13 December, 2009

SWEPT OFF THE FEET BY GIFTS… பரிசு மழையில் நனைய...




Since this is Christmas season, I have taken the miracle of the great haul of fish for reflection. Gifts, especially surprise gifts do cause great joy and, paradoxically, great sorrow too. I have heard of people getting heart attack on hearing the news of winning bumper cash at the lottery. Here is an old story of a person who gets such a bumper prize. Let us call our hero Nicholas… No harm in thinking of everyone as Nicholas during this Season. One of them may be the great Santa Claus (St Nicholas). Okay, to come back to the story… Nicholas is quite advanced in age. He is in his mid 90s. He is hospitalized. At that time, there is news of him winning the lottery to the tune of...? Hold your breath! Ten million dollars! Well, naturally the family is worried about breaking this news to him. They seek the help of the parish priest who is a good friend of Nicholas. The parish priest visits Nicholas at the hospital and begins chatting about how people become overnight rich by lottery etc. Then, as an aside, the parish priest asks Nicholas, “Say, Nicky, if you get a bumper prize of ten million, what would you do?” Nicholas laughs off the question and passes on to other topics. The parish priest is persistent… “No, Nicky… answer me. What would you do if you suddenly get ten million dollars?” Nicky has had enough of this joke. So, he says, “Okay, Father, if I win ten million, five million will go to the parish church.” On hearing this, the priest faints.
Beware, my friends. This is Christmas Season and with so many gifts lined up, anything can happen to any of us. Such was the case with Simon Peter and his friends. This miracle is recorded only in Luke’s Gospel. Here is the gospel passage.
LUKE 5: 1-11
One day as Jesus was standing by the Lake of Gennesaret, with the people crowding around him and listening to the word of God, he saw at the water's edge two boats, left there by the fishermen, who were washing their nets. He got into one of the boats, the one belonging to Simon, and asked him to put out a little from shore. Then he sat down and taught the people from the boat.
When he had finished speaking, he said to Simon, "Put out into deep water, and let down the nets for a catch."
Simon answered, "Master, we've worked hard all night and haven't caught anything. But because you say so, I will let down the nets."
When they had done so, they caught such a large number of fish that their nets began to break. So they signaled their partners in the other boat to come and help them, and they came and filled both boats so full that they began to sink.
When Simon Peter saw this, he fell at Jesus' knees and said, "Go away from me, Lord; I am a sinful man!" For he and all his companions were astonished at the catch of fish they had taken, and so were James and John, the sons of Zebedee, Simon's partners.
Then Jesus said to Simon, "Don't be afraid; from now on you will catch men." So they pulled their boats up on shore, left everything and followed him.


