13 September, 2010

Feeding the swine can bring enlightenment… பன்றிகள் மத்தியில்…ஆன்மீக ஒளி

The Prodigal Son among the Swine by Albrecht Durer, 1497-1498
http://www.backtoclassics.com/gallery/albrechtdurer/the_prodigal_son_among_the_swine/

How does one achieve enlightenment? Sitting under the Bodhi Tree, as the Buddha, or on the peak of a mountain or in a dense forest, making meditations and undertaking lots of penance… Can any one get enlightenment feeding the swine? Unthinkable? Think again. Today’s Gospel talks of a young man getting his enlightenment while he was feeding the swine.
Luke’s Chapter 15 carries probably the most popular parable of Jesus – The Parable of the Prodigal Son or Lost Son, along with parables of the Lost Sheep and the Lost Coin. I may have reflected on this parable at least on ten different occasions for my homilies. Almost on all these occasions, I have focussed more on the second part of the parable… the sweet ending which tells us that the Father, the Lost Son and, possibly, the First Son ‘lived ever after happily’! In the IV week of Lent this year we reflected on this parable, where I have painted two types of the Father in this story. (Kindly see my earlier blogpost ‘Prodigal Father’ on Saturday, March 13, 2010.)
Today I would like to spend more time on the first part of the parable… namely the part where the younger son gets lost and finds himself! Getting lost could be a help to fresh discovery. This can also be called ‘enlightenment’. The younger son, the Lost Son gets his enlightenment while feeding the pigs. My inspiration to focus on the first part of the parable came from Ron Rolheiser. He is a great Columnist and Author. He is a Roman Catholic priest and member of the Missionary Oblates of Mary Immaculate, is president of the Oblate School of Theology in San Antonio, Texas. (as his website says: http://www.ronrolheiser.com/)

In one of his reflections titled ‘Lost is a Place Too’, he writes like this (I quote him extensively):
During the summer when I was fourteen, my inner world collapsed. It began with the suicide of a neighbor. A young man whose health and body I envied went out one night and hung himself. Then another young man from our small farming community was killed in an industrial accident, and the summer ended with a classmate, a close friend, dying in a horse-back riding accident. I served as an altar-server at each of their funerals. My outside world stayed the same, but inside…things were dark, spinning, scary. I was in a free-fall. The specter of death suddenly colored my whole world and, even though I was only fourteen years old, I was now an old man inside. A certain youthfulness and joie de vivre slipped away from me for good. It truly was a summer of my discontent. I envied everyone who wasn't as depressed as I was. I felt myself the saddest 14 year-old in the world.
But, as all that pain, disillusionment, and loss of self-confidence was seeping into my life, something else was seeping in too, a deeper faith, a deeper vision of things, an acceptance of my vulnerability and mortality, and a sense of my vocation. I'm a priest today because of that summer. It remains still the most painful, insecure, depressed period of my life. But it remains too the time of deepest growth. Purgatory on earth, I had it when I was fourteen.
Many of us associate Christina Crawford, with the famous biography, Mommy Dearest, a book within which she shares what it was like to be the adopted and emotionally abused daughter of Joan Crawford. It's a story worth reading and I heartily recommend her follow-up book, a further biographical work entitled, Survivor. In it she chronicles her journey out of Hollywood and into spirituality and religion. And that journey…involved deep pain and soul-shattering disillusionment. Her story tells us what a dark night of the soul can look like. At one point, when things were at their darkest, she states that she was "completely lost", but adds: "Lost is a place too!"
She's right! Lost is a place too! And a very important one, humanly and spiritually.
Sometimes when the world is falling apart and we are haunted by the question: What is wrong? The real answer is that there is nothing wrong. The necessary storm has finally arrived and it is a good thing too because our falling apart is the only thing that can break down and transform that spoiled, rich, self-centered kid that is inside us all.
http://www.ronrolheiser.com/columnarchive/?id=376

I guess the spoiled, rich, self-centred kid Rolheiser is referring to here, can easily be christened the Prodigal Son.

