03 March, 2011

ENVELOPED BY GOODNESS AND MERCY புடைசூழ்ந்துவரும் அருள் நலமும் பேரன்பும்



When we read a novel or watch a movie, the last few pages or the last scenes grip our attention very much. We call this part ‘climax’. If the story moves towards ‘they-lived-ever-after-happily’ note, then in this climax part all the loose ends are tied up and we move towards a solution. We have come to the end of Psalm 23. The last line of the Psalm literally ends on ‘living ever after happily’ note. We begin our reflections on the final verse of this Psalm:
Surely goodness and mercy shall follow me all the days of my life;
and I shall dwell in the house of the LORD forever.
(Ps.23:6)
If we can compare the whole Psalm to a crown, the last verse can be compared to the jewel in the crown. I have suggested in a few of my earlier reflections that it would help us if we can recite this Psalm on a daily basis, especially before retiring to bed. If we can memorise the last verse and repeat this as our final prayer before we close our eyes, it would help us go into a peaceful slumber.

Today we take up the first part of this verse. “Surely goodness and mercy shall follow me all the days of my life.” Every word in this verse is brimming with meaning. When Harold Kushner begins his reflections on this verse, he brings into focus the word ‘follow’ found in this verse. The force of the original Hebrew is even stronger: “goodness and mercy shall pursue me…” That is, they will not only accompany me and bless my life. They will run after me and find me wherever I am. He then goes on to narrate a lovely story to help us see this verse in a new angle.
It (this verse or the word ‘follow’) calls to mind the story of the rabbi who stops a prominent member of his congregation in the street and says to him, “Whenever I see you, you’re always in a hurry. You’re always rushing somewhere. Tell me, what are you running after all the time?” The man answers, “I’m running after success, I’m running after prosperity, I’m running to make a good living.” The rabbi responds, “That’s a good answer, if you assume that all of those rewards are out there ahead of you, trying to elude you, and you have to run hard to catch up to them. But what if the rewards are behind you, looking for you, but they can never find you because you’re running away from them? What if God has all sorts of wonderful gifts He wants to give you, but you’re never home when He comes looking for you so He can’t deliver them?”

What a consoling thought to imagine that God is coming behind us, or, even pursuing us to shower his goodness and mercy on us. Such a thought can also mislead one to believe that our lives will be filled with wonderful things without our raising a little finger. Kushner argues this in this way:
Is the universe a friendly place? Is it full of wonderful things waiting for us to claim them and enjoy them? Or do we have to fight and struggle for everything we need to make our lives feel fulfilled? The answer, I believe, is: both. There are some blessings that will be ours only if we work hard to earn them. The gifted athlete who relies on talent and does not work at his sport is seeing himself up for disappointment. The young couple who believe that love and physical attraction will be enough to guarantee their living happily ever after will soon encounter frustration. It takes a lot of hard work to build a successful marriage. It takes a lot of hard work to build a successful career, no matter how easy it may look to an outsider. Just being a nice person who deserves to be happy isn’t enough.
But then there are other blessings that will be ours only if we stop chasing after them and let them come to us, like the butterfly that eludes our grasp when we try to catch it but comes to perch on our shoulder when we stop chasing it and sit still… I think of the young woman in my community who went to every singles event she knew of, read the personal ads, signed up with introduction agencies, all to no avail. Finally, out of a deep sense of frustration, she gave up her full-time husband-hunting and decided to spend a year doing things she enjoyed rather than the things recommended in the magazines for single women. She volunteered; she took classes. It didn’t take long for her more relaxed persona to make her seem more attractive to the eligible men she met.

A parting thought on this verse for this week comes from the Tamil expression used for the word ‘follow’. The translation of the word ‘follow’ is simply ‘thodarnthu varum.’ But the Tamil expression used here is ‘pudaisoozhnthu varum’. This expression literally means ‘being surrounded by’ or ‘being enveloped by.’ Usually kings come in procession surrounded by his soldiers and others. The expression in Tamil tells us how important and protected this person is. We shall continue to think of how grace and mercy make us important and protected!

Dear Friends,
This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit
http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.


