. திருப்பலியை நிறைவு செய்யாமலேயே, பீடத்தின் மீது சாய்ந்து பலியானார்.
பேராயர் கொலையுண்டதற்கு என்ன காரணம்?
அதற்கு முந்திய நாள், அதாவது மார்ச் 23ஆம் தேதி பேராயர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த மக்களை அச்சுறுத்தும் வண்ணம் அவர்களைச் சுற்றி வளைத்து ஆயுதம் தாங்கி நின்றிருந்த வீரர்களைப் பார்த்து பேராயர் சொன்னது இது: “சகோதரர்களே, இங்கு நீங்கள் சூழ்ந்திருக்கும் இந்த மக்கள் மத்தியில் தான் நீங்கள் பிறந்து வளர்ந்தீர்கள். இவர்கள் உங்கள் சகோதரர்கள். உங்கள் சகோதரர்களையே நீங்கள் கொன்று வருகிறீர்கள். இறைவன் தந்துள்ள 'கொலை செய்யாதே' என்ற அந்த கட்டளையை மீறி உங்களுக்குத் தரப்படும் நெறியற்ற ஆணைகளுக்கு நீங்கள் கீழ்படியத் தேவையில்லை. இந்த நெறியற்ற ஆணைகளுக்கு கீழ்படிவதைவிட, உங்கள் மன சாட்சிக்குக் கீழ்படியுங்கள். இந்த அராஜகத்தைப் பார்த்துக் கொண்டு திருச்சபை மௌனமாய் இராது. கடவுளின் பெயரால், தினமும் விண்ணை நோக்கிக் குரல் எழுப்பும் இந்த மக்கள் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், உங்கள் ஆயர் என்ற முறையில் ஆணை இடுகிறேன், உங்கள் அராஜகத்தை நிறுத்துங்கள்.”
ஆயர் கூறிய சொற்கள், எடுத்துரைத்த உண்மைகள் மிகவும் கசந்திருக்க வேண்டும். அதனால், அடுத்த நாள் காலை அவர் கொல்லப்பட்டார். அன்புள்ளங்களே, நான் சொன்ன இந்த சம்பவம் நடந்தது எல் சால்வதோர் நாட்டில். அங்கு, சான் சால்வதோர் நகரில் பேராயராய் இருந்த ஆஸ்கார் ரொமேரோ 1980, மார்ச் 24 உயிரிழந்தார். இவ்வாண்டு அவர் இறந்து 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவரைப் புனிதராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எல் சால்வதோர் தலத் திருச்சபை. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், ரொமேரோ இறந்த பத்து ஆண்டுகளில் அவரை இறைவனின் அடியார் என்ற நிலைக்கு உயர்த்தினார். புனிதராக அவர் இன்னும் உயர்த்தப் படவில்லை எனினும், உலக அரங்கில் பல்வேறு நிலைகளில் அவரை உண்மைக்காக, நீதிக்காக உயிர் துறந்த ஒரு தலைவராகப் போற்றுகின்றனர். பேராயர் ரொமேரோ ஒரு இறை வாக்கினர். இறைவனின் வார்த்தையை, அது கூறும் உண்மைகளைக் கலப்படமில்லாமல், எந்த வித அலங்காரமும் இல்லாமல் எடுத்துச் சொன்னவர். மனித வரலாற்றில் பல ஆயிரம் இறைவாக்கினர்கள் இதையேச் செய்தனர். உண்மையைச் சொன்னார்கள், உயிரைத் தந்தார்கள். உண்மைக்கும், உயிர்பலிக்கும் அப்படி ஒரு நெருங்கிய உறவு.
உண்மை கசக்கும், உண்மை எரிக்கும், உண்மை சுடும் என்று உண்மையின் பல விளைவுகளைச் சொல்கிறோம். உண்மை பல வேளைகளில் நம்மைச் சங்கடப்படுத்தும். உலகத்தின் கண்களைக் கட்டிவிட்டதாய் நினைத்துக் கொண்டு, நம் கண்களை நாமே கட்டிக்கொண்டு தவறுகள் செய்யும்போது, உண்மை வந்து நம் கண் கட்டை அவிழ்க்கும். கட்டவிழ்க்கப்பட்டதும் அந்த ஒளியை, உண்மையைக் காண முடியாமல் நம் கண்கள் கூசி நிற்கும். உண்மை நம்மைத் தோலுரித்துக் காட்டும். உண்மையின் பின் விளைவுகளை இப்படி நாம் பட்டியலிடும் போது, ஒரு முக்கியமான அம்சத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும். உண்மை விடுவிக்கும். உண்மை மீட்பைத் தரும். உண்மை தரும் சங்கடத்தை சமாளிக்க முடியாமல், பல நேரங்களில் உண்மையை மறைத்துவிட, அழித்து விட முயற்சிகள் நடக்கின்றன. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தான் உண்மை பேசும் இறைவாக்கினர்களைப் பல வகைகளில் நிறுத்த முயன்று, எல்லாம் தோல்வி கண்ட பின் இறுதியில் அந்த இறைவாக்கினரின் வாழ்வையே நிறுத்த வேண்டியதாகிறது.
இறைவாக்கினர்கள் சராசரி மனிதர்கள் அல்ல. கூட்டத்தோடு சேர்ந்து கோஷம் போடுபவர்கள் அல்ல. தனித்து நின்று, இறைவனின் வார்த்தையைத் தைரியமாக முழங்குபவர்கள். ஆஸ்கார் ரொமேரோ 80களில் இறைவார்த்தையை முழங்கினார். குண்டடிபட்டு இறந்தார். மார்ட்டின் லூத்தர் கிங் 60களில் அமெரிக்காவில் இறைவாக்கை எடுத்துரைத்தார். குண்டடிபட்டு இறந்தார். மார்ட்டின் லூத்தர் கிங் மனத்தைக் கவர்ந்த நமது காந்தியும் சத்தியத்தை வாழ்வில் மேற்கொண்டார். ஜனவரி 30 காந்தி குண்டடிபட்டு இறந்தார். அன்பர்களே, இந்த பட்டியல் மிக நீளமானது. நேரம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.
இறைவாக்கினர் பேசுவது பொதுவாக எல்லாரையும் சங்கடப்படுத்தும் என்பதால், அவருக்கு வரவேற்பு இருக்காது. இந்த எண்ணத்தை இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகச் சொல்கிறார். சென்ற வாரம் ஞாயிறு சிந்தனையில் நாம் எடுத்துக்கொண்ட நற்செய்தி பகுதியின் தொடர்ச்சியே இந்த வாரம் நம் சிந்தனைக்குத் தரப்பட்டுள்ளது. நற்செய்தியைக் கேட்போம்.