Last two weeks we have been talking of, thinking of Mother Teresa very much. Her Birth Centenary as well as her 13th Death Anniversary came in quick succession. The whole world, irrespective of nation, language, religion… were talking highly of this great lady. Mother Teresa has been the model of so many Christian virtues. She could also be a great example of one whose world fell apart; but who rebuilt it in a matchless way… Hard to believe that Mother Teresa had tough time in her life? Read on.
A recent book published in 2007 is titled “Mother Teresa: Come Be My Light - The Private Writings of the Saint of Calcutta” (Edited and with Commentary by Brian Kolodiejchuk, M.C.) I have not read this book. But I saw some enlightening remarks made by Ron Rolheiser on this book and on Mother Teresa. Once again, I quote him extensively:
A recent book on Mother Teresa... makes public a huge volume of her intimate correspondence and in it we see what looks like a very intense, fifty-year, struggle with faith and belief. Again and again, she describes her religious experience as "dry", "empty", "lonely", "torturous", "dark", "devoid of all feeling". During the last half-century of her life, it seems, she was unable to feel or imagine God's existence.
Many people have been confused and upset by this. How can this be? How can this woman, a paradigm of faith, have experienced such doubts?And so some are making that judgment that her faith wasn't real. Their view is that she lived the life of a saint, but died the death of an atheist. What's to be said about all of this? Was Mother Teresa an atheist? Hardly! In a deeper understanding of faith, her doubts and feelings of abandonment are not only explicable, they're predictable.
What Mother Teresa underwent is called "a dark night of the soul." This is what Jesus suffered on the cross when he cried out: "My God, my God, why have you forsaken me?" When he uttered those words, he meant them. At that moment, he felt exactly what Mother Teresa felt so acutely for more than fifty years, namely, the sense that God is absent, that God is dead, that there isn't any God. But this isn't the absence of faith or the absence of God, it is rather a deeper presence of God, a presence which, precisely because it goes beyond feeling and imagination, can only be felt as an emptiness, nothingness, absence, non-existence.
In a remarkable book, The Crucified God, Jurgens Moltmann writes: "Our faith begins at the point where atheists suppose that it must end. Our faith begins with the bleakness and power which is the night of the cross, abandonment, temptation, and doubt about everything that exists! Our faith must be born where it is abandoned by all tangible reality; it must be born of nothingness, it must taste this nothingness and be given it to taste in a way no philosophy of nihilism can imagine."
Mother Teresa understood all of this. That is why her seeming doubt did not lead her away from God and her vocation but instead riveted her to it with a depth and purity that, more than anything else, tell us precisely what faith really is.
http://www.ronrolheiser.com/columnarchive/?id=373

I would like to add this note on Mother Teresa here. What she did for most part of her life would have drained any human being of both physical and emotional energy… even spiritual energy. She was dealing with misery, abandonment and suffering 24x365 or 366… year after year. Witnessing the darkest side of humanity day after day must have drained out all her energy. Every night she must have asked quite a few questions to God about the misery she was witnessing. If these questions did not arise in her, she was either a robot simply programmed to do charitable works or an angel camouflaged as a human. She was neither. She was simply an ordinary human being with an extraordinary heart. That is why even when her world was totally dark, she brought light to so many thousands. Only a person like Teresa could have gone through hell so long!

Let us come back to the younger son feeding the pigs… While feeding the swine, he decided not to be buried in self-pity, but to get up and go back to the father. I have read somewhere that the difference between a saint and us ordinary mortals is that when a saint comes to the end of a rope, he or she makes a knot and hangs on. Mother Teresa did. The Prodigal Son did. We are called to do so!Let us get up… go back to the Father and in that journey rediscover ourselves. It is good to get lost once in a while!


Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.


ஞானோதயம், அறிவொளி, ஆன்மீக ஒளி எங்கே கிடைக்கும்? போதி மரத்தடியில், மலை முகடுகளில், அல்லது அடர்ந்த காடுகளில் கிடைக்கும். பன்றிகள் மத்தியில் பசி மயக்கத்தில் இருக்கும் போது, இந்த ஆன்மீக ஒளி கிடைக்குமா? கிடைக்கும். கிடைத்தது என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது.
நமக்கெல்லாம் மிகவும் தெரிந்த உவமை, இயேசு கூறிய உவமைகளிலேயே மிகவும் பிரபல்யமான, புகழ்பெற்ற உவமை என்று சொல்லப்படும் ஊதாரி மகன் அல்லது காணமற்போன மகன் உவமை இந்த நல்ல செய்தியை நமக்குத் தருகிறது. நம் கதையின் நாயகன், அந்த காணாமற்போன மகன், ஆன்மீக ஒளி பெற்ற நிகழ்வை இன்றைய நற்செய்தி இவ்வாறு கூறுகிறது:

லூக்கா 15: 13-19
இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், “... நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்” என்று சொல்லிக்கொண்டார்.

