03 December, 2009

PROTECT ME FROM WHAT I WANT… விரும்புபவைகளிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்...

Rome is a great city for tourists. All through the year there are tourists. One of them was wearing a T shirt with these words printed boldly across the chest: PROTECT ME FROM WHAT I WANT. A strange request, indeed. I was not sure to whom he was making this request to. To his family, friends, or God? I did not bother to ask him. He looked pretty much like Arnold Schwarzenegger.
The message triggered off a series of thoughts in me. Why would I want someone to protect me from what I want? If someone forced me to go somewhere, or do something, then there is every reason for me to shout for help… PROTECT ME FROM WHAT IS FORCED ON ME - makes a lot of sense. But, if I do something out of my own liking, then why would I call for help? If our choices are healthy all the time, then there would be no need for such a help; unfortunately, our choices are not healthy all the time. There are times when we would like to be freed from what we chose, what we wanted…
Dancing flames are attractive. As moths to flame… is a known phrase. We can do practically nothing about moths getting too close to flames; but, we can surely intervene when a child walks towards a flame. We can also try to stop an adult walking towards a flame. But, if the adult brushes us aside and keeps walking towards the flame? We would think that either he/she is mad or possessed! Yes, we can become possessed with what we like and what attracts us. I guess this was the message conveyed by the tourist’s T shirt: PROTECT ME FROM WHAT I WANT.
Our biblical reflection today is about Jesus healing the Gerasenes demoniac. Mark’s account of this miracle is pretty long and rather detailed. The first part of the gospel gives a frightening description of a person possessed.

Mark 5:1-5
They went across the lake to the region of the Gerasenes. When Jesus got out of the boat, a man with an evil spirit came from the tombs to meet him. This man lived in the tombs, and no one could bind him any more, not even with a chain. For he had often been chained hand and foot, but he tore the chains apart and broke the irons on his feet. No one was strong enough to subdue him. Night and day among the tombs and in the hills he would cry out and cut himself with stones.

I have seen people who were said to be ‘possessed’. I have also seen the unfortunate treatment given to most of these persons in India. The most frightening scene is people chained to pillars in some pilgrimage spots. All of us in Tamil Nadu would not have forgotten the fire accident in one such pilgrim towns and the unfortunate victims who were charred to death since they were tied to those pillars with chains.
My first reaction towards these persons is to leave the place and not face them. In general, what do most of us do when faced with evil – in so many forms? We would like to quietly slip away. This is the fist victory for the evil forces – to see the back of us. What does Jesus do? He prefers the head on collision. It takes courage to face evil forces.

Mark 5: 6-10
When he saw Jesus from a distance, he ran and fell on his knees in front of him. He shouted at the top of his voice, "What do you want with me, Jesus, Son of the Most High God? Swear to God that you won't torture me!" For Jesus had said to him, "Come out of this man, you evil spirit!"
Then Jesus asked him, "What is your name?"
"My name is Legion," he replied, "for we are many." And he begged Jesus again and again not to send them out of the area.


Some of the bible versions explain this Legion as a Roman troupe consisting of around 6000 soldiers. 6000 persons living in a single person? Possible? I guess this is the medical equivalent of MPD… Multiple Personality Disorder. Here is part of a poem:
Crazy Bill: The Gerasene Demoniac Revisited – a poem by Tim Melton
My name back then was William when I lived among the sane
But then my neighbors – dressed and clean
With swords in hand – poised and lean
Dubbed me “Crazy Bill” – then mean
They never called me Will again, when I went insane

In screams my neighbors called my name – “Reproach of God and Man”
“Father Cursed” “Mother Hated”
“Mistake of Nature” “Love Abated”
These titles on my soul instated,
The Voices spoke their name for me – “Legion of the Damned”
(THE PICTURE AT THE BEGINNING OF THIS POST IS ALSO FROM THIS SAME SOURCE)
http://sacrosanctgospel.wordpress.com/2008/05/14/crazy-bill-the-gerasene-demoniac-revisited/

