01 January, 2017

A New Timepiece to register only Good Things நல்லதை மட்டுமே பதிவு செய்யும் கடிகாரம்



The Solemnity of Mary, the Mother of God

January 1 - Mary, the Mother of God

“The Lord bless you and keep you: The Lord make his face to shine upon you, and be gracious to you: The Lord lift up his countenance upon you, and give you peace.” (Numbers 6: 24-26)
How blessed we are, to hear such a blessing on the first day of the New Year during the Liturgy. What is special about this blessing is that it was ‘taught’ by God to Moses and through him to Aaron and his sons.

The first day of January, is a Quadruple Festival. Yes, we have four good reasons to celebrate this day. The first reason… this is the beginning of another year in the Gregorian calendar. This is accepted as the New Year Day in most countries. We also have various other calendars that specify different dates as the New Year Day – the Chinese, the Tamil, the Telugu… etc. It would surely help the human spirit if each of the 365 or 366 days of the year is celebrated as ‘first days’. A fresh beginning helps to revive the human spirit.
When we think of the New Year Day, we surely associate this with thoughts of ‘beginning’. We need to reflect whether the New Year ‘begins’ within us or outside of us. The media has been busy for the past few days on ‘looking back’ on 2016 as well as projecting 2017. Especially in India, there is the discussion on what the stars foretell for 2017! It is so easy to let outside forces to lead us and govern us than to take the responsibility for our own life.

On the New Year Day, someone wrote a short prayer: Thank you, Lord, for your New Life, a New Year… I want to ask you, Lord, to give me a new timepiece, too. One that will keep time only when your love passes through me, reaching out to others; the time I spend listening, sharing joys and sorrows. Give me a watch that will set my mind and heart in the present moment – that’s ‘you’, being born again each day. Let it be my alarm clock, waking me up from the sleep of my daily routines and making me available to give my time and heart to others. Thank You, Lord, for the gift of time that I hope I’ll share generously with others.

A mother heard her son saying the night prayers on the eve of the New Year. He was telling God what he planned to do the next year and how God could help him do this and that. The mother interrupted, saying, “Son, don’t bother giving God instructions; just report for duty.”

The New Year invites all of us to express good intentions and resolutions. “Just report for duty!” Each new day is “a miniature eternity”- 24 hrs, 1440 minutes, 86.400 seconds. During that time, there are blessings to be received, there are opportunities to be grasped, challenges to be accepted, internal peace to quiet nerves, etc.

‘Reporting for duty’ is what we hear in today’s Gospel (Luke 2: 16-21) The shepherds reported back for duty; Mary “kept pondering in her heart.” We, too, are here to report for duty and we need to learn what things to treasure, time to reflect. The time is now. Time is not the problem! It’s a matter of priorities! What are our priorities? Once these priorities are clearly lined up, then the whole year can be spent in relative peace and serenity. This does not mean our life will be a highway strewn only with flowers of bright colours. There would be crosses planted along the way.

There’s a story about Auguste Rodin, the great sculptor whose most famous work is called ‘The Thinker’. It seems that one day Rodin noticed a large crucifix that had been discarded in a pile of trash. Although it was terribly marred and defaced, Rodin perceived that it could be restored to its original beauty. Consequently, he and some companions carried the cross to his home, but the cross was too big for the house. What did Robin do? Rather than returning it to the trash heap, Robin decided to knock some walls and raise the roof of his house to make room for the Cross!

Sometimes we have to welcome a cross into our homes – or each of us could be that cross! Let’s try to restore it.  It’s the ‘Way of the Cross’ that leads us to HIM.  The Church is not a travel agency taking us on a conducted tour, all comforts and perks guaranteed.  We travel not by sight but by faith: by going the extra mile, more than once in a while, turning the other cheek, more than once in a while…returning good for evil, more than once in a while, loving the enemy, more than once in a while… Thus, we can see, that there are enough challenges presented to us on New Year’s Day!