Simon Peter was pretty despondent about toiling the whole night for nothing. What would he do for the day? No fish, no food! He was engrossed with his own life, when he saw his boat rocking a bit. He raised his eyes. He was surprised; a bit furious too. A young man of about thirty was sitting in his boat. He was beckoning to Peter. How dare he?… But, Peter got up and went to the man. The young man asked him to take the boat a bit further into the lake. Peter obliged him. He couldn’t believe this. Just a moment ago, he was so much preoccupied with himself and his life and now…? He was taking a total stranger in his boat out into the lake. Where? Just a little further… For what? Till now Peter has used his boat only for fishing and sometimes for resting. Now, his boat has become a pulpit!
This young man began to preach and Peter was quite fascinated with what the stranger was saying. When was the last time Peter had been to the synagogue? No idea… He did not like going there since the teachers in the synogogue were pretty boring, saying the same things over and over again. But, this guy was very different. Peter did not know how long he preached. Time stood still. He was surprised how this man’s words could transport him totally out of his small world – his world filled with so many day to day preoccupations.
Peter was happy that he did not give in to his usual anger. If he had done so, this young man would have been asked to leave his boat. Once the preaching was over, the people slowly dispersed. Oh, what a crowd. Only then, Peter had noticed it. No wonder this man wanted to use his boat as his pulpit. The shore was filled with people. Oh, if only he had caught some fish today, he could have made some money…Peter was back again to his small world. He was taking his boat back to the shore to leave the young man on the shore and go home.
At that time, the young man said something. What did he say? “Put out into deep water, and let down the nets for a catch.” Peter could not believe his ears. The others in the boat with Peter were equally stunned. They looked at each other. A total stranger who was probably a good preacher, was trying to teach them fishing. If I were in Peter’s place, I would have said something like this: “Sir, thanks for the suggestion. You are good at preaching. Kindly keep to that. Don’t ask us to do the impossible. If we cast the net now, our companions would think we are out of our mind. This is not the time to fish. Okay? Once again, thanks for your suggestion, but no thanks…”
Instead of such a polite ‘no’ Peter said, “Master, we've worked hard all night and haven't caught anything. But because you say so, I will let down the nets.” Did Peter know Jesus earlier? Not much chance. So, these words seemed to have come out of his heart and not his head. His heart had already recognised the Master in this young man. Jesus rewarded this “confession” with a great haul of fish… The nets were breaking and when the boats were filled with the catch, both the boats began sinking.
Not only the boats, Peter’s heart also was sinking. In the presence of such a great miracle, he made another ‘confession’. Overwhelmed by the outpouring of God’s immensity, Peter went on his knees… When Simon Peter saw this, he fell at Jesus' knees and said, "Go away from me, Lord; I am a sinful man!"
Great gifts can make us speechless or make us say things very different! Jesus had entered not only Peter’s boat but his life as if it was his right and then took over his whole life like a hurricane. He swept him off his feet with his gifts… More gifts awaited Peter. Jesus made him his trusted deputy: “Don't be afraid; from now on you will catch men.” Catch men, Peter did for the rest of his life!