A person can become multiple in so many ways… Here is a passage written as an introduction for his book by Carlos G.Vallés in his website: http://www.carlosvalles.com/ningles/idetporque.htm.
I AM COLLECTING RAINBOWS A Study in Self-Integration
"Each one of us is born as many, and dies as one", said Heiddeger. The chapters of this book run through several of the "many" I have been, "I am my mother's son", "I am a writer", "I am my ideas", "I am my feelings"..., to end up with "I am I". Along our lives we all go on combining and reconciling and bringing together all those strains that together make up our personality, till we weave them into the unique pattern our life turns out to be.

Unfortunately, many of us don’t take the time or effort to become reconciled and unified. We tend to live and die as many. The price we may have to pay for reconciliation and for unification is rather high. If we do not sit down to calculate this price; but rather abandon ourselves in God’s hands, miracle will happen.

Mark 5: 11-20
A large herd of pigs was feeding on the nearby hillside. The demons begged Jesus, "Send us among the pigs; allow us to go into them." He gave them permission, and the evil spirits came out and went into the pigs. The herd, about two thousand in number, rushed down the steep bank into the lake and were drowned.
Those tending the pigs ran off and reported this in the town and countryside, and the people went out to see what had happened. When they came to Jesus, they saw the man who had been possessed by the legion of demons, sitting there, dressed and in his right mind; and they were afraid. Those who had seen it told the people what had happened to the demon-possessed man—and told about the pigs as well. Then the people began to plead with Jesus to leave their region.
As Jesus was getting into the boat, the man who had been demon-possessed begged to go with him. Jesus did not let him, but said, "Go home to your family and tell them how much the Lord has done for you, and how he has had mercy on you." So the man went away and began to tell in the Decapolis how much Jesus had done for him. And all the people were amazed.


But, there are many who would not prefer such miracles to happen neither to them nor to others. They would like to make a profit out of the misery of the people. Last week we spoke about the gunmen who killed 17 youngsters who were trying to get rid of their drug addiction. Well, there are such ‘demons’ who wish to have the whole world living in the tombs, chained hand and foot, crying out night and day among the tombs and in the hills and cutting themselves with stones… (I have simply lifted these phrases from the first part of the gospel.)
We pray that the Good Lord heal these ‘demons’ and also those who have been chained under their spell. We also pray that we become more and more unified and reconciled with ourselves.