The second reason to celebrate January 1st is that this is the eighth day after Jesus’ birth. On this day, according to the Gospel of Luke (Lk. 2: 21), the child was taken to the temple for circumcision and he was given the name Jesus. Although the Feast of the Holy Name of Jesus is shifted to January 3rd, we can celebrate the Divine Child being given the special name, Jesus!

The third reason is that the first day of the year is now dedicated to praying for world peace. Although world peace is still a distant dream, we can surely celebrate this dream and pray fervently that this dream may be realised sooner than later.
This year is the 50th anniversary of the World Day of Peace begun by Blessed Pope Paul VI on 1st January, 1968. For this year, Pope Francis has published his message with the title: Nonviolence: a Style of Politics for Peace. The moment we hear of the words, Politics, Peace and Nonviolence, we tend to think of politicians, peace negotiations and non-violent movements. But, the message of Pope Francis emphasizes clearly that peace, and nonviolence must be born within each of us. Here is an excerpt from Pope’s message:
Jesus himself lived in violent times. Yet he taught that the true battlefield, where violence and peace meet, is the human heart: for “it is from within, from the human heart, that evil intentions come” (Mk 7:21)… Whoever accepts the Good News of Jesus is able to acknowledge the violence within and be healed by God’s mercy, becoming in turn an instrument of reconciliation. In the words of Saint Francis of Assisi: “As you announce peace with your mouth, make sure that you have greater peace in your hearts”.  (No. 3)

The fourth and last reason, the Feast of Mary, the Mother of God – the official Feast of January 1. Of all the four reasons, this stands out as the prime reason given by the Catholic Church. Of all the four reasons, this one seems the most intriguing. The very reason the Church gives as a reason for celebration, would have been a reason for condemnation in Mary’s time. She became a mother defying not only natural laws, but also the laws of her Jewish society. This is an example to tell us that we can discover or invent reasons to celebrate life against all odds.

Christmas and New Year is a peak season for sharing greetings. Millions of greetings fill our communication lines. We greet those we love and admire. Here is a greeting to Mary in the form of a letter:
Dear Mother Mary,
I wish to pen these few lines to show you how much we love and admire you for being such a great Mother. On the very first day of the calendar year we wish to think of you as the Mother of God and celebrate it. But, I was just wondering whether it was possible for you to celebrate this very same fact – becoming the Mother of God. For you, the days following your meeting with Angel Gabriel must have been quite fearful and uncertain.
The land in which you lived is still surrounded by fear and uncertainty. We realise that it is not easy for people to live in war zones – especially for young girls. You lived as a young lady in Roman occupied territory. You must have spent days and even nights in constant fear.
Today we celebrate your Motherhood and we have even built great basilicas in your name. Some of these basilicas are marvels in marbles and granite stones. But, if the people of your times had learnt that you had become a mother before your wedding, they would have used stones for a different purpose. It is possible for us to build thousands of churches in your name since you had built yourself into a temple of God trusting only on God.
Rightly has William Wordsworth written lovely lines about you:
Mother! whose virgin bosom was uncrost
With the least shade of thought to sin allied;
Woman! above all women glorified,
Our tainted nature's solitary boast;…

Not only Wordsworth, but thousands upon thousands of artists have been inspired to sing your praises through their masterpieces of art. You are such an inspiration for all of us, Mom!

With love and admiration,
Your fortunate children.

Happy New Year 2017 Greeting Banners

இறைவனின் தாயான மரியாவின் திருநாள்

"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி, உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து, உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி, உனக்கு அமைதி அருள்வாராக!"(எண்ணிக்கை 6: 24-26) புத்தாண்டு நாள் திருப்பலியில், இத்தகைய ஆசி மொழிகளைக் கேட்டுள்ளோம். இறைவன் வழங்கிய இந்த ஆசி, நம் ஒவ்வொருவருடனும் இவ்வாண்டு முழுவதும் தங்கட்டும்.
கிரகோரியன் நாள்காட்டியின்படி, இன்று. உலகெங்கும், 2017ம் ஆண்டு துவங்குகிறது. கொண்டாட்டம் என்ற முறையில், டிசம்பர் 31 நள்ளிரவு ஜப்பானில் ஆரம்பித்த கொண்டாட்டங்கள், ஒவ்வொரு மணி நேரமாக, ஒவ்வொரு நாட்டிலும், இன்னும் தொடர்ந்தவண்ணம் உள்ளது.