கிறிஸ்மஸ் காலம் இது. கிறிஸ்மஸ் என்றதும் சிறுவயது முதல் இன்று வரை ஏன் மனதில் எழும் முதல் எண்ணங்கள்... அலங்காரம், பலகாரம், புத்தாடை, குடில், கிறிஸ்மஸ் தாத்தா, பரிசுகள்... பொதுவாகவே வாழ்வில் பரிசுகள் மகிழ்வைத் தரும். அதுவும் எதிர்பாராத விதமாக, எதிர்பாராத நபரிடமிருந்து, எதிர்பாராத நேரத்தில் வரும் பரிசுகள் மிக அதிக மகிழ்வைத் தரும்.
இப்படி ஆனந்த அதிர்ச்சியளிக்கும் பரிசுகளைப் பெறுவதும், தருவதும் பல நாடுகளில் கிறிஸ்மஸ் காலத்தில் பின்பற்றப்படும் ஒரு பழக்கம். கிறிஸ்மஸ் தாத்தா என்றும் சாந்தா கிளாஸ் என்றும் பலவாறாக அழைக்கப்படும் புனித நிக்கொலாஸ் ஆரம்பித்து வைத்ததாக, அல்லது அவர் நினைவாக இந்த பழக்கம் நிலவுகிறதென சொல்லப்படுகிறது.
பரிசுகள், எதிர்பாராத விதமாக வரும் பரிசுகள் அதிலும் முற்றிலும் எதிர்பாராத அளவு பெரு மழையெனக் கொட்டும் பரிசுகள் நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்து விடும். லாட்டரியில் பம்பர் பரிசுகள் விழுந்ததெனும் செய்தி கேட்ட எத்தனையோ பேருக்கு 'ஹார்ட் அட்டாக்' வந்ததாகக் கூட செய்திகள் வாசித்திருக்கிறேன்.
இது சம்பந்தமாக முன்பு ஒரு முறை கேட்ட கதை ஒன்று இது: நம் கதையின் நாயகன்? நிக்கொலாஸ் என்று வைத்துக் கொள்வோம். 90 வயதைத் தாண்டிய நிக்கொலாஸ் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த சமயத்தில் லாட்டரியில் அவருக்கு பரிசு விழுந்ததாகச் செய்தி வருகிறது. பரிசுத் தொகை கொஞ்ச நஞ்சமல்ல. 10 கோடி ரூபாய். அந்தச் செய்தியை அவரிடம் எப்படி சொல்வதென்று குடும்பத்தினர் திகைத்தனர். அந்தச் செய்தியைக் கேட்டு அவருக்கு ஏதாவது ஆகிவிடக் கூடாதென்ற கரிசனை. பக்குவமாக அவருக்கு அந்தச் செய்தியைச் சொல்ல அந்த ஊர் பங்கு தந்தையை அக்குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். பங்கு தந்தை வயதில் ஓரளவு முதிர்ந்தவர், எனவே 90 வயதைத் தாண்டிய நிக்கொலாசிடம் பக்குவமாய் செய்தியைச் சொல்வார் என்ற நம்பிக்கை அந்த குடும்பத்தினருக்கு. பங்கு தந்தையும் மருத்துவ மனைக்கு வந்து நிக்கொலாசிடம் பல விஷயங்களைப் பேசுகிறார். குடும்பத்தினர் சுற்றி இருந்தனர். லாட்டரிகளைப் பற்றி, அதில் பலருக்குக் கிடைக்கும் அதிர்ஷ்டங்களைப் பற்றி பேச்சு எழுகிறது. பேச்சு வாக்கில், பங்கு தந்தை நிக்கொலாசிடம், "சரி, உங்களுக்கு திடீர்னு லாட்டரியில் பத்து கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்கிறார். படுத்திருந்த நிக்கொலாஸ் புருவங்களை உயத்தி, சுற்றிலும் பார்க்கிறார். குடும்பத்தினரும், பங்கு தந்தையும் அவரது முகத்தை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். பிறகு, ஒரு புன்முறுவலுடன் நிக்கொலாஸ், "சும்மா வெளையாடாதீங்க சாமி." என்று சொல்லிவிட்டு மற்ற விஷயங்களைப் பேச ஆரம்பிக்கிறார். பங்கு தந்தை விடுவதாகத் தெரியவில்லை. "ஒரு பேச்சுக்கு அப்படி நினைப்போமே... உங்களுக்கு லாட்டரியில் பத்து கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?" என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறார். கொஞ்ச நேர அமைதிக்கு பின், நிக்கொலாஸ், "அதுல ஒரு 5 கோடியை பங்கு கோவிலுக்கு எழுதி வைத்துவிடுவேன்." என்று கூறுகிறார். இதைக் கேட்கும் பங்கு தந்தை மயங்கி விழுகிறார்.
அன்பர்களே, பரிசுகள், அதுவும் எதிபாராத விதமாக வரும் பரிசுகள் எதையும் செய்து விடும். இயேசுவின் சீடர்களுக்கு, அவர்கள் சீடர்களாவதற்கு முன்னால், இப்படி பரிசு மழையில் நனைந்த, அல்லது பரிசு வெள்ளத்தில் மூழ்கிய ஒரு அனுபவம் ஏற்பட்டது. அதைக் கூறுவது லூக்கா நற்செய்தி மட்டுமே. முதலில் இந்தப் புதுமை நடந்த சூழலைப் பற்றி லூக்கா நற்செய்தியிலிருந்து கேட்போம்.

லூக்கா நற்செய்தி 5 : 1-3
ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.