ரோமை நகரில் வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள், இங்குள்ளத் திருத்தலங்களைப் பார்க்க வரும் திருப்பயணிகள் என்று கூட்டம் அலைமோதும். இப்படி வந்த ஒரு பயணி அணிந்திருந்த T shirt இல் நான் கண்ட வாக்கியம் இது: PROTECT ME FROM WHAT I WANT. "நான் விரும்பித் தேடுபவைகளிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்." அவர் யாருக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறார்? தன் குடும்பத்திற்கா? நண்பர்களுக்கா? அல்லது கடவுளுக்கா? சரியாகத் தெரியவில்லை. அவரிடம் கேட்க நினைத்தேன். ஆனால், ஆள் பார்ப்பதற்கு கொஞ்சம் பலசாலியாக இருந்ததால், ஒதுங்கி விட்டேன்.
"நான் விரும்பித் தேடுபவைகளிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்." வேடிக்கை, வேதனை என்று பல கோணங்களில் இந்த வாக்கியம் என்னைச் சிந்திக்க வைத்தது. நானே விரும்பி, தேடிச் செல்லும் போது ஏன் இன்னொருவர் வந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்? விரும்புவது, தேடுவது எல்லாமே நல்லவைகளாக இருந்தால், இந்தக் கேள்வி, பயம், வேண்டுகோள் எழாது. ஆனால் வாழ்வில் நாம் அனுபவித்த, அனுபவிக்கும் உண்மை என்ன?
என்னைப் பலவந்தமாக யாராவது ஒருவர் நான் விரும்பாத இடத்திற்கு இழுத்துச் சென்றாலோ, அல்லது விரும்பாத ஒன்றை செய்யக் கட்டாயப்படுத்தினாலோ, மற்றவர்களை உதவிக்குக் கூவி அழைக்கலாம். அனால் நானே விரும்பி ஒரு இடத்திற்குப் போகும்போது அல்லது ஒன்றைச் செய்யும் போது, "யாராவது காப்பாற்றுங்களேன்" என்று கத்துவேனா? என் கையை நானே பலவந்தமாக முறுக்கிக் கொண்டு, அல்லது என் கண்ணை நானே குத்திக்கொண்டு "யாராவது காப்பாற்றுங்களேன்" என்று கத்துவேனா? என் வாய் கத்தியதில்லை. ஆனால், என் உள்மனம்? கத்தியிருக்கிறது... ஆரம்பத்தில் அழகாக, நல்லது போல் தோன்றியப் பல விஷயங்கள் போகப் போக பயத்தை உண்டாக்கியது. பகலிலும் இரவிலும் இந்த பயம் துரத்தியது... கத்தி யாரையாவது கூப்பிடலாம் என்றால், அதற்கும் பயம்...
Jim Carey நடித்த ஒரு ஆங்கிலத் திரைப்படத்தில் அவரது வலது கை அவருக்குக் கட்டுப்படாமல் அதுவாகவே அடுத்தவரைக் கிள்ளுவதும், அடுத்தவரது பொருட்களை எடுப்பதும் என்று அவரைப் பல இன்னல்களில் மாட்டி வைக்கும். சிரிப்பதற்கு இது போன்ற சம்பவங்களை நினைத்துப் பார்க்கலாம். ஆனால், உண்மை வாழ்க்கையில் எத்தனை பேர் இப்படி தாங்கள் விரும்பாத காரியங்களில் தள்ளப்பட்டு தங்களை யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று ஏங்கி காத்திருக்கின்றனர்?
எரிகின்ற நெருப்பு பார்க்க அழகாக இருக்கும். அந்த அழகைத் தேடிச் செல்லும் விட்டில் பூச்சிகளைப் பற்றி அடிக்கடி பேசுகிறோம். பூச்சிகள் பாவம் அவைகள் இறப்பதை தடுக்க நம்மால் ஒருவேளை முடியாமல் போகலாம். அதே நெருப்பைத் தேடி நம் வீட்டில் ஒரு குழந்தைப் போகும் போது, பார்த்துக்கொண்டு சும்மா இருப்போமா? ஓடிச் சென்று காப்பாற்றுவோம். ஆனால், அதே நெருப்பை நாடி வயதுக்கு வந்த அல்லது வயது முதிர்ந்த ஒருவர் செல்லும் போது, தடுக்கப் பார்ப்போம், அந்த நேரத்தில், தடுக்கும் நம்மைத் தள்ளி விட்டு அவர் அந்த நெருப்புக்குள் புகுந்தால்... இந்த ஆளுக்கென்ன, பேய் பிடிச்சிடிச்சா? என்று சிந்திக்க மாட்டோமா?
பேய் பிடித்த ஒருவரை... இல்லை, இல்லை... பேய்கள் பிடித்த ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமையை இன்றைய விவிலியத் தேடலில் சிந்திப்போம். விரும்புதல், தேடுதல் என்று ஆரம்பித்துவிட்டு, ஏன் திடீரென பேய் பிடிப்பது பற்றி பேச ஆரம்பித்து விட்டேன் என்று நீங்கள் நினைக்கலாம். இரண்டுக்கும் தொடர்பு இருப்பதைப் பார்க்கிறேன்.
பேய் பிடித்ததாகச் சொல்லப்பட்ட ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். வழக்கமாக இவர்கள் சுய நினைவு இல்லாமல், தங்கள் கட்டுப்பாட்டில் தாங்கள் இல்லாமல், வேறு ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருப்பது போல பேசுவார்கள், செயல்படுவார்கள். ஒரு சில கோவில்களில் இவர்களுக்கென இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை, அங்கு கட்டப்பட்டிருந்தவர்களைப் பார்த்திருக்கிறேன், பயந்திருக்கிறேன், வேதனை அடைந்திருக்கிறேன். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி கட்டப்பட்ட பலர் தீவிபத்தில் உடல் கருகி இறந்தது எல்லாருக்கும் நினைவிருக்கும்.
தீய ஆவியால் கட்டுண்ட ஒருவரைப் பற்றி இன்றைய நற்செய்தியின் ஒரு பகுதி சொல்கிறது.