நாம் வாசிக்கும் கதைகளில், பார்க்கும் திரைப்படங்களில் இறுதிக் காட்சிகள் விறுவிறுப்பாக அமையும். இவ்விறுதிப் பகுதியை "கிளைமாக்ஸ்" அல்லது "உச்சக்கட்டம்" என்று கூறுவோம். மகிழ்வான கதையென்றால், 'கிளைமாக்ஸ்' பகுதியில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, இறுதியில் 'வணக்கம்' அல்லது 'சுபம்' என்று முடியும். இதைக் காணும் நம் மனதில் ஒரு மகிழ்ச்சி, நிறைவு பிறக்கும்.

ஆனந்தமயமான ஒரு 'கிளைமாக்ஸ்' பகுதிக்கு இன்று நாம் வந்திருக்கிறோம். திருப்பாடல் 23ன் இறுதியான 6ம் திருவசனத்தில் இன்று நம் சிந்தனைகளைத் துவங்குகிறோம். இந்த இறுதித் திருவசனத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் நம்மை மகிழ்வில், மன நிறைவில் நிரப்பும் வார்த்தைகள். இந்த வார்த்தைகளை இப்போது ஒரு சிறு தியானமாகக் கேட்டுப் பயனடைய உங்களை அழைக்கிறேன்.

திருப்பாடல் 23 : 6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

திருப்பாடல் 23ஐ ஒரு முத்துமாலையாக நாம் உருவகித்துப் பார்த்தால், இந்த இறுதி வரிகள் அந்த முத்துமாலையின் நடுவில் கோர்க்கப்பட்டுள்ள ஒரு விலையுயர்ந்த பவளம் என எண்ணிப் பார்க்கலாம். இவ்விறுதி வரிகளில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் மனதில் இதமான, நிறைவான உணர்வுகளை எழுப்புகின்றது. திருப்பாடல் 23 முழுவதையும் ஒவ்வொரு நாளும், அல்லது அடிக்கடி வாசிப்பது பயனளிக்கும். அதிலும் முக்கியமாக, இந்த இறுதி வரிகளை மனப்பாடம் செய்து, உறங்கப் போகுமுன் நமக்குள் இரவுசெபம் போல சொல்லியபடியே உறங்கினால் நல்லது.
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

6ம் திருவசனத்தின் முதல் பகுதியில் நம் சிந்தனைகளை இன்று ஆழப்படுத்துவோம். இந்த வரியில் காணப்படும் ஒவ்வொரு சொற்றொடரும் பல சிந்தனைகளை எழுப்பும்.
உண்மையாகவே...
என் வாழ்நாள் எல்லாம்...
உம் அருள் நலமும் பேரன்பும்...
எனைப் புடைசூழ்ந்து வரும்.

எனைப் புடைசூழ்ந்து வரும் என்ற இறுதிச் சொற்றொடரில் நம் தேடலை ஆரம்பிப்போம். இறைவனின் அருளும் பேரன்பும் நம்மைப் புடைசூழ்ந்து வருவதைக் கற்பனை செய்து பார்ப்போம். அந்த உண்மையை நம்புவதற்கு, நமதாக்குவதற்கு முயல்வோம்.