இயேசு ஏரிக்கரை ஓரமாய் நிற்கிறார். அவரது மழைப் பொழிவைக் கேட்டு மனதைப் பறிகொடுத்தவர்கள் இன்னும் பலரைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தனர். எனவே திரளான மக்கள் இயேசுவை நெருக்கிக் கொண்டிருந்தனர் என்று நற்செய்தி சொல்கிறது. அப்போது இயேசு புதுமையை ஆரம்பிக்கிறார். சீமோனின் படகில் இயேசு ஏறியது முதல் புதுமை. இயேசுவைப் பற்றி முன்பின் அறியாவதர் சீமோன். அவர் வழக்கம் போல் மீன் பிடிக்க வந்தவர். அதுவும் முந்திய இரவு முழுவதும் உழைத்தும் ஒரு பயனையும் காணாமல், மனம் நொந்து போய் அமர்ந்திருந்தார் அவர். மீன் பிடிப்பு இல்லையென்றால்... வருமானம் இல்லை, வீட்டில் உணவுக்கு வழியில்லை... இப்படி தன் சொந்தக் கவலையில் மூழ்கியிருந்த சீமோனின் படகு அசைகிறது. நிமிர்ந்து பார்க்கும் சீமோனுக்கு ஆச்சரியம், கொஞ்சம் கோபம் கூட இருந்திருக்கும். முன்பின் தெரியாத ஒரு புது மனிதர் அவரது படகில், அவரது உத்தரவு இல்லாமல் ஏறி அமர்ந்திருந்தார்.
முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர், முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், நம் வாழ்வில் நுழைந்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கலாம். திருவருகைக் காலம் இது போன்ற வருகைகளை நினைத்துப் பார்க்க ஒரு நல்ல காலம். இந்த வருகை நல்ல வருகை என்றால் வாழ்நாள் முழுவதும் அழகான ஒரு நட்புறவு உருவாகும். இந்த வருகை ஒரு குறுக்கீடாக அமைந்தால் வாழ்நாள் முழுவதும் பிரச்சனைகளை உருவாக்கும். உரிமையோடு சீமோனின் படகில் நுழைந்த இயேசு, சீமோனின் வாழ்விலும் நுழைந்தார். புதுமையை ஆரம்பித்து வைத்தார்.
தன் படகிலிருந்து இயேசு போதித்தவைகளைச் சீமோனும் கேட்டார். தன் கவலைகளில் மூழ்கியிருந்த சீமோனின் உள்ளத்தில் இயேசுவின் வார்த்தைகள் மாற்றங்களை உருவாக்க ஆரம்பித்தன. போதித்துவிட்டு இயேசு அவர் வழியே போயிருந்தால், புதுமை தொடர்ந்திருக்காது. தன் சொந்த பயனுக்காக மற்றவரைப் பயன்படுத்திவிட்டு பிறகு மறைந்து போகும் பழக்கம் இயேசுவுக்குக் கிடையாது. இயேசு சீமோனின் படகில் ஏறியது மட்டுமல்லாது அதை கரையிலிருந்து ஏரிக்குள் கொண்டு செல்லக் கட்டளையிடுகிறார். முன்பின் தெரியாத தனது சொல்லுக்குக் கட்டுப்பட்ட சீமோனின் எளிய, வெள்ளை உள்ளம் இயேசுவைக் கவர்ந்தது. தங்கள் சொல்லுக்குக் கட்டுப்படும் கள்ளமற்ற உள்ளங்களைத் சொந்த லாபங்களுக்குப் பயன்படுத்தும் தலைவர்களை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். இயேசுவின் எண்ணங்கள் வேறுபட்டவை. சீமோனை இன்னும் தன் வயப்படுத்த, அவர் வழியாக இன்னும் பலரைத் தன் வயப்படுத்த நினைத்தார் இயேசு. ஏரியில் வலைகளை வீசச் சொன்னார்.

லூக்கா நற்செய்தி 5 : 4-7
அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.