லூக்கா நற்செய்தி 4: 21-30
இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார். தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

ஏசாயாவின் இறைவாக்கு இன்று, இப்போது, இங்கு நிறைவேறிற்று என்று இயேசு ஆரம்பித்தார். ஆரம்பம் ஆழகாகத்தான் இருந்தது. ஆனால், தொடர்ந்து தான் வளர்ந்த ஊரான நாசரேத்துக்கு இயேசு ஒரு சில உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தார். வளர்ந்த ஊர் என்பதால், சிறு வயதிலிருந்து இயேசு அங்கு நிகழ்ந்த பல காரியங்களைப் பார்த்து, உணர்ந்து வந்தவர். அவர்கள் எல்லாருக்குமே தெரிந்த பல நெருக்கமான, அதேநேரம் சஙகடமான, உண்மைகளைச் சொன்னார் இயேசு.
பல நேரங்களில் நமக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் உண்மைகளைப் பார்க்கத் தவறுகிறோம். ஒரு சின்ன உதாரணம். சின்னத்தனமான உதாரணமாகக்கூடத் தெரியும். ஆனால், இதுவும் உண்மை. நாம் சாப்பிடும் போது, சில சமயங்களில் மூக்கின் மீது, அல்லது முகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சாப்பாட்டுத் துகள் ஒட்டிக் கொண்டால், அதை நாம் உணர்வதில்லை. வேறு யாராவது அதை நமக்குச் சொன்னால் உண்டு, அல்லது ஒரு கண்ணாடியின் உதவி நமக்குத் தேவை. உண்மை வந்து நம் முகத்தில் ஒட்டிக் கொண்டிருந்தாலும் நம்மால் பார்க்க முடியாது.
இன்னுமொரு சின்னக் கதை. சின்னத்தனமான கதை. வயதான ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு மீசை அடர்த்தியாக இருந்தது. அந்த மீசை பல கேலிகளுக்கு ஆளான மீசை. அவரது பேரன் பெரிய குறும்புக்காரன். தூங்கிக்கொண்டிருந்த அவர் மீசைக்குள் ஒரு அழுகிய பழத்துண்டை வைத்து விடுகிறான். தூக்கம் கலைந்து எழுந்த தாத்தா முகம் சுளிக்கிறார். ஒரே நாற்றம். வயதான தன் மனைவியைக் கூப்பிட்டு என் இந்த நாற்றம் என்று கேட்கிறார். பாட்டி ‘ஒன்றும் நாறவில்லை’ என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறார். தாத்தா அடுத்த அறைக்குச் செல்கிறார். அங்கும் அதே நாற்றம். வீட்டுக்கு வெளியே செல்கிறார். அங்கும் அதே நாற்றம். உலகமே நாற்றமடிப்பதைப் போல் உணர்கிறார். உலகம் நாறவில்லை. அவரது மீசைக்குள் ஒளிந்திருந்த அழுகிய பழத்துண்டுதான் இந்த நாற்றத்தின் காரணம் என்று அவர் கண்டுபிடிக்க பல மணி நேரங்களாயின.
சங்கடமான உண்மைகள் மிக அருகில் இருந்தாலும் அவைகளை நாம் உணர முடியாமல் போகலாம். யாராவது அந்த உண்மையை எடுத்துச் சொல்லும்போது, நாம் திருந்திக் கொள்ள வாய்ப்புண்டு, திருப்பி அடிக்கவும் வாய்ப்புண்டு. இயேசு தன் சொந்த ஊரில் உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்ததும், அவர்கள் மனதில் இயேசுவின் மீது இதுவரை இருந்த ஈர்ப்பு, மரியாதை, மதிப்பு ஆகியவைக் கொஞ்சம் கொஞ்சமாய் விடை பெற ஆரம்பித்தன.
‘இவர் யோசேப்பின் மகன்’ என்று இயேசுவின் பூர்வீகத்தை அவர்கள் அலசிய போது, அதை நினைத்து பாராட்டியதாக நற்செய்தி சொல்கிறது. ஆனால், பூர்வீகங்கள் அலசப்படும் போது பல நேரங்களில் "ஓ, இவன் தானே" என்ற ஏளனம் அங்கு வந்து சேரும். அதுவும் சாதிய எண்ணங்களில் ஊறிப்போயிருக்கும் இந்தியாவில், தமிழகத்தில் பூர்வீகத்தைக் கண்டுபிடிக்க நாம் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்காக அல்ல. மாறாக, மற்ற தேவையற்ற குப்பைகளைக் கிளற என்பது நமக்குத் தெரிந்த உண்மை. சுடுகின்ற உண்மைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது, சங்கடமாய் இருந்தாலும், இந்த உண்மையையும் சொல்லியே ஆக வேண்டும்.

உண்மைகளை மருந்துகளோடு ஒப்பிட்டுப் பார்க்க விழைகிறேன். ஏனோ தெரியவில்லை... மருத்துவ உலகில் நலம் விளைவிக்கும் பல மருந்துகள் கசப்பாகவே உள்ளன. கசப்பான மருந்துகள் நாவுக்கு, நமது ருசிக்குப் பகைவர்கள். ஆனால், உடலுக்கு நண்பர்கள். கசப்பு மருந்துகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது, அவைகளைத் தேனில் குழைத்துக் கொடுப்போம். இதே கசப்பு மருந்தை நாம் ‘கேப்ஸ்யூலி’ல் அடைத்து முழுங்குவோம்.
உண்மை என்ற கசப்பையும், தேனில் குழைத்து, ‘கேப்ஸ்யூலி’ல் அடைத்துக் கொடுத்த இறைவாக்கினர்கள் உண்டு. சொல்ல வந்த உண்மையை நேரில் சொல்லாமல், கதை வழியே சொன்ன இறைவாக்கினர்கள் உண்டு. 2 சாமுவேல் நூலில் இப்படி ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம். (2 சாமு. 12: 1-14) தாவீது அடுத்தவரின் மனைவியை அபகரித்துக் கொண்டதை அவரது நண்பனும், இறைவாக்கினருமான நாத்தான் கதை மூலம் சொல்ல, கதை கேட்ட தாவீது கதையில் சொல்லப்பட்ட ஆள் மீது கோபம் கொண்டார். நாத்தான் அந்த ஆள் நீதான் என்று சொன்னார். நல்லவேளை, உண்மை உள்ளத்தை ஊடுருவிய போது, தாவீது மனம் திருந்துகிறார்.
ஆனால், உண்மைகள் சொல்லப்பட்ட பல நேரங்களில் இவ்வாறு நன்மைகள் நடப்பதில்லை. பெரும்பாலும் உண்மைகள் கோபத்தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளன. விவிலியத்தில் பல இடங்களில் உண்மைகள் சொல்லப்பட்ட போது, அந்த உண்மைகளை ஊமையாக்க, உண்மை சொன்னவர்களை ஊமையாக்க, அவர்கள் உயிரைப் பறித்த சம்பவங்கள் பல உண்டு.
இன்று நற்செய்தியிலும் இயேசுவுக்கு அந்த நிலைதான். இயேசு சொன்ன உண்மைகளைக் கேட்க முடியாமல், அவர்கள் கோபம் கொலை வெறியாகிறது. இந்த முறை இயேசு தப்பித்துக் கொள்கிறார். அவர் நம்மைப் போல் ஒரு சராசரி மனிதராய் இருந்திருந்தால், "இந்த ஒரு அனுபவம் எனக்குப் போதும். நான் ஏன் இந்த ஊருக்கு உண்மைகளைச் சொல்லி ஏச்சும், பேச்சும் பெற வேண்டும்? விட்டிருந்தால், இவர்கள் நம்மை இன்று கொன்றிருப்பார்கள். தேவையில்லை இவர்கள் சகவாசம்." என்று இயேசு ஒதுங்கி இருக்கலாம். ஆனால், அன்று இறைவாக்குரைக்கத் தொடங்கிய அவரது பணி, கல்வாரி பலியில் தான் முடிந்தது.
நம் இறுதி சிந்தனை. இறைவாக்கினரின் வழியே கடவுள் பயன்படுத்தும் ஆயுதம் இறைவாக்கு. கொஞ்சமும் பூசி மெழுகாமல், உண்மையைக் கூறும் இறைவாக்கு அறுவைச் சிகிச்சையில் உயிரை எடுப்பதற்கு பதில், உயிரைக் கொடுப்பதற்கு பயன் படுத்தப்படும் கத்தியைப் போன்றது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் இறைவார்த்தையை ஒரு வாளுக்கு ஒப்புமைப்படுத்தி, அழகிய வரிகள் சொல்லப்பட்டுள்ளன. உடலினுள் சென்று உதவிகள் செய்யும் கத்தியைப் போல், மனதினுள் சென்று இறைவாக்கு நமக்கு நலம் தரும்படி, இந்த இறைவாக்குடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 4: 12