புத்தாண்டு என்றதும், ஆரம்பம், துவக்கம், முதல் என்ற எண்ணங்களும் நம் சிந்தனைகளில் வலம் வருகின்றன. ஆரம்பம் சரிவர அமைந்தால், தொடர்வன அனைத்தும் சரிவர அமையும் என்பது, நம்மில் பலர் ஏற்றுக்கொள்ளும் ஓர் உண்மை. இதற்கு நேர் மாறாக, "முதல் கோணல், முற்றும் கோணல்" என்ற எச்சரிக்கையையும், நம்மில் பலர் நன்கறிவோம். இங்கு நாம் குறிப்பிடும் 'ஆரம்பம்', ‘துவக்கம்’, 'முதல்' என்பனவற்றை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம்? இவை, நமக்கு வெளியில் துவங்கும் ஆரம்பங்களா அல்லது, நமக்குள் பிறக்கும் ஆரம்பங்களா என்பதைப் பொருத்து நம் புத்தாண்டு உணர்வுகள் அமையும்.

புத்தாண்டுக்கு முன்னதாக, கடந்து வந்த ஆண்டினைத் திரும்பிப் பார்ப்பது, நம்மத்தியில் நிலவும் வழக்கம். கடந்து வந்த 2016ம் ஆண்டினை, வெளியிலிருந்து பார்க்கமுடியும், அல்லது, உள்ளிருந்து பார்க்கமுடியும். கடந்த சில நாட்களாக, ஊடகங்கள், 2016ம் ஆண்டின் அலசல் என்ற பெயரில், அதன் அருமை, பெருமைகளை, வெற்றி, தோல்விகளை நம் நினைவில் பதித்திருக்கும்.
நம் தொடர்பு கருவிகள், பெருகியபின், ஊடகங்கள் தரும் செய்திகளுக்காகக் காத்திராமல், நமக்குள்ளும் ஆயிரமாயிரம் செய்திகளைப் பகிர்ந்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக, இந்தியாவைக் குறித்து நாம் பகிர்ந்துவரும் செய்திகளில் பெரும்பாலானவை, நம் மனங்களை துன்புறுத்தும் செய்திகளாகவே அமைந்துள்ளன. இத்தகையப் பகிர்வுகளின் சுமையால், நம் உள்ளங்கள், உணர்விழந்துவிட்டன. இவ்வேளையில், துவங்கியிருக்கும் புத்தாண்டை நம்பிக்கையுடன் வரவேற்க நம்மால் எழுந்து நிற்கவும் இயலாமல் தடுமாறுகிறோம்.

நம்பிக்கை இழக்கச் செய்யும் இக்கண்ணோட்டத்தை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, இங்கு, ஆண்டவன் சந்நிதியில், நம்மைப் பற்றி சிந்திப்போம். புத்தாண்டு நமக்குள்ளிருந்து பிறக்கவேண்டும் என்ற தெளிவைப் பெறுவோம். 2016ம் ஆண்டை எவ்விதம் கடந்து வந்தோம் என்று ஓர் ஆன்மீக ஆய்வில் ஈடுபட்டு, நடந்த நல்லவை அனைத்திற்கும் நன்றி சொல்வோம். இனி, நாம் நடத்தப்போகும் வாழ்க்கையை, நல்வழியில் நடத்த, இறைவனின் அருளை வேண்டுவோம்.