திருப்பாடல் 23ன் இந்த வரியை Harold Kushner விவரிக்கும்போது, ஒரு கதையுடன் ஆரம்பிக்கிறார். ஓர் ஊரில் யூத மதத்தைச் சார்ந்த ஒரு முக்கிய புள்ளி வாழ்ந்து வந்தார். அவர் எப்போதும் ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோல் எல்லாருக்கும் தெரியும். தொழுகைக் கூடத்திற்கு வந்தாலும், அங்கும் நிலை கொள்ளாமல் தவிப்பார். தொழுகை முடிந்தும் முடியாமல், விரைந்து வெளியேறுவார். இவரைப் பார்த்துக் கொண்டிருந்த யூத குரு ஒரு நாள் இவரிடம், "நான் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் நீங்கள் எதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோலவே தோன்றுகிறீர்களே. ஏன் இந்த அவசரம்?" என்று கேட்டார்.
அந்த முக்கிய புள்ளி குருவிடம், "நான் வாழ்வில் பலவற்றைச் சாதிக்க விரும்புகிறேன். வெற்றி, செல்வம், புகழ் இவைகளைத் தேடி எப்போதும் நான் ஓடிக்கொண்டே இருப்பதால், இந்த அவசரம்." என்று கூறினார்.
"சரியான பதில் இது." என்று கூறிய குரு மேலும் தொடர்ந்தார்: "வெற்றி, செல்வம், புகழ் எல்லாம் உங்களுக்கு முன் செல்வதாக நினைக்கிறீர்கள். கைநழுவிப் போய்விடுமோ என்ற பயத்துடன் நீங்கள் எப்போதும் இவைகளைத் துரத்திக் கொண்டிருக்கிறீர்கள்... சரி... கொஞ்சம் மாற்றி சிந்தித்துப் பாருங்களேன். நீங்கள் துரத்திச் செல்லும் இவைகள் உங்களுக்கு முன் செல்லாமல், உங்கள் பின்னே உங்களைத் தேடிக் கொண்டு வரலாம் இல்லையா? கடவுள் இந்தப் பரிசுகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வருவதாகவும் எண்ணிப் பார்க்கலாமே! அப்படி அவர் உங்கள் வீடு தேடி வரும்போது, நீங்கள் இப்பரிசுகளைத் துரத்திக் கொண்டு போயிருந்தால், கடவுள் வரும் நேரத்தில் நீங்கள் வீட்டில் இருக்க மாட்டீர்கள். கடவுள் உங்களைச் சந்திக்காமல், உங்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரமுடியாமல் திரும்ப வேண்டியிருக்குமே!" என்று அந்த யூத குரு கூறினார்.

செல்வத்தையும் புகழையும் தேடி நாம் ஓடிக் கொண்டிருக்கும்போது, இறைவன் இவைகளையெல்லாம் நமக்குத் தருவதற்கு நம்மைத் தேடி வரக்கூடும் என்பது அழகான எண்ணம், மாற்றி சிந்திக்க வைக்கும் ஓர் எண்ணம்.

இறைவனின் அருள் நலமும், பேரன்பும் நம்மைப் பின் தொடர்ந்து வரும், புடைசூழ்ந்து வரும் என்ற வார்த்தைகளை இக்கோணத்தில் நினைத்துப் பார்க்கும்போது, அவசரமில்லாத, பரபரப்பில்லாத ஒரு வாழ்க்கையைச் சிந்தித்துப் பார்க்க முடிகிறது. இனம் புரியாத அமைதி உள்ளத்தில் உண்டாக வாய்ப்புண்டு.

உலகின் அனைத்து நலன்களும் இவ்விதம் நம்மைப் பின் தொடருமா நம்மைப் புடைசூழ்ந்து வருமா என்ற கேள்வி எழலாம்... இல்லை... உலக வாழ்க்கை அவ்வளவு எளிதான மலர் படுக்கை கிடையாது. எல்லா நலன்களும், எல்லா நேரங்களிலும் நம் வீடு தேடி வராது. அல்லது, கூரையைப் பிய்த்துக் கொண்டு உள்ளே கொட்டாது. பல நலன்களை நாம் தேடிப் போக வேண்டும். அவைகளை அடைய முயற்சிகள் எடுக்க வேண்டும், உழைக்க வேண்டும். வேறு பல நலன்கள் நம்மைத் தேடிவரும். பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். நாம் தேடிப்போகும் நலன்களும், நம்மைத் தேடி வரும் நலன்களும் கலந்ததுதான் வாழ்க்கை.

குழந்தைப் பருவத்திலேயே ஒரு சிலர் கலைத் திறமைகளுடன் விளங்குவதைப் பார்த்திருக்கிறோம். தங்களுடன் பிறந்த, அல்லது தங்களைத் தேடிவந்த கலையைத் தொடர்ந்து வளர்க்க அவர்கள் ஒரு குருவைத் தேடிச் செல்ல வேண்டும், அல்லது மற்ற வழிகளைத் தேட வேண்டும். நல்ல குரல் வளம் உள்ளவர்களும், குளிர்ந்த ஆற்று நீரில் கழுத்து வரை நின்றபடியே சாதகங்கள் செய்வர் என்று கேள்விப்படுகிறோம். விளையாடும் திறமைகள் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள் பயிற்சிகளில் ஈடுபடுவதைப் பார்த்திருக்கிறோம்.