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.

24 January, 2010

If TODAY you hear God’s voice… இன்றே, இப்போதே...


Luke 4: 16-21 is one of my favourite passages in the Bible. This is popularly known as the Manifesto of Jesus. Unfortunately, the word ‘manifesto’ has many shady connotations now since the word has been misused by political parties and candidates. It is quite interesting to see that Jesus did not create this manifesto. He simply borrowed it from Isaiah. He made it his own by the master stroke he gave at the end. The punch line. Here is the gospel passage from Luke.

Luke 4: 16-21
And he came to Nazareth, where he had been brought up. And as was his custom, he went to the synagogue on the Sabbath day, and he stood up to read. And the scroll of the prophet Isaiah was given to him. He unrolled the scroll and found the place where it was written,
"The Spirit of the Lord is upon me,
because he has anointed me
to proclaim good news to the poor.
He has sent me to proclaim liberty to the captives
and recovering of sight to the blind,
to set at liberty those who are oppressed,
to proclaim the year of the Lord’s favor."
And he rolled up the scroll and gave it back to the attendant and sat down. And the eyes of all in the synagogue were fixed on him. And he began to say to them, "Today this Scripture has been fulfilled in your hearing."


The last line in this gospel was Jesus’ master stroke. He gave this punch line when all eyes were turned on him. Hence, his words must have gone home. What was so special about these words? The word ‘Today’ was special. Let me explain.
The Israelites living at the time of Jesus were trained to look to the future. Many of their teachers and prophets had insisted on the time to come. That was a safer bet than telling them that salvation had already come, since things looked as miserable as before. Jesus changed that perspective. He said TODAY fulfilment had come.
We have surely heard of the famous phrase: Grace of the Present Moment. Jesus lived the present, the here-and-now moment all his life. He tried his best to instill this thought into his people through his words and deeds. In his miracle at Cana (labelled as his first sign), “he told the workers, ‘Now draw some out and take it to the master of the banquet.’” (John 2:8). When Jesus told the workers ‘now’, it was not clear whether water had turned into wine. Still, the workers did it and it was already wine!
When he asked the ten leprosy patients to go and show themselves to the priests, they were not cured yet. As they were going, they were healed. (Luke 17). Similarly, he tells the paralytic to carry his bed and walk immediately. (Matthew 9). The miracle of feeding the people stranded in the desert once again illustrates that Jesus believed in the here and now. When the disciples asked Jesus to send the people away, he asked them how much food they had there and then. (Mark 6:38) He began the miracle with what they had not with what they would have or could have had.
In the famous prayer taught by Jesus, he asks us to pray: ‘Give us TODAY our daily bread.’ When he was hanging on the cross, one of them crucified along with Jesus made an impossible request, namely, to give him a place in the Kingdom. How could someone think of a Kingdom while hanging on a cross? Anyone in that position would have given up on the Kingdom or, at least, postponed such thoughts. Not Jesus. Although he was fighting for every breath on the cross, Jesus still spoke with assurance, “I tell you the truth, TODAY you will be with me in paradise.” (Luke 23:43) What better proof is needed to say that Jesus was a PRESENT, HERE-AND-NOW person. The grace of the present moment was overflowing in him.
Living in the present moment is a real challenge. A quick look at a typical day in our life would prove this point. The moment we wake up, many thoughts crowd our mind… most of them either memories of what happened the previous day, especially the sad ones, or anxieties of the day ahead of us. I am not sure how many of us notice the myriad little miracles that happen around us day after day… like the water that refreshes our mouth and face every morning, the exercises that awaken the body fully. If we are in the habit of doing yoga, or meditation in the morning, I don’t know how many of us are aware of the cool air that enters our nostrils when we breathe in and the hot air that is breathed out.
Likewise, one can surely be TOTALLY present at breakfast, at the little journey we take to the school or office, at the work spot, at the party with our friends… myriads of possibilities! If only we are totally involved with the present moment, we can surely avoid many, many mistakes and subsequent regrets. Living in regrets is one sure way to kill TODAY.
Jesus told the people in Nazareth that ‘today’s could bring them salvation. Jesus is still giving us the same good news.
Today, if you hear his voice, do not harden your hearts… (Psalm 95: 7-8)

Here is a song that talks of ‘today’ based on Psalm 95 and Hebrews.
http://www.apologetix.com/music/music.php

Yes Today
Parody of "Yesterday" by The Beatles
(Psalm 95:7-8; Hebrews 3:7-8, 3:15, 4:7)

If today you should hear His voice don't turn away
Now's the time that you should kneel and pray
And finally say yes today
Suddenly you might have to spend eternity
In a place you never want to be
Say yes today and just believe
Christ – He died for all -- there's no soul He wouldn't save
There's just one thing you have to do – say yes today
"Yes" today seems like such an easy thing to say
All you need is faith, so why delay?
Say, "I believe," and "yes" today
Why you might say no, I don't know ... I couldn't say
I'd say something's wrong if you don't say "Yes" today
Yes, today might just be your final chance to pray
All you need is faith, so why delay?
Say, "I believe," and "yes" today
Mmmmmmmmm


©2005 Parodudes Music, Inc.