புத்தாண்டு நாள் காலையில் ஒருவர் இவ்வாறு வேண்டினார்: "இறைவா, நீர் அளித்துள்ள புத்தாண்டிற்கு, புது வாழ்வுக்கு நன்றி. இறைவா, இவ்வாண்டில் எனக்கொரு கடிகாரத்தைப் பரிசாகத் தாரும். உம் அன்பு எனக்குள் பாய்ந்து, அதன் விளைவாக, நான், தேவையில் இருக்கும் அடுத்தவருக்குக் கரம் நீட்டும் நேரங்களை மட்டும், இந்தக் கடிகாரம் பதிவு செய்யட்டும். அடுத்தவரின் இன்ப, துன்பங்களில் பங்கேற்று, அவர்களுக்குச் செவிமடுக்கும் நேரங்களை மட்டும், இந்தக் கடிகாரம் பதிவு செய்யட்டும்.
இறைவா, நேரம் என்ற கொடையை நீர் எனக்குத் தாராளமாக வழங்கியுள்ளீர்; அக்கொடையை நான் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் மனதைத் தந்தருளும்."

இளையவர் ஒருவர், டிசம்பர் 31 இரவு, அதாவது, புத்தாண்டுக்கு முந்தைய இரவு, படுக்கச்செல்வதற்கு முன், இறைவனிடம் வேண்டினார். புதிய ஆண்டிற்கென தான் வகுத்துள்ள அனைத்து திட்டங்களையும் இறைவனிடம் எடுத்துச் சொல்லி, அவர் தனக்கு எந்தெந்த வகையில் உதவி செய்யமுடியும் என்பதையும், தன் செபத்தில், விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்தார். இளையவரின் செபத்தைக் கேட்ட அவரது அம்மா, "மகனே, கடவுளுக்கு நீ திட்டங்களை வகுக்காதே. விடிந்ததும், நீ உன் கடமைகளைச் செய்யப் புறப்படு" என்று அமைதியாகக் கூறினார்.

"கடமைகளைச் செய்யப் புறப்படு" என்பதே, புத்தாண்டு நமக்கு விடுக்கும் அழைப்பு. புத்தாண்டில் நமக்கு வழங்கப்பட்டுள்ள நேரம், அளவற்ற ஒரு கொடை. ஒவ்வொரு நாளும், 24 மணி நேரங்கள், 1440 நிமிடங்கள், 86,400 நொடிகள் என்ற உயர்ந்த பரிசு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பரிசுடன், இறைவனின் ஆசீர், தேடிவரும் வாய்ப்பு, நமது தாராளமனம் என்ற கூடுதல் கொடைகளும் நம்மை வந்தடைகின்றன. இவற்றிற்கு நாம் அளிக்கும் தகுதியான பதில், "கடமைகளைச் செய்யப் புறப்படுதல்"

இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் இடையர்களும், அன்னை மரியாவும், தங்கள் கடமைகளைச் செய்தனர் என்பதை வாசிக்கிறோம். "இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்" என்று இடையர்களைப் பற்றியும், "மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்" என்று அன்னை மரியாவைப்பற்றியும் இன்றைய நற்செய்தி கூறுகிறது.

சனவரி முதல் நாளன்று, இன்னும் மூன்று தினங்களைக் கொண்டாட நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு என்ற குழந்தை பிறந்தபின் வரும் எட்டாம் நாளான இன்று, குழந்தை இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்து, இயேசு என்ற பெயர் தரப்பட்ட நாள். (லூக்கா 2: 21) பிறந்த குழந்தைக்குப் பெயரிடுவது ஒரு முக்கிய கொண்டாட்டம்தானே.