இந்த உவமையை இதுவரை பல முறை நான் சிந்தித்திருக்கிறேன். என் சிந்தனைகள் எல்லாமே திருந்தி வந்த மகன், அவனை ஏற்று விருந்தளித்த தந்தை, அதை ஏற்றுக் கொள்ளாத மூத்த மகன், அவனைச் சமாதானப் படுத்த முயன்ற தந்தை என்று இக்கதையின் இரண்டாம் பகுதியில் என் கவனம் அதிகமாய் இருந்து வந்தது. இன்றைய ஞாயிறு சிந்தனையில் முதல் பகுதியில் நம் சிந்தனைகளை அதிகம் பகிர்வோம். இளைய மகனைப் பற்றி சிந்திப்போம்... அதுவும், மனம்மாறி திரும்பி வந்த, கண்டுபிடிக்கப்பட்ட மகனை விட, காணாமல் போன மகனைப் பற்றி அதிகம் சிந்திப்போம். காணாமல் போவது என்ன என்பதை அறிய முயல்வோம்.

ஆன்மீக எண்ணங்களை எழுதுவதில் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர் Ron Rolheiser, OMI என்ற (அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த) ஒரு குரு. இவரது சிந்தனைகள் எனக்கு அதிகம் பிடிக்கும். அவர் இந்த உவமையைப் பற்றி எழுதும் போது, காணாமல் போவது பற்றி கொஞ்சம் விரிவாகச் சிந்தித்துள்ளார். அவரது சிந்தனைகளே என்னையும் இவ்வழியில் சிந்திக்கத் தூண்டின. Ron Rolheiser வாழ்வில் 14வது வயதில் நடந்தவைகளை இவ்வாறு கூறியுள்ளார்:
“எனக்கு 14 வயது ஆனபோது, கோடை விடுமுறையில் நடந்த சில நிகழ்வுகளால் என் உலகம் நொறுங்கிப் போனது. நல்ல உடல் நலமும், அழகும் நிறைந்த ஒரு 20 வயது இளைஞன் என் வீட்டுக்கருகே வாழ்ந்தான். அவனைப் பார்க்கும் போதெல்லாம், பிற்காலத்தில் நானும் அவனைப் போல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அந்த விடுமுறையில் ஒருநாள், அவன் தூக்கில் தொங்கி இறந்தான். அதே விடுமுறையில், என் நண்பர்களில் ஒருவன் வேலை செய்யும் இடத்தில் ஒரு விபத்தில் இறந்தான். வேறொரு நண்பன் குதிரை சவாரி பழகும் போது, தூக்கி எறியப்பட்டு, கழுத்து முறிந்து இறந்தான். இந்த மரணங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு மாதத்திற்குள் நடந்தன. இவர்களது அடக்கச் சடங்கில் நான் பீடச் சிறுவனாய் உதவி செய்தேன்.
வெளிப்படையாக, என் உலகம் மாறாதது போல் நான் காட்டிக் கொண்டாலும், என் உள் உலகம் சுக்கு நூறாய் சிதறியது. இருள் என்னைக் கடித்துக் குதறியது. உலகிலேயே என்னை விட சோகமான, பரிதாபமான ஒரு 14 வயது இளைஞன் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். இந்த சோகம் என் உள்ளத்தை ஆக்கிரமித்த அதே வேளையில், மற்றொன்றும் என் உள்ளத்தில் மெதுவாக, சப்தமில்லாமல் நுழைந்தது. அதுதான் விசுவாசம். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்கவும், எனக்குள் மண்டிக் கிடந்த குறைகளோடு என்னையே நான் ஏற்றுக் கொள்ளவும் அந்த விசுவாசம் எனக்கு உதவியது. நான் இன்று ஒரு குருவாக இருப்பதற்கு அந்தக் கோடை விடுமுறை பெரிதும் உதவியது. சூழ்ந்த இருளில் என்னைக் காணாமல் போகச்செய்த அந்தக் கோடை விடுமுறைதான் என்னை அதிகம் வளரச் செய்தது.”