சனவரி 24 - நாளும் ஒரு நல்லெண்ணம்
வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை என்பது நாம் அடிக்கடி கேட்கும் ஒரு அழகிய வாழ்த்து. இப்படி ஒருமுறை வாழ்வதை கடந்த அல்லது எதிர் காலங்களில் வாழாமல், நிகழ் காலத்தில் வாழ்ந்தால், ஒரு தலைமுறை அல்ல... பல தலைமுறைகள் நம்மை வாழ்த்தும்.
இன்று வாழ்வதை, இப்போது வாழ்வதைப் பற்றி பலர் பல வகையில் கூறியுள்ளனர். அவைகளில் ஒரு சில இதோ:
தொலைபேசியைக் கண்டுபிடித்த Alexander Graham Bell சொன்னது இது: "ஒரு கதவு மூடப்படும்போது, மற்றொரு கதவு திறக்கிறது. மூடிய கதவையே நாம் ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதால், திறந்துள்ள கதவைப் பார்க்கத் தவறுகிறோம்” என்று.
"கடந்த காலத்தை மார்போடு அணைத்துக்கொள்ளும் போது, நிகழ்காலத்தை அணைக்க கைகளும், மார்பில் இடமும் இல்லாமல் போகும்." இதைச்சொன்னவர் Jan Glidewell.
"எந்த ஒரு செல்வந்தனாலும், கடந்த காலத்தை விலை கொடுத்து வாங்க முடியாது." இப்படி சொல்லியிருக்கிறார் Oscar Wilde.
ஒன்றே செய்யினும், நன்றே செய்கவென்றும், நன்றே செய்யினும் இன்றே செய்கவென்றும் நம் தமிழ் மரபில் சொல்லிவந்திருக்கிறோம். செயல் படுத்துவோம் இன்றே. இப்போதே.

ஞாயிறு சிந்தனை
இந்த ஞாயிறு சிந்தனை நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கும் அன்புள்ளங்களே, உங்கள் அனைவரையும் ஒரு கற்பனை வகுப்பறைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நமக்கு வகுப்பு நடத்தப்போகும் ஆசிரியர் யார் தெரியுமா? சரியாகச் சொன்னீர்கள்.. இயேசு.
நாம் அனைவரும் ஏகப்பட்ட மகிழ்ச்சியில், படபடப்பில், எதிர்பார்ப்பில்... கொஞ்சம் பக்தியிலும் கூட அங்கே அமர்ந்திருக்கிறோம். இயேசு வகுப்பறைக்குள் வருகிறார். ஒரே ஆரவாரம், கைதட்டல், வரவேற்பு. இந்த ஆரவாரங்கள் எல்லாம் ஓய்ந்தபின், இயேசு நம்மை பார்த்து எடுத்த எடுப்பில் ஒரு கேள்வி கேட்கிறார்: “இங்கு அமர்ந்திருக்கும் உங்களில் எத்தனை பேர் இன்றைக்கு வாழ்கிறீர்கள்?” இது தான் அவரது கேள்வி. கேள்வியின் அர்த்தம் சரிவரத் தெரியவில்லை. நமது புருவங்கள் சுருங்குகின்றன. ஆனாலும், அனைவரும் கைகளை உயர்த்துகிறோம். இயேசு ஒரு புன்முறுவலுடன், "என் கேள்வியை நன்கு புரிந்து கொண்டு, பிறகு கைகளைத் தூக்குங்கள். மீண்டும் கேட்கிறேன். உங்களில் எத்தனை பேர் உண்மையில் இன்றைக்கு வாழ்கிறீர்கள்?" இயேசு 'இன்றைக்கு' என்ற வார்த்தையை அழுத்திச் சொல்கிறார். நாம் சிந்திக்கத் துவங்குகிறோம். இயேசு தொடர்ந்து பொறுமையாய் விளக்குகிறார். "இன்றைக்கு வாழ்வதென்பது, நேற்றைய நினைவுகளில் சிக்கிக்கொண்டோ, நாளையக் கனவுகளைத் தாங்கிக்கொண்டோ வாழ்வதல்ல. இன்றைய நாளின், நிகழ் காலத்தின் ஒவ்வொரு மணித்துளியிலும், நொடியிலும் வாழ்வது. உங்களில் எத்தனை பேர் இந்த வகுப்பில், இந்த நேரத்தில் முழுமையாக இங்கு இருக்கிறீர்கள், முழுமையாக வாழ்கிறீர்கள்?.." என்று இயேசு விளக்கம் சொல்லி, கேள்வியை மீண்டும் கேட்கும் போது உயர்த்தப்பட்ட நமது கைகள் ஒவ்வொன்றாய் கீழே இறங்குகின்றன.
அன்புள்ளங்களே, இன்றைய நாளில், இந்தப் பொழுதில் வாழ்வதென்பது அவ்வளவு எளிதல்ல.
நம் கற்பனை வகுப்பில் சொல்லித்தந்த இந்த பாடத்தை அன்று நாசரேத்தின் தொழுகைக் கூடத்திலும் தன் மக்களுக்குச் சொல்லித்தந்தார் இயேசு. அந்த நிகழ்வைக் கூறும் இன்றைய நற்செய்திக்குச் செவி மடுப்போம்.