உலக அமைதிக்காக செபிக்கும்படி ஒதுக்கப்பட்டுள்ள நாள், சனவரி முதல்நாள். உலக அமைதி  என்பது ஒரு கனவு தான் என்றாலும், அந்தக் கனவையும் நாம் கொண்டாட வேண்டாமா?
இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் 50வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி, "அமைதியை உருவாக்கும் அரசியல் முறை, அகிம்சை" என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அமைதி, அகிம்சை, அரசியல் என்ற சொற்களைக் கேட்டதும், இச்செய்தி உலக அரசுகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் என்று முடிவு கட்டிவிடக் கூடாது. வன்முறையும், அதை தடுக்கும் அகிம்சையும் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலிருந்து வருகின்றன என்பதை, திருத்தந்தை தன் செய்தியில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்: வன்முறைகள் நிறைந்த வரலாற்றில் இயேசு வாழ்ந்தார். இருப்பினும், அவர், வன்முறையின் உண்மையான போர்க்களம் நம் உள்ளங்கள் என்பதைச் சொல்லித் தந்தார். "மனித உள்ளத்திலிருந்தே... தீய எண்ணங்கள் வெளிவருகின்றன" (மாற்கு 7:21)
இதையொத்த எண்ணத்தை, புனித அன்னை தெரேசா நொபேல் அமைதி விருது பெரும் வேளையில், கூறினார் என்பதையும் திருத்தந்தை தன் அமைதிநாள் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்: நம் குடும்பங்களில் அமைதியைக் குலைக்க, குண்டுகளும், துப்பாக்கிகளும் தேவையில்லை. அதேபோல், நம்மிடையே அமைதியைக் கொணர, நாம் சேர்ந்துவந்தாலே போதுமானது. நம் குடும்பங்களில் நிலவும் அமைதி வழியே, உலகில் உள்ள அனைத்து தீமைகளையும் நம்மால் வெல்ல முடியும்" என்று அன்னை தெரேசா, தன் ஏற்புரையில் கூறினார்.

புத்தாண்டு நாள், இயேசு என்ற பெயர் வழங்கப்பட்ட நாள், உலக அமைதி நாள் என்ற அனைத்திற்கும் மேலாக, திருஅவை, இன்று ஒரு மாபெரும் விழாவைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. 'மரியா, இறைவனின் தாய்' என்பதே அம்மாபெரும் விழா.
முதல் வாசகத்தில் வழங்கப்பட்டிருந்த ஆசியுரை, நமது புத்தாண்டின் துவக்கத்தில் திருப்பலியில் ஒலிப்பது மிகப் பொருத்தமானது என்று மகிழ்கிறோம். ஆனால், இஸ்ரயேல் மக்கள், இந்த ஆசியுரையைக் கேட்கும்போது சிறிது அச்சம் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக, "இறைவன் தன் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து, உன்மீது அருள் பொழிவாராக!" என்ற சொற்கள் அவர்களுக்கு அச்சம் உருவாக்கும் சொற்கள். காரணம்... இறைவனின் முகத்தைப் பார்த்தவர்கள் உயிரோடிருக்க முடியாது என்பது, அவர்கள் எண்ணம். இந்த எண்ணத்தை முற்றிலும் அழித்து, இறைவனின் முகத்தை காண்பது மட்டுமல்ல, அவரது முகத்தை உருவாக்கவும் அன்னை மரியா தனித்துவமான அருள் பெற்றார் என்பதை, 'மரியா, இறைவனின் தாய்' என்ற திருநாளில் நாம் கொண்டாடுகிறோம்.
2015ம் ஆண்டு புத்தாண்டு நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது குறித்து தன் மறையுரையில், "மரியா இறைவனின் தாய் என்ற திருநாளைக் கொண்டாடும்போது, திருஅவை நமக்கு ஒரு முக்கிய உண்மையை வெளிப்படுத்துகிறது. அதாவது, ‘இறைவன் தன் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து, உன்மீது அருள் பொழிவாராக! என்ற ஆசி மொழியின் முழுமை, அன்னை மரியாவிடம் நிறைவுற்றது. அவர்மீது, இறைவனின் முகம் ஒளிர்ந்தது மட்டுமல்ல, இறைவனுக்கு ஒரு மனித முகத்தை அவர் வழங்கினார்" என்று கூறினார்.