மாற்கு நற்செய்தி 5
அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால்கூடக் கட்டி வைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.

பயம், பரிதாபம் என்று பல உணர்வுகளை எழுப்பும் ஒரு காட்சி இது. இப்படி ஒருவரை வாழ்க்கையில் சந்தித்தபோதெல்லாம் ஏன் மனதில் மேலோங்கி இருந்த ஒரு எண்ணம் - அந்த ஆளைவிட்டு, அந்த இடத்தை விட்டு தூரமாய் சென்று விட வேண்டும்.
பொதுவாகவே, தீய சக்தி எந்த வடிவத்தில் வந்தாலும் அந்த சக்திக்கு முன் நமது முதல் பதில்? ஓட்டம், அந்த இடத்தை விட்டு விலகுதல். ஏன்? துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று சிறுவயது முதல் சொல்லித் தரப்படும் பழமொழி, பாடம்... தீய சக்தியைச் சந்தித்ததும், என் விசுவாசம் விடைபெற்று போய் விடுகிறது. தீய சக்திகளுக்கு முன்னால் துணிந்து நிற்க முடியாமல் பின் வாங்குவது, அந்த சக்திகளுக்கு நாம் தரும் வெற்றி.
தீய சக்தியை இயேசு சந்தித்த போது, அவருடைய பதில் என்ன? நற்செய்தி படம் பிடித்து காட்டுகிறது.

நற்செய்தி
தீய ஆவி பிடித்தவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் ‘இலேகியோன்’, ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று அவரை வருந்தி வேண்டினார். (இலேகியோன் என்பது உரோமைப் படையின் 6000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப் பிரிவு.)

6000 பேர் ஒரு மனிதரில், ஒரு மனதில் குடிகொள்ள முடியுமா? முடியும். நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது ஒருவராகப் பிறக்கிறோம். ஆனால், வளரும்போது, அவரைப் போல, இவரைப் போல என்று எத்தனை பேராக மாறத் துடிக்கிறோம். நம் குடும்பத்தில் அல்லது பள்ளியில் அடுத்தவரோடு நம்மை ஒப்புமைப் படுத்தி, “அவனப்பாரு, அவளப்பாரு... நீயும் இருக்கியே” என்று குற்றப் பத்திரிக்கைகள் வாசிக்கப்படும் போது, அவனாக, அவளாக மாற விரும்புகிறோம். இல்லையா? பலர் வளரும்போது அவரது பெயர்களே மறைந்து, மறந்து போகும் அளவு மற்ற கீழ்த்தரமான பெயர்களால், அடைமொழிகளால் அழைக்கப்படுகின்றனர்? இப்படி வளரும் ஒரு குழந்தை தன் சொந்த உருவை, தன் சொந்த பெயரை, தன் சொந்த இயல்பை புதைத்துவிட்டு மற்ற முகமூடிகளை அணிந்து கொள்ள முற்படுகிறது. இந்த முகமூடிகளே அந்த குழந்தையின் அடையாளங்களாக மாறும் போது, அவராக, இவராக இருக்கலாமே என்று ஆரம்பித்து ஆயிரமாயிரம் அடையாளங்களைத் தாங்கி வாழ ஆரம்பித்து விடுகிறது. ஒரு வேளை, இன்றைய நற்செய்தியில் நாம் வாசித்த இந்த மனிதரும் அப்படி பலராக வாழப் பழகி அதுவே அவரது வாழ்வாகி விட்டதென நினைக்கிறேன். வாழும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் பலராக வாழ்வதை, மருத்துவ கண்ணோட்டத்தில் பார்த்தால், Split Personaltiy, அல்லது Multiple personality Disorder என்று அழைப்பர்.
6000 பேரை உடலில், மனதில் தாங்கி போராடி வந்தவரைக் குணமாக்குகிறார் இயேசு. படையாக வந்த தீய சக்திகள் சாதாரணமாகப் போகவில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் பன்றிகளை அழித்துவிட்டுச் சென்றன. அந்த மனிதருக்குக் கிடைத்த விடுதலையைக் கண்ட அவரது குடும்பம் ஒருவேளை நிம்மதி அடைந்திருக்கும். ஆனால், ஊரிலிருந்த மற்றவர்களுக்கு? அவர்கள் அச்சமுற்றார்கள், இயேசுவை ஊரைவிட்டு போய்விடுமாறு வேண்டிக்கொண்டார்கள் என்று நற்செய்தி கூறுகிறது.