லூக்கா 4: 16-21
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.” பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதற்கு, நாளை நல்ல காலம் பிறக்கும் என்று கனவு காண்பதற்கு அதிகம் பழகிப் போயிருந்தனர். நாளை நமக்கு விடிவு வரும் என்று அடிக்கடி பேசிவந்த அவர்களிடம், இயேசு அந்தத் தொழுகைக் கூடத்தில் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை: "நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று." இன்று, இப்போது, இங்கே... நிறைவு, விடிவு, மீட்பு வந்து விட்டது என்று இயேசு கூறினார். தான் கூறியதை நம்பியவர். வாழ்ந்தும் காட்டியவர்.
இயேசு உலகில் வாழ்ந்த போது ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு பொழுதையும் முழுமையாக வாழ்ந்தவர். நேற்று, நாளை என்பதெல்லாம் அவர் மனதை, வாழ்வை ஆக்ரமிக்கவில்லை. ஆக்ரமிக்க விடவில்லை அவர். அவர் ஆற்றிய புதுமைகள், சொன்ன சொற்கள், இவைகளைச் சிந்தித்தால், அவர் நிகழ் காலத்தில், நிகழ் நொடியில் வாழ்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு சில.
நாம் கடந்த விவிலியத் தேடல்களிலும், ஞாயிறு சிந்தனையிலும் பகிர்ந்து கொண்ட அந்தக் கானாவூர் திருமணப் புதுமை இயேசுவின் முதல் அருங்குறி என்று சொல்லப்படுகிறது. இந்தப் புதுமையில், தண்ணீர் திராட்சை இரசமாய் மாறியதைக் குறிக்க அவர் சொன்ன வார்த்தைகள்: (யோவான் 2:8) "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்." அவர் செய்த முதல் புதுமையிலேயே இப்போது என்ற எண்ணத்தை விதைத்தார்.
லூக்கா நற்செய்தியில் பத்துத் தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கும் போது, "நீங்கள் நாளைச் சென்று, குருக்களிடம் காட்டுங்கள்." என்று சொல்லாமல், (லூக்கா 17:14) நீங்கள் போய் உங்களை குருக்களிடம் காட்டுங்கள் என்றார். இயேசு இப்படி சொன்னபோது, தொழுநோய் அவர்களை விட்டு நீங்கியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் அப்போதே நம்பிக்கையுடன் எழுந்து போனார்கள். போகும் வழியில் குணமடைந்தார்கள். இதே போல், (மத்தேயு 9:6) முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு உடனே நடக்கச் சொன்னார். பாலை நிலத்தில் ஐந்தாயிரம் பேருக்கு உணவளித்த புதுமையில் (மாற்கு 6:38) "உங்களிடம் இங்கே எவ்வளவு உணவிருக்கிறது?" என்ற கேள்வியுடன் அந்தப் புதுமையை ஆரம்பித்தார்.
இயேசு சொல்லித்தந்த அந்த அற்புதமான செபத்திலும், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு நாளை தாரும்." என்றா சொல்லித்தந்தார்? இல்லையே. மாறாக, இன்று தாரும் என்றார். இன்றே, இப்போதே எங்களுக்கு உணவைத் தாரும், தந்தையே என்று வேண்ட சொல்லித்தந்தார்.
இன்று இப்போது என்று வாழ்ந்து காட்டிய இயேசு, இறுதியில் கல்வாரியில் சிலுவையில் தொங்கியபோதும் அதே எண்ணங்களை வெளிப்படுத்தினார். (லூக்கா 23:43) "இன்றே என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்று இயேசு கூறியது அவரது இறுதி வாக்கியங்களில் ஒன்று.
இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டவர் விண்ணரசில் நுழைய அனுமதி கேட்டபோது, அந்தக் கொடிய துன்பத்தின் உச்சியில், இயேசு ஒரு விரக்தியுடன் "என்ன பெரிய அரசு... அந்த அரசுக்கு வந்த கதியைத்தான் பார்க்கிறீரே. ஒரு வேளை நாளை அந்த அரசு வரலாம். அப்போது நான் அந்த அரசில் ஒரு வேளை நுழைந்தால், நீரும் நாளை என்னோடு வரலாம்." என்று நம்பிக்கை இழந்து சொல்லியிருக்கலாம். ஆனால், அதற்கு பதில், இயேசு கூறிய நம்பிக்கையூட்டும் சொற்கள் இவை: "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்." இயேசு இன்றையப் பொழுதில், இப்போதைய நொடியில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்பதற்கு இதைவிட சக்திவாய்ந்த சாட்சி இருக்க முடியாது. ‘நிகழ் பொழுதின் அருள்’ என்று பொருள்படும் The Grace of the Present Moment என்ற ஆங்கிலச் சொற்றொடரின் முழு விளக்கமாக இயேசு வாழ்ந்தார்.
நிகழ் பொழுதின் அருளில் நாம் வாழ்கிறோமா என்பதைச் சிந்திப்பது நல்லது. நமது தினசரி நிகழ்வுகளைக் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.
ஒரு சராசரி காலை நேரத்தைக் கற்பனை செய்து பார்ப்போம். காலை எழுந்ததும், சுய நினைவு தெளிந்ததும், நேற்றைய நிகழ்வுகள், முக்கியமாக கசப்பான நிகழ்வுகள் நமது நினைவை நிறைக்கும். அல்லது அன்று நாம் எதிர்கொள்ள விருக்கும் வேலைகளைப் பற்றிய கவலைகள் உள்ளத்தை நிறைக்கும்.
நம்மில் எத்தனை பேர் பல் துலக்கும் போது வாயில் நடக்கும் விந்தைகளைச் சிந்திக்கிறோம்? அல்லது முகத்தில் நாம் தெளிக்கும் அந்த நீரினால் அங்குள்ள செல்களெல்லாம் கண்விழித்து, குளித்து, சிலிர்த்து முகமெல்லாம் இரத்த ஓட்டம் பரவுவதை உணர்கிறோம்?
அதன் பின் ஒரு வேளை நாம் ஒரு சில உடல் பயிற்சிகள் செய்தால், உடலின் பல பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் பெறுவதை எத்தனை பேர் அனுபவித்து, ரசித்திருக்கிறோம்? காலை வேளையில் நம்மில் சிலர் தியானத்திலோ, யோகப் பயிற்சிகளிலோ ஈடுபட்டால், நாம் உள்ளிழுக்கும் சுவாசம் குளிர்ச்சியாகவும், வெளியில் விடும் சுவாசம் சூடாகவும் இருப்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?
அதன் பின் காபி, காலை உணவு, பள்ளிக்கு அல்லது அலுவலகத்திற்கு மேற் கொள்ளும் பயணம் என்று நாம் அனுபவித்து ரசிக்கக் கூடிய ஆயிரமாயிரம் சின்னச் சின்னச் செயல்கள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. நம்மில் எத்தனை பேர் இந்தச் செயல்களையெல்லாம் முழு ஈடுபாட்டுடன் ரசித்துச் செய்கிறோம்?
முக்கியமாக சாப்பிடும் போது, வேறு சிந்தனைகளில் மூழ்கிப் போய் என்ன சாப்பிடுகிறோம் என்பதையும் மறந்து ஏதோ ஒரு கடமையைச் செய்வதைப் போல் சாப்பிடுவது மருத்துவ கண்ணோட்டத்தின் படி நம் உடலுக்கு நல்லதல்ல என்பதை நாம் அறிந்தவர்கள் தானே. இருந்தாலும், சாப்பிடும் நேரங்களில் பல சிந்தனைகளுடன் சாப்பிட்டு, அதன் பின் விளைவாக, மருத்துவரை எத்தனை முறை நாம் நாடியிருக்கிறோம்? நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், வாழும் ஒவ்வொரு நொடியையும் ஈடுபாட்டுடன் வாழ்ந்தால், மருந்துக்கும் மருத்துவர் பக்கம் போகத் தேவையில்லையே. நிகழ் பொழுதின் அருளில் வாழ்வது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் அதிக பயன் தரும்.
இயேசு நாசரேத்தின் தொழுகைக் கூடத்தில் வாசித்த ஏசாயாவின் சொற்கள் பல சமுதாயச் சிந்தனைகளை எழுப்பக் கூடியது. அவைகளைப் பற்றி சிந்திக்காமல், இன்று இப்போது என்று நான் பேசியது இன்றைய நற்செய்திக்கு சரியான விளக்கம் இல்லை என்று உங்களில் ஒரு சிலர் நினைக்கலாம்.
இயேசுவின் சமுதாயச் சிந்தனைகள் நாம் அடிக்கடி கேட்டும் உணர்ந்தும் உள்ள உண்மைகள். சமுதாய நீதி பற்றிய கனவுகள் என்றோ எப்போதோ நனவாகும் என்று எண்ணிக் கொண்டிருந்த, வாழ்ந்து கொண்டிருந்த யூத மக்களுக்கு இயேசு கொடுத்த இன்றைய, இப்போதைய பாடங்கள் நம்பிக்கையை வளர்த்த முதல் பாடங்கள். சமுதாய மாற்றங்கள் இனிவரும் என்றல்ல, இப்போதே வந்து விட்டது என்பதை அவர்கள் நம்ப வைத்தது இயேசுவின் முதல் வெற்றி என நான் நினைக்கிறேன். இன்று, இப்போது என்று வாழ்வில் நாம் முழுமையாக ஈடுபட்டால், அப்படி நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் ஈடுபட்டால், அந்த ஈடுபாடு நாம், நமது என்ற குறுகிய வட்டத்தை விட்டு நம்மை வெளியேற வைக்கும். சமுதாய ஈடுபாட்டையும் வளர்க்கும். ஈடுபாட்டுடன் ஒவ்வொருவரும் வாழ்ந்தால், சமுதாயத்தில் குறைகள் அதிகம் தோன்றாது. அப்படியே தோன்றும் குறைகளைக் களைய அன்றே, அப்போதே செயல் படுவோம். தீர்வுகளை அன்றே காண்போம். குறையற்ற சமுதாயம் உறுதியாக உருவாகும். மன்னிக்கவும். ‘உருவாகும்’ என்பது எதிர்காலம். சீரியதொரு சமுதாயம் உருவாகிறது. உருவாகிவிட்டது... நல்லவைகள் நடக்கின்றன என்று நம்புகின்றோம்.