தனது 14வது வயதில் நடந்தவைகளை இவ்வாறு கூறும் Ron Rolheiser, தொடர்ந்து, Christina Crawford என்பவர் எழுதியுள்ள 'Mummy Dearest', 'Survivor' என்ற இரு புத்தகங்களைப் பற்றிக் கூறுகிறார். Christina ஒரு வீட்டில் வளர்ப்புப் பிள்ளையாக வாழ்ந்தவர். அந்த வீட்டில் அவர் அடைந்த துன்பங்களையெல்லாம் இந்தப் புத்தகங்களில் விளக்குகிறார். அவர் வாழ்வில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்த காலங்களைப் பற்றி அவர் எழுதும் போது, "அந்த நாட்களில் நான் முற்றிலும் காணாமல் போயிருந்தேன்." என்று எழுதிவிட்டு, உடனே, "காணாமல் போவதும் ஒரு வகை கண்டுபிடிப்புதான்." என்றும் குறிப்பிடுகிறார்.
ஆம் அன்பர்களே, காணாமல் போவதில் பல உண்மைகளைக் கண்டு பிடிக்கலாம். முற்றிலும் காணாமல் போகும், முற்றிலும் நொறுங்கி விடும் நிலைகள் முடிவுகள் அல்ல. அந்த இருள், அந்த நொறுங்குதல் புதிய வழிகளை, புதிய ஒளியை உருவாக்கும். ஆன்மீக ஒளி பெற, காணாமல் போவதும் உதவி செய்யும்.

அன்னை தெரேசாவை அண்மையில் அதிகமாய் நினைத்து மகிழ்ந்தோம். பெருமை பட்டோம். அவரது பிறப்பின் 100ம் ஆண்டு நிறைவு நாள், அவரது மறைவின் 13ம் ஆண்டு நிறைவு நாள் இரண்டும் தொடர்ந்து வந்தன. அந்த அன்னையைப் புகழாத நாடு இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை... அவ்வளவு உயர்ந்த இடத்தை இந்த அருளாளர் மனித மனங்களில் பெற்றுள்ளார். காணாமல் போவதைத் தொடர்ந்து சிந்திக்க, அன்னை தெரேசாவின் வாழ்க்கை நமக்கு உதவியாக இருக்கும். இப்படி நான் சொல்வது ஆச்சரியமாக இருக்கலாம். தொடர்ந்து கேளுங்கள்.
மூன்றாண்டுகளுக்கு முன்னால் 2007ம் ஆண்டு, "Mother Teresa - Come Be My Light" என்ற புத்தகம் வெளியானது. அன்னை தெரேசா தனிப்பட்ட வகையில் எழுதி வைத்திருந்த எண்ணங்களைத் தொகுத்து Brian Kolodiejchuk என்பவர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தை நான் இதுவரை வாசிக்கவில்லை. ஆனால், இதை வாசித்தவர்கள் அன்னை தேரேசாவைப் பற்றி அதிர்ச்சி அடைந்ததாக எழுதியுள்ளனர். தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகள் அந்த அன்னையின் மனதில் எழுந்த சந்தேகங்கள், கலக்கங்கள், போராட்டங்கள் ஆகியவைகளைப் பற்றி எழுதியுள்ளார்.
யாருமே செய்ய விரும்பாத ஒரு பணியை ஆழ்ந்த அன்புடன் நாள் தவறாமல் செய்து வந்த அந்த அன்னைக்கு இப்படி ஒரு நிலையா? அதவும், அவர் அந்தப் பணிகளைச் செய்து வந்த காலத்தில் இப்படி ஒரு நிலையா? அவர் வாழ்ந்த 87 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் இது போன்ற போராட்டங்களில் கழிந்தனவா? புத்தகத்தை வாசித்த பலருக்கும் எழுந்த கேள்விகள் இவை. இந்தப் புத்தகம் வெளி வந்ததும், ஒரு சிலர் அன்னை தெரேசா வாழ்ந்த வாழ்க்கை, அவரது சேவை அனைத்தின் மீதும் சந்தேகங்களை எழுப்பி, அவரைக் குறித்து தவறான முடிவுகளுக்கும் வந்தனர்.
உயர்ந்த நிலையில் நாம் போற்றி மதிக்கும் மனிதர்கள் எவரும் கேள்விகள், குழப்பங்கள் இவற்றால் அலைகழிக்கப்படுவது கிடையாது என்று நாமே தீர்மானித்துக் கொள்கிறோம். மகாத்மா காந்தி எழுதிய "சத்திய சோதனை" என்ற புத்தகமும் காந்தியைக் குறித்து கேள்விகளை எழுப்பவில்லையா?