ஓர் இளைஞனும், இளம் பெண்ணும் காதல் வயப்படுகின்றனர். உடல் அழகு என்ற ஈர்ப்பினால் அவர்களைத் தேடி வந்த காதலை அதே நிலையில் விட்டுவிட்டால், அக்காதல் வளர்வதற்கு வாய்ப்பு இருக்காது. ஈர்ப்பு நிலையைத் தாண்டி, பிற வழிகளில் தங்கள் காதலை வளர்க்கும் வழிகளை இவர்கள் இருவரும் தேட வேண்டும்.

முயற்சிகள் எடுத்து நாம் தேடும் நன்மைகளையும், முயற்சிகள் ஏதுமின்றி நம்மை வந்தடையும் நன்மைகளையும் சரிவரக் கலந்தால் கட்டாயம் வாழ்வில் நிம்மதி பிறக்கும்.

இதைப் புரிந்து கொள்ள, Kushner கூறும் மற்றொரு எடுத்துக்காட்டு உதவும். ஓர் இளம்பெண் திருமண வயதைத் தாண்டிக் கொண்டிருந்தார். இன்னும் சரியான துணையை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, தன் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் நடைபெறும் அத்தனை வைபவங்களிலும் வலிந்து சென்று கலந்து கொண்டார். பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் கொடுத்தார். துணையைத் தேடுவது எப்படி என்று புத்தகங்கள் படித்தார். இவரது தேடுதல் வேட்டை சரியான பலன் தரவில்லை. பல நாட்கள் மனம் சோர்ந்து, தூக்கம், பசி இவைகளை இழந்தார்.

ஒரு நாள் என்ன தோன்றியதோ தெரியவில்லை. துணை தேடும் வேட்டையை நிறுத்திவிட்டு, தன் வாழ்க்கையைப் பதட்டமில்லாமல், Relaxed ஆகச் செலவிட முடிவு செய்தார். தனக்குப் பிடித்தமான வேலைகள், பொழுதுபோக்குகள் இவைகளில் அதிகம் ஈடுபட்டார். அவரது உள்ளம் மகிழ்வாய் இருந்ததால், அவர் உடல் நலனும் அதிகமானது. அவரது மகிழ்ச்சி, பூரிப்பு இவைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு சில இளைஞர்கள் அவரைத் தேடி வந்தனர். வண்ணத்துப் பூச்சி ஒன்றைத் துரத்தி களைத்து அமர்ந்த ஒருவரது தோள் மீது அந்த வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்த கதை நமக்கு நினைவிருக்கும் இல்லையா?

"புடைசூழ்ந்து வரும்" என்ற இந்தத் தமிழ் சொற்றொடர் அழகான எண்ணங்களை உருவாக்குகின்றன. ஆங்கிலத்தில் Surely goodness and mercy shall follow me அதாவது, “உம் அருள் நலமும் பேரன்பும் என்னைத் தொடர்ந்து வரும்” என்று சொல்வதை விட, எனைப் புடைசூழ்ந்து வரும் என்ற தமிழ் சொற்றொடர் இன்னும் அழகானது. ஓர் அரச மரியாதைத் தெரிகிறது. தலைவர்கள், அரசர்கள் இவர்களே மற்ற படை, பரிவாரங்கள் புடைசூழ வருவார்கள். இவ்விதம் வரும்போது, இரு அம்சங்கள் தெளிவாகும். புடைசூழ வருபவருக்கு மதிப்பு, மரியாதை அதிகம் உண்டு. பாதுகாப்பும் அதிகம் உண்டு.

இறைவனின் அருள் நலமும், பேரன்பும் நம்மைப் புடைசூழ்ந்து வரும்போது, நாம் பெறும் மரியாதை, பாதுகாப்பு எத்தகையது என்பதைத் தொடர்ந்து தேடுவோம்.

இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி:
http://www.vaticanradio.org/

No comments:

Post a Comment