20 January, 2010

FILL UP TO THE BRIM… விளிம்பு வரை நிரப்புவோம்...


John 2: 5-12
His mother said to the servants, "Do whatever he tells you."
Now there were six stone water jars there for the Jewish rites of purification, each holding twenty or thirty gallons. Jesus said to the servants, "Fill the jars with water." And they filled them up to the brim. And he said to them, "Now draw some out and take it to the master of the feast." So they took it. When the master of the feast tasted the water now become wine, and did not know where it came from (though the servants who had drawn the water knew), the master of the feast called the bridegroom and said to him, "Everyone serves the good wine first, and when people have drunk freely, then the poor wine. But you have kept the good wine until now." This, the first of his signs, Jesus did at Cana in Galilee, and manifested his glory. And his disciples believed in him.


Some of the Biblical passages are like diamonds. They exhibit different colours and shades. For instance, the famous Psalm 23 – The Lord is my shepherd, The Magnificat, The Sermon on the Mount… The wedding at Cana is also one such passage that lends itself to many deep reflections. We have already gone through this miracle in two parts. Here is the Third Part.
We pick up where we left Part II with the beautiful words of Mary: “Do whatever he tells you.” The workers were awaiting some directions from Jesus. They had plenty to do. They were quite tense about the shortage of wine. Spare a thought for any worker in a wedding celebration. Every Tom, Dick, Harry, Paul, Peter… almost every one would like to order them about. They wouldn’t know whom to oblige and whom to ignore. Although they saw nothing special in this stranger, still they awaited his directions. Though they were’nt impressed with this gentleman, they knew that the lady who directed them to Jesus was very kind and gentle working with them for the past two days. She had solved quite many problems they faced. This young man happened to be her son. So… they awaited his directions.
Jesus looked around. He saw the stone jars nearby. He told the workers to fill those jars with water. I can well Imagine the shock registered on the faces of those workers. Fill up those jars with water? What type of a direction was that? To help us understand better what Jesus asked them to do, we can imagine a present day wedding. Imagine a wedding that takes place in a remote village or a small town where houses or reception halls do not have running water. Naturally, large vessels or plastic buckets filled with water would be placed at the entrance to the dining hall for people to wash their hands. In some places they would have cement tubs filled with water. It is unthinkable that any one would drink water from these vessels. Jesus wanted the workers to fill up those vessels.
Was this a joke? There was shortage of wine and this man told them to fill up jars meant for purification. It was true that those jars were empty since all the guests had used the water before entering the banquet hall. True, it was the duty of the workers to fill them up again. But, this was not the time. Should they fill up those jars? Such thoughts were filling up the minds of the workers. Still, they began doing what Jesus told them to do. Something in Jesus’ voice made them follow his directions. They could see that he was quite serious about what he was saying.
Once the jars were filled up, Jesus said to them, "Now draw some out and take it to the master of the feast." So they took it. When the master of the feast tasted the water now become wine… Wait! When did the water become wine? Usually, when Jesus performed a miracle either a word was spoken or a gesture was done. In this event, no such mention is made. There is nothing like “Jesus stretched out his hand and blessed the water…” etc. John mentions nothing of this. Then, how come the water turned into wine?
Here is the master stroke from John. Jesus makes two statements: "Fill the jars with water." and "Now draw some out and take it to the master of the feast." Between these two statements, John’s master stroke comes in the form of a sentence. They (the workers) filled them up to the brim. Dear friends, this act of the workers paved the way for the miracle. This act was part of the miracle.
If the workers had worked under their negative feelings of shock, disbelief, and irritation, they would have done the job half heartedly. Only half jars would have been filled. But, John says that they FILLED THE JARS UP TO THE BRIM. This means that some change had occurred in their hearts. This change of heart paved the way for the change of water into wine. I am sure, dear friends, that most of us have experienced this in our lives. Whenever we had done something with our whole heart, not only were our hearts filled with peace and joy to the brim, but quite a few other changes did happen. Isn’t it true?