ஆனால், நிதானமாய், ஆழமாய்ச் சிந்தித்தால், அன்னை தெரேசா போன்ற அற்புத உள்ளங்களால் மட்டுமே இத்தனை நீண்ட, இவ்வளவு ஆழமான துன்பங்கள், கலக்கங்கள், இருள் நிறை நாட்கள் இவற்றைச் சமாளித்திருக்க முடியும் என்பது விளங்கும். அதிலும் சிறப்பாக, அவர் செய்து வந்த பணியில் ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தின் மிகவும் மோசமான, இருள் நிறைந்த, நம்பிக்கையைக் குறைக்கும் துன்ப நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் அவர் சந்தித்ததால், அவர் மனதிலும் இருள், பயம், கேள்விகள், குழப்பங்கள் இவைச் சூழ்ந்தது இயற்கைதானே. இப்படி கேள்விகளும் குழப்பங்களும் இல்லாமல், எந்த வித சலனமுமில்லாமல் அவர் வாழ்க்கை ஓடியிருந்தால், ஒன்று அவர் உணர்வுகள் அற்ற ஓர் இயந்திரமாய் இயங்கி இருக்க வேண்டும். அல்லது, மண் மீது நடந்தாலும், வானில் பறக்கும் வானதூதராக இருந்திருக்க வேண்டும். அவர் ஒரு சாதாரண மனிதப் பிறவி. ஆனால், அவர் உன்னதமான மனிதப் பிறவியாக இருந்ததால், இந்த இருளின் நடுவிலும் அவரால் தன் பணிகளைத் தொடர முடிந்தது.
"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று இயேசு கதறியது நினைவிருக்கலாம். இறைவனின் மகனே இப்படியொரு இருளைச் சந்தித்தபோது, தான் அல்லது தன் கடவுள் காணாமல் போய்விட்டதாக உணர்ந்த போது, அன்னை தேரேசாவைப் போன்ற சாதாரண, ஆனால், உன்னத மனிதர்கள் இந்த இருளைச் சந்தித்ததில் ஆச்சரியம், அதிர்ச்சி எதற்கு?

இருள், துயரம், கலக்கம் இவைகளைச் சந்திக்காத மனிதர்களே கிடையாது. ஆனால், அந்த நேரங்களில், அந்த இருளுக்குள் தங்களையேப் புதைத்துக் கொள்வோர் நம்மில் பலர் உண்டு. ஒரு சிலர், தங்கள் உள் உலகம் இருள் சூழ்ந்ததாய் இருந்தாலும், வெளி உலகை ஒளி மயமாக்கினர்... அன்னை தேரேசாவைப் போல்.
நமது இன்றைய நற்செய்திக் கதையின் நாயகனிடம் திரும்பி வருவோம். பன்றிகள் நடுவே, பசியில் மயங்கிய இளைய மகன் பன்றிகளுடன் தன்னையே புதைத்துக் கொள்ளாமல், அவைகள் தான் இனி தன் வாழ்வென்று விரக்தியடையாமல், "நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்." என்று எழுந்தானே... அதுதான் அழகு.
காணாமல் போவதும் ஒரு வகையில் பார்க்கப் போனால் அழகுதான். அப்படி காணாமல் போகும்போது, அதுவரை வாழ்வில் காணாமல் போயிருந்த பல உண்மைகளையும் விசுவாச உணர்வுகளையும் நம்மால் மீண்டும் கண்டுபிடிக்க முடியும்.

இறைவனை நோக்கி, எழுந்து நடப்போம். மீண்டும் நம்மைக் கண்டுபிடிப்போம்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

3 comments:

  1. Dear Father,

    Thank you for the article,

    The starting part of the article is really great.

    Im really surprised to know about the tough time Mother Teresa underwent (May her soul rest in peace). But as you have clearly mentioned "She was simply an ordinary human being with an extraordinary heart"

    ReplyDelete
  2. Dear Father,

    "God doesn't require us to succeed, He only requires that you try" - Mother Teresa.

    I often c tis quote in my school wall. she is great person na!.

    ReplyDelete
  3. Thank you, Prince and Swahastika,
    I guess Mother Teresa would keep inspiring millions more for many more years.

    ReplyDelete