கிறிஸ்மஸ் புத்தாண்டு காலத்தில் நமக்கு நெருங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் அனுப்புகிறோம். வாழ்த்து மடல்கள், கடிதங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புக்கள் என்று, நமது வாழ்த்துக்களைப் பரிமாற, எத்தனையோ வழிகளையும் பயன்படுத்துகிறோம். அன்னையான மரியாவுக்கு வாழ்த்து மடல் அனுப்ப, நமது திருப்பலி பொருத்தமான ஒரு நேரம். அவருக்கு ஒரு மடல் எழுதி நம் எண்ணங்களை, வாழ்த்துக்களைச் சொல்ல முயல்வோம்:

எங்கள் அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய மரியன்னையே,

நாங்கள் துவக்கியிருக்கும் 2017ம் ஆண்டில் நீர் எம்மோடு வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று இறைவனின் தாயான உமக்கு நாங்கள் விழா எடுக்கிறோம். ஆனால், இறைவனின் தாயானதை உம்மால் கொண்டாட முடிந்ததா என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.

நீர் அன்று வாழ்ந்தபோது, உமது நாடு, உரோமைய ஆதிக்கத்தில் துன்புற்றது. இன்றும் நீர் வாழ்ந்த அப்பகுதியில் எந்நேரமும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. போர்சூழ்ந்த பூமியில் வாழ்வது யாருக்குமே எளிதல்ல. அதிலும் முக்கியமாக உம்மைப் போன்ற இளம்பெண்களின் நிலை எவ்வளவு ஆபத்தானது என்பதை, இன்னும் இந்த உலகம், பல கொடூரங்களின் வழியாக எங்களுக்கு நினைவுபடுத்திய வண்ணம் உள்ளது.

நீர் இறைவனின் தாயானதை எண்ணி, நன்றி கூறி, பெருமைபட்டு கற்களால் எழுப்பிய கோவில்களில் பீடமேற்றி உம்மை நாங்கள் இன்று வணங்குகிறோம். நீர் வாழ்ந்த காலத்தில், திருமணம் ஆகாமல் இறைவனின் தாயானதற்காக, உமக்கு, கற்களால், கோவில் அல்ல... சமாதி எழுப்பியிருப்பார்கள் என்பதையும் உணர்கிறோம். கண்ணால் காண முடியாத இறைவனை உள்ளத்தால் கண்டு, அவரை மட்டுமே நம்பி, உமக்குள் அவரைச் சுமக்க, உமக்குள் அவருக்குக் கோவில் கட்ட நீர் சம்மதித்ததால், உம் பெயரில் நாங்கள் இன்று கோவில்கள் கட்டுகிறோம்.

கருவில் கடவுளைச் சுமந்ததுமுதல், கல்வாரியில் அவரது உயிரற்ற உடலை, உம் மடிமீது சுமந்ததுவரை உமது மகனால் நீர் அடைந்தது பெரும்பாலும் வேதனைகளே அன்றி நிம்மதி அல்ல. வாழ்ந்த நாட்கள் பலவும் வசைகளையும், வலிகளையும் மட்டும் அனுபவித்த உமக்கு, கடந்த இருபது நூற்றாண்டுகளாய் கிடைத்துள்ள வாழ்த்துக்கள் வானுயர உம்மை உயர்த்தியுள்ளன.

கடந்த இருபது நூற்றாண்டுகள் உலகில் பிறந்த, இனியும் பிறக்கப் போகும் ஒவ்வொரு மனித உயிரும் உம்மை ஏதோ ஒரு வகையில் சந்தித்துள்ளனர், இனியும் சந்திப்பார்கள் என்பதை நாங்கள் உறுதியாகச் சொல்லலாம். அத்தனை புகழ் பெற்றவர் நீர். உலகில் வரலாறு படைத்துள்ள பல கோடி பெண்கள் மத்தியில், நீர் உண்மையில் பேறு பெற்றவர்.

"கறைபட்ட எமது குலத்தின் தனிப்பெரும் பெருமை நீர்" என்று ஆங்கிலக் கவிஞர் William Wordsworth உம்மைப்பற்றிச் சொன்னது உமது புகழ்கடலில் ஒரு துளிதான். உமது புகழ்கடலில் நாங்களும் மூழ்கி மகிழ்கிறோம், பெருமைப்படுகிறோம்.
வாழ்க மரியே! வாழ்க எம் அன்னையே!

இப்படிக்கு,
உமது குழந்தைகளாய் பிறக்க கொடுத்து வைத்தவர்கள்.


No comments:

Post a Comment