What followed this change of water into wine also is worth reflecting on. After tasting the superior wine, the master of the banquet was curious to know what had happened. He checked with the bridegroom and he too was ignorant. Once again, as an aside John mentions that the servants knew. I would like to see this as John’s way of saying that those who were important in the wedding feast, including the bridegroom, were not part of the miracle. Only the workers were.
In a wedding feast we use many articles. Not all of them gain importance. Just check any wedding album. You can see what I am trying to say. In a wedding album the special chairs and the car used by the couple would figure in most of the pictures. What about the wash tubs, the vessels used for washing our hands etc.? Do they figure in our albums? Hardly. Unfortunately, the same is true about the workers. Most of them do appear in the albums, mainly as background doing some odd jobs. Although they slog the whole day, they are hardly given their due recognition.
Changing water into wine was surely a miracle. Changing the order of importance was another miracle that took place in Cana. The workers were an integral part of the miracle. The jars used for washing purposes had become the vessels of God’s grace, abundance and miracle. Fringe persons, fringe things had taken the centre-stage while the central figures had vanished from limelight. The Kingdom of God, as some authors would say, is all about reversals. At Cana in Galilee the Kingdom was inaugurated.Good to think of the core and fringes of our lives at the beginning of another new year. If need be, we should change – change the core into the fringe and vice versa.


ஒரு சில விவிலியப் பகுதிகள் அள்ள, அள்ளக் குறையாத அமுதசுரபியைப் போன்றவை. வைரங்களைப் போல பல்வேறு கோணங்களில் பல்வேறு ஒளியில் பல்வேறு அழகுடன் இப்பகுதிகள் மின்னும். கானாவூர் திருமணப் பகுதியும் இப்படி ஒரு வைரம். இந்த வைரத்தின் இரு பகுதிகளை இதுவரைச் சிந்தித்தோம். இன்று கானாவூர் திருமணம் - பாகம் மூன்று.
திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்று ஆரம்பித்து, மரியன்னையும் இயேசுவும் கூறியவைகளை சென்ற ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்துகொண்டோம். இன்று இந்தப் புதுமையின் மையப்பகுதியான தண்ணீர் திராட்சை இரசமாய் மாறிய நிகழ்வைச் சிந்திப்போம். இந்தப் புதுமை எப்போது, எப்படி நிகழ்ந்தது?
மரியா பணியாளர்களிடம் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். பணியாளர்களுக்குக் குழப்பம்.
மரியன்னை 'அவர்' என்று குறிப்பிட்டுச் சொன்ன அந்தப் புது மனிதரை அவர்கள் இதுவரைப் பார்த்ததில்லை. அந்தப் புதிய இளைஞனைப் பார்த்தால், இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பவர் போல் அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்தாலும், கடந்து மூன்று அல்லது நான்கு நாட்களாய் தங்களுடன் சேர்ந்து அதிகம் வேலைகள் செய்தவர் மரியன்னை என்பதால், அவர் மட்டில் அதிக மதிப்பு அவர்களுக்கு இருந்தது. அதுவும் அந்த அன்னை இதுவரை பல தேவைகளைப் பூர்த்தி செய்து, பல பிரச்சனைகளைத் தீர்த்தத்தைக் கண்கூடாகப் பார்த்தவர்கள் அவர்கள். எனவே, அந்த அன்னை சொன்னால், அதில் ஏதாவதொரு அர்த்தம் இருக்கும் என்று அவர்கள் நம்பினர். மேலும், இந்த இளைஞன் அந்த அம்மாவுடைய மகன் என்றும் கேள்விப்பட்டதால், அவர் சொல்வதைக் கேட்பதற்கு அவர்கள் மனம் ஓரளவு பக்குவப்பட்டிருந்தது.
இவர்கள் இப்படி சிந்தித்துக்கொண்டிருந்த போது, இயேசு தன்னைச் சுற்றிலும் பார்த்தார். அவர்கள் நின்றுகொண்டிருந்த முற்றத்தில் கை, கால் கழுவுவதற்கென தொட்டிகள் இருந்தன. “யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.” இது யோவான் நற்செய்தியில் நாம் வாசிக்கும் வரிகள்.
இயேசு பணியாளரிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். இயேசு இப்படிச் சொன்னதும், பணியாளர்கள் மனதில் ஓடிய எண்ணங்களைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். இந்தக் காட்சியை நாம் வாழும் காலத்திற்கு ஏற்றது போல் சொல்லவேண்டுமெனில், ஒரு கிராமத்தில், அல்லது சிறு ஊரில் நடக்கும் திருமண வைபவத்தைக் கற்பனை செய்து கொள்வோம். கை, கால் கழுவ குழாய் வசதி இல்லாத இடங்களில், பெரிய பாத்திரங்களில், அல்லது பிளாஸ்டிக் வாளிகளில் வெளியே தண்ணீர் வைத்திருப்போம். அந்தப் பாத்திரங்களுக்குப் பதில் ஒரு சில இடங்களில் சிமென்ட் தொட்டிகளிலும் தண்ணீர் இருக்கும். அந்தத் தண்ணீரை எடுத்து யாரும் குடிப்பதில்லை, இல்லையா? அந்தப் பாத்திரங்களில், அல்லது தொட்டிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னார் இயேசு.
தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப இயேசு சொன்னதும், பணியாளர்களுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, கொஞ்சம் எரிச்சலும் இருந்திருக்கும். பந்தியில் பரிமாற திராட்சை இரசம் இல்லையென்று அலைமோதிக் கொண்டிருக்கும் போது, இப்படி ஒரு கட்டளையை இயேசு தருவார் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விருந்தினர்கள் எல்லாரும் கை, கால் கழுவிவிட்டு பந்தியில் அமர்ந்து விட்டதால், அந்தத் தொட்டிகளில் தண்ணீர் ஏறக்குறைய காலியாகி விட்டது. அவற்றில் மீண்டும் நீர் நிரப்ப வேண்டியது பணியாளர்களின் கடமை. அந்தக் கடமையை அவர்கள் சரிவரச் செய்யவில்லை என்பதை இயேசு சொல்லாமல் சொல்கிறாரோ என்று அவர் மீது எரிச்சல். தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்கும், திராட்சை இரசம் கிடைப்பதற்கும் என்ன சம்பந்தம்? இப்படி பல எண்ணங்கள் பணியாளர்களின் மனங்களில் ஓடிக்கொண்டிருந்தன.
திருமண நேரங்களில் பணியாளர்களின் பாடு மிகவும் கடினமான ஒன்று. பலரும் கட்டளை இடுவார்கள். பல பக்கங்களிலிருந்தும் ஏச்சும் பேச்சும் அவர்கள் கேட்க வேண்டியிருக்கும். யார் சொல்வதையும் தட்டிக் கழிக்க முடியாது. யாரையும் பகைத்துக் கொள்ள முடியாது. யார் முக்கியம், முக்கியமில்லை என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. எனவே, எல்லாருடைய போக்குப்படியும் நடக்க வேண்டும். அதுதான் பாதுகாப்பான வழி. கானாவூர் பணியாளருக்கும் இதேநிலை. அந்த இளைஞன் சொன்னதை பேசாமல் செய்து விடுவது நல்லது என்று நினைத்தனர். அவர்கள் அந்த நேரத்தில் மரியன்னையை பற்றியும் நினைத்துப் பார்த்திருப்பார்கள். அந்த அம்மா "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." என்று சொல்லிச் சென்ற சொற்கள் அவர்கள் உள்ளத்தில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தன. மேலும், தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்று அந்த இளைஞன் சொன்னபோது, அந்தக் கட்டளையில் ஒலித்த ஒரு தனிப்பட்ட அதிகாரம் அவர்கள் மனதில் எழுந்த பல குழப்பங்களைத் தீர்த்தது போல் உணர்ந்தனர். தாயின் தாலாட்டுக் குரலில் கட்டுண்டு நம்பிக்கையோடு கண்ணுறங்கும் குழந்தையைப் போல் இயேசுவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் தொட்டிகளை நிரப்ப ஆரம்பித்தனர். அங்கு நடந்ததைக் கூறும் யோவான் நற்செய்தி இதோ:

யோவான் நற்செய்தி, 2: 5-9
இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.

பணியாளர்கள் தொட்டியில் ஊற்றியது தண்ணீர். ஆனால், அதை அவர்கள் மொண்டு எடுத்துச் சென்றபோது, அது இரசமாக மாறியிருந்தது. எப்போது, எப்படி இந்த புதுமை நடந்தது?
வழக்கமாக, இயேசுவின் புதுமைகளில் அவர் சொல்லும் ஒரு சொல்லோ, அல்லது அவரது ஒரு செயலோ புதுமைகளை நிகழ்த்தும். ஆனால், இந்தப் புதுமை நடந்த போது, அப்படி தனிப்பட்ட வகையில் இயேசு எதையும் சொல்லவில்லை. செய்யவுமில்லை.
"தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொடுங்கள்" என்றார். இவ்விரு கூற்றுகளுக்குமிடையே, அவர் நீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் மீது கைகளை நீட்டியதாகவோ, வேறு எதுவும் சொன்னதாகவோ நற்செய்தியில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், இயேசுவின் இந்த இரு கூற்றுகளுக்குமிடையே, யோவான் ஒரு அழகிய வாக்கியத்தைக் கூறியுள்ளார். 'தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதும், அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள். இதுதான் அந்த வாக்கியம். மிகவும் பொருள்நிறைந்த வாக்கியம். என்னைப் பொறுத்தவரை, எப்போது அந்தப் பணியாளர்கள் விளிம்பு வரை, தொட்டிகள் நிறைந்து வழியும் வரை நீர் நிரப்பினார்களோ, அப்போது அந்தத் தண்ணீர் திராட்சை இரசமாக மாறிய புதுமை நிகழ்ந்தது.
இயேசு சொல்லியதைக் கேட்டு குழப்பம் கோபம் இவைகளையே மனதில் தாஙகி, அந்தப் பணியாளர்கள் செயல்பட்டிருந்தால், அந்தத் தொட்டிகள் அரைகுறையாய் நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், யோவான் தெளிவாகக் கூறியுள்ளார்: அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள் என்று. அப்படியெனில் அந்த பணியாளர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்த உள்ள மாற்றம் தான் தண்ணீர் இரசமாக மாறிய அந்த மாற்றத்தையும் உருவாக்கியது. தங்கள் அதிர்ச்சி, தயக்கம், எரிச்சல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, அவர்கள் செய்யும் செயலை முழுமையாகச் செய்த அந்த நேரத்திலேயே, அவர்கள் ஊற்றிய தண்ணீர் திராட்சை இரசமாக மாறியது. முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மன நிறைவைத் தருவதோடு வாழ்வில் மாற்றங்கள் பலவற்றையும் உருவாக்கும்.
இறுதியாக ஒரு சிந்தனை. புதுமையாய்த் தோன்றிய இந்த இரசம் எங்கிருந்து வந்ததென பந்தி மேற்பார்வையாளனுக்குத் தெரியவில்லை. மண மகனைக் கூப்பிட்டு கேட்கிறார். அவருக்கும் தெரியவில்லை. ஆனால், பணியாளருக்குத் தெரிந்திருந்தது. இன்றைய நற்செய்தியில் நாம் கேட்ட இறுதி வாக்கியங்கள் இவை.
“பணியாளருக்குத் தெரிந்திருந்தது” என்ற யோவானின் இந்தக் கூற்றை நான் இப்படி பார்க்க விழைகிறேன். மையங்கள் ஓரமாவதையும், ஓரங்கள் மையமாவதையும் யோவான் இந்த வாக்கியத்தில் சொல்கிறார். இதைப் புரிந்து கொள்ள முயல்வோம்.
திருமண வைபவங்களில் பல பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், எல்லாப்பொருட்களும் முக்கியத்துவம் பெறுவதில்லை. மணமகன், மணமகள் இவர்கள் அமரும் நாற்காலிகள் புகழ் பெறலாம், எல்லா புகைப்படங்களிலும் இடம் பெறலாம். கை, கால்களைக் கழுவும் தொட்டிகள் பொதுவாகப் புகழ் அடைவதில்லை. புகைப் படங்களில் இடம் பெறுவதில்லை. அதே போல், இந்த வைபவங்களில் முழு நேரமும் பணிகள் செய்யும் பணியாளர்களைப் பற்றி யாரும் பெரிதாக நினைப்பதில்லை. திருமணப் புகைப்படங்கள் அடங்கிய எந்த ஒரு ஆல்பத்தையும் திறந்து பாருங்கள். அங்கு பணியாளர்களின் படங்கள் எல்லாமே, ஏதாவதொரு பணியை அவர்கள் செய்வதுபோல் இருக்குமே ஒழிய, அவர்களை மையப்படுத்தி இருக்காது. இயேசுவின் இந்தப் புதுமை வழியாக, அந்தத் திருமணத்தில் மையமான புள்ளிகள் எல்லாமே மறைந்து விட்டனர். ஓரத்தில் இருந்த பணியாளர்கள் இயேசுவுடன் சேர்ந்து, புதுமையின் நாயகர்களாயினர். யாருடைய கவனத்தையும் ஈர்க்காத நீர்த்தொட்டிகள் இறைமகனுடைய கவனத்தை ஈர்த்தன. அவரது புதுமைக்கு மையமாயின. நம் வாழ்விலும், எதை எதை மையப்படுத்துகிறோம். அல்லது ஓரத்தில் ஒதுக்கி வைக்கிறோம் என்பதையெல்லாம் புத்தாண்டின் துவக்கத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. மையங்களும், ஓரங்களும் மாறவேண்டுமெனில், துணிவுடன், முழு மனதுடன் மாற்றங்களைச் செய்ய அந்த இறைவன் துணையை நாடுவோம்.