சீமோனும், அவரைச் சுற்றியிருந்தோரும் ஆச்சரியம், எரிச்சல் அடைந்திருக்கலாம். மீன்பிடிக்கும் தொழிலில் பல ஆண்டுகள் ஊறி, அந்தத் தொழிலில் தேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களது திறமையையும், அனுபவத்தையும் கேலி செய்வது போல் இருந்தது இயேசுவின் கட்டளை. சீமோன் நினைத்திருந்தால், யேசுவிடம் இப்படி சொல்லியிருக்கலாம். "ஐயா, மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்ததால், படகில் அமர்ந்து போதிக்க நினைத்தீர்கள். நீங்கள் சொன்னதைக் கேட்டோம். நீர் வந்தது மக்களுக்குப் போதிக்க. அதை முடித்து விட்டீர். நன்றி. இந்தப் பகல் நேரத்தில் நாங்கள் வலை வீசினால், பார்ப்பவர்கள் எங்களை பைத்தியக் காரர்கள் என்று சொல்வார்கள். மீன் பிடிப்பு பற்றி தெரிந்து கொண்டு வந்து பிறகு எங்களை அதிகாரம் செய்யலாம். இப்போதைக்கு, நீர் உம் வழியே போகலாம்."
மாறாக, கள்ளம் கபடமற்ற சீமோன் தன் மனதில் பட்டதைச் சொல்கிறார். பல நல்ல பாடங்கள் இந்தக் கூற்றில் புதைந்துள்ளன. உண்மையை எந்த வித பூச்சும் இல்லாமல் சொல்வது. ஒருவரது பின்னணியைப் பார்ப்பதிலும், அவர் சொல்வதற்கு மதிப்பு கொடுப்பது... இப்படி பல பாடங்கள்.
மீன்பிடிப்பைக் கண்டதும், சீமோனின் செயல் ஆச்சரியத்தைத் தருகிறது. மாபெரும் புதுமை கண்முன்னே நடக்கும் போது, "என் கண்ணையே, காதுகளையே என்னால் நம்ப முடியவில்லையே." "நான் காண்பதென்ன கனவா, நனவா?" என்றெல்லாம் சொல்லியிருக்கிறோம் இல்லையா? உணர்ச்சிகள் மேலிடும்போது, வார்த்தைகள் வருவது அபூர்வம். சீமொனுக்கும் அப்படி ஓர் உணர்வு மேலோங்கியதால் அப்படி பேசியிருக்கலாம்.

லூக்கா நற்செய்தி 5 : 8-11
இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

சீமோன் இப்படி நடந்துகொண்டதற்கு நான் எண்ணும் ஒரே காரணம்... இயேசுவின் போதனை. அவர் தன் படகில் அமர்ந்து போதித்த போது, சீமோன் தன் கவலைகளை மறந்து இயேசுவின் போதனைகளில் ஆழ்ந்து போனார். இந்த மனிதர் நாள் முழுவதும், ஏன் தன் வாழ்நாள் முழுவதும் இந்த படகில் அமர்ந்து போதித்துக் கொண்டே இருந்தாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போன்று இருந்தது சீமோனுக்கு. தன் வாழ்வு முழுவதையும் இந்த மனிதரோடு செலவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்... சீமோனின் இந்த சிந்தனைகளை அறிந்தவர் போல் இயேசு அவருக்கு அழைப்பு விடுத்தார். “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்”
இறுதியாக ஒரு சிந்தனை. மீன்பிடிப்பைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் இந்த நேரத்தில், நமது இந்தியக் கடல்களோடு போராடும் பலரை நினைத்து பார்க்க வேண்டும். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழும் இவர்கள், தேவைக்கு அதிகமாக மீன் பிடிப்பதில்லை. மீன் பெருக்கம் நிகழும் காலங்களில் கடலுக்குப் போவதில்லை. இப்படி கட்டுப்பாட்டுடன் தங்கள் தொழிலைத் தொடர்ந்து வரும் இவர்களது வாழ்வில், கடந்த இருபது ஆண்டளவாய் பல வியாபார நிறுவனங்கள் நிகழ்த்தும் கொடூரங்கள் அனைவருக்கும் தெரிந்தது. மின்விசைப் பொருத்திய பெரும் படகுகளைக் கொண்டு அவர்கள் செய்யும் அராஜகம் பல நூறு மீனவர்களின் வாழ்வின் அடி வேர்களை அறுத்துவிட்டன.
மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் லட்சகணக்கான ஏழைகளை இறைவன் காக்க வேண்டும், அவர்களது தொழிலுக்கேற்ற பலனை அவர்கள் பெற வேண்டுமென இறைவனை வேண்டுவோம். இயேசுவின் பிறப்பை எதிநோக்கியிருக்கும் நாம், சீமோனைப் போல் இறைமகனை நம் வாழ்வில் ஏற்க, நம் இதயக் கதவுகளைத் திறப்போம்.

No comments:

Post a Comment