நற்செய்தி
அங்கே மலைப்பகுதியில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. “நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது. பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

ஒருவனைக் காப்பாற்ற 2000 பன்றிகளா? கணக்கு சரியில்லையே. நல்லது ஒன்று நடக்க, எதையும், எவ்வளவும் தியாகம் செய்யலாம் என்பது ஒரு கண்ணோட்டம். எள்ளளவு தியாகம் செய்தாலும் பெருமளவு லாபம் கிடைக்க வேண்டும் என்பது மற்றொரு கண்ணோட்டம். ஒன்று வியாபாரம், மற்றொன்று வாழ்க்கை. வாழ்க்கையே பலருக்கு வியாபாரமாகிப் போகும்போது கணக்கு பார்ப்பது ரொம்ப, ரொம்ப முக்கியமாகிப் போகிறது.
சென்ற வார விவிலியத் தேடலில் போதை பழக்கத்திலிருந்து விடுபட மெக்ஸிகோவின் மருத்துவ மனையொன்றில் போராடிக் கொண்டிருந்த 17 இளையோரைச் சுட்டுக் கொன்ற போதைபொருள் வியாபாரிகளை நினைவிருக்கிறதா? அதுபோலவே, இன்னும் பல நோய்கள், தீயபழக்கங்களிருந்து மனித குலம் மீண்டு வருவது, விடுதலை அடைவது பலருக்கு வருத்தமாக இருக்கும். இயேசுவைப் போல் அந்த நன்மைகளைச் செய்யும் பலரை அந்த இடத்தை விட்டு போகச் சொல்வார்கள், அப்படி செய்யாமல் அந்த நல்ல உள்ளங்கள் தொடர்ந்து சேவைகளைத் தொடர்ந்தால், அவர்களைக் கொல்லவும் தயங்க மாட்டார்கள் இந்த வியாபாரிகள். இந்த வியாபாரிகள் விற்பனையைத் துவங்க முன் தங்கள் மனசாட்சியை விற்று விட்டு பின்னரே வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.
மனித குலத்தில் பகமை, வெறுப்பு, பழிக்குப் பழி இவற்றை வளர்த்து, ஊர் முழுவதையும், நாடு முழுவதையும் கல்லறையாக்கி, அங்குள்ளவர்கள் கல்லறைகளில் இரவும் பகலும் ஓலமிட்டு வாழ்வதை வைத்து லாபம் சம்பாதிக்கும் இந்த வியாபாரிகளைப் பிடித்திருக்கும் பல தீய சக்திகளை இயேசு போக்க வேண்டுமென வேண்டிக்கொள்வோம்.

No comments:

Post a Comment